19 செப்டம்பர், 2009

கல்முனையில் இந்திய வியாபாரிகளின் கடவுச் சீட்டுக்கள் பறிமுதல்

கல்முனை பிரதேசத்தில் புடவை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 82 இந்திய வியாபாரிகளின் கடவுச் சீட்டுக்களை குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரிகளினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த இவ்வியாபாரிகள் சுற்றுலா விசா பெற்று நாட்டில் பரவலாக வியாபாரத்தில் ஈடுபடுவதாகக் கிடைத்த தகவல்களையடுத்து கொழும்பிலிருந்து கல்முனை பிரதேசத்திற்குச் சென்றிருந்த குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் விசேட குழுவொன்று இவர்களுடைய கடவுச் சீட்டுக்களைப் பறிமுதல் செய்து தடுத்து வைத்துள்ளது.

குறிப்பிட்ட வியாபாரிகளை குடிவரவு, குடியகல்வு திணைக்களத்திற்குச் சமூகமளிக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தங்கியிருந்த வீடுகள் மற்றும் விடுதிகளை முற்றுகையிட்ட திணைக்கள அதிகாரிகள் கடவுச் சீட்டுக்களை பறிமுதல் செய்தனர்.

கடந்த 4 - 5 வருடங்களாக கிழக்கு மாகாணத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மேற்படி வியாபாரிகள் தெருத் தெருவாகச் சென்று வீடுகளிலும் மற்றும் தொழில் நிறுவனங்களிலும் புடவைகளை விற்று வருகின்றனர்.

இவர்கள் மீது தற்போது பொலிஸ் மற்றும் குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரிகளின் பார்வை திரும்பியுள்ள நிலையிலேயே இவர்களுக்கு எதிரான நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.

இவர்களது வியாபாரம் காரணமாக உள்ளூர் வர்த்தகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்ததாகப் பரவலாக புகார்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன.

கடந்த மாதம் மட்டக்களப்பு நகர பிரதேசத்தில் 9 இந்திய வியாபாரிகளைப் பொலிஸார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் குற்றப் பணம் செலுத்தி எச்சரிக்கையுடன் விடுதலை செய்யப்பட்டதையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் வெளியேறி விட்டனர்

அதேவேளை, கிழக்கு மாகாணத்தின் ஏனைய சில பிரதேசங்களில் இன்னமும் பலர் இந்திய வியாபாரிகளின் நடமாட்டம் இருப்பதால் அவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை மேற்கொள்ளப்ப்டவுள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்கள உதவிக் கட்டுப்பாட்டாளர் வில்லியம் தெய்வேந்திரா தெரிவித்தார்
செயற்கைக் கால் பொருத்தும் நடமாடும் சேவை மன்னாரில் இன்று ஆரம்பம்வன்னியில் இடம்பெற்ற யுத்தத்தின் காரணமாக கால்களை இழந்தவர்களுக்கான செயற்கைக் கால் பொருத்தும் இரண்டாம் கட்ட நடமாடும் சேவை இன்று சனிக்கிழமை மன்னார் பொது வைத்தியசாலையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

மன்னார் ஆயர் பேரருட்திரு இராயப்பு ஜோசப் ஆண்டகை வேண்டுகோளின் பேரில், இதற்கென கொழும்பு நட்புறவு சங்கத்தின் ஏற்பாட்டில் லண்டனில் கடமையாற்றும் விசேட நிபுணர் குழு ஒன்று மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வரவுள்ளது.

வன்னியில் இடம்பெற்ற வவுனியா மற்றும் செட்டிக்குளம் நலன்புரி நிலையங்களில் வாழ்ந்து வந்த 200 பேர் செயற்கை கால் பொருத்துவதற்காக மன்னார் பொது வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

முதல்கட்ட செயற்கைகால் பொருத்தும் நிகழ்வில் நூற்றுக்கு மேற்பட்டோர் பலனடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் ஜனாதிபதியோ,அரசாங்கமோ தலையிடவில்லை முத்துசிவலிங்கம் தெரிவிப்பு


கூட்டொப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்ற தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்கும் இடையில் இடம்பெற்ற பேரம்பேசுதல் பேச்சுவார்த்தையின் மூலமாகவே தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டது.இந்த விடயத்தில் அரசாங்கமோ, ஜனாதிபதியோ தலையிடவில்லை. அவ்வாறு தலையிட்டதாக இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் வேலாயுதம் கூறுவாராயின் அது அவரது சொந்த கருத்தாகும் என்று இலங்கை தொழிலாளர்

காங்கிரஸ் தலைவரும் பிரதியமைச்சருமான முத்துசிவலிங்கம் தெரிவித்தார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகமான சௌமியபவானில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து பதிலளித்து கருத்து தெரிவிக்கையில்;

கூட்டடொப்பந்தம் கைச்சாத்திட்டதன் பின்னர் தொழிற்சங்கங்கள் விடுகின்ற அறிக்கைகளும் மக்களை பேட்டி காணுகின்றோம் எனும் போர்வையில் ஒளிப்பரப்பப்படுகின்ற பேட்டிகளும் விசனிக்கதக்கவையாகவே இருக்கின்றன. ஒப்பந்தத்தின் மூலமாக சம்பளம் மற்றும் வேலையுரிமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் சட்டரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. 1967 ஆம் ஆண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் செய்துக்கொண்ட கூட்டொப்பந்தத்தின் மூலமாக 10 சதம் சம்பள உயர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டது. அன்றுவரையிலும் தொழிலாளர்களினால் சந்தாப்பணம் கைகளிலேயே கொடுக்கப்பட்டது பின்னரே அறிவிடும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலமாகவே பல தொழிற்சங்கங்கள் உருவாகி வலுவடைந்தன.

தற்போது பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ள சம்பள உயர்வின் பிரகாரம் 18 1/2 (பதினெட்டரை) நாள் வேலைக்கு சென்றிருந்தாலும் அது 75 வீதமாக கணிக்கப்படும். கூட்டொப்பந்தமொன்று ஏற்படுத்துவதற்கு முன்னர் மாதத்திற்கே 10 அல்லது 12 நாட்கள் வேலையே வழங்கப்பட்டது. எனினும் இன்று அந்த நிலைமையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வாரத்திற்கு 6 நாட்களும் மாதத்திற்கு 25 நாட்களும் கட்டாயமாக வேலைவழங்கப்படல்வேண்டும் என்ற நிலைமை தோன்றியிருக்கின்றது.

சம்பள அதிகரிப்பின் மூலமாக 85, 90 வீதமானோர் கூடியளவான சம்பளத்தை பெறமுடியும் என்பதுடன் 75 வீதமல்ல 80 வீதம் வேலைச்செய்து 405 ரூபா சம்பள உயர்வினை கொள்வதற்கு பெரும்பாலான தொழிலாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

சம்பள விடயத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் காட்டிக்கொடுக்கவில்லை அமைச்சர் சந்திரசேகரனை பொறுத்தமட்டில் அவர் புத்திசுயாதீனமின்றி செயற்படுகின்றார் அவருடைய ஞாபகசக்தி பலவீனத்தையே காட்டுகின்றது அவர் எதிலும் ஈடுபடாத சங்கங்களுடன் இணைந்து கொண்டு தாளம் போடுகின்றார். பாராளுமன்ற உறுப்பினர் மனோகணேசனின் தந்தையான வி.பி கணேசனின் தலைமையிலான ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் 1957 ஆம் ஆண்டு பஞ்சப்படி போராட்டத்தை நடத்தியது அதிலும் 25 சதவீதமானோரே வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர் அன்றிலிருந்தே அந்த காங்கிரஸும் இல்லாம் போய்விட்டது என்றா
தொப்பிகலையில் புலிகளின் ஆவணங்கள் கண்டுபிடிப்பு
மட்டக்களப்பு மாவட்டம் தொப்பிகலை பிரதேசத்திலுள்ள நாரக்கமுல்லையில் விடுதலைப் புலிகளின் மாவீரர் குடும்ப விபரங்கள் மற்றும் பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய முக்கிய ஆவணங்கள் விசேட பொலிஸ் குழுவொன்றினால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

வவுனியா இடைத் தங்கல் முகாம் ஒன்றில் கைதாகிப் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலி உறுப்பினரிடமிருந்து கிடைத்த தகவலையடுத்தே இவை கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

நேற்று அந்தப் பகுதிக்கு சென்றிருந்த பயங்கரவாத தடுப்புப் புலனாய்வுப் பிரிவினர் மறைவிடம் ஒன்றில் புதைக்கப்பட்டிருந்த பெருந் தொகையான இந்த ஆவணங்களில், விடுதலைப் புலிகளின் மாவீரர் குடும்ப விபரங்கள், சுமார் 10 ஆயிரம் பயிற்சி பெற்ற அங்கத்தவர் விபரம், வங்கி மற்றும் நிதி தொடர்பான ஆவணங்களுடன் தகவல் கருவிகளும் தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட லண்டனிலிருந்து வெளியாகும் ' ஜேன்ஸ் டிபென்ஸ்' பிரதியும் காணப்பட்டதாக பொலிஸ் தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நடத்தும் பொறுப்பு பொலிஸ் குற்றப் புலனாய்வத் துறையினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்
மேலும் இங்கே தொடர்க...

நாட்டுக்கு எதிராக சதியில் ஈடுபடும் தலைவர்களை அடையாளம் கண்டு மக்கள் பாடம் புகட்டுவர்

- ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

எதிர்கால சந்ததியினருக்கு சுபிட்சமான எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் முன்னெடுக்கின்ற பாரிய அபிவிருத்தித் திட்டங்களுக்கு மேலும் வலுவூட்டுவது தாய்நாட்டின் மீது பற்றுள்ள அனைவரினதும் கடமையாகும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தான் பிறந்து வளர்ந்து மரணிக்கின்ற தாய்நாட்டிற்கு எதிராக காட்டிக் கொடுப்புகளையும், சூழ்ச்சிகளையும் செய்வதையும் விடுத்து உலகின் பெருமையுடன் எழுந்து நிற்கக்கூடிய இலக்கை நோக்கி வெற்றி நடைபோட்டுக் கொண்டிருக்கும் எமது பயணத்தில் இணைந்து கொள்ளுமாறும் ஜனாதிபதி அனைத்து எதிர்க் கட்சியினருக்கும் அழைப்பு விடுத்தார்.

காலி மாவட்ட மகா சங்கத்தினர், மற்றும் இளைஞர் அமைப்புகளையும் அலரி மாளிகையில் சந்தித்து பேசிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நேற்று முன்தினம் 17ஆம் திகதி இச்சந்திப்பு நடைபெற்றது.

எமது நாட்டைப் பற்றி தவறான அபிப்பிராயங்களை ஏற்படுத்தி வெளிநாட்டினருடன் இணைந்து சூழ்ச்சிகளை செய்ய முற்படும் சகல தலைவர்களையும் அடையாளம் கண்டு தக்க பாடத்தை மக்கள் புகட்டுவார்கள்.

பயங்கரவாதிகளை காப்பாற்றுவதற்காக அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்துகொண்டு செயற்பட்ட சில தலைவர்கள் இன்று நாட்டில் சுதந்திரம் இல்லை எனக் கூறிக்கொண்டு ஆங்கில பத்திரிகைகளுக்கு பணம் செலுத்தி விளம்பரங்கள் செய்வது நாட்டின் மீதுள்ள பற்றுடன்தானா? எனவும் ஜனாதிபதி கேள்வி எழுப்பினார்.

தென்பகுதியில் மட்டுமல்ல வட பகுதியிலுமுள்ள சிறுவர் சிறுமியர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் நோக்குடனேயே அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறேன். 30 வருடங்களின் பின்னர் வடபகுதி சிறுவர், சிறுமியர் ஆயுதங்களைக் கைவிட்டு பாட புத்தகங்களை கையில் எடுத்துள்ளனர். முகாம்களில் தங்கியுள்ள பிள்ளைகளின் கல்விக்காகவும் தேவையான அனைத்து கல்வி வசதிகளையும் செய்து கொடுத்துள்ளோம்.

நாட்டுக்காக எந்த சவால்களையும் எந்தவிதமான சேறு பூசுதல்களுக்கும் முகம்கொடுக்க நான் ஆயத்தமாக இருக்கிறேன். ஊடக நிறுவனத்தின் உரிமையாளரான எதிர்க்கட்சித் தலைவரின் மூத்த சகோதரர் கூட எமக்கு ஊடக சுதந்திரம் இங்கு நன்கு பேணப்படுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் என்னிடம் தெரி வித்திருக்கிறார். அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, ஜோன் செனவிரட்ண, பியசேன கமகே, உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டனர்.

ஆனையிறவு ரயில் நிலைய புனரமைப்பு: சேகரிப்பு நிதி ஒரு கோடியை விஞ்சியது

அக்டோபர் 30 வரை மாணவர் பங்களிப்புக்கு சந்தர்ப்பம்

ஏ-9 வீதியில் ஆனையிறவு ரயில் நிலையத்தை நவீன மயப்படுத்துவதற்காக ஆசிரியர்கள் மாணவர்களினூடாக சேகரிக்கப்பட்ட நிதியின் தொகை ஒரு கோடி ரூபாவை விஞ்சிவிட்டதாக கல்வி அமைச்சு தெரிவிக்கிறது.

‘வடக்கிற்கான நட்புப்பாதையில் பாசத்தின் உறைவிடத்தை ஒற்றுமையாகக் கட்டியெழுப்புவோம்’ என்ற தொனிப்பொருளில் கலவி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் பணிப்பிற்கமைய ஆனையிறவு ரயில் நிலைய புனரமைப்புத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வட மாகாணத்தைத் தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளிலுள்ள மாணவர்களின் உதவியுடன் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இலங்கை வங்கியின் இல. 9393439 என்ற கணக்கு இலக்கத்திற்கு நிதியுதவிகளை வைப்பிலிடுமாறு வேண்டப்படுகின்றனர். மாணவர்கள் பங் களிப்புச் செய்ய வேண்டிய ஆகக்குறைந்த தொகை 2 ரூபாவாகும். மாணவர்கள் மட்டுமன்றி ஆசிரியர்கள், பெற்றோர் உட்பட அனைவரும் இதற்கு பங்களிப்புச் செய்வதற்கு ஆர்வமாக உள்ளனர். ஒக்டோபர் 30 ஆம் திகதி வரை இத்திட்ட த்திற்கு நிதி வழங்க பாடசாலை மாணவர்களுக்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளது என்றும் கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது.

மேலும் இங்கே தொடர்க...

நவராத்திரி விழா இன்று ஆரம்பம்

http://www.dollsofindia.com/dollsofindiaimages/paintings2/goddess_poster_PX89_l.jpg

அலைமகள், மலைமகள், கலைமகள் என முப்பெரும் தேவியரையும் துதித்து வழிபடும் உலக வாழ் இந்துக்களின் புனித நவராத்திரி விழா இன்று ஆரம்பமாகின்றது.

இந் நவராத்திரி விழாவையொட்டி ஆலயங்களிலும் இல்லங்களிலும் கொலு வைத்து வழிபாடு செய்யப்படும். இன்று நவராத்திரியின் ஆரம்ப நாள் என்பதால் ஸ்ரீ துர்க்கை அம்பாளுக்கு விசேட அபிஷேகங்களும் பூஜைகளும் நடத்தப்படும்.

முதல் மூன்று நாட்களும் வீரத்தை உணர்த்தும் விதத்தில் துர்க்கை அம்மனுக்கும், இரண்டாவது மூன்று நாட்களும் செல்வத்தை உணர்த்தும் விதத்தில் லக்ஷ்மி தேவிக்கும், இறுதி மூன்று தினங்களும் கல்வியை உணர்த்தும் விதத்தில் சரஸ்வதி தேவிக்கும் பூஜைகள், வழிபாடுகள் நடத்தப்படும். 10வது தினமான 28ம் திகதி விஜயதசமி தினம். அன்றைய தினம் ஆலயங்களில் வித்யாரம். நிகழ்வுகளும் நடைபெறும்.

குறிப்பாக அம்மன் ஆலயங்களில் தேவியின் மஹிமையை உணர்த்தும் நவராத்திரி உற்சவம் வெகுசிறப்பாக கொண் டாடப்படும்.
மேலும் இங்கே தொடர்க...