2 மே, 2011

ஒசாமாவை இலக்குவைத்தபோது பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பில்

ஒசாமாவை இலக்குவைத்தபோது பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பில் அக்கறை கொண்டிருந்தோம் - ஒபாமா தகவல்
ஒசாமா பின்லேடனை இலக்குவைத்து தம் நாட்டு படையினரால் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையின் போது பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பில் அக்கறை கொண்டிருந்ததாகவும் அவர்களுக்கு இழப்பு ஏற்படாத வகையிலேயே இதனை மேற்கொண்டதாகவும் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட செய்தியை பொதுமக்களுக்கு அறிவித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பின்லேடன் கொல்லப்பட்டமையானது அமெரிக்காவின் முக்கியாமனதோர் சாதனை எனவும் அவர் குறிப்பிட்டமை குறிப்பிடத்தக்கது. _
மேலும் இங்கே தொடர்க...

மக்களும் கலந்துகொண்ட தொழிலாளர் தினத்தில்01.05.2011சுவிற்சர்லாந்து சூரிச் மாநிலத்தில்; சுவிஸ் தொழிற்சங்கங்கள், இடதுசாரி அமைப்புக்கள், முற்போக்கு முன்னணிகள் மற்றும் உலகில் உரிமைக்காகப் போராடும் பல இன மக்களும் கலந்துகொண்ட தொழிலாளர் தினத்தில் தமிழீழமக்கள் விடுதலைக்கழக சுவிஸ்கிளையும் கலந்து கொண்டது. இதில்தமிழினத்தின்; பிரச்சனைக்கு அரசியல் தீர்வை இலங்கை அரசு காணவேண்டும் வெறும் பேச்சுவார்த்தையாக இருக்காமல் தீர்வாக இருக்கவேண்டும்.அமைதியும், பாதுகாப்புமுள்ள சுதந்திரத்தை நாம் விரும்புகின்றோம்அரசியல் கைதிகளை இலங்கை அரசே விடுதலை செய்சர்வதேசமும் எமது அரசியல் தீர்வுக்கு தனது நியாயமான பங்களிப்பை செய்யவேண்டும்.அனைத்து அதிகாரங்களும் உழைக்கும் மக்களுக்கேபோன்ற கோரிக்கைகள் அடங்கிய சுலோகங்களை தாங்கியவண்ணம் கழககஉறுப்பினர்கள், ஆதரவளர்கள், மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ் பத்மநாபா அணி சுவிஸ் கிளைத் தோழர்களும் தோழமையுடன் கலந்துகொண்டனர்.இவ் மேதின ஊர்வலமானது சூரிச் பிரதான புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள இருந்து காலை 10.15 மணிக்கு ஆரம்பமாகி முடிவடைந்தது.

இவ் மேதினத்தில் த.ம.வி.கழக சுவிஸ் கிளையின் அழைப்பை ஏற்று கலந்து கொண்ட அனைவருக்கும் கழக சுவிஸ்கிளை தனது தோழமையான நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றது.
மேலும் இங்கே தொடர்க...

யார் இந்த ஒசாமா? (ஒரு சிறப்புப் பார்வை)


அமெரிக்காவினால் தேடப்பட்டுவந்த அல்-கொய்தாஅமைப்பின்தலைவர்ஒசாமா பின்லேடன்கொல்லப்பட்டுள்ளதாகஅமெரிக்காஉத்தியோகபூர்வமாக
அறிவித்துள்ளது.

யார் இந்த ஒசாமா?

பிறப்பு: 1957,சவுதி அரேபிய கட்டிட நிர்மாணியின் மகன் குடும்பத்தில் 57 பிள்ளைகள். அதில் ஒசாமா பின்லேடன் 17 ஆவது பிள்ளை.

பதின்மூன்றாவது வயதில் அவரது தந்தையை இழந்தார். 17ஆவது வயதில் சிரியன் கெசினை மணந்தார்.

1979 -சோவியத் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு மற்றும் ஆப்கான் தலைவர்களை பாகிஸ்தானில் வைத்து சந்தித்தார், பின்னர் ஆப்கானுக்காக நிதித் திரட்டும் பொருட்டு சவூதி அரேபியாவுக்குச் சென்றார்.

1984 -தனது உல்லாச விடுதியை அமைத்து, (பாகிஸ்தான் எல்லை) அங்கிருந்து தன் கண்காணிப்புகளை ஆரம்பித்தார்.

ஆப்கானில் தனது முகாம்களை அமைத்தார்.

சூடானில் சிறிது காலத்தின் பின்னர் தனது இருப்பிடத்தை முழுமையாக ஆப்கானிஸ்தானுக்கு மாற்றிக்கொண்டார்.

1990-1991 அமெரிக்கா மீதான தனது எதிர்ப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்தார் (வளைகுடா யுத்தத்தின்போது)

1994 சவூதி அரேபியா இவரது பிரஜாவுரிமையை பறித்துக்கொண்டது.

1996 இவர் பட்வா என்ற மதச்சார்பான அறிக்கையை விடுத்தார், அதில் அமெரிக்க இராணுவத்தினர் கொல்லப்படவேண்டியவர்கள் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

1998 – கென்யா மற்றும் தன்சானியா நாடுகளிலுள்ள அமெரிக்க தூதரகங்கள் மீது குண்டுத்தாக்குதல்.

அமெரிக்காவுக்கு எதிராக அணி திரளுமாறு இஸ்ரேல், சவூதி நாடுகளுக்கு அழைப்பு விடுத்தமையும் தனது தொடர்புகளை விஸ்தரித்துக்கொண்டமையும்.

2001 – அமெரிக்காவில் அமைந்துள்ள உலக வர்த்தக மையங்களின் மீது விமானத் தாக்குதல் - இதுவே மேற்குலக எதிர்ப்புக்கு பிரதான காரணமாக அமைந்தது.

அதன்பிறகு அமெரிக்காவை எச்சரிக்கும் பல்வேறு வீடியோ காட்சிகள் ஒசாமாவால் ஊடகங்களினூடாக வெளியிடப்பட்டன.

ஒசாமாவைத் தேடும்பணியில் அமெரிக்கப்படைகளுடன் பிரித்தானிய படைகளும் இணைந்துகொண்டன.

2011 – ஒசாமா அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்டதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
மேலும் இங்கே தொடர்க...

இரத்தினபுரி மாவட்டத்தில் கடும் மழை: 7 பேர் பலி

இரத்தினபுரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மின்னல் தாக்கங்கள் காரணமாக இது வரை ஏழு பேர் உயிரிழந்துள்ளதோடு 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அகதிகளாகி முகாம்களில் உள்ளதாக இரத்தினபுரி மாவட்ட செயலாளர் எச். டப்ளியு. குணதாஸ தெரிவித்தார்.

அகதிகளாகி முகாம்களில் தங்கி உள்ளவர்களுக்கு ஒரு நாள் உணவுக்காக வழங்கப்பட்ட 100 ரூபாவை 200 ரூபாவாக அதிகரித்துள்ளதாகவும் பத்து மில்லியன் ரூபாய் நிதி இதற்காக ஒதுக்கப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

பின்லேடனின் 2 மனைவிகள் கைது

பாகிஸ்தானின் அப்போட்டாபாத் நகரில் அமெரிக்கப் படையினரின் தாக்குதலில் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டார். அவரது உடலும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இஸ்லாமாபாதுக்கு வடக்கே 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மலைப்பகுதியில் பாகிஸ்தான் படையினர்,

இன்று அதிகாலை நடத்திய தேடுதல் வேட்டையின்போது ஒசாமாவின் 6 பிள்ளைகளும், 2 மனைவிகளும் மற்றும் அவருக்கு நெருக்கமான 4 நண்பர்களும் கைது செய்யப்பட்டதாக துன்யா தொலைக்காட்சி செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் இங்கே தொடர்க...

அமெரிக்காவால் தேடப்பட்டுவந்த அல்-கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதையடுத்து

அமெரிக்காவால் தேடப்பட்டுவந்த அல்-கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதையடுத்து அமெரிக்கர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

பாகிஸ்தானில் தலைமறைவாக தங்கியிருந்த பின்லேடன் அமெரிக்க விசேட படைகளால் கொல்லப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக அறிவித்ததையடுத்து வீதிகளில் கூடிய அமெரிக்கர்கள் ஆடிப்பாடி கொண்டாட்டங்களில் ஈடுபட்டுவருவதாக அந்நாட்டு செய்திச் சேவைகள் தெரிவிக்கின்றன.
மேலும் இங்கே தொடர்க...

கடமை நேரத்தில் போதை; அக்கரப்பத்தனையில் 10 பொலிஸார் கைதுமே தின பாதுகாப்பு கடமையின் போது போதையில் ஒழுங்கீனமாகச் செயற்பட்ட 10 பொலிஸார் நுவரெலியா அக்கரப்பத்தனைப் பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நுவரெலியாவில் நடைபெற்ற மே தினத்துக்கான பாதுகாப்பில் ஈடுபடுத்தப் பட்டிருந்த பொலிஸாரில் 10 பேர் குடி போதையில் பொதுமக்களிடம் ஒழுங்கீன மான முறையில் நடந்துகொண்டுள்ளனர்.

இவர்கள் கைதுசெய்யப்பட்டுத் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாகவும், நீதிமன்றத்தில் நிறுத்தி சட்ட நடவடிக்கை எடுக்க எதிர்பார்த்திருப்பதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காமினி மதுரட்ட தினகரனுக்குத் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

சமாதான வெண்புறாவை அழிக்கவிருக்கும் கருடனை ஒழிக்க உலக நாடுகளுடன் ஒன்றிணைவோம்
சமாதானத்தின் சின்னமான, ஒலிவ் மரத்தின் சிறு கிளையொன்றை தன்னுடைய அழகான ஊதா நிற சொண்டில் பற்றிக்கொண்டு ஆகாயத்தில் கம்பீரமாக, அமைதியாக பறந்து கொண்டிருக்கும், இலங்கை என்ற வெண்புறாவை கொத்திச் சென்று, அழித்து விடுவதற்கு இன்னுமொரு கொடிய கருடன் அதற்கருகில் வலம் வந்து கொண்டிருக்கின்ற ஆபத்தான நிலையை இந்நாட்டு மக்கள் இன்று எதிர்நோக்கிய வண்ணம் இருக்கிறார்கள்.

எங்கள் தாய் நாட்டை உலக வரைபடத்திலிருந்து நிரந்தரமாக அழித்துவிடும் தீய எண்ணம் கொண்ட, சர்வதேச பிற்போக்குவாத சக்திகளும், மற்ற நாடுகளை அழித்துவிடுவதில் ஆனந்தம் காணும், பிறருக்கு துன்பம் இழைத்து இன்பம் அடையும் நோயுடைய சில வல்லமைமிக்க நாடுகளும், எல். ரி. ரி. ஈ யை ஆதரிக்கும் குழுக்களும், புலம்பெயர்ந்த, விரல்விட்டு எண்ணக்கூடிய சில தமிழ் குழுக்களும் இன்று தங்கள் பணப்பலத்தை பிரயோகித்து மேற்கொண்டுவரும் நாசகார வேலைகளுக்கு எதிராக, உலகிலுள்ள இலங்கையின் நட்பு நாடுகளின் ஆதரவை திரட்டுவதை விட எங்களுக்கு வேறு வழியில்லை.

எனவே, மிகவும் மதிநுட்பமாக இராஜதந்திரத்தை பயன்படுத்தி, உலகநாடுகளின் உணர்வுகளை புண்படுத்தாத வகையில், நாட்டை விடுவித்த பயங்கரவாதிகளுக்கு எதிரான யுத்தத்தின் இறுதி ஓரிருவாரங்களின் போது அப்பாவி தமிழர்களை மனிதாபிமானமற்ற முறையில் இலங்கை இராணுவத்தினர் அழித்துவிட வில்லை என்ற உண்மையை நிரூபிக்கக்கூடிய வகையில் பிரசாரங்களை சர்வதேச ரீதியில் முடுக்கி விடுவதன் அவசியத்தை உணர்ந்திருக்கும் அரசாங்கம் அதற்கான சகல ஏற்பாடுகளையும் இப்போது காலதாமதமின்றி ஆரம்பித் துள்ளது.

அதைவிடுத்து, அநாவசியமாக பொதுமேடைகளில் தருஸ்மன் அறிக்கையை கண்டித்து பேசுவதில் நாட்டுக்கு தீமையே ஒழிய நன்மை ஏற்படப்போவதில்லை என்படுதயும் நன்கு புரிந்து கொண்டுள்ள இன்றைய அரசாங்கம், இன்றைய சூழ்நிலையில் மக்கள் மிகவும் அவதானமாக, ஆத்திரமடையாமல் வெளிநாட்டவர்கள் எங்கள் மீது போலி குற்றச்சாட்டு களை சுமத்தி பிரச்சினைகளை மேலும் அதிகரிப்பதற்கு இடமளிக்கா மல், பொறுமையாக இருக்க வேண்டு மென்றும் மக்களுக்கு பரிந்துரைக்கி ன்றது.

வெளிநாடுகளில் இருந்து இலங்கை க்கு எதிராக உருவாகி வரும் இந்த ஆபத்தை, முறியடிக்க வேண்டுமானால் இந்நாட்டு மக்கள் அனைவரும் இன, மத, கட்சி, பிரதேச பேதமின்றி ஒரே குரலில் இலங்கையர் என்ற உணர்வுடன் செயற்பட வேண்டுமென்றும், அதன் மூலமே மீண்டும் இலங்கையின் நற்பெயரையும், கீர்த்தியையும், இறைமையையும் சர்வதேச அரங்கில் மீண்டும் கொடி கட்டிப்பறக்கச் செய்யலாம் என்ற நிலையில் அரசாங்கம் இருந்து வருகிறது.
மேலும் இங்கே தொடர்க...

என்மீது போர்க் குற்றமா?'- மகிந்த கேள்விவிடுதலைப் புலிகளைத் தோற்கடித்தமை எவ்வாறு போர்க்குற்றமாகும் என்று இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கேள்வியெழுப்பியுள்ளார்.

தன்னை மின்சார நாற்காலிக்கு அனுப்ப சிலர் முயற்சிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

தலைநகர் கொழும்பில் மாநகரசபை மைதானத்தில் நடைபெற்ற ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு அரசாங்கத்தின் மேதின நிகழ்வில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

தற்கொலை செய்துகொள்ள தயாராக இருந்த ஒரு சந்ததிக்கு வாழ வழி ஏற்படுத்திக்கொடுத்தமை மனித உரிமை மீறலாகுமா என்றும் மகிந்த ராஜபக்ஷ மேதின உரையில் கேள்வியெழுப்பினார்.

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளதாக அறிக்கை தயாரிப்பவர்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டுமென்றும் ஜனாதிபதி கூறினார்.

நாட்டில் மனித உரிமை மீறல் இடம்பெற்றுள்ளதாக பொய்க்குற்றச்சாட்டு கொண்டுவருவதன் மூலம் நாட்டு மக்கள் மத்தியில் மீண்டும் குழப்பம் ஏற்படுத்த முனைய வேண்டாம் என்றும் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

வடக்கு கிழக்கில் மட்டுமன்றி நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திப் பணிகளை இதன் மூலம் சீர்குலைக்க வேண்டாம் எனவும் அவர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தனியார் துறையினர் மற்றும் வெளிநாடுகளில் தொழில் புரிவோருக்காக விசேட ஓய்வூதிய திட்டமொன்றைக் கொண்டுவரும் அரசாங்கத்தின் முயற்சியை எந்தத் தடைகள் வந்தாலும் நிறைவேற்றியேத் தீருவேன் என்றும் ஐனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது மே தினச் செய்தியில் சூளுரைத்தார்.
மேலும் இங்கே தொடர்க...