19 அக்டோபர், 2009

19.10.1009 சனல் 4
வீடியோ:அமெரிக்காவின் தடயவியல் சோதனை முடிவு


சனல்-4 தொலைக்காட்சி ஸ்ரீ லங்கா இராணுவம் தமிழர்களை நிர்வாணப்படுத்தி மிருகத்தனமாக சுட்டுக் கொல்வது போன்ற காட்சி அடங்கிய வீடியோவை வெளியிட்டது.

இந்த வீடியோவை சிங்கள அரசு பொய்யாக தயாரிக்கப்பட்டது என்று சொல்லிவந்தது.

இந்த நிலையில் இந்த வீடியோ உண்மையானதே என்று அமெரிக்காவைச் சேர்ந்த இன அழிப்புக்கு எதிரான அமைப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக நடத்தப்பட்ட தடவியல் சோதனையில் இது நிரூபிக்கப்பட்டதாக அது தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’எங்கள் முதல் கட்ட அறிக்கையின்படி இந்த வீடியோ உண்மையானது என்று தெரிகிறது. எந்த வகையிலும் இது திருத்தப்பட்டதோ அல்லது வேறு வீடியோ அல்லது ஆடியோ இதில் இணைக்கப்படவில்லை என்றும் தெரிய வந்துள்ளது.

வீடியோ காட்சிகள் தொடர்ந்து வருகின்றன. வீடியோவை நிறுத்தி காட்சிகளை சேர்த்ததற்கான ஆதாரமோ அல்லது காட்சிகளை நீக்கியதற்கான ஆதாரமோ எதுவும் இல்லை. ஆரம்ப கட்ட ஆய்வில் 10-க்கும் மேற்பட்ட விஷயங்கள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.

முதலில் இறந்தவரின் ரத்தமும், அடுத்து இறப்பவரின் ரத்தமும் நிறத்தில் மாறுபாடு தெரியும். இந்த வீடியோவிலும் அந்த மாறுபாடு தெரிகிறது. காயமாக இருந்தால் அந்த மாறுபாடு தெரியாது.

துப்பாக்கி சுடும்போது ஏற்படும் சத்தம், அலறல் சத்தம் ஆகியவை வெளிவருவதிலும் உரிய கால இடைவெளி தெரிகிறது.

முதலில் சுடப்பட்டவரின் கால் அசைவு அவர் இறக்காமல் துடிப்பதை உறுதி ஏற்படுத்துகிறது. எனவே இந்த வீடியோ உண்மையானதுதான். ஆனாலும் இன்றும் ஆய்வு நடத்த வேண்டியது உள்ளது. நவம்பர் மாதம் இறுதியில் முழு அறிக்கை வெளியிடப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இங்கே தொடர்க...
19.10.2009.இந்திய பெருங்கடலில் சிங்கப்பூர் கப்பல் கடத்தல்
மாந்தை மேற்கில் 22 ஆம் திகதி மீள்குடியமர்வு குறித்து இன்று ஆராய்வு
- மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் எதிர்வரும் 22ஆம் திகதி மக்களை மீளக் குடியமர்த்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று காலை மன்னார் அரசாங்க அதிபர் ஏ.நிக்கொலாஸ்பிள்ளை தலைமையில் அரச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதன் போது மீள்குடியேற்ற, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிசாட் பதியுதீன், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த விக்கிரமசிங்க, அமைச்சின் செயலாளர் யூ.எல்.எம். ஹால்தீன், இணைப்புச் செயலாளர் அலிக்கான், மாவட்ட இணைப்பாளர் என்.எம். முவ்பர் மற்றும் திணைக்களங்களின் உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 22ஆம் திகதி மக்கள் மீளக்குடியேற்றப்பட இருப்பதால் அவர்களுக்குக்கான நீர், சுகாதாரம், போக்குவரத்து, கல்வி, போன்ற விடயங்களை வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் பணித்துள்ளார்.

அதேவேளை, மீள்குடியேற்றம் இடம்பெறும் பகுதிகளில் தற்காலிகமாக மருத்துவ சேவைகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மன்னார் பிராந்திய சுகாதார பணிப்பாளர் திருமதி யூட்ரதனியிடம் அமைச்சர் றிசாட் பதியுதீன் கேட்டுக் கொண்டுள்ளார்


இந்தியப் பெருங்கடலில், ஏடன் வளைகுடா அருகே சென்ற சிங்கப்பூர் கப்பலை, சோமாலிய கடல்கொள்ளையர்கள் கடத்திச் சென்றனர். இந்த கப்பலில் இருந்த இரண்டு இந்தியர்களும் கடத்தப்பட்டுள்ளனர்.

சோமாலியா நாட்டில் நிரந்தர அரசு ஏதும் இல்லை. வன்முறையாளர்கள் ஒவ்வொரு குழுவாக செயல்பட்டு ஒவ்வொரு பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டுள்ளனர். இந்த வன்முறையாளர்களில் சிலர் கடல் கொள்ளையர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏடன் வளைகுடா பகுதியில் செல்லும் சர்வதேச கப்பல்களைத் துப்பாக்கி முனையில் நிறுத்தி கடத்திச் செல்வதும், கணிசமான பிணைத் தொகையைப் பெற்றுக் கொண்டு கப்பலை விடுவிப்பதும் வாடிக்கையாக உள்ளது.

இந்த ஆண்டில் மட்டும், நூற்றுக்கும் அதிகமான கப்பல்களை சோமாலிய கடல் கொள்ளையர்கள் கடத்தியுள்ளனர். இதற்கிடையே, கடந்த 15ஆம் திகதி 'எம்.வி.கோட்டா வாஜர்' என்ற சிங்கப்பூர் கப்பல், செஷல்ஸ் தீவுக்கு அருகே சென்ற போது, சோமாலிய கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட்டது.

இந்தக் கப்பலில் இரண்டு இந்தியர்களுடன் இலங்கை, இந்தோனேஷியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஊழியர்களும் இருந்தனர். கப்பலையும், கப்பலில் இருக்கும் ஊழியர்களையும் மீட்க, கப்பல் நிறுவனம் சிங்கப்பூர் அரசின் உதவியை கோரியுள்ளது
மேலும் இங்கே தொடர்க...
மீள்குடியமர்வு தொடர்பில் இலங்கை அரசுடன் நெருங்கிய உறவு : நிரூபமா ராவ்
19.10.2009
வவுனியா இடைத்தங்கல் முகாமிலிருந்து 355 குடுமபங்கள் மட்டக்களப்புக்குஅனுப்பி வைப்பு
ஆஸி. பிரதமர் இந்தோனேஷியாவுக்கு இன்று அவரசர விஜயம்சட்டவிரோதமான முறையில், ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முற்படுவோர், குறிப்பாக சமீபத்தில் இந்தோனேஷியாவில் வழிமறிக்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த 260 அகதிகள் தொடர்பாக அதிகாரிகளுடன் பேச்சு நடத்த ஆஸ்திரேலியப் பிரதமர் கெவின் ரூட் இன்று இந்தோனேஷியாவுக்கு அவசர விஜயம் ஒன்றை மேற்கொள்கிறார்.

தற்போது இந்தோனேஷிய அதிகாரிகளின் கண்காணிப்பில் இருக்கும் குறித்த 260 இலங்கையர்களும் ஆஸ்திரேலியா தமக்கு அரசியல் தஞ்சம் வழங்கவேண்டும் என்று கோரி வருகின்றனர். இந்நிலையில், அவர்களின் கோரிக்கை வெற்றியளிக்குமா இல்லையா என்பது ஆஸி. பிரதமரின் இந்தோனேஷிய விஜயம் முடிந்த பிறகே தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தோனேஷியக் கடற்பரப்பில் அதன் கடற்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டமையால், இவர்கள் சம்பந்தப்பட்ட விடயம் தற்போது தமது உள்நாட்டு விவகாரம் என்றும், எனவே தாமே இவர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டும் என்றும் ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது.

எதிர்க்கட்சி கண்டனம்

அதேநேரம், ஆஸ்திரேலியாவின் பிரதான எதிர்க்கட்சி, ஆஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முற்படுபவர்களைத் தடுத்து நிறுத்த ஆஸ்திரேலிய அரசு உரிய நடவடிக்கை எடுக்கத்தவறிவிட்டது என்று கடுமையாகச் சாடி வருகிறதுவவுனியா இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருந்த மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த குடும்பங்களில் ஒரு தொகுதியனர் இன்று விடுவிக்கப்பட்டு மீள் குடியேற்றத்திற்காக இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

பஸ் வண்டிகளில் இராணுவத்தினரால் அழைத்து வரப்பட்ட இக் குடும்பங்கள் இன்று நண்பகலும் நேற்றிரவும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சென்றடைந்தன.

மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 355 குடும்பங்களைக் கொண்ட 941 பேர் நேரடியாக சிங்கள மகா வித்தயாலத்திற்கு அழைத்து வரப்பட்டு அங்கு பொலிஸ் இராணுவம் மற்றும் சிவில் அதிகாரிகளினால் விபரங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர் பிரதேச செயலாளர்கள் ஊடாக அழைத்துச் செல்லப்பட்டு உறவனர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த 80 குடும்பங்களைக் கொண்ட 250 பேர் காரைதீவு விபுலானந்தா வித்தியாலயத்திற்கு நேரடியாக அழைத்துச் செல்லப்பட்டு இதே நடைமுறை பின்பற்றப்பட்டது.

கடந்த முறை இரண்டாவது தொகுதியில் 11.09.2009 ல் ஆழைத்து வரப்பட்ட 169 குடும்பங்களைச் சேர்ந்த 497 பேர் இரண்டு முதல் ஐந்து வாரங்கள் வரை இம் மாவட்டங்களிலுள்ள இடைத்தங்கல முகாம்களில் தங்க வைக்கப்பட்டு பின்னரே இருப்படங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதுமக்களின் உடனடி மீள் குடியேற்றம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் நெருக்கமான உறவினை பேணி பேச்சுக்கள் நடத்தப்படுவதாக இந்திய வெளியுறவுச் செயலாளர் நிரூபமா ராவ் தெரிவித்துள்ளார்.

புதுடில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்திய நாடாளுமன்ற குழுவின் விஜயத்தின் பின்னர், இடம்பெயர்ந்தவர்களின் குடியேற்றத்துக்காக 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்க மத்திய அரசாங்கம் முன்வந்துள்ளமையை அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிதி, மீள் குடியேற்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கு உதவியாக இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்துக் கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் பிரச்சினை குறித்தும் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்தப் பிரச்சினை தொடர்பில் விரைவான ஒரு இணக்கப்பாட்டுக்கு வரும் பொருட்டு, பரஸ்பரம் புரிந்துணர்வினை ஏற்படுத்தும் வகையிலான உறவுகளை வலுப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
மேலும் இங்கே தொடர்க...
19.10.2009கட்டுநாயக்க விமான நிலையத்தில் 29 தமிழ் இளைஞர்கள் கைது
விமான


நிலையத்தில் 29 தமிழ் இளைஞர்கள், இலங்கைப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்ட தமிழ் இளைஞர்களே இவ்வாறு விமான நிலையத்தில் வைத்துக் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 15ஆம் திகதி அதிகாலை கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் சென்ற 11 தமிழ் இளைஞர்கள், சிங்கப்பூர் விமான நிலையத்தில் இறங்கியபோது, அவர்களை சிங்கப்பூருக்குள் அனுமதிக்க மறுப்பு தெரிவித்த குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் அவர்களை மீண்டும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பியுள்ளனர்.

அன்றைய நாள் இரவு 10.00 மணியளவில் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வந்திறங்கிய அவ்விளைஞர்களை இலங்கைக் காவல்துறையினருடன் இயங்கும் புலனாய்வுப் பிரிவினரிடம் கைதுசெய்துள்ளனர்.

அதேபோன்று, கடந்த 16ஆம் திகதி இலங்கையிலிருந்து பிரித்தானியா செல்ல முயன்ற தமிழ் மாணவர்கள் 18 பேர் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்துப் புலனாய்வுப் பிரிவைனரால் கைதுசெய்யப்பட்டனர்.

பிரித்தானியா மாணவர் விசாபெற்று இவர்கள் அங்கு செல்ல முற்பட்ட வேளையிலேயே கைதாகி விசாரணை செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வெளிநாடுகளுக்கு பயணிக்கும் தமிழ் மக்களைக் கண்காணிக்கும் நடவடிக்கையில் ஏராளமான புலனாய்வுப் பிரிவினரும், துணை இராணுவக் குழுவினரும் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் கடந்த நான்கு மாதங்களாக இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் இங்கே தொடர்க...
19.10.2009.நியூயோர்க்கிலிருந்து அமைச்சர் சமரசிங்க ஜெனிவா பயணம் -நவநீதம் பிள்ளையை சந்திப்பார்?


அமெரிக்காவின் நியூயோர்க் நகருக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த மனித உரிமைகள் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர் மகிந்த சமரசிங்க நேற்று நியூயோர்க்கில் இருந்து ஜெனிவா பயணமாகியுள்ளார். ஜெனிவா செல்லும் அமைச்சர் அங்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இதன்போது இலங்கையின் மனித உரிமை நிலைவரங்கள், இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான வசதிகள் மற்றும் மீள்குடியேற்ற வேலைத்திட்டம் போன்ற விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் அமைச்சர் சமரசிங்கவின் ஜெனிவா விஜயத்தின்போது ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவை ஆணையாளர் நாயகம் நவநீதம் பிள்ளையை சந்திப்பாரõ ? என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என மனித உரிமை மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சுயாதான விசாரணை ஒன்றை நடத்தும் கோரிக்கையை இலங்கை உதாசீனம் செய்துவிட்டதாக அண்மையில் பிரஸ்ஸல்ஸில் ஐ.நா. மனித உரிமை பேரவை ஆணையாளர் நாயகம் நவநீதம் பிள்ளை தெரிவித்திருந்தார். ஆனால் நவநீதம் பிள்ளையின் குற்றச்சாட்டு ஆதாரமற்ற மற்றும் மூன்றாம் தரப்பு தகவல்களை கொண்டு தெரிவிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த விடயம் குறித்து பேச்சு நடத்த ஜெனிவா செல்லும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க நவநீதம் பிள்ளையை சந்திப்பாரா? என்பது தொடர்பில் உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை. இதேவேளை அமெரிக்காவுக்கு சென்றிருந்த அமைச்சர் சமரசிங்க ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் நாயகம் பான் கீ மூன் மற்றும் மனிதாபிமான விடயங்களுக்கான ஐ.நா.வின் ஆணையாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸ் ஆகியோரை சந்தித்து இலங்கையின் வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள அகதி மக்கள் தொடர்பில் பேச்சு நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தை அரசாங்கம் இன்று இராணுவத்தினருக்கு எதிராக திருப்பி விட்டுள்ளது-ஐ.தே.கஎதிரான யுத்தம் நிறைவடைந்திருக்கின்ற நிலையில் அரசாங்கம் அதனை இன்று இராணுவத்திற்கு எதிராக திருப்பி விட்டுள்ளது. நாட்டை மீட்டுக் கொடுத்த முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது என்று ஐக்கிய தேசியக்கட்சி குற்றம் சுமத்துகிறது. இன்றைய அரசாங்கத்தின் பயணமானது ஜனநாயகத்துக்கும் நாட்டின் எதிர்காலத்துக்கும் பாதகமானதாகவே அமைந்துள்ளது. அதனைப் பாதுகாப்பதற்கு எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பு உருவாக்கப்படுகின்றது

என்றும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது. எதிர்க் கட்சி அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட ஐ.தே.க. எம்.பி சாகல ரத்னாயக்க மேற்கண்டவாறு அறிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,

எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம். பி.க்களோ ஊடகவியலாளர்களோ நாட்டின் தேவை கருதிய, மக்களின் நன்மை கருதிய கருத்துக்களை வெளியிட முடியாத சூழல் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற தவறான செயற்பாடுகள் மற்றும் குறைபாடுகளைச் சுட்டிக் காட்டுவதற்கான உரிமைகள் எதிர்க்கட்சிகளுக்கு இருக்கின்றன. அதேபோல் உண்மைகளை வெளிக் கொண்டு வருவதற்கான கடப்பாடும் உரிமையும் ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இருக்கின்றன.

இந்த உரிமைகளும் கடப்பாடுகளும் ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்களால் அடக்கு முறைக்குள் தள்ளப்பட்டுள்ளன. யுத்தம் நிறைவøடந்துள்ள இக்கால கட்டத்தில் மக்களின் வாழ்க்கைச்சுமை இறக்கி வைக்கப்படவில்லை. அதேபோல் நிவாரணங்கள் இல்லை. மக்களுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகள் மறுக்கப்பட்டுள்ளன.

இது இவ்வாறிருக்கின்ற போது அடுத்த வாரமளவில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படவிருக்கின்றது. சிலிண்டர் ஒன்றுக்கு குறைந்தது 100 ரூபாவேனும் அதிகரிக்கக் கூடிய சூழ்நிலை உள்ளது. இதன் பாரம் மக்களுக்கே சென்றடையவுள்ளது. தெனியாயவில் கட்டப்படுகின்ற மாளிகைக்கு என அமைக்கப்பட்டு வருகின்ற வீதி மகநெகும செயற்றிட்டத்தின் கீழ் பொதுமக்களின் பணத்தை செலவழித்தே மேற்கொள்ளப்படுகின்றது.

இந்த உண்மையை வெளிப்படுத்துவதற்கு முனைந்த எம்மீதும் ஊடகங்கள் மீதும் அரசாங்கத்தின் ஆதரவாளர்களும் அடியாட்களும் தாக்குதல் நடத்தினர். அன்று அவர்கள் செய்த முதல் வேலையே ஊடகவியலாளர்களின் கெமராக்களை நிலத்தில் அடித்து நொருக்கியது தான். இந்த சம்பவம் தொடர்பில் இது வரையில் எந்த விதமான விசாரணை நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை. எமது உறுப்பினர் பாலித ரங்கே பண்டாரவின் வீடு அலுவலகம் சேதமாக்கப்பட்டது. தொடர்பிலும் இதுவரையில் பொலிஸார் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.

பயங்கரவாதத்துக்கு எதிராக இராணுவத்தினர் யுத்தம் புரிந்தனர். இழப்புக்களை சந்தித்தனர். ஆனால் அவர்களுக்கான நிவாரணங்களில் சம்பளத்தில் அரசாங்கம் கை வைத்திருப்பது ஏற்றுக் கொள்ள முடியாததாகும். அது மட்டுமல்லாது நாட்டை சுதந்திரமாக்கிய சரத் பொன்சேகா இன்று அரசாங்கத்தில் இருந்து ஓரம் கட்டப்படுள்ளார். இது தான் அரசாங்கத்தினால் இராணுவத்திற்கு வழங்கப்படுகின்ற கௌரவமாக இருக்கின்றது. அரசாங்கத்தின் நடவடிக்கைகள் எதிர்காலத்திற்கு நல்லதல்ல என்பது உணரப்பட்டதாலேயே எதிர்க் கட்சிகளின் கூட்டமைப்பு உருவாக்கப்படுவதற்கான தேவை எற்பட்டது. அது தற்போது சாதகமான பலனையும் தந்திருக்கின்றது.

பொது வேட்பாளர் குறித்த அறிவிப்புகள் உரிய நேரத்தில் வெளியிடப்படும். அரசாங்கத்தின் அடக்கு முறைகள், அச்சுறுத்தல்கள், சனநாயக விரோத செயற்பாடுகள் யாவற்றுக்கும் முற்றுப் புள்ளி வைப்பதே எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பின் நோக்கமாகும்.
மேலும் இங்கே தொடர்க...
புலிகளின் இணையத்தளம் மூடல்?

மநித உடல் வியாபாரம் முடிந்து விட்டது கடை மூடப்பட்டுவிட்டது
விடுதலைப் புலிகள் ஆதரவு முக்கிய இணையத்தளமான புதினம் திடீரென மூடப்பட்டுள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக இனிமேல் இவ்விணையத்தளம் இயங்காது என்ற செய்தியை புதினம் வெளியிட்டுள்ளது.

விடுதலை புலிகள் சார்பான புதினம் இணையத்தளம் முல்லைத்தீவில் இறுதிக்கட்ட மோதல்களில் போது போர்க்கள நிலவரத்தை உடனுக்குடன் தரவேற்றம் செய்தது.

மேலும், போரின் கடைசி நாளில் புதினம் தளத்தின் செய்தியாளர் ராணுவத்தின் கடைசி அகோர தாக்குதலுக்கு மத்தியில் சிக்கிய நிலையிலும் கையடக்க தொலைபேசி மூலமாக கொடுத்த கடைசி செய்தி அனைவரையும் பரபரப்பில் ஆழ்த்தியது.

இந்நிலையில் புதினம் இணையத்தள முகவரிக்கு போனால், ''தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த இணையத்தளம் இயங்கமாட்டாது என்பதனை அறியத்தருகின்றோம்'' (This is to advise due to personal reasons this website will not be functioning anymore) என்ற தகவல் மட்டுமே உள்ளது.

புதினம் இணையத்தளத்தின் திடீர் மூடல் உலகெங்கும் உள்ள தமிழர்கள் மத்தியில், குறிப்பாக இலங்கைத் தமிழர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
மேலும் இங்கே தொடர்க...
200910.19.எம். பி . பதவியிலிருந்து பசில் ராஜபக்ஷ நாளை ராஜிநாமா
நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ எம்.பி. நாடாளுமன்றத்தில் நாளை செவ்வாய்க்கிழமை விசேட உரையாற்றியதன் பின்னர் தனது எம்.பி. பதவியை ராஜிநாமா செய்து கொள்ளவுள்ளார். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரசார நடவடிக்கைகளை ஒழுங்கமைக்கும் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காகவே அவர் தனது எம்.பி. பதவியை ராஜிநாமா செய்து கொள்ள இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்துக்கொண்டாலும் எதிர்வரும் பொதுத்தேர்தலில் அவர் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 2006 ஆம் ஆண்டு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்ட பசில் ராஜபக்ஷ அன்வர் ஸ்மைல் எம்.பியின் வெற்றிடத்திற்கே நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பசில் எம்.பியின் வெற்றிடத்திற்கு தென் மாகாண சபைத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்ட மாத்தறை மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்றவரை நியமிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தென் மாகாண சபைத்தேர்தல் முடிவுகள் தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானதன் பின்னரே எம்.பியின் பதவி வெற்றிடத்தை நியமிப்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி தேர்தலையா? அல்லது நாடாளுமன்றத் தேர்தலையா? முதலில் நடத்துவது என்பது தொடர்பில் அடுத்தமாதம் 15 ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வருடாந்த மாநாட்டிலேயே உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என்று அரசாங்க வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.
மேலும் இங்கே தொடர்க...
இந்திய வானில் அனுமதியின்றிப் பறந்த அமெ.விமானம் மும்பையில் தரையிறக்கம்இராணுவ வீரர்களுடன் இந்திய வானில் அனுமதியின்றிப் பறந்த அமெரிக்க விமானம் மும்பையில் கட்டாயமாக தரையிறக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

வட அமெரிக்க ஏயார்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான 767 போயிங் விமானம் ஒன்று நேற்று காலை இந்தியாவுக்குப் பறந்தது. அமெரிக்க இராணுவம் வாடகைக்கு அமர்த்தியிருந்த அந்த விமானத்தில், 205 பயணிகளும், அமெரிக்க கடற்படை வீரர்களும் இருந்தனர்.

ஐக்கிய அரபு எமிரேட் நாட்டில் உள்ள பிஜிரியா என்ற நகரத்தில் இருந்து, தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்கொக் நகருக்கு அந்த விமானம் சென்று கொண்டிருந்தது. இந்திய எல்லைக்குள் அந்த விமானம் நேற்று காலை நுழைந்த போது, அதை மும்பை விமான நிலையத்தில் தரையிறக்கும்படி இந்திய விமானப்படை உத்தரவிட்டது.

அதன்படி காலை 7.25 மணியளவில் அந்த விமானம் மும்பை விமான நிலையத்தில் கட்டாயமாக தரையிறக்கப்பட்டு, ஒரு ஓரமாக நிறுத்தப்பட்டது.

உடனடியாக இந்திய விமானப்படை அதிகாரிகளும், சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகளும் அந்த விமானத்துக்குச் சென்று, அமெரிக்க விமானிகளிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

விதிமுறைகளை மீறி....

"அந்த விமானத்தில் பயணிகளை ஏற்றிச் செல்ல மட்டும் இந்திய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டு இருந்தது. ஆனால் விதிமுறைகளை மீறி அந்த விமானத்தில் அமெரிக்க கடற்படை வீரர்கள் ஏற்றப்பட்டிருந்தது தெரிய வந்தது.

அதனால் அது கட்டாயமாக தரையிறங்கும்படி வயர்லஸ் மூலம் உத்தரவிடப்பட்டது. அதன்படி அந்த விமானம் தரையிறக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டது'' என்று இந்திய விமானப்படை அதிகாரி டி.கே.சின்கா தெரிவித்தார்.

இதுபற்றி அமெரிக்க தூதரக அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு,

"இது வழக்கமான நடைமுறைதான். சம்பந்தப்பட்ட இந்திய அதிகாரிகளுடன் பேச்சு நடத்தி வருகிறோம்" என்று அவர் தெரிவித்தார்.

"அந்த விமானத்தில் இருந்து குழப்பமான சிக்னல் கிடைத்ததால் அது தரையிறக்கப்பட்டது. அந்த விமானத்தில் இருந்த விமானியிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் அந்த விமானம் செல்லலாம் என்று இந்திய விமானப்படை அனுமதி அளித்தது.

ஆனால் அந்த விமானம் எப்போது செல்லலாம் என்று விமானப் போக்குவரத்து ஆணையம்தான் முடிவு செய்யும்'' என்று மும்பை விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறினார்.

இந்த நிலையில், அந்த விமானத்தை ஓட்டி வந்த விமானியின் வேலை நேரம் முடிந்து விட்டது என்றும், அதனால் உடனடியாக புறப்பட வில்லை என்றும், ஆகவே இன்றுதான் அந்த விமானம் புறப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஜூன் மாதம் முதல் இது போன்று விதிகளை மீறி இந்திய வானில் பறந்த 3 வெளிநாட்டு விமானங்கள் கட்டாயமாகத் தரையிறக்கப்பட்டு, விசாரணைக்குப் பின்னர் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. இது 4ஆவது சம்பவமாகும்.
மேலும் இங்கே தொடர்க...
கைதான அமெரிக்க கோடீஸ்வரருக்கு விடுதலைப் புலிகளுடன் தொடர்பு உண்டா?-அதிகாரிகள் விசாரணை
அமெரிக்காவில் மோசடி வர்த்தகத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி கைது செய்யப்பட்ட பாரிய நிதி நிறுவன உரிமையாளர் ராஜ் ராஜரத்னம் என்பவருக்கு தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு உண்டா என்று அதிகாரிகள் விசாரணை செய்து வருகிறார்கள். கெலியோன் கு×ப் எனப்படும் நிதி நிறுவன ஸ்தாபகரான ராஜ் ராஜரத்னம் உட்பட மேரிலாந்திலிருந்து இயங்கும் தரும நிறுவனம் ஒன்றுக்கு அமெரிக்காவிலுள்ள செல்வந்தர்களான இலங்கையர்கள் பலர் அன்பளிப்பு செய்யும் பணம் விடுதலைப் புலிகளுக்கு போய் சேர்வதற்கு ஆதாரமான பல ஆவணங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக விசாரணையாளர்களை மேற்கோள்காட்டி வோல் ஸ்ரீற் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னொரு போதும் இல்லாத அளவிலான இந்த பாரிய நிதி மோசடி தொடர்பாக 52 வயதான ராஜரத்னம் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க மத்திய புலன் விசாரணை பணியகம் தெரிவித்ததாகவும் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

ராஜரத்னமும் அவரது சகாக்களும் தகாத வழியில் 20 மில்லியன் டொலரை சம்பாதித்தனர் என்று வழக்குத் தொடுநர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ராஜரத்தினத்தின் நியூயோர்க் கேலியொன் நிதி நிறுவனம் 37 பில்லியன் டொலர் முதலீட்டை கொண்டுள்ளது. ராஜரத்னத்தின் சட்டத்தரணி ஜிம் வோல்டன் தமது கட்சிக்காரர் நிரபராதி என்றும் அவருக்கெதிரான குற்றச்சாட்டுக்களை அவர் எதிர்த்து வாதாடுவார் என்றும் தெரிவித்துள்ளார். இலங்கையிலும் ஏனைய நாடுகளிலும் 2004 ஆம் ஆண்டில் சுனாமி அனர்த்தத்தினால் அழிந்து போன வீடுகளை புனரமைப்பதற்கு ராஜரத்னம் அன்பளிப்பாக நிதி வழங்கியுள்ளார். ஆனால் அவருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எதவித தொடர்பும் இல்லை என்று வோல்டன் தெரிவித்தார். நியூயோர்க், புக்ளினில் மத்திய புலன் விசாரணைப் பிரிவினர் நடத்திய பயங்கரவாதத்திற்கு எதிரான மற்றுமொரு விசாரணையில் அமெரிக்காவில் பயங்கரவாத இயக்கம் என்று அறிவிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு பொருளுதவி வழங்க முயற்சித்த வேறு 8 பேர் குற்றவாளிகளென ஒப்புக் கொண்டுள்ளனர்.

ஆனால் இந்த சம்பவத்தில் ராஜரத்தினமும் அவரது சகாக்களும் தங்கள் பணம் விடுதலைப் புலிகளுக்கு போய் சேர்கிறது என்பதை தெரிந்திருந்தனர் என்று வழக்கு தொடுநர்கள் குற்றம் சாட்டவில்லை.ஆனால் நியூயோர்க் கிழக்கு மாவட்டத்திலுள்ள மாவட்ட நீதிமன்றம் ஒன்றில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய குற்றவியல் முறைப்பாட்டுப் பத்திரத்தில் தமிழர் புனர்வாழ்வு கழகம் என்ற பெயரில் மேரிலாந்திலுள்ள அமெரிக்க தரும நிறுவனத்திற்கு அன்பளிப்பு செய்யப்படும் பணம் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கே போய்ச் சேர்கிறது என்று மத்திய புலன் விசாரணை அதிகாரிகளால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கு விடுதலைப் புலிகளின் அமெரிக்க பிரிவுத் தலைவர் என்று வழக்குத் தொடுநர்களால் தெரிவிக்கப்பட்ட கருணாகரன் கந்தசாமி என்பவருக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் வோல் ஸ்ரீற் பத்திரிகை தெரிவித்துள்ளது.

தமிழர் புனர்வாழ்வுக் கழகம் என்ற நிறுவனத்திற்கு அன்பளிப்பு செய்தவரது பெயர், ""தனிப்பட்டவர் பி'' என்று மட்டுமே நீதிமன்ற உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட தேடுதலிலிருந்து கண்டு பிடிக்கப்பட்ட ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் ""தனிப்பட்டவர் பி'' என்று குறிப்பிடப்பட்டிருப்பது ராஜரத்தினத்தையே என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக விசாரணையாளர்களுடன் தொடர்புள்ளவர்கள் கூறியதாகவும் வோல் ஸ்ரீற் ஜேர்னல் தெரிவித்துள்ளது
மேலும் இங்கே தொடர்க...