25 மே, 2010

சரத் பொன்சேகாவை விடுவிக்கக் கோரி ஜனாதிபதிக்கு மனு

இராணுவத்தினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகாவை விடுவிக்கக் கோரி ஜனாதிபதிக்கு மனு ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜனநாயக தேசிய முன்னணி ஆகிய கட்சிகளின் தலைவர்கள் உட்பட ஐம்பது பாராளுமனற் உறுப்பினர்கள் இந்த மனுவில் கையெழுத்திட்டு ஜனாதிபதியிடம் கையளித்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

கொழும்பில் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் 198 பேர் விடுதலை

கொழும்பில் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் 198 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக புனவாழ்வுக்கான ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு கொழும்பில் புனர்வாழ்வு அளித்துவந்த முகாம் இன்றுடன் மூடப்படுவதாக இருந்தது. எனினும் அங்கு தங்கியிருந்த 52 பேர், தங்களது கல்வியைத் தொடரும்வரை அரசாங்கம் அவர்களைப் பொறுப்பேற்கும் எனவும் அவர் ஏ.எப்.பி. செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார்.

"புனர்வாழ்வு முகாமில் எனக்கு நண்பர்கள் பலர் கிடைத்தார்கள். நான் நிறைய விடயங்களை இங்கு கற்றுக் கொண்டேன். எனக்கு முகாமை விட்டுச் செல்வது ஒரு வகையில் கவலையாக இருக்கின்றது. என்றாலும் எனது குடும்பத்துடன் மீண்டும் ஒன்றிணைவது மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது."

மூன்று வருடகாலமாக விடுதலைப்புலிகள் இயக்கத்தில் ஒரு போராளியாக இருந்து புனர்வாழ்வு அளிக்கப்பட்ட 17 வயது லுக்சியா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

"நான் சட்டத்தரணியாக வரவேண்டும் என்ற கனவை புனர்வாழ்வு முகாம் நனவாக்கியுள்ளது. நான் எனது கல்வியைக் கவனமாகத் தொடர்வேன்" என 16 வயதான கிறிஸ்டி என்ற மாணவி குறிப்பிட்டுள்ளதாக ஏ.எப்.பி., செய்தி வெளியிட்டுள்ளது
மேலும் இங்கே தொடர்க...

"இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம்'


"இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம்' என, ஐ.நா., பொதுச் செயலரிடம் இலங்கை வலியுறுத்த உள்ளது. இலங்கை வெளியுறவு அமைச்சர் பெரிஸ் கூறியதாவது: ஐ.நா., பொதுச் செயலர் பான்-கீ-மூனைச் சந்திப்பதற்காக அமெரிக்காவுக்கு வந்துள்ளேன். அவருடனான சந்திப்பின் போது இலங்கையில் நடக்கும் சீரமைப்பு மற்றும் மறு குடியமர்த்தும் பணிகள் பற்றி எடுத்து கூறவுள்ளேன்.

குறிப்பாக, இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்று அவரிடம் வலியுறுத்தப்படும்.கடந்தாண்டு மே மாதம் நடந்த இறுதிக் கட்ட போரின் போது, மனித உரிமை மீறல்கள் நடந்தனவா என்பது குறித்து விசாரிக்க, இலங்கை அரசே ஒரு குழுவை அமைத்துள்ளது என்பதையும், ஐ.நா., சார்பில் தனியாக இது குறித்து விசாரிக்க வேண்டாம் என்றும் அவரிடம் வலியுறுத்தப்படும். இவ்வாறு பெரிஸ் கூறினார்.

பெல்ஜியத்தைச் சேர்ந்த சர்வதேச நெருக்கடி நிலைக்குழு (ஐ.ஆர்.சி.,) சமீபத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், "இலங்கையில் நடந்த இறுதிக் கட்ட போரின் போது, பெருமளவிலான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது குறித்து ஐ.நா., சார்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கை வெளியான அடுத்த சில நாட்களில், மனித உரிமை மீறல் விசாரணை குறித்து இலங்கை வெளியுறவு அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

யாழ். தாராகுளம் மக்கள் அமைச்சர் டக்ளஸணுடன் சந்திப்பு 24 .ம் திகதி

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை யாழ். தாராகுளம் குடியேற்றத்திட்ட மக்கள் (24) சந்தித்துக் கலந்துரையாடினர்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் யாழ். அமைச்சுப் பணிமனையில் நேற்று காலை இடம்பெற்ற மேற்படி சந்திப்பின்போது தமது கோரிக்கைகளையும், பிரச்சினைகளையும் எடுத்துரைத்த அக்குடியேற்றத்திட்ட மக்கள் பிரதிநிதிகள் தொடர்ச்சியாக பதினெட்டு வருடங்கள் தாம் அங்கு வசிக்காத நிலையில் வீட்டு உறுதிகள் இழந்த குடியேற்றத் திட்ட உரிமையாளர்களுக்கு வீட்டு உறுதிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கும், சேதமடைந்துள்ள தமது வீடுகளை புனரமைப்பதற்கும் உரிய ஏற்பாடுகளை செய்து தருமாறு கேட்டுக்கொண்டனர்.

இவ்விடயத்தில் கூடிய கவனம் செலுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ். பிரதேச செயலாளர் மற்றும் வீடமைப்பு அதிகார சபையின் யாழ். பிராந்திய உதவிப் பொது முகாமையாளர் ஆகியோருடன் தொடர்புகொண்டு விபரங்களை கேட்டறிந்து கொண்டதுடன், தாராகுளம் குடியேற்றத்திட்ட மக்களின் கோரிக்கைகள் விரைவில் தீர்த்துவைக்கப்படும் என உறுதியளித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளவர்கள் மூன்று மாத காலத்துக்குள் மீள்குடியேற்றம்இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள சகல மக்களையும் எதிர்வரும் மூன்று மாத காலத்தில் மீள்குடியேற் றுவதுடன் மீள் குடியேற்ற பிரதேசங்களின் உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை துரிதமாக மேற்கொள்வதாகவும் அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

துரித மீள்குடியேற்றம் தொடர்பான விசேட உயர்மட்ட மாநாடு நேற்று வவுனியாவில் நடைபெற்றது. அமைச்சர்கள் உயரதிகாரிகள் பலரும் கலந்துகொண்டுள்ள இம் மாநாட்டில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன் அதற்குரிய நடவடிக் கைகளைத் துரிதப்படுத்துமாறும் சம்பந் தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

மீள் குடியேற்ற அமைச்சர் மில்றோய் பெர்னாண்டோ தலைமையிலான உயர் மட்டக் குழுவொன்று நேற்று வன்னிக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்தது. இக் குழு இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களின் மீள் குடியேற்றம் மற்றும் அவர்களுக்கான தேவைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளதுடன் இவற்றை முறையாகச் செயற்படுத்தும் திட்டங்கள் தொடர்பாக ஆராயும் உயர்மட்ட மாநாடு ஒன்றையும் வவுனியா மாவட்ட செயலகத்தில் நடத்தியுள்ளது.

இம்மாநாட்டில் அமைச்சர்கள் மில்றோய் பெர்னாண்டோ, ரிஷாத் பதியுதீன், பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், வன்னி மாவட்ட எம். பி. நூர்தீன் மசூர், வவுனியா கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர்கள், வன்னி மாவட்ட கட்டளைத் தளபதி, பிரதிப் பொலிஸ் மா அதிபர், திணைக்களத் தலைவர்கள், அரச உயரதிகாரிகள் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.

இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள வன்னி மாவட்ட மக்களை துரிதமாக அவர்களது சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்துவது சம்பந்தமாக இம் மாநாட்டில் முக்கிய கவனமெடுக்கப்பட்டுள்ளது.

மீள் குடியேற்றம் இடம்பெறும் பிரதேசங்களின் அடிப்படை வசதிகளைப் பெற்றுக் கொடுத்தல், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களை மூன்று மாத காலத்திற்குள் மீள்குடியேற்றுவது தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன் அதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர்கள் பணிப்புரைகளை வழங்கியுள்ளனர்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த மீள் குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ மூன்று மாத காலத்தில் சகல மக்களையும் மீளக் குடியமர்த்துவதே அரசாங்கத்தின் நோக்கமெனவும் அதற்கான நிதியினை அரசு ஒதுக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கண்ணி வெடி அகற்றும் நடவடிக்கைகளைத் துரிதப்படுதுதல், மீள் குடியேற்றம் தொடர்பில் 2010ம் ஆண்டுக்கான திட்டங்கள் குறித்தும் இம் மாநாட்டின் போது ஆராயப் பட்டுள்ளதுடன் மீள் குடியேற்றப்படும் மக்களுக்கான ஆரம்ப கொடுப்பனவுகள், வீடுகளை அமைப்பதற்கு வழங்க வேண்டிய உதவிகள் சம்பந்தமாகவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர்கள் பணிப்புரைகளை விடுத்துள்ளனர்.

செட்டிக்குளம் பிரதேச மக்களின் சுகாதார, பாதுகாப்பு சம்பந்தமாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன், அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோவின் கவனத்துக்குக் கொண்டு வந்ததுடன் சகல குறைபாடுகளையும் துரிதமாக நிவர்த்திக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மில்ரோய் உறுதியளித்தார்.

இம் மாநாட்டின் பின் அமைச்சர்கள் மடுத் திருத்தலதிற்கும் விஜயம் செய்ததுடன் அதனை அண்டிய பிரதேசங்களின் நிலைமைகளையும் நேரில் பார்வை யிட்டுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

ஏற்றுமதி உற்பத்தியை அதிகரிக்க தொழில்நுட்ப உபயோகம் அவசியம்


தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைச்சானது ‘விதாதா’ வேலைத் திட்டத்தின் கீழ் ஒரு இலட்சம் தொழில் முயற்சியாளர்களை நாடெங்கிலுமிருந்து உருவாக்கி நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்தும் செயற்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

தொழில்நுட்ப அறிவை சகல கிராமங்க ளுக்கும் எடுத்துச் சென்று ஏற்றுமதி உற்பத்தியில் சர்வதேசத்துடன் போட்டியிடும் தொழில் முயற் சியாளர்களை உருவாக்குவதே அமைச்சின் நோக்கமாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் 256 விதாதா வள நிலையங்களை உருவாக்கி 6,000 தொழில் முயற்சியாளர்களை குறுகிய காலத்தில் நாட்டிற்கு அறிமுகப்படுத்த முடிந்துள்ளதாகத் தெரிவித்த அவர், மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்தின்கீழ் மேற்படி செயற்திட்டம் முன்னெ டுக்கப்பட்டதுடன், இதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்குப் பங்களிப்பு வழங்க முடிந் துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சித் துறை அமைச்சின் எதிர்கால வேலைத் திட்டங்கள் குறித்து தெளிவுபடுத்திய அமைச்சர் திஸ்ஸ விதாரண மேலும் தெரிவிக்கையில், நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு விஞ்ஞான ஆராய்ச்சிகள் மிக அவசியமாகின்றது. ஐரோப்பிய நாடுகளைப் போன்றே ஆசியாவில் ஜப்பான், தாய்வான், கொரியா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகள் அபிவிருத்தியில் முன்னேற்றமடைய விஞ்ஞான ஆராய்ச்சிகளும் புதிய கண்டுபிடிப்புகளுமே காரணம்.

சர்வதேச சந்தையில் போட்டி போடுமளவுக்கு உயர் தொழில்நுட்ப செயற்பாடுகளை மேம்படுத்த வேண்டியுள்ளது. ஜப்பானின் உயர் தொழில்நுட்ப முன்னேற்றமே அந்நாடு முன்னேற்றமடையக் காரணமாயமைந்துள்ளது.

எமது ஏற்றுமதி உற்பத்தியை அதிகரிக்க வேண்டுமானால் விஞ்ஞான ஆராய்ச்சிகளும் உயர் தொழில்நுட்ப உபயோகமும் மிகவும் அவசியமாகிறது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

வெள்ளப் பாதிப்புகளுக்கு நட்டஈடு *குடும்பம் ரூ. 50,000 *வயல் ரூ. 20,000 *மரணம் ரூ. 15,000


கடும் மழை வெள்ளம் காரணமாக சேதமடைந்த சொத்துக்கள் பாதிக்கப்பட்ட விவசாய நடவடிக்கைகளுக்கு நட்ட ஈட்டினை வழங்குவதற்கு அரசாங்கம் துரித நடவடிக்கைகளை மேற்கொண் டுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைக்கமைய இதற்கென தேவையான நிதியினைப் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன் பாதிக்கப்பட்டோரின் விபரங்களை உடனடியாகத் திரட்டித் தருமாறு சகல மாவட்டச் செயலாளர்களையும் கேட்டுக் கொண்டுள்ளது.

கடந்த சில தினங்களாக பெய்துவரும் அடை மழை, வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணங்கள், சேதமடைந்துள்ள சொத்துக்களுக்கு நட்ட ஈடுகளையும் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கென போதியளவு நிதியைப் பெற்றுக் கொடுக்க வும் அரசாங்கம் தயாராகவுள்ளது.

கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர்ச்சியான மழை வெள்ளப் பெருக்கு காரணமாக 93,955 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு உணவு மற்றும் உலருணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருவதுடன், இச் செயற் பாடுகள் முறையாக இடம்பெறு கின்றனவா என்பதை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும் வகையில் விசேட குழுவொன் றையும் அரசாங்கம் ஈடுபடுத்தியுள்ளது.

நட்டஈடாக, முற்றாகப் பாதிக்கப்பட்ட குடும்பமொன்றுக்கு 50,000 ரூபாவையும் பாதிக்கப்பட்டுள்ள விவசாய காணிகளுக்காக 20,000 ரூபாவையும் பெற்றுக் கொடுப்பதற்கும் மரணமடைந்தோரின் குடும்பமொன்றுக்கு 15,000 ரூபாவை வழங்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அத்துடன் பாதிப்புகளை சீர் செய்யும் வகையிலான உடனடி மற்றும் நீண்டகால திட்டங்கள் மற்றும் அதற்கான மதிப்பீடுகளைச் சமர்ப்பிக்குமாறு அனர்த்த முகாமைத்துவ அமைச்சு சகல மாவட்டச் செயலாளர்களையும் அறிவுறுத்தியுள்ளது.

வெள்ளத்தினால் பெருமளவு பாதிக்கப் பட்ட கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கு நிவாரணங் களுக்கென நிதியொதுக்கப்பட்டுள் ளதுடன் உலருணவுக்காக உலக உணவுத் திட்டத்தின் கீழ் 56 மில்லியன் ரூபாவும் வழங்கப்பட்டுள்ளது. உலருணவு வழங்கும் செயற்பாடுகள் பிரதேச செயலாளர் பிரிவு மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

வெள்ளம் படிப்படியாக வடிந்து வரும் நிலையில் பாதிக்கப்பட்ட மக்களில் பெரும்பாலானோர் தற்காலிக நிவாரண நிலையங்களிலிருந்து வீடு திரும்பியுள்ளது டன் மேலும் 10,655 பேர் நாட்டின் பல பிரதேசங்களிலுமுள்ள 62 நிலையங்களில் தங்கியுள்ளனர். அவர்களுக்கான சமைத்த உணவு வழங்கப்பட்டு வருகிறது.

அதேவேளை, வெள்ளம் வடிந்துள்ள பகுதிகளில் தொற்றுநோய் பரவும் அபா யம் உள்ளதால் அதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் சுகாதார அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

இரண்டாவது நீதிமன்ற விசாரணைகளை ரத்துச்செய்யமாறு சரத்பொன்சேகா மனுதாக்கல்

இரண்டாவது நீதிமன்ற விசாரணைகளை ரத்துச்செய்யமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேகா இன்று மனுதாக்கல் செய்துள்ளார். பொன்சேகாவின் சட்டதரணியால் முன்வைக்கப்பட்டிருந்த இம் மனுவில், இரண்டாவது நீதிமன்ற விசாரணைகளை ரத்துச்செய்யமாறும், தன்னை விரைவில் விடுதலை செய்யுமாறும் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஜெனரல் சரத் பொன்சேகா தொடர்பான இரண்டாவது இராணுவ நீதிமன்றம் விசாரணை இன்று இடம்பெற்ற போதே இம் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த விசாரணை எதிர்வரும் ஜூன் மாதம் 3ஆம் திகதி; வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

அமெரிக்காவுக்கான குடிவரவற்ற விஸா விண்ணப்பங்களுக்கான கட்டணம்


அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது. பதிய கட்டணங்கள் தொடர்பில் அமெரிக்க ராஜங்க திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்ட அறிக்கையிலேயே இக்கட்டணம் அதிகரிப்பு தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜூன் மாதம் 4ஆம் திகதி முதல் புதிய கட்டணங்கள் அமுலுக்கு வரும் என அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் வணிக நடவடிக்கைகள், சுற்றுலா, மாணவர்களுக்கான விண்ணப்பங்களுக்கு 140 அமெரிக்க டொலர்களும் (ரூபா. 16,100), தற்காலிக பணியாளர்கள், மதவிவகாரங்களுக்கான பயணிகள் உள்ளிட்டோருக்கு 150 அமெரிக்க டொலர்களும் (ரூபா. 17,300), முதலீட்டாளர்களுக்கு 390 அமெரிக்க டொலர்கள் (ரூபா.44,900) அறவிடப்படவுள்ளன.

கட்டணங்கள் யாவும் வங்கிக் கட்டளைகளினூடாக அனுப்பப்பட வேண்டும் என தூதரகம் தெரிவித்துள்ளது.

மேலதிக தகவல்களை, இணையத்தளத்தில் பார்வையிடலாம்.
மேலும் இங்கே தொடர்க...