18 டிசம்பர், 2009

ஜெனரல் ச ரத் பொன்சேகாவின் தேர்தல் கொள்கைப் பிரகடனம்
No Image

எதிர்க்கட்சிகளின் பிரதான ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடும் ஜெனரல் சரத் பொன்சேகா இன்று தனது கொள்கைப் பிரகடனத்தை கண்டியில் வெளியிட்டு வைத்தார்.

அதன் தமிழாக்கம் வருமாறு:

01. இன்றைய நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையில் ஜனநாயகம் சரியாக பேணப்படாத நிலையே காணப்படுகின்றது. எனவே, முதலாவதாக நாடாளுமன்ற ஜனநாயகத்தை வலுவடையச் செய்வதற்கு 17ஆவது திருத்த சட்டமூலத்துக்கு அங்கீகாரம் பெற்று,

* சுயாதீன தேர்தல் ஆணைக்குழு
* சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு
* சுயாதீன நீதிமன்ற ஆணைக்குழு
* சுயாதீன அரச சேவைகள் ஆணைக்குழு ஆகியவற்றை உருவாக்குவேன்.

02. நாடாளுமன்றம் களைக்கப்பட்டதன் பின்னர், அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளும் உள்ளடக்கியதாக, கட்சி சாராத அரசாங்கம் ஒன்றை உருவாக்கிப் பொதுத் தேர்தலை ஜனநாயக ரீதியாகவும் நீதியாகவும் சுதந்திரமாகவும் நடத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வேன்.

03. ஜனாதிபதியாக பதவியேற்று ஒருமாத காலத்துக்குள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாமல் செய்வேன். அமைச்சரவையின் அனுமதியைப் பெற்று 6 மாத காலத்துக்குள் நாடாளுமன்ற சட்டமூலத்தினூடாக அதனை நீக்கி மக்கள் எதிர்பார்ப்பினை உறுதிப்படுத்துவேன்.

04. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாமல் செய்த பின்னர், மக்களுக்குப் பொறுப்புடன் கடமையாற்றக் கூடிய ஜனாதிபதியாக நாடாளுமன்றத்தோடு இணைந்து செயற்படுவேன். எனது தாய்நாட்டுக்கும் மக்களுக்கும் என்னால் நிறைவேற்றக்கூடிய சேவைகளை முழுமையான அர்ப்பணிப்புடன் ஆற்றுவேன்.

இடம்பெயர் மக்களின் மீள்குடியேற்றம்...

05. யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து, சகோதர தமிழ் மக்கள் தற்போது முகாம்களில் சிறைப்படுத்தப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அனைத்து வசதிகளையும் பெற்றுக் கொடுத்து, மீள்குடியேற்றம் செய்து, தொடர்ந்தும் அவர்கள் நிம்மதியாக வாழ்வதற்கான சகல வழிகளையும் முன்னுரிமையுடன் செயற்படுத்துவேன். அதேபோன்று பயங்கரவாத சந்தேக நபர்களாகக் கருதப்பட்டு, கைது செய்யப்பட்ட அனைவருக்கும் எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தி, அவர்களுக்குப் புனர்வாழ்வு அளிப்பதற்கும் குற்றவாளிகள் அல்லாதோரை விடுவிப்பதற்கும் நடவடிக்கை எடுப்பேன்.

06. முப்பது வருட யுத்த முடிவில் இடம்பெயர்ந்து அல்லது தாங்களாகவே தமது வதிவிடங்களைக் கைவிட்டுச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டவர்கள் தொடர்பில் ஆராய்ந்து அவர்களின் விருப்பத்திற்கிணங்க, அவர்களைக் குடியமர்த்த நடவடிக்கை எடுப்பேன்.

07. ஜனநாயக நாடொன்றில் அவசியமாகவுள்ள தகவல் மற்றும் கருத்து சுதந்திர உரிமையை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான நடைமுறைகளை உருவாக்குவேன். பத்திரிகைப் பேரவை சட்டமூலத்தை ஒழித்து, நாட்டில் சுதந்திரமானதும் நீதியானதுமான ஊடக கலாசாரத்தைக் கட்டியெழுப்பப் பாடுபடுவேன்.

08. ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், நீதியானதும் நியாயமானதுமான தேர்தலைக் கூடிய விரைவில் நடத்துவதற்கு ஆவன செய்வேன். தேர்தல் காலத்தில் அரச மற்றும் தனியார் ஊடகங்கள் சுயாதீனமாக இயங்குவதற்கு அத்தியாவசியமான நடவடிக்கைகளை எடுப்பேன்.

09. நாட்டு மக்கள் அனைவரும் தமது உரிமையைப் பெற்றுக் கொள்வதற்காக எடுக்கும் ஜனநாயக செயற்பாடுகளுக்குத் தடையாகவுள்ளவற்றை நீக்குவதற்கு நடவடிக்கை எடுப்பேன்.

10. கடந்த காலங்களிலிருந்து ஊழல், லஞ்சம் போன்றவை நாட்டை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. எமது நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு தடையாகவுள்ள பிரதான காரணிகள் இவை என்ற வகையில், அவற்றை முற்றுமுழுதாக ஒழிக்கவும் சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுப்பேன்.

இங்கே குறிப்பிட்டுள்ள அனைத்தையும் நிறைவேற்றுவது எனது பிரதான கடமையாகும்




மலைய க மக்கள் முன்னணியின் ஆதரவு யாருக்கு? நாளைய கூட்டத்தில் முடிவு

No Image
ஜனாதிபதி தேர்தல் குறித்து மலையக மக்கள் முன்னணியின் நிலைப்பாட்டை அறிவிக்கும் கூட்டமொன்று நாளை 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஹட்டன் டி.கே.டபிள்யூ கலாசார மண்டபத்தில் காலை 10.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் சமூக அபிவிருத்தி மற்றும் சமூக அநீதி ஒழிப்பு அமைச்சருமான பெரியசாமி சந்திரசேகரன் தலைமையில் இடம்பெறவுள்ள இந்தக் கூட்டத்தில் முன்னணியின் பொதுச்செயலாளர் எஸ்.விஜயகுமார். பிரதித் தலைவரும் பிரதி அமைச்சருமான பெ.இராதாகிருஷ்ணன் உட்பட முன்னணியின் முக்கியஸ்தர்கள், அமைப்பாளர்கள், ஆதரவாளர்கள் ஆகியோர் கூட்டத்தில் lகலந்து கொள்ளவுள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் மலையக மக்கள் முன்னணி இதுவரை தனது தீர்க்கமான முடிவினை அறிவிக்கவில்லை. அதேவேளை, இந்த முன்னணியின் தூதுக் குழுவினர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் இரு பிரதான வேட்பாளர்களுடனும் கடந்த வாரம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...
ஜெனரல் சரத் பொன்சேகாவின் கொள்கை பிரகடனம் வெளியீடு








2010 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா இன்று காலை 11.30 மணிக்கு கண்டி ஸ்ரீ புஷ்பாதான கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தனது கொளகை பிரகடனத்தை மக்கள் முன் வாசித்து உறுதி மொழி எடுத்துக்கொண்டார்.

இந்நிகழ்வில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், ஐக்கிய தேசியக் கட்சியில் உப தலைவர் கரு ஜெயசூரிய, நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுண ரணதுங்க, மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க, ஸ்ரீ லங்கா சுதர்ந்திர கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர ஆகியோர் கலந்துகொண்டனர்.

பௌத்த, இந்து , முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மத குருமார்கள் ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு ஆசிகளை வழங்கினர்.

கொள்கை பிரகடனத்தை விரைவில் எதிர்பாருங்கள்
மேலும் இங்கே தொடர்க...
ஏ-9 வீதியூடாக இன்று முதல் சகல வாகனங்களும் பயணிக்கலாம் : யாழ். அரச அதிபர்


No Image

ஏ-9 வீதியினூடாக இன்று முதல் தனியார் மற்றும் சகல வாகனங்களும் கட்டுப்பாடுகள் இன்றிப் பயணிக்க முடியும் என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கே.கணேஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக யாழ்.மாவட்டக் கட்டளைத் தளபதி தனக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில், "யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியாவுக்கும் வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான ஏ-9 பாதையில் இன்று 18 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் எதுவித கட்டுப்பாடுகளும் இன்றிப் பயணிக்க முடியும். காலை 6.00 மணி முதல் மாலை 4.00மணி வரை இவ் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஏனைய மாவட்டங்களுக்குமிடையிலும் இந்த அடிப்படையில் போக்குவரத்துக்களை மேற்கொள்ள முடியும். யாழ்ப்பாணத்திலிருந்து புறப்படும் சகல பஸ்களும் யாழ்.மத்திய பஸ் நிலையத்திலிருந்து தொடரணி இல்லாமல் ஏ-9 வீதியினூடாக பயணிக்க முடியும். தேவைக்கேற்ப இடையிடையே இராணுவச் சோதனை நிலையத்தில் சோதனைக்கு உட்படுத்தப்படலாம்.

யாழ்ப்பாணத்திலிருந்து பொருட்களைக் கொண்டு செல்லுதல் மற்றும் யாழ்ப்பாணத்திற்கு பொருட்களை கொண்டு செல்லுதல் போன்ற செயற்பாடுகள் மறு அறிவித்தல் வரும் வரை நடைமுறையில் உள்ளவாறே நாவற்குழி களஞ்சியத்திலிருந்து தொடரணி மூலம் பயணிக்கலாம்.

பயணத்தை மேற்கொள்ளும் சகல வாகனங்களும், சாரதி, நடத்துனர்கள், பயணிகள் யாவரும் இச்செயற்பாட்டில் தங்களது பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டிருப்பதாக அரசாங்க அதிபர் குறிப்பிட்டுள்ளார்





பாகிஸ்தானில் ஆளில்லா விமானத் தாக்குதல் : 12 கிளர்ச்சியாளர்கள் கொலை

No Image


பாகிஸ்தானின் வட மேற்கே நடைபெற்ற இரு வேறு அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதல்களில் தலிபான் கிளர்ச்சியாளர்கள் என்று சந்தேகிக்கப்படும் 12 நபர்கள் கொல்லப்பட்டு விட்டதாக அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

வடக்கு வசிரிஸ்தான் பகுதியில் நடத்தப்பட்ட கடைசி ஏவுகணைத் தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். முன்னதாக உள்ளூர் பழங்குடியினத்தவரின் வீடுகள் மீது ஆளின்றி பறக்கும் விமானம் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டனர்.

கடந்த சில மாதங்களில் இப்பகுதியில் இது போன்று ஆளில்லா விமானங்களின் மூலம் பல தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. பாகிஸ்தானில் ஆளில்லா விமானத் தாக்குதல் : 12 கிளர்ச்சியாளர்கள் கொலை பாகிஸ்தானின் வட மேற்கே நடைபெற்ற இரு வேறு அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதல்களில் தலிபான் கிளர்ச்சியாளர்கள் என்று சந்தேகிக்கப்படும் 12 நபர்கள் கொல்லப்பட்டு விட்டதாக அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

வடக்கு வசிரிஸ்தான் பகுதியில் நடத்தப்பட்ட கடைசி ஏவுகணைத் தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

முன்னதாக உள்ளூர் பழங்குடியினத்தவரின் வீடுகள் மீது ஆளின்றி பறக்கும் விமானம் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டனர்.

கடந்த சில மாதங்களில் இப்பகுதியில் இது போன்று ஆளில்லா விமானங்களின் மூலம் பல தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன






ஜிஎஸ்பி பிளஸ் சலுகைத் திட்டம் இடைநிறுத்தம் : ஐரோப்பிய ஒன்றியம்

No Image


இலங்கைக்கு இதுவரை காலமும் வழங்கப்பட்டு வந்த ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகைத் திட்டத்தைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகைத் திட்டம் வழங்குவது தொடர்பிலான ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளை இலங்கை மீறியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய இணையதளம் சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கைக்கு சலுகைத் திட்டத்தை வழங்குவது குறித்த இறுதித் தீர்மானம் எடுப்பதற்கு உறுப்பு நாடுகளுக்கு இரண்டுமாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. சலுகைத் திட்டத்தை நீடிப்பதற்கு தேவையான முக்கிய நிபந்தனைகளை இலங்கை பூர்த்தி செய்துள்ளதா என்பது குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் கிறிஸ்டியன் ஹோமான் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக இலங்கை சர்வதேச மனித உரிமைச் சட்ட திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளதா என்பது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய சில நிபந்தனைகளை இலங்கை பூர்த்தி செய்யத் தவறியுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதெனவும் அவர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக இலங்கைக்கான சலுகைத் திட்ட நீடிப்பை இரண்டு மாத காலத்திற்கு இடைநிறுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயங்கள் தொடர்பில் இலங்கையுடன் ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுக்க ஐரோப்பிய ஒன்றியம் விரும்புவதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது



நெருக்கடியான கா லத்தை நான் கடந்து விட்டேன் -வேட்பாளர் மஹிந்த தெரிவிப்பு
No Image


நெருக்கடியான காலகட்டத்தை நான் கடந்து விட்டேன். அடுத்து என் முன்னால் இருப்பது அபிவிருத்திக்கான வேலைத் திட்டமாகும் என்று ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

தேர்தல்கள் செயலகத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்துவிட்டு வெளியேறுகையில் செயலகத்திற்கு வெளியே குழுமியிருந்த ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர்கள், ஆளும்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் புடைசூழ்ந்திருந்த நிலையில் அவர் மேலும் கூறுகையில், மிக நெருக்கடியான காலக்கட்டத்தை கடந்து விட்டேன் அடுத்து என்முன்னாள் இருப்பது அபிவிருத்திக்கான வேலைத்திட்டமேயாகும் என்றார்.




பயங்கரவாதத்தை வென்றவன் ஜனநாயகத்தையும் வெல்வேன் -வேட்பாளர் பொன்சேகா தெரிவிப்பு


வரலாற்றில் நான் பயங்கரவாதத்தை வென்றவன் மக்கள் என்னை சுற்றியிருப்பதனால் ஜனநாயகத்தையும் வெற்றிகொள்வேன். என்று எதிரணியின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

தேர்தல்கள் செயலகத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்துவிட்டு வெளியேறுகையில் செயலகத்திற்கு வெளியே குழுமியிருந்த ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி, மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு மத்தியிலிருந்து அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறுகையில், மக்கள் என் பின்னால் திரண்டிருக்கின்றனர். பயங்கரவாத்தை தோல்வியடையச் செய்த நான் ஜனாநாயகத்தையும் வெற்றிக்கொள்வேன். அதன் மூலமாக நாட்டில் இடம்பெறுகின்ற ஊழல் மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைப்போன். மக்களின் வாழ்க்கைச் சுமையை குறைத்து நாட்டில் மக்கள் நிம்மதியாக வாழும் வகையில் நல்லாட்சியை ஏற்படுத்துவேன் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...


அபிவிருத்திக்கான சவாலையும் எதிர்கொள்ளத் தயார் -ஜனாதிபதி

நெருக்கடியான காலகட்டத்தை வெற்றிகரமாகக் கடந்துள்ளோம். அடுத்துவரும் அபிவிருத்திக்கான சவாலை எதிர்கொள்ளவும் தயாராகவுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

இலங்மைகயின் 6வது ஜனாதிபதித் தேர்தலுக்காக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் வேட்பு மனுவைத் தாக்கல் செய்த பின்னர் ஊடகவியலாளர்க ளுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

முதலாவது ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்று பயங்கரவாதம் எனும் பாரிய பிரச்சினைக்கு வெற்றி கண்டுள்ளோம். இரண்டாவது தடவையாகவும் வெற்றிபெறுவது உறுதி. முதலாவது பாரிய சவாலை வெற்றிகொண்டது போன்றே அடுத்த அபிவிருத்தி சவாலையும் வெற்றிகொள்வோம் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

எதிர்வரும் 26ம் திகதி நடைபெறவுள்ள இலங்கையின் 6வது ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் செய்த பின்னர் ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர் மேற்கண்டவாறு கூறினார்.



தேர்தலை சிறந்த முறையில் நடத்த அரசு ஒத்துழைப்பு வழங்கும்

நீதியானதும், நியாயமானதுமான தேர்தலை நடத்தி முடிப்பதற்கு தேவையான சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும், தகவல், ஊடகத்துறை அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலை சிறந்த முறையில் நடத்துவதற்கு தேவையான ஒத்துழைப்புக்களை தேர்தல் ஆணையாளருக்கு வழங்க தயாராகவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை ஊடகங்களுக்கு அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு நேற்று பிற்பகல் அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

அமைச்சர் இங்கு மேலும் உரையாற்றுகையில் :- கடந்த காலங்களிலும் சிறந்த தேர்தல்களை நடத்துவதற்கான ஒத்துழைப்புக்களை அரசாங்கம் எல்லா சந்தர்ப்பங்களிலும் வழங்கியுள்ளது.


தேர்தலை அமைதியாக நடத்த அனைவரும் ஒத்துழையுங்கள்

தேர்தல்கள் ஆணையர்

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியுள்ள 88 வீதமானோருக்கு தேசிய அடையாள அட்டைகள் உள்ளன. ஏனை யோருக்கும் தற்காலிக அடையாள அட்டையினை வழங்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க தெரிவித்தார்.

அண்மைக் காலமாக இது தொடர்பில் சில ஊடகங்கள் வெளியிட்ட தகவல்களை முற்றாக நிராகரித்த அவர், அத்தகவல்கள் தவறானவை எனவும் வாக்களிக்கத் தகுதியுள்ள நாட்டின் சகல பிரஜைகளுக்கும் அதற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

நாட்டின் உன்னதமான பதவியாகிய ஜனாதிபதிப் பதவிக்கான தேர்தல் இதுவாகையால் நீதியும் நேர்மையும், அமைதியுமான தேர்தலொன்றை நடத்துவதற்குச் சகலரதும் பூரண ஒத்துழைப்பு அவசியமெனத் தெரிவித்த அவர், வன்முறைகள், குழப்பங்கள் இல்லாத தேர்தலாக இத்தேர்தல் அமைவதிலும் சம்பந்தப்பட்ட சகலரும் பூரண கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். எதிர்வரும் ஜனவரி 26ம் திகதி நடைபெறவுள்ள இலங்கையின் ஆறாவது ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று இராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் செயலகத்தில் இடம்பெற்றது.

மேற்படி வேட்புமனுத் தாக்கலையடுத்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் மாநாட்டில் விளக்கமளிக்கும் போதே தேர்தல் ஆணையாளர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் :-

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஒரு கோடியே 40 இலட்சம் பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளதுடன் நாடளாவிய ரீதியில் 14,000 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

வடக்கில் இடம்பெயர்ந்தோர் தங்கியுள்ள நலன்புரி நிலையப் பகுதிகளில் கொத்தணி வாக்குச் சாவடிகளை அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதுடன் வாக்களிப்பு நிலையங்களை அமைப்பது தொடர்பில் நாளை பேச்சுவார்த்தையொன்றை நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப் பேச்சுவார்த்தைக்கு வடக்கின் சகல மாவட்டச் செயலாளர்களும் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் கலந்தாலோசித்து வாக்களிப்பு சம்பந்தமான விடயங்கள் பற்றி முடிவு செய்யப்படும்.

வழமைபோன்றே இம்முறையும் தேர்தல் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்கு தேசிய, சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். ஆசிய நாடுகளைக் கொண்ட கண்காணிப்புக் குழுவும், ஐரோப்பிய யூனியன் கண்காணிப்புக் குழுவும் இதற்கான இணக்கத்தைத் தெரிவித்துள்ளதுடன் ஐக்கிய நாடுகள் சபையின் தேர்தல் கண்காணிப்புக் குழுவின் வருகை தொடர்பில் இதுவரை முடிவு கிடைக்கவில்லை.


ஜனாதிபதித் தேர்தலில் 22 வேட்பாளர்கள் போட்டி

இலங்கை முற்போக்கு முன்னணியின் மனு நிராகரிப்பு

இலங்கையின் ஆறாவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக ஜனவரி 26 இல் நடைபெறும் தேர்தலில் 22 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

23 பேர் கட்டுப்பணம் செலுத்தியிருந்த போதும் ஒருவருடைய வேட்பு மனு, தேர்தல்கள் ஆணையாளரால் நிராகரிக்கப்பட்டது.

இதனையடுத்து 22 பேரே தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க நேற்று அறிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நேற்றுக்காலை கொழும்பு இராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் செயலகத்தில் இடம்பெற்றது.

நேற்றுக்காலை 9.00 மணிமுதல் 11.00 மணிவரை நடைபெற்ற இந்நிகழ்வில் பதிவு செய்யப்பட்ட 18 கட்சிகள் மற்றும் 05 சுயாதீனக் கட்சிகளின் 23 வேட்பாளர்கள் தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்கவின் முன்னிலையில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

நேற்றுக்காலை 9.00 மணிக்கு ஆரம்பமான வேட்பு மனுத்தாக்கல் 11.00 மணிக்கு நிறைவடைந்ததையடுத்து 11.00 மணியிலிருந்து 11.30 மணிவரை வேட்பு மனு தொடர்பான ஆட்சேபனைக்கான காலம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆட்சேபனை சமர்ப்பிப்பு முடிவடைந்ததும் தேர்தலில் போட்டியிடத் தகுதியான வேட்பாளர்களின் விபரங்களை தேர்தல் ஆணையாளர் வெளியிட்டார்.

இதற்கிணங்க மூன்று வேட்பு மனுக்களுக்கெதிராக ஆட்சேபனைகள் சமர்ப்பிக்கப்பட்டன. அதிலொரு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் ஏனைய இரண்டு வேட்பு மனுக்களுக்கான ஆட்சேபனை மனு நிராகரிக்கப்பட்டது.

எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளராக புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் போட்டியிடும் ஜெனரல் சரத் பொன்சேகாவின் வேட்பு மனு தொடர்பாகவே இரண்டு ஆட்சேப மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

மேற்படி இரண்டு மனுக்களை சமர்ப்பித்தவர்களும் சரத் பொன்சேகா அமெரிக்கப் பிரஜையெனவும் இலங்கை பிரஜையல்லாத ஒருவரின் வேட்பு மனுவை ஏற்றுக்கொள்ள க்கூடாதெனவும் குறிப்பிட்டிருந்தனர்.

இதற்குப் பதிலளித்த தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க மனுதாரர்கள் விரும்பினால் நீதிமன்றத்தில் இதனைத் தாக்கல் செய்யமுடியும் எனவும் தெரிவித்தார். இலங்கை முற்போக்கு முன்னணியின் வேட்பாளர் பீற்றர் நெல்சன் பெரேராவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.

அதற்கான காரணத்தைத் தெரிவித்த தேர்தல் ஆணையாளர், ஒரு கட்சிக்கு இருவர் உரிமை கோரியுள்ளதாகவும் எனினும் அவ்விருவருமே அக்கட்சிக்கு உரித்துடையவர்களல்லர் எனவும் தெரிவித்தார்.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் ஜெனரல் சரத் பொன்சேகாவும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

அத்துடன், இடதுசாரி முன்னணியின் சார்பில் விக்ரமபாகு கருணாரத்ன, ஐ. தே. க. மாற்றுமுன்னணியின் சார்பில் சரத் கோங்காகே, ஐக்கிய சோசலிசக் கட்சியின் சார்பில் சிறிதுங்க ஜயசூரிய, சோசலிச சமத்துவக் கட்சியின் சார்பில் விஜய டயஸ், யாவரும் பிரஜைகள் யாவரும் மன்னர்கள் அமைப்பின் சார்பில் எம்.பி. தெமினிமுல்ல, புதிய சிஹல உறுமய கட்சியின் சார்பில் சரத் மனமேந்ரவும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

அதனைத் தொடர்ந்து தேசிய அபிவிருத்தி முன்னணியின் சார்பில் அச்சல அசோக சுரவீர, இலங்கை தொழிலாளர் கட்சியின் சார்பில் ஜி. டி. பி. எஸ். ஏ. லியனகே, எமது தேசிய முன்னணி சார்பில் கே. பி. ஆர். எல். பெரேரா, ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் எம். சீ. எம். இஸ்மாயில், ருஹுணு மக்கள் கட்சி சார்பில் அருண டி சொய்சா, தேசிய முன்னணி சார்பில் சனத் பின்னதுவ, தேசப்பற்றுள்ள தேசிய முன்னணியின் சார்பில் சேனரத்ன சில்வா, ஜனசெத முன்னணி சார்பில் பத்தரமுல்ல சீலரத்ன தேரர், ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பில் சன்ன ஜானக கமகேயும் தமது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி கே. சிவாஜிலிங்கம், யாழ் மாவட்ட முன்னாள் எம்.பி ஐ.எம். இல்யாஸ், முன்னாள் பிரதியமைச்சர் மயோன் முஸ்தபா, முன்னாள் ஐ.தே.க. எம்.பி. யு.பி. விஜேகோன், டபிள்யூ. வீ. மஹிமன் ரஞ்சித் ஆகிய சுயேச்சை வேட்பாளர்களும் தமது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

வேட்பு மனுத் தாக்கல் செய்யும் நேற்றைய இந்நிகழ்வில் அமைச்சர்களான மைத்திரிபால சிறிசேன, நிமல் சிறிபால டி சில்வா, சுசில் பிரேமஜயந்த, ஏ. எச். எம். பெளஸி, டி. எம். ஜயரத்ன, பேரியல் அஷ்ரப் உட்பட அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்கள் பலரும், கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட பல மாகாண முதலமைச்சர்களும், பெஷில் ராஜபக்ஷ எம்.பி.

உட்பட ஆளும் கட்சி, எதிர்க் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வேட்பு மனுத் தாக்கல் நிகழ்வையடுத்து கொழும்பில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இலங்கையின் தேர்தல் வரலாற்றில் 22 வேட்பாளர்கள் போட்டியிடுவது இதுவே முதற்தடவையாகும்.


மேலும் இங்கே தொடர்க...

விண்ணில் தண்ணீர், வெப்பத்துடன் இன்னொரு சூப்பர் பூமி




வாஷிங்டன்: பூSwine Fluமியைப் போலவே நீர் நிறைந்த, அதைவிட 2.7 மடங்கு பெரிய Ôசூப்பர் பூமிÕ கிரகத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஹார்வேர்டு பல்கலைக்கழக வானியல் பேராசிரியர்கள் நடத்திய ஆராய்ச்சியில் பூமிக்கு அருகே அதைவிட 2.7 மடங்கு பெரிதாக மற்றொரு கிரகம் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

புதிய கிரகத்தில் தண்ணீர், வெப்பம் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். புதிய கிரகத்துக்கு ஜிஜே 1214பி என்று பெயரிட்டனர். எனினும், பூமியை விட 2.7 மடங்கு பெரியதாக அது இருப்பதால், Ôசூப்பர் பூமிÕ என்று அழைக்கின்றனர். இதுபற்றி பேராசிரியர் சர்போனியூ கூறுகையில், ÔÔநமது கற்பனைக்கு எட்டாத அளவுக்கு இயற்கை புதிய கிரகங்களை உருவாக்கி உள¢ளது.

நமது பூமிக்கு அருகில¢ புதிய கிரகம் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. செயற்கைக் கோளுடன் இணைந்த அதிநவீன தொலைநோக்கியில் கிரகங்களை தேடுவோம். இந்த கிரகத்தை சாதாரண 16 அங்குல தொலைநோக்கியை வைத்தே காண முடிகிறதுÕÕ என்றார். இதுபோன்ற புதிய கிரகங்கள் இருப்பதை கடந்த சில ஆண்டுகளில்தான் விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கத் தொடங்கினர்.

இதற்கு முன் தெரிய வந்த சில கிரகங்கள் ஜுபிடர் போன்ற அமைப்பில் இருந்தன. Ôசூப்பர் எர்த்Õ கிரகம்தான் பூமியைப் போல உள்ளது என்றும் சார்போனியூ தெரிவித்தார். எனினும், புதிய கிரகத்தில் உயிரினங்கள் வசிக்கத் தேவையான நீர் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறியிருந்தாலும், ஆக்சிஜன் இருப்பதாக குறிப்பிடப்படவில்லை.
மேலும் இங்கே தொடர்க...