16 அக்டோபர், 2009

முள்வேலி முகாம்களுக்குள் மக்கள் அவலம், மாரிக்கு முன்னதாக மீள்குடியேற்றப்படாவிடின் சீரழிவு அபாயம்-

நாடு திரும்பிய தமிழக நா.உ.க்கள் குழு அறிக்கை- அண்மையில் இங்கு விஜயம்செய்த தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தமிழக முதலமைச்சரிடம் அறிக்கையொன்றை கையளித்துள்ளது. அவ்வறிக்கையில், ~போரின்போது இடம்பெயர்ந்த சுமார் இரண்டரை லட்சம் மக்கள் வவுனியா செட்டிகுளம் பகுதியில் முகாம்களில் முள்வேலிகள் அமைக்கப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள். அங்கு சுகாதாரம், குடிநீர் மிக மோசமான நிலையிலுள்ளது. தொற்றுநோய்கள், உணவுத்தட்டுப்பாடு பரவலாகவுள்ளது. இந்நிலையில் மாரி மழை பெய்ய ஆரம்பித்தால் அங்கு உயிர்வாழ முடியாது. பெரும் சீரழிவுகளை அந்த மக்கள் எதிர்கொள்ளவேண்டியிருக்கும். மாற்று உடைகள் இன்றியும் போதிய தண்ணீர் இன்றியும் தாங்கள் மிகவும் கஸ்டப்படுவதாக அங்குள்ள மக்கள் தெரிவித்தார்கள். அதை நாம் நேரடியாகவும் காணமுடிந்தது. தங்களை தங்களின் சொந்த இடங்களுக்கு சென்று குடியேற அனுமதித்தாலே போதும் என அந்த மக்கள் மன்றாடுகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முகாமிலுள்ள மக்களின் நிலை தொடர்பாக இலங்கை ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சர், வெளியுறவுத்துறை அமைச்சர், ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஸ, மற்றும் அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்டோரிடம் தெரிவித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கண்ணிவெடிகளற்ற, அகற்றப்பட்ட பகுதிகளில் மக்களை படிப்படியாக குடியேற்றி வருவதாவும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் தாங்கள் கூடிய கவனம் செலுத்துவதாகவும் அரச தரப்பு தெரிவித்தாகவும் தமிழக மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பாகவும் கலந்துரையாடியதாகவும் தூதுக்குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...
கப்டன் அலி கப்பலில் வந்த நிவாரணப் பொருட்களுக்கான வரிப் பணத்தில் 20 லட்ச ரூபாவை ஜனாதிபதி செயலகம் வழங்கியது-

புலம்பெயர்நாட்டு தமிழ் மக்களிடம் சேகரித்து முறையற்றவகையில் அனுப்பி வைக்கப்பட்ட நிவாரணப் பொருட்களை ஏற்றிவந்த கப்பல் பல தடங்கல்களுக்கு பின்னர் இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் அனுசரணையுடன் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்படவென கொழும்பு துறைமுகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. எனினும் உரிய தஸ்தாவேஜுகள் இல்லாமையாலும் பொருட்களுக்கான சுங்கவரியை செலுத்த முடியாமையாலும் அந் நிவாரணப் பொருட்கள் கொழும்பு துறைமுக பொதியறையிலேயே மாதக்கணக்கில் கிடந்தன. தற்போது இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க இதற்கான வரிப்பணத்தில் 20 லட்ச ரூபாய்களை ஜனாதிபதி செயலகம் வழங்கியுள்ளதாக இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் சுரேன் பீரிஸ் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் இந் நடவடிக்கை மிகுந்த பாராட்டுக்குரியதெனவும், விரைவில் இவ் நிவாரணப் பொருட்கள் துறைமுகத்திலிருந்து வெளிக்கொணரப்பட்டு அகதிகளாக உள்ள மக்களுக்கு வழங்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இங்கே தொடர்க...
இந்திய விவசாயிகளுக்கு பில் கேட்ஸ் 44 கோடி ரூபா நிதியுதவி



நிறுவன அதிபர் பெயரில் இயங்கி வரும் பில் - மெலின்டா கேட்ஸ் பவுண்டேஷன் நிறுவனம், இந்தியாவில் உள்ள ஏழை விவசாயிகளுக்கு 44.72 கோடி ரூபா நிதியுதவி வழங்குகிறது.

உலகின் மிகவும் ஏழ்மையான பகுதிகளில் விவசாயத்தை செழிக்கச் செய்யும் வகையில், 120 மில்லியன் டொலர் செலவிலான பிரமாண்டத் திட்டத்தை மேற்கொண்டு வருகிறது கேட்ஸ் பவுண்டேஷன். அதன் ஒரு பகுதியாக இந்தியாவில் உள்ள ஏழை விவசாயிகளுக்கு இந்த நிதியுதவியைச் செய்கிறது.

இதுகுறித்து டெஸ்மாய்ன்ஸ் நகரில் கேட்ஸ் கூறுகையில்,

"மெலின்டாவும், நானும், ஏழை விவசாயிகளுக்கு உதவுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். அவர்களது விவசாயம் தழைத்தோங்க எங்களால் முடிந்த சிறு உதவி இது. பசி, பட்டினி, ஏழ்மையை விரட்டும் வகையில் விவசாயிகள் பெருமளவில் விவசாயப் பணிகளில் ஈடுபட இது உதவியாக இருக்கும்.

இந்தியா போன்ற நாடுகளில் 1960களிலிருந்து 80கள் வரை பெரும் விவசாயப் புரட்சி நடந்தது. இதை உலக நாடுகள் பாடமாக எடுத்துக் கொண்டு விவசாயத்திற்கு முக்கியத்துவம் தர முயல வேண்டும். இந்தியாவில் தோன்றிய பசுமைப் புரட்சி மிகவும் மகத்தானது.

இப்படிப்பட்ட விவசாயஎழுச்சியின் மூலமாக பஞ்சத்தைப் போக்கலாம்; கோடிக்கணக்கான மக்களின் உயிரைக் காக்கலாம்; வறுமையை விரட்டலாம்; பொருளாதார முன்னேற்றத்தையும், வளத்தையும் பெறலாம்.

அதேசமயம், முதலில் தோன்றிய பசுமைப் புரட்சியின்போது நடந்த அதீத உரப் பயன்பாடு, நீர்ப்பாசனம் போன்றவற்றில் ஏற்பட்ட தவறுகளை விஞ்ஞானிகளும், அரசுகளும், விவசாயிகளும் மீண்டும் செய்து விடாமல் தவிர்க்க வேண்டியது அவசியமாகும்.

இந்தியாவில் உள்ள 1 லட்சத்து 20 ஆயிரம் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களை விவசாயப் பணியில் திருப்பி அவர்களை முழுமையான, வளர்ச்சி பெற்ற விவசாயிகளாக மாற்றத் திட்டமிட்டுள்ளோம்.இதனால் அவர்களின் வருவாயும் அதிகரிக்கும்" என்றார்.
மேலும் இங்கே தொடர்க...
வவுனியா அரச பொது வைத்தியசாலையில் பாதுகாப்பு அதிகரிப்பு : நோயாளர் அவதி


பொது வைத்தியசாலையில் பாதுகாப்பு அதிகரித்திருப்பதனால், நோயாளர்களும், நோயாளர்களைப் பார்க்கச் செல்பவர்களும் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் இருந்து வவுனியா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வருகின்றவர்கள் பலர் அங்கிருந்து தப்பி வெளியில் செல்வதைத் தடுப்பதற்காகவே வைத்தியசாலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது.

வவுனியா மாவட்டம் தவிர்ந்த வேறு மாவட்டங்களைப் பிறப்பிடமாகக் கொண்டவர்களே இவ்வாறு சிரமங்களுக்கு உள்ளாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா வைத்தியசாலைக்குள் சிகிச்சைக்காகச் செல்பவர்களும் சரி, நோயாளர்களைப் பார்ப்பதற்காக அவர்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்பவர்களும் நுழைவாயிலில் தமது தேசிய அடையாள அட்டையைக் கொடுத்து அதற்குரிய இலக்கத் துண்டு ஒன்றைப் பெற்றுச் செல்ல வேண்டும்.

இவ்வாறு செல்பவர்களை ஆங்காங்கே நடமாடுகின்ற அல்லது கடமையில் இருக்கின்ற பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அடையாள அட்டைக்கான துண்டு இருக்கின்றதா எனக் கேட்டு சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்திருக்கி்ன்றார்கள்.

இவர்கள் இவ்வாறு தடுத்து நிறுத்தி சோதனையிடுவதற்கான விசாரணைகளில் ஈடுபடுவதனால் நோயாளர்கள் கிளினிக்குக்கு அல்லது வைத்திய பிரிவுகளுக்குச் செல்வதில் தாமதமும், சிரமமும் ஏற்படுவதாகவும், நோயினால் வதைபடுபவர்கள் மேலும் அவஸ்தைக்கு உள்ளாக நேரிடுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் நோயாளர்களைப் பார்ப்பதற்காகக் காலை, மதியம், மாலை நேரங்களில் செல்பவர்களிடம் வார்டுகளுக்குச் செல்வதற்கான பாஸ் இருக்கின்றதா என்பதைப் பரிசீலனை செய்வதற்காகப் பொதுமக்களிடம் அதிகாரத் தோரணையில் மிரட்டி, ஏசுவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றார்கள்.

இந்தத் தொல்லைகளைக் கடந்து நோயாளர்களைப் பார்வையிட்டு, அல்லது நோய்க்கான மருந்தினைப் பெற்றுக்கொண்டு, தமது தேசிய அடையாள அட்டையை வாங்கிக் கொண்டு, திரும்பும்போது நுழைவாயிலில் சிக்கல்களுக்கு முகம் கொடுக்க நேரிடுவதாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றார்கள்.

வைத்தியசாலையில் இருந்து வெளியேறுபவர்களின் தேசிய அடையாள அட்டையைப் பரிசீலனை செய்யும் பொலிசார், அதில் பிறந்த இடம் வவுனியா என குறிப்பிடப்பட்டிருந்தால் எந்தவித கஷ்டமுமின்றி வெளியில் செல்ல அனுமதிக்கின்றார்கள்.

வவுனியா மாவட்டத்தைத் தவிர்ந்த வேறு மாவட்டங்களைப் பிறப்பிடமாகக் கொண்டிருந்தால் – குறிப்பாக கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மன்னார் போன்ற மாவட்டங்களைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, அவர்கள் தற்போது தங்கியுள்ள இடத்தை உறுதிப்படுத்துவதற்கான வேறு உறுதியான ஆவணங்களைக் கோரி தடுத்து நிறுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது
மேலும் இங்கே தொடர்க...

நிவாரணக் கிராமங்கள்

50,000 பேரை சொந்த இடங்களுக்கு அனுப்பும் நடவடிக்கை ஆரம்பம்

* 620 கர்ப்பிணிகள் உட்பட 3260 பேர் நேற்று அனுப்பிவைப்பு

* தினமும் 2500-3000 வரை அனுப்ப ஏற்பாடு

வவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள வெளி மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 50,000 பேரை அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பும் வேலை கள் நேற்று ஆரம்பிக்கப்பட்டன.

முதற்கட்டமாக நேற்றுக் காலை 620 கர்ப்பிணித் தாய்மார் உட்பட சுமார் 3260 பேர் 62 பஸ் வண்டிகளில் அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களது உடைமைகளை ஏற்றிச் செல்வதற்காக 27 லொறிகளும் பயன்படுத்தப்பட்டன என வவுனியா அரச அதிபர் திருமதி பீ. எம். எஸ். சார்ள்ஸ் தெரிவித்தார்.

நேற்று தொடக்கம் தினமும் 2500 முதல் 3000 வரையில் மக்கள் அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

நேற்று 620 கர்ப்பிணித் தாய்மார்கள் 12 பஸ் வண்டிகளிலும் அவர்களது உடைமைகள் 2 லொறிகளிலும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஏனைய 2500 பேரும் 50 பஸ் வண்டிகளிலும் அவர்களது உடைமைகள் 25 லோறிகளிலும் அனுப்பி வைக்கப்பட்டன.

நேற்றுக் காலை முதல் இவர்களை கட்டம் கட்டமாக அனுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

நேற்றுக் காலையிலேயே முதற்கட்டமாக மூன்று பஸ் வண்டிகள் புறப்பட்டுச் சென்றன. யாழ். நகருக்கு ஏ-9 பாதையூடாக செல்லும் இவர்களை யாழ். அரச அதிபர் கே. கணேஷ் பொறுப்பேற்பதுடன் அவ ர்களது சொந்த இடங்களுக்கு பொறுப்பான பிரதேச செயலகங்களுக்கும் கிராம சேவ கர்களுக்கும் ஒப்படைக்கப்படுவார்கள் என்றும் வவுனியா அரச அதிபர் திருமதி பீ. எம். எஸ். சார்ள்ஸ் மேலும் தெரிவித்தார்.

அத்துடன் நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் 5000 பேரும் விரைவில் குடியமர்த்தப் படவுள்ளனர். அத்துடன் வவுனியா மாவட்டத்திலும் நிவாரணக் கிராமங்களிலுள்ள 4000 பேரும் குடியமர்த்தப்படவுள்ளதாகவும் அரச அதிபர் தெரிவித்தார்.

வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலகப் பிரிவுகளில் மக் களை மீளக் குடியமர்த்துவதற்கு ஏது வாக நிலக்கண்ணி வெடிகள், மிதி வெடிகள் அகற்றும் பணிகள் துரிதப் படுத்தப்பட்டு வருவதும் குறிப்பிடத் தக்கது
மேலும் இங்கே தொடர்க...
இடைத்தங்கல் முகாம்களில் இருந்து 1700 பேர் சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைப்பு



வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் உள்ள இடம்பெயர்ந்தோருக்கான முகாம்களில் இருந்து வியாழக்கிழமை 1700 பேர் அவர்களின் சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வவுனியா மனிக்பாமிலிருந்து 1220 பேர் யாழ் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அதேவேளை, யாழ் குடாநாட்டில் உள்ள இடைத்தங்கல் முகாம்களில் இருந்து வவுனியா, மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த 500 பேர் அந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள்.

வவுனியா மன்னார் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்கள் வவுனியாவில் கொண்டு வந்து இறக்கிவிடப்பட்டதையடுத்து, அவர்கள் தமது இடங்களுக்கு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டவர்கள் துரையப்பா விளையாட்டரங்கில் இறக்கிவிடப்பட்டதையடுத்து, அங்கிருந்து அவர்கள் தமது வீடுகளுக்குப் புறப்பட்டுச் செல்ல ஆரம்பித்துள்ளதாக அதிகார்கள் தெரிவித்துள்ளனர்.

மாரிகாலம் நெருங்குவதையடுத்து, வவுனியா முகாம்களில் இருப்பவர்களை சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அடுத்த 15 தினங்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை அனுப்பி வைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நாளாந்தம் இவர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள் என தெரிகின்றது
மேலும் இங்கே தொடர்க...