31 ஜனவரி, 2010

தமிழர்களுக்கான அரசியல் உரிமைகளை வழங்குவதில் மெத்தனப் போக்கே தொடர்கிறது


அமெரிக்காவில் வெளிவரும் வோல் ஸ்றீட் ஜேர்னலில் தெரிவிப்பு

தமிழர்களுக்கான அரசியல் உடன்படிக்கைகளில் முக்கியமாக ஜனநாயக தமிழர் தலைவர்கள் பல வருடங்களாக சட்ட ரீதியாக கோரும் உரிமைகளை வழங்குவ தில் மெத்தனப் போக்கே தொடர்கிறது. அதிகாரத்தை அனைத்து மாகாணங்களுக்கும் பகிர்ந்தளிப்பதே இதற்கு தீர்வாக அமையும் என அமெரிக்காவில் வெளியாகும் வோல் ஸ்ட்றீட் ஜேர்னல் பத்திரிகையில் வெளியான செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

2008 ஆம் ஆண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ்ப் புலிகள் மீது ராணுவத்தை வைத்து குண்டு மழை பொழிந்த போது "ராஜபக்ஷவிற்கு இது மிகப் பெரிய சவால்" என வருணிக்கப்பட்டது. மே 2009இல் புலிகளை அழித்து குண்டு மழை முற்றிலும் ஓய்ந்து நாட்டில் அமைதி நிலவிய போது ராஜபக்ஷ அந்தச் சவாலில் வெற்றி பெற்றார். இப்போது போர் வெற்றியோடு தேர்தல் வெற்றியும் சேர்ந்து ஸ்ரீலங்காவை எப்படியான ஒரு நாடாக ஆக்க வேண்டும் என்ற பொறுப்பை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் ராஜபக்ஷ இருக்கின்றார்.

கடந்த செவ்வாயன்று நடந்த தேர்தலில் 58 சதவீத வாக்குகளை பெற்று மிகப் பெரிய வித்தியாசத்தில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட புலிகளைப் போரில் வென்ற முன்னாள் இராணுவ தளபதியை தோற்கடித்தாலும் தேர்தல் இதற்கு முன் போல் இல்லாமல் அமைதியாகவே நடைபெற்றது.

கடும் குறைபாடுகளுக்கு மத்தியிலும் தேர்தல் சில நன்மைகளை கொண்டு வந்துள்ளது. மிக முக்கியமாக இரண்டு சிங்கள தலைவர்களும் தமிழர் வாக்கு ளுக்காக போட்டியிடும் சூழ்நிலை உருவானது. முன்னதாக பொன்சேகா மிகப் பெரிய தமிழ்க் கட்சியான தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் கூட்டணி ஏற்படுத்தினார். இதுதானாக தமிழர் வாக்குகளை சேகரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ராஜபக்ஷவை தள்ளியது.

இதன் விளைவாக அரசு தமிழ் அகதி முகாம்களில் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது. தேர்தல் அரசியல் சிங்கள இனவெறிக்கு எதிராக அமைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ராஜபக்ஷவின் முதல் முடிவு தொடர்ந்தும் இதே பாதையில் பயணிப்பதா இல்லையா என்பது தான். பயணிப்பார் என்பதையே அறி குறிகள் காட்டுவதாக உள்ளன.

கடந்த சில மாதங்களாக விடுதலைப் புலிகள் வசம் இருந்த வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் போரின் போது அடித்து நொறுக்கப்பட்ட மற்றும் சிதிலமடைந்த கட்ட மைப்புகளை மீண்டும் புனரமைப்பதில் கொழும்பு பணத்தை வாரி இறைத்தது.

அதிபரும் இந்த புனரமைப்புக்கள் தொடரும் என தேர்தலின் போது வாக்குறுதி அளித்ததோடு நேர்மையாக நடப்பதாகவே காட்டிக் கொண்டுள்ளார். இருப்பினும் தமிழர்களுக்கான அரசியல் உடன்படிக்கைகளில் முக்கியமாக ஜனநாயக தமிழர் தலைவர்கள் பல வருடங்களாக சட்டரீதியாக கோரும் உரிமைகளில் மெத்தனமே தொடர்கிறது.

அதிகாரத்தை அனைத்து மாகாணங்களுக்கும் பகிர்ந்தளிப்பதே இதற்கு தீர்வாக அமையும். ஆனால் அரசின் கவனம் ஆட்சியை கொழும்பில் இருந்து மாற்றுவதிலும் அதற்கான அரசியல் சட்டத்தை மாற்றியமைப்பதிலும் உள்ளது.

இதற்கு மாற்றாக தேர்தல் பிரச்சாரங்களின் போது பொருளாதார வளர்ச்சி சுட்டிக்காட்டப்பட்டது. இந்த சமாதானங்கள் ஏற்றுக் கொள்ளப்படுமா என்பது ஏப்ரலில் நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் தெரியும்.

பலதரப்பட்ட முறைகளை அமுல்படுத்தி பார்த்த பின்னரே எந்த முறை சரியாக வரும் என்பதை பல வருடங்களுக்கு பின் முடிவு செய்ய முடியும். ராஜபக்ஷவின் இரண்டாவது முக்கிய பொறுப்பு இலங்கைக்கான அரசியல் திட்டத்தை வரையறுப்பது. சுதந்திரமான பத்திரிகைகள் மற்றும் ஆரோக்கியமான எதிர்கட்சிகள் கொண்ட முறையான ஜனநாயகத்தை ஏற்படுத்துவது.

பத்திரிகை சுதந்திரம் இலங்கையில் எப்போதும் மோசமாகவே உள்ளது. எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவளித்த பல பத்திரிகை நிருபர்களும் ஆசிரியர்களும் படுகொலை செய்யப்பட்டதே இதற்கு சான்று.

தேர்தலுக்கு சில நாட்கள் முன்பு எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவளித்த வலைத் தளங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. பரந்த மனப் பான்மையுடன் விவாதிப்பதே வேறுபாடுகளை அமைதியான முறையில் களைய வழிவகுக்கும்



இந்திய பாதுகாப்பு ஆலோசகர் மேனன் கொழும்பு வருகை
No Image

இந்தியாவின் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகராகப் பொறுப்பேற்றுள்ள சிவ்சங்கர் மேனன் விரைவில் கொழும்பு வரவுள்ளதாக புதுடில்லி அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த நாராயணன் அண்மையில் மேற்குவங்க மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டதை அடுத்து, புதிய ஆலோசகராக சிவ்சங்கர் மேனன் நியமிக்கப்பட்டார்.

இதற்கிடையே ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று மீண்டும் ராஜபக்ஷ பொறுப்பேற்றுள்ள நிலையில், சிவ்சங்கர் மேனனின் கொழும்பு வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

அவரது கொழும்பு பயணத்தின்போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படுவதுடன், நலன்புரி மையங்களில் உள்ள தமிழர்களை மீள்குடி யேற்றுவது, அவர்களுக்கான புனர்வாழ்வுக் கான நடவடிக்கைகளை வேகப்படுத்துவது குறித்தும் மேனன் முக்கிய ஆலோசனையில் ஈடுபடுவார் என்று கூறப்படுகிறது.

மேனனின் வருகையை அடுத்து, இலங்கையிலிருந்து முக்கிய அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று புதுடில்லி சென்று அடுத்தக்கட்ட ஆலோசனைகளில் ஈடுபடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன



நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான ஜே.வி.பி.யின் கோரிக்கை .தே..வினால் நிராகரிப்பு




நாடாளுமன்றத் தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகாவை முன்னிறுத்தி அன்னப்பட்சி சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பில் ஜே.வி.பி. முன்வைத்த கோரிக்கையை ஐக்கிய தேசியக் கட்சி முற்றாக நிராகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட அங்கத்தவரும் முன்னாள் அமைச்சருமான ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி பதவிக்கு ஒருவரே தெரிவு செய்யப்படுவார் என்பதற்கமையவே நாம் ஜெனரல் சரத் பொன்சேகாவை கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக நிறுத்தினோம். ஆனால் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் ஜெனரல் சரத் பொன்சேகாவை முன்னிறுத்தி அன்னப்பட்சி சின்னத்தில் போட்டியிடுமாறு எம்மைக் கோருவது வேடிக்கையானதொரு விடயம்.

இந்த நாட்டில் சக்திவாய்நத கட்சியாகவும் வாக்குப் பலமிக்கதாகவும் எமது ஐக்கிய தேசிய கட்சி உள்ளது. எமது யானைச் சின்னம் கூட மக்கள் மனதில் பதிந்துள்ளது. ரணில் விக்கிரமசிங்க உட்பட மேலும் பலர் எமது கட்சியில் முதன்மை வேட்பாளராகப் போட்டியிடும் தகுதியைக் கொண்டுள்ளனர். ஆகவே இவர்களை விட்டு வெளியே வேறு யாரையும் தேட வேண்டிய தேவை எமக்கு இல்லை. அது போன்றே எமது கட்சிச் சின்னத்தை நாம் அழிந்து போக விட மாட்டோம்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிக் கட்சி அதனுடன் கூட்டுச் சேரும் கட்சிகளுடன் இணைந்து யானைச் சின்னத்திலேயே போட்டியிடும். இதில் இரண்டாம் கருத்துக்கு இடமில்லை. ஆனால் எம்முடன் இணைந்து போட்டியிடும் கட்சிகளுக்குச் சில இடங்களை விட்டுக் கொடுப்பது என்பது வேறு விடயம்.

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகளை எடுத்துப் பார்த்தால் தென்னிலங்கையில் ஐக்கிய தேசியக் கட்சிக்கான ஆதரவு அதிகரித்துள்ளதனைக் காணக் கூடியதாகவுள்ளது. ஆனால் ஜே.வி.பி. க்கு மக்கள் ஆதரவு குறைந்துள்ளது. தெற்கில் அவர்களது கோட்டைகள் சரிந்துள்ளன.

அவர்களது சரிவை எமது கட்சியே இன்று சமப்படுத்தியுள்ளது இந்த உண்மையை அவர்கள் மூடி மறைக்கப் பார்க்கிறார்கள். இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகாவை முன்னிறுத்தி அன்னப்பட்சி சின்னத்தில் போட்டியிடுமாறு ஜே.வி.பி. எம்மைக் கோருவதானது அவர்களது தோல்வியை மறைக்க எம்மைப் போர்வையாகப் பயன்படுத்தும் ஒரு முயற்சியே இது ஒரு போதும் நடக்காது என்றும் கூறினார்.

எனக்கு ஏதாவது நேர்ந்தால் இரகசியங்கள் அம்பலமாகும்;அரசாங்கத்திற்கு சரத் பொன்சேகா எச்சரிக்கை


தனக்கு ஏதாவது நேர்ந்தால் அரசாங்கத்தின் இரகசியங்கள் அம்பலப்படுத்தப்படும் என படையதிகாரிகளின் முன்னாள் பிரதானியும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக போட்டியிட்டவருமான ஜெனரல் சரத் பொன்சேகா எச்சரித்துள்ளதுடன் தன்னை தொந்தரவுக்குட்படுத்துவதை அரசாங்கம் நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றிலேயே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.ஜனாதிபதித் தேர்தலில் தாம் போட்டியிடத் தீர்மானித்ததிலிருந்து தன்னை தொந்தரவுக்குள்ளாக்கும் அரசாங்க அதிகாரிகளின் முறைகேடுகள் தொடர்பான விபரமான ஆவணங்களை தாம் கோவைப்படுத்தியுள்ளதாகவும் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

எனக்கு ஏதாவது நேர்ந்தால் எனது உயிருக்கு அச்சுறுத்தல் விடுப்பவர்கள் தொடர்பான விபரங்களையும் தேர்தல்களில் நடந்த பாரியளவிலான மோசடிகளையும் வெளியிடுவேன் என சரத்பொன்சேகா கூறியுள்ளார்.

தனது அலுவலகம் அதிரடிப்படையினரால் சோதனையிடப்பட்டமை, தனது பாதுகாப்பு முற்றாக குறைக்கப்பட்டமை, தனக்கு நெருக்கமான அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டமை நீக்கப்பட்டமை அல்லது தொந்தரவுக்குட்படுத்தமை முதலான சம்பவங்கள் அரசாங்கம் தன்னை கொல்லத் தயாராகிறது எனக் கருதச் செய்வதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்

"எனது பாதுகாப்புக்கு இருந்த 90 படைவீரர்களுக்கு பதிலாக 4 பொலிஸ் உத்தியோகஸ்தர்களே நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் பிஸ்டல்கள் மாத்திரமே உள்ளன. இராணுவத்திலிருந்து சட்டபூர்வமாக ஓய்வு பெற்றவர்களும் எனக்கு நெருக்கமானவர்களுமான 3 ஜெனரல்கள், 3 பிரிகேடியர்கள், 2 கேணல்கள் உட்பட பல அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவர் லசந்தவின் கொலையுடன் தொடர்புடையவர் என அரசாங்கம் கூறுகிறது. இது அப்பட்டமான பொய்யாகும். எனது அலுவலகத்தின் ஊழியர்கள் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 23 கணனிகள் குற்றப்புலனாய்வு பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

நாட்டில் சட்டம் ஒழுங்கு குலைந்துள்ளது. யாரும் நீதிமன்றத்திற்கோ பொலிஸுக்கோ செல்ல முடியாது. ஒருவர் எந்தவேளையிலும் கைது செய்யப்படலாம். ஊடக சுதந்திரம் இல்லை. தமது பணிகளைச் செய்வதில் அனைவரும் அழுத்தங்களை எதிர்கொள்கின்றனர் என்றார்.

நாட்டைவிட்டுச் செல்ல முற்படுகிறீர்களா என வினவப்பட்டபோது"இப்போது என்னிடம் வெளியேறும் திட்டம் எதுவுமில்லை. நான் இங்கிருந்து மக்களை பிரதிநிதித்துவப்படுத்த விரும்புகிறேன். உயிரைப் பாதுகாப்பதற்காக மறைந்து வாழவேண்டியிருந்தால் அதுவேறு விடயம். ஆனால் நானோ எனது குடும்பத்தினரோ நாட்டைவிட்டு வெளியேற முடியாதவாறு விமான நிலையத்தில் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளோம்" என பதிலளித்தார்.

தனது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு பிரிட்டன், ஐரோப்பிய யூனியன், இந்தியா, அமெரிக்கா ஆகியன அரசாங்கத்தை கோரியுள்ளதாகவும் ஆனால் அரசாங்கம் யார் சொல்வதையும் கேட்பதில்லை எனவும் சரத் பொன்சேகா கூறினார்.

ஜனாதிபதியைக் கொல்லவதற்கு திட்டமிட்டதாகக் குற்றம் சுமத்தப்படுவது குறித்து சரத் பொன்சேகாவிடம் வினவப்பட்டபோது"எதிர்க்கட்சித் தலைவரை அல்லது என்னை கொலை செய்ய திட்டமிடப்படுவதாக தகவல் கிடைத்தபின் நாம் எமது பாதுகாப்புக்காகவே சினமன் லேக்சைட் ஹோட்டலில் 20 அறைகளை பதிவு செய்து தங்கியிருந்தோம். இப்போது அரசாங்கம் கதையை மாற்ற முயற்சிக்கிறது"என சரத் பொன்சேகா கூறினார்.


பெரும்பான்மையோரின் அங்கீகாரத்துடனேயே தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு


இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு அனைத்து பிரஜைகளினதும் பெரும்பான்மை அங்கீகாரம் அவசியமானது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். எதிர்வரும் ஏப்ரலுக்கு முன்னர் நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் முடிவுகளை அடுத்து அதில் தெரிவாகும் தமிழ்த் தலைமைகளுடன் கலந்துரையாடி, இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டத்தை முன்வைக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் என்.டி.டி.வி. தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வி ஒன்றிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கு பின்னர் இனப்பிரச்சினைக்கான தீர்வை முன்வைக்கப்போவதாக ஜனாதிபதி அளித்த உறுதிமொழி தொடர்பாக கேட்டபோதே மஹிந்த ராஜபக்ஷ இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

அச்செவ்வியில் அவர் மேலும் கூறுகையில்:

இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வுக்கு பெரும்பான்மையினர் இணக்கம் தெரிவிக்க வேண்டும். பெரும்பான்மையினர் ஏற்றுக் கொள்ளாத தீர்வை நடைமுறைப்படுத்த முடி யாது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்தநிலையில் பெரும்பான்மையினரை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டிய அவசியம் தமக்கு உள்ளது. ஏற்கனவே இந்தியாவின் உதவியுடன் 13 ஆவது அரசியலமைப்பு இனப்பிரச்சினைக்கு தீர்வாக முன்வைக்கப்பட்டது. எனினும் அதற்கு மேலதிகமாக அதிகாரத்தை தமிழ் தரப்பு கோருகிறது. இதற்கு பெரும்பான் மையினரின் இணக்கம் தேவைப்படுகிறது என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்கள் இதுவரை காலமும் தமது வாக்குகளை வழங்கமுடியாத நிலையில் இருந்தனர். எனினும் தற்போது அவர்கள் எதிர்க்கட்சி வேட்பாளரான சரத் பொன் சேகாவுக்கு தமது ஆதரவை வழங்கியுள்ளனர் இதிலிருந்து அவர்களின் கருத்து வெளிப்பட்டுள்ளதுதானே எனக்கேட்டமைக்கு பதிலளித்த மஹிந்த ராஜபக்ஷ, வடக்கு கிழக்கு மக்கள் தமது வாக்குகளை வழங்க சந்தர்ப்பம் கிடைத்தமை ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலில் முறைகேடுகள் நடந்திருக்கிறது என்ற சரத் பொன்சேகாவின் குற்றச்சாட் டுகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிராகரித்துள்ளார். "இக்குற்றச்சாட்டுக்கு அவர் நீதி மன்றத்தில் பதில் தேடிக்கொள்ள முடியும். பிரஜைகளின் 58 சதவீத வாக்குகள் கிடைத் திருப்பது போதிய ஆதாரமாகும். அந்தளவு வாக்குகள் முறைகேடுகள் மூலம் எப்படி கிடைக்கும்" என ஜனாதிபதி கேள்வி கூறியுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

30 ஜனவரி, 2010

ராஜிநாமா தொடர்பில் மீள்பரிசீலனை : அமைச்சர் டக்ளஸ்






வேண்டுகோளின் பேரில் அமைச்சர் பதவியிலிருந்து ராஜிநாமா செய்வது தொடர்பாக மீள்பரிசீலனை செய்யவுள்ளதாக சமூக சேவைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எமது இணையத்தளத்துக்கு இன்று காலை தெரிவித்தார்.

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வடக்கில் பெரும்பான்மையான வாக்குகள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்குக் கிடைக்கவில்லை. அதனால் ஜனாதிபதிக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பதவி விலகுவதாக தீர்மானித்திருந்தார்.

இதனைக் கண்டிக்கும் முகமாக யாழ்ப்பாணத்தின் சமூக அமைப்புகள் இணைந்து இன்று காலை முதல் ஹர்த்தால் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தன. இது தொடர்பாக நாம் கருத்து கேட்டபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

புயாழ்ப்பாணத்தில் ஹர்த்தால் நிலைமை வழமைக்குத் திரும்பியுள்ளது. இன்று இந்துக்களின் தைப்பூச நாள் என்பதாலும் ஹர்த்தால் நடத்துவது மக்களின் இயல்பு நிலையை பாதிக்கும் என்பதாலும் அதனை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்தேன்.

ஜனாதிபதியிடம் 10 அமிச கோரிக்கைகளை முன்வைத்தே நாம் ஆதரவு வழங்கினோம். எனினும் மக்கள் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளனர். ஜெனரல் சரத் பொன்சேகா ஆட்சிக்கு வந்தால் பாரிய மாற்றம் எதனையும் தமிழ் மக்கள் காணப்போவதில்லை.

இந்நிலையை சிந்தித்தே நான் ராஜிநாமா செய்வதற்குத் தீர்மானித்தேன். அரச துறையில் ஈடுபட்டுவந்த என் சார்ந்த ஏனையோரும் ராஜிநாமா செய்யத் தீர்மானித்தனர்.

இதனை ஜனாதிபதிக்குத் தெரியப்படுத்தியதும், அவசர முடிவு எடுக்க வேண்டாம் என்றும் தன்னை நேரில் வந்து சந்திக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்" என அமைச்ர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...


தேர்தல் முடிவுகளில் கணினி மயப்படுத்தப் பட்ட மோசடி சர்வதேச சமூகத்திற்கு நாம் விளக்கிக் கூறுவோம் ஐ.தே.க. அறிவிப்பு ;


சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிப்பு தேர்தல் முடிவுகளில் கணினிமய மோசடிகள் இடம்பெற்றுள்ளன. உண்மையான தேர்தல் முடிவுகள் திரிபுபடுத்தப்பட்டுள்ளன. எனவே இறுதி தேர்தல் முடிவுகளை ஐக்கிய தேசிய முன்னணி முற்றாக நிராகரிக்கின்றது. இது தொடர்பில் நாங்கள் சகல மட்டங்களிலும் தகவல்களை திரட்டிவருகின்றோம்.

தகவல்களை திரட்டியதும் சட்ட நடவடிக்கை எடுப்பதுடன் உள்நாட்டுக்கும் சர்வதேசத்துக்கும் நிலைமையை விளக்கி அறிக்கை வெளியிடுவோம் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் கூறியதாவது

எமது கோரிக்கையை ஏற்று ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு வாக்களித்த வாக்காளர்கள் அனைவருக்கும் தேர்தலில் அயராது உழைத்த ஆதரவாளர்களுக்கும் மேல்மட்ட தவறான கட்டளைகளை விட்டுவிட்டு நேர்மையாக செயற்பட்ட பொலிஸ் இராணுவம் உள்ளிட்ட அனைத்து அரச ஊழியர்களுக்கும் எமது நன்றியை தெரிவிக்கின்றோம்.

முதலாவதாக இந்த ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை ஐக்கிய தேசிய முன்னணி முழுமையாக நிராகரிக்கின்றது.

இந்த முடிவு தொடர்பில் நாட்டு மக்கள் பாரிய சந்தேகம் கொண்டுள்ளனர். அரசாங்கமே சந்தேகம் கொண்டுள்ளது. இந்தளவு முடியுமா என்ற கேள்வி அரசாங்கத்திடமே காணப்படுகின்றது. எனவே பாரிய கணனி மட்ட மோசடிகள் இந்த இறுதி தேர்தல் முடிவுகளில் இடம்பெற்றுள்ளதாக நாங்கள் தெரிவிக்கின்றோம். தேர்தல் முடிவு திரிபுபடுத்தப்பட்டுள்ளது.

எனவே இது தொடர்பில் தேர்தல் திணைக்கள மட்டத்திலும், வாக்குகள் எண்ணப்பட்ட நிலையங்கள் மற்றும் அதிகாரிகள் மட்டத்திலும், பொது மக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் மட்டத்திலும் நாங்கள் இந்த மோசடிகள் தொடர்பான தகவல்களை திரட்டி வருகின்றோம். தகவல்கள் அனைத்தும் திரட்டப்பட்டதும் எமது பக்க நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

இந்த தேர்தல் முடிவு வெளியீட்டில் காணப்படுகின்ற கணனி மோசடி மற்றும் ஏனயை விடயங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்போம். இது தொடர்பான முழுயைமான அறிக்கையை தயாரித்து சர்வதேசத்துக்கு வழங்குவோம். மேலும் உள்நாட்டு மட்டத்தில் அறிவிப்போம். இவ்விடயம் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க 24 மணிநேரத்தில் ( நேற்று கூறியது) நாட்டு மக்களுக்கு கருத்து வெளியிடுவார். அவர் கட்சி மட்டத்தில் தலைவர்களையும் வேறுபல விடயங்களையும் தற்போது ஆராய்ந்துவருகின்றார்.

இந்த தேர்தல் முடிவு மோசடி தொடர்பில் சகல மக்களும் சந்தேகம் கொண்டுள்ளதுடன் கேள்விகளை கேட்கின்றனர். நாம் முழுமையான தேர்தல் செயற்பாட்டை நோக்குவோமானால் அமைதியானதும் நீதியானதுமான தேர்தல் ஒன்று நடைபெறவில்லை என்று தெளிவாக குறிப்பிடுகின்றோம். தேர்தல் அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து அரச ஊடகங்கள் பயன்படுத்தப்பட்ட விதம் உயர்நீதிமன்றம், தேர்தல் ஆணையாளர் மற்றும் உரிய அதிகாரி ஆகிய தரப்புக்களின் சிபார்சுகளை மீறியே அரச ஊடகங்கள் பயன்படுத்தப்பட்டன. அலரி மாளிகையில் நடத்தப்பட்ட விருந்துகள் முற்றுமுழுதாக இலஞ்சம் வழங்கியமைக்கு சமனாகும்.

ஜெனரல் சரத் பொன்சேகாவின் கூட்டங்களுக்கு இடையூறு விளைவித்தமை எமது அலுவலகங்கள் சேதப்படுத்தப்பட்டமை ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டமை போன்ற பல விடயங்களை இங்கு கூற முடியும். மேலும் தேர்தல் முடிவுகள் வெளியாகிய தினம் ஜெனரல் சரத் பொன்சேகா சுதந்திரமாக நடமாட முடியாதவாறு சிறைவைக்கப்பட்டிருந்தார். நீதிமன்ற உத்தரவின்படி ஜெனரலின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இராணுவ பொலிஸ் அதிகாரிகள் மண்டியிட்ட நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். மொத்த செயற்பாடுகளையும் பார்க்கும்போது தேர்தல் தினத்தன்று அமைதி நிலைமை காணப்பட்டது என்று கூறிவிட முடியாது.

வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி பிரதிநிதிகளால் செல்ல முடியவில்லை. பல மோசடிகள் இடம்பெற்றுள்ளன. எனவே எவ்வாறு நாங்கள் தேர்தல் முடிவுகளை நம்புவது? இறுதி அறிவிப்பை மேற்கொண்ட தேர்தல் ஆணையாளரின் கூற்றில் காணப்பட்ட நிலையற்ற தன்மையை நாங்கள் அவதானித்தோம். எனவே தேர்தல் முடிவுகள் திரிபுபடுத்தப்பட்டுள்ளன என்று கூறுகின்றோம்.

குண்டசாலை தொகுதியில் வாக்களிப்பு நிலையங்களின் வாக்கு பெட்டிகள் கொண்டு செல்லப்படும்போது கட்சிகளின் பிரதிநிதிகள் செல்ல அனுமதிக்கப்படும் என்று கூறப்பட்டது. வாக்கு பெட்டிகள் கொண்டு செல்லப்படும்போது அவை தனிமைப்படுத்தப்படக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தேர்தல் தினத்தன்று மாலை 7. 15 மணிக்கே எமது பிரதிநிதிகளுக்கு பெட்டிகளுடன் செல்ல அனுமதியளிக்கப்பட்டது. அங்கே பெட்டிகள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தன. எனவே உள்ளக ரீதியில் பாரிய வேலைத்திட்டம் ஒன்று காணப்பட்டுள்ளது என்பதனை தெரிவிக்கின்றோம். கணனி மோசடி இடம்பெற்றுள்ளது என்பதனை தெளிவாக குறிப்பிடுகின்றோம்.

அம்பாறை தேர்தல் தொகுதியில் கடந்த 2007 ஆம் ஆண்டிலிருந்து 2008 ஆம் ஆண்டுவரை 26000 வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர். இம்முறை குறித்த 26 ஆயிரம் வாக்குகளும் ஜனாதிபதிக்கே சென்றுள்ளன. இது எவ்வாறு சாத்தியம்? எனவே இவ்விடயங்கள் குறித்து சில தினங்களில் முழுமையான அறிக்கையை தயாரித்து உள்நாட்டுக்கும் சர்வதேசத்துக்கும் சமர்ப்பிப்போம். நீதிமன்றத்துக்கும் செல்வோம்.

யாழ்ப்பாணத்தில் தேர்தல் தினத்தன்று குண்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு மக்கள் வாக்களிப்பதை தடுக்க முயற்சிக்கப்பட்டது. காலை ஏழு மணியிலிருந்து ஒன்பது மணிவரை ஒருசிலரே வாக்களித்தனர். தமக்கு வாக்கு கிடைக்காது என்று தெரிந்ததும் வாக்களிப்பதை தடுக்க முயற்சித்தனர். மீண்டும் அந்த மக்களை எந்த நிலைமைக்கு கொண்டு செல்ல முயற்சிக்கப்படுகின்றது? வவுனியாவில் அகதி மக்களுக்கு வாக்களிப்பதற்கு வசதிகள் செய்துகொடுக்கப்படவில்லை. போக்குவரத்து வசதிகள் இல்லை. மேலும் நாவலப்பிட்டி கம்பளை ஹங்குரன்கெத்த ஆகிய பகுதிகளில் பல வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

தற்போது எமது தரப்பினரை அரசாங்கம் பழிவாங்க முயற்சிக்கின்றது. ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு சுதந்திரமாக நடமாட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் அச்சுறுத்தப்பட்டுள்ளார். எமது தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு பணிக்கு செல்ல முடியாத நிலைமை காணப்படுகின்றது. இவை மனித உரிமைகளை மீறும் செயல்களாகும். எதிர்க்கட்சி தரப்பினர் உள்ளிட்ட அனைவரையும் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமையாகும்.

தற்போதும் அரச ஊடகங்களில் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு சேறுபூசிக்கொண்டிருக்கின்றனர். தேர்தல் முடிந்துவிட்டது என்பதனை அரசாங்கம் உணரவேண்டும். தற்போது தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றிபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படியானால் அரசாங்கம் வழங்கியுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும். எனினும் தேர்தல் முடிவு தொடர்பில் அரசாங்கத்துக்கே நம்பிக்கையில்லாத நிலைமை காணப்படுகின்றது.

ஜெனரல் சரத் பொன்சேகா 40 நாட்கள் அரசியல் செய்து 40 இலட்சம் வாக்குகளை பெற்றுள்ளார். ஆனால் 40 வருட அரசியல் அனுபவம் கொண்ட ஜனாதிபதி பெற்றுக்கொண்டுள்ள வாக்குகள் தொடர்பில் மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே மக்கள் தம்மிடம் காணப்படுகின்ற தகவல்களை எங்களுக்கு வழங்குங்கள். தேர்தல் அதிகாரிகள் ஆவணங்களை பாதுகாப்பாக வைத்திருங்கள். நாங்கள் விரைவில் சட்ட நடவடிக்கை எடுப்போம்.

கேள்வி: அமைதியான தேர்தல் நடைபெறவில்லை என்று கூறுகின்றீர்களா?

பதில்: மொத்த தேர்தல் செயற்பாடுகளையும் பார்க்கும்போது அமைதியான நீதியான தேர்தல் நடைபெறவில்லை.

கேள்வி: அப்படியானால் உங்கள் கட்சிக்குள் பரஸ்பரம் முரண்பட்ட கருத்துக்கள் வெளியிடப்படுகின்றனவா?

பதில்: அப்படியில்லை. எந்தவிதமான பரஸ்பரம் விரோதமான கருத்துக்களும் வெளியிடப்படவில்லை.

கேள்வி: எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க அமைதியான தேர்தல் நடைபெற்றுள்ளதாக தெரிவித்துள்ளாரே?

பதில்: இல்லை. ரணில் விக்ரமசிங்க கூறிய கருத்தை நீங்கள் சரியான விளங்கிக்கொள்ளவேண்டும். மாலை நான்கு மணிவரை வாக்களிப்பு நிலையங்களில் பாரிய அசம்பாவிதங்கள் நடைபெறவில்லை என்றுதான் அவர் கூறியிருந்தார்.

கேள்வி: அப்படியானால் வாக்குச் சாவடிகளில் கள்ள வாக்கு இடப்படவில்லை என்பதனை ஏற்றுக்கொள்கின்றீர்களா?

பதில்: அவ்வாறு முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது. யாழ்ப்பாணத்தில் குண்டு வெடிப்பு மற்றும் நாவலப்பிட்டி ஹங்குரென்கெத்த ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களை அரசாங்கத்தினால் மறுக்க முடியுமா?

கேள்வி: அப்படியானால் எவ்வாறு மோசடிகள் இடம்பெற்றுள்ளன?

பதில்: கணனி மட்டத்தில் மிகவும் சூட்சுமமாக இடம்பெற்றுள்ளன

. கேள்வி: சட்டநடவடிக்கை எடுக்க ஏன் தாமதம்?

பதில்: இல்லை. சட்டநடவடிக்கை எடுப்பதற்கு 21 நாட்கள் உள்ளன. அதற்குள் நாங்கள் தேவையான தகவல்களை பெற்று நடவடிக்கை எடுப்போம். தற்போது தான் ஓய்வு பெறப்போவதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். ஆனால் அவரால் உடனே ஓய்வு பெற முடியாது. காரணம் தேர்தல் முடிவுகளை நாங்கள் ஏற்கவில்லை.

கேள்வி: இது தொடர்பில் சர்வதேச மட்டத்தில் நடவடிக்கை எடுப்பீர்களா?

பதில்: தகவல்களை பெற்றுக்கொண்டு சர்வதேசம் மற்றும் உள்நாட்டுக்கு அறிவிப்போம். சட்ட நடவடிக்கையும் எடுப்போம். தற்போதைக்கு தூதரகங்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளோம்.

கேள்வி: தேர்தல் அமைதியாக நடைபெற்றதாக கண்காணிப்பு அமைப்புக்கள் தெரிவித்துள்ளனவே? மேலும் ஐக்கிய நாடுகள் சபையும் அதேபோன்று தெரிவித்துள்ளதே?

பதில்: கண்காணிப்பு குழுக்களின் முழுமையான அறிக்கையை வாசியுங்கள். மேலும் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அமெரிக்காவின் அறிக்கைகளை முழுமையாக வாசியுங்கள்.

கேள்வி: இவை தொடர்பில் ரணில் விக்ரமசிங்க ஏன் இதுவரை அறிக்கை விடுக்கவில்லை?

பதில்: ரணில் விக்ரமசிங்க இதுவரை கட்சி தலைவர்களை சந்தித்து பேச்சுநடத்தியுள்ளார். 24 மணிநேரத்தில் (நேற்று) அவர் ஊடகங்களை சந்திப்பார்.



ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் சபை வெள்ளியன்று கூடுகிறது ,அருள்சாமி எம்.பி.யாக பதவியேற்பார்








ஜனநாயக சோஷலிஸ குடியரசின் ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில் பாராளுமன்றம் பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மீண்டும் கூடவிருக்கின்றது.

சபாநாயகர் வி.ஜே.மு லொக்குபண்டார தலைமையில் காலை 9 மணிக்கு சபை கூடும் சபையின் பிரதான நடவடிக்கைகளுக்கு பின்னர் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோனினால் 1987ஆம் ஆண்டு 42 ஆம் இலக்க மாகாண சபைகள் சட்டமூலத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான சட்டமூலம் சபையில் சமர்ப்பிக்கப்படும்.

இதேவேளை, பிரதான நடவடிக்கைகள் ஆரம்பிப்பதற்கு முன்னர் மத்திய மாகாண சபையின் முன்னாள் கல்வியமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான எஸ். அருள்சாமி பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துக்கொள்ளவிருக்கின்றார்.

சமூக அபிவிருத்தி அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான பெரியசாமி சந்திரசேகரனின் மறைவினால் ஏற்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்கே அவர் நியமிக்கப்படவுள்ளார். இதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஜனவரி 8 ஆம் திகதி வெளியிடப்பட்டது.

மத்திய மாகாண சபையின் முன்னாள் கல்வியமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான எஸ்.அருள்சாமி 2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் மலையக மக்கள் முன்னணியின் மண்வெட்டி சின்னத்தில் போட்டியிட்டு மறைந்த பெ.சந்திரசேகரனுக்கு அடுத்தபடியாக கூடுதலான விருப்பு வாக்குகளை பெற்றிருந்தார்.

அதே ஆண்டு நடைபெற்ற மத்திய மாகாண சபைத்தேர்தலிலும் அவர் மலையக மக்கள் முன்னணியுடன் இணைந்து போட்டியிட்டு மாகாண சபைக்கு தெரிவானார். இந்நிலையில் 2005 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஜனாதிபதி தேர்தலில் மலையக மக்கள் முன்னணி ஐக்கிய தேசியக்கட்சிக்கு ஆதரவளித்தமையால் மாகாண சபை உறுப்பினர்களான அருள் சாமியும் பி.திகாம்பரமும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஆதரவளிக்க தீர்மானித்தனர்.

இதனையடுத்தே அருள்சாமிக்கு மத்தியமாகாண கல்வியமைச்சு வழங்கப்பட்டது ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ வெற்றியீட்டியதை அடுத்து தொடர்ந்து அமைச்சராக பதவிவகித்த அவர் 2009 ஆம் நடைபெற்ற மத்திய மாகாண சபைத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்டு தோல்வியை தழுவிக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.




ஜெனரல் தொடர்ந்து அரசியலில் ஈடுபடுவார்


சரத் பொன்சேகா எந்த விதத்திலும் தனிமைப்படுத்தப்படவில்லை. இது அரசாங்கத்தின் பொய்ப்பிரசாரம். அவர் இந்த நாட்டின் செயற்பாட்டு அரசியலில் இருக்கின்றார்.

அவர் தொடர்ந்து அரசியலில் ஈடுபட எதிர்பார்க்கின்றார். அவருக்கான அரசியல் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன என்று ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தேர்தலின் பின்னர் எதிரணி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறித்து என்ன கூற விரும்புகின்றீர்கள் என்று ஊடகவியலாளர் வினவினார்.

அவர் முன்னாள் இராணுவ தளபதி. மிகவும் புகழ்வாய்ந்த இராணுவ தளபதி. உலகத்தில் எந்த இராணுவத்துக்கும் தலைமை தாங்கக்கூடிய இராணுவ தளபதி என்று ஜனாதிபதியே புகழ்ந்துள்ளார். எனினும் இன்று அவரின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. ஜானக பெரேராவுக்கு பாதுகாப்பு குறைத்ததனால் என்ன நடந்தது என்று எங்களுக்கு தெரியும். அவரின் சுதந்திர நடமாட்டத்துக்கு தடையேற்பட்டுள்ளது.

அவரால் வெளியில் செல்ல முடியாத நிலைமையே தற்போது ஏற்பட்டுள்ளது. அவர் தற்போது அவரின் வாடகை வீட்டில் இருக்கின்றார். அவர் எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடுவார். ஜெனரல் பொன்சேகா எந்த வகையிலும் தனிமைப்படுத்தப்படவில்லை என்பதனை தெளிவாக குறிப்பிடுகின்றேன். மக்களுக்காக சேவையாற்றவும் தலைமைதாங்கவும் தயாராகவே இருக்கின்றார். ஜெனரல் நாட்டின் செயற்பாட்டு அரசியலில் இருக்கின்றார்



தமிழ்சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் பொதுத்தேர்தலை நடத்தும் சாத்தியம், சுதந்திர தினத்திற்கு பின் சபை கலைக்கப்படும்


அதிகாரம் கொண்ட ஆறாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றியீட்டியதையடுத்து ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் தமிழ்சிங்கள புத்தாண்டிற்கு முன்னர் பொதுத்தேர்தலை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளது.

இதேவேளை, ஆறாவது பாராளுமன்றத்தை நாட்டின் 62 ஆவது சுதந்திர தினத்திற்கு பின்னர் கலைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பாராளுமன்றம் பெரும்பாலும் பெப்ரவரி 5 ஆம் திகதி நள்ளிரவுடன் கலைக்ககூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக நம்பதகுந்த வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

ஜனாதிபதி தேர்தல் நிறைவடைந்த உடனேயே பொதுதேர்தலுக்கு முகம்கொடுப்பதற்கு தயாராகியுள்ள அரசாங்கம் அதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொண்டுள்ளதுடன் பொதுதேர்தலுக்கு முகம்கொடுப்பதற்கு தயாராகுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தொகுதி அமைப்பாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

ஆறாவது பாராளுமன்றத்தின் பதவிக்காலம் ஏப்ரல் 21 ஆம் திகதியுடன் நிறைவடையவிருக்கின்ற நிலையிலேயே ஜனாதிபதி தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி பாராளுமன்றத்தை கலைக்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. பாராளுமன்ற தேர்தலில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே அரசாங்கம் களமிறங்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ள அதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிலை சின்னத்தில் போட்டியிடவிருக்கின்ற இதர கட்சிகளுக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கான பெயர் விபரங்களை தந்துதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. தமிழ்சிங்கள புத்தாண்டிற்கு முன்னர் பொதுத்தேர்தலை நடத்தி ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு முன்னர் வரவுசெலவுத்திட்டத்தை சமர்ப்பிப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 2010 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தை 2009 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்காமல் அதற்கு பதிலாக கணக்கு வாக்கெடுப்பை சமர்ப்பித்திருந்தது.

நிதி திட்டமிடல் அமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்ட கணக்கு வாக்கெடுப்பானது இவ்வருடம் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதியுடன் நிறைவடைந்து விடும் அதற்கு பின்னர் அரசாங்கத்தை கொண்டு நடத்துவதற்கு தேவையான நிதியை வரவுசெலவுத்திட்டத்தின் மூலமாகவே ஒதுக்கிகொள்ளவேண்டும். அவற்றை கருத்திகொண்டே புத்தாணண்டிற்கு முன்னர் பொதுத்தேர்தலை நடத்துவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நடவடிக்கை எடுத்து வருகின்றது.



உறவினரை பார்க்க கிளிநொச்சி சென்ற இளைஞன் சடலமாக மீட்பு




தனது உறவினரை பார்க்கச் சென்ற இளைஞர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.கடந்த திங்கட்கிழமை தனது உறவினர் ஒருவரை பார்க்க யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி சென்ற இளைஞர் இது வரையிலும் காணவில்லையென உறவினர் தேடியுள்ளனர்.

உயிரிழந்துள்ள இளைஞன் வேலுப்பிள்ளை சசிரூபன்(வயது 30) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி சிங்கள மகா வித்தியாலயம் அருகேயுள்ள உறவினர் வீட்டுப் பகுதியில் நேற்று தேடிய போது கிணற்றுக் கட்டில் இரத்த கறை படிந்து இருந்தது.இதனியடுத்து கிணற்றினுள் பார்த்த போது அவ் இளைஞன் கல்லில் கட்டப்பட்டு உயிரிழந்து காணப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

உயிரிழந்த இவ் இளைஞனின் உடலில் காயங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சிப பொலிஸார் இதுதொடர்பா விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...
அ. இ. இந்து மாமன்றம் ஜனாதிபதிக்கு வாழ்த்து:
அரசின் சமூக நலத்திட்டங்களுக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதாக உறுதி

தேர்தலில் அமோக வெற்றிபெற்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அகில இலங்கை இந்து மாமன்றம் வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பிவைத் துள்ளது. மேற்படி மன்றத்தின் சார்பில் பொதுச் செயலாளர் கந்தையா நீலகண்டன் தலைவர் வி. கயிலாசப்பிள்ளை ஆகியோர் கையெடுத்திட்டு அனுப்பி வைத்துள்ள இந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:

தேர்தலில் தாங்கள் அடைந்திருக்கும் வெற்றியையொட்டி இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்பிவைப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.

இந்த நாட்டிலுள்ள சகல மக்களும் இன, மத, வேறுபாடுகளுக்கு அப்பால் கெளரவத்துடனும், சமத்துவத்துடனும் கூடிய சமாதான வாழ்வை, தங்கள் தாய்நாட்டில் மேற்கொள்ளுவதற்கு வசதியாக வளமான நாடாக இலங்கையை முன்னெடுத்துச் செல்வதற்கு அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ நடராஜப் பெருமானின் திருவருள் தங்களுக்குக் கிடைக்கப் பிரார்த்திக்கிறோம்.

எங்கள் மக்கள் பல வழிகளில் கஷட்டப்பட்ட வேளையில், அவர்களுக்கு மனிதாபிமான சேவைகளைச் செய்வதற்கு தாங்களும், தங்கள் அரசாங்கமும் எமக்குத் தந்த சந்தர்ப்பத்திற்கும் உதவிகளுக்கும் நன்றி தெரிவிக்கும் அதேவேளையில், திருக்கேதீஸ்வர ஆலய சூழலை மேம்படுத்துவதற்காகவும், கட்டமைப்பு வசதிகளை அங்கு அமைத்துத் தருவதற்காகவும் தேவையான நடவடிக்கைகளை எடுத்தமையையும், சமூகசேவை மற்றும் சமூக நலத்துறை அமைச்சின் திட்டத்திற்கமைய அங்கு முதியோர்களுக்கான இல்லமொன்று அமைத்துத் தருவதையும், புனர்வாழ்வு முகாமிலிருந்து மாணவ சிறார்கள் விடுதலை செய்யப்பட்டு வருவதையும் குறிப்பாகச் சொல்லலாம்.

எங்கள் மாமன்றத்தின் துணைத் தலைவரும், தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தின் தலைவருமான செஞ்சொற்செல்வர் ஆறு திருமுருகன் கல்வி அமைச்சருக்கு விடுத்திருந்த வேண்டுகோளாக இந்து மாமன்ற கல்விக் குழு உறுப்பினரான யாழ். பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் எஸ். மோகனதாஸ் பசில் ராஜபக்ஷ அவர்களிடம் வலியுறுத்திய விடயமாக யாழ். பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடமொன்றை அமைப்பது தொடர்பாக தங்களது மஹிந்தவின் சிந்தனை தொலைநோக்கு தேர்தல் விஞ்ஞானபனத்தில் குறிப்பிட்டிருப்பதை மெச்சுகின்ற அதேவேளையில் அதனை உடனடியாக நிறுவுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படியும் கேட்டுக்கொள்கிறோம்.

வடக்கு, கிழக்கு இளைஞர்களை கல்வித் துறையில் முன்னேற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுப்பதன் அவசியத்தையும் தங்கள் கவனத்திற்குக் கொண்டுவருகிறோம். யாழ். பல்கலைக்கழகம், கிழக்குப் பல்கலைக்கழகம், பட்டதாரி மாணவர்களுக்குரிய விடுதி வசதிகளும் உடனடியாகத் தேவைப்படுகிறது. இது தொடர்பாகவும் தேவையான ஏற்பாடுகளைச் செய்வதுடன், வடக்கு கிழக்கு இளைஞர்களின் வளமான எதிர்காலத்திற்கும் ஆவன செய்வீர்கள் என நாங்கள் நம்புகின்றோம்.

அரசியல் சார்பற்ற சமய நிறுவனமான எங்கள் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் சார்பாக, தாங்கள் இந்நாட்டு மக்களுக்கு வழங்கும் சகல மனிதநேய சமூகநலத் திட்டங்களுக்கு தொடர்ந்தும் ஆதரவை வழங்கிவருவோம் இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



பொதுத் தேர்தலில் ஐ. ம. சு. மு 149 ஆசனங்களை கைப்பற்றும்

2/3 பெரும்பான்மையைப் பெறும் -விமல் வீரவன்ச

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 149 ஆசனங்களை வென்று மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறும் என ஜே. என். பி. தலைவர் விமல் வீரவன்ச எம். பி. தெரிவித்தார்.

ஒப்பீட்டளவில் 1988 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாஸ சுமார் 50.43 வீத வாக்குகளைப் பெற்றும் 120 ஆசனங்களை வென்றார். அதி கூடிய பெரும்பான்மையைப் பெற்ற 58 வீத வாக்குகளைப் பெற்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 149 ஆசனங்களை பெறுவது உறுதி என்றும் ஜே. என். பி. தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

இதேவேளை, தேசத்துரோக செயலில் ஈடுபட்டவரும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தினரை படுகொலை செய்யவும் திட்டம் தீட்டியவருமான சரத் பொன்சேகாவை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். அது மட்டுமல்லாமல் நாட்டை விட்டு தப்பிச் செல்ல அவருக்கு இடமளிக்கக் கூடாது என்றும் ஜே. என். பி. ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது என்றும் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

ஜே. என். பி. தலைமையகத்தில் விமல் வீரவன்ச நேற்று செய்தியாளர் மாநாடொன்றை நடத்தினார். இந்த செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்:-

சம்பந்தனுடனான இரகசிய ஒப்பந்தம் மூலம் தமிழ்ப் பிரிவினைவாத சக்திகளுக்கு பொன்சேகா வலுச் சேர்த்ததாகவும் விமல் வீரவன்ச குற்றம் சாட்டினார்.

வடக்கு, கிழக்கு தேர்தல் வாக்களிப்பை விபரித்துள்ள அவர், பாதுகாப்புப் படையினரின் அளப்பரிய தியாகத்தின் மூலம் மீட்டெடுக்கப்பட்ட இலங்கையின் ஆள்புல ஒருமைப்பாட்டுக்கு எதிராக பொன்சேகா செயற்படுவதாகவும் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவை பலிக்கடாவாக்கியதன் பின்னர், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று ஒரு மகிழ்ச்சியான மனிதராகக் காணப்படுகிறார். தற்போதைய நிலையில் ரணில், பொன்சேகாவுடனும் ஜே. வி. பியுடனும் சேர்ந்து பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதை விரும்பவில்லை. பொன்சேகாவின் அணியிலுள்ள மங்கள சமரவீர, சோமவன்ச அமரசிங்க மற்றும் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் தோல்வியை ஏற்க வேண்டுமென குறிப்பிட்டுள்ள விமல் வீரவன்ச, இந்தத் தலைவர்களை அரசியல் அநாதை களாக்கிவிட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க, அவர்களால் ஏற்பாடு செய்த செய்தியாளர் மாநாட்டில் பங்குபற்றாமல் இருந் துள்ளாரெனவும் விமல் வீரவன்ச சுட்டிக்காட்டியுள்ளார்.


62 வது சுதந்திர தின வைபவம் கண்டியில்



பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி இலங்கையின் 62 ஆவது சுதந்திர தின வைபவம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கண்டி ஸ்ரீ தலதா மாளிகை பிரதேசத்தில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏகநாயக்க தெரிவித்தார்.

பொலிஸாரினதும் முப்படையினர்களதும் கண் காட்சிகள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் விசேடமாக இடம் பெறவுள்ளன.

இதேவேளை புதேசத்தின் மகுடம்பூ கண்காட்சியும் கண்டி பள்ளேகலையில் அன்றைய தினம் ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.



பாராளுமன்ற தேர்தல்:
2/3 பெரும்பான்மையை பெற்று அரசியல் அமைப்பை மாற்றுவதில் அரசு உறுதி



பாராளுமன்றத் தேர்தல் மூலம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை யைப் பெற்று அரசியலமைப்பில் மாற்றம் கொண்டு வருவதென்பதில் அரசாங்கம் உறுதியாகவுள்ளதென ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வருவது தொடர்பில் எதிர்க்கட்சியினரின் ஒத்துழைப்பினை அரசாங்கம் கோரியுள்ளது. அவர் களின் ஒத்துழைப்பு கிடைக்குமென்ற நம்பிக்கையுள்ளது. அதற்கென ஓரிருவாரங்கள் அவகாசம் வழங்கு வோமெனவும் குறிப்பிட்ட அமை ச்சர் எதிர்க்கட்சியினரின் ஆதரவு கிடைக்காது போனாலும் பொதுத் தேர்தல் மூலம் மக்கள் ஆதரவினைப் பெறுவோம் எனவும் தெரிவித்தார்.

இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்:-

ஜனாதிபதித் தேர்தலில் ஜனா திபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நாட்டு மக்களின் அமோக ஆதரவு கிடைத்துள்ளதையடுத்து அரசியல மைப்பில் திருத்தமொன்றை ஏற் படுத்தி சகல மக்களுக்கும் ஏற்றதான நல்லாட்சி யொன்றை ஏற்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பெப்ரவரி மாதம் பாராளுமன்றத்தைக் கலைப்பதுடனும் மார்ச்சில் தேர்தலை அறிவிக்கவும் அரசாங்கம் உத்தேசித்துள்ளது. பொதுத் தேர்தலில் மக்களின் பூரண ஆதரவு கிடைப்பது உறுதி.
மேலும் இங்கே தொடர்க...

29 ஜனவரி, 2010

இரகசிய இடங்களில் தடுத்து வைத்து விசாரணை செய்யும் நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும் - ஐ.நா .மனித உரிமை விசாரணையாளர்கள்
No Image

இரகசிய இடங்களில் மக்களை தடுத்து வைத்து விசாரணை செய்து தகவல்களை பெறும் நாடுகளில் இலங்கையும் ஒன்று என ஐக்கியநாடுகள் மனித உரிமை விசாரணையாளர்கள் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதம் இந்த அறிக்கை ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஆராயப்பட இருக்கிறது. அமெரிக்கா மற்றும் ஈரான், பாகிஸ்தான், சீனா, ரஷ்யா, இலங்கை ஆகியன உட்பட பத்திற்கும் மேற்பட்ட நாடுகள் மேற்கொள்ளும் துஷ்பிரயோகங்களை விசாரணை செய்து மக்களை இரகசியமாக தடுத்து வைக்கும் நடைமுறைகள் பற்றி ஐக்கியநாடுகள் விரிவான முறையில் மேற்கொண்ட ஆய்வு பற்றிய விவரங்கள் மேற்படி 221 பக்க அறிக்கையில் அடங்கியுள்ளன.

இலங்கையில் அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான நீண்டகால யுத்தம் காரணமாக இரகசியமாக பலர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். பொதுவாக, இலங்கை இராணுவ அதிகாரிகள், இராணுவ சீருடையில் அல்லது சிவில் உடையில் தமிழ் இனத்தவர்களை கைது செய்து வாரக்கணக்கில் அவர்களை இரகசிய இடங்களில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர் என்று மேற்படி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசேட அறிக்கையாளரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தடுத்து வைத்து சித்திரவதை செய்து விசாரணைக்கு உட்படுத்தும் இரகசிய இடங்களில் ஒன்று கொழும்பு கொள்ளுப்பிட்டி காலி வீதிக்கருகிலுள்ள ஒரு இராணுவ முகாமாகும்.

தடுத்து வைக்கப்படுவோர் அநேகமாக சித்திரவதை செய்யப்பட்டு விசாரிக்கப்படுகிறார்கள். தமிழீழ விடுதலைப்புலிகளுடன் அவர்களுக்கு உள்ள தொடர்பு பற்றி அவர்களிடமிருந்து ஒப்புதல் வாக்குமூலம் பெறுவதற்காகவே அவர்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.

1992ஆம் ஆண்டில், இராணுவத்திற்கு மேலதிக அதிகாரங்களை வழங்கியதுடன் இரகசிய தடுப்புக்காவல் முகாம்களை நடத்துவதற்கும் அனுமதி அளித்து புதிய சட்டம் ஒன்றை அரசாங்கம் கொண்டுவந்தது.

1993ஆம் ஆண்டு ஜுன் மாதம் கொண்டுவரப்பட்ட அவசரகால சட்டத்தில் இரகசிய தடுப்பு முகாம்கள் சட்டவிரோதமானவை என்று தெரிவிக்கப்பட்ட போதிலும் மக்கள் தொடர்ந்தும் இரகசிய இடங்களில் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்று நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பொறுப்பானவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

பொலிஸாராலும் இராணுவத்தினராலும் ஆட்கள் கடத்தப்படுவது, இரகசிய இடங்களில் தடுத்து வைக்கப்படுவது, ஆட்கள் காணாமல் போவது போன்ற சம்பவங்கள் குறித்து ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் அமைப்புகளும் அரசாங்க சார்பற்ற அமைப்புகளும் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளன.

மனித உரிமைகள் பேரவையின் ஆட்கள் காணாமல் போவது தொடர்பான செயலாற்றுக்குழு 2008ஆம் ஆண்டு பேரவையில் சமர்ப்பித்த அறிக்கையில் இலங்கையில் ஆட்கள் காணாமல் போவது அதிகரித்து வருவது குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்திருந்தது.

மனித உரிமைகள் குழு இலங்கை தொடர்பான அதன் இறுதி அவதானிப்புகளில், ஆட்கடத்தல்கள், இரகசிய தடுப்பு முகாம்கள் ஆகியன் தொடர்பாக இருந்துவரும் சிறப்புரிமைகள் குறித்து கவலை தெரிவித்திருந்தது. ஆட்கடத்தல், சட்டவிரோத தடுப்பக் காவல், சிதிரவதை சம்பவங்கள் ஆஈகியன தொடர்பாக பொலிஸ் அதிகாரிகள், ஆயுதப்படை உறுப்பினர்கள் ஆகியோருக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட அநேகமான வழக்கு விசாரணைகள் திருப்திகரமான சாட்சியம், சாட்சிகள் இல்லாமை போன்ற காரணங்களுக்காக முடிவற்ற நிலையில் உள்ளன.

இத்தகைய பெருமளவிலான குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்ட போதிலும் இவற்றக்கு பொறுப்பான மிகக் குறைந்த பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகளே குற்றவாளிகளாக காணப்பட்டு தண்டிக்கப்பட்டுள்ளார்கள். மனித உரிமை மீறல் சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்கள் பயமுறுத்தல்களுக்கு உட்படுவதால் அவர்கள் இது சம்பந்தமான முறைப்பாடுகளை தெரிவிக்க அஞ்சுகிறார்கள் என்றும் மனித உரிமைகள் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மற்றைய நாடுகள் மத்தியில் எதேச்சாதிகார ஆட்சியை நீண்டகாலமாக நடத்திவந்த அமெரிக்கா மற்றும் சோவித் தலைவர் ஜோசேப் ஸ்டாலின், சிலி யின் சக்திவாய்ந்த தலைவர் ஒகொஸ்டோ பினோசெற் போன்ற தலைவர்கள் இரகசிய சிறைக்கூடங்களை நடத்தி வந்தமையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...
27.01.2010 தாயகக்குரல்

உலகமே உன்னிப்பாக உற்று நோக்கிய இலங்கையின் ஆறாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் முடிந்துவிட்டது. இந்த தேர்தல் குறித்து செய்தி ஊடகங்கள் பல பலவிதமான ஊகங்களை தெரிவித்து வந்தன. இம்முறை ஜனாதிபதி தேர்தலில் மக்கள் ஒரு அரசியல் மாற்றத்தை விரும்புகிறார்கள் எனவும் அதனால் சரத் பொன்சேகாவே வெற்றிபெறுவார் எனவும் சில ஊடகங்கள் கருத்து தெரிவித்திருந்தன.


யார் ஜனாதிபதியாக வெற்றி பெறுவதானாலும் 51 வீதத்துக்கு குறைவான வாக்குகளையே பெறுவர் என்ற கருத்துக்களும் பரவலாக தெரிவிக்கப்பட்டன. எவருக்கும் 50 வீதம் வாக்குகள் கிடைக்காமல் இரண்டாவது விருப்பு வாக்குகளிலேயே வெற்றி தீர்மானிக்கப்படும் எனவும் சிலர் தெரிவித்திருந்தனர்.


இவர்களுடைய ஊகங்கள் எல்லாவற்றையும் பொய்யாக்கி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 57.88 வீதமான வாக்குகளை பெற்று இரண்டாவது முறையாகவும் ஜனாதியாக தெரிவாகியுள்ளார். பொதுவாக சரத் பொன்சேகாவுக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் கடுமையான போட்டி நிலவுவதாக அபிப்பிராயம் நிலவியபோதிலும் களனி பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய கருத்துக் கணிப்பின்மூலம் மகிந்தாவின் வெற்றியை ஏற்கனவே உறுதிப்படுத்தியிருந்தனர்.


ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பு வீதம் 80 ஆக இருந்தால் தனது வெற்றி உறுதியானது என சரத் பொன்சேகா நம்பிக்கை தெரிவித்திருந்தார். கடந்த காலங்களைவிட இந்த தேர்தலில் 70 விதமான மக்கள் வாக்களித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது, அதே வேளை எதிர்பார்த்தளவுக்கு வன்முறை சம்பவங்கள் இடம்பெறவில்லை. வாக்களிப்பு சுமுகமாக நடைபெற்றதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்காவும் தேர்தல் குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.


2005ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் 48 லட்சத்து 87ஆயிரத்து 152 வாக்குகளை (50.29மூ) பெற்று வெற்றி பெற்ற மகிந்த ராஜபக்ஷ 2010 ஜனாதிபதி தேர்தலில் 60 லட்சத்து 15 ஆயிரத்து 934 வாக்குகளைப் (57.88மூ) பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கா 47லட்சத்து 06ஆயிரத்து 366 வாக்குகளை( (48.43
மூ) பெற்றிருந்தார். 2010 தேர்தலில் எதிர்க்கட்சி பொது வேட்பாளராக போட்டியிட்ட சரத்பொன்சேகா 41லட்சத்து 73ஆயிரத்து 185 வாக்குகளையே (40.15மூ) பெற்றுள்ளார்.


ஆட்சி மாற்றம், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழித்தல் குடும்ப ஆட்சியை ஒழித்தல், நாட்டில் ஜனநாயகத்தை கொண்டுவருதல் என்ற கோஷங்களை முன்வைத்து எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் சரத் பொன்சேகா பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்தார். ஆனால் இவையனைத்தையும் சிங்கள மக்கள் பெரும்பான்மையால் நிராகரித்துவிட்டனர்.


தமிழ் மக்களைப் பொறுத்தவரை இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதுதான் பிரதானமானதாக கருதப்படுகிறது. இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது, நாட்டின் அபிவிருத்தி என்பன தொடர்பாக மகிந்த சிந்தனையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சரத் பொன்சேகாவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இனப்பிரச்சினை பற்றி எதுவும் கூறப்படவில்லை. இருந்தும் தமிழ் மக்கள் சரத் பொன்சேகாவுக்கே வாக்களித்துள்ளனர். வடக்கு கிழக்கு மாகாணம் மற்றும் நுவரெலியா, கொழும்பு ஆகிய மாவட்டங்களிலேயே சரத் பொன்சேகா அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளார்.


இந்த தேர்தல் யுத்தம் முடிந்த பின்னர் நடைபெறும் தேர்தல் என்பதுடன் வடக்கு கிழக்கு மக்கள் சுதந்திரமாக வாக்களிக்கும் சூழ்நிலையில் நடைபெறும் தேர்தலாகும். இருந்தும் வடக்கில் 15
மூ மக்களே தேர்தலில் வாக்களித்துள்ளனர்.
தமிழ் தலைவர்கள் வாக்களிக்கும்படி வேண்டுகோள் விடுத்தும் மக்கள் வாக்களிப்பதில் அக்கறை கொள்ளவில்லை என்றால் அது தமிழ்; தலைவர்களின் கட்டுப்பாட்டில் மக்கள் இல்லை என்பதுதான் அர்த்தமாகிறது. இந்த நிலை தொடர்ந்தால் தமிழ் மக்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த எச்சரிக்கையை தமிழ் தலைவர்கள் மாத்திரமல்ல தமிழ் மக்களுக்கும் கவனத்தில் கோள்ளவேண்டும்.

மேலும் இங்கே தொடர்க...
புதியதொரு தமிழ்த் தலைமை தவிர்க்க முடியாத தேவை

தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெற்ற அமோக வெற்றி அவரது வேலைத் திட்ட த்துக்கு மக்கள் அளித்த அங்கீகாரமாகும்.

பய ங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் வெற்றிகரமாக முடிவு க்கு வந்ததைத் தொடர்ந்து அபிவிருத்தியும் சமாதான மும் என்ற கோஷத்தின் அடிப்படையிலான வேலைத் திட்டத்தை ஜனாதிபதி முன்னெடுத்து வருகின்றார். மக்களின் ஏகோபித்த ஆதரவு இந்த வேலைத் திட்டத்துக்கு இப்போது கிடைத்திருக்கின்றது.

தேர்தல் முடிவின் பின்னணியில் தமிழ் பேசும் மக்கள் ஆழமாகச் சிந்திக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிரு க்கின்றது. இனப் பிரச்சினை தீர்வின்றித் தொடர்கின் றது. வடக்கு, கிழக்கு மாகாணங்கள் நீண்டகாலம் அபி விருத்தியில் பின்தங்கியிருந்ததற்கு இனப் பிரச்சினை தீர்வின்றியிருப்பது பிரதான காரணம்.

ஜனாதிபதி மஹி ந்த ராஜபக்ஷவின் அமோக வெற்றி இனப்பிரச்சி னையின் தீர்வுக்குச் சாதகமான சூழ்நிலையைத் தோற்று வித்திருப்பதைக் கவனத்தில் எடுத்துச் சரியான முடிவு க்குத் தமிழ் பேசும் மக்கள் வரவேண்டும்.

தமிழ் மக்களின் பிரதிநிதிகளென உரிமை கோரும் தமி ழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதித் தேர்தல் தொடர் பாக எடுத்த பிழையான முடிவினால் தமிழ் மக்கள் தவ றாக வழிநடத்தப்பட்டுள்ளனர். இனப் பிரச்சினையின் தீர்வுக்குத் தடையாகச் செயற்பட்ட வரலாற்றைக் கொண்டுள்ள கட்சிகளுடனேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இத்தேர்தலில் கூட்டுச் சேர்ந்தது.

இது வொன்றும் ஆச்சரியத்துக்குரியதல்ல, தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றை நிதானமாக ஆராய்ந்து பார் த்தால், ஒவ்வொரு கட்டத்திலும் இனப் பிரச்சினை யின் தீர்வு தடைப்பட்டதற்குத் தமிழ்த் தலைவர்க ளின் பிழையான முடிவுகளே பிரதான காரணம் என்பதை விளங்கிக்கொள்ளலாம்.

இந்த நிலையில் தமிழ் பேசும் மக்கள் இதுவரை கால மும் தங்களைத் தவறாக வழிநடத்திய தலைமையை நிராகரித்துப் புதிய வழியில் சிந்திக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

கூட்டமைப்புத் தலைவர்க ளின் தவறான வழிநடத்தல்களால் இனப் பிரச்சினை யின் தீர்வு தடைப்பட்டது மாத்திரமன்றி, தமிழ் மக் கள் தாங்க முடியாத இழப்புகளுக்கும் அழிவுகளு க்கும் உள்ளாகினார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் ஏப்ரல் மாதத்துடன் முடிவடைவதால் ஜனாதிபதி விரைவில் பாராளுமன் றத்தைக் கலைத்துப் பொதுத் தேர்தலுக்கு உத்தரவிடு வார். பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன் னணிக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைப்பது உறுதியாகிவிட்டது.

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் இதை வெளிப்படுத்துகின்றன. இது இனப்பிரச்சினை யின் தீர்வுக்குச் சாதகமான ஒரு நிலை. இச்சாதக சூழ்நிலையைச் சரியாகப் பயன்படுத்துவதிலேயே தமிழ் பேசும் மக்களின் எதிர்காலம் தங்கியுள்ளது.

ஜனாதி பதியின் தலைமையிலான புதிய அரசாங்கத்துடன் நல்லுறவைப் பேணிச் சமகால யதார்த்தத்துக்கு அமை வான தீர்வொன்றை நடைமுறைக்குக் கொண்டு வரு வதற்கும் அதை அடிப்படையாகக் கொண்டு இறுதித் தீர்வை நோக்கிய நகர்வை முன்னெடுப்பதற்கும் பொரு த்தமான ஒரு தலைமை இன்று தமிழ் மக்களுக்குத் தேவைப்படுகின்றது.

இனப் பிரச்சினைக்கான தீர்வைப் பொறுத்த வரையில் பழைய தலைமை தோற்றுப் போய்விட்டது. மக்கள் மத்தியிலிருந்து புதிய தலைமை உருவாக வேண்டும். இது தவிர்க்க முடியாத தேவை.

தமிழர்களுக்கு விரைவில் அரசியல் உரிமை-மகிந்த ராஜபக்ஷ!



தமிழர்களுக்கு அரசியல் உரிமை வழங்க வகை செய்யும் திட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என்று அதிபர் மகிந்த ராஜபட்ச தெரிவித்திருக்கிறார். விடுதலைப் புலிகளுடனான போரின்போது அமல்படுத்தப்பட்ட நெருக்கடி கால சட்ட அதிகாரங்கள் படிப்படியாக விலக்கிக் கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளுக்கு அரசியல் அதிகாரம் வழங்கப்படவேண்டும் என்று தமிழர் தலைவர்களும் இந்தியாவும் வலியுறுத்திவந்தன. இது பற்றி அதிபர் தேர்தலுக்குப்பிறகு பரிசீலிக்கப்படும் என்று மகிந்த ராஜபட்ச கூறியிருந்தார்.

தொலைக்காட்சிகளுக்கு இன்று அவர் அளித்த பேட்டியில் இதைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள தமிழர்களின் விருப்பங்கள் நியாயமானது என்பதை நான் அறிவேன். அவர்களுக்கு அரசியல் உரிமை வழங்குவதற்கான திட்டம் விரைவில் கொண்டு வரப்படும். இதற்காக தமிழர் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி இலங்கை அரசமைப்பு சட்ட அமைப்புக்குட்பட்டு வழி காணப்படும். நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகு இந்த ஆலோசனை நடத்தப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த தேர்தலில் தங்களுக்கு ஆதரவாக தமிழர்கள் வாக்களித்ததாக தெரியவில்லையே என்று கேட்டதற்குஇ இதில் தவறு இல்லை. பல ஆண்டுகளாக வாக்குரிமை தடுக்கப்பட்டவர்கள் இப்படி செய்தது நல்லதுதான் என்றார்.

எது எப்படி இருந்தாலும் எனது தரப்பிலிருந்து தமிழர் பிரச்னைக்குத் தீர்வு காணப்படும். தேர்தல் அறிக்கையில் இது இடம்பெற்றுள்ளது. அதன்படி நான் செயல்படுவேன். இதற்கு இந்தியாவும் ஆதரவு தரும் என்பதில் சந்தேகமில்லை. இலங்கை பிரச்னையை முழுமையாக

தெரிந்து வைத்துள்ள நாடு இந்தியா. இலங்கை அரசமைப்புச் சட்டத்துக்கு மரியாதை தரும் நாடு இந்தியா.

தமிழர்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்க கொண்டுவரப்பட்ட 13-வது திருத்தமே இந்தியாவின் யோசனைதான். இந்த திருத்தம் அரசமைப்பு சட்டத்தில் உள்ளது. இதில் தரப்பட்டுள்ள உரிமைகளுக்கும் மேலாக சலுகைகளை கோருகின்றனர். இலங்கையின் பெரும்பான்மையோர் ஒப்புக்கொள்ளக்கூடிய தீர்வுதான் நடைமுறைக்கு வரக்கூடியாகவும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும் இருக்கும். இதற்கு மாறான ஏற்பாட்டால் பயன் விளையாது என்பதை மறந்துவிடக்கூடாது என்று இந்திய தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு அளித்த பேட்டியில் ராஜ பட்ச தெரிவித்தார்


பாராளுமன்றத்தைக் கலைக்க ஏற்பாடு: ஓரிரு தினங்களில் அறிவிப்பு வெளியாகும்

எதிர்க்கட்சி பெற்ற 40 வீத வாக்குகளையும் வெற்றி கொள்ள முயற்சி

- அமைச்சர் மைத்திரி



பாராளுமன்றம் வெகு விரைவில் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான அறிவித்தல் இன்னும் ஓரிரு வாரங்களில் விடுக்கப்படும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான மைத்திரிபால சிரிசேன தெரிவித்தார்.

ஜனாதிபதிக்கு கிடைக்கப்பெற்ற 60 வீத வாக்குகளை தக்கவைத்துக்கொண்டு எதிர்க் கட்சிக்கு வழங்கப்பட்ட 40 வீத வாக்குகளையும் வெற்றிகொள்ளும் முயற்சிகள் முன்னெடுக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பொதுத் தேர்தல் ஒன்றுக்கு முகம் கொடுப்பதற்கு தேவையான நடவடிக் கைகளை உடனடியாக ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றதை அடுத்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஏற்பாடு செய்திருந்த விஷேட செய்தியாளர் மாநாடு நேற்றுக் காலை நடைபெற்றது.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இந்த செய்தியாளர் மாநாட்டில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேம் ஜயந்த், அமைச்சர்களான கலாநிதி சரத் அமுனுகம, பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், ரிஷாத் பதியுதீன், சம்பிக ரணவக்க, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச ஆகியோர் கலந்துகொண்ட இந்த மாநாட்டில் அமைச்சர் மைத்திரிபால மேலும் கூறுகையில்:-

தற்போதைய பாராளுமன்றத்தின் காலம் எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் முடிவடையவுள்ளது. இந்நிலையில் அரசியலமைப்பின் பிரகாரம் பொதுத் தேர்தல் ஒன்றுக்கான அறிவிப்பு வெகு விரைவில் விடுக்கப்படும்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடனான பேச்சுவார்த்தைகள் இன்னும் ஓரிரு தினங்களில் நடைபெறவுள்ளது.

பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் தகவல்களை திரட்டி பெயர்ப்பட்டியலை தயாரிக்கும் நடவடிக்கைகள் நேற்று (இன்று) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் என்ற வகையில் இதற்கான ஆலோசனைகளை வழங்கியுள்ளேன் என்றார்.

மக்கள் எதிர்பார்க்கும் வளமான எதிர்காலம் நிச்சயம் உருவாக்கப்படும். மஹிந்த சிந்தனையில் கூறப்பட்டமை நிறைவேற்றப்படும். உலகிலேயே வளமான நாடாக மாற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் எம்மீது நம்பிக்கை வைத்துள்ள மக்கள் 60 வீத வாக்குகளையும் எதிர்க்கட்சி வேட்பாளருக்கு 40 வீத வாக்குகளையும் வழங்கியுள்ளனர்.

எஞ்சிய 40 வீதத்தை பெற முடியாமல் போன காரணங்கள் ஆராயப்பட்டு அந்த குறைகளை நிவர்த்தி செய்துகொண்டு ஜனநாயக முறையிலான அரசியலின் மூலம் எஞ்சிய 40 வீத வாக்குகளையும் எமது வெற்றிக்காக பெற்றுக்கொள்ள முயற்சிப்போம்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இந்த நாட்டை முன்னேற்ற எதிர்க்கட்சியின் 40 வீத வாக்காளர்களும் எம்முடன் கைக்கோர்க்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன் என்றார்.

சரத் பொன்சேக்கா தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதாக கூறி வருகிறார். அவருக்கு நாங்கள் ஒன்றும் செய்யப்போவதில்லை, இதற்கான தேவையில்லை.

எமது கூட்டங்களில் பெருந்தொகையான மக்கள் கலந்துகொண்டனர். ஆனால் குறைவான வாக்குகளே கிடைத்துள்ளது. இது நீதியான தேர்தல் இல்லை என்று சரத் பொன்சேகா தெரிவித்தார். இதன் மூலம் அரசியல் தெரியாதவர் என்பதை தெளிவாக காண்பிக்கின்றது என்றார்.

மக்கள் விடுதலை முன்னணி இம்முறை தவறான முடிவுகளை எடுத்துள்ளது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.




ஊர்வலம், கூட்டம் ஒரு வாரத்துக்கு தடை; ன்முறைகளை தடுக்க பொலிஸார்உஷார் நிலையில்




தேர்தலுக்குப் பின்னரான வன்முறைகளை தடுப்பதற்காக நாடளாவிய ரீதியில் பொலிஸார் உஷார் நிலையில் வைக்கப்பட்டு ள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ. எம். கருணாரத்ன தெரிவித்தார்.

தேர்தலுக்குப்பின் ஓரிரு சிறு அசம்பாவிதங்களே நடைபெற்றதாகவும், வன்முறைகளில் ஈடுபடுவோருக்கு எதிரான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தேர்தல் தினத்தில் இருந்து ஒருவாரத்துக்கு ஊர்வலங்கள் செல்வது, கூட்டங்கள் நடத்துவது, வரவேற்பு நிகழச்சிகள் நடத்துவது தேர்தல் சட்டத்தின் பிரகாரம் முற்றாகத் தடுக்கப்பட்டுள்ளது. நாடு பூராகவும் அமைதியான நிலை காணப் படுவதாக தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், நாட்டில் தொடர்ந்து அமைதி நிலையை பேண சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கோரினார்.

தேர்தலுக்குப் பிந்திய வன்முறைகளைத் தடுப்பது தொடர்பாக சகல பொலிஸாருக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. வன்முறைகள் தொடர்பாக இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை. தேர்தலுக்குப் பின்னர் இடம்பெற்ற ஓரிரு சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகள் முன்னெடு க்கப்படுவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.


அரசியல் அமைப்பில் திருத்தம்: நாட்டில் நல்லாட்சி:
எதிர்க்கட்சியினருக்கு அரசு அழைப்பு ; கால அவகாசம் வழங்குவதாக தெரிவிப்பு



அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வந்து நாட்டில் நல்லாட்சியொன்றை ஏற்படுத்துவதற்கு எதிர்க்கட்சியினர் அரசாங்கத்துக்குப் பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும். அதற்காக ஒருவார கால அவகாசம் வழங்கப்படுமென அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

எதிர்க்கட்சி இதற்கு ஒத்துழைப்பு வழங்காத பட்சத்தில் பாராளுமன்றத்தின் மூலம் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற்று எதிர்கால நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தயாராகவுள்ளதெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

தகவல் ஊடகத்துறை அமைச்சில் நேற்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு விளக்க மளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது,

வரலாற்றில் முன்னெப்போதுமில் லாதவாறு 60 வீதமான வாக்குகளைப் பெற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றுள்ளார். இது நன்றியுணர்வுள்ள நாட்டு மக்கள் அவருக்கு வழங்கிய கெளரவ மாகும். இவ்வெற்றியையடுத்து நாட்டை சமாதானத்திலும் அபிவிருத்தியிலும் முன்னெடுப்பதே எதிர்கால நோக்கமாகும். நல்லாட்சியை ஏற்படுத்தி நாட்டைக் கட்டியெ ழுப்புவதில் எதிர்க்கட்சி எம்முடன் ஒத்துழைக்க முடியும். அரசியல மைப்பில் திருத்தம் கொண்டு வருவதில் அவர்கள் எமக்கு உதவ முடியும்.

எவ்வாறெனினும் பாராளுமன்றத் தேர்தலில் எமக்கு நாட்டு மக்கள் மூன்றி லிரண்டு பெரும்பான் மையைப் பெற்றுத்தருவர் என்பது உறுதி. நாட்டின் நிர்வாகத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான அங்கீகாரத்தை நாம் மக்களிடம் கோருவோம். மக்கள் அதற்கு பூரண ஆதரவு தருவது உறுதி.

சகல மக்களுக்கும் பொருத்த மானதான நிர்வாகத்தை ஏற்படுத்துவதே ஜனாதிபதியின் நோக்கம். எதிர்வரும் நவம்பர் மாதம் வரையிலான அவரது முதலாவது பதவிக் காலத்தில் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார். அடுத்து வரும் ஆறு வருடங்களில் நாட்டில் நல்லாட்சியை அவர் ஏற்படுத்துவார்.

இதேவேளை, இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் யானையா - அன்னமா என்ற பிரச்சினையும் எதிர்க்கட்சியினருக்கு உள்ளது. சாதாரண மக்களின் தேவைகளைப் புரிந்து கொள்ளாமல் செயற்பட்டால் இன்னும் ஐந்து தேர்தல்களில் கூட ஐ. தே. க. வால் வெல்ல முடியாமற் போகும்.

இம்முறை தேர்தலில் சிறுபான்மை மக்கள் ஜனாதிபதிக்கு ஓரளவு ஆதரவு வழங்கியுள்ளனர். கடந்த காலங்களை நோக்குகையில் சிறுபான்மையினர் பொதுஜன ஐக்கிய முன்னணிக்கோ அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கோ பெருமளவு ஆதரவு வழங்கியதில்லை. அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கே ஆதரவு வழங்கினர். இம்முறை எம்முடனிருந்த தமிழ் மக்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒப்பந்தமே திசை திருப்பியது.

வாக்களிப்பை நோக்குகையில் புலிகளின் தமிஸழ எல்லைக்குள் வாழும். மக்களே எதிர்க்கட்சிக்கு வாக்களித்துள்ளமை தெரிகிறது.

அரசாங்கம் தற்போதுதான் தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கிணங்கவே டக்ளஸ் தேவானந்தா, கருணா, பிள்ளையான் போன்றவர்களை அரசாங்கம் நியமித்து செயற்படுகிறது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். (
மேலும் இங்கே தொடர்க...

28 ஜனவரி, 2010


மேலும் இங்கே தொடர்க...
வெற்றிபெற்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு இந்திய ஜனாதிபதி பிரதீபா பட்டேல் வாழ்த்து-

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு இந்திய ஜனாதிபதி பிரதீபா பட்டேல் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இரண்டாவது முறையாகவும் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள மகிந்த ராஜபக்சவுக்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாக கூறியுள்ள பிரதீபா பட்டேல், தனது வாழ்த்துச் செய்தியில் மகிந்த ராஜபக்சவின் ஆட்சியின்கீழ் இலங்கை மிக வேகமாக முன்னேற்றமடைந்து வருவதாக தெரிவித்துள்ளார். இந்திய மற்றும் இலங்கைக்கிடையில் வரலாற்றுரீதியாக மிக நெருங்கிய நட்பு காணப்படுவதாக கூறிய அவர், இலங்கையுடனான அனைத்து உறவுகளும் மேலும் வலுவடைய இந்தியா உறுதியாகவிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இருநாட்டு மக்களும் பயன்பெறும் வகையில் இலங்கையுடன் இணைந்து வளர்ச்சிப் பணிகளில் பணியாற்ற இந்தியா தயாராகவிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் கட்சி முகவராக செயற்பட்டவரின் தந்தையின் கடைக்கு தீவைப்பு-

மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் கடையொன்றுக்கு தீவைக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 2.00மணியளவில் இந்த தீவைப்பு இடம்பெற்றுள்ள நிலையில் பெறுமதியான பொருட்களுடன் கடை முற்றாக எரியுண்டுள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் கடையின் உரிமையாளர் ஏறாவூர் பொலீசில் முறைப்பாடு செய்துள்ளதாகவும், இதுபற்றி ஏறாவூர் பொலீசார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கடையின் உரிமையாளரின் மகன் தேர்தலன்று கட்சியொன்றின் முகவராக செயற்பட்ட நிலையில் ஏற்பட்ட விரோதமே இச்சம்பவத்திற்கு காரணமென்று அப்பகுதித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மட்டு. மாநகரமேயர் சிவகீதா பிரபாகரனின் இல்லம்மீது தாக்குதல்-

மட்டக்களப்பு மாநகரசபை மேயர் சிவகீதா பிரபாகரனின் உத்தியோகபூர்வ இல்லத்தின்மீது நேற்று கிரனேட் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இதனால் மேயரின் உத்தியோகபூர்வ இல்லத்தின் கதவு மற்றும் முன்பகுதி என்பன சேதமடைந்துள்ளன. இதேபோன்று மேயருக்கு சொந்தமான வீடு மற்றும் அவரின் கணவனின் வர்த்தகநிலையம் என்பனவும் நேற்று உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளன. இச்சம்பவங்கள் இடம்பெற்றபோது மேயர் சிவகீதாவோ அல்லது அவரின் குடும்பமோ அங்கு தங்கியிருக்கவில்லையென தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மட்டக்களப்பு மாநகரசபை மேயர் திருமதி சிவகீதா ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகாவை ஆதரித்து பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு அவசியமென சரத்பொன்சேகா கோரினால் வழங்கத் தயார்-அரசு-

ஜெனரல் சரத்பொன்சேகா தனக்குப் பாதுகாப்பு அவசியமெனக் கோரும்பட்சத்தில் அவருக்குத் தேவையான பாதுகாப்பு வழங்கத் தயாரென அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதனை இன்று பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் சரத்அமுனுகம செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு பாதுகாப்பு வழங்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து அவருக்குத் தேவையான பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். எனினும் தேர்தல் நிறைவடைந்ததையடுத்து உயர்நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டிருந்த உத்தரவு நிறைவடைந்துள்ளதாகவும் அவர் கூறிள்ளார். இந்நிலையில் ஜெனரல் சரத்பொன்சேகா தனக்கு பாதுகாப்பு அவசியமென கோரும் பட்சத்தில் அவருக்கு பாதுகாப்பு வழங்க அரசாங்கம் தயாராகவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கான இராணுவப் பாதுகாப்பு நீக்கம்-

ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு இதுவரை வழங்கப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு வழங்கப்பட்டிருந்த வாகனங்களை மீளளிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் இராணுவப்பேச்சாளர் உதயநாணயக்கார தெரிவித்துள்ளார். நேற்று புதன்கிழமை மாலைமுதல் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பு அகற்றப்பட்டது. இராணுவத்திலிருந்து விலகிச்சென்று அவருடன் இருந்த 09இராணுவ அதிகாரிகள் தற்போது இராணுவக்கட்டுப்பாட்டில் உள்ளனர். ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு வழங்கப்பட்டிருந்த கவசவாகனங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு வாகனங்களை மீளளிக்குமாறு கேட்டபோதும் இன்று நண்பகல்வரை அவை கையளிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருநாட்டு மீனவர் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண ஏற்பாடு-

கடற்தொழிலில் ஈடுபடுவோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தாம் இந்தியாவுடன் இணைந்து தீர்வு காணவுள்ளதாக கடற்தொழில் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா தெரிவித்துள்ளார். இந்திய மற்றும் இலங்கை கடலோர எல்லைப்பகுதிகளில் இருநாட்டு மீனவர்களுக்கிடையில் காணப்படும் பிரச்சினைகள் மற்றும் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும்போது ஏற்படும் பிரச்சினைகள் என்பவற்றுக்கு விரைவில் தீர்வு காணவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கான விசேட குழுவொன்றை நியமித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இந்தியக் கடல் எல்லையில் வைத்துக் கைதுசெய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை விடுதலை செய்வது தொடர்பாக இந்தியாவுடன் கலந்துரையாடி வருவதாகவும் பீலிக்ஸ் பெரேரா தெரிவித்துள்ளார். இதேவேளை கடந்த 2009ம் ஆண்டு நவம்பர் 09ம்திகதி மீன்பிடிப்பதற்கென மன்னார் சிறுதோப்பு பகுதியிலிருந்து புறப்பட்டுச் சென்ற நிலையில் இந்திய கடல் எல்லையில் வைத்து இந்தியக் கடலோரக் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டிருந்த இரு இலங்கை மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் இலங்கைக் கடற்படையினரிடம் நேற்று கையளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத் தேர்தலுக்கு இன்றுமுதலே தயாராவதாக அரசாங்கம் அறிவிப்பு-

இன்றுமுதலே அடுத்த பொதுத் தேர்தலுக்குத் தயாராவதாக ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலர் அமைச்சர் சுசில் பிறேம்ஜயந்த தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பில் அங்கம்வகிக்கும் கட்சிகளுடனான பேச்சுவார்த்தைகளை இன்றுமுதல் ஆரம்பிக்க எண்ணியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் அவற்றை நிவர்த்தி செய்துகொண்டு பொதுத் தேர்தலில் அமோக வெற்றியீட்ட எதிர்பார்த்துள்ளதாகவும், இதன்மூலம் நாட்டில் அரசியல் ஸ்திரநிலையை ஏற்படுத்தி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முன்வைத்துள்ள மகிந்த சிந்தனைத் திட்டத்தின் பிரகாரம் வளமானதும் சுபீட்சமானதுமான நாட்டை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

ஹோட்டலிலிருந்து சரத் வெளியேற்றம் : இந்தியாவிடம் உதவி கோரவும் முடிவு


ஜெனரல் சரத் பொன்சேகா நேற்றிரவு சினமன் லேக் வியூ ஹோட்டலிலிருந்து வெளியேறினார் என இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.

அவரை இராணுவத்தினர் பாதுகாப்பாக அவரது இல்லத்துக்கு அழைத்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதால், தனக்குப் பாதுகாப்பு அளிக்குமாறு இந்தியாவிடம் உதவி கேட்க சரத் பொன்சேகா முடிவு செய்துள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

தேர்தல் முடிவு வெளியான சிறிது நேரத்தில், சரத் பொன்சேகா தங்கியிருந்த ஹோட்டலை இராணுவம் முற்றுகையிட்டது.

இதனால், தன்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக சரத் பொன்சேகா அச்சம் தெரிவித்துள்ளார். மேலும் சிறிது காலத்துக்கு இலங்கையை விட்டு வெளியேறி வெளிநாட்டில் தங்கப் போவதாகவும் அவர் கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் இது குறித்துக் கூறுகையில்,

"சரத் பொன்சேகா, பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அண்டை நாடான இந்தியாவின் தூதரக அதிகாரிகளை சந்தித்து, பொன்சேகாவின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்குமாறு கோரிக்கை விடுக்கவிருக்கிறோம்" என்று தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...
சக்திமிக்க நாடாக இலங்கையை கட்டியெழுப்ப கிடைத்த வெற்றி

அமைச்சர் மைத்திரிபால



சக்திமிக்க நாடாக இலங்கை யைக் கட்டியெழுப்ப ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நாட்டு மக்கள் பெற்றுக் கொடுத்துள்ள மாபெரும் வெற்றியதென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மைத்திரி பால சிறிசேன தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஈட்டியுள்ள வெற்றி தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் சிறிசேன; சரத் பொன்சேகா இத்தேர்தலில் வெற்றிபெற்றிருந்தால் இந்நாட்டில் இராணுவ ஆட்சியொன்றே அமைந்திருக்கும்.

அதனை நாட்டு மக்கள் ஒன்றிணைந்து தடுத்துள்ளார் கள். இந்த வெற்றியானது ஜன நாயகத்துக்குக் கிடைத்த வெற்றி என்பதுடன் ஜனாதிபதிக்கு மட்டு மன்றி நாட்டுக்கும் நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் கிடைத்த வெற்றி எனக் கூறுவதே பொருத்தமாகும்.

நாட்டு மக்கள் நன்றி மறவாத வர்கள். தாய் நாட்டைப் பயங்கர வாதத்திலிருந்து பாதுகாத்து சகலரு க்கும் சுதந்திரம் பெற்றுக்கொடுத்த மைக் காக நாட் டுத் தலைவனான ஜனாதிபதிக்கு நன்றிக் கடனாக இம்மாபெரும் வெற்றி யைப் பெற்றுக்கொடுத்துள்ளார்கள் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...
பட்டாசு கொளுத்தி மக்கள் ஆரவாரமாக கொண்டாட்டம்

இலங்கையின் ஆறாவது ஜனாதிபதியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதிகப்படியான வாக்குகளால் அமோக வெற்றிபெற்றதையடுத்து நாடெங்கிலும் மக்கள் பட்டாசு கொளுத்தி, தேசியக் கொடிகளை ஏந்திய வண்ணம் மகிழ்ச்சி ஆரவாரங்களில் நேற்று ஈடுபட்டனர்.

இலங்கையின் ஆறாவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான ஜனாதிபதித் தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இத்தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதிகப்படியான விருப்பு வாக்குகளைப் பெற்று அமோக வெற்றிபெற்றுள்ளார்.

இதனையிட்டு நாடெங்கிலும் மக்கள் பட்டாசு கொளுத்தி, இனிப்புக்கள் வழங்கி தேசிய கொடிகளை ஏந்தி அசைத்த வண்ணம் மகிழ்ச்சி ஆரவாரங்களில் ஈடுபட்டனர். மக்கள் சந்திக்கு சந்தி கூடி இருந்து றபான் அடித்து பாற்சோறு பரிமாறி மகிழ்ந்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

பொன்சேகா, தேர்தல் ஆணையாளரை வீட்டு காவலில் வைத்துள்ளதாக கூறும் செய்தி பொய்யானது

அனுதாபம் தேட முயற்சிக்கிறார் பொன்சேகா - அமைச்சர் சமரசிங்க



எதிர்க்கட்சி ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவையும், தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்கவையும் வீட்டுக் காவலில் வைத்திருப்பதாக கூறப்படும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையெனவும் அரசாங்கம் அவற்றை முழுமையாக மறுப்பதாகவும் மனித உரிமைகள் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த சமரசிங்க நேற்றுத் தெரிவித்தார்.

தனது தோல்வியை தாங்கிக் கொள்ள இயலாத பொன்சேகா சர்வதேச ஊடகங்கள் வாயிலாக பொய்ப் பிரசாரங்களைச் செய்து அனுதாபம் தேட முயல்கின்றார். இது போன்ற இழிவான அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் மூலம் நாட்டின் நற்பெயருக்கு கலங்கத்தையும் அபகீர்த்தியையும் ஏற்படுத்த வேண்டாமெனவும் அமைச்சர் சமரசிங்க பொன்சேக்காவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பொன்சேகா வீட்டுக் காவலில் வைக்கப்படவில்லை. அவர் நினைத்த நேரம் அந்த ஹோட்டலை விட்டு வெளியே செல்லலாம். ஒரு ஜனாதிபதி வேட்பாளரென்ற வகையில் பாதுகாப்பு வழங்குவதற்காக அவ்வீதியில் பாதுகாப்பு படையினர் சேவையிலீடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர் அதனை தவறாக கருத்தில் கொண்டுள்ளதுடன் ஊடகங்களில் போலி பிரசாரங்களை முன்னெடுத்து வருகிறார்.

மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று மாலை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையி லேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட் டார்.

இச்செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த், மைத்திரிபால சிறிசேன, ஜீ. எல். பீரிஸ், பாட்டளி சம்பிக்க ரணவக்க, அனுர பிரியதர்ஷன யாப்பா, ரிஷாட் பதியுதீன், விமல் வீரவன்ச எம்.பி, சட்டத்தரணி காலிங்க இத்ததிஸ்ஸ ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜ பக்ஷ அமோக வெற்றியீட்டியிருப்பதனை புரிந்து கொண்ட எதிர்க்கட்சியைச் சேர்ந்த சதிகார கும்பல், மேற்கூறியது போன்ற கட்டுக்கதைகளை குறுந்தகவல்கள், மின்னஞ்சல்கள், இணையத் தளங்களினூடாக பரப்பி வருகின்றது.

அது மட்டுமன்றி எதிரணி வேட்பாளரும் கட்சித் தலைவர்க ளும் சர்வதேச ஊடகங்கள் வாயிலாக பொய்யான பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். பொன்சேகாவை யாரும் வீட்டுக் காவலில் வைக்கவில்லை. அவர் இருப்பது வீடு அல்ல அது பல உள்நாட்டு வெளிநாட்டவர்கள் வந்து போகும் பிரபலமான ஹோட்டலாகும் என்றும் அமைச்சர் சமரசிங்க தெரிவித்தார்.

எமக்கு கிடைத்த தகவலடிப்படையில் 26ம் திகதி மாலை 4.30 மணியளவில் பொன்சேகாவும் அவருடனிருந்த கட்சித் தலைவர்களும் மற்றும் ஆதரவாளர்களும் குறித்த ஹோட்டலிருந்த இரண்டு மாடிகளிலிருந்த 70 அறைகளை வாடகைக்கு அமர்த்தி தங்கியிருந்துள்ளனர். இவரை அரசாங்கம் அங்கே அழைத்து செல்லவில்லை. தானாக விரும்பியே அவர் அங்கு சென்றுள்ளார்.

குறித்த ஹோட்டல் அமைந்திருக்கும் பகுதி அதியுயர் பாதுகாப்பு வலையம் என்பது சகலரும் அறிந்ததே. ஹோட்டலுக்கு முன்பாகவே விமான படைத் தளம் அமைந்திருப்பதனால் எப்போதுமே அப்பகுதியில் படையினர் குவிக்கப்பட்டி ருப்பது வழமை.

அதேவேளை, இராணுவத்திலிருந்து தப்பி வந்த ஒன்பது பேர் ஆயுதங்களுடன் ஹோட்டலுக்குள் இருந்துள்ளனர். இவர்கள் குறித்த விபரங்கள் கிடைத்ததும் மேற்படி ஒன்பது பேரும் ஹோட்டலுக்கு வெளியே வரவழைக்கப்பட்டே கைது செய்யப்பட்டனர்.

இதன் காரணமாகவும் வழமைக்கு மாறாக பாதுகாப்புப் படை யினர் இப்பகுதியில் சேவைக்கு அமர்த் தப்பட்டுள்ளனர். இவற்றை காரணமாக காட்டி சர்வதேச நாடுகளிடம் அனுதாபம் தேட முயற்சிக்கிறார் பொன்சேகா எனவும் அமைச்சர் சமரசிங்க தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

19 இலட்சம் மேலதிக வாக்குகளால் ஜனாதிபதி அமோக வெற்றி


இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஆறாவது ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்காக நடைபெற்ற தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமோக வெற்றியீட்டியுள்ளார். சுமார் 20 இலட்சம் மேலதிக வாக்குகளைப் பெற்று ஜனாதிபதி ராஜபக்ஷ மீண்டும் ஜனாதிபதியாகத் தெரிவாகியிருக்கிறார். இதன் மூலம் நாட்டில் அபிவிருத்தியை முன்னெடுப்பதற்காக மக்கள் அவருக்கு ஆணை வழங்கியுள்ளனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 22 மாவட்டங்களுக்குள் 17 மாவட்டங்களில் 60 இலட்சத்து 15 ஆயிரத்து 934 வாக்குகளைப் பெற்று 57.88 வீதத்தில் வெற்றியீட்டியிருக் கின்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜே.வி.பி., .தே.. கூட்டணியின் வேட்பாளரான சரத் பொன்சேகா 41 இலட்சத்து 73 ஆயிரத்து 185 வாக்குகளைப் பெற்று 40.15 விகிதத்தைப் பெற்றுள்ளார். ஐந்து மாவட்டங்களில் மாத்திரமே பொன்சேகா வெற்றி பெற்றிருக்கிறார். வடக்கு, கிழக்கில் இவருக்குக் கூடுதல் வாக்குக் கிடைத்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா உட்பட 22 பேர் போட்டியிட்டனர். இலங்கை தேர்தல் வரலாற்றில் இவ்வளவுபேர் போட்டியிட்டது இதுவே முதற்தடவையாகும்.

நாட்டின் சனத்தொகையில் ஒரு கோடியே 40 இலட்சத்து 88 ஆயிரத்து 50 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். நாடு முழுவதும் 11098 வாக்களிப்பு நிலையங்களில் வாக்குப் பதிவு நடைபெற்றது.

நாடு முழுவதும் பெரும் பரபரப்புக்கு மத்தியில் மக்கள் வாக்களித்ததைக் காணக்கூடியதாக இருந்தது. வாக்கெடுப்பு நிறைவின் பின்னர் மாலையில் பதற்றம் ஏற்படுவதைத் தவிர்க்க ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படலாமென்று எதிர்பார்க்கப்பட்டபோதிலும், நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்த தையடுத்து எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை. ஆங்காங்கே சிறு சிறு சம்பவங்கள் இடம்பெற்றபோதிலும் பாரிய வன்முறைகள் எதுவும் ஏற்படவில்லை.

முதலாவதாகத் தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் இரவு 10.30 மணியிலிருந்து வெளியிடப்பட்டன.

முதன்முதலில் இரத்தினபுரி மாவட்டத்தின் தபால் மூல வாக்களிப்பு முடிவு வெளியானது. ஜே.வி.பி., .தே.. கூட்டணிக் கட்சியின் வேட்பாளராகத் தமிழ், முஸ்லிம் கட்சிகளின் பூரண ஆதரவைப் பெற்றிருந்தும் முன்னாள் இராணுவத் தளபதி படுதோல்வியைத் தழுவினார்.

ஜே.வி.பி.யினதும், .தே..வினதும் கோட்டைகளாக விளங்கிய பல முக்கிய பிரதேசங்களிலும் ஜனாதிபதி மஹிந்த அமோக வெற்றியீட்டினார். ஜே.வி. பி.யின் கோட்டையான திஸ்ஸமஹராம, .தே..வின் கோட்டையான மீரிகம ஆகிய பிரதேசங்களையும் அவர்களின் கூட்டணி கோட்டை விட்டுவிட்டது.

தெவிநுவர தொகுதியில் 19, 209 மேலதிக வாக்குகளைப் பெற்றும், பலப்பிட்டிய, அம்பலாங்கொடை, மொனறாகலை, கலவான, புளத்சிங்கள, கெகிராவ, அநுராதபுரம், மேற்கு, மத்துகம, மூதூர், தெனியாய, எகலியகொட உள்ளிட்ட தொகுதிகளிலும் ஜனாதிபதி கூடுதல் மேலதிக வாக்குகளால் வெற்றியீட்டியதுடன், திஸ்ஸமஹராமவில் 34055 மேலதிக வாக்குகளால் வெற்றியீட்டியுள்ளார்.

மேலும் அகலவத்தையில் 23600 மேலதிக வாக்குகளாலும், கம்புறுபிட்டியவில் 45649 மேலதிக வாக்குகளாலும், கரந்தெனியவில் 24000 மேலதிக வாக்குகளாலும் வெற்றிபெற்றதுடன், சில இடங்களில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகளால் வெற்றியீட்டினார்.

அதேநேரம் 527 போன்று மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வத்தளை தொகுதியில் ஜனாதிபதி வெற்றியீட்டினார். குறிப்பாக மட்டக்களப்பு, அம்பாறை போன்ற பகுதிகளிலும் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தின் நுவரெலியா மாவட்டத்தின் மஸ்கெலியா - நுவரெலியா தொகுதியிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றிபெறவில்லை.

எனினும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மங்கள சமரவீர, சஜித் பிரேமதாச, ரவி கருணாநாயக்க ஆகியோரின் தொகுதிகளையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கைப்பற்றியது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெரும்பாலான தொகுதிகளில் 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டினார்.

கண்டி தொகுதியில் 54.16 வீதமும், கொழும்பில் 52.93 வீதமும், களுத்துறையில் 63.06 வீதமும், குருநாகலையில் 63.08 வீதமும், அம்பாந்தோட்டையில் 67 வீதமும், இரத் தினபுரியில் 64 வீதமும், பொலன்னறுவையில் 65 வீதமும், மாத்தறை தொகுதியில் 60 வீதமும் பெற்று பெருவெற்றியீட்டினார்.
மேலும் இங்கே தொடர்க...

27 ஜனவரி, 2010

நிறைவேற்று அதிகாரமுடைய ஆறாவது ஜனாதிபதியாக மகிந்தா மீண்டும்-


நிறைவேற்று அதிகாரமுடைய 06வது ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்காக நடந்துமுடிந்த தேர்தலில் மகிந்த ராஜபக்ச அவர்கள் 60,15,934 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இந்தவகையில் அவர் இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். மக்களின் வாக்குகளின் அடிப்படையில் 57.88வீதம் வாக்குகள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத்பொன்சேகா 41,73,185 வாக்குகளை பெற்றுள்ளார். இந்தவகையில் அவருக்கு 40.15சதவீத வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் நோக்கும்போது இந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் அமோக வெற்றியினை ஈட்டியுள்ளதுடன், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது ஆட்சியும் ஆரம்பமாகியுள்ளது. இம்முறை தேர்தலில் மொத்தமாக பதிவுசெய்யப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 14,088,500 என்பதுடன் இவற்றுள் 10,495,451 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. இதில் 10,3,93,613 வாக்குகள் செல்லுபடியான வாக்குகள் என்பதுடன் நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 10,1838ஆகும். மகிந்த ராஜபக்ச அவர்கள் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகாவை விட 18,42,749 மேலதிக வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனது வெற்றியானது நாட்டு மக்களின் வெற்றி-ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச-


6வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியைத் தெரியும் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வேட்பாளர் என்றரீதியில் தாம் அடைந்த வெற்றி, மக்களின் வெற்றியாகக் கருதப்பட வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். மக்களினால் தமக்கு வழங்கப்பட்ட இந்த ஆணையை முழுமையாக ஏற்றுக்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார். மாபெரும் வெற்றியாக இதனை கருதவேண்டும் எனவும், மக்களின் தெரிவு இந்த வாக்கெடுப்பில் வெளிப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனநாயக முறைமை தொடர்பில் மக்கள் நன்கு அறிந்துள்ளதாகவும், அதன் வெளிப்பாடே இத்தேர்தல் வெற்றியென்றும் அவர் தெரிவித்துள்ளார். நாட்டை கட்டியெழுப்புவதற்கு அனைவரும் அணிதிரண்டு ஒன்றிணைய வேண்டியகாலம் மலர்ந்துள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார். தமக்கு வாக்களித்தோருக்கும், வாக்காளிக்காதோருக்கும் தாமே ஜனாதிபதியெனவும், அனைத்து மக்களும் சட்டத்தின்முன் சமமானவர்களே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தெம்பிலிகல குண்டுத் தாக்குதில் பௌத்த துறவியும் மற்றொருவரும் உயிரிழப்பு-

கம்பளை தெம்பிலிகல பிரதேசத்தில் இன்று 27ம் திகதி அதிகாலையில் இடம்பெற்ற கைக்குண்டு தாக்குதலில் பிக்கு ஒருவர் உள்ளிட்ட 02பேர் உயிரிழந்துள்ளனர். கம்பளை பொலிஸ்பிரிவுக்கு உட்பட்ட தெம்பிலிகலவிலுள்ள பௌத்த விஹாரையின்மீது நடத்தப்பட்ட கைக்குண்டுத்தாக்குதலில் படுகாயமடைந்த பௌத்தபிக்கு ஒருவரும் மேலுமொருவரும் உடனடியாக கம்பளை வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டு அவசரசிகிச்சை அளிக்கப்பட்டபோதும் அவ்விருவரும் உயிரிழந்ததாக கம்பளை பொலிஸார் தெரித்துள்ளனர். இந்தத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைதுசெய்யும் நடவடிக்கைகளில் கம்பளை பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கம்பளை, நாவலப்பிட்டி ஆகிய பிரதேசங்களில் அசாதாரண நிலைமைகளைக் கட்டுப்படுத்தும் வகையில் இன்றுநண்பகல் 12 மணியளவில் கம்பளை மற்றும் நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவுகளில் விசேட பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தேர்தல்கள் ஆணையாளருக்கும், பொலீஸ் மாஅதிபருக்கும் பொது வேட்பாளர் கடிதம் அனுப்பிவைப்பு-


தனது உயிரின் பாதுகாப்புக்கும், சுதந்திரமான நடமாட்டத்துக்குமான பாதுகாப்பு சூழ்நிலையை ஏற்படுத்த நடவடிக்கையெடுக்குமாறு பொலீஸ் மாஅதிபருக்கும் பாதுகாப்பு தரப்பினருக்கும் உத்தரவிடுமாறு ஜெனரல் சரத்பொன்சேகா தேர்தல்கள் ஆணையாளரைக் கடிதமொன்றின் மூலம் கேட்டுள்ளார். தான் தற்போது எதிர்நோக்கியுள்ள நிலைமைகளை விளக்கியே அவர் தேர்தல் ஆணையாளருக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. தான் தங்கியிருக்கும் விடுதியைச் சூழ பெருமளவு படையினரும், பொலீஸ் அதிகாரிகளும் நின்றுகொண்டு அங்கு சென்றுவரும் அனைவரையும் சோதனையிடுவதுடன், தாம் வெளியில் செல்ல முடியாத விதத்தில் செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தன்னைக் கைதுசெய்ய அரசாங்கம் பிரயத்தனம் செய்வதாகவும், தான் தங்கியிருக்கும் விடுதிக்குள் படைவீரர்கள் உள்நுழைய முயல்வதாகவும் தெரிவித்துள்ள அவர், தனக்கு ஆதரவு வழங்கிய பலருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையாளருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் நடைபெற்ற நேற்றைய தினத்தில் தன்னைக் கைதுசெய்ய அரசு உத்தரவிட்டுள்ளதாக கிடைத்த தகவலுக்கமைய தான் கொழும்பிலுள்ள குறித்த தனியார் விடுதிக்கு சென்று தங்கியிருந்ததாகவும் அதன்பின் தாம் வெளியில்செல்ல முடியாதவிதத்தில் நேற்றிரவு 11மணியளவில் படைவீரர்கள் சுற்றிவளைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பு சினமன் லேக் வியூ ஹோட்டலில் அவர் தங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...