26 அக்டோபர், 2009

இந்தோனெஷியாவில் இலங்கையர்களின் உண்ணாவிரதம் முடிவு

வடக்கின் நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிகளுக்கு இந்திய நிபுணர் குழு ஒத்துழைப்பு










வடபகுதியில் நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிகளைத் துரிதப்படுத்த இந்திய அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் புதைக்கப்பட்டுள்ள நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளை துரிதப்படுத்த இந்திய நிபுணர்கள் குழுவினை அனுப்பி வைக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வவுனியா இடம்பெயர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை விரைவில் மீள் குடியேற்றும் நோக்கில் இந்தியா இந்த உதவிகளை வழங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழக அரசியல் தலைவர்களுக்கும், காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கும் இடையில் புதுடெல்லியில் நடைபெற்ற சந்திப்பினைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது

படகு மூலம் சட்ட விரோதமாக செல்ல முற்பட்டு, தற்போது கரையோர பாதுகாப்பு படையினரால் இந்தோனேஷியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் தமது உண்ணாவிரதத்தை கைவிட்டுள்ளனர்.

78 இலங்கையர்கள் அடங்கிய அவுஸ்திரேலிய கப்பல் இன்று பிற்பகலில் இந்தோனேஷியாவின் வடக்கு பகுதியை சென்றடையுமென சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இவர்கள் அனைவரும் சிறந்த முறையில் பராமரிக்கப்படுவர் என அவுஸ்திரேலிய உள்நாட்டலுவல்கள் அமைச்சர் பிரிண்டன் கோனர் தெரிவித்தார்
மேலும் இங்கே தொடர்க...
மாவோயிஸ்ட்களுடன் புலிகள் இணைவு : இந்திய மத்திய புலனாய்வுப் பிரிவு அறிக்கை


மத்திய புலனாய்வு பிரிவின் அறிக்கையின்படி, இலங்கையின் தமிழீழ விடுதலைப்புலிகளும், மாவோயிஸ்ட் தீவிரவாதிகளும், தென் மற்றும், மத்திய இந்திய காடுகளில், பயிற்சி மற்றும், கூட்டங்களை நடத்தி வருகின்றனர். அத்துடன் முகாம்களையும் நடத்தி வருகின்றனர் எனத் தெரிய வருகின்றது.

இந்தத் தகவலை இந்திய எக்ஸ்பிரஸ் இணையத்தளம் வெளியிட்டுள்ளது.

அத்துடன் இந்தியாவின் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் வெளிநாடு ஒன்றில் இருந்து ஆயுதங்களைப் பெற்றுள்ளமை தெரிய வந்துள்ளதாக இந்திய உள்துறை அமைச்சர், பி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மத்திய புலனாய்வு பிரிவு, தமிழீழ விடுதலைப்புலிகள், ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, சண்டிஸ்கார் மற்றும் ஒரிசா, ஆகிய இடங்களில் ஊடுருவியுள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

அண்மையில், 12 பேரைக்கொண்ட, தமிழீழ விடுதலைப்புலிகளின் குழு, ஒன்று மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுடன் இணைந்துள்ளதாகவும் மத்திய புலனாய்வுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

மூன்று பிரிவுகளாக பிரிந்த இந்தக்குழுக்கள், ஆந்திர பிரதேசம் மற்றும் கேரளாவின் ஊடாக இந்தியாவுக்குள் ஊடுருவியுள்ளன. இந்தக்குழுக்களில் ஒன்று, விழிநகரம் ஏஜென்ஸி பிரதேசத்தில் பாதுகாப்பாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை அடுத்து, இந்தியாவின் கரையோரப் பிரதேசங்களின் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அதேவேளை, மாவோயிஸ்ட் வாதிகளின் மக்கள் விடுதலை போராளி இயக்கம், தமிழீழ விடுதலைப்புலிகளின், உதவியைப் பெற்றுக்கொள்வதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆய்வாளர்களின் கருத்துப்படி, தமிழீழ விடுதலைப்புலிகள் இந்த திட்டத்தின்படி இரண்டு அனுகூலங்களை பெற்றுக்கொள்கின்றனர்.

இந்திய படைகளுக்கு எதிராக மாவோ தீவிரவாதிகளை முனைப்புப்படுத்தல் மற்றும், இலங்கைப் படையினரிடம் சந்தித்த தோல்வியைச் சரிசெய்து கொள்வதற்காக, தென்னிந்தியாவில் புதிய தளங்களை அமைப்பது என்பனவே அந்த அனுகூலங்களாகும் என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்
மேலும் இங்கே தொடர்க...
மட்டக்களப்பில் விதாதா வள நிலையங்களை திறக்க அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண உத்தரவு
ராஜரட்னத்துக்கு இலங்கையில் ரூ.525 கோடி அளவில் சொத்து


மிகப் பெரிய பங்கு மோசடியில் ஈடுபட்டவருக்கு இலங்கையில் ரூ.525 கோடி அளவுக்கு சொத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையின் மத்திய வங்கி கவர்னர் அஜித் என்.கெப்ரால் இதைத் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளுடன் தொடர்புள்ளதாகக் கருதப்படும் தமிழர் மறுசீரமைப்பு அமைப்புடன் ராஜரத்தினத்துக்கு உள்ள தொடர்பு குறித்தும் விசாரணை நடத்தி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்

மட்டக்களப்பு மாவட்டத்தில் விதாதா வள நிலையங்கள் இதுவரை திறக்கப்படாத பிரதேச செயலகப் பிரிவுகளில் அவற்றை உடனடியாக திறப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண அதிகாரிகளைப் பணித்துள்ளார்.

நேற்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த அமைச்சர் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் திணைக்கள தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டமொன்றில் தனது அமைச்சின் மாவட்ட செயல்பாடுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து ஆராய்ந்த போது இந்த பணிப்புரையை விடுத்தார்.

ஏற்கனவே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் சில பிரதேசங்கள் இருந்தமையினால் விதாதா வள நிலையங்களின் செயற்பாடுகளை ஆரம்பிக்க முடியாத நிலை அப் பிரதேஙசங்களில் இருந்தமை குறித்து அதிகாரிகளினால் சுட்டிக்காட்டப்பட்டது.

இதனையடுத்து கொக்கட்டிச்சோலை, வாகரை, வெல்லாவெளி, கிரான், செங்கலடி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் இவற்றை ஆரம்பிப்பதற்கான பணிப்புரை அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்டதோடு அதற்கான நியமனங்களைச் செய்வதற்கான உத்தரவும் அமைச்சரினால் பிறப்பிக்கப்பட்டது.

இதன் பின்னர் அமைச்சர் ஓட்டமாவடி பிரதேசத்திற்கு விஜயம் செய்து விதாதா வள நிலையம் ஒன்றுக்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார்.இந்நிகழ்வுகளில் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் எஸ்.எச்.அமீர் அலியும் கலந்துகொண்டார்
மேலும் இங்கே தொடர்க...
மா.சபைகளுக்கும் அதிகார பகிர்வு தேவை : ஜனாதிபதியிடம் வலியுறுத்து

கட்சி பிரதிநிதிகள் குழு உத்தேச அதிகாரப் பகிர்வின் போது மாகாண சபைகளுக்கும் கூடுமானவரை அதிகாரப் பகிர்வும் பரவலாக்கமும் வழங்கப்பட வேண்டும்.

இதனை ஜனாதிபதியிடம் ஏற்கனவே கையளித்துள்ள தொகுப்பில் சிபாரிசு செய்துள்ளதாக சர்வ கட்சி பிரதிநிதிகள் குழுத்தலைவரும் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண கூறுகின்றார்.

நேற்று மட்டக்களப்பு நகரில் இடதுசாரி பிரமுகர் என்.சுந்தரேசன் தலைமையில் நடைபெற்ற இடதுசாரி பிரமுகர்களுடனான சந்திப்பின் போது உரையாற்றிய அவர், தொடர்ந்தும் அங்கு கூறுகையில்,

"சர்வ கட்சி பிரதிநிதிகள் குழுவின் சிபாரிசு அமுலுக்கு வரும் வரை அரசியல் யாப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என அரசாங்கம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் அரசியல் யாப்பில் 'சமஷ்டி' என்றோ 'ஐக்கியம்' என்றோ அதிகாரப் பகிர்வு வரையறை செய்யப்படவில்லை.அந்த வகையில் தான் அதிகாரப் பகிர்வை எமது குழு பரிந்துரை செய்தாலும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, மக்கள் ஐக்கிய முன்னணி, ஹெல உறுமய போன்ற கட்சிகள் ஐக்கிய இலங்கை என்ற வரையறையை வலியுறுத்தின. அந்த வரையறைக்குள் தான் மாகாண சபைகளுக்கு அதிகாரப் பரவலாக்கமும் பகிர்வும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

தற்போது மத்திய அரசிடம் 103 அதிகாரங்களும் மாகாண சபையிடம் 93 அதிகாரங்களும் உள்ள அதேவேளை 14 அதிகாரங்கள் இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில இருந்தாலும் மாகாண சபை மத்திய அரசின் அனுமதி பெற்றே அதனை அமுல்படுத்த வேண்டியுள்ளது. எமது யோசனையின் படி மத்திய அரசின் அனுமதியின்றி மாகாண சபை தனக்குரிய அதிகாரங்களைப் பயன்படுத்த முடியும். மாகாண சபைக்குரிய அதிகாரங்களை மத்திய அரசு மீளப் பெற முடியாது.

காணி,பொலிஸ் அதிகாரங்களைப் பொறுத்த வரை இந்தியாவிலுள்ள முறையை மையப்படுத்தினாலும் எமது நாட்டுக்குப் பொருத்தமான வகையிலேயே அது தொடர்பான சிபாரிசு முன் வைக்கப்படும்.

மாகாண சபைகளுக்கு மட்டுமல்ல உள்ளூராட்சி சபைகளுக்கும் அதிகாரப் பகிர்வு வழங்கப்பட்டு அவற்றை பலப்படுத்துவதற்காக 53 அதிகாரங்கள் சிபாரிசு செய்யப்பட்டுள்ளன. அதனை மாகாண சபை கூட பறிக்க முடியாது"என்றும் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...
அமெரிக்காவின் குற்றசாட்டுகளை விசாரித்து பொய்யென நிரூபிப்போம்- அரசாங்கம் அறிவிப்பு
இலங்கையில் போர்க்குற்றம் இடம்பெற்றிருப்பதாக குறிப்பிட்டு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உள்நாட்டில் ஆய்வுகள் மற்றும் விசாரணைகளை நடத்தி அவற்றை பொய்யென நிரூபிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று மனித உரிமைகள் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். காஸாவில் போன்று இலங்கையில் சுயாதீன விசாரணை ஒன்று நடத்தப்படவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவை கோரியுள்ளமையை வன்மையாக கண்டிக்கின்றோம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இலங்கை தொடர்பில் காங்கிரஸுக்கு சமர்ப்பித்துள்ள அறிக்கை மற்றும் காஸாவில் போன்று இலங்கையில் சுயாதீன விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என்று ஜெனிவா மனித உரிமை பேரவை கோரியுள்ளமை குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இலங்கையில் 25 வருடகால யுத்தம் முடிவுறும் தறுவாயில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றச் செயல்கள் குறித்து விசாரித்து அவற்றுக்கு பொறுப்பானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளதுடன் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் தயாரிக்கப்படட்டுள்ள அறிக்கையும் காங்கிரஸிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும் இலங்கையில் யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் யுத்தக் குற்றச் செயல்கள் புரியப்பட்டனவா என்பதைக் கண்டறிவதற்கு, காஸாவில் இடம்பெற்ற யுத்தம் குறித்து நடத்தப்பட்ட விசாரணை போன்றதொரு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த கோரிக்கைகள் குறித்து அமைச்சர் சமரசிங்க தொடர்ந்து கருத்து வெளியிடுகையில் கூறியதாவது

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் தயாரிக்கப்படட்டுள்ள அறிக்கை யில் உள்ளடக்கப்பட்டுள்ள தகவல்கள் நூறு வீதம் உறுதிபடுத்தப்பட்டவை அல்ல என்பதை திணைக்களமே ஏற்றுக்கொண்டுள்ளது. அந்த அறிக்கை முழுமையான சட்டத்தன்மையுடன் தயாரிக்கப்படவில்லை என்பது தெளிவாகின்றது. எனினும் இந்த அறிக்கைக்கு பதிலளிக்கவேண்டியதும் அந்த குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்று நிரூபிப்பதும் எமது பொறுப்பாகும். காரணம் இது வெறுமனே ஊடக அறிக்கையல்ல. மாறாக உலகின் மிகவும் வல்லமை பொருந்திய செல்வந்த நாடாக விளங்கும் அமெரிக்காவின் இராஜாங்க திணைக்களத்தினால் தாயரிக்கப்பட்டு காங்கிரஸுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையாகும்.

அத்துடன் காங்கிரஸிலிருந்து இந்த அறிக்கை செனட் சபைக்கு செல்லும் சாத்தியமும் இருக்கினற்து. எனவே இந்த அறிக்கை தொடர்பில் நாங்கள் அலட்சியத்துடன் இருக்க முடியாது. இதனை பொய்யென நாங்கள் நிரூபிக்கவேண்டும். இராஜாங்க திணைக்களத்தின் அறிக்கையில் காணப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யானவை என்பதனை நிரூபிக்கவேண்டும். ஏற்கனவே செனல் 4 விவகாரம் பொய்யானது என்று ஆதாரங்களுடனேயே நிரூபித்தோம்.

எமது இராணுவத்தினர் எவ்வாறு ஒழுக்கத்துடன் செயற்பட்டனர் என்பது எங்களுக்கு தெரியும். எனவே நாங்கள் இந்த அறிக்கை தொடர்பில் நன்றாக ஆராய்ந்து விசாரணை நடத்தி குற்றச்சாட்டுக்கள் அனைத்து பொய்யானவை என்று அமெரிக்காவுக்கு நிரூபிக்கவேண்டும். இது எமது பொறுப்பாகும். ஏற்கனவே இந்த நடைமுறையை செனல் 4 விவகாரத்தில் கையாண்டோம்.

இதேவேளை காஸாவில் போன்று இலங்கையில் விசாரணை நடத்தப்படவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் பேச்சாளர் தெரிவித்துள்ளதை இலங்கை அரசாங்கம் வன்மையாக கண்டிக்கின்றது. இவ்வாறு கோரிக்கை ஒன்றை விடுப்பதற்கு ஐ.நா. மனித உரிமை பேரவை பேச்சாளருக்கு எந்த உரிமையும் இல்லை.

இலங்கை விவகாரம் தொடர்பில் ஜெனிவாவில் அமைந்துள்ள ஐ.நா. மனித உரிமை பேரவையில் விசேட அமர்வு ஒன்று இவ்வருடம் நடத்தப்பட்டது. அதில் மேலதிக வாக்குகளை பெற்று நாங்கள் வெற்றியடைந்தோம். அதன்போது கருத்து வெளியிட்டு ஜெனிவாவுக்கான இந்திய வதிவிட பிரதிநிதி விசேட அமர்வு நடத்தப்பட்டமை குறித்து திருப்தியிவெளியிடும் மனித உரிமை பேரவை அமர்வின் முடிவை மதிக்கவேண்டும் என்று கூறியிருந்தார். அவரின் கூற்றை இங்கு நினைவூட்டுகின்றோம்.

அரசாங்கங்களுக்கு இடையில் நடத்தப்பட்ட இந்த அமர்வில் இலங்கை அரசாங்கம் வெற்றிபெற்றது. எனவே எமது வெற்றியை ஐ.நா. மனித உரிமை பேரவை மதிக்கவேண்டும். விசேட அமர்வில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை மீறும் வகையில் கூற்றுக்களை வெளியிடக்கூடாது.
மேலும் இங்கே தொடர்க...
முல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்தில் இரண்டாம் தொகுதியாக மேலும் ஆயிரம் பேரை மீள்குடியமர்த்த நடவடிக்கை




முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பிரதேசத்திற்கு மீள் குடியேற்றத்திற்காக மேலும் ஆயிரம் பேர் திங்களன்று அனுப்பி வைக்கப்படவுள்ளதாக முல்லைத்தீவு அரசாங்க அதிபர் திருமதி எமில்டா தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

“கடந்த 22 ஆம் திகதி 297 குடும்பங்களைச் சேர்ந்த 1027 பேர் துணுக்காய் பகுதிக்கு மீள்குடியேற்றத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டவர்களில் 75 வீதமானோர் தமது காணிகளைத் துப்பரவு செய்து அங்கு மீள்குடியேறியுள்ளார்கள். ஏனையோரும் தமது காணிகளை வெளியாக்கி வீடுகளை அமைப்பதில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களும் விரைவில் மீளக்குடியமர்ந்துவிடுவார்கள்.

காணிகளைத் துப்பரவு செய்வதற்கான கோடரி கத்தி மண்வெட்டி உள்ளிட்ட உபகரணங்களும் தற்காலிக கொட்டில்களை அமைப்பதற்கான மரம் தடிகள் கூரைவிரிப்புகள் கூரைத்தகடுகள் போன்றவை மீள்குடியேறுபவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் அனிஞ்சியன்குளம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை பாலிநகர் மகாவித்தியாலயம் மல்லாவி மத்திய கல்லூரி ஆகிய 3 பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டிருந்தார்கள். அங்கு அவர்களுக்கு சமைத்த உணவு வழங்கப்பட்டது.

வீடுகளுக்குச் சென்றுள்ளவர்களுக்கு உலக உணவுத் திட்டம் உலருணவுப் பொருட்களை வழங்கியுள்ளது. சமையல் பாத்திரம் உள்ளிட்ட வீட்டுப்பாவனைக்குரிய பொருட்களும் வழங்கப்பட்டிருப்பதனால் அவர்கள் அங்கேயே சமைத்து உண்ணத் தொடங்கியுள்ளார்கள்.

மீளக்குடியமர்வதற்காகத் தெரிவு செய்யப்பட்ட கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ள பிரதேசங்களில் நீர் வளச் சபையினரும் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினரும் இணைந்து பொதுக்கிணறுகளையும் காணிகளில் உள்ள கிணறுகளையும் துப்பரவு செய்து அவற்றை அடையாளமிட்டுள்ளார்கள். இந்தப் பிரதேசங்களில் 75 வீதமான கிணறுகள் இவ்வாறு சுத்தம் செய்யப்பட்டிருக்கின்றன. இதனால் துப்பரவு செய்யப்பட்டு அடையாளம் இடப்பட்ட கிணறுகளில் இருந்து மீளக்குடியமர்ந்துள்ள மக்கள் தமக்குரிய குடிநீரைப் பெறுகின்றார்கள்.

இந்த மூன்று பாடசாலைகளிலும் உள்ளவர்கள் தமது காணிகளுக்குச் சென்றதும், அவற்றில் இரண்டாவது தொகுதியான ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டு உடனடியாகவே மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள்”

என தெரிவித்தார் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி எமில்டா சுகுமார்
மேலும் இங்கே தொடர்க...