23 மே, 2010

இறுதி யுத்தத்தில் தப்பிச்செல்ல முயன்ற பெண்கள் புலிகளால் சித்திரைவதை-ஐ.நா ,




வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது தப்பிச்செல்ல முயற்சித்த பெண்களை விடுதலைப் புலிகள் சித்திரைவதைக்கு உள்ளாக்கியதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புப் பேரவையிடம், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான்கீமூன் வழங்கியுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டிருக்கிறது.

தப்பிச்செல்ல முற்பட்ட பெண்களின் தலைமுடியை விடுதலைப் புலிகள் கட்டையாக வெட்டியதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு தலைமுடி கட்டையாக வெட்டப்பட்ட பெண்களை விடுதலைப் புலி உறுப்பினர்கள் என கருதிய இராணுவத்தினர், முகாம்களில் அவர்களை வித்தியாசமான முறையில் நடத்தியுள்ளனர்.

இந்நிலையில், விடுதலைப் புலிகளின் போராட்டத்தில் பெண்கள் இணைந்துகொள்வதனை தடுக்கும் முகமாக, பெற்றோர் மிக இள வயதில் அவர்களுக்கு உறவினர்களுடன் திருமணம் செய்துவைத்தாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது அரசாங்கத்தினால் பல மனித உரிமை மீறல் சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதுடன், எனினும் இந்தக் குற்றச்சாட்டுக்களை அரசாங்கம் மறுத்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்பதுடன், அவர்களுக்கான நலத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜூன் மாத நடுப்பகுதியில் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவைக் கூட்டத்தில் இலங்கை விவகாரம் குறித்து பகிரங்கமாக விவாதம் நடத்தப்படவிருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது பெண்கள் மீது பாலியல் வல்லுறவு உள்ளிட்ட பல்வேறு துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், எனினும், இதற்கு யார் பொறுப்பு என்பது தொடர்பில் தெரியவரவில்லை எனவும் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் 2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் 2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 199 சிறுவர்கள் கொல்லப்பட்டும், 146 சிறுவர்கள் காணாமல் போயிருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதேவேளை, சிறுவர்களை இணைத்துக்கொள்ளும் பட்டியலிருந்து பிள்ளையான் மற்றும் கருணாவின் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பதுடன், ஆனாலும் கருணாவின் ஆதரவாளர் இனியபாரதியின் பெயர் அந்தப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருக்கிறது.
மேலும் இங்கே தொடர்க...

போர்க் குற்றங்கள்: "புதிய ஆதாரங்கள்"

எச் ஆர் டபிள்யு வெளியிட்டுள்ள படம்
எச் ஆர் டபிள்யு வெளியிட்டுள்ள படம் BBC
இலங்கையில் போரின் இறுதி கட்டத்தில் விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவரை 'படையினர்' துன்புறுத்திக் கொல்வது போன்ற காட்சிகளைக் காட்டும் புகைப் பட ஆதாரங்களை நியூயார்க்கை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமை அமைப்பான ஹூமன் ரைட்ஸ் வாட்ச் வெளியிட்டுள்ளது.

இலங்கை இராணுவத்தை சேர்ந்த ஒருவர் மூலம் இந்த புகைப்படங்கள் தமக்கு கிடைத்ததாக கூறும் ஹூமன் ரைட்ஸ் வாட்சின் தெற்காசிய ஆய்வாளர் மீனாட்சி கங்கூலி, இதில் கொல்லப்படும் நபர் விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவைச் சார்ந்தவர் என்று பக்கசார்பற்ற வட்டாரங்கள் மூலம் தம்மால் உறுதிசெய்ய முடிந்ததாகத் தமிழோசையிடம் தெரிவி்த்தார்.

இலங்கை அரசு இது போன்ற குற்றச்சாட்டுக்களை விசாரிக்க சுயாதீன சர்வதேச விசாரணையை அனுமதிக்க வேண்டும் என்று கூறிய அவர், அப்படி ஒரு விசாரணை நடைபெற்றால் அந்த விசாரணை விடுதலைப் புலிகளின் போர்க் குற்றங்கள் குறித்தும் விசாரிக்கும் என்றார்.

போர்க் குற்றங்கள் தொடர்பாக முன்வைக்கப்படும் ஆதாரங்களை தொடர்ந்து நிராகரித்து வரும் இலங்கை அரசு, ஹூமன் ரைட்ஸ் வாட்ச் வெளியிட்டுள்ள இந்தப் புகைப்படங்களையும் நிராகரித்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

இந்தியத் திரைப்பட விருது விழாவில் பங்கேற்க மாட்டேன்: கமலஹாசன்

இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் சர்வதேச இந்தியத் திரைப்பட விருது விழாவில் பிரபல இந்திய திரைப்பட நட்சத்திரங்களில் ஒருவரான கமலஹாசன் கலந்துகொள்ள மாட்டேன் என தெரிவித்துள்ளார்.

பிக்கியின் ஊடக பொழுதுபோக்கு மற்றும் வணிகப் பொறுப்பில் இருந்து தா‌ன் விலக வேண்டும் என்று தமிழன உணர்வாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு பின்ரே நடிகர் கமல் ஹாசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கமல், தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது :

த‌மி‌‌ழ் உண‌ர்வா‌ள‌ர்களே...

மேற்சொன்ன விலாசம் தவிர வேறு பொறுப்புகளில் உள்ளோர் பெயர்கள் இல்லாததால், கடிதம் ஒட்டுமொத்தமாக தமிழின உணர்வாளர்களுக்கு எழுதப்படுகிறது. அவ்விலாசம் எனக்கும் பொருந்தும் என்ற மயக்கமற்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

பிக்கி என்ற அமைப்பு திரு மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. மனித நேயம் இந்த அமைப்பின் அடிப்படைத் தீர்மானங்களுள் இரண்டரக் கலந்ததாகும்.

உங்களைப் போன்ற உணர்வுள்ள நான், ஏற்கெனவே இலங்கை சென்று இந்த விழாவில் பங்கு கொள்வது நியாயமில்லை என்ற காரணத்தில் ஐபா நிகழ்ச்சியில் பங்குபெறச் செல்லவில்லை. உண்மையைச் சொன்னால், இதுவரை நடந்த ஐபாவின் எந்த நிகழ்ச்சியிலுமே நான் கலந்து கொண்டதில்லை.

என் அலுவலகத்தின் முன்னாள் கூடிய ஒரு சிறு தமிழுணர்வாளர்கள் கூட்டத்தில், சிலர் விண்ணப்ப வாக்கியங்கள் எழுதிய காடிதங்களை உயர்த்திப் பிடித்திருந்தனர்.

அவை நான் தென்னக தலைமைப் பொறுப்பிலிருந்து விலக வேண்டும் என்றும், இன்னொரு சுவரொட்டி எனக்கு இந்நாடு வழங்கிய பத்மஸ்ரீ பட்டத்தை திரும்பத் தந்துவிட வேண்டும் என்றும் வலியுறுத்தின.

தமிழ் உணர்வை மனதில் கொண்ட நான், தலைமை, தலைவர் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் யாரும் கொழும்பு விழாவில் பங்கேற்கக் கூடாது என அன்புக் கட்டளையிட, அவர்களும் இசைந்து விழாவுக்குச் செல்வதைத் தவிர்த்துள்ளனர். இலங்கையில் நடக்கவிருக்கும் வர்த்தக் கூட்டமைப்பு விழாவுக்கும் இவர்கள் செல்லப் போவதில்லை என்றும் சொல்லியிருக்கின்றனர்.

மற்றபடி வியாபாரிகள் வர்த்தகம் செய்வது தொடர்ந்து நடந்து வருவதைத் தடுப்பது போன்ற சிறிய அமைப்புகள் கையில் இல்லை. உங்கள் கருத்துக்கள் என்னை வந்தடையும் முன்பாகவே (தற்காப்பு அல்ல) உணர்வின் உந்துதலால் இந்தப் பணியைச் செய்துள்ளேன். மற்றபடி என் நாடு எனக்களித்த கவுரவத்தைத் திருப்பித் தருவதால் சாதிக்கப் போவது ஒன்றுமில்லை என்று நம்புகிறேன்.

விமர்சனங்களை ஏற்று நடவடிக்கை எடுக்கும் மனப்பாங்குடையது. இம்மனித நேயம், மனப்பாங்கு, அதை நிறுவியவரிடம் கற்ற பாடம். தன் நிலையை உணர்த்தும் முதல் நடவடிக்கையாக தலைவர்கள் மனித நேயத்தோடு எடுத்திருக்கும் இம்முடிவு உங்களை மகிழ்விக்கும் என நம்புகிறேன் என்று கம‌ல் கூறியுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

இரத்தினபுரி மாவட்டத்தில் சற்று முன்னர் கைக்குண்டு தாக்குதல்

இரத்தினபுரி மாவட்டத்தின் இறக்குவானை டெல்வின் தோட்டப்பிரிவில் சற்று முன்னர் கைக்குண்டு தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது ,டெல்வின் தோட்டப்பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் சற்று முன்னர் இடம்பெற்ற கைக்குண்டு தாக்குதலில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களுள் 2 பெண்கள் , 2 சிறுவர்கள் , 6 இளைஞர்கள் உள்ளனர். இதேவேளை காயமடைந்தவர்கள் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுல் 3 பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இக் கைக்குண்டு தாக்குதல் தனிப்பட்ட காரணங்களுக்காக இடம்பெற்றிருக்கிறது என பொலிஸார் தெரிவித்தனர், இதேவேளை இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நடத்தி வருவதாகவும் இறக்குவானை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

போர்க் குற்ற விசாரணை நெருக்கடி; ஐ.நா.செயலரைச் சந்திக்கின்றார் பீரிஸ்




இலங்கை மீது அடிக்கடி குற்றஞ்சாட் டப்பட்டுவரும் போர்க்குற்ற விசாரணை தொடர்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இன்று அல்லது நாளை ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனுடன் பேச்சு நடத்தவுள்ளார்.இலங்கை மீது அடிக்கடி குற்றஞ்சாட் டப்பட்டுவரும் போர்க்குற்ற விசாரணை தொடர்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இன்று அல்லது நாளை ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனுடன் பேச்சு நடத்தவுள்ளார்.இலங்கையில் கடந்த வருடம் இடம் பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக தமக்கு ஆலோசனை வழங்க நிபுணர் குழு ஒன்றை நியமிக்க ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் முயற்சிகளை எடுத்துவரும் நிலையில், அவரை அமைச்சர் பீரிஸ் ஐ.நா தலைமை யகத்தில் சந்திக்கின்றார்.

மனித உரிமைகள் தொடர்பாக அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் பீரிஸ் பான் கீ மூனுக்கு விளக்கம் அளிக்கவிருக்கின்றார் என்று தெரிவிக்கப்பட்டது." தொலைக்காட்சி மூலம் வெளிவந்துள்ள, தமிழ் இளைஞர்கள் மீதான சித்திரவதை மற்றும் கொலைகள் சம்பந் தப்பட்ட காட்சிகள் தொடர்பாக இலங்கை அரசின் நிலைப்பாடு குறித்தும் அமைச்சர் பீரிஸ், மூனிடம் எடுத்துரைப் பார்.இந்த விஜயத்தின்போது அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின் ரனையும் பீரிஸ் சந்திக்கவிருக்கின்றார் என வெளிவிவகார அமைச்சு வெளியிட் டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

முல்லைத்தீவில் மீளக்குடிமர்ந்துள்ள மக்கள் தமது அவலங்கள், இழப்புகள், கஷ்டங்களை இதயம் குமுறிக் கண்ணீர் மல்ல விவரித்தனர்



Hi Jeya

முல்லைத்தீவில் மீளக்குடியமர்ந்த மக்களிடம் எஞ்சியிருப்பது நிர்க்கதியால் விளைந்த சோகம் மட் டுமே ஆகும். அவர் கள் நேற்று கூட்டமைப்பு எம்.பிக் களைச் சந்தித்தபோது அவர்களிடம் மேலோங்கிக் காணப்பட்டது இனி என்ன செய்யப் போகிறோம் என்ற விரக்தியே!

முல்லைத்தீவில் மீளக்குடியமர்ந்த மக்களிடம் எஞ்சியிருப்பது நிர்க்கதியால் விளைந்த சோகம் மட் டுமே ஆகும். அவர் கள் நேற்று கூட்டமைப்பு எம்.பிக் களைச் சந்தித்தபோது அவர்களிடம் மேலோங்கிக் காணப்பட்டது இனி என்ன செய்யப் போகிறோம் என்ற விரக்தியே!
எல்லோரும் தாங்கள் அனுபவித்த அவலங்கள், இழப்புகள், மீளக்குடியமர்ந்த பின்னர் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அன்றாட வாழ்க்கையை கொண்டோ டப்படும் கஷ்டங்கள், பற்றாமைகள் ஆகியன வற்றை அடுக்கடுக்காய் கண்ணீர் மல்கியவாறு இத யங்கள் குமுறக் குமுற எம்.பிக்களிடம் விவரித்தனர். எல்லோரது முகங்களும் அவர்களின் வெறுமைகளையே பிரதிபலித்தன.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளு மன்ற உறுப்பினர்களாக சுரேஷ் பிரேமச்சந் திரன், அ.விநாயகமூர்த்தி ஆகியோர் தவிர்ந்த 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நேற்று வன்னிக்குச் சென்ற னர்.

வவுனியாவில் இருந்து நேற்றுக்காலை புறப்பட்ட கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதலில் நெடுங்கேணி மதியாமடு மகாவித்தியாலயத்துக்கு சென் றனர். அங்கு அதிபர், ஆசிரியர்கள், மாண வர்களுடன் கலந்துரையாடி அவர்களின் பிரச்சினைகள், தேவைகளை கேட்டறிந்த னர்.
அதன் பின்னர் நெடுங்கேணி மகாவித்தி யாலயத்தில் அப்பகுதியில் மீளக்குடிய மர்ந்தவர்களைக் கூட்டமைப்பினர் சந்தித் தனர்.

உணவு, இருப்பிட வசதிகளுக்கு ஏற்பாடு இல்லை
அண்மையில் குடியமர்த்தப்பட்ட தங் களுக்கு எந்த வசதியும் செய்யப்பட வில்லை. உணவு, இருப்பிட வசதிக ளுக்கு ஏற்பாடு செய்யப்படவில்லை. பாட சாலை ஆரம்பிக்கப்பட்ட போதிலும் போதிய வசதிகள் செய்யப்படவில்லை என மக் கள் கவலை தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து ஒலுமடு மக்களை யும் அப்பிரதேச ஆசிரியர், மாணவர்களை யும் சந்தித்த கூட்டமைப்பு எம்.பிக்கள் ஒட்டுசுட்டானுக்குச் சென்று வற்றாப்பளை அம்மனை தரிசித்து நந்திக்கடலையும் பார்வையிட்டனர். வற்றாப்பளைப் பகுதி கிராம சேவையாளரைச் சந்தித்து அந்தப் பிரதேச பிரச்சினைகள் குறித்தும் கேட்ட றிந்தனர்.

வன்னி விளாங்குளம் முத்துமாரி அம் மன் கோயிலில் நேற்று நடைபெற்ற பொங் கல் விழாவில் கூட்டமைப்பு நாடாளு மன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
முல்லைத்தீவு செயலகத்துக்குச் சென்ற கூட்டமைப்பின் எம்.பிக்கள் அங்கு கூடி யிருந்த மக்களுடன் கலந்துரையாடி நிலை மையைக் கேட்டறிந்ததுடன் முல்லைத் தீவு நகரத்தைச் சுற்றி அங்கு ஏற்பட்டுள்ள பேரழிவுகளைப் பார்வையிட்டனர்.

மாலையில் வவுனியா திரும்பிய எம். பிக்கள் வவுனியா "மனிக்பாம்' மக்களை இன்று சந்தித்துக் கலந்துரையாடவிருக் கின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

ஐரோப்பிய ஒன்றிய முக்கியஸ்தர்களுக்கு இலங்கை நிலவரம் குறித்து விளக்கம்

நாட்டின் தற்போதைய நிலவரம் குறித்து ஐரோப்பாவிற்கு விஜயம் செய்துள்ள சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸ் தலைமையிலான குழுவினர், ஐரோப்பிய ஒன்றிய முக்கியஸ்தர்களுக்கு விளக்கமளித்துள்ளனர்.

குறிப்பாக இலங்கையில் சமாதானத்தை நிலைநாட்டுவதற்காக எடுக்கப்பட்டுள்ள முயற்சிகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் மனிதாபிமான உதவிகளுக்கான ஆணையாளர் கிறிஸ்டலினா ஜோர்வியாவிடம், சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸ் விளக்கமளித்துள்ளார்.

போர் முடிவுறுத்தப்பட்டு ஒரு வருட காலத்திற்குள் கணிசமானளவு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர் தெரிவித்துள்ளார்.

மனித உரிமையை மேம்படுத்தும் நோக்கில் தேசிய திட்டமொன்று உருவாக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கைக்கான ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தை திருப்திகரமான முறையில் அமைந்துள்ளது எனவும், யுத்தம் முடிவடைந்த பின்னர் அங்கு முன்னேற்றமான நிலை காணப்படுவதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

வன்னியில் பெய்யும் அடைமழை காரணமாக மீளக் குடியமர்ந்த மக்கள் பெரும்பாதிப்பு

வன்னிப் பகுதியில் பெய்துவரும் மழை காரணமாக மீளக் குடி யேறியுள்ள மக்கள் பெரும்பாதிப்புகளைச் சந்தித்துள்ளனர். வன்னியில் நடைபெற்ற போரின் காரணமாக தங்களின் வீடுகளை இழந்த மக்கள் மீளக்குடியேறி சிறு கூடாரங்களை அமைத்துக் கொண்டே இந்தப் பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர்..

இந்த நிலையில் சீரற்ற காலநிலை காரண மாகப் பெய்து வரும் பெருமழையினாலும் காற்றினாலும் இந்த மக்கள் பெரும் பாதிப்புகளைச் சந்தித்துள்ளனர். கிளிநொச்சி மாவட்ட மக்களே இந்த மழையினால் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள் ளனர். இம் மாவட்டத்தில் மீளக்குடியேறிய மக்களில் 90 வீதமானவர்கள் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலகத் தைச் சேர்ந்த அதிகாரியொருவர் தெரிவித் தார். பலமாக வீசிய காற்றினால் கூரைகளும் கூடாரங்களும் சேதமாகியதால் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட எந்த உடமைகளையும் பாதுகாக்க முடியாத நிலையில் பெரும் அவலங்களைச் சந்தித்துள்ளனர். தப்பிப் பிழைத்த ஆவணங்களைக் கூட தங்களால் பாதுகாக்க முடியாமலிருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர். .

தங்களுடைய கூடாரங்களுக்குள் தங்க முடி யாத மக்கள் படையினரால் கைவிடப்பட்ட காவலரண்களுக்குள் தஞ்சமடைந்து பாதுகாப் புத் தேடியுள்ளனர். இரவு நேரங்களில் தூங்க முடியாமல் எழுந்து இருக்கும் நிலையே தங்களுக்கு ஏற்பட்டுள்ளதாக இந்த மக்கள் தெரிவிக்கின்றனர். வெள்ளத்தினாலும் காற்றினாலும் ஏற்பட்ட பாதிப்புகளை பிரதேச செயலர்கள் பார்வை யிட்டு அவசர உதவிகளைச் செய்து வருகின் றனர். பாதிக்கப்பட்ட மக்களை ஈ.பி.டி.பி நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார், தமிழத்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் ஆகியோரும் பார்வை யிட்டுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

வெள்ளம் காரணமாக இருப்பிடங்களை இழந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபா நஷ்ட ஈடு

மழை,வெள்ளம் காரணமாக தமது இருப்பிடங்களை முற்றாக இழந்தவர்களுக்கு நஷ்டஈடாக தலா 50,000 ரூபாவை வழங்கவுள்ளதாகவும் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்கு சேதத்துக்கான கணிப்பீட்டின்படி நஷ்டஈடு வழங்கப்படுமென்றும் இடர்முகாமைத்துவ அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி வீரகேசரி வாரவெளியீட்டுக்குத் தெரிவித்தார். அண்மையில் ஏற்பட்ட மழை, வெள்ளம் காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பொருட்டு 97 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இந்தத் தொகையில் இதுவரை 31 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், "இந்த நிவாரணத் தொகை போதாதெனக் காணப்படுமானால் மேலும் நிதியை ஒதுக்குவதற்கான ஏற் பாடுகள் செய்யப்படும். இயற்கை அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களின் இறுதிக் கிரியைகளுக்காக ஒருவருக்கு 15 ஆயிரம் ரூபா வீதம் வழங்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இவ்வாறான இயற்கை அனர்த்தங்களின்போது அதிகளவிலான பாதிப் புகளைத் தடுக்கும் பொருட்டு நீண்டகாலச் செயற்றிட்டமொன்றினை விரைவில் அமுல் படுத்தவுள்ளோம்.

நுவரெலியா மாவட்டத்தில் மண்சரிவுகள் ஏற்படும் அபாய தோன்றியுள்ளது. அதே போன்று அங்குலான பிரதேசத்தில் கடலரிப் பின் பாதிப்பு அதிகளவில் ஏற்பட்டுள்ளது. இது வரை அங்குலானப் பகுதியில் 64 வீடுகள் முற்றாகச் சேதமடைந்துள்ளன. இதன் காரண மாகப் பாதிக்கப்பட்டவர்கள் தற்காலிகமாகத் தங்குவதற்கு வீடுகளைப் பெற்றுக் கொள்ளும் படியும் அவர்களை அறிவுறுத்தியுள்ளோம். அதற்கான வாடகையை நாம் செலுத்தவுள் ளோம் எனவும் தெரிவித்துள்ளோம்' என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

சீனாவில் ரயில் தடம்புரண்டதில் 10 பேர் பலி


சீனா ஜிகான்சி மாநிலத்தில் ரயில் தடம் புரண்டதில் 10 பேர் வரை பலியுள்ளதாகவும் 55 பேர் காயமடைந்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. அம்மாநிலத்தில் ஏற்ப்பட்ட மண்சரிவு காரணமாகவே ரயில் தடம்புரண்டுள்ளதாக அந்நாட்டின் ரயில்வே அமைச்சு தெரிவித்துள்ளது.

சங்காய்யிலிருந்து சுற்றுலா பிரதேசமான குலின் என்ற பகுதிக்கு செல்லும் போதே ரயில் தடம்புரண்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

வெடித்துச் சிதறிய விமானத்திலிருந்து தைரியத்துடன் தப்பி ஓடினேன்’ உயிர்தப்பியவர் மெய்சிலிர்க்கும் பேட்டி

FPN  News

மங்களூர் விமான விபத்தில் பெண், டாக்டர், சிறுவன் உட்பட 8 பேர் உயிர் தப்பினார்கள். அவர்களில் உமர் பாரூக் என்பவரும் ஒருவர். அவர் விமானத்தின் கடைசிப் பகுதியில் இருந்தார்.

விமானம் தீப் பிடித்து எரிந்தபோது அதனுள் உமர் பாரூக் சிக்கிக் கொண்டார். அவரது முகம், கைகளில் தீக் காயங்கள் ஏற்பட்டன. என்றாலும், துணிச்சலுடன் செயல்பட்டதால் உமர் பாரூக் உயிர் தப்பினார். இதுகுறித்து அவர் கூறியதாவது :-

விமானம் தரை இறங்க 5 நிமிடமே இருந்ததால் எல்லோரும் உற்சாகத்துடன் இருந்தோம். திடீரென விமானம் தள்ளாடியது. விமானத்தின் இறக்கை ஒன்று மலை மீது உரசியதை பார்க்க முடிந்தது. நாங்கள் எல்லோரும் அலறி னோம். சிறிது நேரத்தில் மலை மீது பலத்த சத்தத் துடன் விமானம் மோதியது.

விமானம் முழுக்க தீப் பிடித்தது. எங்கும் புகையாக இருந்தது. உடலில் தீப் பிடித்ததால் பயணிகள் எல்லோரும் கூக்குரலிட்டனர். ‘உதவி, உதவி’ என்று அலறினார்கள். ஆனால், அந்த காட்டுக்குள் உடனே உதவிக்கு வர யாரும் இல்லை.

என் அருகில் இருந்தவர்கள் எல்லோரும் மயங்கி, சரிந்து கிடந்தனர். ஒரு நிமிடம் எனக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை.

நான் இருந்த பகுதியில் விமானம் இரண்டாக பிளந்து கிடந்தது. இதனால் வெளியில் செல்ல வழி கிடைத்தது. தைரியத்தை வரவழைத் துக் கொண்டு எழுந்து வெளியில் ஓடிவந்தேன்.

அடுத்த சில நிமிடங்களில் நான் இருந்த இடம் உட்பட விமானத் தின் பெரும் பகுதி வெடித்து சிதறியது. என் அருகில் ஒரு பயணி கூட இல்லை. நான் மட்டும் தான் உயிர் பிழைத்ததாக நினைத்தேன். அந்த மலைக் காட்டுக்குள் தட்டுத் தடுமாறியபடி சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்தேன்.

தற்குள் அந்தப் பகுதி கிராம மக்கள் விமானம் விழுந்த இடம் நோக்கி காட்டுக்குள் ஓடி வந்திருந் தனர். தீக்காயங்களுடன் வந்த என்னைப் பார்த்ததும் முதல் உதவி செய்தனர். பிறகு ஒரு மோட்டார் சைக்கிளில் வைத்து என்னை சிறிது தூரம் அழைத்து வந்தனர்.

பிறகு என்னை ஒரு ரிக்சாவில் ஏற்றி அனுப்பி வைத்தனர். மிக மோசமான விமான விபத்தில் இருந்து உயிர் தப்பியதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. இது எனக்கு மெய்சிலிர்க்க வைக்கும் அனுபவமாகும். நான் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பி உள்ளேன்.
மேலும் இங்கே தொடர்க...

உரிய முறையில் செயற்படாத அதிகாரிகள் மீது நடவடிக்கை நிவாரண பணிகள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்க ஜனாதிபதி உத்தரவு

சீரற்ற காலநிலை காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்குமாறும் வெள்ளப்பெருக்கு நிலையைக் கட்டுப்படுத்த துரிதமாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சகல அதிகாரிகளுக்கும் விசேட பணிப்புரைகளை விடுத்துள்ளார்.

இதற்கமைய பாதிப்புக்குள்ளான மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக கூட்டுச் செயற்திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளதுடன் தேவையான நிதியும் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் எதிர்நோக்கிய சிக்கல்களைத் தீர்ப்பதற்கு உரிய முறையில் நடவடிக்கை எடுக்காத அரச அதிகாரிகள் இருப்பின் அவர்கள் தொடர்பாக உடனடியாக அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

வெள்ளப் பெருக்கினால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகளை நிவர்த்திக்கவும் முழுமையான கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறும் சம்பந்தப்பட்ட சகல பிரிவினருக்கும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

வெள்ளம் விரைவாக வடிந்தோடுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை அனர்த்த முகாமைத்துவ அமைச்சும் உள்ளூராட்சி மன்றங்கள் உள்ளிட்ட ஏனைய அமைப்புகளும் இணைந்து கூட்டுச் செயற்திட்டமொன்றை முன்னெடுக்க வேண்டுமென்றும் ஜனாதிபதி பணித்துள்ளார்.

அதேநேரம், எதிர்காலத்தில் எந்த வொரு தாழ் நிலத்தையும் மண் கொண்டு நிரப்பும் நடவடிக்கையை முற்றாகத் தடுத்து நிறுத்த வேண்டு மென்றும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

நகரங்களில் நிர்மாணப் பணிகளை மேற்கொள்ளும் போது உரிய திட்டமிடல் அவசிய மானதென்றும் ஜனாதிபதி அறி வுறுத்தியுள்ளார்.

இதேவேளை வெள்ளத்தால் பாதிக் கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இராணுவத்தினர் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவது டன் அவசர தேவைகளின் நிமித்தம் விமானப் படையினரும் கடற்படை யினரும் தயார் நிலையில் வைக் கப்பட்டுள்ளனர்.

கடற்படையினர் 25இற்கும் அதிக மான படகுகளுடன் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளமை குறிப் பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

மறுசீரமைப்பு யோசனையால் ஐ.தே.கவில் புதிய குழப்பம் ரணிலின் தலைமையைப் பாதுகாக்க மேற்கத்திய நாடுகள் காய்நகர்த்தல்






ஐக்கிய தேசிய கட்சி மறுசீரமை ப்புக் குழுவின் பரிந்துரைகளை, செயற்குழு அங்கீகரித்துள்ள போதி லும் அதனை முழுமையாக நடை முறைப்படுத்துவதற்கான சாதகமான சூழல் ஏற்படும் வாய்ப்பு குறை வாகவே காணப்படுவதாக கட்சி வட்டாரங்கள் மூலம் தெரியவருகி ன்றது.

செயற்குழுவின் தீர்மானங்களை முழுமையாக நடைமுறைப்படுத்தும் போது அக்குழுவிலுள்ள சில உறுப்பினர்கள் மாறுபட்ட நிலைப் பாட்டை எடுக்கக்கூடிய சாத்தியம் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டு ள்ளது. இதனால் குழுக்கள் உரு வாகி பகைமை ஏற்பட்டு கட்சியின் வளர்ச்சி பாதிக்கப்படாலாமென சிரேஷ்ட உறுப்பினர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

கட்சியின் செய லாளர், பொருளாளர் தவிர்ந்த (தலைவர் உட்பட) அனைத்துப் பதவிகளையும் ரகசிய வாக்கெடுப் பின் மூலம் தெரிவு செய்ய வேண்டு மென்ற பரிந்துரையை செயற்குழு அங்கீகரித்துள்ளது.

அவ்வாறு தலைவர் பதவிக்குத் தேர்தல் நடத்துவதாயின் கட்சியின் யாப்பினை மாற்றியாகவேண்டும். அதற்கும் செயற்குழு இணக்கம் கண்டிருந்தாலும் யாப்பை மாற்று வதற்கு 75% ஆதரவு அவசியம் எனக் கட்சியின் தற்போதைய தலைவரான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள் ளார்.

1995ம் ஆண்டு கட்சியின் யாப்பில் ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட திருத்தத்தின்படி, தலைவராக இருப் பவர் இராஜினாமா செய்வதன் மூலம் வெற்றிடம் ஏற்படாலொழிய தேர்தல் நடத்த முடியாது.

இந் நிலையில் யாப்பினை மாற்றுவதற்கு 75% ஆதரவு கிடைக்கும் என்பது அந்தளவு சாத்தியமாகுமா என்பது சந்தேகமாகவே உள்ளதாக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் ‘வார மஞ்சரி’க்குத் தெரிவித்தார். ஆகவே, கட்சியை மறுசீரமைப்பதென்பது வெறும் சலசலப்பாகவே முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, சில மேற்குல நாடுகளின் இராஜதந்திரிகள், ஐ.தே.க. தலைமைப் பதவியிலிருந்து விலகு வதை விரும்பவில்லையெனத் தெரியவருகிறது. எனவே, ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக செயற்குழுவின் மூலம் வெளிநாட்டு இராஜதந்திரிகளும் காய்நகர்த்தல்களை மேற்கொள்ளும் வாய்ப்பு உள்ளதாகவும் அறிய முடிகிறது
மேலும் இங்கே தொடர்க...




யுத்த சூழ்நிலை காரணமாக இந்தியாவிற்கு அகதிகளாக சென்று அங்கு வசித்துவரும் இலங்கையர்களை வரவழைத்து அவர்களை தமது சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்துவற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ள சுமார் 110அகதி முகாம்களில் 1லட்சத்திற்கும் அதிகமானவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சர் மில்றோய் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் அவர்களை நாட்டிற்கு வரவழைப்பதற்கான துரித திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளோம். இவர்கள் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டு அவர்களுக்கான வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்க இராணுவம் மற்றும் பொலீசாரின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார். இதேவேளை தமிழகத்திலிருந்து நாடு திரும்பவுள்ள இலங்கை அகதிகளுக்கான உதவிகளை யூ.என்.எச்.சீ.ஆர் என்கிற ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் வழங்கவுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் இவர்களில் 505பேர் இலங்கை செல்வதற்கான உதவிகளை அவ்வமைப்பு மேற்கொண்டிருந்தது. இதனைத் தவிர கடந்த 2002ம் ஆண்டு சுமார் 26,700அகதிகள் இலங்கை திரும்புவதற்கு அவ்வமைப்பு உதவி வழங்கியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் இங்கே தொடர்க...

மன்னாரில் கிளைமோர் குண்டு மீட்பு

மன்னார் மூர்வீதி காட்டுபல்லி பகுதியில் மக்கள் குடியிருப்புக்கு அருகாமையில் இருந்து புதைக்கப்பட்ட நிலையில் 1 கிலோ நிறையுடைய கிளைமோர் குண்டு ஒன்றை இன்று முற்பகல் 11 மணியளவில் மன்னார் பொலிஸார் மீட்டுள்ளனர்.

பிரதேசவாசி ஒருவர் வழங்கிய தகவலையடுத்து கிளைமோர் குண்டு மீட்கப்பட்டுள்ளது.

இந்த கிளைமோர் குண்டு பொலித்தின் மற்றும் பெற்றரிகள் பொருத்தப்பட்ட நிலையில் இருந்ததாகவும் அவ்விடத்துக்கு வந்த இராணுவத்தினரும் பொலிஸாரும் அந்த கிளைமோர் குண்டினை செயலழிக்கச் செய்து பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளனர் .

அக் குண்டு 2006 ஆம் ஆண்டு புதைக்கபட்டிருக்கலாம் என்று தெரியவருகின்றது
மேலும் இங்கே தொடர்க...