6 செப்டம்பர், 2010

தமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின் 25வது நினைவு தின நிகழ்வுகள் யாழ். கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது திரு.கௌரிகாந்தன் அவர்களின் தலைமையில் ஆரம்பமான நிகழ்வில் முதலில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், மலராஞ்சலி நிகழ்வும் நடைபெற்றது. புளொட் தலைவரும் அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் புதல்வருமான திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன், திரு.கௌரிகாந்தன், தமிழரசு கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் குலநாயகம், முன்னாள் தபாலதிபர் திரு.கணேசவேல், முன்னாள் கோட்டக்கல்வி அதிகாரி தற்பரானந்தன், முன்னாள் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் வை.பாலச்சந்திரன், வவுனியா நகரசபை எதிர்க்கட்சித் தலைவர் ஜி.ரி.லிங்கநாதன், வவுனியா நகரசபை உறுப்பினர்கள் சுரேந்திரன், குமாரசாமி மற்றும் பல முக்கியஸ்தர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக