6 அக்டோபர், 2009

திருச்சி அகதிகள் முகாமில் இலங்கைத் தமிழர் கொலை


திருச்சி, கொட்டப்பட்டு அகதிகள் முகாமில் தங்கியிருந்த சத்யசீலன் என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்துத் தெரிய வருவதாவது :

நேற்று மாலை (05) நடந்த இந்தக் கொலை தொடர்பாக நான்கு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொட்டப்பட்டு முகாமில் தங்கியிருந்த அய்யன் என்பவர் மரணமடைந்தார். இவரது மரண செய்தியைக் கேள்விப்பட்டு, வாழவந்தான்கோட்டை முகாமில் தங்கியிருந்த சத்யசீலன் (35) என்பவர் அங்கு வந்திருந்தார்.

அப்போது, ராஜகோபால், அவரது மகன்கள் ரபிநேசன், சசிதரன் மற்றும் சாந்தன் ஆகியோருக்கும், சத்யசீலனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் அய்யனின் இறுதிச் சடங்குகள் முடிந்த பின்னர் சத்யசீலனுக்கும், மேற்சொன்ன நான்கு பேருக்கும் இடையே பெரும் மோதல் மூண்டது.

இதன்போது சசிதரன், கத்தியால் சத்யசீலனை குத்தியுள்ளார். படுகாயமடைந்த சத்யசீலன், அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால் இடைவழியிலேயே அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது
மேலும் இங்கே தொடர்க...

ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையுடன் தொடர்புகளைபேணும்


ஆசிரிய பணி என்பது சேவையை அடிப்படையாகக் கொண்டது : ஜீஆரஎஸ்இணைப்பாளர்

.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை தொடர்பில் சர்ச்சைகள் உள்ள நிலையிலும் இலங்கையுடனான உறவுகள் தொடருமென ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைதீவு குழுவின் தலைவர் பேர்னாட் சவேஜ் தெரிவித்துள்ளார்.

சீ.ஐ.எம்.ஏ. வர்த்தகக் கூட்டத் தொடரில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அண்மைக்காலமாக இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் நிலவி வரும் கருத்து முரண்பாடுகள் உறவுகளைப் பாதிக்காது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

ஊதியம் பெறுகின்ற பணியானாலும்சேவையைஅடிப்படையாகக்கொண்டது. இதன் காரணமாகவே ஆசிரியர்கள் மதிக்கப்படுகின்றார்கள்; இன்று கெளரவிக்கப்படுகி்ன்றார்கள்" என ஜேஆர்எஸ் எனப்படும் இயேசுவின்அகதிகள் சபையின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் அருட்சகோதரி
க்சுமி பெர்னாண்டோ தெரிவித்தார்.

ஜேஆர்எஸ் நிறுவன அலுவலகத்தில் இடம்பெற்ற ஆசிரியர் தின வைபவத்தில்கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஜேஆர்எஸ் நிறுவனத்தின் முன்பள்ளி மற்றும் மாலைநேர பாடசாலைஆசிரியைகளுக்கான வதிவிடப் பயிற்சி நெறியின் முடிவில் இடம்பெற்ற ஆசிரியதின வைபவத்தில் முக்கிய விருந்தினராகக் கலந்து கொண்டு அவர்உரையாற்றினார்.

"தாயின் அரவணைப்புக்கு அடுத்ததாக குழந்தைகள் முன்பள்ளிஆசிரியைகளிடமே வருகின்றன. அவ்வாறு வருகின்ற குழந்தைகள் தாயின்அரவணைப்பையும் கல்விக்கான வழிகாட்டல்களையும் முன்பள்ளிஆசிரியைகளிடமிருந்து எதிர்பார்க்கின்றன.

எனவே முன்பள்ளிக்கு வருகின்ற பல குழந்தைகளுக்கும் ஒரு தாயின் நிலையில்இருந்து சகிப்புத் தன்மையோடு, அன்பின் வடிவாக இருந்து வழிகாட்டவேண்டியது முன்பள்ளி ஆசிரியர்களின் பொறுப்பாகும்.

ஜேஆர்எஸ் நிறுவனத்தைச் சேர்ந்த முன்பள்ளி ஆசிரியைகள், தமது ஆசிரியபணியுடன் நின்றுவிடாமல், இடம்பெயர்ந்தோருக்காக எமது நிறுவனம்மேற்கொண்ட பல்வேறு பணிகளிலும், சேவைகளிலும் சோர்வின்றிஉற்சாகத்தோடு முன்னின்று உழைத்து வருகின்றார்கள்.

பொறுப்புமிக்க ஆசிரிய பணியைச் செய்வதற்கு முன்வந்துள்ள ஆசிரியைகள்பாராட்டப்பட வேண்டியவர்கள்; வாழ்த்தப்பட வேண்டியவர்கள். எனவேஅவர்களை மகிழ்ச்சியுடன் வாழ்த்துகிறேன்"

இந்த வைபவத்தில் தமிழ், சிங்கள, முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த முன்பள்ளிஆசிரியைகள் கலந்து கொண்டார்கள். ஆசிரியைகளின் கலைநிகழ்ச்சிகள், ஜேஆர்எஸ் நிறுவனத்தின் வலயங்களுக்கான பொறுப்பாளர்களின்ஆசியுரைகளும் இந்த வைபவத்தில் இடம்பெற்றன
மேலும் இங்கே தொடர்க...
ஆஸியில் சட்டவிரோத பிரவேசம் : விழிப்புணர்வூட்ட கிராமந்தோறும் வீதி நாடகங்கள்


இந்தியா கேபியை விசாரிக்க இலங்கை அரசு மறுப்பு : இந்தியச் செய்திகள் தகவல்

முறையில் அவுஸ்திரேலியாவில் பிரவேசிக்க முயற்சிக்கும் இலங்கையர்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் வீதி நாடகப் பிரசாரம் மேற்கொள்ளப்படவுள்ளதாக இணையத் தளச் செய்தி ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பல்வெறு கிராமங்களிலும் இந்த வீதி நாடகங்கள் அரங்கேற்றப்பட உள்ளதாகவும், அவுஸ்திரேலிய அரசாங்கம் இதற்கு அனுசரணை வழங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச விளம்பர நிறுவனம் ஒன்றின் ஊடாக இந்த வீதி நாடகப் பிரசாரம் மேற்கொள்ளப்படவுள்ளது.

படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவில் பிரவேசிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் எவ்வளவு ஆபத்தானது என்பதனை இந்த வீதி நாடகங்கள் எடுத்தியம்ப உள்ளன.

உள்நாட்டு கலைஞர்களே இந்த வீதி நாடகங்களில் நடிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவுஸ்திரேலியாவில் சட்டவிரோதமான முறையில் பிரவேசிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளைத் தடுக்கும் நோக்கில் துண்டுப் பிரசுரங்கள், உள்ளிட்ட பல்வேறு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும்
விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த குமரன் பத்மநாதன் - செல்வராஜா பத்மநாதன் என்கிற கேபியை இந்தியா விசாரிக்க இப்போதைக்கு அனுமதிக்க முடியாது என இலங்கை அரசாங்கம் அறிவித்திருப்பதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து இலங்கையின் ஆங்கிலப் பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில்,

"கடந்த ஆகஸ்ட் 10ஆம் திகதி கைது கேபி செய்யப்பட்டார். அவரிடம் இலங்கை அதிகாரிகள் இன்னும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விசாரணைகள் முடிவடைந்து, சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொண்ட பின்னரே இந்தியா உள்ளிட்ட பிற நாடுகள் அவரை விசாரிக்க அனுமதிப்பதென அரசாங்கம் முடிவு செய்துள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலையாளிகளுக்கு கேபிதான் நிதி உதவி வழங்கினார், ஆயுதங்களை வாங்கி அளித்தார் என்று இந்தியா கருதுகிறது. இது தொடர்பாக கேபியிடம் விசாரணை நடத்தினால் பல முக்கியத் தகவல்கள் கிடைக்கும் என்றும் அது நம்புகிறது.

கேபியை விசாரிக்க ஏற்கனவே இலங்கையிடம் அனுமதி கோரியுள்ளது இந்தியா. கேபியை விசாரிக்க சிபிஐ குழுவும் கூட தயார் நிலையில் இருப்பதாகத் தெரிகிறது.

ஆனால் கேபியை இப்போதைக்கு யாரிடமும் காட்டுவதற்கோ அவரை விசாரிக்கவோ அனுமதிப்பதாக இல்லை என்ற நிலைப்பாட்டையே இலங்கை அரசு கொண்டிருப்பதாகச் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன
மேலும் இங்கே தொடர்க...


ஹிலாரி கிளின்டனின் பேச்சுக் குறித்து இலங்கை தெரிவித்த ஆட்சேபனைக்கு அமெரிக்கா பதில்

இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டிய தேவை இல்லை -அமைச்சர் முரளிதரன்இலங்கையில் நிலைமைகள் முன்னேறி வருகின்ற நிலையில் தமிழ்நாட்டில் தங்கி உள்ள 2 லட்சம் ஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டிய தேவை ஏதும் இல்லை என்று அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் தங்கி இருக்கக்கூடிய இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்று தமிழ்நாட்டின் ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றி இருந்தது.

அந்தத் தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன், அது தொடர்பாக தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி ஆகியோரை நேரில் சந்தித்து எடுத்துக் கூறி இருந்தார்.

தி.மு.கவின் இந்த நடவடிக்கையை வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீ ரவிசங்கரும் வரவேற்றிருந்தார். அத்துடன், ஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார்.

இந்நிலையில் அத்தகைய தேவை எதுவும் இல்லை என மறுத்துள்ள அமைச்சர் முரளிதரன், இலங்கையில் நிலைமைகள் நல்ல முறையில் முன்னேற்றம் கண்டு வருவதால் இந்தியாவில் இருந்து தமிழ் அகதிகளைத் திருப்பி அனுப்புவதற்கு இதுதான் சரியான தருணம் எனவும் குறிப்பிட்ட

இலங்கையில் அரசாங்கத்தினால் தடுத்து வைக்கப்படும் பெண்கள் அண்மையில் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதற்கான ஆதாரம் எதுவும் தங்களிடம் இல்லை என்று தெரிவித்த அமெரிக்கா, நீதி விசாரணையற்ற கொலைகள், ஆட்கள் காணாமல் போதல், தடுப்புக் காவலில் வைக்கப்படுவோர் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படுதல் போன்ற சம்பவங்கள் குறித்து கவலை கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவுக்கு எழுதிய கடிதம் ஒன்றில், இலங்கையில் குறிப்பாக அரசாங்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண்கள் பாலியல் வல்லுறவுக்கும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கும் உள்ளாக்கப்படும் பல்வேறு சம்பவங்கள் குறித்து அமெரிக்க அசாங்கமும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களும் பல வருடங்களாக சுட்டிக்காட்டி வந்துள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இக் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ள இராஜாங்க திணைக்களத்தில் உலக பெண்கள் விவகாரங்களுக்கான தூதுவர் மெலானே வேர்வீர், உலகின் ஏனைய பகுதிகளில் யுத்தங்களின் போது இடம்பெற்றது போன்று இலங்கையில் அண்மைக் கால யுத்தத்தில் 2006லிருந்து 2009 வரை யுத்த ஆயுதமாக பாலியல் வல்லுறவு பயன்படுத்தப்பட்டதாக அறிக்கைகள் தமக்கு கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். இந்த விளக்கம் இலங்கை எழுப்பிய கேள்விக்கு தீர்வு தந்திருக்கும் என்று தாங்கள் நம்புவதாகவும் இலங்கையில் இடம்பெறும் நீதி விசாரணையற்ற கொலைகள், தடுப்புக் காவல் கைதிகள் மீதான துஷ்பிரயோகங்கள் ஆகியன குறித்து அமெரிக்கா தொடர்ந்து விசனம் தெரிவிப்பதாகவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமாதானத்தை நிலைநாட்டுவதிலும் மனித உரிமைகளை பேணுவதிலும் இலங்கை எதிர்காலத்தில் கவனம் செலுத்துமென இராஜாங்க செயலாளர் கிலாரி கிளிங்டன் நம்புவதாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கிலாரி கிளின்டன் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிகழ்த்திய உரை குறித்தே இலங்கை ஆட்சேபனை தெரிவித்திருந்தது.

பொஸ்னியா, பர்மா, இலங்கை ஆகிய நாடுகளிலும் வேறு நாடுகளிலும் யுத்த ஆயுதமாக பாலியல் வல்லுறவு பயன்படுத்தப்பட்டமை பற்றி நாம் அறிந்திருக்கிறோம் என்று ஆயுத போர்களின் போது பாலியல் வன்முறைகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் எனக் கோரும் பிரேரணை பாதுகாப்பு சபையில் விவாதிக்கப்பட்ட போது உரையாற்றிய கிலாரி கிளின்டன் தெரிவித்திருந்தார்.

பல தசாப்த கால யுத்தத்தின் பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட இலங்கையில் இந்த உரை குறித்து எதிர்ப்புக் குரல் எழுப்பப்பட்டது. விடுதலைப் புலிகளுக்கெதிரான இறுதிக்கட்ட யுத்தத்தை கையாண்ட விதம் குறித்து இலங்கைக்கு எதிராக பாதுகாப்பு சபையில் கொண்டுவரப்பட்ட யுத்தக் குற்றச்செயல் தொடர்பான பிரேரணையிலிருந்து சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் வீட்டோ வாக்குத் தடுப்பு உரிமையை பயன்படுத்தியதால் இலங்கை தப்பிக் கொண்டது.

இந்த வருடம் இடம்பெற்ற தீவிர யுத்தத்தில் சுமார் 7,000 சிவிலியன்கள் உயிரிழந்ததாக ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் தெரிவித்தது. யுத்தத்திலிருந்து தப்புவதற்கு முயற்சி செய்து தற்போது கட்டாய தடுப்புக் காவல் முகாம்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் 2 இலட்சத்து 50 ஆயிரம் தமிழ் மக்களை முகாம்களிலிருந்து விடுவிக்குமாறு தற்போது இலங்கைக்கு சர்வதேச அழுத்தங்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. இவர்கள் விடுதலைப் புலிகளா என்பதை அறிந்து கொள்வதற்காக தாம் இவர்களை தடுத்து வைத்து சோதினை நடத்தி வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது
மேலும் இங்கே தொடர்க...