10 மே, 2010

மன்னார் பஸ்தரிப்பு நிலையப் பகுதியில் இனம் தெரியாத சிலர் கடத்த முயற்சி செய்துள்ளனர்.

மன்னார் சித்தி விநாயகர் இந்து தேசிய பாடசாலையில் தரம் 5 இல் கல்வி கற்கும் மாணவரை இன்று காலை 7.30 மணியளவில் மன்னார் பஸ்தரிப்பு நிலையப் பகுதியில் இனம் தெரியாத சிலர் கடத்த முயற்சி செய்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து மன்னாரில் பதற்ற நிலை தோன்றியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

இவ்விடயம் தொடர்பாக தெரியவருவதாவது:

மன்னார் எழுத்தூர், செல்வநகர் பகுதியைச் சேர்ந்த மாணவர் த. கவிதரன் (வயது 10) அங்கிருந்து, பாடசாலைக்குப் பஸ்ஸில் செல்வது வழமை. இன்றும் அவர் மன்னார் பசார் பகுதியில், பஸ்ஸிலிருந்து இறங்கி பாடசாலைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

இதன்போது பசார் பகுதியில் சற்றுத் தொலைவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிவப்பு நிற வாகனத்தின் கதவு திறக்கப்பட்ட நிலையில், மாணவரை பலவந்தமாக வாகனத்தில் ஏற்ற சிலர் முற்பட்டனர்.

எனினும் மாணவர் கூச்சலிட்டதையடுத்து, சற்றுத் தொலைவில் நின்ற வீதிப் போக்குவரத்துப் பிரிவுப் பொலிஸார் ஓடி வந்துள்ளனர்.

பொலிஸாரைக் கண்டதும் கடத்தல்காரர்கள் மாணவரை விட்டுவிட்டுச் சென்றுள்ளனர். பின்னர் மாணவர் தனக்கு நடந்த சம்பவம் குறித்துப் பாடசாலை ஆசிரியர்களிடம் தெரிவித்துள்ளார். பாடசாலை அதிபர் பொலிஸரிடம் முறையிட்டுள்ளதோடு பெற்றோருக்கும் அறிவித்துள்ளார்.

தன்னைக் கடத்த முயற்சி செய்யப்பட்ட வாகனத்தில் 6 பேர் இருந்ததாகவும் அதில் 4 பேர் முகத்தை மூடிக் கட்டியிருந்தாகவும் பாதிக்கப்பட்ட மாணவர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்தைக் கேள்வியுற்ற பெற்றோர், பாடசாலை முடிவுறும் நேரத்தில், தமது பிள்ளைகளை அழைத்துச் செல்ல சகல பாடசாலைகளுக்கும் விரைந்து சென்றதைக் காணக் கூடியதாக இருந்தது என எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்
மேலும் இங்கே தொடர்க...

சீனாவில் தாய்-மனைவி உள்பட 8 பேரை கொன்ற வாலிபர்


சீனாவில் ஜியாங்கி மாகாணத்தில் உள்ள செஞ்சியான் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஷியோயெஷ்காங் (36). இவர் தனது 80 வயது தாயார் மற்றும் மனைவி குழந்தைகளுடன் உள்ளார். நேற்று இவர் தனது வீட்டுக்கு கொலை வெறியுடன் சென்றார். அப்போது அவரது தாயார் மற்றும் 10 வயது மகள் இருந்தனர். முதலில் தான் வைத்திருந்த கத்தியால் மகளை குத்திக் கொலை செய்தார்.

அத்துடன் அவரது கொலை வெறி அடங்கவில்லை. தனது தாயாரை நோக்கி கொலை செய்ய பாய்ந்தார். இதனால் பதறிய அவர் ஷியோயெஷ்காங் காலில் விழுந்து என்னை எதுவும் செய்து விடாதே என்று கெஞ்சினார்.

ஆனால், ஈவு இரக்கமின்றி அவரையும் சரமாரியாக குத்தினார். இதனால் அவரும் ரத்த வெள்ளத்தில் பலியானார். அதன் பின்னரும் கொலை வெறி அடங்காத அவர் தனது மற்றொரு வீட்டுக்கு சென்றார்.

அங்கு இருந்த தனது மனைவி மற்றும் பக்கத்து வீட்டுகாரர்கள் 2 பேரையும் கொலை செய்தார். எனவே, அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மக்கள் கூட்டம் கூடியது.

இதனால் மிரண்ட அவர் கூட்டத்தினரை கத்தியைக் காட்டி துரத்தினார். அவ்வாறு ஓடிய 3 பேரையும் குத்தி கொன்றார். மொத்தம் 8 பேரை கொலை செய்தார்.

இது குறித்த தகவல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து வந்து கொலையாளி ஷியோயெஷ்காங்கை சுற்றி வளைத்து கைது செய்தனர். கொலைக்கான காரணம் தெரியவில்லை.

எனவே, அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. சமீப காலமாக சீனாவில் குழந்தைகள் தான் பெருமளவில் கொலை செய்யப்பட்டு வருகிறார்கள்.

சமீபத்தில் பியூஜியின் மாகாணத்தில் டாக்டர் ஒருவர் பள்ளிக்குள் புகுந்து 8 குழந்தைகளை குத்தி கொன்றார். கடந்த சனிக்கிழமை ஹாங் நகரில் நடந்த சம்பவத்தில் 2 பேர் கொல்லப்பட்டனர். 3 பேர் காயம் அடைந்தனர்.

இது போன்ற கொலைகளுக்கு சீன மக்களிடம் ஏற்பட்டுள்ள மன அழுத்தமே காரணம் என கருதப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

கேரளத்தில் கைதான 30 ஈழத்தமிழர்களை தமிழ்நாட்டிற்கு அழைத்து வர வேண்டும்; டைரக்டர் சீமான் அறிக்கை



நாம் தமிழர் அமைப்பின் தலைவர் டைரக்டர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

இலங்கை போர் முடிந்து ஒரு வருடம் நிறைவடையும் நிலையில் முள்வேலி முகாம்களுக்குள் ஒரு லட்சம் மக்களை அடைத்து வைத்திருப்பதாக தெரிகிறது. முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்டதாக சொல்லப்படும் மக்களை கூட இலங்கை அரசுஎவ்விதமான அடிப்படை வசதிகளும் இல்லாத வனாந்தரங்களிலும், வெட்ட வெளி பொட்டல் காடுகளிலும் கொண்டு கொட்டுவதாக தெரிகிறது. உடுத்த உடையோ, குழந்தைகளுக்கு போதுமான ஊட்டச்சத்து மிக்க உணவுகளோ இல்லாமல் அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக இலங்கைக்குள் மடிந்து கொண்டிருக்கிறார்கள். வன்னி மக்களின் பாரம் பரீய வாழ்விடங்களை எல்லாம் ஆக்ரமித்து விட்ட சிங்களர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் சிங்கள ராணுவம் தமிழ் மக்களை அவர்களின் வீடுகளில் குடியேற விடாமல் தடுத்து வருகிறது. அவர்களின் விவசாய நிலங்கள் எல்லாம் சிங்களர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில் கொட்டப்பட்ட இடங்களில் இருந்து அவர்கள் உயிர் தப்ப ஓடுகிறார்கள்.

உயிரை கையில் பிடித்து கொண்டு ஓடுகிற ஈழமக்கள் மலேசியாவில், ஆஸ்திரேலியாவில், இந்தோனேசியாவில் சிறைபடுகிறார்கள். சித்ரவதைக்குள்ளாகிறார்கள். ஈழ மக்களின் நிராதரவான இந்த நிலை ஆழ்ந்த துக்கத்தையும், கவலையையும், கண்ணீரையும் ஏற்படுத்தும் நிலையில் வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவது போல் கேரளத்தில் நேற்று 30-க்கும் மேற்பட்ட ஈழ மக்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்ற செய்தி வந்திருக்கிறது. அவர்களிடம் முறையான பாஸ்போர்ட்டோ, விசாவோ இருக்கிறதா? என்று விசாரித்த கேரள போலீசார் வழக்கம் போல் அவர்கள் விடுதலைப்புலிகளா? என்று விசாரித்துக் கொண்டிருக்கிறார்களாம். நிராதவரான முறையில் உயிர் தப்பி ஓடும் ஈழ மக்களிடம் எப்படி பாஸ்போர்ட்டும், விசாவும் இருக்கும். நிற்கவோ, படுத்து உறங்கவோ, உறவுகளோடு வாழவோ முடியாத நிலையில் ஓடும் ஈழ அகதிகளின் துன்ப வாழ்வை புரிந்து கொள்ள வேண்டும். உடனடியாக தமிழக அரசு தலையிட்டு கேரளத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஈழ அகதிகளை பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் அவர்களை இலங்கை அரசிடம் ஒப்படைத்து விடும் மனித நேயமற்ற செயலை செய்துவிடக்கூடாது. அபாயகரமான சூழலுக்குள் சிக்கி கொண்டிருக்கும் ஈழ மக்களின் துன்பங்களை தமிழக அரசு புரிந்து செயல் பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

பிர​பா​க​ரன் பெயரை பச்சை குத்​தி​ய​வர் சாவு விடு​த​லைப்பு​லியா என விசா​ரணை


கோவை,​​ மே 9: மார்​பில் "வேலுப்​பிள்ளை பிர​பா​க​ரன்' என்று பச்சை குத்​தி​ய​வர் தாரா​பு​ரத்​தில் மயங்கி விழுந்து இறந்​தார்.​ அவர் விடு​த​லைப்பு​லியா,​​ இலங்கை அக​தியா என போலீ​ஸக்ஷ்ர் விசா​ரிக்​கின்​ற​னர்.​

தி​ருப்​பூர் மாவட்​டம்,​​ தாரா​பு​ரத்​தில் சாலை​யோ​ர​மாக 45 வயது நபர் வெள்​ளிக்​கி​ழமை நடந்து சென்று கொண்​டி​ருந்​தார்.​ கடும் வெயில் கார​ண​மாக அவர் திடீ​ரென மயங்கி விழுந்​துள்​ளார்.​ அப்​ப​குதி மக்​கள்,​​ அவரை மீட்டு தாரா​பு​ரம் அரசு மருத்​து​வ​ம​னை​யில் அனு​ம​தித்​துள்​ள​னர்.​ ​ம​ருத்​து​வர்​கள் தீவிர சிகிச்சை அளித்​தும்,​​ அவ​ருக்கு நினைவு திரும்​ப​வில்லை.​ அவ​ரது மார்​பில் "வேலு​ப்பிள்ளை பிர​பா​க​ரன்' என்று பச்சை குத்​தப்​பட்​டி​ருந்​தது.​ மேல் சிகிச்​சைக்​காக கோவை அரசு மருத்​து​வ​ம​னைக்கு அவர் கொண்டு வரப்​பட்​டார்.​ ​

தீ​விர சிகிச்சை பிரி​வில் அனு​ம​திக்​கப்​பட்டு,​​ சிகிச்சை அளிக்​கப்​பட்டு வந்​தது.​ இந்​நி​லை​யில்,​​ ஞாயிற்​றுக்​கி​ழமை அதி​காலை 3.30 மணி​ய​ள​வில் சிகிச்சை பல​னின்றி இறந்​தார்.​ இது​கு​றித்து ரேஸ்​கோர்ஸ் போலீ​ஸக்ஷ்​ருக்கு தக​வல் தெரி​விக்​கப்​பட்​டது.​

வி​டு​த​லைப் புலி​க​ளின் தலை​வர் பிர​பா​க​ரன் பெயரை பச்சை குத்தி இருப்​ப​தால்,​​ இலங்கை அக​தி​யாக இருக்க வாய்ப்பு இருக்​க​லாம் என்ற கோணத்​தில் உள​வுப் பிரிவு விசா​ரித்து வரு​கின்​ற​னர்.​ ​

இ​றந்​த​வ​ரின் புகைப்​ப​டத்தை கோவை​யில் உள்ள இலங்கை அக​தி​கள் முகாம்​க​ளில் தங்​கி​யுள்​ள​வர்​க​ளி​டம் காட்டி அடை​யா​ளம் காணும் முயற்​சி​யி​லும் போலீ​ஸக்ஷ்ர் ஈடு​பட்​டுள்​ள​னர்.​

இ ​றந்​த​வ​ரின் அடை​யா​ளம் தெரி​யா​த​தால்,​​ இவர் விடு​த​லைப் புலி​யாக இருக்​கக் கூடுமோ என்ற கோணத்​தி​லும் க்யூ பிரிவு போலீ​ஸக்ஷ்ர் விசா​ரணை நடத்தி வரு​கின்​ற​னர்.​

இ​து​கு​றித்து அரசு மருத்​து​வ​மனை மருத்​து​வர்​க​ளி​டம் கேட்​ட​போது,​​ "சாலை​யில் நடந்து செல்​லும்​போது இவ​ருக்கு கடும் முடக்​கு​வா​தம் ஏற்​பட்​டுள்​ளது.​ அதன் கார​ண​மாக சுய​நி​னைவை இழந்​துள்​ளார்.​ அவ​ருக்கு தீவிர சிகிச்சை அளித்​தும்,​​ பல​னின்றி இறந்​து​விட்​டார்' என்​றார்.​
மேலும் இங்கே தொடர்க...

கப்பம் கோரும் சம்பவங்கள் வவுனியாவில் அதிகரிப்பு : ததேகூ தெரிவிப்பு

யுத்த சூழ்நிலைக்கு பின்னர் வவுனியா மாவட்டத்தில் தொலைபேசியூடாகக் கப்பம் கோரும் சம்பவங்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

வவுனியா மகா வித்தியாலயத்தின் தரம் 5 ஆண்டு பாடசாலை மாணவர் ஒருவரைக் கடத்தப் போவதாகக் கூறி, அவரது தந்தையாரிடம் (பாடசாலை அதிபர்) 5 லட்சம் ரூபாவைக் கோரியது தொடர்பில் அவரிடம் கேட்ட போதே, நாடாளுமன்ற உறுப்பினர் எமது இணையத்தளத்திற்கு இவ்வாறு தெரிவித்தார்.

அதேவேளை, வவுனியா மாவட்டத்தில் வர்த்தகர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களிடம் கப்பம் கோரும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்த அவர், கடத்தல் சம்பவங்கள் குறித்துப் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

இதையடுத்து தமிழக அரசுக்குப் பதில் கடிதம் அனுப்பியுள்ளது. மத்திய அரசு.


பார்வதி அம்மாளுக்கு தமிழகத்தில் சிகிச்சை : மத்திய அரசு அனுமதி
பார்வதி அம்மாளுக்கு தமிழகத்தில் சிகிச்சையளிக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இது குறித்துத் தமிழக அரசு தரப்பில், முதல்வர் கருணாநிதி மத்திய அரசுக்குக் கடிதம் அனுமதி கோரியிருந்தார்.


"பார்வதி அம்மாள் மீதான தடை நீக்கப்படும். அவர் இந்தியா வருவதற்கு 6 மாத கால விசா வழங்கப்படும்" என்று தெரிவித்துள்ளது.

மேற்கண்ட இந்தத் தகவல் இன்று சட்டமன்றத்தில் 110 தீர்மானத்தின் கீழ் அறிவிக்கப்பட்டது.

பிரபாகரன் தாயார் பார்வதியம்மாள் சிகிச்சைக்காக மலேசியாவில் இருந்து சென்னை வந்தார். அவர் விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டார்.

இது குறித்து தமிழக அரசு வக்கீல் ராஜா கலிபுல்லா, பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாளிடம் இருந்து அரசுக்கு இதுவரை எந்தக் கோரிக்கையும் வரவில்லை. அவர் மனு கொடுத்தால் அதை மத்திய அரசுக்கு அனுப்பி அனுமதி கேட்கப்படும். அதன் அடிப்படையில் சிகிச்சைக்கு அனுமதிக்க தயார் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தமிழகத்தில் மருத்துவ சிகிச்சை பெற, மலேசியாவில் இருந்து திருச்சி வருவதற்கு, இந்திய தூதரகத்தின் மூலமாக ஏற்பாடு செய்து தருமாறு பார்வதி அம்மாள், முதல்வர் கருணாநிதிக்குக் கடிதம் எழுதினார்.

பார்வதி அம்மாவுக்கு தமிழகத்தில் சிகிச்சை அளிக்க அனுமதி தர பரி்ந்துரை செய்து முதல்வர் கருணாநிதி மத்திய அரசுக்கு முதல்வர் எழுதினார்.

மேலும் நிபந்தனைகளை ஆராய்ந்து பார்வதி அம்மாள் சிகிச்சைக்கு அனுமதி தரலாம் என்று தமிழக அரசு பரிந்துரை செய்வதாக மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம் எழுதியிருப்பதாக சட்டசபையில் விதி எண் 110 கீழ் துணை முதல்வர் ஸ்டாலின் தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து மத்திய அரசு பார்வதி அம்மாள் மீதான தடையை நீக்கி, இந்தியா வர அனுமதி அளித்துள்ளது.

அதேவேளை, அரசியல் கட்சியினர், தடை செய்யப்பட்ட இயக்கத்தினர் பார்வதி அம்மாளைச் சந்திக்கக் கூடாது என்று மத்திய அரசு தடை விதித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

கல்விக்கென தனியான தொலைக்காட்சி : அமைச்சர் தகவல்

கல்விக்கெனத் தனியான தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றை அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளது.

இது தொடர்பில் தகவல், ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இதற்கான தொழில்நுட்ப உதவிகளை வழங்க 'யுனெஸ்கோ' நிறுவனம் முன்வந்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்தார்
மேலும் இங்கே தொடர்க...

எம்டிவி நிறுவன தாக்குதல் : சந்தேக நபர்கள் பிணையில் விடுதலை

எம்டிவி,எம்பிசி நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களில் 14 சந்தேக நபர்களை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று பிணையில் விடுதலை செய்தது.

மேற்படி நபர்கள், முன்னர் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

எம்டிவி, எம்பிசி நிறுவனங்கள் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதாக 16 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்களில் இரு சந்தேக நபர்கள் இன்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவில்லை.
மேலும் இங்கே தொடர்க...

ஆஸ்திரேலியா சென்ற படகு பழுதடைந்ததில் 5 இலங்கையர் பலி

ஆஸ்திரேலியாவில் தஞ்சம் புக சென்ற 64 இலங்கைத் தமிழர்களின் படகு பழுதடைந்ததால், கடலில் மூழ்கி 5 பேர் பலியாகி வி்ட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேற்படிப் படகு ஆஸ்திரேலியா அருகே இந்தியப் பெருங்கடலில் சென்று கொண்டிருந்த போது பழுதடைந்தது.

நடுக்கடலில் சிக்கித் தவித்த இவர்களை நேற்று முன்தினம் அந்த வழியே சென்ற ரஷ்ய கப்பல் ஒன்று மீட்டது. அதில் 59 பேர் மட்டுமே இருக்கக் காணப்பட்டனர். 5 பேரைக் காணவில்லை. அவர்கள் அணிந்திருந்த உயிர்காப்பு கவசங்கள் அந்தப் பகுதியில் மிதந்தன.

மீட்கப்பட்ட பயணிகளுடன், அவர்கள் வந்த படகையும் கட்டி இழுத்துச் சென்ற ரஷ்ய கப்பல், நேற்று காகஸ் தீவை அடைந்தது. அவர்கள் அனைவரும் அருகில் உள்ள கிறிஸ்மஸ் தீவில் உள்ள ஆஸ்திரேலிய முகாமுக்கு அழைத்துச் செல்லப்படுவர் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. காணாமல் போன 5 தமிழர்களும் பலியாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல முயன்ற 36 இலங்கைத் தமிழர்



உரிய ஆவணங்கள் இல்லாமல் ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல முயன்ற 36 இலங்கைத் தமிழர்களை இந்தியாவில் கேரள மாநில போலீசார் தடுத்து வைத்திருக்கிறார்கள்.

ஐந்து பெண்கள், ஐந்து குழந்தைகள் உள்பட 36 இலங்கைத் தமிழர்களும் தமிழ்நாட்டில் சென்னை நகரில் இருந்து பல்வேறு வழிகளில் கேரள மாநிலம் கொல்லம் நகருக்கு வந்திருக்கிறார்கள்.

ஹோட்டலில் தங்கியிருந்த இவர்களை தமிழக போலீசார் கொடுத்த தகவலின்பேரில் பிடித்துள்ள கொல்லம் போலீசார், என்ன காரணத்துக்காக அவர்கள் அங்கு வந்தார்கள் என விசாரித்து வருகிறார்கள்.

இதுதொடர்பாக பிபிசி தமிழோசையிடம் பேசிய கொல்லம் நகர போலீஸ் கண்காணிப்பாளர் ஹர்ஷிதா அடலூரி, இலங்கைத் தமிழர்கள் கைது செய்யப்படவில்லை என்றும், விசாரணை மட்டுமே நடத்தப்படுவதாகவும், அவர்களுக்கு எதிராக சந்தேகப்படும்படியான நடவடிக்கைகளோ, ஆவணங்களோ இல்லை என்றும் தெரிவித்தார்.

அதே நேரத்தில், அவர்களை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பிவைப்பதாகக் கூறி, அவர்களிடமிருந்து 2 லட்சம் மூதல் 5 லடசம் ரூபாய் வரை பணம் வசூலித்த சிவா, டெனிஸ் ஆகிய இரண்டு ஏஜென்டுகள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்திருப்பதாகவும் போலீஸ் கண்காணிப்பாளர் ஹர்ஷிதா அடலூரி தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

விமல் வீரவன்ச மாங்குளம் விஜயம்






முல்லைத்தீவு மாவட்டத்தில் மாங்குளத்திற்கு விஜயம் செய்து தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் புதிய அலுவலகத்திற்கான அடிக்கல்லை நாட்டி வைத்த புதிய வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் விமல் வீரவன்ச, தேசிய வீடமைப்பு திட்டத்தின் கீழ் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வீட்டுப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும் என உறுதியளித்துள்ளார்.

வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றதன் பின்னர் அவர் கலந்து கொண்ட முதலாவது வைபவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டிய பொறுப்பு அரசாங்கத்தைச் சார்ந்தது என்றும், இதற்காக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் பல்வேறு அமைச்சுக்களின் ஊடாகச் செயற்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மீளக்குடியமர்ந்துள்ள மக்களுக்குப் பல்வேறு சேவைகளை வழங்கப்பட்டு வருகின்ற போதிலும், அவற்றில் காணப்படுகின்ற குறைபாடுகளை இனம் கண்டு அவற்றைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

வீதிகளில் நிற்கின்றோம்''



2008 ஆம் ஆண்டில் குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள்
கொழும்பு கொம்பனித் தெரு பிரதேசத்தில் உள்ள குடியிருப்புகள் பல சட்டவிரோதமானவை என அறிவிக்கப்பட்டு அகற்றப்பட்டுள்ள நிலையில் வசித்து வந்த மக்கள் செல்லும் வழியின்றி வீதிகளில் நின்று கொண்டிருப்பதாக தெரிவிக்கின்றனர்.

இந்தப் பிரதேசத்தில் உள்ள மக்கள் குடியிருப்புகள் பல சட்டவிரோத குடியிருப்புகள் என அறிவிக்கப்பட்டு நகர அபிவிருத்தி அதிகாரசபையால் இடித்து அகற்றப்பட்டுள்ளன.

பல வருடங்களாக தாம் வசித்து வந்த இந்த வீடுகளுக்கு தாங்கள் வரிசெலுத்திவந்துள்ளதாகவும், ஜனாதிபதி பிரேமதாச ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்ட உரிமைப்பத்திரங்கள் தம்மிடம் இருந்த போதிலும் தாம் பலவந்தமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் அந்த மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

போதுமான கால அவகாசம் வழங்கப்படாமல் தாம் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தமக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள தற்காலிக தங்குமிடங்கள் வசிப்பதற்கு உகந்தவை அல்லவெனவும் அவர்கள் தமிழோசையிடம் தெரிவித்தனர்.

இதற்கிடையில் இந்த மக்களின் பிரச்சனை தொடர்பில் கவனம் செலுத்தி அவர்களுக்கான மாற்றிடங்களை வழங்க அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்துவருவதாக இம்முறை ஆளுங்கட்சி வேட்பாளராக கொழும்பில் போட்டியிட்டவரும் முன்னாள் கொழும்பு மாநாகர பிரதி மேயராக இருந்தவருமான அசாத் சாலி தமிழோசையிடம் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

‘அரந்தலாவ கொலைகளுக்கும் எனக்கும் தொடர்பில்லை’ பிரதியமைச்சர் முரளிதரன்






அரந்தலாவையில் பெளத்த பிக்குகளும் சிவிலியன்களும் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கும் தனக்கும் தொடர்பில்லையென பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

கண்டிக்கு நேற்று விஜயம் செய்த பிரதியமைச்சர் முரளிதரன், அஸ்கிரிய, மகாநாயக்க தேரர்களைச் சந்தித்துப் பேசும் போதே மேற்கண்டவாறு கூறினார்.

‘அரந்தலாவ பெளத்த குருக்கள் மற்றும் அப்பிரதேச சிவிலியன்கள் ஆகியோர்களினது கொலைச் சம்பவத்திற்கும் எனக்கும் எவ்வித தொடர்புமில்லை. நான் அப்போது யாழ்ப்பாணத்தில் பிரபாகரனோடு செயலாற்றி வந்தேன்.’ ‘பொட்டு அம் மான், நியூட்டன், குமாரப்பா போன்றோரே இதனைச் செய்தனர்.

இந்த விடயம் இராணுவத்தினருக்கும் நன்கு தெரியும். வீணாக என்மீது பழி சுமத்தப்படு கிறது’ என்றும் அவர் தெரிவித்தார். பிரதி அமைச்சர் அங்கு கருத்துத் தெரிவிக்கையில் :-

1,63,000 பேர் அகதிகள் தற்போது அவர்களினது சொந்த இடங்களுக்கு மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் ஏனைய வசதிகள் செய்யப் பட்டுள்ளன. எனினும் இவர்கள் நிரந்தரமான இயல்பு வாழ்க்கை யைப் பெறுவதற்கு அவர்களுக்கான அடிப்படை வசதிகளான குடியிருப்பு கள், சுகாதாரம் உள்ளிட்ட அனைத் தும் செய்து தர வேண்டும். ஆகவே இதற்காக சகல அமைச்சர்களிடமும் கலந்தாலோசித்து துரித நடவடிக்கை களை மேற்கொள்ளவுள்ளேன்.

அகதிகளாகவும் அநாதை களாகவும் உள்ள மக்களின் வாழ்வாதார சுபீட்சத்திற்காக தமிழ், முஸ்லிம், சிங்களமென்ற வேறு பாடின்றி பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நான் சமமான சேவை களை பெற்றுக் கொடுப்பதற்கு ஜனாதிபதியினதும் அரசாங்கத் தினதும் அமைச்சுகளினதும் உதவி கள் கிட்டும் என்பதில் எனக்கு எவ்வித ஐயமுமில்லை எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

பிரான்ஸ், இத்தாலியில்விமான இயக்கம் பாதிப்பு



லண்டன்:ஐஸ்லாந்து எரிமலைச் சீற்றத்தால் பிரான்ஸ், இத்தாலி நாடுகளில் விமான போக்குவரத்து மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது.ஐஸ்லாந்தில் உள்ள எரிமலையில் கடந்த மாதம் 14ம் தேதி சீற்றம் ஏற்பட்டது. இதில் இருந்து வெளியேறிய சாம்பல் புகை மண்டலம், ஐரோப்பா வான் பகுதி முழுவதும் பரவியது. இதனால், ஐரோப்பிய நாடுகளிலும், மற்ற நாடுகளிலும் விமான போக்குவரத்து முடங்கியது. பல ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது.ஐஸ்லாந்து எரிமலையில் தற்போது மீண்டும் சீற்றம் ஏற்பட்டுள்ளது. அதில் இருந்த வெளியேறிய புகையில், சாம்பல் துகள்கள் அதிகம் காணப்பட்டன. இவை, விமான இன்ஜினுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், பிரான்ஸ், இத்தாலி, போர்ச்சுக்கல் ஆகிய நாடுகளில் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இந்த நாடுகளில் உள்ள பெரும்பாலான விமான நிலையங்கள் மூடப்பட்டன.
மேலும் இங்கே தொடர்க...

பயங்கரவாதிகளை ஒழிக்க பாகிஸ்தானுக்கு கண்டிப்பு


நியூயார்க்:'பாகிஸ்தானின் வடக்கு வாசீரிஸ்தான் பகுதியில் உள்ள பயங்கரவாதிகளை விரைவில் ஒழித்துக் கட்டுங்கள்' என, அந்நாட்டு அரசை அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது.பாகிஸ்தான் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் கூறியதாக, 'நியூயார்க் டைம்ஸ்' பத் திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க ராணுவ கமாண்டர் ஜெனரல் ஸ்டான்லி கிரைஸ்டல் நேற்று முன்தினம் இஸ்லாமாபாத்தில், பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் அஷ்பக் பர்வேஸ் கயானியை சந்தித்துப் பேசினார்.

அப்போது, பாகிஸ்தானின் வடக்கு வாசீரிஸ்தான் பகுதியில் உள்ள அல்-குவைதா மற்றும் தலிபான் பயங்கரவாதிகளை ஒழித்துக் கட்ட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை பாகிஸ்தான் அரசு தீவிரமாக எடுக்க வேண்டும் என, கேட்டுக் கொண்டார்.இதற்கு பதிலளித்த பாகிஸ்தான் ராணுவ தளபதி, 'கைபர் கணவாய் பகுதியில் பயங்கரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கைகளை பாக்., அரசு முடித்து விட்டது. அடுத்த கட்டமாக தெற்கு வாசீரிஸ்தானில் அதிரடி வேட்டையை துவக்கியுள்ளது. அதன்பின் வடக்கு வாசீரிஸ்தான் பகுதியில் நடவடிக்கை துவங்கும்' எனத் தெரிவித்தார்.இவ்வாறு பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தவிரவும், 'டைம்ஸ்' பத்திரிகையில், ஜிகாதி பயங்கரவாதிகளுக்கு பணம் மற்றும் ஆயுதங்களைத் தந்து உதவும், 'சூப்பர் மார்க்கெட்' போல பாகிஸ்தான் செயல்படுகிறது என்று கூறப்பட்டிருக்கிறது.
மேலும் இங்கே தொடர்க...