29 ஆகஸ்ட், 2010

இந்தோனேசியாவில் எரிமலைக் குமுறல்

இந்தோனேசியாவின் தீவுப் பகுதியான சுமாத்ராவில் உள்ள எரிமலைக்குழம்பிலிருந்து பெருமளவிலான அக்கினிக் குழம்புகள் வெளியேறுவதன் காரணமாக 1000 இற்கும் அதிகமான இந்தோனேசிய மக்கள் அப்பகுதியிலிருந்து வெளியேறியுள்ளனர்.

‘சினபங் என்ற இவ் எரிமலை 1,500 மீற்றர் உயரத்திற்கு நேற்று நடுநிசியில் வெடித்துள்ளது.400 வருடங்களுக்கு பிறகே சினபங் எரிமலை வெடித்துள்ளது’ என இந்தோனேசியாவின் அனர்த்த முகாமைத்துவ முகவர்நிலையம் தெரிவித்தது.

தேசிய அனர்த்த முன்னெச்சரிக்கை நிலையம் இது குறித்து தெரிவிக்கையில்,

‘ எரிமலை வெடிப்பு முன்னெச்சரிக்கை அளவானது அதிகரித்தவண்ணம் உள்ளது. எரிமலையிலிருந்து வெளியேறும் புகையின் அளவு அதிகரித்துள்ளது. இந்நிலை ஆபத்தானதாக உள்ளது’ எனத் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

கடந்த கால யுத்தப் பாதிப்புகளுக்கு இருசாராருமே பொறுப்பு:மில்ரோய் பெர்னாண்டோ

கடந்தகால யுத்தம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இருசாராரும் பொறுப்பாகும் என மீள்குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ தெரிவித்தார். பெரிய புல்லுமலைப் பிரதேசத்தில் மீளக்குடியமர்ந்துள்ளவர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிதல் சம்பந்தமான கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற வேளையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எல்லைக் கிராமங்களான பெரிய புல்லுமலை, சிப்பிமடு, கோப்பாவெளி, சமகிபுர, பதியத்தலாவ போன்ற இடங்களிலிருந்து இடம்பெயர்ந்த சிங்கள மக்கள் மகா ஓயா பிரதேச செயலாளர் பிரிவுகளில் தங்கியுள்ளனர். நீங்கள் உங்களுடைய சொந்த இடங்களுக்குச் சென்று இருந்தால் அங்கு அனைத்து விதமான வசதிகளையும் செய்து தருவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். உங்களுடைய பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதே எங்களுடைய நோக்கமாகும்.

உங்களுக்கான தேவைகளை நிறைவேற்றும் வகையில் அதற்கான நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுத்து நாங்கள் கொழும்பு சென்றவுடன் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதுடன் மீள்குடியேற்றம் தொடர்பான குழுவினரையும் சந்தித்து வெகுவிரைவில் தீர்வுகளைத் தருவோம் என உறுதியளிக்கிறோம்.

மீள்குடியேற்றப்பிரதி அமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன், உரையாற்றுகையில்: புல்லுமலைப்பிரதேசம் மிகவும் முக்கியமான பிரதேசமாகும். ஏனென்றால் தமிழ், சிங்கள மக்கள் இணைந்து சந்தோசமாக வாழ்ந்த பிரதேசம் என்பதுடன் மிகவும் வளமான பிரதேசமும் ஆகும். யுத்தம் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தி விட்டது. ஆரம்பத்தில் எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டுக் குடியமர வரும்படி சொன்னபோது யாரும் வரவில்லை. வீடுகளும் அமைக்க சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இப்பொழுது அனைவரும் வர விரும்புகின்றமை மகிழ்ச்சியான விடயம்.

இப்போது அபிவிருத்தித் திட்டங்கள் யாவும் வடக்குக்குத் திருப்பப்பட்டுள்ளமையால் மிகக்குறைந்த அளளவிலேயே இங்கு வேலைகளைச் செய்ய முடிகிறது. வீட்டுத் திட்டங்களுக்காகவும் ஏனைய அபிவிருத்தி சார்ந்த விடயங்களுக்காகவும் நாங்கள் பல்வேறு தரப்பினருடனும் கதைத்துக் கொண்டிருக்கின்றோம்.
மேலும் இங்கே தொடர்க...

மு.கா அரசுக்கு ஆதரவு குறித்து கருத்து கூறமுடியாது:அரியநேந்திரன்

முஸ்லிம் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு வழங்குவது அக்கட்சியின் முடிவாகும் இதுகுறித்து எவ்வித கருத்தும் தெரிவிக்க முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ப.அரியநேந்திரன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு வழங்கினாலும் அரசுடன் இணைந்தாலும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையிலான உறவு தொடரும். வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகள் என்று வரும்போது இருதரப்பும் இணைந்தே செயற்படும்” எனத் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் நாளை இலங்கை விஜயம்

இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் நிருபமா ராவ் நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நாளை இலங்கை வரவுள்ளார்.

வடக்கு, கிழக்கு மாகாணத்தில் நடைபெற்றுவரும் மீள்குடியேற்றம், வாழ்வாதாரம் ஆகியவை தொடர்பான நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக அவர் இலங்கை வரவுள்ளார்.

இவரது விஜயத்தை அடுத்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம் கிருஷ்ணா எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

சட்டவிரோத பதாகைகளை அகற்ற காலக்கெடு

கொழும்பு மாநகரசபை எல்லைக்குற்பட்ட பகுதிகளில் உள்ள சட்டவிரோத விளம்பர பதாகைகளை அகற்றுவதற்கு காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது என கொழும்பு மாநகரசபையின் விசேட ஆணையாளர் ஒமர் காமில் தெரிவித்தார்.

இது பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில்,.

“சட்டவிரோதமாக ஒட்டப்பட்டுள்ள விளம்பரப் பதாகைகளை அகற்றுவதற்கு இருவார காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு அகற்றப்படாவிடின் அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். மேற்படி பதாகைகள் கொழும்பு மாநகரசபையின் அனுமதியின்றி பொது இடங்களிலும் தனியாருக்கு சொந்தமான இடங்களிலும் ஒட்டப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

தமிழ் அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதை எதிர்த்து கனடாவில் ஆர்ப்பாட்டம்

இலங்கைத் தமிழ் அகதிகள் 492 பேரை கனடிய அரசாங்கம் தடுப்புக் காவலில் வைத்திருப்பதை எதிர்த்து சுமார் 100 ஆதரவாளர்கள் கடந்த சனிக்கிழமை வன்கூவர் கலாபவனத்தில் ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.

சில வாரங்களுக்கு முன்னர் சன் சீ கப்பல் மூலம் தமிழ் அகதிகள் பிரிட்டிஷ் கொலம்பியாவை சென்டைந்தமை குறிப்பிடத்தக்கது.இதில் பயணித்த 492 பேரும் குடிவரவு குறித்த நடைமுறைகளின் பேரில் பிரிட்டிஷ் கொலம்பியா சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

'அகதிகள் தொடர்பில் விரோத எண்ணமும் அச்சமும் தெரிவிக்கப்பட்டு வருவதைக் கண்டு நாம் ஆழ்ந்த கவலையடைந்துள்ளோம். அரச அதிகாரிகள் அகதிகள் குறித்து பயங்கரவாதிகள், குற்றச் செயலில் ஈடுபட்டோர் என்ற எண்ணங்களையே கொண்டுள்ளனர்" என ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தவரான ஹர்ஷா வாலியா தெரிவித்தார்.

இதேபோன்று அகதிகள் ஆதரவு கூட்டங்கள் விக்டோரியா, டொரன்டோ ஒட்டாவா, மொன்ட்றியல் மற்றும் கிச்சனர் வாட்டர்லூவிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

சீமானை விடுதலை செய்யக்கோரி கனடா, இந்திய தூதரகம் முன் ஆர்ப்பாட்டம்
சீமானை விடுதலை செய்யக்கோரி கனடா, இந்திய தூதரகம் முன் ஆர்ப்பாட்டம்
சீமானை விடுதலை செய்யக்கோரி கனேடிய தமிழ் சமூகம் நடத்திய அமைதி வழிப்போராட்டம் நேற்று முந்தினம் வெள்ளிக்கிழமை ரொரன்ரோவில் உள்ள இந்தியத் தூதரகம் முன்பாக புலம்பெயர் தமிழர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்தினர்.

மாலை இரண்டு மணிவரை நடைபெற்ற இந்த போராட்டம் இரவு ஏழு மணிவரை தொடர்ந்தது.இந்தியாவுக்கு எதிரான சுலோகங்களைக் கைகளில் தாங்கி இருந்தார்கள்.
மேலும் இங்கே தொடர்க...