14 டிசம்பர், 2009

தேர்தல் செயலகத்துக்கு இன்று முதல் விசேட பாதுகாப்பு

Sri Lanka Navy (SLN) vessels

தேர்தல் செயலகத்துக்கு இன்று முதல் விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஜனவரி மாதம் முடிவடையம் வரை இந்த விசேட பாதுகாப்பு அமுலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் திணைக்களத்தின் பிரதான செயலகத்துக்கு முன்பாக பொலிஸ் சோதனை முகாம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 15 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வெலிகட பொலிஸார் இந்தச் சோதனை முகாமுக்கு பொறுப்பாகச் செயற்படுவர்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட இதுவரையில் 12 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகவும் தேர்தல் செயலகம் அறிவித்துள்ளது
மேலும் இங்கே தொடர்க...
மனோ கணேசன் - சரத் பொன்சேகா விசேட சந்திப்பு


Wind Mill

ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் எதிர்க்கட்சிகளின் சார்ப்பில் பிரதான ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் ஜெனரல் சரத் பொன்சேகாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற இப்பேச்சுவார்த்தையின் போது ஜனநாயக மக்கள் முன்னணியின் முக்கிய பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டுள்ளனர். இது தொடர்பாக அக்கட்சி விடுத்துள்ள அறிக்கையில்,

சரத் பொன்சேகா ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறும் பட்சத்தில் அதனையடுத்து பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று புதிய அரசாங்கம் பதவியேற்கும் இடைப்பட்ட காலத்திற்குள் உடனடியாக கவனத்தில் எடுக்கப்படவேண்டிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இவ்விடயங்களில் தமிழ் மக்கள் தொடர்பிலான உடனடி பிரச்சினைகளான தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகள், காணாமல் போனோர், போராளிகளின் புனர்வாழ்வு, யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்தவர்கள், 1983 முதல் உள்நாட்டிலும், வெளிநாட்டிற்கும் இடம்பெயர்ந்தோர் மற்றும் அவர்களது மீள்குடியேற்றம், உயர் பாதுகாப்பு வலயங்கள் காரணமாக இடம்பெயர்ந்தோர் மற்றும் அவர்களது நிலங்கள் மீள கையளிக்கப்படல், யாழ் முஸ்லிம் அகதிகளின் மீள் குடியேற்றம் மலையகத்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்நிலைமைகள் ஆகியவை சம்பந்தமாக விரிவாக பேசப்பட்டது.

குறிப்பாக மனோ கணேசன் எம்பி கடந்தவார இறுதியில் யாழ்ப்பாணம் சென்றபொழுது அங்கு அவரை சந்தித்த யாழ் பல்கலைக்கழக சமூகத்தை சார்ந்த விரிவுரையாளர்கள், மாணவர்கள், யாழ் வணிக கழகத்தினர், யாழ் கத்தோலிக்க பேராயர் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள், நல்லை ஆதீன கர்த்தா மற்றும் இந்து சமூகத்தினர், யாழ் இஸ்லாமிய பள்ளிவாசல் சபையினர், அரச சார்பற்ற நிறுவத்தினர், ஊடகவியலாளர்கள் ஆகியோர் தெரிவித்திருந்த கருத்துகள் சரத் பொன்சேகாவிடம் தெரிவிக்கப்பட்டன எனக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் சரத் பொன்சேகாவுக்கு மனோ கணேசனுக்கும் இடையில் நடைபெற்ற விரிவான பேச்சுவார்த்தை தொடர்பான அறிக்கையை விரைவில் ஊடகங்களுக்கு வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இங்கே தொடர்க...

jkpo;fl;rpfspd; jiytHfSf;F gzpthd Ntz;LNfhs;

tlfpof;F jkpo;fl;rpfspd; jiytHfs; kpfTk; epjhdj;Jld; nraw; glNtz;baJ fhyj;jpd; fl;lakhFk;. Xt;nthU fl;rpfSk; jkJ nfhs;iffSf;F mg;ghy; nrd;W jkpo; NgRk; kf;fspd; vjpHfhy murpay; tpbTf;fhf xUkpj;j fUj;Jld; vjpHtUk; Idhjpgjpj; NjHjypy; ahiu Mjhpg;gJ vd;gij jPHkhdpf;fNtz;Lk;.

,d;iwa #o;epiyapy; tlf;F fpof;F jkpohpd; thf;Ffs;jhd; mLj;j Idhjpgjp ahnud;gij jPHkdpf;Fk; rf;jpahf ,Uf;fpd;wJ vdNt fle;j fhyq;fspy; mjpGj;jprhypfshd GypfSk; mtHfspd; murpay; NkjhtpfSk; tpl;ljtWfis eptHj;jp nra;af;$ba jPHkhdj;ij vLf;fNtz;ba nghWg;G jq;fisr; rhHe;jjhFk;.

NjHjypy; Nghl;bapLk; Ntl;ghsHfs; midtUk; jkpo;kf;fspd; murpay; mgpyhi\ Fwpj;J jPHf;fkhd jkJ fUj;ij ,Jtiu Kd;tif;ftpy;iy fhuzk; jkpo;fl;rpfsplk; rhpahdJk; jPHf;fkhdJkhd xU Ghpe;JzHT ,y;yhkypUg;gJ jhd; vkJ thf;Ffs; rpjwbf;fg;gl Ntz;Lk; vd;gjw;fhf rpq;fsj; jiytHfs; fhyq;fhykhf vkf;fpilNa gphpj;jhYk; #o;r;rpia rhpahd topapy; ifahz;LtUfpwhHfs; mjw;F vkjpdj;ij ,dpAk; gypnfhLf;f KbahJ mjhdy; midj;J tlfpof;F jkpo;fl;rpfSk; jkJ fUj;J Kuz;ghLfis tpLj;J If;fpaj;Jld; vk; kf;fSf;fhd ahtUk; Vw;Wf;nfhs;sf; $ba Nfhhpf;ifia Kd;itf;fNtz;Lk;.

vkJ epahkhd Nfhhpf;ifia Vw;Wf;nfhs;Sk; Ntl;ghsUld; xU nghJTld;gbf;ifapy; ifrhj;jpl;L mjDlhf vkJ kf;fs; ahUf;F thf;fspf;f Ntz;Lk; vd;gij jPHkhdkhf nrhy;yNtzLk; fhuzk; xt;nthU fl;rpfSk; jkf;F VJthd Ntl;ghsUf;F jkpoHfs; thf;fspf;fNtz;Lnkd $Wtjhy;; kf;fs; ahUf;F thf;fspg;gJ vd;gJ Ghpahky; Fog;gepiyapy; ,Uf;fpd;whHfs; ,Jjhd; ajhHj;jk;.

ahH gjtpf;F te;jhYk; jkpohpd; mbg;gil gpur;ridfs; jPHf;fg;gl Ntz;Lk; vd;gjpy; cWjpahf ,Ug;gjhf $Wk; jiytHfs; eilKiwr; rhj;jpakhd nghJ Ntiyj;jpl;lk; xd;wpd;fPo; ,ide;J nray;gl Kbahky; ,Ug;gJ Ntjidf; Fhpatplak;. MfNt mLj;J tug;NghtJ nghJj; NjHjyhFk; mjpy; jkpo;fl;rpfs; midj;Jk; ,ize;J Nghl;bapl itg;gjw;F ,JnthU Kjy;gbahf miktjw;F ,izajs Clfj;jpdUk; gj;jphpf;if ez;gHfSk; ,f;fl;rpfs; kPJ mOj;jk; nfhLf;fKd;tuNtz;Lk; vd;gJ gyuJ vjpHghHg;ghFk;.

kj;jpafpofpypUe;J ckhtre;jd;

மேலும் இங்கே தொடர்க...

வடக்கு,கிழக்கு இணைப்புத் தொடர்பாக கிழக்கிலிருந்தே குரல் எழுப்ப வேண்டும் யாழ் பத்திரிகையாளர் மகாநாட்டில் புளொட் சித்தார்த்தன்!


புளொட் தலைவர் சித்தார்த்தன்நலன்புரி நிலையங்களில் உள்ள மக்களை மீளக்குடியமர்த்துவதில் ஜனாதிபதி மஹிந்த துரிதமாகச் செயல்பட்டுள்ளார். அத்துடன் 13ஆவது சட்டத் திருத்தத்திற்கு அமைவாக அரசியல் தீர்வுத் திட்டத்தை வழங்க ஜனாதிபதி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்த இரண்டு காரணங்களின் அடிப்படையில் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு நாம் ஆதரவை வழங்க முன்வந்துள்ளோம். இவ்வாறு புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் புளொட் அலுவலகத்தில் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

இந்த மாநாட்டில் அவர் மேலும் கூறியவை வருமாறு:
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான கட்சிகைளைச் சேர்ந்த இருவரும் தமிழ் மக்களுக்கான தீர்வுத் திட்டத்தைத் தரப்போவதில்லை. இருப்பினும் மஹிந்த ராஜபக்ஷவின் சில முன்மாதிரியான நடவடிக்கைகளை வைத்துப்பார்க்கும் போது சில காரியங்களை அவர் செய்வார் என நம்புகிறோம். இதனால்தான் மஹிந்த ராஜ பக்ஷவுக்கு ஆதரவை வழங்க நாம் தீர்மானித்தோம். எங்களைப் பொறுத்தவரை நலன்புரி நிலையங்களில் உள்ள மக்களை விடுவித்துஇ அவர்களை உடனடியாகக்குடிய மர்த்தும்படி ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தோம். அதன் பிரகாரம் கடந்த 6 மாதங்களில் அவர்கள் விடுவிக்கப்பட்டு மீள்குடியேற்றப்பட்டு வருகின்றனர். இம்மக்களை எமது கட்சி நேரில் போய்பார்வையிட்டது. எமது இக்கோரிக்கை நிறைவேற்றப்பட்டமையாலும்இ தீர்வுக்கான அடிப்படை விடயங்களில் ஜனாதிபதி கவனமெடுத்து வருவதாலும் மஹிந்தவை நாம் ஆதரிக் கின்றோம்.

மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்க முடியாது. அப்படி ஒரு ஆயுதப் போராட்டத்தை ஆரம்பிக்கும் நிலையில் நாம் இல்லை. யுத்தம் முடிவுக்கு வந்தபின்னர் எமது அமைப்பின் நிலைப்பாடு முற்று முழுக்க மாறிவிட்டது. நாம் முற்று முழுக்க ஜனநாயக வழியிலேயே செயற்பட்டு வருகிறோம். அரசியல் தீர்வுஇ மீள்குடியேற்றம் ஆகிய விடயங்களில் தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என நாம் விரும்புகிறோம். இதற்கு நாம் தயாராக இருக்கின்றபோதிலும் ஏனைய கட்சிகள் தயாராக இல்லை. தமிழ் பேசும் சக்திகள் ஒன்றுபட்டுச் செயற்பட்டால் இலங்கை அரசியலில் நாம் ஒரு பேரம் பேசும் சக்தியாக உருவாகலாம். அதற்கான அடித்தளம் இடப்படவேண்டும். சுவிஸ் மாநாட்டில் இடம்பெற்ற கலந்துரையாடல் மிக ஆரோக்கியமானது. தமிழ் பேசும் கட்சிகள் அங்கு ஒன்றாக இருந்தன. அவ்வாறான நிலை உருவாக்கப்பட வேண்டும். இது ஒரு நல்ல ஆரம்பமாகும்.

வடக்குஇ கிழக்கு இணைப்புத் தொடர்பாக கிழக்கிலிருந்தே குரல் எழுப்ப வேண்டும். கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் வடக்குஇ கிழக்கு இணைப்பை முன்வைத்துப் போட்டியிட்டவர்களில் இரா.துரைரத்தினம் மாத்திரமே உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் அதனையும் சாதிக்க முடியவில்லை. அனைவருடனும் இணைந்து செயல்பட நாம் தயாராக இருக்கிறோம். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் இணையத் தயாராக இல்லை. அந்த அமைப்பை வேறு ஒரு பெயரில் புதிதாக உருவாக்கி அந்த அமைப்புடன் ஒன்று பட்டுச் செயற்பட நாம் தயாராக இருக்கிறோம். எங்கள் மத்தியில் ஒருமித்த கருத்துஇ பன்முகத்தன்மை இருக்க வேண்டும். ஏகப்பிரதிநிதித்துவம் என்பது இருக்கக் கூடாது. ஜனநாயகம்இ பன்முகத்தன்மைஇ ஒருமித்த கருத்து இருந்தால்தான் அரசியலில் ஆரோக்கியமான சூழல் எம் மத்தியில் ஏற்பட வாய்ப்புண்டு. ஜே.வி.பி அழிக்கப்பட்ட போது அந்த அமைப்பிலிருந்த போராளிகளும் எதுவித பிரச்சினைகளுமின்றிச் சுதந்திர நடமாட்டத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். அதேபோல புனர்வாழ்வு முகாம்களில் உள்ள புலிகள் நிபந்தனையின்றி விடுவிக்கப்பட வேண்டும் என்றார்.

மேலும் இங்கே தொடர்க...
தேர்தலில் தமிழ் மக்கள் ஜனாதிபதியையே ஆதரிக்க வேண்டும் - கி.மா. முதலமைச்சர்

No Image

" ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தமிழ் மக்கள் நிதானமாக முடிவெடுக்கும் உரிமையை பெற்றிருந்தாலும் கிழக்கு மாகாண தமிழர்களைப் பொறுத்த வரை மாகாண சபையைப் பலப்படுத்த வேண்டுமென்றால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையே ஆதரிக்க வேண்டும்" என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் கூறுகின்றார்.

தேசிய இளைஞர்கள் சேவை மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகம் ஏற்பாடு செய்த, 'இளைஞர்களுக்கான விருது வழங்குதல்- 2009' நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு அவர் கூறினார்.

நேற்று மாலை மகாஜனாக் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக கலந்து கொண்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் மற்றும் மத்திய அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் எஸ்.எச்.அமீர் அலி ஆகியோர் மன்றத்தின் இளைஞர் சேவைகள் கழகங்கள் சார்பாகப் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய கிழக்கு மாகாண முதலமைச்சர்,
"தமிழ் மக்களைப் பொறுத்த வரை, இந்தத் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்ற குழப்ப நிலையில் இருப்பது போல் தெரிகின்றது. என்றாலும் அவர்கள் நிதானமாக சிந்தித்து எடுக்கும் முடிவில் தான் இம்மாகாணத்தின் எதிர்காலமே தங்கியுள்ளது.

கடந்த கால யுத்தத்னால் கிழக்கு மாகாணம் சமூக, பொருளாதார, அரசியல் ரீதியாக பாதிக்கப்பட்டுப் பின்தள்ளப்பட்டது. இதனைக் கட்டியெழுப்ப வேண்டிய தேவை இம் மாகாணத்தைச் சேர்ந்த சகல தரப்பினரதும் பொறுப்பாகும்.

தற்போது மாகாண சபை நிர்வாகம் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதற்கு இன்னமும் அதிகாரப் பகிர்வு தேவை. இதற்கான அதிகாரங்களைத் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் தான் வழங்க முடியும். இந்நிலையில் கிழக்கு மாகாண மக்கள் அவரையே ஆதரிக்க வேண்டும்" என்றார்
மேலும் இங்கே தொடர்க...
வாடகொரியாவிலிருந்து இலங்கை நோக்கி வந்த விமானம் : அமெரிக்கா ஆய்வு



No Image
ஆயுதங்களுடன் வடகொரியாவில் இருந்து இலங்கை நோக்கி வந்து கொண்டிருந்த விமானம் ஒன்று தாய்லாந்தில் வைத்து பறிமுதல் செய்யப்பட்டதாக நேற்றிரவு பரபரப்பான தகவல்கள் வெளியாகியிருந்தன.
தாய்லாந்தின் டொன்மியூங் விமான நிலையத்தில் விமானம் ஒன்று எரிபொருள் நிரப்புவதற்காக அவசரமாக தரையிறங்கியதைத் தொடர்ந்து, விமானத்தை தாய்லாந்து அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அந்த விமானத்தில் 35 தொன் ஆயுதங்கள் இருக்கக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஆனால் இந்த விமானம் இலங்கைக்குச் சொந்தமான ஆயுதங்களை சுமந்து வரவில்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஆனால் விமான ஓட்டி மற்றும் விமான சிப்பந்திகளின் தகவல்களின் படி இந்த விமானம் இலங்கைக்கே வந்ததெனத் தெரிவிக்கப்பட்டது.
அதே வேளை, இந்த ஆயுதங்கள் அல்கொய்தாவுக்கு இலங்கையூடாகத் தருவிக்கப்பட இருந்ததா எனவும் அமெரிக்க அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். காவிக்செல்லக் கூடிய பீரங்கி ஆயுதங்கள், ரொக்கட் புறோப்பெலர்கள், ஆர்.பி.ஜி கிரனேட்டுக்கள், விமான எதிர்ப்புப் பீரங்கிகள் ஆகியன அந்த விமானத்தில் வைக்கப்பட்டிருந்தன என்று தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
இலங்கையில் போர் முடிவடைந்த போதிலும் விமானம் மூலம் அங்கு ஆயுதங்கள் இதற்கு முன்னரும் எடுத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
சம்பந்தப்பட்ட விமானம் நேற்றுக் காலையிலும் டொன்மியூங் விமான நிலையத்தில் எரிபொருள்களை நிரப்பிக் கொண்டு வடகொரியா நோக்கிச் சென்றது என்றும் அங்கிருந்து திரும்பிவந்து நேற்றுப் பிற்பகலிலும் எரிபொருள் நிரப்புவதற்குத் தரை இறங்கக் கேட்டதாகவும்
இதற்கிடையில் அமெரிக்காவுக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான வான் போக்குவரத்து ஒப்பந்தத்துக்கு இணங்க குறிப்பிட்ட விமானம் கனரக ஆயுதங்களுடன் வருவதாக அமெரிக்கா, தாய்லாந்து விமான நிலைய அதிகாரிகளுக்கு அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து தாய்லாந்து அதிகாரிகளும் குறிப்பிட்ட விமானத்தை இறங்க அனுமதித்து, அதனையும் ஆயுதங்களையும் பறிமுதல் செய்து வைத்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் அரசாங்கத்தை நிறுத்துவதற்கு முயற்சி-அரசாங்கம்

No Image


சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கை அரசாங்கத்தை நிறுத்துவதற்கு முன்னாள் இராணுவ தளபதியும் எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளருமான ஜெனரல் சரத் பொன்சேகா முயற்சிக்கின்றார். இதற்கான சூழ்ச்சியினை வெளிப்படுத்தும் வகையில் அமைந்த அவரது கருத்தினை அரசாங்கம் முற்றாக மறுக்கின்றது. இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக சர்வதேச ரீதியில் பல்வேறு சதி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த சதி முயற்சியில் சிக்குண்ட நிலையிலேயே ஜெனரல் பொன்சேகா இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார் என்றும் அரசாங்கம் சுட்டிக்காட்டியது. வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போர் நடவடிக்கைகளின் போது பாதுகாப்பு தரப்பினரிடம் சரணடைய வந்த புலித் தலைவர்களில் சிலர் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் கட்டளைக்கமைய இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்று சரத் பொன்சேகா ஆங்கில ஊடகமொன்றுக்கு பேட்டியளித்துள்ளார். இதற்கு மறுப்புத் தெரிவிக்கும் வகையிலேயே அரசாங்கம் மேற்கண்டவாறான அறிவிப்பினை விடுத்தது. இதனை தெளிவுப்படுத்தும் வகையிலான விசேட ஊடகவியலாளர் மாநாடொன்று நேற்று பிற்பகல் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் இடம்பெற்றது. மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க, அமைச்சரவையின் பேச்சாளரும் ஊடகத் துறை அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச, ஜாதிக ஹெல உறுமயவின் முக்கியஸ்தரும் பாராளுமன்ற உறுப்பினருமான பாடலி சம்பிக்க ரணவக்க, தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்ல மற்றும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.

அமைச்சர் மகிந்த சமரசிங்க

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் மகிந்த சமரசிங்க கூறியதாவது:

வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போர் நடவடிக்கைகளின் போது, பாதுகாப்பு தரப்பினரிடம் சரணடைய வந்த விடுதலைப் புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் பா.நடேசன், சமõதான செயலக பிரதானி புலித்தேவன், புலிகளின் சிரேஷ்ட இராணுவ தளபதி ரமேஷ் ஆகியோர் அவர்களின் குடும்பத்தினருடன் படையினரிடம் சரணடைய போவதாக அறிவித்துள்ள நிலையில் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் கட்டளைக்கமைய அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்று சரத் பொன்சேகா ஆங்கில வார இதழுக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

58ஆவது படையணியின் தளபதியாக இருந்த பிரிகேடியர் ஷவேந்திரசில்வாவுடன் தொடர்பு கொண்ட பாதுகாப்பு செயலாளர் விடுதலைப் புலிகளின் எந்தவொரு தலைவரையும் சரணயடைய அனுமதிக்க வேண்டாம் என்றும் அவர்களை சுட்டுக்கொல்லுமாறும் உத்தரவிட்டிருந்தார் என்று சரத் பொன்சேகா அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த கருத்து நாட்டையும் அரசாங்கத்தையும் இராணுவத்தையும் முற்றுமுழுதாக இழிவுப்படுத்தியுள்ளது. இந்தக் கருத்தின் மூலம் இராணுவ கொள்கையையும் சட்ட விதிமுறைகளையும் அவர் சீரழித்துள்ளார். மொத்தத்தில் இலங்கை வரலாற்றுக்கே ஒரு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளார். கடந்த ஜூலை மாதம் 10ஆம் திகதி அம்பலாங்கொடை பிரதேசத்தில் இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்ட சரத் பொன்சேகா ஒரு இராணுவ தளபதியாக சில கருத்துக்களை முன்வைத்துள்ளார். இராணுவத்தினரின் வெற்றி அனைவரையும் சாரும். எந்த இராணுவ அதிகாரியோ அல்லது வீரரோ குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்து புலிகளுக்கெதிரான யுத்தத்தை முன்னெடுக்கவில்லை. அனைவரும் களத்தில் இறங்கி போரிட்டனர். இந்த யுத்தத்தின் போது பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்ட புலி உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் அனைவரும் பாதுகாப்பு தரப்பினரால் கொல்லப்பட்டனர் என்று அவர் அப்போது தெரிவித்திருந்தார். ஆனால் இன்று சமூகத்தின் நம்பிக்கையை பாழடிக்கும் வகையிலும் நாட்டுக்கும் அரசாங்கத்திற்கும் பிரச்சினையை ஏற்படுத்தும் வகையிலும் சரத் பொன்சேகா முற்றிலும் மாறுப்பட்ட கருத்தினை வெளியிட்டுள்ளார்.

அவருடைய இவ்விரு கருத்துக்கள் தொடர்பிலும் அவரிடமே நாம் விளக்கம் கோருகிறோம். இலங்கை இராணுவத்தினரோ அல்லது அரசாங்கமோ சர்வதேச போர் சட்ட விதிமுறைகளையோ இராணுவ கொள்கைகளையோ ஒருபோதும் மீறிச் செயற்பட்டதில்லை. இருப்பினும் சர்வதேச விதிமுறைகளை மீறி செயற்பட்டதான குற்றச்சாட்டு அரசாங்கத்தின் மீதும் இராணுவத்தினர் மீது சர்வதேச ரீதியில் சுமத்தப்பட்டுள்ளது. அந்த குற்றச்சாட்டுக்களை சவால்களாக எதிர்க்கொண்ட அரசாங்கம் அதற்கெதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்தது.

பாதுகாப்பு செயலாளர், மேஜர் ஜெனரல் ஷவேந்திரசில்வா ஆகியோர் மீது சுமத்தப்பட்டுள்ள இந்த பழி அனைத்து இராணுவத்தினரையும் இழிவுபடுத்துவதாகவே அமைந்துள்ளது. புலித் தலைவர்கள் அனைவரையும் சுட்டுக் கொல்லுமாறு இராணுவத்தினருக்கு பாதுகாப்பு செயலாளர் உத்தரவிட்டிருந்தால் ஜோர்ச் மாஸ்டர், தயா மாஸ்ரர், பிரபாகரனின் பெற்றோர் மற்றும் புலிகளுக்கு சிகிச்சையளித்தவர்கள் ஆகியோர் உட்பட 10ஆயிரத்திற்கும் அதிகமான புலி உறுப்பினர்கள் எவ்வாறு கைது செய்யப்பட்டிருக்க முடியும். அவர் அப்படி செய்திருந்தால் இவர்கள் அனைவரும் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பார்கள் அல்லவா?

தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அனைவரையும் காட்டிக் கொடுக்க முனையும் சரத் பொன்சேகாவின் நடவடிக்கை தொடர்பில் அரசாங்கம் கவலையடைகிறது. இவ்வாறானதொருவர் இந்நாட்டுக்கு தலைமை வகித்தால் நாடும் நாட்டு மக்களும் எதிர்காலத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்படும் என்பது வெளிப்படையான உண்மையேயாகும்.

அமைச்சர் சம்பிக்க ரணவக்க

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாடலி சம்பிக்க ரணவக்க கூறியதாவது:

வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போர் நடவடிக்கையின் போது இராணுவத்தின் 58வது, 59வது மற்றும் 53 வது படையணியினர் எஞ்சியிருந்த விடுதலைப்புலிகளின் தலைவர்கள் உட்பட உறுப்பினர்கள் அனைவரையும் சுற்றி வளைத்தனர். இதன்போது புலிகளின் தலைவர்களில் சிலர் 58வது படையணியினரிடம் சரணடைது போன்ற போர் சதியினை முன்னெடுத்தனர். இந்தத் தருணத்தில் புலிகளின் பிரதேசத்தை நெருங்கி வரும் இராணுவத்தின் 59ஆவது படையணியை முற்றாக அழிப்பதே அந்த சதியாகும். இருப்பினும் அவர்களின் இந்த சதி முயற்சி பாதுகாப்பு படையினரால் முறியடிக்கப்பட்டது. அத்துடன், புலித் தலைவர்கள் உட்பட சுற்றிவளைக்கப்பட்டிருந்த புலி உறுப்பினர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு தரப்பினர் புலிகளின் இந்த சதி திட்டத்திற்கு அகப்பட்டிருந்தால் பிரபாகரன் அவரது மகன் சாள்ஸ் உட்பட புலிகளின் தலைமைத்துவம் இன்னமும் எஞ்சியிருக்கும்.

பல்வேறு தியாகங்களுக்கு மத்தியில் நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்றிய இராணுவத்தினரை இழிவுப்படுத்தும் வகையில் சரத் பொன்சேகா செயற்பட்டு வருகின்றார். ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர் உட்பட அனைத்து பாதுகாப்பு தரப்பினரையும் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவதான முயற்சியினையே அவருடைய இந்த நடவடிக்கைகள் வெளிப்படுத்துகின்றன. இராணுவத்தினரின் அபிமானம், தியாகம் அனைத்தும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களின் வெற்றி படுகொலைக்கு இட்டுச் செல்லப்பட்டுள்ளது.

விமல் வீரரவன்ச இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் விமல் வீரவன்,

ஜெனரல் சரத் பொன்சேகா அரசியலில் பிரவேசிக்கவுள்ளார் என்ற செய்தி அறிந்ததும் பலர் சந்தேகக் கண்ணுடன் பார்த்தனர். அவருடைய இந்த தீர்மானத்தின் பின்னணியில் யார் உள்ளார் எனும் கேள்வி அனைவர் மனதிலும் எழுந்தது. ஓய்வுபெற்ற ஒரு அதிகாரி ஓரிரு தினங்களிலேயே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டது இதுவே முதல் தடவையாகும். இந்த தீர்மானத்திற்கு வருவதற்கு அவர் ஒரு மனநோயாளியாக இருக்க வேண்டும். அல்லது அவரின் பின்னால் பாரியதொரு சக்தி இயங்கிக் கொண்டிருக்க வேண்டும் என்று நம்பினர்.

ஆனால் இன்று இந்தக் கேள்விகளுக்கு பதில் கிடைத்துள்ளது. அவர் வழங்கிய பேட்டியின் மூலம் அவரே விடையாகியுள்ளார். சரத் பொன்சேகாவின் இந்த கருத்துக்கள் தேர்தலில் அவருக்கு தோல்வியையே பெற்றுக் கொடுக்கும். அவர் வெளியிட்ட கருத்தில் உண்மை உள்ளதா? இல்லையா? என்பது அடுத்த பிரச்சினை. ஆனால், அதற்கு முன்னர் அவர் ஏன் இவ்வாறான ஒரு கருத்தை வெளியிட்டார் எனும் கேள்விக்கு பதில் தேட வேண்டும். சர்வதேச ரீதியில் அவர் செய்துகொண்ட ஒரு ஒப்பந்தத்தின் பிரகாரமே இவ்வாறாதொரு கருத்தினை வெளியிட்டுள்ளார்.

இலங்கைக்கு எதிராக குற்றவியல் நீதிமன்ற விசாரணைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டபோது, அரசாங்கம் அதனை இல்லை என்று மறுத்ததுடன் அதற்கெதிராக நடவடிக்கையும் எடுத்தது. இந்நிலையில், போரில் ஈடுபட்ட பிரதானி ஒருவர் வாயிலாக குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க அந்த சர்வதேச நடவடிக்கை எடுத்தது. அந்த வலைக்குள் சரத் பொன்சேகா சிக்கிக் கொண்டார். மனசாட்சியுள்ள மனித நேயமுள்ள எந்தவொரு நபரும் இவ்வாறானதொரு பிடிக்குள் சிக்குண்டு இருக்கமாட்டார். இது முற்றும் முழுதான வரலாற்று ரீதியான காட்டிக் கொடுப்பாகும். மிலேனியம் சிட்டி காட்டிக் கொடுத்தலை விட பன்மடங்கு பெரியதாகும். போரில் ஒன்றாக செயற்பட்டவர்ளை இவ்வாறு பெயர் குறிப்பிட்டு காட்டிக் கொடுக்க எவரால் முடியும். நாட்டின் நிலைமையை மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு சர்வதேசம் எடுத்த இந்த சதி முயற்சியின் முன்னால் தொழில்சார் யுத்தத்திற்கு மாத்திரம்தான் நான் பொறுப்பானவர் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட சரத் பொன்சேகா ஏனையவர்களை குற்றவாளியாக காட்டிக் கொடுத்துள்ளார். அண்ணாந்து பார்த்து எச்சில் துப்பிக் கொள்ளும் செயலையே அவர் செய்துள்ளார்.

பொது மக்களிடமும் எதிர்க்கட்சிகளிடமும் நான் ஒரு கேள்வியை முன்வைக்கிறேன். பாதுகாப்பு செயலாளர், ஜனாதிபதி மற்றும் பொதுமக்கள் அனைவரையும் காட்டிக் கொடுத்துள்ள ஒருவருக்கா நீங்கள் ஒத்துழைப்பு வழங்க உள்ளீர்கள்? நாட்டை பாதுகாத்து நாட்டுக்காக தியாகங்களை செய்த பாதுகாப்பு தரப்பினருக்கு சேறுபூச வேண்டாம். அரசியல்வாதிகளான எங்கள் மீது சேறுபூசுங்கள் நாம் அதனை தாங்கிக் கொள்கிறோம். இராணுவத்தினரை தயவுசெய்து இழிவுப்படுத்த முயலவேண்டாம் என்றார். கேள்வி: பாதுகாப்பு செயலாளர் மற்றும் மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோர் சரத் பொன்சேகாவின் கருத்துக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கவுள்ளனர்? பதில்: நாட்டில் சட்டம் உள்ளது. அந்த சட்டத்தின் பிரகாரம் நாம் நடவடிக்கை எடுக்க ஆலோசித்துள்ளோம்.

கேள்வி: தனது சகாக்களை காட்டிக் கொடுத்த சரத் பொன்சேகா தொடர்பில் என்ன கூற விரும்புகிறீர்கள்?

பதில் சரத் பொன்சேகா முதல் முதலாக நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது பிரபாகரனின் பெற்றோரிடமிருந்து பணம் பெற்றுக் கொள்வதான கருத்தொன்றை முன்வைத்திருந்தார். அந்த கருத்து உண்மையாகி விட்டதா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. அவர் புலிகளிடம் உண்மையிலேயே பணம் பெற்றுக் கொண்டு விட்டார் போலும். அதனாலேயே அவர் பாதுகாப்பு தரப்பினரையும் காட்டிக் கொடுக்க முயற்சிக்கின்றார்.

கேள்வி: நிலக்கண்ணிகளை அகற்றுதல் மீள் குடியேற்றம் தொடர்பில் தான் முன்னெடுத்த வேலைத் திட்டங்களை முன்னெடுக்க அரசாங்கம் இடமளிக்கவில்லை என்று சரத் பொன்சேகா குற்றம்சாட்டியுள்ளாரே?

பதில்: அந்த வேலைத் திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்ததுடன் அதில் வெற்றியும் கண்டுள்ளது. தற்போது வடக்கில் புதைக்கப்பட்டுள்ள நிலக்கண்ணிவெடிகள் கிட்டத்தட்ட முழுமையான அளிவில் அகற்றப்பட்டுள்ளன. பொதுமக்களும் மீளகுடியேற்றப்பட்டுள்ளனர். எஞ்சியுள்ளோர் சுதந்திரமாக நடமாட வழிசமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறிருக்கு அவருடைய வேலைத்திட்டம் முக்கியப்படுவதாக இல்லை.
மேலும் இங்கே தொடர்க...

சரணடைய வந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு:

பொன்சேகாவின் கூற்று உண்மைக்கு புறம்பானது

பாரிய துரோகமென ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர்கள் கண்டனம்

slksarath-001

பாதுகாப்புப் படையினரிடம் சரணடைய வந்த புலிகளின் முக்கியஸ்தர்களான நடேசன், புலித்தேவன், ரமேஷ் ஆகிய மூவரையும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் அப்போது களமுனையில் இருந்த பிரிகேடியர் சவேந்திர சில்வா சுட்டுக்கொன் றதாக கூறியுள்ள சரத் பொன்சேகாவின் கூற்றை அரசாங்கம் முற்றாக நிராகரிப்பதுடன், வன்மையாகக் கண்டிக்கிறது.

சரத் பொன்சேகாவின் இந்த கூற்றானது நாட்டுக்கும், படை வீரர்களுக்கும், மக்களுக்கும் இழைக்கும் மிகப்பெரிய துரோகம் என்று இடர் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

முன்னுக்கு பின் முரணான தகவல்களை அவ்வப்போது வெளியிட்டு வரும் சரத் பொன்சேகாவின் இந்த கூற்று மிகவும் பாதகமும், பாரதூரமானதுமாகும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்த நடேசன், புலித்தேவன், ரமேஷ் ஆகிய மூவரையும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் அப்போது களமுனையிலிருந்த அப்போதைய பிரிகேடியர் சவேந்திர சில்வா சுட்டுக்கொன்றதாக சரத் பொன் சேகா ஆங்கில வார இறுதி பத்திரிகை ஒன்றுக்கு வழங்கியுள்ள விசேட செவ்வி தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு நேற்றுப் பிற்பகல் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.

தகவல், ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா, சுற்றாடல் அமைச்சர் பாடலி சம்பிக ரணவக்க, பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலைய பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்லே, பொலிமா அதிபர் மஹிந்த பாலசூரிய, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார ஆகியோர் கலந்துகொண்ட இந்த செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க மேலும் உரையாற்றுகையில், ‘தற்பொழுது மாறுபட்ட தகவல்களை வெளியிட்டு வரும் இதே சரத்பொன்சேகா தனக்கு ஜுலை மாதம் 10ம் திகதி அம்பலாங்கொடையில் வழங்கப்பட்ட கெளரவிப்பு நிகழ்வில் உரையாற்றும்போது கூறியதாவது:-

“நான் படை வீரர் என்ற வகையில் அவ்வப்போது தேவையான உத்தரவுகளை பிறப்பித்து யுத்தத்தை வெற்றிகொண்டேன்.

படை வீரர்களிடம் சரணடைய வரும் எவரையும் ஒன்றும் செய்ய வேண்டாம் என எனக்கு உத்தரவு வழங்கப்பட்டிருந்தது.

குளிர் அறையிலிருந்து சொல்பவர்களின் உத்தரவை ஏற்கவில்லை என்றார்”. எனவே அன்று அவ்வாறு கூறிய இதே சரத் பொன்சேகா இன்று தனது இராணுவ உடையை களைந்த பின்னர் அரசியல் இலாபத்துக்காக மாறுபட்ட கருத்துகளை வெளியிட்டு வருகிறார்.

இதுபோன்ற மாறுபட்ட கருத்துகளை வெளியிடுவதன் மூலம் இந்த நாட்டையும் படை வீரர்களையும் காட்டிக்கொடுப்பதுடன், அவர்களுக்கு பாரிய துரோகம் இழைக்கின்றார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பிரபாகரனின் பெற்றோர், ஜோர்ஜ் மாஸ்டர், தயா மாஸ்டர் மற்றும் ஐந்து டாக்டர்கள் தான் வெள்ளைக் கொடிகளை காண்பித்த வண்ணம் படையினரிடம் சரணடைய வந்தவர்கள்.

அவர்கள் கொல்லப்படவில்லை. இன்னும் பாதுகாப்பாக இருக்கின்றார்கள் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

சுற்றாடல் அமைச்சர் பாடலி சம்பிக ரணவக்க உரையாற்றுகையில், அரசியல் இலாபங்களை கருத்திற்கொண்டு இதுபோன்ற உண்மைக்குப் புறம்பான பல கதைகளை சரத் பொன்சேகா வெளியிடலாம்.

இது சரத் பொன்சேகாவினதும் அவரது பின்னணியில் உள்ளவர்களினதும் பாரிய சூழ்ச்சியாகும். இதற்கு நாங்கள் ஒருபோதும் சிக்கிக்கொள்ளப் போவதில்லை.

நல்ல விடயங்களை நான்தான் செய்தேன் என்று பொறுப்பேற்கும் பொன்சேகா, தவறுகள் இருப்பின் அதனையும் பொறுப்பேற்க வேண்டும். இதுவே சரியான முறையாகும்.

லைபீரியா ஜனாதிபதி சார்ள்ஸ் டைலருக்கும் அந்த நாட்டு தளபதி இதுபோன்ற ஒரு சூழ்ச்சியையே செய்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தியுள்ளார் என்றும் அவர் குறிப் பிட்டார்.

மிலேனியம் சிட்டி சம்பவத்தைவிட பாரதூரமான காட்டிக்கொடுத்தல்

பொன்சேகாவின் கூற்று குறித்து விமல் வீரவன்ச கருத்து

மிலேனியம் சிட்டி காட்டிக் கொடுத்தல் சம்பவத்தைவிட மிகவும் பாரதூரமான காட்டிக் கொடுத்தலை ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகா செய்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, மற்றும் படைவீரர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு முன் நிறுத்தும் சர்வதேச சதியின் ஒரு அங்கமாகவே சரத் பொன்சேகா தற்பொழுது செயற்படுவதாக அவர் குற்றஞ்சாட்டி னார்.

சர்வதேச சதியின் ஒரு ஒப்பந்தக்காரராக பொன்சேகா இலவசமாக செயற்படுவது தெளிவாகியுள்ளது என்றும் விமல் வீரவன்ச சுட்டிக்காட்டினார்.

வார இறுதி ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு சரத் பொன்சேகா வழங்கியுள்ள செவ்வி தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.

விமல் வீரவன்ச இங்கு மேலும் உரையாற்றுகையில்:-

சர்வதேச சமூகத்திற்கு எமது தலைவர்கள் மீதும், படைவீரர்கள் மீதும் குற்றஞ்சுமத்துவதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை. களங்கத்தை ஏற்படுத்தும் நோக்குடனே சரத் பொன்சேகா ஒப்பந்தக்காரராக செயற்படுகின்றார்.

சரத் பொன்சேகா தற்பொழுது ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ளார். எந்த ஒரு வேட்பாளரும் தனக்குள்ள வாக்குகளை தக்கவைத்துக் கொண்டு மேலதிக வாக்குகளை பெறும் முயற்சிகளையே மேற்கொள்வார்கள். ஆனால் சரத் பொன்சேகாவின் இந்த கூற்று அவருக்கு எந்த வாக்கு அதிகரிப்பையும் கொடுக்கப்போவதில்லை. இதன் மூலம் வாக்கு வங்கியை பெறுவதைவிட தனது ஒப்பந்தத்தின் அடிப்படையில் செயற்படுவதே முக்கியம் என்று தெளிவாகி தெரிகிறது.

அரச உயர் அதிகாரிகள் ஓய்வு பெறுவது வழக்கம். ஆனால் அவ்வாறு ஓய்வு பெற்ற அல்லது ஓய்வு பெறுவதற்கு முன்னர் ஓய்வை பெற்றுக்கொண்டு அடுத்த நாளே அரசியலுக்கு வந்ததில்லை. எமது நாட்டில் அரச உயர் பதவியிலிருந்து ஓய்வுபெற்று அடுத்த நாளே ஜனாதிபதி வேட்பாளராக வந்த முதல் நபர் சரத் பொன்சேகாவாகும்.

சாதாரணமாக அரசியலுக்கு வரவிரும்பும் எவரும் தனது அரசியல் பயணத்தின் ஆரம்பத்தை ஜனாதிபதி வேட்பாளர் என்று ஆரம்பிப்பதில்லை.

மாகாண சபையிலிருந்தே ஆரம்பிப்பர். ஆனால் சரத் பொன்சேகா படிப்படியாக அரசியலில் நுழையாமல் திடீரென ஜனாதிபதி வேட்பாளராக ஏன் வந்தார் என்று கேள்வி எழும்பியது. இவருக்குப் பின்னர் சர்வதேச சதியும் ஒரு குழுவின் அழுத்தமும் இருக்கின்றமை தெளிவாக தெரிகிறது.

பொன்சேகாவின் இது போன்ற கூற்றானது, மேலே பார்த்து தனக்குத் தானே எச்சில் துப்புவது போன்ற செயலாகும்.

பொன்சேகாவிடம் கேட்டுக் கொள்கின்றேன். உங்களுக்கு முடியுமான பொய்களை சொல்லி வாக்குகளை கேளுங்கள்.

ஆனால் தாய் நாட்டிற்காக செயற்பட்ட ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளர், படைவீரர்களுக்கோ அபகீர்த்தி ஏற்படும் வகையில் எந்த பொய்யான தகவல்களையும் வெளியிட வேண்டாம். அதற்கு மாறாக அரசியல்வாதிகளான எங்கள் மீது எந்த பொய்க்குற்றச்சாட்டுக்களையும் முன்வையுங்கள் என்றார்.

நாட்டையும், படைவீரர்களையும் காட்டிக் கொடுக்கும் நோக்குடன் முன்னு க்கு பின்னர் மாறுபட்ட தகவல்களை வெளி யிட்டு வரும் சரத்பொன்சேகாவை நம்பி மக்கள் எவ்வாறு வாக்குகளை வழங்குவது என்றும் இவரை எவ்வாறு ஜனாதிபதி ஆக்குவது என்றும் விமல் வீரவன்ச இங்கு கேள்வி எழுப்பினார்.

மேலும் இங்கே தொடர்க...
பிரதியமைச்சர் மயோன் முஸ்தபா தேர்தலில் போட்டி-

உயர் கல்வித்துறை பிரதியமைச்சர் மையோன் முஸ்தபா எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட தீர்மானித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல்மூலம் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவான இவர், அக்கட்சியிலிருந்து விலகி அரசுடன் இணைந்து பிரதி உயர் கல்வித்துறை அமைச்சராக பதவிவகித்து வருகின்றார். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தான் எடுத்துள்ள தீர்மானம் குறித்து அவர் இன்று தனது மாவட்ட ஆதரவாளர்களை சந்தித்து அபிப்பிராயமும் பெறவுள்ளார். அவரது சாய்ந்தமருது இல்லத்தில் இது தொடர்;பான சந்திபொன்று நடைபெறவுள்ளதாகவும், இதன்போது தனது நிலைப்பாடு குறித்து மையோன் முஸ்தபா விளக்குவாரென்றும் தெரியவருகின்றது. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது என எடுத்துள்ள தீர்மானத்தின்பேரில் வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு முன் தனது பிரதியமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


பாதுகாப்புச் செயலர் கோத்தபாயயே இறுதிக்கட்ட மோதலில் போர்க்குற்றங்களுக்கு உத்தரவிட்டாரென ஜெனரல் தெரிவிப்பு

- ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரர் கோட்டாபய ராஜபக்ஷ போர்க்குற்றங்களுக்கு உத்தரவிட்டிருந்தார் என இலங்கை ராணுவத்தின் முன்னாள் தலைவரும், வரவிருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலில் முக்கிய வேட்பாளர்களில் ஒருவருமான ஜெனரல் சரத்பொன்சேகா குற்றம்சாட்டியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. புலிகளுடனான யுத்தம் கடந்த மேமாதம் முடிவுக்குவந்த வேளையில் புலிகள் அமைப்பின் தலைவர்கள் அனைவரும் கொல்லப்பட வேண்டுமே ஒழிய அவர்கள் சரணடைய இடம்தரக்கூடாது என்று உத்தரவிட்டிருந்தது பாதுகாப்புச்செயலர் கோட்டாபாயதான் என்று ஜெனரல் பொன்சேகா குற்றம்சாட்டியுள்ளார். யுத்தம் நடந்த சமயத்தில் களத்தில் நின்ற இராணுவத்தளபதிகளுடன் தொடர்பில் இருந்த உள்ளுர் ஊடகவியலாளர்கள்மூலம் தனக்கு இந்த விபரங்கள் கிடைத்ததாக ஜெனரல் சரத்பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.


கிறிஸ்மஸ்தீவில் இடப்பற்றாக்குறையால் அகதிகளுக்கு பல்வேறு சிரமங்கள்-

இலங்கை மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த அகதிகள் அதிகளவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவுஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவில் பாரிய இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த முகாமில் 1400ற்கும் மேற்பட்ட அகதிகள் தங்கவைக்கப்பட்டிருப்பதால் அவர்களைத் தங்கவைக்கவும் அவர்களுக்கு வசதிகளை வழங்கவும் முடியாதிருப்பதாக ஆஸி அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதற்கிடையில் அவுஸ்திரேலிய எல்லைக்குள் அத்துமீறி 53 சட்டவிரோத குடியேற்ற வாசிகளின் படகுகள் இதுவரையில் நுழைந்துள்ள நிலையில் 54வது படகும் வரலாமென எதிர்பார்க்கப்படுவதாக அவுஸ்திரேலிய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொது வேட்பாளரை நிறத்தாது
-

ஜனாதிபதி வேட்பாளர் விடயம் தொடர்பில் தமிழ்க் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கலந்துரையாடி ஒரு தீர்மானத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதன்படி பொதுவான தமிழ் வேட்பாளர் ஒருவரை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்துவதில்லை என தீர்மானித்துள்ளதாக தமிழ்க்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி பா.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தனியானதொரு நிறுத்துவதில்லை என்ற ஒருமித்த முடிவுக்கு தமிழ்க் கூட்டமைப்பு எம்.பிக்களான நாம் வந்துள்ளோம். ஆனால் ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது அல்லது இத்தேர்தலில் என்ன செய்ய வேண்டும், இத்தேர்தலை தமிழ்மக்கள் கடந்த ஆண்டு செய்தது போன்று பகிஸ்கரிப்பதா அல்லது நிராகரிப்பதா, போட்டியிடும் வேட்பாளர்களில் யாரை ஆதரிப்பது போன்ற விடயங்கள் தொடர்பாக தேர்தல் நியமனம் தாக்கல் செய்யப்படுகின்ற எதிர்வரும் 17ம் திகதியின் பிறகு பிரதான வேட்பாளர்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் எதனை தமிழ் மக்களுக்கு வழங்குகிறார்கள். வடக்கு கிழக்கு வாழ் தமிழ்பேசும் மக்களின் அரசியல்தீர்வு விடயத்தில் என்ன நிலைப்பாட்டை தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கிறார்கள் போன்ற விடயங்களை ஆழமாக பரிசீலித்து அதன்பின் எமது நிலைப்பாட்டை எதிர்வரும் காலங்களில் அறிவிக்கவுள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


காக்கைகுளத்தில் தற்கொலை அங்கி உள்ளிட்ட வெடிபொருட்கள் கைப்பற்றல்-

வவுனியா காக்கைக்குளம் பிரதேசத்தில் இருந்து நேற்றையதினம் ஒருதொகை ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஸ்ட பொலீஸ் அத்தியட்சகர் ஐ.எம்.கருணாரத்ன தெரிவித்துள்ளார். குறித்த பிரதேசத்தில் வவுனியா பொலீஸ் நிலையத்தின் விசேட பிரிவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போதே இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதன்போது ஒன்றரை கிலோ எடைகொண்ட கிளைமோர் குண்டு பொருத்தப்பட்ட தற்கொலை அங்கி 01, டெட்னேற்றர் 02, கைக்குண்டுகள் 09 உள்ளிட்ட மேலும் பல ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த ஆயுதங்கள் மிக இரகசியமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன. இது குறித்த மேலதிக விசாரணைகளை வவுனியா பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...