9 நவம்பர், 2009
இது தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் மாநாடு நுகர்வோர் சேவைகள் விவகார அமைச்சர் பந்துல குணவர்தனவின் தலைமையில் இன்று கொழும்பில் நடைபெற்றது.
செய்தியாளர் மாநாட்டில் புறக்கோட்டை மொத்த விற்பனையாளர்கள் சங்கத்திற்கும் நுகர்வோர் விவகார அமைச்சிற்கும ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டது.
ஆறு மாதங்களுக்கு மாத்திரமே செல்லுப்படியாகும் இந்த ஒப்பந்தம் முதல் 3 மாத காலத்திற்கு பின்னர் உலகச் சந்தையில் விலை தளம்பலுக்கேற்ப மீள்பரிசீலனை செய்யப்படும் என நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
சீனி, மைசூர்பருப்பு, பெரியவெங்காயம், சிறியவெங்காயம், உருளைகிழங்கு, வெள்ளைப்பூடு, பால்மா, ரின்மீன், செத்தல் மிளகாய் மற்றும் பாஸ்மதி அரசி ஆகியவற்றின் மொத்த விற்பனை விலைகளே இன்று நள்ளிரவுடன் குறைக்கப்படவுள்ளன.
இதன்படி, சீனி கிலோ ஒன்றின் மொத்த விலை 80 ரூபாவாகவும், மைசூர்பருப்பு கிலோ ஒன்றின் மொத்த விலை 140 ரூபாவாகவும், பெரிய வெங்காயம் கிலோ ஒன்றின் மொத்த விலை 65 ரூபாவாகவும், சிறிய வெங்காயம் கிலோ ஒன்றின் மொத்த விலை 75 ரூபாவாகவும், உருளைக்கிழங்கு கிலோ ஒன்றின் மொத்த விலை 65 ரூபாவாகவும் குறைக்கப்படவுள்ளன.
அத்துடன் செத்தல் மிளகாய் கிலோ ஒன்றின் மொத்த விலை 195 ரூபாவாகவும், வெள்ளைப்பூடு கிலோ ஒன்றின் மொத்த விலை 206 ரூபாவாகவும், 400 கிராம் பால்மா பக்கெட் ஒன்றின் மொத்த விலை 225 ரூபாவாகவும், ரின்மீனின் மொத்த விலை 149 ரூபாவாகவும், பாஸ்மதி அரசி கிலோ ஒன்றின் மொத்த விலை 85 ரூபாவாகவும் புறக்கோட்டை மொத்த விற்பனை நிலையத்தில் நுகர்வோர் பெற்றுக் கொள்ள முடியும் என அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை, இந்த பொருட்களுக்கான சில்லறை விலைகள் எதிர்வரும் வியாழக்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் அமுலுக்குவரும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
நாட்டிலுள்ள அனைத்து கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்களில் ஒரு கிலோ சீனி 84 ரூபாவாகவும், ஒரு கிலோ மைசூர்பருப்பு 189 ரூபாவாகவும், ஒரு கிலோ பெரிய வெங்காயம் 84 ரூபாவாகவும், ஒரு கிலோ சிறிய வெங்காயம் 86 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்
இவ்வாறு அழைத்து வரப்பட்டவர்களில் ஆண்கள்,பெண்கள்,சிறுவர்கள், வயோதிபர்கள் , கர்ப்பிணிப்பெண்கள் என 31 குடும்பங்களைச் சேர்ந்த 80 பேர் அடங்குவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
மன்னாரில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருகின்றமையால் இவர்கள் கொண்டுவந்த பொருட்கள் நனைந்துள்ளன.மக்கள் பெரும் சிரமத்தின் மத்தியிலேயே அங்கிருந்து அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 2000 இற்கும் பேற்பட்ட மக்கள் இதுவரை அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அமைச்சர்கள் மைத்திரிபால சிறிசேன, நிமல் சிறிபால டி சில்வா, டக்ளஸ் தேவானந்தா, ஏ. எல். எம். அதாவுல்லா, பந்துல குணவர்தன, சம்பிக்க ரணவக்க, பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், எம்.பி. விமல் வீரவன்ச ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க, பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, நிதியமைச்சு மற்றும் திறைசேரி செயலாளர் கலாநிதி பி.பி. ஜயசுந்தர ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளனர்.
தொலைக்காட்சி மற்றும் வானொலியில் இந்நிகழ்ச்சி நேரடியாக ஒளி, ஒலிபரப்பப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது
திருகோணமலை மாவட்டத்தின் பிரதேச சபை உறுப்பினர்கள் ஏழு பேர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி சுதந்திரக் கட்சியில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் சேருவில அமைப்பாளர் உள்ளிட்ட ஏனைய இரு பிரதேச சபை உறுப்பினர்களும் ரெலோ இயக்க உறுப்பினர்கள் பதினொருவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் அங்கம் வகித்து ஐ.தே.க வில் போட்டியிட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் சிலரும் கட்சி விலகியோரில் அடங்குவர்.
எதிர்க் கட்சிகளில் இருந்துகொண்டு தமது மக்களுக்கு சேவை செய்ய முடியாதென்றும் நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச்செல்லும் ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்துவதற்காகவே தாம் சுதந்திரக் கட்சியில் இணைவதாகவும் சுதந்திரக் கட்சியில் இணைந்துகொண்ட பிரதேச சபை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோருடன் இன்னும் சில சிரேஷ்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
அரசாங்தில் இணைந்துகொண்ட ஐ.தே.க மற்றும் த.தே.கூ உறுப்பினர்கள் விபரம்:
ஐ.தே.க
சுனில் சாந்த பெரேரா – முன்னாள் அமைப்பாளர் – சேருவில சந்தன கருணாதிலக்க – பிரதேச சபை உறுப்பினர் – கந்தளாய் சரத் லொரன்சுஹேவா – முன்னாள் அமைப்பாளர் – திருகோணமலை
த.தே.கூ
வி.சுரேஷ்குமார் – உபதலைவர் – உப்புவெளி பி.ச கே.வைரவநாதன் உறுப்பினர் – உப்புவெளி பி.ச டீ.பாலசுப்பிரமணியம் உறுப்பினர் – உப்புவெளி பி.ச எஸ்.கௌரி முகுந்தன் தலைவர் – திருகோணமலை ந.ச டீ.கந்தரூபன் தலைவர் – உப்புவெளி பி.ச யு.ரவிகுமார் – உறுப்பினர் – குச்சவெளி எஸ்.சிவகுமார் – உறுப்பினர் – புளியங்குளம் உப்புவெளி
சென்னை:""இலங்கையில் என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை. தற்போது எதுவுமே சரியில்லை; அனைத்தும் குழப்பமாகவே இருக்கிறது,'' என்று இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் தெரிவித்துள்ளார்.இலங்கையில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கே நேற்று மாலை கொழும்பில் இருந்து டில்லி செல்லும் வழியில் சென்னை வந்தார்.
சென்னை விமான நிலையத்தில் அவர் கூறியதாவது:டில்லியில் இந்திய அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து பேச உள்ளேன். கடந்த அக்டோபர் 30ம் தேதி வரை இலங்கை முகாம்களில் இருந்த தமிழர்கள் இரண்டரை லட்சம் பேர் முகாம்களில் இருந்து வெளியேற்றப்பட்டு, அவர்களது சொந்த ஊர்களில் குடி அமர்த்தப் பட்டுள்ளனர். இது, சர்வதேச அமைப்பு அளித்துள்ள அறிக்கை.
இன்றைய நிலவரப்படி, எனக்கு எந்த தகவலும் தெரியாது. இலங்கையில் தற்போது எதுவுமே சரியில்லை; அனைத்து விஷயங்களும் குழப்பமாகத் தான் இருக்கிறது.இவ்வாறு ரணில் தெரிவித்தார். பத்திரிகை நிருபர்கள் மேற்கொண்டு எழுப்பிய கேள்விகளுக்கு, எந்த பதிலும் அவர் கூறவில்லை. சென்னையில் இருந்து கிங் பிஷர் விமானம் மூலம் மாலை 6.30 மணிக்கு டில்லி சென்றார்.
வடக்கில் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதற்காக அரசாங்கம் குரோஸியா நாட்டிலிருந்து கண்ணிவெடிகளை அகற்றும் இயந்திரங்கள் ஐந்தினைக் கொள்வனவு செய்துள்ளதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. இதற்காக 25மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இவ்வாறு கொள்வனவு செய்யப்பட்டுள்ள இந்த இயந்திரங்கள் தேசத்தைக் கட்டியெழுப்பும் அமைச்சினால் வழங்கப்படவுள்ளன. வடக்கில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் மிக வேகமாக இடம்பெற்றுவரும் நிலையில் அந்தப் பணிகளை மேலும் இலகுபடுத்தும் நோக்கிலேயே மேலும் இயந்திரங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன என்றும் அரசாங்கம் மேலும் தெரிவித்துள்ளது.