9 ஆகஸ்ட், 2010

ஆதிவாசி பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம்: செல்போனில் படம் எடுத்து பரப்பினர்






மேற்கு வங்காளம் மாநிலம் சூரி பகுதியில் செல்போனில் ஆபாச படம் ஒன்று பரவியது. அதில் 17 வயது மதிக்க தக்க இளம் பெண் ஒருவர் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து வரப்படுகிறார். ஆண்கள் அவரை கண்ட இடங்களில் தொட்டு மானபங்கப்படுத்துகின்றனர்.

சிறுவர்கள் அவர் மீது கல் வீசி தாக்குகின்றனர். அந்த பெண் அழுது கொண்டே முகத்தை கைகளால் மூடிய படி வருகிறார். அவர் நடக்க முடியாமல் தள்ளாடிய போதெல்லாம் பிரம்பால் அடிக்கின்றனர். இந்த காட்சி 11 நிமிடம் ஓடுகிறது. வயல்வெளி மற்றும் தெருக்கள் வழியாக அவரை அழைத்து வருவது போல காட்சி இருந்தது. 100 பேர் அவரை பின் தொடர்ந்து ஊர்வலமாக வந்தனர்.

எந்த ஊரில் இந்த சம்பவம் நடந்தது? என்று யாருக்கும் தெரியவில்லை. நிருபர்கள் சிலரின் செல்போனுக்கும் இந்த வீடியோ காட்சி வந்தது.

அவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிமா யூன் ஹபிக், மாவட்ட கலெக்டர் சுமித்ரா ஆகியோர் கவனத்துக்கு கொண்டு சென்றனர்.

இது பற்றி அவர்கள் விசாரணை நடத்த உத்தர விட்டனர். வீடியோவில் உள்ள காட்சிகளை வைத்து அது எந்த ஊர் என கண்டு பிடிக்கும் பணி நடந்தது.

அதில் ராம்புத்காத் பகுதியில் உள்ள சில கிரா மங்கள் போல காட்சி இருந்தது. எனவே அந்த கிராமங்களில் போலீசார் மற்றும் அதிகாரிகள் விசாரித்தனர்.

அதில் ஒரு ஊரில் இந்த சம்பவம் நடந்ததை கண்டு பிடித்தனர். நிர்வாண ஊர்வலம் நடத்தியதாக 5 பேரை கைது செய்தனர்.

ஆனாலும் நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்ட பெண்ணை இன்னும் அடையாளம் காணவில்லை. அவரை கண்டுபிடிக்க முயற்சி நடக்கிறது.

எதற்காக அவரை நிர்வாணமாக்கி ஊர்வலம் நடத்தினார்கள்? பஞ்சாயத்து தீர்ப்பால் இது நடத்தப்பட்டதா? என்று விசாரணை நடக்கிறது.

இந்த சம்பவம் 4 மாதங்களுக்கு முன்பு நடந்ததாக தெரிகிறது. பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுக்காத தால் விஷயம் வெளியே தெரியாமல் இருந்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

பரீட்சை எழுதும் 367 சரணடைந்த போராளிகள்


இன்று ஆரம்பமாகின்ற க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய வன்னிப்பிரதேச மாவட்டங்களில் இருந்து 2500 மாணவர்கள் இம்முறை தோற்றவுள்ளதாக மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் ப.அரியரத்தினம் தெரிவித்தார்.

இதேவேளை மருதமடு ஓமந்தை பூந்தோட்டம் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம் ஆகிய இடங்களில் உள்ள புனர்வாழ்வு மையங்களில் உள்ள சரணடைந்தவர்களில் இருந்து 367 பேர் இந்தப் பரீட்சை எழுதுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் அவர் கூறினார். போர்ப்பயமற்ற அமைதியான சூழலில் முதற் தடவையாக இந்த முறை வன்னிப்பிரதேச மாணவர்களுக்குப் பரீட்சை எழுதுவத்றகுச் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பரீட்சைக்குத் தேவையான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் மாகாண மேலதிகக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்தார். புனர்வாழ்வு மையங்களில் உள்ள சில பரீட்சார்த்திகளுக்கு பரீட்சை அனுமதி அட்டைகள் வந்து சேர்வதில் ஏற்பட்டிருந்த சிக்கல்களுக்கும் தீர்வு காணப்பட்டு அவர்களும் எந்தவிதமான கஷ்டமுமின்றி இந்தப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில் புனர்வாழ்வு மையங்களைச் சேர்ந்த பரீட்சார்த்திகள் 367 பேருக்கும் ஆசி வழங்கும் வகையில் அவர்களைப் பரீட்சைக்கு ஆயத்தம் செய்வதற்கான கல்வியூட்டலில் பங்கெடுத்த ஆசிரியர்கள் வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிமனை மேலதிக மாகாணக் கல்விப் பணிமனை வடமாகாண கல்வித் திணைக்களம் வடமாகாணக் கல்வி அமைச்சு சரணடைந்தவர்களுக்கான புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் ஆகியோரின் சார்பில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய வித்தியா விநாயகர் ஆலயத்தில் பொங்கலுடன் கூடிய விசேட பூஜை நடத்தப்பட்டு அனைவருக்கும் நூல் கட்டப்பட்டது.

இந்தப் பரீட்சார்த்திகளுக்கான கல்வியூட்டலுக்கு நேர்டோ மற்றும் வொவ்கொட் ஆகிய தொண்டு நிறுவனங்கள் தேவையான உதவிகளையும் அனுசரணையையும் வழங்கியிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த 367 பரீட்சார்த்திகளுக்கும் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் மேலதிகக் கல்விப் பணிப்பாளர் ப.அரியரத்தினம் தெரிவித்தார்
மேலும் இங்கே தொடர்க...

நோர்வேயில் இரு குழுக்களுக்கிடையில் மோதல்

நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோவில் அமைந்துள்ள இந்து ஆலயம் ஒன்றில் இரு குழுக்களுக்கிடையே கடந்த சனிக்கிழமை இரவு ஏற்பட்ட மோதல் காரணமாக 5 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் மூவர் தமிழர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நோர்வே தமிழீழ கௌன்சிலின் உறுப்பினர்களுக்கும் நோர்வே தமிழ் பொருளாதார பிரிவின் உறுப்பினர்களுக்கும் இடையில் இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. விடுதலைப் புலிகளின் தலைமைத்துவம் தொடர்பாக எழுந்த கருத்து முரண்பாடே மோதலுக்குக் காரணம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மோதலில் நோர்வே தமிழ் பொருளாதார கழகத்தின் உறுப்பினர் சிவகணேஸ் வடிவேலு காயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார் எனவும் இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அந்நாட்டு அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.
.
.
.
.
.
.



மேலும் இங்கே தொடர்க...

அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கு எதிர்காலங்களில் அர்ப்பணிப்போம்-ஜனாதிபதி

மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக திட்டமிட்டு செயற்படுவதுடன் கூடுதலாக அர்ப்பணிக்கவேண்டும்.அதற்காக சகலரும் கைகோர்த்து செயற்படவேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாட்டுக்கு புதிய அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்துவதற்கும் மஹிந்த சிந்தனை வேலைத்திட்டம் தொடர்பில் முழுமையான கலந்துரையாடலை மேற்கொள்வதற்கான செயலமர் ஒன்று பேருவளையில் நடைபெற்றது.

எங்களது பயணம் எனும் தொனிப்பொருளில் நடத்தப்பட்ட செயலமர்வின் இறுதிநாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அமைச்சர்கள் ,பிரதியமைச்சர்கள், ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற அந்த செயலமர்வில் ஜனாதிபதி தொடர்ந்து உரையாற்றுகையில்,

அரசாங்கத்தின் வேலைத்திட்டம் தொடர்பில் மக்கள் அதீத நம்பிக்கையை கொண்டிருக்கின்றனர். அந்த நம்பிக்கை சீர்குலைவதற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இடமளிக்க கூடாது. தாய்நாட்டின் மீது அன்பு செலுத்துகின்றவர்களாக சகலரையும் சகோதரர்களாக இணைத்துக்கொள்ளவேண்டும்.

அதற்காக அரசாங்கம் மக்களுக்கு ஏற்ற செயற்றிட்டங்களை முன்னெடுக்கவேண்டும். செயலமர்வில் முன்வைக்கப்பட்ட யேசானைகள் மற்றும் ஆலோசனைகள் அரசாங்கத்தின் எதிர்கால செயற்றிட்டங்களில் உள்ளடக்கப்படும்.

இந்த செயற்றிட்டத்தின் மூலம் மக்கள் பிரதிநிதிகளிடத்தில் சகோதரத்துவம் ஏற்பட்டுள்ளது. அரசியல் மற்றும் நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமைகள் தொடர்பில் முழுமையான அனுபவம் ஏற்பட்டுள்ளது. ஆளும் தரப்பு உறுப்பினர்களிடத்தில் நட்பை மேம்படுத்துவது நாட்டில் எதிர்கால பொருளாதார மேம்பாட்டிற்கு வழிசமைக்கும். செயலமர்வில் உலக பொருளாதார மற்றும் புதிய பொருளாதார கொள்கை, முறைமைகள், மற்றும் இலங்கைக்கு பொருத்தமான பொருளாதார கொள்கை தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

மறுசீரமைப்பு குழுவின் அறிக்கையின் திருத்தம் குறித்து செயற்குழுவில் ஆராயப்படும்- கயந்தகருணாதிலக்க

ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்புக் குழுவின் அறிக்கையில் சேர்க்கப்படவுள்ள திருத்தங்கள் குறித்து எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ள செயற்குழு கூட்டத்தில் ஆராயப்படும் என்று கட்சியின் ஊடகப் பேச்சாளர் கயந்தகருணாதிலக்க தெரிவித்தார்.

புதன்கிழமை நடைபெறவுள்ள செயற்குழுக் கூட்டம் தொடர்பில் விபரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது:

ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்புக் குழுவின் யோசனைகள் அடங்கிய அறிக்கைக்கு கடந்த செயற்குழு கூட்டத்தில் அங்கீகாரம் கிடைத்தது. எனினும் அதில் சில திருத்தங்கள் முன்வைக்கப்படவேண்டும் என்று யோசனைகள் முன்வைக்கப்பட்டன.

முக்கியமாக பல்வேறு விடயங்களில் பெண்களின் பிரதிநிதித்துவங்கள் அதிகரிக்கப்படவேண்டும் என்றும் வாக்கெடுப்பு என்று வரும்போது உள்ளூராட்சிமன்ற பிரதிநிதித்துவங்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படவேண்டும் என்று யோசனைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

எனவே இதுகுறித்த இரண்டு விடயங்கள் தொடர்பிலும் புதன்கிழமை இடம்பெறும் செயற்குழுக் கூட்டத்தின்போது விரிவாக ஆராயப்படுவதுடன் அவற்றை அங்கீகரிப்பது தொடர்பாகவும் பரிசீலிக்கப்படும்.

மேலும் இந்த திருத்தங்கள் தொடர்பில் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டால் அடுத்த சம்மேளனக் கூட்டத்தை நடத்துவது தொடர்பான திகதி தீர்மானிக்கப்படும்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கையர் உட்பட 76 அகதிகள் மெக்ஸிக்கோவில் பொலிஸாரால் கைது

இலங்கையிலும் மத்திய அமெரிக்காவிலுமிருந்து சென்ற 76 சட்டவிரோதக் குடியேற்றவாசிகள் மெக்ஸிக்கோவின் தென்கிழக்கு மாநிலமான சியபாஸில் கைவிடப்பட்டிருந்த இழுவைப் பெட்டி ஒன்றுக்குள்ளிருந்து உடல்வரட்சியால் பாதிக்கப்பட்ட நிலையில் அந்நாட்டுப் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளனர்.

அநாமதேய அறிவித்தல் ஒன்றை அடுத்து பொலிஸார் சென்றபோது, சியாபாஸ் நெடுஞ்சாலையில் காணப்பட்ட 3 மீற்றர் அகலமும் 8 மீற்றர் நீளமுமான இழுவைப்பெட்டிக்குள் சட்டவிரோத குடியேற்றவாசிகள் 76 பேரும் நீராகாரமின்றி முடங்கி கிடந்ததால் உடல்வரட்சி உற்றதற்கான அறிகுறிகளுடன் காணப்பட்டதாக மத்திய சட்டமா அதிபர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சட்டரீதியாக அந்தநாட்டில் இருந்ததற்கான ஆதாரம் எதையும் வைத்திருக்காத அந்த குடியேற்றவாசிகள் தாங்கள் கௌத்தமாலா, எல்சல்வடோர், ஹொண்டூறாஸ், இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று கூறினார்கள். ஒவ்வொரு நாட்டையும் சேர்ந்தவர்களின் எண்ணிக்கையையோ அவர்களில் ஆண்கள், பெண்களின் எண்ணிக்கையையோ அல்லது அவர்களில் சிறுவர்களும் காணப்பட்டார்களா என்ற விபரங்கள் எதுவும் வெளியியடப்படவில்லை.

மெக்ஸிகோவின் தேசிய குடியேற்றவாத அலுவலகத்திற்கு அனுப்பப்பட்“ட இவர்கள் அநேகமாக அவரவர் நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படலாம் என்று கருதப்படுகிறது. ஆவணங்கள் எதுவுமின்றி இவர்கள் அவ்வளவுதூரம் வருவதற்கு யார் காரணம் என்று அறிவத
மேலும் இங்கே தொடர்க...
தமிழர் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்து கொள்வதை இலக்காகக் கொண்டு ஸ்தாபிக்கப்பட்டுள்ள தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தில் இணைந்துகொள்ளுமாறு விடுக்கப்பட்ட உத்தியோகபூர்வ அழைப்புக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமிருந்து இதுவரையில் எந்த விதமான பதிலும் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கூட்டமைப்பின் தலைவரும் எம்.பி யுமான இரா. சம்பந்தன் நாட்டில் இல்லாத காரணத்தாலும் அவர் நாடு திரும்பியதும் அழைப்புக் கடிதத்தின் பிரதியை நேரடியாக அவரிடம் கையளித்து அழைப்பு விடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம். கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

ஈ.பி.டி.பி., ஈழ ஏதிலிகள் மறுவாழ்வு அமைப்பு, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, புளொட், ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு, தமிழர் விடுதலைக் கூட்டணி, ஸ்ரீ ரெலோ மற்றும் ஈ.பி. ஆர்.எல்.எப். ஆகிய ஒன்பது தமிழ்க் கட்சிகள் இந்த அரங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளாகும். இந் நிலையில் பாராளுமன்றத்தில் 14 உறுப்பினர்களைக் கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் இணைத்துக் கொள்வதன் மூலம் அது வலுவடைந்த அமைப்பாக தோற்றம் பெறும் என்பதுடன் சாதிக்கக் கூடிய சக்தியையும் பெற்றுக் கொள்ள முடியும் என்பது அங்கத்துவக் கட்சிகளின் ஆலோசனையாகவும் அமைந்துள்ளது.

இதற்கமையவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் இணைத்துக் கொள்வது தொடர்பில் பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் சிவாஜிலிங்கம் மேலும் விபரிக்கையில், தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தில் அங்கம் வகிக்கின்ற ஒன்பது அரசியல் அமைப்புகள் கடந்த ஜூலை மாதம் 28 ஆம் திகதி கொழும்பில் கூடி கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டன.

இதன் போது தமிழ் மக்களின் அபிலாஷைகள் அரசியல் எதிர்காலம் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வுகள் சுதந்திரமான வாழ்க்கை ஆகியவற்றை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான இந்த அரங்கத்தின் பயணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்களிப்பு இன்றியமையாதது என்பது வலியுறுத்தப்பட்டது. இதனடிப் படையில் மேற்படி அரங்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இணைத்துக் கொள்வதற்காக உத்தியோக பூர்வமாக அழைப்பு விடுப்பதென தீர்மானித்து அன்றைய தினம் சமூகமளித்திருந்த ஒன்பது கட்சிகளின் முக்கியஸ்தர்களும் கையொப்பமிடப்பட்ட அழைப்புக் கடிதம் ஒன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உத்தியோகபூர்வமாக அனுப்பி வைக்கப்பட்டது. இருப்பினும் இதுவரையில் அந்த அழைப்புக்கு எந்த விதமான பதிலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் தமிழ்க் கட்சிகளின் அரங்கம் எதிர்வரும் 14 ஆம் திகதி மட்டக்களப்பில் கூடுவதென ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி இதற்கான சகல ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளது.

இது இவ்வாறிருக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எம்.பி.யுமான இரா. சம்பந்தன் தற்போது வெளிநாடு சென்றிருப்பதாலும் அவர் இலங்கை திரும்பியதும் ஏற்கனவே விடுக்கப்பட்ட அழைப்புக் கடிதத்தின் பிரதியொன்றை கையளித்து நேரடியாக அழைப்பு விடுப்பதற்கும் தீர்மானித்திருக்கின்றோம் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...