26 மே, 2010

போருக்கு பின்னர் கிளிநொச்சி

கிளிநொச்சியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடன் மக்கள் சந்திப்பு

இலங்கையில் இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு அவர்களுக்கான வசதிகள் செய்யப்பட்டு வருவதாக அரசாங்கத் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

கிளிநொச்சியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடன் மக்கள் சந்திப்பு


மீள்குடியேற்ற நடவடிக்கைகளின் மூலம், கிளிநொச்சி போன்ற போரினால் பாதிக்கப்பட்ட நகரங்கள் புத்துயிர் பெற்று வருவதாகவும் கூறப்படுகின்றது.

ஆயினும் கடந்த வெள்ளிக்கிழமை முதல் நான்கு நாட்கள் மீள்குடியேற்றப் பகுதிகளையும் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ள சில இடங்களையும் பார்வையிட்டுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கருத்து வேறாக இருக்கின்றது.

மீள்குடியேற்றம் நடைபெற்று வருகின்ற கிளிநொச்சி உட்பட பல பகுதிகளிலும் உள்ள ஆலயங்களில் பூஜை வழிபாடுகள், பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் என்பனவும், சிவில் நிர்வாக நடவடிக்கைகளும் சிறிது சிறிதாக ஆரம்பிக்கப்பட்டு செயற்பட்டு வருகின்றன.

எனினும் வன்னிப்பிரதேசத்திற்கு முதன் முறையாக நான்கு நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு சென்று திரும்பியுள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர், மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள மக்கள் காடடர்ந்துள்ள தமது கிராமங்களில் போதிய அடிப்படை வசதிகளின்றி இருப்பதாகக் கூறுகின்றார்கள்.

மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள ஒரு குடும்பம்
மீள்குடியேற்றம் செய்யப்பட்ட குடும்பம்-கூடாரமே குடில்
மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள ஒரு குடும்பம்
மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் அரசாங்கம் இன்னும் அக்கறையோடு செயற்பட்டிருக்க வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சுட்டிக்காட்டுகின்றது.

யுத்தம் முடிந்து ஒரு வருடமாகிவிட்ட போதிலும், இடம்பெயர்ந்த மக்களின் வாழ்க்கையில் நம்பிக்கை தரக்கூடிய மாற்றங்கள் இன்னும் எற்படவில்லை எனக்கூறும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், தமது மக்களின் வாழ்க்கையில் அடுத்த ஒரு வருடத்திற்குள்ளாக குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படத்தக்க வகையில் செயற்படப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

சிறார் போராளிகள் அனைவரும் விடுவிப்பு


பெற்றோருடன் முன்னாள் சிறார் போராளிகள் -ஆவணப்படம்
இலங்கையில் சென்ற ஆண்டு போர் முடிந்த போது பிடிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்த சிறார் போராளிகள் அனைவரும் தற்போது அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக இலங்கை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் முன்பு இருந்த முன்னாள் சிறார் போராளிகள் தங்க வைக்கப்பட்டிருந்த இரண்டு இடங்களும் மூடப்பட்டுவிட்டதாக ஐ நா நிறுவனம் ஒன்று உறுதிப்படுத்தியுள்ளது.

போரில் பிடிபட்டவர்கள், சரணடைந்தவர்கள், பிறகு மக்களோடு மக்களாக அகதிகள் முகாம்களுக்கு வந்து பின்னர் அடையாளம் காணப்பட்டவர்கள் என சுமார் 10 ஆயிரம் முன்னாள் போராளிகளை இலங்கை அரசு தடுப்பில் வைத்துள்ளது. இவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்படவில்லை. முறையற்ற இடங்களில் இவர்கள் தொடர்ந்து வைக்கப்பட்டுள்ளது சர்ச்சையான விடயமாக உள்ளது.


அம்பேபுசாவில் உள்ள முகாமில் முன்பு பயிற்சி பெற்ற முன்னாள் சிறார் போராளிகள்
அம்பேபுசாவில் உள்ள முகாமில் முன்பு பயிற்சி பெற்ற முன்னாள் சிறார் போராளிகள்

இதில் 566 பேர் பிடிபடும் போது 17 வயதுக்கும் குறைவான வயதுடையவர்களாக இருந்தனர். இவர்கள் சமூகத்துக்குத் திரும்பத் தேவையான முழுமையான தொழிற்பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக அரசு கூறுகிறது.

ஐ நா ஆமோதிக்கிறது

இந்த முன்னாள் போராளிகளின் பயிற்சிக்கு பொறுப்பான இராணுவ அதிகாரி இவர்கள் கண்டுள்ள முன்னேற்றம் தனக்கு மிகுந்த திருப்தியைத் தருவதாக கூறுகிறார்.

ஐநாவின் குழந்தைகள் நிதியமான யுனிசெப் நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரி, இவர்கள் கல்வியைத் தொடர்வதற்கும் வேலை தேடுவதற்கும் தேவைப்படும் உதவிகளை தமது அமைப்பு செய்யும் என்று கூறியுள்ளார்.

விடுவிக்கப்பட்ட சிறார்களில் 50 பேர் கொழும்பில் ஏற்கனவே அவர்கள் படித்து வந்த பள்ளியிலேயே தமது மேற்படிப்பை தொடரவுள்ளனர். மற்றவர்கள் விடுவிக்கப்படுவதற்காக வவுனியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இவர்களின் குடும்பங்கள் சில மீள்குடியேற்றம் செய்யப்பட்டுவிட்டன. ஆனாலும் சிலரின் குடும்பத்தினர் இன்னமும் முகாம்களில்தான் உள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

இந்தியா இலங்கை ஒப்பந்தத்தில் சர்ச்சை

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இந்தியாவுக்கு மேற்கொள்ள இருக்கும் விஜயத்தின் போது, இரு நாடுகளிடையே, அனைத்தையும் உள்ளடக்கிய பொருளாதாரக் கூட்டுறவு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவார் என்று செய்திகள் கூறுகின்றன.

மன்மோகன் சிங்-மஹிந்த ராஜபக்ஷ
இந்தியப் பிரதமருடன் இலங்கை ஜனாதிபதி

ஆனால் ஏற்கனவே கடந்த பத்தாண்டுகளாக அமலில் இருக்கும் இந்திய இலங்கை சுதந்திர ஒப்பந்தம் இந்தியாவுக்கே சாதகமாக இருப்பதாக இலங்கையில் சில விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில், இது போன்ற ஒரு புதிய ஒப்பந்தத்தில் இலங்கை கையெழுத்திடக்கூடாது என்று இலங்கையின் வர்த்தக பிரமுகர்கள் மற்றும் அரசியல் ஆர்வலர்கள் ஜனாதிபதி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த எதிர்ப்பாளர்களின் பிரதிநிதிகளிடம் பேசிய மஹிந்த ராஜபக்ஷ, இலங்கையின் நலன்களுக்கு எதிரான எந்த ஒரு ஒப்பந்தத்திலும் கையெழுத்திடப்போவதில்லை என்று உறுதியளித்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த புதிய ஒப்பந்தத்துக்கு எழுந்துள்ள எதிர்ப்பு மற்றும், இலங்கை இந்திய சுதந்திர ஒப்பந்தம் குறித்த விமர்சனங்கள் அவ்வளவு சரியானவை அல்ல என்று இலங்கையின் பொருளாதாரப் பகுப்பாய்வாளர் கலாநிதி முத்துக்கிருஷ்ண சர்வானந்தா, கூறுகிறார்.

கடந்த பத்தாண்டு காலமாக அமலில் இருக்கும் சுதந்திர வர்த்தக ஒப்பந்த காலத்துக்கு முன்பே கூட இந்தியாவின், இலங்கைக்கான ஏற்றுமதி அதிகமாகவே இருந்து வந்துள்ளது.

இது சரித்திரரீதியாகவே ,பிரிட்டிஷ் காலத்திலிருந்தே இருந்து வந்துள்ள ஒன்று. ஆனால் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் காரணமாக, இந்தியா மற்றும் இலங்கை வர்த்தகத்தில் , ஏற்றுமதி இறக்குமதிக்கிடையே காணப்படும் இடைவெளி குறைந்துள்ளது என்கிறார்.

புதிதாக கைச்சாத்தாகவுள்ள அனைத்தையும் உள்ளடக்கிய பொருளாதர கூட்டுறவு ஒப்பந்தம்,பொருட்களில் நடக்கும் வர்த்தகத்தைத் தாண்டி, சேவைகளுக்கும் கூட்டுறவை விஸ்தரிக்கும்.

இதன் கீழ், இந்தியா மற்றும் இலங்கை இடையே, மருத்துவ, சட்டத்தரணி போன்ற தொழிற் சேவைகள் பரிமாற்றம் சுதந்திரமாக நடக்க முடியும் என்கிறார் சர்வானந்தா.
மேலும் இங்கே தொடர்க...

ஈராக்கில் நகை தொழிலாளர்கள் 14 பேர் சுட்டுக்கொலை அல்கொய்தா தீவிரவாதிகள் அட்டகாசம்


ஈராக் நாட்டில் பாக்தாத் நகரில், நகை செய்யும் தொழில் நடக்கும் ஒரு கடைக்குள் தீவிரவாதிகள் புகுந்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சம்பவத்தில், நகை தொழிலாளர்கள் 14 பேர் குண்டு பாய்ந்து இறந்தனர். பின்னர் அங்கிருந்த தங்கம் மற்றும் பணத்தை கொள்ளையடித்துக்கொண்டு ஓடினார்கள்.

இந்த சம்பவம் பற்றிய தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று தீவிரவாதிகளை விரட்டினார்கள். போலீசார் சுட்டதில் ஒரு தீவிரவாதி இறந்தான். கொலை-கொள்ளையில் ஈடுபட்டவர்கள் அல்கொய்தா இயக்கத்துடன் தொடர்புடைய தீவிரவாதிகள் என்றும், தீவிரவாதிகள் சத்தம் இல்லாமல் சுடும் துப்பாக்கியை பயன்படுத்தியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

வடக்கில் புதிதாக ஆறு வங்கிகளைத் திறக்கவுள்ளதாக மத்திய வங்கி தெரிவிப்பு

வடமாகாண பொருளாதார வசதி கருதி வடக்கில் புதிதாக ஆறு வங்கிகளைத் திறப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி மாங்குளம், கிளிநொச்சி மற்றும் பரந்தன் ஆகிய பகுதிகளில் மூன்று மக்கள் வங்கிக் கிளைகள் திறக்கப்படவுள்ளதுடன்; கிளிநொச்சியில் கொமர்ஷல் மற்றும் செலான் வங்கிக் கிளைகளும் திறக்கப்படவுள்ளன. மேலும் யாழ் நகரில் நேஷன் ட்ரஸ்ட் வங்கிக் கிளை ஒன்று திறக்கப்படவுள்ளது. இதேவேளை எதிர்வரும் மாதங்களில் வடக்கு கிழக்கில் மேலும் பல வங்கிக் கிளைகளைத் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கைக்கு 1.5பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனான வழங்க ஈரான் இணக்கம்

இலங்கைக்கு 1.5பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனான வழங்க ஈரான் இணக்கம் தெரிவித்துள்ளதாக பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சுசில் பிறேம்ஜயந்த தெரிவித்துள்ளார். நாட்டிற்குத் தேவையான எரிபொருளை கொள்வனவு செய்வதற்கும் அதனைச் சுத்திகரிப்பதற்கும் ஏற்றவகையிலேயே இந்தக் கடன்தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஈரானுக்கும் இலங்கைக்குமிடையில் முன்னர் 30சதவீதமான புரிந்துணர்வு உடன்பாடுகளே காணப்பட்டன. ஆனால் தற்போது முழுமையாக உதவுவதற்கு ஈரான் முன்வந்துள்ளது. அத்துடன் இலங்கை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களின் அளவை 1லட்சம் கொள்கலன்களாக அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அம்பாந்தோட்டையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதற்கு சீனாவின் நிர்மாண மற்றும் பொறியியல் நிறுவனம் முன்வந்துள்ளது. அதேவேளை இலங்கைக்குத் தேவையான எரிபொருட்களில் 60சதவீதமானவை ஈரானிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது. அத்துடன் ரஸ்யாவிடமிருந்து எரிபொருட்களை கொள்வனவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்றும் பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சுசில் பிறேம்ஜயந்த மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

ஏர் இந்தியா ஊழியர்களின் போராட்டம் வாபஸ்

கடந்த இருநாட்களாக தொடர்ந்த ஏர் இந்தியா ஊழியர்களின் போராட்டம் இன்று மாலை வாபஏர் இந்தியா ஊழியர்கள் திடீர் ஸ்டிரைக்:    போக்குவரத்து பாதிப்புஸ் பெறப்பட்டது.

ஏராளமான பயணிகள் பாதிக்கப்பட்டதால் ஊழியர்களின் போராட்டம் தொடர தில்லி உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இதையடுத்து, தங்களது போராட்டத்தை வாபஸ் பெறுவதாக ஊழியர் சங்கங்கள் அறிவித்தன.

இதனிடையே போராட்டத்தில் தீவிரம் காட்டிய 15 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மொத்தம் 20 ஆயிரம் ஊழியர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டனர். இப்போராட்டத்தால், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சேவையில் ஈடுபட்டுள்ள ஏர் இந்தியாவின் 140 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

மலேசிய அரசு அறிவிப்புஇந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை

கோலாலம்பூர்: இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து மலேசியாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு விசா தேவையில்லை என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து மலேசியாவின் துணை பிரதமர் முகைதின் யாசின் கூறியதாவது:
இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட நான்கு நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளை கவருவதற்காக விசா தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் வரும் ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வரும். மலேசியாவில் உள்ள சுற்றுலா தலங்களை காணவரும் பயணிகள் விமான டிக்கெட் மட்டும் எடுத்தால் போதும், விசா அவசியமில்லை.
இதற்குமுன் இந்தியாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு விசாவில் சில சலுகைகள் மட்டும் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது அதில் உள்ள வரைமுறைகள் முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒத்துழைப்பு தரும்படி உள்நாட்டு விமான நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இதன் மூலம் இந்த ஆண்டு கூடுதலாக 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பயணிகள் வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

விபத்தில் பலியான 8 பேரிடம் போலி பாஸ்போர்ட்

Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil  movie news, Tamil news paper online, political news, business news,  financial news, sports news, today news, India news, world news, daily  news update

திருவனந்தபுரம்: மங்களூர் விமான விபத்தில் பலியானவர்களில் 8 பேர் போலி பாஸ்போர்ட்டில் வந்துள்ளனர். இதனால், அவர்களின் சடலங்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மங்களூர் விமான விபத்தில் பலியான 158 பயணிகளில் 128 பேர் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். மற்ற 30 பேர் அடையாள காண முடியாத அளவுக்கு கருகி விட்டனர். அவர்களை அடையாளம் காண்பதற்காக பயணிகள் பட்டியலையும், பாஸ்போர்ட்டில் உள்ள பெயர் விபரங்களையும் ஒப்பிட்டு பார்க்கும் பணி நடக்கிறது.
இது தொடர்பாக கோழிக்கோடு, மலப்புரத்தில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகங்களின் உதவியை அதிகாரிகள் நாடியுள்ளனர். அதில், திடுக்கிடும் தகவல் வெளியாகி இருக்கிறது. விபத்தில் பலியான 8 பேருக்கு தங்கள் அலுவலகத்தில் இருந்து பாஸ்போர்ட் வழங்கப்படவில்லை என்று கோழிக்கோடு, மலப்புரம் பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே, இவர்கள் போலி பாஸ்போர்ட்டில் வந்து இருக்கலாம் சந்தேகம் எழுந்துள்ளது.
வளைகுடா நாட்டில் மோசடி கும்பல்கள்:
வளைகுடா நாடுகளில் வேலைக்கு செல்பவர்கள் தங்களுடைய பாஸ்போர்ட்களை, தாங்கள் வேலை செய்யும் நிறுவனங்களிடம் ஒப்படைத்து விட வேண்டும். நாடு திரும்பும்போது மட்டுமே அதை பெற்றுக் கொள்ள முடியும். ஆனால், பெரும்பாலான நிறுவனங்கள் பாஸ்போர்ட்களை திருப்ணிபிக் கொடுப்பதில்லை. இது போன்றவர்களுக்கு போலி பாஸ்போர்ட்கள் தயாரித்து கொடுப்பதற்காகவே வளைகுடா நாடுகளில் சில மோசடி கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன.
நிறுவனங்களிடம் இருந்து பாஸ்போர்ட் பெற முடியாதவர்கள், எப்படியாவது நாடு திரும்ப வேண்டும் என்பதற்காக ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து போலி பாஸ்போர்ட்டை பெற்று பயணம் செய்கின்றனர். இப்படிதான், விபத்தில் சிக்கிய மங்களூர் விமானத்தில் பயணம் செய்தவர்களில் 8 பேர் போலி பாஸ்போர்ட்டில் வந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

நிறுவன ஆலோசகராகிறார் டோனி பிளேர்


​ பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேர்,​​ அமெரிக்க நிறுவனம் ஒன்றில் ஆலோசகராகிறார்.​ இந்தியவாழ் அமெரிக்கரான வினோத் கோஸ்லா உருவாக்கியுள்ள நிறுவனத்தில் பிளேர் பணியில் சேர உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிறுவனம் சுற்றுச் சூழல் பாதுகாப்பு தொழில்நுட்பம் சார்ந்த கருவிகள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது.​ பிரிட்டிஷ் பிரதமராக இருந்தபோது தனக்குக் கிடைத்த சர்வதேச அளவிலான தொடர்புகள் மூலம் கிடைத்த அனுபவத்தை நிறுவனத்தில் பயன்படுத்துவார்.​ ​

இந்நிறுவனத்தை உருவாக்கிய வினோத் கோஸ்லா,​​ ஏற்கெனவே சன் மைக்ரோசிஸ்டம்ஸ் நிறுவனத்தை உருவாக்கிய நிறுவனர்களில் ஒருவராவார்.

""புவி தட்ப வெப்ப நிலை உயர்வைக் கட்டுப்படுத்துவது அரசியல் ரீதியில் தீர்வு காணப்பட வேண்டிய விஷயம் மட்டுமல்ல.​ அதற்குரிய தொழில் நுட்பங்களை அளிப்பது மிகவும் முக்கியமாகும்.​ இத்தகைய கருவிகள் தயாரிக்கும் நிறுவனத்தில் ஆலோசகராக பணியாற்றுவது மகிழ்ச்சியளிக்கும்,'' என்றார் பிளேர்.​ இவரது நியமனத்தை கோஸ்லா வெஞ்சர்ஸ் நிறுவனம் உறுதி செய்து அதை இயக்குநர் கூட்டத்தில் வெளியிட்டுள்ளது.​ ​

சுற்றுச் சூழல் கொள்கை சார்ந்த ஆலோசனைகளை பிளேரிடமிருந்து இந்நிறுவனம் கேட்டுப் பெறும்.​ ​

2007-ம் ஆண்டு பிரதமர் பதவியை ராஜிநாமா செய்தபிறகு,​​ பல நாடுகளில் கெüரவ விரிவுரையாளர் பணியை மேற்கொண்டு வந்தார் பிளேர்.​ தற்போது இந்நிறுவன ஆலோசகராக பொறுப்பேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

எதற்கெடுத்தாலும்,​​ மேலை நாடுகளைப் பாருங்கள் என்று மேடைக்கு மேடை முழக்கமிடும் நம்மூர் அரசியல்வாதிகள்,​​ பதவியிலிருந்து விலகிய பிறகு இதைப் போன்று வேறு பணிகளுக்குச் செல்ல முடியுமா?​ அல்லது அதற்குரிய தகுதியை வளர்த்துக் கொண்டிருக்கிறார்களா?​ என்பது மிகப் பெரிய கேள்விதான்.
மேலும் இங்கே தொடர்க...

அமெரிக்காவுடன் நெருங்கிய ராஜதந்திர உறவுக்குத் தயார்-​ சீனா

அமெரிக்காவுடன் நெருங்கிய ராஜதந்திர உறவு வைத்துக் கொள்ள தாங்கள் தயாராகவுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

​ ஆனால் நெருங்கிய ராஜதந்திர உறவை வைத்துக்கொள்ள வேண்டுமானால் தைவான்,​​ திபெத் உள்ளிட்ட எங்களின் உணர்வுப்பூர்வமான விவகாரங்களில் தலையிடுவதை அமெரிக்கா தவிர்ப்பது அவசியம் என்றும் சீனா நிபந்தனை விதித்துள்ளது.

​ சீனா-அமெரிக்க நாடுகளுக்கு இடையேயான ராஜதந்திர மற்றும் பொருளாதார உறவு குறித்த முதல்சுற்றுப்பேச்சுவார்த்தை பெய்ஜிங்கில் நடந்து வருகிறது.

​ இதில் இரு நாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்துவது தொடர்பாக அமெரிக்காவிடம் 7 பரிந்துரைகளை சீனா முன்வைத்துள்ளது.​ இதில் தைவான்,​​ திபெத் விவகாரங்களும் அடங்கும் என்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள அந்நாட்டுக் குழுவின் செய்தித்தொடர்பாளர் மா ஷாவோஸý தெரிவித்தார்.

​ தவிர,​​ சர்வதேச அளவில் பயங்கரவாதம்,​​ சுற்றுச்சூழல் மாசு அடைதல் உள்ளிட்ட பொதுவான சவால்களை இரு நாடுகளும் இணைந்து எதிர்கொள்வது தொடர்பாக பேச்சுவார்த்தையின் போது விவாதிக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.

​ ​ பேச்சுவார்த்தையின் முதல்கூட்டத்தில் திங்கள்கிழமை கலந்து கொண்டு பேசிய சீன அதிபர் ஹூ ​ ஜிண்டாவோ,​​ அமெரிக்காவும்,​​ சீனாவும் தங்களது உணர்வுப்பூர்வமான விவகாரங்களில் தேவையில்லாமல் மூக்கை நுழைக்கக்கூடாது.​ பரஸ்பரம் மதிப்பளித்து நடக்க வேண்டும் என்று கூறினார்.

​ தைவானையும்,​​ திபெத்தையும் தங்களது ஒருங்கிணைந்த பகுதியாக சீனா கூறிவருகிறது.​ இந்நிலையில் இந்த விவகாரத்தில் அமெரிக்கா அவ்வப்போது தெரிவிக்கும் கருத்துகளால் சீனா அதிருப்தி அடைந்து வருகிறது.

​ சில மாதங்களுக்கு முன்பு திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமாவை அதிபர் ஒபாமா சந்தித்தார்.​ இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
மேலும் இங்கே தொடர்க...

மலேசியாவில் இலங்கைத் தமிழர்கள் உண்ணாவிரதம்

தம்மை அகதிகளாக ஏற்றுக் கொள்ளக் கூடிய நாடுகளுக்கு அனுப்பி வைக்குமாறு கோரி மலேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 67 இலங்கைத் தமிழர்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.

மலேசியக் கடற் பகுதியில் வைத்து மலேசியக் கடற்படையினரால் 75 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களில் 67 ஆண்கள் தம்மை விடுவிக்க கோரி உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

மக்கள் இடம்பெயர்ந்த நாடுகளின் பட்டியலில் 7 ஆவது இடத்தில் இலங்கை

சர்வதேச ரீதியாக அதிக எண்ணிக்கையிலான மக்கள் இடம்பெயர்ந்த நாடுகளில் இலங்கை 7 ஆவது இடத்தில் இருப்பதாக ஐக்கிய நாடுகளினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் இதுவரை காலமும் 2 லட்சத்து 80 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச ரீதியாக அதிக எண்ணிக்கையிலான மக்கள் இடம்பெயர்ந்த நாடுகளில் பாக்கிஸ்தான் முதலாவது இடத்திலும், கொங்கோ குடியரசு இரண்டாவது இடத்திலும் , சூடான் 3 வது இடத்திலும், சோமாலியா நான்காவது இடத்திலும் உள்ளன.

எனவே இதுவரைக்கும் சர்வதேச ரீதியாக 2 கோடியே 70 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்து வாழ்வதாக ஐக்கிய நாடுகளினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
மேலும் இங்கே தொடர்க...

சங்குப்பிட்டி - யாழ் குருநகர்: ஜூன் முதலாம் திகதி முதல் படகுச் சேவை ஆரம்பம்

சங்குப்பிட்டிக்கும், யாழ். குருநகருக்கும் இடையிலான படகுச் சேவை எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

வட பகுதிக்கு அண்மையில் விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பூநகரி - சங்குப்பிட்டி பிரதேசத்திற்கு சென்று பார்வையிட்ட பின்னர் இந்தப் படகுச் சேவையை வெகு விரைவில் ஆரம்பிப்பதற்கான பொறுப்பை எடுத்துக்கொண்டதாக தெரிவித்த ஆளுநர் இதற்காக பாதுகாப்பு அமைச்சின் அனுமதியையும் பெற்றுத் தந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். முதற்கட்டமாக இரண்டு படகுகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

சுமார் ஆறு கிலோ மீற்றர் தூரத்திற்கு இந்த படகுச் சேவை நடத்தப்படவுள்ளது. இதன் மூலம் 2 1/2 மணி நேரப் பயணத்தை சுமார் 45 நிமிடங்களுக்குள் மேற்கொள்ள முடியும். கட்டணமாக பயணமொன்றுக்கு 40 ரூபா அறவிடப்படவுள்ளது என்றும் ஆளுநர் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

2554 வது பெளத்த வருடத்தையொட்டி லேக்ஹவுஸ் முன்றலில் வெசாக் நிகழ்ச்சி
27, 28, 29 ஆம் திகதிகளில் நிகழ்வுகள்

2554 ஆவது பெளத்த வருடத்தையொட்டி லேக் ஹவுஸ் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வெசாக் நிகழ்ச்சிகள் நிறுவனத்தின் முன்றலில் இடம்பெறவு ள்ளது.

வெசாக் கூடு கண்காட்சி, வெசாக் மற்றும் பெளத்த கீதங்கள் இசைத்தல், பெளத்த கதைகளை அடிப்படையாகக் கொண்ட அம்பலாங்கொடையின் பாரம்பரிய பொம்மலாட்டம் மற்றும் தானசாலை ஆகியவை உள்ளடங்கிய வெசாக் நிகழ்ச்சிகள் நாளை 27 மற்றும் 28, 29 ஆகிய தினங்களில் இடம்பெறும்.

நாளை 27 ஆம் திகதி மாலை 6 மணிக்கு ஊடக மற்றும் தகவல்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் தலைமையிலும், 28 ஆம் திகதி மாலை 6 மணிக்கு தேசிய மரபுரிமை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் தலைமையிலும், 29 ஆம் திகதி மாலை 6 மணிக்கு ஊடக மற்றும் தகவல்துறை அமைச்சின் செயலாளர் டபிள்யூ. பீ. கனேகல தலைமையிலும் நிகழ்ச்சிகள் ஆரம்பமா கின்றன. இலங்கை டெலிகொம்மின் அனுசரணையில் நடைபெறும்.

இந்த வெசாக் நிகழ்ச்சிகளுக்கு சுயாதீன ரூபவாஹினி மற்றும் லக்ஹட வானொலி ஆகியவையும் அனுசரணை வழங்குவது குறிப்பிடத்தக்கது.

லேக்ஹவுஸ் நிறுவனம், வெசாக் கூடு போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு மொத்தம் 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான பரிசுகளை வழங்கவுள்ளன
மேலும் இங்கே தொடர்க...

டெங்கு ஒழிப்பில் அனைவரும் அர்ப்பணிப்புடனும் பொறுப்புடனும் செயற்பட வேண்டும் - ஜனாதிபதி


டெங்கு ஒழிப்பு விடயத்தில் ஜனாதிபதி முதல் சாதாரண குடிமகன் வரை அர்ப்பணிப்புடனும், உறுதிப்பாட்டுடனும் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார்.

டெங்கு ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியை நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்து உரையாற்றிய ஜனாதிபதி நாடு பல்வேறு சவால்களுக்கு முகம்கொடுத்த வேளையில் வழங்கிய ஒத்துழைப்பினைப் போன்று, டெங்கு ஒழிப்பிலும் சகலரதும் அர்ப்பணிப்பையும் ஒத்துழைப்பையும் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலணியின் கீழ் சகல அமைச்சுக்கள், உள்ளூராட்சி நிறுவனங்களுடன் இணைந்து கட்சி, இன, மத, பிரதேச பேதமின்றி சகலரும் செயற்பட்டால் டெங்கு ஒழிப்பை வெற்றிகொள்வது நிச்சயமெனவும் அவர் தெரிவித்தார்.

டெங்கு ஒழிப்பு சம்பந்தமான ஜனாதிபதி செயலணியை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் நிகழ்வு நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமைச்சர்கள் மைத்திரிபால சிறிசேன, ஏ.எல்.எம். அதாவுல்லா, ஏ.எச்.எம். பெளஸி, ஜோன் செனவிரத்ன, கெஹலிய ரம்புக்வெல்ல, பந்துள்ள குணவர்தன, அநுர பிரியதர்ஷன யாப்பா, பிரதியமைச்சர் மஹிந்த அமரவீர ஆகியோருடன் மாகாண முதலமைச்சர்கள், ஆளுனர்கள், மாகாண சுகாதார அமைச்சர்கள், பிரதேச செயலாளர்களும் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது,

நாடு என்ற வகையில் பல்வேறு சுகாதாரப் பிரச்சினைகளுக்கு காலத்துக்குக் காலம் முகங்கொடுத்து அதில் வெற்றிகாணவும் எம்மால் முடிந்துள்ளது. டெங்கு நோயை இல்லாதொழிக்கும் பலம் எம் அனைவருக்கும் உள்ளது. அர்ப்பணிப்புடனும் உறுதிப்பாட்டுடனும் செயற்பாட்டால் இதில் வெற்றிகாண்பது உறுதி.

சுகாதாரத்துறைக்கு நிதி வழங்குவதில் அரசாங்கம் ஒருபோதும் பின்னிற்கவில்லை. யுத்தத்தைப் போன்றே சுகாதாரத் தேவைகள் அத்தனைக்கும் போதியளவு நிதியை சகல சந்தர்ப்பங்களிலும் நாம் ஒதுக்கியுள்ளோம்.

எவ்வாறெனினும் டெங்கு விரைவாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். ஜனாதிபதி செயலணியுடன் இணைந்து சகல அமைச்சுக்களும் இத்தேசிய செயற்றிட்டத்தில் பொறுப்புடன் செயலாற்ற வேண்டும். டெங்கு ஒழிப்பில் தமது கடமைகளுக்கு மேலதிகமான அக்கறையை சகலரும் வழங்குவது அவசியம். ஆரோக்கியமான எதிர்கால சந்ததியை உருவாக்குவதில் சகலரினதும் பங்களிப்பு அவசியமாகும்.

டெங்கு பாரதூரம் சம்பந்தமாக சகலருக்கும் விழிப்புணர்வூட்டுவதில் ஜனாதிபதி செயலணி முன்னிற்பதுடன், பாடசாலை மாணவர்கள் பெற்றோர்களுக்கும் இதனைத் தெளிவுபடுத்த வேண்டும்.

படித்தோர், படிக்காதோர் மேல் நிலையிலுள்ளோர், வறுமை நிலையிலுள்ளோர் என நுளம்பு பார்ப்பதில்லை. டாக்டர்கள், கல்விமான்கள், சாதாரண மக்கள் என கடந்த ஒருவருட காலத்தில் 340 பேர் டெங்கு நோயினால் மரணமடைந்துள்ளனர்.

மேற்படி செயலணியின் நடவடிக்கைகள் விரைவாக ஆரம்பிக்கப்பட்டு விரைவாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் தலைமையில் அமைக் கப்பட்ட இந்த செயலணியில் சுகாதார அமைச்சு கல்வி, இடர் முகாமைத்துவம், மாகாண சபைகள் உள்ளூராட்சி, தகவல் ஊடகத்துறை, பொது நிர்வாக உள்நாட்டலுவ ல்கள், சுற்றாடல் ஆகிய அமைச்சுக்களுடன் உள்ளூராட்சி மன்றங்கள், பிரதேச செயல கங்கள், நகர சபைகள், கிராமசேவகர் பிரிவுகள் ஆகியன இடம்பெறுகின்றன. இவற்றுடன் இணைந்த செயற்றிட்டங்கள் உருவாக் கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

மத்திய ஆபிரிக்காவுக்கு இலங்கைப் படை


இலங்கை இராணுவத்தின் படைப்பிரிவொன்று ஐ.நா படையுடன் இணைந்து பணிபுரிவதற்காக மத்திய ஆபிரிக்க குடியரசு மற்றும் சாட் ஆகிய நாடுகளுக்கு விரைவில் புறப்பட்டுச் செல்லவுள்ளது. மூன்று அதிகாரிகள் உட்பட மொத்தம் 61 பேர் இந்தப்படைப்பிரிவில் அங்கம் வகிக்கவுள்ளனர். இலங்கை இராணுவப்பிரிவொன்று மத்திய ஆபிரிக்காவுக்குச் செல்வது இதுவே முதற் தடவையாகும். இலங்கை இராணுவத்தின் தொழிற்சார் தகைமை மற்றும் அதன் திறமை என்பனவற்றுக்கு ஐ.நா வழங்கியுள்ள அங்கீகாரமாகவே இது கருதப்படுவதாக இராணுவம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...