9 மே, 2010

சபையை இரவு வரை நடத்த யோசனை



நாடாளுமன்றத்தை பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பித்து இரவு 7.30 மணிவரையிலும் நடத்துவதற்கு ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்கம் முன்னெடுக்கவிருக்கின்ற அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் அமைச்சர்கள் பிரதியமைச்சர்கள் பெரும் பங்காற்றவிருப்பதனால் சபை கூடும் நேரத்தில் மாற்றங்களை ஏற்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

1983 ஆம் ஆண்டிற்கு பின்னர் அமைச்சர்கள் பிரதியமைச்சர்கள மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முகம்கொடுத்த பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாகவே நாடாளுமன்றம் காலை 9.30 மணிமுதல் மாலை 4.30 வரை நடைபெற்றது.
மேலும் இங்கே தொடர்க...

மன்னார் பள்ளிமுனையில் 49 வீடுகள் திறந்துவைப்பு

மன்னார் பள்ளிமுனை கிராமத்தில் 49 வீட்டுத் திட்டம் இன்று பிற்பகல் அமைச்சர்களான ரிசாத் பதியுதீன் மற்றும் விமல் வீரவன்ச ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது.

வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தின் கீழ் மன்னார் பள்ளிமுனைக் கிராமத்தில் மேற்படி 49 வீடுகள் அமைக்கபட்டு உரியவர்களிடம் கையளிக்கப்பட்டது. மஹிந்த சிந்தனையின் தேசிய கொள்கைக்கு ஏற்ப வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் நிதி மற்றும் தொழினுட்பப் பங்குடன் இவை அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

இளைஞன் சிவில் படையினரால் தாக்குதல்

மன்னார் பஸ்தரிப்பு நிலையத்துக்கு அருகில் உள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பு நின்று கொண்டிருந்த இளைஞன் மீது சிவிலில் வந்த காவற் படையினர் மூவர் இன்று இரவு 8.30 மணியளவில் கண்மூடிதனமாக தாக்கியுள்ளனர்.

மேற்படி 25 வயதுடைய இளைஞன் உணவகத்தில் உணவு அருந்தி விட்டு வெளியில் வந்து நின்று கொண்டிருந்த போது வாகனம் ஒன்றில் சிவிலில் வந்த படையினர் மூவருக்கும் இளைஞனுக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து படையினரில் ஒருவர் தன்னிடம் இருந்த கண்ணாடி போத்தல் ஒன்றினால் இளைஞனின் முகத்தில் தாக்கியுள்ளார். இந்நிலையில் அவ்விடத்தில் பதற்றநிலை உருவானதுடன் பொலிஸாரும், இராணுவப் படையினரும் கூடி பதற்ற நிலையை வழமைக்கு கொண்டு வந்துள்ளனர்.

இதன் பின் தாக்குதலுக்கு உள்ளான இளைஞனை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதோடு தாக்குதல் நடத்திய சிவில் படையனர் மூவரும் மதுபோதையில் இருந்துள்ளதாக தெரியவருகின்றது
மேலும் இங்கே தொடர்க...

மன்னார் நகரப்பகுதிகளில் விசேட பாதுகாப்பு



மன்னார் பகுதிகளில் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் கொள்ளைச் சம்பவங்களைத் தொடர்ந்து மன்னார் நகரப்பகுதிகளில் இரவு நேரங்களில் பொலிஸார் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளனர்.

இரவு நேரங்களில் சந்தேகத்திற்கிடமான முறையில் காரணம் எதுவும் இன்றி நடமாடுபவர்களை கைது செய்யுமாறு பொலிசாருக்கு அறிவிக்கப்ட்டுள்ளது. இந்நிலையில் மன்னார் பகுதிகளில் நேற்று இரவு 11.30 மணியளவில் எவ்வித காரணமும் இன்றி நடமாடிய 02 இளைஞர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இவர்கள் தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக மன்னார் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

இந்தோனேஷியாவில் நில நடுக்கம் : இலங்கைக்குப் பாதிப்பில்லை



இந்தோனேஷியாவின் வடக்கு சுமாத்ராவில் இன்று காலை 7.4 ரிச்டர் அளவில் புவி அதிர்வு ஏற்பட்டுள்ளது. எனினும் இலங்கைகு இதனால் எவ்வித அச்சுறுத்தல்களும் இல்லை என சுனாமி எச்சரிக்கை நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

ஐரோப்பிய நாடுகளில் விமான போக்குவரத்து நிறுத்தம்





ஐஸ்லாந்தில் எரிமலை வெடித்தது அதில் இருந்து வெளியான சாம்பல் பல ஆயிரம் மைல் தூரம் காற்றில் பரவியதால் கடத்த மாதம் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது அங்கு மேலும் ஒரு எரிமலை வெடித்தது.

அதில் இருந்து வெளியான சாம்பல் விமான போக்குவரத்தை முடக்கியுள்ளது. ஸ்பெயின், பிரான்ஸ், போர்ச்சுக்கல் நாடுகளில் விமான போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டுள்ளது. ஸ்பெயினில் 19 விமான நிலையங்கள் மூடப்பட்டன. 673 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

போர்ச்சுக்கலில் லிஸ்பன், ஒபர்மோ, பேரோ விமான நிலையங்களில் இருந்து புறப்படும் 104 விமானங்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. லண் டனில் இருந்து கேனரி தீவுகள், ஸ்பெயின், போர்ச்சுக்கல் நாடுகளுக்கு செல்லும் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் இருந்து வட அமெரிக்கா செல்லும் விமானங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

ராகுல்காந்தி வருகை: 38 இலங்கை தமிழர்கள் கேரளாவில் கைது






இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தல் கேரளாவில் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலை பார்வையிட காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி அடுத்த வாரம் கேரளா வருகிறார்.

இந்த நிலையில், இலங்கை தமிழர்கள் சிலர் கொல்லம் லாட்ஜில் தங்கியிருப்பதாக தமிழக உளவுத்துறையிடம் இருந்து கேரள போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதை தொடர்ந்து கொல்லம் அருகேயுள்ள ஒரு லாட்ஜில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். அங்கு பெண்கள், குழந்தைகள் உள்பட 38 இலங்கை தமிழர்கள் இருந்தனர்.

அவர்களை கைது செய்து கொல்லம் கிழக்கு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அவர்கள் இலங்கையில் உள்ள முல்லை தீவை சேர்ந்தவர்கள். கடந்த 2 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் தங்கியிருந்ததாக தெரிவித்தனர்.

இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு கொச்சியில் இருந்து செல்ல அங்கு வந்திருந்தனர். அதற்கான ஏற்பாடுகளை ஏஜெண்டுகள் சிவா, டென்னிஸ் ஆகியோர் செய்திருந்தனர். ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை கட்டணம் செலுத்தியிருப்பதாகவும் தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து ஏஜெண்டு டென்னிஸ் கைது செய்யப்பட்டான். இவனிடம் நடத்திய விசாரணையில் ஏற்கனவே 50 பேரை ஆஸ்திரேலியா அனுப்பி இருப்பதாக தெரிவித்தான். இந்த தகவலை கொல்லம் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹர்ஷிதா அட்ட லூரி தெரிவித்தார். மேலும், இவர்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே தொடர்பு உள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை திரைப்பட விழாவுக்கு அமிதாப்பச்சன் வருவதை யாராலும் தடுக்க முடியாது:





சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருது வழங்கும் விழா இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற உள்ளது.

இந்த விழாவில் பிரபல இந்தி நடிகர் அமிதாப்பச்சன் தலைமையில் நடிகர்- நடிகைகள் குழு பங்கேற்கும் என்று அறிவிக்கப்பட்டது.

தமிழர்களை அழித்த சிங்கள அரசு துணையுடன் நடத்தப்படும் இந்த விழா வில் நடிகர் அமிதாப்பச்சன் கலந்து கொள்ளக் கூடாது என்று பல்வேறு தமிழ் அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் அமிதாப்பச்சன் வீடு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

இதுபற்றி கருத்து தெரிவித்த நடிகர் அமிதாப்பச்சன், யாருடைய மன உணர்வும் பாதிக்கும் வகையில் நடந்து கொள்ளமாட்டேன் என்றார். எனவே கொழும்பு பட விழாவில் அமிதாப்பச்சன் கலந்து கொள்ளமாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் அமிதாப்பச்சன் திட்டமிட்டப்படி கொழும்பு பட விழாவில் கலந்து கொள்வார் என்று சிங்கள அதிகாரிகள் கூறி வருகிறார்கள். இதை பொருளாதார அபிவிருத்தி மந்திரி லட்சுமண் யாப்பா அயே வர்தன உறுதி செய்துள்ளார்.

கொழும்பு சமுத்ரா ஓட்டலில் நடந்த விழாவில் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கொழும்பில் நடைபெறும் சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விழாவில் நிச்சயம் நடிகர் அமிதாப்பச்சன் கலந்து கொள்வார். அவர் வருவதை உறுதி செய்துள்ளார். அவர் வருகையை யாராலும் தடுக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

அவசரகாலச் சட்டத்தின் சில ஒழுங்குவிதிகள் இப்போது நீக்கப்பட்டுவிட்டன.

ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி மூலம் இந்த நீக்கங்கள் உடனடியாக நடைமுறைக்கு வந்தன.

அவசரகாலச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட இத்திருத்தம் பொதுவாக நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்மை பயக்கின்ற அதே வேளை தமிழ் மக்கள் சில விசேடமான நன்மைகளைப் பெறுகின்றனர்.

குடியிருப்பாளர் பற்றிய விபரங்களைப் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும் என்ற 23வது ஒழுங்குவிதி இப்போது நீக்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே தற்காலிகமாக வாழும் தமிழ் மக்கள் பொலிஸ் பதிவு நடைமுறையினால் பல சிரமங்களுக்கு முகங்கொடுத்தார்கள். இப்போது எந்தச் சிரமமும் இல்லை. அதேபோல வீடுகளில் தேடுதல், வீதிச் சோதனை, ஊரடங்குச் சட்டம் என்பவை தொடர்பான ஒழுங்குவிதிகளும் நீக்கப்பட்டுள்ளன.

புலிகள் அரசாங்கத்துக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காலத்தில் இக் கட்டுப்பாடுகளை நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டிய அவசியம் ஏற்பட்டது. புலிகள் தோற்கடிக்கப்பட்டு அவர்களின் அச்சுறுத்தல் இல்லாத நிலை இப்போது ஏற்பட்டிருப்பதால் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே ஏ 9 பாதை போக்குவரத்துக்குத் திறந்து விடப்பட்டிருப்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

யுத்தம் முடிவுக்கு வந்ததற்குப் பிந்திய இந்த நிகழ்வுகளை அரசியல் கோணத்திலிருந்து பார்ப்பது பொருத்தமாக இருக்கும் .

தமிழ் மக்களைச் சிரமங்களுக்கு உட்படுத்திய அவசரகாலச்சட்ட ஒழுங்குவிதிகள் நடைமுறைக்கு வருவதற்குப் புலிகளின் செயற்பாடுகளே காரணமாக இருந்தன என்பதை மேலே பார்த்தோம். அரசியல் அரங்கிலிருந்து புலிகள் அப்புறப்படுத்தப்பட்ட நிலையில் இந்த ஒழுங்குவிதிகளுக்கான தேவை இருக்கவில்லை. தனிநாட்டுக் கொள்கை தமிழ் மக்களுக்குப் பாதிப்பான விளைவுகளையே ஏற்படுத்தும் என்பதை இதிலிருந்து விளங்கிக்கொள்ள முடியும்.

தமிழ் மக்களின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் என உரிமை கோருகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேண்டுகோளோ பங்களிப்போ இல்லாமலேயே தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கின்ற இந்த முடிவை அரசாங்கம் எடுத்திருக்கின்றது. தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் ஒத்துழைத்துச் செயற்படும் பட்சத்தில் அரசியல் தீர்வைப் பொறுத்தவரையில் கணிசமான முன்னேற்றத்தை அடைய முடியும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு!

அரசியல் தீர்வு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனிநாட்டு மாயையிலிருந்து இப்போது விடுபட்டிருக்குமென நம்புகின்றோம். இன்றும் அந்த மாயையில் சிறிதளவாவது ஒட்டிக்கொண்டிருப்பதென்றால் அதைவிட முட்டாள்தனம் வேறெதுவும் இருக்க முடியாது.

தனிநாட்டுக் கோரிக்கை தமிழ் மக்களுக்குப் பாதகமான விளைவுகளையே தந்திருக்கின்றது. தெற்கில் முன்னர் அடங்கிப் போயிருந்த பேரினவாத சக்திகள் தலைதூக்கியமை, அதன் விளைவாக அரசியல் தீர்வு முயற்சியில் ஏற்பட்ட பின்னடைவு, தமிழ் மக்கள் கூடுதலான எண்ணிக்கையில் சொந்த இடங்களிலிருந்து இடம்பெயரவும் உயிரிழக்கவும் நேர்ந்தமை ஆகியவற்றைத் தனிநாட்டுக் கொள்கையின் பிரதான பாதிப்புகளாகக் கூறலாம்.

மேலும் தனிநாடு காண்பது நடைமுறைச் சாத்தியமற்றது. தனிநாட்டுக்கான போராட்டம் தமிழ் மக்களைப் பலி கொடுப்பதாகவே முடியும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காலங்கடந்தாவது இதை விளங்கிக் கொண்டு அரசியல் தீர்வுப் பாதைக்குத் திரும்பியிருப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இப்போது கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் தீர்வு பற்றிப் பேசுகின்றார்கள். அவர்கள் உண்மையிலேயே அரசியல் தீர்வை அடையும் நோக்கத்துடன் பேசியிருக்கின்றார்களா அல்லது மக்களைத் திருப்திப்படுத்தித் தங்கள் இருப்பை உறுதி செய்துகொள்ளும் நோக்கத்துடன் பேசுகின்றார்களா என்பதை அவர்களின் செயற்பாட்டிலிருந்துதான் அறிய முடியும்.

அரசாங்கத்துடன் இணைந்திருக்கும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியையும் மற்றைய தமிழ்க் கட்சிகளையும் தமிழ் மக்களின் நலன்களுக்கு விரோதமானவர்கள் என்று முத்திரை குத்தும் முயற்சிக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் முன்னுரிமை அளித்துச் செயற்படுகின்றார்கள்.

இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வுதான் இன்று தமிழ் மக்களின் பிரதான நலன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே இந்த நலனுக்கு விரோதமாக அண்மைக்காலம் வரை செயற்பட்டது. மற்றைய எல்லாத் தமிழ்க் கட்சிகளும் அரசியல் தீர்வு என்ற லட்சியத்திலிருந்து ஒருபோதும் விலகவில்லை. இன்றைய சூழ்நிலையில் படிப்படியாகவே அரசியல் தீர்வை அடைய முடியும் என்ற யதார்த்தபூர்வமான நிலைப்பாட்டின் அடிப்படையில் அவை செயற்படுகின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் தீர்வு பற்றி இப்போது பேசுகின்ற போதிலும், ‘தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய’ என்ற அடைமொழியை முன்வைப்பது தீர்வுக்காக நடைமுறைச் சாத்தியமான வழிமுறையைப் பின்பற்றும் நோக்கம் அதற்கு இல்லையா என்ற சந்தேகத்தைத் தோற்றுவிக்கின்றது.

முழுமையான அரசியல் தீர்வுதான் தமிழ் மக்களின் அபிலாஷையைப் பூர்த்தி செய்யக் கூடியது. ஆனால் அதை உடனடியாக அடைவது சாத்தியமில்லை. உடனடியாக என்ன தீர்வு சாத்தியமோ அதை ஏற்றுக்கொண்டு முழுமையான தீர்வுக்காக முயற்சிப்பதுதான் தமிழ் மக்களின் அபிலாஷையைப் பூர்த்தி செய்வதற்கான ஆக்கபூர்வ நடைமுறை. அதைவிட்டு, தமிழ் மக்களின் அபிலாஷையைப் பூர்த்தி செய்யக் கூடிய தீர்வு ஒரே தடவையில் கிடைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுப்பது அரசியல் தீர்வு பற்றிப் பேசிக்கொண்டே அதற்குக் குழிபறிக்கும் தந்திரோபாயமாகும்.

பட்டது போதும் என்ற நிலைக்குத் தமிழ் மக்கள் வந்துவிட்டார்கள். இப்போது அவர்களின் அவசியமான தேவை இனப் பிரச்சினைக்கான தீர்வு. தங்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் தீர்வைப் பெறுவதற்கு முயற்சிக்கின்றார்களா அல்லது அரசியல் இருப்புக்காகத் தீர்வைத் தூரத்துப் பச்சையாகக் காட்டுகின்றார்களா என்பதை மக்கள் அவதானத்துடன் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

மோசமான நெருக்கடி

முன்னொரு போதும் இல்லாத அளவு மோசமான நெருக்கடிக்கு ஐக்கிய தேசியக் கட்சி இப்போது முகங்கொடுக்கின்றது. கிட்டத்தட்ட மூழ்கும் கப்பலின் நிலைக்குக் கட்சி வந்துவிட்டது எனலாம். இப்போது ஒவ்வொருவராக வெளியேற முயற்சிக்கின்றார்கள். நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள். இருவரும் யானைச் சின்னத்தில் போட்டியிட்ட போதிலும் வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள். ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர்கள் என்பதே சட்டரீதியான நிலை. இப்போது இவர்கள் இருவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் பாராளுமன்றத்தில் சுதந்திரமாகச் செயற்படப் போவதாக அறிவித்திருக்கின்றார்கள். இவர்களைக் கட்டுப்படுத்துவதற்கோ இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கோ இயலாத நிலையில் கட்சித் தலைமை இருக்கின்றது.

முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் முடிவுக்கு மாறாகக் கட்சியின் பாண்ளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் அவசரகாலச் சட்டத்துக்கு எதிராக வாக்களித்தார். தொடர்ச்சியாக அவ்வாறே வாக்களித்தார். கட்சித் தலைமையால் அவரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அந்த முன்மாதிரியை இன்றைய பாராளுமன்ற உறுப்பினர்களும் பின்பற்றுகின்றார்கள்.

அவசரகாலச் சட்டத்தை நீடிக்கும் பிரேரணை மீதான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் கடந்த புதன்கிழமை நடைபெற்றது. ஐக்கிய தேசியக் கட்சி வாக்கெடுப்பில் பங்குபற்றாமல் சபையிலிருந்து வெளியேறியது. ஆனால் அதன் பாராளுமன்ற உறுப்பினர்களான விஜயகலா மகேஸ்வரன், ஜே. ஸ்ரீரங்கா, ஏ. ஆர். எம். ஏ. காதர் ஆகியோர் வெளிநடப்புச் செய்யவில்லை. ஏ. ஆர். எம். ஏ. காதர் பிரேரணைக்கு ஆதரவாகவும் மற்றைய இருவரும் பிரேரணைக்கு எதிராகவும் வாக்களித்தார்கள். கட்சிக் கட்டுப்பாடு இந்தளவுக்குத் தேய்ந்து போனதற்குத் தலைமையின் பலவீனமே காரணம்.

விஜயகலா மகேஸ்வரன் கணவனின் அடிச்சுவட்டில் நடக்கின்றார். ஸ்ரீரங்காவின் பிரச்சினை வேறு. இரண்டு தேசியப் பட்டியல் அங்கத்துவம் தர வேண்டும் என்று கட்சித் தலைமையிடம் கோரிக்கை விடுத்ததாகவும் அக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் கட்சியுடனான உறவை முறித்துக் கொள்வதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகின்றது.

ஏ. ஆர். எம். ஏ. காதர் ஐக்கிய தேசியக் கட்சியின் நீண்டகால முக்கியஸ்தர். இருபது வருடங்களுக்கு மேலாகப் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்றார். தொடர்ச்சியாக மக்களால் தெரிவு செய்யப்படுமளவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு உள்ளவர். இப்போது இவர் கட்சித் தலைமை மீது மிகுந்த வெறுப்புக் கொண்டிருக்கின்றார்.

கடந்த செவ்வாய்க்கிழமை கட்சித் தலைவர் இவரை அழைத்துப் பேச முற்பட்டதாகவும் "நீங்கள் கூறும் எதையும் நம்புவதற்கு நான் தயாரில்லை" என்று ரணிலிடம் கூறிவிட்டு இவர் வெளியேறியதாகவும் பேசிக்கொள்கிறார்கள்.

அவசரகாலச் சட்ட நீடிப்புக்கு ஆதரவாக வாக்களித்ததற்குக் கட்சித்தலைமை காதர் ஹாஜியாரிடம் விளக்கம் கேட்டிருக்கின்றது. அதே நேரம், கட்சியின் முடிவுக்கு மாறாக அவசரகாலச் சட்ட நீடிப்புக்கு எதிராக வாக்களித்தவர்களிடம் விளக்கம் கேட்கவில்லை.

புனரமைப்பு

ஐக்கிய தேசியக் கட்சியை மூழ்கவிடாமல் காப்பாற்றும் முயற்சியில் சில முன்னணி உறுப்பினர்கள் ஈடுபட்டிருக்கின்றனர். கட்சி முழுமையாகப் புனரமைக்கப்படாவிட்டால் அது அரசியல் அரங்கிலிருந்து அந்நியமாவதைத் தவிர்க்க முடியாது எனக் கருதும் இவர்கள் தலைமை மாற்றம் உட்படப் பல மாற்றங்களைச் சிபார்சு செய்கின்றனர். உட்கட்சித் தேர்தல் மூலம் தேவையான மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்றும் கட்சித் தலைமையை மாற்றுவதற்குத் தடையாக இருக்கும் யாப்பையும் மாற்ற வேண்டும் என்றும் இவர்கள் செய்த சிபார்சைக் கட்சியின் நிறைவேற்றுக்குழு ஏற்றிருக்கிறது.

இதை ஒரு பெரிய வெற்றியாகக் கட்சிக்குள் பேசிக் கொள்கின்றார்கள். ஆனால் ரணில் எவ்வளவு தூரம் இம்மாறங்களை ஏற்றுச் செயற்படுவார் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

தலைமைப் பதவியை விட்டுக்கொடுக்க ரணில் தயாராக இல்லை. தொடர்ந்தும் தலைவராக இருக்கப் போவதாக அண்மைய தோல்விகளுக்குப் பின்னரும் கூறினார். நிறைவேற்றுக் குழுவின் முடிவு மேலோட்டமானதாகவே இருப்பதால் ரணில் அதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வார்.

உட்கட்சித் தேர்தல் எனக் கூறியுள்ள போதிலும் எந்த மட்டத்தில் அத்தேர்தல் நடைபெற வேண்டும் என்பது தெளிவாகச் சொல்லப்படவில்லை. நிறைவேற்றுக் குழுவிலா? பொதுச் சபையிலா? அல்லது மாவட்ட மட்டத்திலா?

எந்தச் சீர்திருத்தமும் குறைந்த பட்சம் 75 வீத ஆதரவைப்பெற வேண் டும் என்று ரணில் அண்மையில் கூறி யிருக்கிறார்.

இவையெல்லாம் நிறைவேற்றுக் குழுவின் தீர்மானத்தை ரணில் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதற்குக் கைகொடுக்கக் கூடியவை.
மேலும் இங்கே தொடர்க...

உதவ முடியாவிட்டாலும் உபத்திரவம் தராதிருங்கள்'' நாடுகடந்த நடவடிக்கைகள் நாட்டு நலன் கருதியிருக்க வேண்டும்!




இலங்கையில் முப்பது வருட கால உள்நாட்டு யுத்தம் முடிவுற்று இம்மாதத்துடன் ஒருவருட காலம் பூர்த்தியாகின்றது. இருந்த போதிலும் ‘மழை ஓய்ந்தாலும் தூவானம் ஓய்ந்துவிடாதது’ போல வடக்கு- கிழக்கில் அசெளகரியங்களை ஏற்படுத்தக் கூடிய சம்பவங்கள் ஆங்காங்கே இட ம்பெறுவதை அவதானிக்க முடிகின்றது.

வடக்கு- கிழக்கில் அமைதியான முறையில் வாழத்தொடங்கியிருக்கும் மக்களிடையே ஆட்கடத்தல், கப்பம் கேட்டல், பாலியல் துஷ்பிரயோகங்கள், கொள்ளையிடல் என்பவற்றுடன் கொலைச் சம்பவங்களும் தலைகாட்ட ஆரம்பித்துள்ளன.

கடந்த முப்பது வருடத்தில் வடக்கு, கிழக்குப் பிரதேச மக்கள் அனுபவித்த துன்பங்கள், தொல்லைகள் எண்ணிலடங்கா தவை.

ஆயினும் கடந்த மே மாதம் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்ததை யடுத்து வடக்கு, கிழக்கில் இடம்பெற்று வருகின்ற புனர்வாழ்வு, புனரமைப்புப் பணிகள் குறிப்பிடத்தக்க வகையில் முன்னேற்றகரமாக இருந்துவருகின்றன.

யுத்த காலத்தில் இடம்பெயர்ந்த மக்களும் படிப்படியாக அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்பட்டு வருகின்றனர்.

இத்தகைய ஒரு முழுமையான அமைதிச் சூழலை நோக்கி நகர்ந்துகொண் டிருக்கின்ற நிலையில் சமூக விரோதக் கும்பல்களின் அடாவடித்தனங்கள் அப்பாவி மக்களை மீளவும் பீதிக்குள்ளாக்குவதாக இருக்கின்றது.

வடக்கு- கிழக்கில் இவ்வாறு அமைதியைக் குழப்பும் சம்பவங்கள் முளைவிட ஆரம்பித்துள்ள அதேசமயம், வெளிநாடுகளில் இருக்கும் குழப்ப வாதிகளும் இலங்கையில் நிலவிவரும் அமைதிச்சூழலை மழுங்கடிக்கும் நடவடிக்கைகளில் தம்மை ஈடுபடுத்த ஆரம்பித்துள்ளனர்.

வெளிநாடுகளில் உள்ள பொறுப்பற்ற நபர்களின் நடவடிக்கைகளில் ஒன்றாகவே ‘நாடுகடந்த அரசு’ என்ற கோஷமும் காணப்படுகின்றது. இந்த ‘நாடு கடந்த அரசு’ என்ற வெட்டிப் பேச்சுக்கு உரமூட்டுவதுபோலவே இலங்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கைகளும் அமைந்துள்ளன.

எனவே உள்நாட்டில் ஒரு தீர்க்கமான அரசியல் நடைமுறைகளின்றியும், வெளிநாடுகளில் வெட்டிப்பேச்சுக்களைப் பேசிப் பேசி குழப்பங்களை ஏற்படுத்துவோரின் ‘பகடைக்காய்’களாகியும், சமூக விரோத கும்பல்களின் கெடுபிடிக்குள்ளாகியும் இருக்கின்ற சூழலே வடக்கு- கிழக்கில் நிலவுகின்றது.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் எஸ். ஜே. வி. செல்வநாயகத்தின் சிரார்த்ததினம் நினைவு கூரப்பட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள், எஸ். ஜே. வி யின் நினைவுத்தூபிக்கு அஞ்சலி செலுத்தி தமது எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பாக அங்கு உறுதிமொழியும் எடுத்துக் கொண்டனர்.

‘தந்தை செல்வா’ வாழ்ந்த காலத்தில் இலங்கையில் தமிழர் பிரச்சினை பல்வேறு பரிமாணங்களையும் பெற்றிருந்தது.

அவரால் இனப் பிரச்சினை தீர்வு தொடர்பாக முன்வைக்கப்பட்ட தீர்வுத்திட்டங்கள் கடந்த காலங்களில் நிராகரிக்கப்பட்டிருந்தன. ஆயினும் சாத்வீக போக்குடைய காந்தியவாதியாகவே அவர் தம்மை இனங்காட்டியிருந்தார்.

கொழும்பு காலிமுகத்திடலில் சத்தியாக்கிரகம் இருந்து, குண்டர்களிடம் அடிபட்டபோது கூட அவர் பொறுமைகாத்திருந்தார். எது எப்படியிருந்த போதிலும் தந்தை செல்வாவின் அரசியல் வாரிசுகள் குறிப்பிடுவது போல ‘ஈழத்து காந்தி’ எனக் குறிப்பிடுமளவுக்கு எஸ். ஜே. வி. செல்வநாயகம் எவ்வளவுதூரம் பொருத்தமானவராக இருந்தார் என்பது கேள்விக்குறியாகும்.

அரசியலில் முழுமையான அர்ப்பணிப்புடன் காந்தி இந்தியாவில் செயல்பட்டதைப் போல எஸ். ஜே. வி. செல்வநாயகம் தாமும் இலங்கையில் நடந்து கொண்டார் என்பது கூட கேள்விக்குறியதாகவே இருக்கின்றது.

வடக்கே ஒரு சோஷலிசவாதியாகவும் சிறந்த கல்விமானாகவும் விளங்கிய யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அதிபராகவும் இருந்த அமரர் காத்திகேயன் எஸ். ஜே. வி. செல்வநாயகத்தைப் பற்றி ஒரு தடவை இப்படிக்கூறியிருந்தார்.

‘நெல்வநாயகம் என்றால், அவரது செல்வம் எல்லாம் தென்னிலங்கையில், அரசியல் நாயகம் அதாவது தலைமை மாத்திரம் வட இலங்கையில் எனவே, தெற்கே செல்வமும் வடக்கே நாயகமும் சேர்ந்ததுதான் இந்த செல்வநாயகம்’

செல்வநாயகம் மட்டுமல்ல, அவரது காலத்தைச் சேர்ந்த ஜி. ஜி. பொன்னம்பலம் உட்பட தமிழ் அரசியல் தலைவர்கள் பலருமே கொழும்பில் தமது சொந்த நலன்களுக்கு முக்கியமளித்த நிலையிலேயே வடக்கே வந்து அரசியல் நடாத்தியிருந்தனர்.

கொழும்பின் உயர் நீதிமன்றக் கட்டிடத் தொகுதியான ஹல்வ்ஸ்டோப்பில் ஒருகாலும், பாராளுமன்றத்தில் ஒரு காலுமாக அவர்கள் இரட்டை வேட அரசியல் நடாத்தியிருந்தனர்.

இந்நிலையில் இந்திய சுதந்திரத்துக்காகப் போராடிய மகாத்மாகாத்தியுடன் எவ்வாறு எஸ். ஜே. வியை ஒப்பிட முடியுமென்பதே கேள்விக்குறியதாகின்றது.

மகாத்மா காந்தி தமது உடல், பொருள், ஆவி அனைத்தையுமே துறந்து அப்பழுக்கற்ற அரசியல் நடாத்தினார். சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு அவர் இடந்தரவில்லை.

மகாத்மா காந்தி கூட ஒரு பாரிஸ்டராக சட்டத்தொழில் புரிந்தவர். ஆனால் இந்திய சுதந்திரப் போரில் அவர் தமது தொழிலைக் கைவிட்டு ஒரு சாதாரண இந்திய குடிமகனைப் போல ‘கதர்’ ஆடை அணிந்து வாழ்ந்து காட்டினார்.

தம்மைப் போலவே தாம் சார்ந்தவர்களையும் எளிமையான போக்கோடு கொள்கைப்பிடிப்புடன் மகாத்மா காந்தி வழிநடத்தினார்.

ஆனால் இலங்கையில் எஸ். ஜே. வி. செல்வநாயகம் மட்டுமல்ல, ஏனைய தமிழ் அரசியல் தலைவர்கள் கூட அப்பழுக்கற்ற விதத்தில் தமது மக்களுக்காகப் பாடுபட்டிருக்கவில்லை.

செல்வநாயத்திற்குப் பின்னர் வாழ்ந்த தமிழ் அரசியல் தலைவர்கள் கூட இளஞ் சந்ததியினரைத் தவறான வழியில் ஆயுதமேந்தத் தூண்டிய நிலையில் தாமும் அழிந்து பாரிய அழிவுகளுக்கும் வழிவகுத்திருந்தனர்.

கடந்த முப்பது வருடகால இருண்டயுகம் அரசியல் ரீதியாக வடக்கு, கிழக்குத் தமிழர்களுக்கு உறுதியான தலைமைத்துவத்தை வழங்கியிருக்கவில்லை.

அண்மையில் தமிழ்நாட்டிலிருந்து நாடு திரும்பிய எஸ். ஜே. வி. செல்வநாயகத்தின் புதல்வர் சந்திரகாந்தன் கூட ஒருமைப்பாடான அரசியல் நிலைப்பாட்டின் அவசியம் பற்றி கொழும்பில் தாம் கலந்துகொண்ட கருத்தரங்கொன்றில் குறிப்பிட்டிருந்தார்.

தமிழர்கள் இலங்கையில் எதிர்காலத்தில் பிரிந்து வாழ நினைப்பதோ, தனிவழி செல்வதோ நடைமுறைச்சாத்தியமாக இருக்க முடியாதென சந்திரகாசன் கூறியிருந்தார்.

எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் போற்றும் எஸ். ஜே. வி. செல்வநாயகத்தின் புதல்வர் கூறியது காலத்தின் தேவையறிந்து கூறப்பட்டதாகவே இருக்கின்றது.

தற்போது முற்றிலும் மாறுபட்ட நிலையில் புதியதொரு அரசியல் போக்கிற்காக மக்கள் ஏங்கியிருக்கின்ற நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இலங்கையிலும், தமிஸழ விடுதலைப் புலிகளின் அதரவாளர்கள் என்று கூறிக்கொள்வோர் வெளிநாடுகளிலும், சர்ச்சைகளுக்கு மீளவும் இடமளிப்பவர்களாக நடந்த கொள்கின்றனர்.

‘நாடு கடந்த அரசு’ என்ற புதிய கோஷமும் வெளிநாடுகளில் உள்ள விஷம சக்திகளின் பொறுப்பற்ற நடவடிக்கையாக இருக்கின்றது.

புலம்பெயர்ந்தவர்கள் நாடுகடந்த நிலையில் நட்டாமுட்டித்தனங்களில் ஈடுபடுவதை விட அமைதியை நோக்கி நகர ஆரம்பித்துள்ள தமது தாய்நாட்டைப் பற்றி நல்லதையே நினைக்க வேண்டியவர்களாகின்றனர்.

ஆயிரமாயிரம் விதவைகள், அநாதைகள், அங்கவீனர்கள் என வடக்கு, கிழக்கு மக்களில் அநேகர் தமது எதிர்காலத்தை நினைத்து நொந்தவர்களாக இருக்கின்றனர்.

சிறைகளில் கூட நூற்றுக்கணக்கானவர்கள் அடைப்பட்டுக்கிடக்கின்றனர். இடம்பெயர்ந்தவர்களாக ஆயிரக் கணக்கானோர் இருக்கின்றனர். எனவே புலம்பெயர்ந்து வாழ்பவர்கள் தமது சொந்த பந்தங்களின் நம்பிக்கை நட்சத்திரங்களாக மிளிர வேண்டுமே தவிர, மீளவும் ஓர் இருண்ட யுகத்தை நோக்கி தமது நடவடிக்கைகளை மேற்கொள்ளலாகாது.

இலங்கையில் யுத்தத்துடன் கூடிய ‘இருண்டயுகம்’ முடிவுக்கு வந்து ஓராண்டு பூர்த்தியாகின்ற நிலையில் புனர்வாழ்வு புனரமைப்புப் பணிகளை விரிவான முறையில் முன்னெடுக்க வேண்டியுள்ளது.

கடந்த காலங்களில் புலிகளது பெயரைக் கூறி நிதி சேகரித்து வெளிநாடுகளில் வாழ்க்கை நடத்தியோர் மீளவும் தமது சொந்த நலன்களுக்காகவே புலம்பெயர்ந்த அப்பாவித் தமிழர்களையும், இலங்கையில் இருக்கின்ற தமிழர்களையும் ஏமாற்றப் பலதரப்பட்ட வேலைத் திட்டங்களிலும் குதித்துள்ளனர்.

இத்தகையோரிடம் இருந்து உதவி, ஒத்தாசைகளை நல்ல நோக்கங்களுக்காகப் பெறுவதென்பது ‘கல்லில் நார் உரிப்பதைப்’ போன்றதாகவே இருக்கும். ஆகவே ஆக்கபூர்வமான அமைதி முயற்சிகளுக்கும், சமாதான சகவாழ்வுக்கும் உதவ முடியாதவர்கள் உபத்திரவத்தையாவது செய்யாதிருத்தல் வேண்டும்.
மேலும் இங்கே தொடர்க...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தார்மீகப் பொறுப்பு

இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக ஒத்துழைத்துச் செயற்பட முன்வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அரசாங்க தரப்பிலிருந்து விடுக்கப்பட்ட அழைப்புக்குக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ பிரதிபலிப்பு இன்னும் வெளி வரவில்லை.

இந்த அழைப்பு தொடர்பாகக் கூட்டமைப்புத் தலைமை நிதானமாகச் சிந்தித்துச் சாதகமான முடிவுக்கு வரு வது தான் தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும்.

அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் இனப் பிரச்சினைக் குத் தீர்வு காண்பது சாத்தியமில்லை என்ற யதார்த்தத்தைத் தமி ழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறோம்.

இதேபோல, தமிழ் மக்களின் அபிலாஷை களை முழுமையாகப் பூர்த்தி செய்யும் தீர்வு இன்றைய நிலை யில் சாத்தியமில்லை என்பதையும் கூட்டமைப்புத் தலைவர்கள் ஏற்றுக் கொள்ளவேண்டும். இந்த நிலை உருவாகியதில் அவர்க ளுக்குப் பிரதான பங்கு உண்டு.

இப்போது அதையெல்லாம் பேசிக் கொண்டிருப்பதில் பலனில்லை. பிரச்சினையின் தீர்வுக் காக என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய சிந்தனையே இன்று அவசியமானது.

பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தத்திலும் கூடுதலான அதிகாரங்களைக் கொண்ட தீர்வை நடைமுறைப்படுத்த வேண் டுமானால் அரசியலமைப்பில் மாற்றம் செய்ய வேண்டியது அவசியம்.

அதற்கான பலத்தைக் கொண்டிருக்கும் அரசாங்கத்து டன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சந்தர்ப்பத்தைத் தவற விட்டால் மீண்டுமொரு சந்தர்ப்பம் கிடைப்பது அரிது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்கும் பட்சத்தில் அரசி யலமைப்பைத் திருத்துவதற்கான மூன்றிலிரண்டு பெரும்பான் மையை அரசாங்கம் இலகுவாகப் பெற முடியும்.

எனவே இந் தச் சந்தர்ப்பத்தைக் கூட்டமைப்புத் தலைவர்கள் சரியான முறை யில் பயன்படுத்த வேண்டும். இச் சந்தர்ப்பத்தைத் தவற விடு வது தமிழ் மக்களுக்குச் செய்யும் அநீதியாகிவிடும்.

அரசாங்கம் அதன் ஆலோசனைகளைத் தந்தால் பரிசீலிக்கத் தயார் என்று கூறுவது கூட்டமைப்புத் தலைவர்களுக்கு வழக்கமாகி விட்டுது. தமிழர் விடுதலைக் கூட்டணியாகச் செயற்பட்ட கால த்திலும் இந்த வழக்கம் இருந்தது. இது அக்கறையின்மையின் வெளிப்பாடு.

இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என் பதில் உண்மையான அக்கறை உள்ளவர்கள் வெளியிடக்கூடிய கருத்தாக இது இல்லை. அரசாங்கம் தீர்வு ஆலோசனைகளை முன்வைக்காவிட்டால் தமிழ்ப் பிரதிநிதிகள் எந்தவித அக்கறை யும் இல்லாதிருக்கலாம் என்பதே இக்கருத்தின் உண்மையான அர்த்தம்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் பதினான்கு உறுப் பினர்களைக் கொண்டிருக்கின்றது. எனவே தமிழ் மக்களின் பிரச்சினைகளில் கூடுதலான அக்கறை செலுத்த வேண்டிய தார் மீகப் பொறுப்பு இக் கட்சிக்கு உண்டு. இனப் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுத் தருவதாகத் தேர்தல் பிரசாரத்தின் போது கூறினார்களேயொழிய அரசாங்கம் ஆலோசனைகளை முன் வைக்காவிட்டால் எதுவும் செய்யமாட்டோம் என்று கூறவி ல்லை.

தங்களைத் தெரிவு செய்த மக்கள் சார்பில் செயற்பட வேண்டிய பொறுப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் களுக்கு உண்டு. இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நடை முறையைத் துரிதப்படுத்துவதுதான் அம்மக்கள் சார்பிலான பிர தான செயற்பாடு. அரசாங்கம் விடுத்திருக்கும் அழைப்பை ஏற்று அரசியல் தீர்வு நடைமுறை தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத் துவது அப்பொறுப்பை நிறைவேற்றும் ஆரம்ப நடவடிக்கையாக அமையும்.
மேலும் இங்கே தொடர்க...

முல்லை, கிளிநொச்சியில் 17,000 பேர் 31ம் திகதிக்குள் மீள்குடியேற்றம்






வவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ளவர்களுள் சுமார் 17,000 பேர் எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் கிளிநொச்சி, முல் லைத்தீவு மாவட்டங்களுக்கு மீளக் குடியமர்த்துவதற்காக அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.

த்துடன் வவுனியா மாவட்டத்திலுள்ள அதியுயர் பாதுகாப்பு வலயமாக கருதப்பட்ட பகுதிகளிலிருந்து படையினர் தமது முகாம்களை அகற்றும் பணியை ஆரம்பித்துள்ளதுடன் முதற்கட்டமாக பேயாடிகூழான்குளம் முகாம் அமைந்த பகுதியில் 65 குடும்பங்கள் மீளக் குடியமர்த்தப்படவுள்ளன. இவர்கள் நாளை திங்கட்கிழமை சொந்த இடங்களை பார்வையிடச் செல்கின்றனர். என வவுனியா அரச அதிபர் திருமதி பீ. எம். எஸ். சார்ள்ஸ் தெரிவித்தார்.

அரச அதிபர் பீ. எம். எஸ். சார்ள்ஸ் பாதுகாப்பு பிரிவினருடன் நடத்திய பேச்சுகளின் பயனாக வவுனியா பூவரசன் குளம் விமானப் படை முகாம் அகற்றப்படுவதற்கான நடவடிக்கைகளை படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா மாவட்டத்தில் தனியார் மற்றும் அரச காணிகள், கட்டடங்களை விட்டு வெளியேற ஆரம்பித்துள்ளனர் என அரச அதிபர் தெரிவித்தார்.

வவுனியா மாவட்டத்தின் சகல பிரிவுகளுக்கும் பொறுப்பான படைய திகாரிகள் பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், அரச சார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகளுடன் நேற்று மீள்குடியேற்றம் தொடர்பான விசேட கூட்டமொன்றை வவுனியா அரச அதிபர் அலுவலகத்தில் நடத்தினர்.

இந்தக் கூட்டத்தில் நாளை திங்கட்கிழமை பாலமோட்டை சேமமடு பகுதியில் 500 குடும்பங்களை மீளக் குடியமர்த்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட சகல கிராமசேவகர் பிரிவுகளிலும் 6333 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 21,400 பேர் மீளக்குடியமர்த்தப் பட்டுள்ளனர் என்றும் கூட்டத்தில் பேசப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் வவுனியா மாவட்டத்திலுள்ள பெரிய தம்பாணை, பரயனாளன்குளம், பிரமனாளன்குளம், கணேசபுரம், கோதண்டநொச்சி குளம், பீமன் கல்லு பகுதிகளிலும் 500 குடும்பங்கள் மீளக் குடியமர்த்தப்படவுள்ளதாக அரச அதிபர் திருமதி பீ. எம். எஸ். சார்ள்ஸ் தெரி வித்தார்.

பிறப்பன்மடு பகுதியில் 25 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் கட்டப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளன. ரத்கத்கேகம பகுதிக்கும் பிறப்பன்மடு பகுதிக்கும் மின்சாரம் முழுமையாக வழங்கப் பட்டுள்ளதாகவும் அரச அதிபர் திருமதி பீ. எம். எஸ். சார்ள்ஸ் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

புதிய ஆணைக்குழு அமைக்கும் இலங்கையின் அறிவிப்பு சர்வதேச விசாரணையை திசைத்திருப்புவதற்கான முயற்சி



தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் கடைசிக் கட்டத்தில் சர்வதேச மரபுகள் மீறப்பட்டமை தொடர்பாக இலங்கை அரசாங்கம் புதிய ஆணைக்குழுவொன்றை அமைக்கும் திட்டமானது சுயாதீனமான சர்வதேச விசாரணையொன்றை திசை திருப்புவதற்கான மற்றொரு முயற்சியென மனித உரிமைகள் கண்காணிப்பகம் விமர்சித்துள்ளது.

அத்துடன், இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களை சுயாதீன சர்வதேச விசாரணைக் குழுவொன்றின் மூலம் உறுதிப்படுத்துவதற்கு ஐ.நா. செயலாளர் பான் கீ மூன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.நியூயோர்க்கைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:.

இலங்கை விவகாரம் தொடர்பாக தனக்கு ஆலோசனை வழங்குவதற்கு ஐ.நா. செயலாளர் நாயகம் நிபுணர் .

குழுவொன்றை அமைப்பதை தடுப்பதற்கு பல மாதகால பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே "கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம்' தொடர்பான ஆணைக்குழு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது..

2009 ஆம் ஆண்டு மே மாதம் யுத்தம் முடி வுற்ற பின்னர், சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச் சாட்டுகள் குறித்து அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும் என உறுதியளிக்கும் ஆவண மொன்றில் பான் கீ மூனுடன் ஜனாதிபதி மஹி ந்த ராஜபக்ஷ கையெழுத்திட்டார். ஆனால், காத்திரமான நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட வில்லை..

"பொறுப்புடைமை தொடர்பாக சர்வதேச சமூகம் குரல் எழுப்பும் ஒவ்வொரு தடவையும் இலங்கை நீண்டகாலத்தை எடுத்துக்கொண்டு, எதையும் சாதிக்காத ஓர் ஆணைக்குழுவை அமைக்கும்' என மனித உரிமைகள் கண்காணிப்பதற்கனான ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிராட் அடம்ஸ் கூறியுள்ளார். யுத்த விதி மீறல்கள் தொடர்பாக ஆராய்வதற்கு கடந்த நவம்பர் மாதம் அமைக்கப்பட்ட குழு கண்டறிந்த விபரங்களை வெளியிடுவதற்கு 2010 ஆண்டு ஆண்டு ஏப்ரல் மாதம் கால எல்லையாக நிர்ணயிக்கப்பட்ட போதிலும் அரசாங்கம் இன்னும் அதை வெளியிடவில்லை. அக்குழு அமைக்கப்பட்ட போது அது பொறுப்புக்கூறுவதை தவிர்த்துக்கொள்வதற்கான வெறும் கண்துடைப்பே என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்திருந்தது. ஐ.நா.வின் மதிப்பீட்டின்படி 2009 ஆம் ஆண்டு ஜனவரி முதல் மே மாதம் வரை 7000 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 13000 பேர் காயமடைந்துள்ளனர். வேறு சில மதிப்பீடுகள் 20 ஆயிரம் பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றன. அரசாங்கப் படையினரால் மீறல்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை..

ஜனாதிபதி உட்பட அரசாங்கத் தரப்பினர் மீண்டும் மீண்டும் வலியுறுதியுள்ளனர். ஆனால் பொறுப்புடைமையை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் அர்த்தபுஷ்டியான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. மே 6 ஆம் திகதி இலங்கை அரசாங்கம் மோதல்களிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் தொடர்பாகவும் நல்லிணக்க முயற்சிகள் தொடர்பாகவும் ஆணைக்குழுவொன்றை அமைக்கப்போவதாக அறிவித்தது..

சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட மரபுகள் மீறப்பட்டமை தொடர்பாகவும் அதற்கு வழிவகுத்த சூழ்நிலைகள் தொடர்பாக வும் அவற்றுக்குப் பொறுப்பானவர்கள் தொடர் பாகவும் ஆராயப்படும் என அரசாங்க இணை யத்தளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இலங்கையின் கிரிமினல் சட்டத்தின்படி அத்தகைய சம்பவங்களுக்குப் பொறுப்பானவர்கள் தொடர்பாகவோ இலங்கை அல்லது சர்வதேச சட்டங்களை மீறியவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்தோ அதில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அரசாங்க அறிக்கையின்படி இந்த ஆணைக்குழுவில் 7 இலங்கையர்கள் இடம்பெறுவர். ஆனால் சர்வதேச பங்களிப்பு எதுவும் இல்லை. மோசமான மனித உரிமை நிலைமைகள் மற்றும் குற்றமிழைத்தவர்களை மன்னித்தல் தொடர்பான சர்வதேச விமர்சனங்களை திசை திருப்புவதற்காக இத்தகைய ஆணைக்குழுக் களை அமைக்கும் நீண்டகால வரலாற்றை இலங்கை கொண்டுள்ளது. இலங்கை 1948 ஆம் ஆண்டு சுதந்திரமடைந்ததிலிருந்து குறைந்த பட்சம் 10 ஆணைக்ழுக்களை அமைத்துள்ளது. ஆனால் அவற்றில் எதுவும் குறிப்பிடத்தக்க பெறுபேற்றை ஏற்படுத்தவில்லை. .

இருதரப்பிலும் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் பாரிய மனித உரிமை மீறல் சம்பங்கள் குறித்து விசாரிப்பதற்கு 2006 ஆம் ஆண்டு நவம்பர் அமைக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு முற்றிலும் தோல்விகரமானதாக இருந்தது. சர்வதேச நிபுணர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட ஆணைக்குழுவொன்று விசாரணைகள் வெளிப்படையாகவும் சர்வதேச முறைமைகளுக்கு ஏற்ற வகையிலும் இல்லாததால் 2008 ஆம் ஆண்டு இராஜினாமாச் செய்தது. .

குறிப்பிடப்பட்ட 16 மனித உரிமை மீறல் சம்பவங்களில் 7 சம்பவங்கள் தொடர்பாக மாத்திரம் அக்குழு விசாரணை நடத்தியிருந்த நிலையில் 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அந்த ஆணைக்குழுவை கலைத்தார். அதன் அறிக்கையை ஜனாதிபதி வெளியிடவில்லை. பான் கீ மூன் இலங்கை விவகாரம் தொடர்பாக தனக்கு ஆலோனை வழங்குதற்கு நிபுணர் குழுவொன்றை நியமிக்கும் முயற்சியைத் தடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் பல வாரகாலம் மேற்கொண்ட முயற்சிகளின் பின்னர் புதிய ஆணைக்குழு தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...