10 செப்டம்பர், 2009

வவுனியா நகரசபையின் புளொட் உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம்


ஜனநாயக மக்கள் விடுதலைமுன்னணி(புளொட்)சார்பில் வவுனியாநகரசபை தேர்தலில் போட்டியிட்டுவெற்றியீட்டிய வேட்பாளர்கள் இன்றுகாலை நகரசபைஉறுப்பினர்களாக பதவிப் பிரமாணம்எடுத்துக் கொண்டுள்ளனர். (10.09.2009)


தமிழரசுக் கட்சியின் நீண்டகாலஉறுப்பினரும் தந்தை செல்வா நற்பணிமன்ற தலைவரும் சமாதான நீதவானும் பிரபல சமூக சேவையாளருமாகியஇறைபணிச் செம்மல் வை.தேவராஜா முன்னிலையில் திரு.ஜி.ரி.லிங்கநாதன், திரு.சு.குமாரசாமி, திரு..பார்த்தீபன் ஆகியோர் நகரசபை உறுப்பினர்களாகசத்தியப்பிரமாணம் செய்து கொண்ட வைபவத்தில் புளொட் அமைப்பின் வன்னிமாவட்ட பொறுப்பாளர் திரு.பவன், வவுனியா மாவட்ட பொறுப்பாளர்திரு.நிசாந்தன், வவுனியா மாவட்ட அரசியல் பொறுப்பாளர் திரு.சிவம்ஆகியோருடன் நகரசபை வேட்பாளர்கள், கட்சி உறுப்பினர்கள், பெரியோர்கள், ஆதரவாளர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.


இதன் பின்னர் நகரசபை உறுப்பினர்களும், கட்சி முக்கியஸ்தர்களும், ஆதரவாளர்களும் கோவிற்குளத்தில் அமைந்துள்ள மக்கள் யுத்தத்தின் மகத்தானதளபதி அமரர் உமாமகேசுவரனின் நினைவு இல்லத்திற்கு சென்று மலரஞ்சலிசெலுத்தினர்.
மேலும் இங்கே தொடர்க...
தாயகக்குரல்18புலிகளின் தோல்விக்குப் பின்னர் ஜனாதிபதி கூட்டிய அந்தக் மகாநாட்டில்; தமிழ் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொண்டதால் அது பலரது கவனத்தையும் கவர்ந்தது. தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக ஜனாதிபதியுடன் ஒத்துழைத்து செயல்படப்போவதாகவும் செப்ரெம்பர் 7ம் திகதி ஜனாதிபதியை சந்திக்கப்போவதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழத் தலைவர் இரா.சம்பந்தன் கூறியதாக பத்திரிகைகளில் செய்தி வெளிவந்திருந்தன. அந்தச் செய்திகளின்படி தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதியை சந்தித்த நிகழ்ச்சி நேற்று முன்தினம் 7ம் திகதி நடைபெற்றது.
கடந்த காலங்களில் புலிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய செயற்பட்டு வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதியை சந்திப்பது பலரது கவனத்தை கவர்ந்ததில் வியப்பில்லை. வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியா தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களின் அடிப்படை தேவைகளை அரசு செய்து கொடுக்கவில்லை எனவும் வடக்கில் கிளிநொச்சி பகுதியில் அதிஉயர் பாதுகாப்பு வலையம் உருவாக்கப்பட்டு இராணுவ மயப்படுத்தப்படுவதாகவும் வடக்கு கிழக்கை சிங்கள பௌத்த பூமியாக்குவதே அரசின் கொள்கை எனவும் குற்றம் சாட்டிவந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்தச் சந்திப்பின்போது பல முக்கிய பிரச்சினைகளுக்கு விடை தேடும் என்ற எதிர்பார்ப்பும் பலரிடம் காணப்பட்டது.
ஜனாதிபதியை தமிழ் தேசியக் கூட்டமைப்பு சந்தித்த செய்திகளே 8ம் திகதி தமிழ் ஊடகங்களில் முக்கிய இடத்தைப் பெற்றிருந்தன. பத்திரிகை செய்திகளின்படி இவர்களது சந்திப்பில் புதிய செய்திகள் எதுவும் காணப்படவில்லை. இந்தச் சந்திப்பை பற்றி சுருக்கமாக கூறுவதானால் புதிய மொந்தையில் பழைய கள்ளு என்பது போலத்தான் அண்மைக்காலங்களில் பலராலும் பேசப்பட்ட விடயங்களும் அதற்கான ஜனாதிபதியின் பதிலுமாகவே காணப்பட்டன.. நாம் கடந்த வாரம் தாயகக்குரலில் சுட்டிக்காட்டியிருந்த உயர் பாதுகாப்பு வலயங்கள் குறித்தும் பேசப்பட்டதாக தெரிகிறது.
யாழ் குநாட்டில் உயர் பாதுகாப்பு வலயங்கள் உருவாக்கப்பட்டதால் இடம் பெயர்ந்த மக்கள் பற்றியும் வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த தமிழ் முஸ்லிம் மக்களை மிளக்குடியமர்த்துவது இ பாதுகாப்பு வலயங்களை நீக்குவது குறித்தும் கூட்டமைப்பு ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரிட்டன் கன்சர்வேட்டிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் நிழல் அமைச்சருமான கலாநிதி லியம்பொக்ஸ் தலைமையிலான குழு கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தது. குடாநாட்டில் பாதுகாப்பு வலயத்தால் இடம் பெயர்ந்த மக்கள்; மற்றும் வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து யாழ்ப்பாணத்தில் குடியமர்த்தப்பட்ட மக்கள் குறித்தும் அப்போது யாழ் அரசாங்க அதிபரால் அந்த குழுவின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டது.
இந்தப் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி கருத்து தெரிவிக்கையில் போர்முடிந்தாலும் தற்போதைய நிலையில் உடனடியாக வடக்கு கிழக்கில் பாதுகாப்பை தளர்த்தும் சாத்தியம் இல்லையென கூட்டமைப்பிடம் கூறியுள்ளார். ஜனாதிபதியின் பதிலிலிருந்து உயர்பாதுகாப்பு வலயப் பிரச்சினையும் இப்போதைக்கு தீர்க்கப்படும் பிரச்சினையாக காணப்படவில்லை வன்னியில் இருந்து இடம்பெயர்ந்தோரை மிளக் குடியமர்த்தும். நடவடிக்கையிலும் நீண்ட அவகாசம் தேவை என ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார். அண்மைக்காலங்களில் அமைச்சர்கள் மட்டத்தில் மீள்குடியேற்றம் விரைவுபடுத்தப்படுவதாக கூறப்பட்டாலும் வன்னி தவிர்ந்து, திருகோணாமலை, மட்டக்களப்பு, மன்னார், யாழ்ப்பாணத்தை நிரந்தர வசிப்பிடங்களாக கொண்டவர்களே இப்போது மீளக்குடியமர்த்தப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சில தினங்களுக்கு முன்னர் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க மீள்குடியேற்றம் பற்றி குறிப்பிடுகையில் வன்னியில் புலிகளால் புதைக்கப்பட்டுள்ள ஆயுதங்களில் சிறிய தொகையே மிட்டகப்பட்டுள்ளதாகவும் அவை முற்றாக மீட்டபின்னரே மக்களை மீளக் குடியமர்த்த முடியும் எனத் தெரிவித்துள்ளமை இங்கு கவனிக்கத்தக்கது. எனவே வன்னி மக்களின் மீள்குடியேற்றம் ஜனாதிபதியின் 180 நாள் கால அவகாசத்தை தாண்டியபின்னரும் நடைபெறுமா என்பது சந்தேகமே. நாட்டினதும் மக்களினதும் நலனுக்காக ஒன்றாக இணைந்து செயல்படுவோம் எனவும் விசேடமாக நாட்டின் சமாதானத்தையும் அபிவிருத்தியையும் ஏற்படுத்துவதற்கு அரசுடன் இணைந்து செயல்பட தாங்கள் தயாராக இருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள்மேல் குற்றத்தடுப்பு பிரிவு வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய மனமாற்றம் தற்போதைய சூழ்நிலைக்கேற்ற தந்திரோபாயமா அல்லது யதார்த்தத்தை புரிந்து கொண்ட மனமாற்றமா என்ற சந்தேகம் ஏழுவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கடந்த கால செயற்பாடுகள்தான் அப்படி மக்களை சந்தேகிக்க வைத்துள்ளது. கடந்த காலங்களில் புலிகளை ஏகபிரதிநிதிகளாக ஏற்காத தமிழ் கட்சிகளும்இ நாட்டினதும் மக்களினதும் நலனுக்காக அரசை பகைக்காமல் இருப்பதாகவே கூறிவந்தன. அப்போது அவர்களை அரசுடன் இணைந்து செயல்படும் ஒட்டுக்குழுக்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூறிவந்தது.
2001ம் ஆண்டுக்கு முன்னர் வெண்தாமரை இயக்கம் என்ற அமைப்பினூடாக அரசாங்கம் அதிகாரப் பகிர்வு தீர்வுத்திட்டத்திற்கான நாடளாவிய பிரச்சாரத்தின் காரணமாக தெற்கில் அடங்கிப்போயிருந்த பேரினவாத சக்திகளை மீண்டும் தலைதூக்கச் செய்வதற்கு பேரினவாதக் கட்சிகளுக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பு புலிகளை ஏகபிரதிநிதிகளாக அங்கீகரிக்க எடுத்த முடிவுதான். தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனிநாட்டை அங்கீகரித்தபோதுதான் சிங்கள மக்கள் மத்தியில் பிரிவினை தொடர்பான அச்சத்தை இனவாதிகளால் தூண்ட முடிந்தது.
தனிநாட்டுக்கான யுத்தம் இன்று தமிழ் மக்களை எங்கு கொண்டுபோய் விட்டிருக்கிறது என்பது தெரிந்ததே. பிராந்திய சுயாட்சி போதாது என்று வாதிட்ட நிலை போய் 13வது திருத்தம் முழுமையாக கிடைக்காதா என்று அங்கலாய்க்கும் நிலை தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இப்போது ஏற்பட்டுள்ள மனமாற்றம் யதார்த்தத்தை பரிந்துகொண்டதான மனமாற்றமாக இருக்கவேண்டும் என எதிர்பார்ப்போம்.
மேலும் இங்கே தொடர்க...