22 ஆகஸ்ட், 2009

வீட்டில் அடைத்து வைத்து மாணவியை கற்பழித்த கல்லூரி முதல்வர்; கருச்சிதைவால் பலியான பரிதாபம்


ஆந்திர மாநிலம் கம்மம் மாவட்டம் மர்கேடு பகுதியில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் முதல்வராக இருப்பவர் குமார். இவர் ஏழை மாணவிகளுக்கு படிக்க நிதி உதவி செய்து அவர்களை தன்வசப்படுத்துவார். பின்னர் வெளி இடங்களுக்கு அழைத்துச்சென்று உல்லாசமாக இருப்பார். இதே போல் அவர் முதலாம் ஆண்டு படித்து வந்த ரமாதேவிக்கு நிறைய பண உதவி செய்தார். பின்னர் மர்கேடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அவளை பூட்டி வைத்து கற்பழித்தார்.
இதில் ரமாதேவி கர்ப்பம் அடைந்தார். அதன் பிறகும் உல்லாசம் அனுபவித்ததால் ரமாதேவிக்கு கருக்கலைப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அவளை பத்ராச்சலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக விஜயவாடா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ரமாதேவி இறந்து போனார்.
இதுபற்றி மர்கேடு போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கல்லூரி முதல்வர் குமாரை தேடி வருகிறார்கள்.
மாணவி ரமாதேவியின் சாவுக்கு காரணமான குமாரை கைது செய்யக்கோரி கல்லூரி மாணவ-மாணவிகள் போராட்டத்தில் குதித்தனர்.
மேலும் இங்கே தொடர்க...
தலிபான் தீவிரவாதிகளை அழிக்க பாகிஸ்தான் வீரர்களுக்கு இலங்கை ராணுவ பயிற்சி

கொழும்பு, ஆக. 22-

பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள மலைப்பகுதியில் தலிபான் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளனர். அவர்கள் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக தொடர்ந்து தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களை அடக்கி ஒடுக்குவதிலும் பாகிஸ்தான் ராணுவம் தீவிரமாக உள்ளது. இருந்தும் அவர்களை முற்றிலும் ஒழிக்க முடியவில்லை. கொரில்லா தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இலங்கையில் ராணுவத்துக்கு எதிராக விடுதலைப் புலிகள் இதுபோன்ற அதிரடி தாக்குதல்களை நடத்தி வந்தனர். ஆனால் இலங்கை ராணுவம் அமெரிக்கா, இந்தியா, வங்காளதேசம், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த ராணுவத்திடம் கொரில்லா தாக்குதல் பயிற்சி பெற்று அவர்களிடம் வெற்றிகண்டது.

இதேபோன்ற பயிற்சியை பெற்று தலிபான் தீவிரவாதிகளை அழிக்க பாகிஸ்தான் முடிவு செய்தது. அதற்காக தனது ராணுவ வீரர்களை இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது.

தற்போது பாகிஸ்தான் வீரர்களுக்கு இலங்கை ராணுவம் பயிற்சி அளித்து வருகிறது. இந்தபயிற்சி 6 வாரங்கள் நடைபெறுகிறது. இந்ததகவலை புதிதாக பொறுப்பேற்றுள்ள ராணுவ தளபதி ஜகத்ஜெயசூர்யா தெரிவித்துள்ளார்.
தமிழ்

மேலும் இங்கே தொடர்க...
சீனாவின் செல்வாக்கை முறியடிக்க இந்தியா முடிவு:மாலத்தீவில் கடற்படை தளம் அமைக்க திட்டம்


தெற்காசிய பிராந்தியத்தில் தொடர்ச்சியாக சீனா தனது ராணுவ முகாம்களை அமைத்து வருகிறது. குறிப்பாக இந்தியாவின் அண்டை நாடுகளில் அந்த முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.


பாகிஸ்தானின் கவுடார் பகுதியில் சீனா ஆழ்கடல் துறைமுகம் அமைத்து வருகிறது. அங்கு தனது அணு ஆயுத நீர்மூழ்கி கப்பல்களை வைக்க திட்டமிட்டுள்ளது. இலங்கையில் அம்பாத் தோட்டை மற்றும் வங்காள தேசத்தில் உள்ள துறைமுகங்களையும் அபிவிருத்தி செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளது.

இந்தியாவை சுற்றி வளைக்கும் நோக்கத்துடன் அண்டை நாடுகளில் துறைமுகங்களை அமைத்து அதன் மூலம் கடற்படை தளம் அமைக்க சீனா முயற்சிக்கிறது.

இதை அறிந்து கொண்ட இந்தியா தற்போது விழிப்படைந்துள்ளது. எனவே, தெற்காசிய பிராந்தியத்தில் அதிகரித்து வரும் சீனாவின் செல்வாக்கை முறியடிக்க இந்து மகா சமுத்திரத்தில் கடற்படை தளம் அமைக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இதற்காக மாலத்தீவு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

பொதுவாக போதை மருந்து கடத்தல்காரர்கள், தீவிரவாதிகள் மற்றும் கடற் கொள்ளையர்களின் தாக்குதல்களுக்கு மாலத்தீவு ஆளாகி வருகிறது. அவர்களிடம் இருந்து பாதுகாக்கும் வகையில் இந்தியாவுடன் சேர்ந்து கடற்படையை பலப்படுத்த மாலத்தீவு விரும்புகிறது.
லத்தீவு செ

இந்த திட்டத்தின் அடிப்படையில் மாலத்தீவில் உள்ள முன்னாள் விமானப்படை தளத்தை அபிவிருத்தி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆராய இந்திய பாதுகாப்புத் துறை மந்திரி ஏ.கே. அந்தோணி சமீபத்தில் மா
ன்று வந்தார்.

மேலும் இங்கே தொடர்க...
மாற்றுக் கொள்கைக்கான மத்திய நிலைய நிறைவேற்றுப் பணிப்பாளருக்கு கொலை அச்சுறுத்தல்-

மாற்றுக் கொள்கைக்கான மத்தியநிலைய நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்துவுக்கு நேற்று கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் எழுதப்பட்டு நேற்றுக்காலை அவரது வீட்டுக்கு அனுப்பப்பட்டிருந்த கடிதம் ஒன்றின்மூலம் இக்கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி.ப்ளஸ் தொடர்பில் இலங்கையின் பிழையான நிலைப்பாடு மற்றும் தொழில் இழப்பு போன்றவை தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு ஆணையாளர் பெனிடா பெரேரோ வோல்டனெருக்கு தகவல் வழங்கியமை தொடர்பாகவே இக்கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. மாற்றுக் கொள்கைக்கான மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இங்கே தொடர்க...