18 ஆகஸ்ட், 2010

பலவந்தமாக மக்களைக் குடியேற்றும் முயற்சி செட்டிக்குளத்தில் முறியடிப்பு

செட்டிக்குள வலயம் 04 நலன்புரி நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 1600 குடும்பங்களைச் சேர்ந்த 5000 பேர் இன்று புதன்கிழமை பலவந்தமான செட்டிக்குளம் கதிர்காமர் நலன்புரி நிலையத்திற்கு மாற்றப்பட இருந்தனர்.

எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வினோநோகராதலிங்கத்தின் தலையீட்டை அடுத்து, மாற்றம் நிறுத்தப்பட்டது.

செட்டிக்குள வலயம் 04 நலன்புரி நிலையத்தில் உள்ள மக்களை கதிர்காமர் நலன்புரி நிலையத்திற்கு மாற்றி, பின்னர் ஒரு மாத காலத்தினுள் அவர்களுடைய சொந்த இடங்களுக்கு மீள்குடியேற்றுவதாக இராணுவம் தெரிவித்திருந்தது.

ஆனால் மேற்படி நலன்புரி நிலையத்தில் உள்ள மக்களுக்கு வேறு நலன்புரி நிலையங்களுக்குச் செல்ல விருப்பம் இருக்கவில்லை.

தங்களை இடமாற்றும்போது, பிள்ளைகளின் கற்றல் செயற்பாடுகள், வேலை வாய்ப்புகள் இல்லாது போய்விடும் என அவர்கள் தெரிவித்தனர்.

எனினும் அவர்களின் கூற்றை இராணுவ அதிகாரிகள் செவிமடுக்கவில்லை. இதனையடுத்து அவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வினோநோகராதலிங்கத்தின் கவனத்திற்கு இதுவிடயத்தைக் கொண்டு வந்தனர்.

அவர் இதுதொடர்பாக பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோருடன் பேசி, மக்களின் இடமாற்றத்தைத் தடுத்து நிறுத்தியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

ஐநாவின் அகதிகள் உயர்ஸ்தானிகராலய தலைவர் டாக்டர் மொன்ட்செராட் பிக்ஸாஸ் தெரிவித்துள்ளார்.



தமிழகத்திலிருந்து இதுவரை 1000 பேர் தாயகம் வருகை
இலங்கையில் யுத்தத்தின் போது இடம்பெயர்ந்து தமிழ் நாட்டுக்கு அகதிகளாகச் சென்றவர்களில் ஜனவரி மாதம் தொடக்கம் ஆயிரம் பேர் மீண்டும் தாயகம் திரும்பியுள்ளதாக
தமிழக டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில், 'இந்தியாவிலுள்ள அகதிகள்' எனும் தலைப்பில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

தாயகம் திரும்ப விரும்புவோருக்குச் சலுகைகள் பெற்றுக் கொடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வெவ்வேறு நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வருபவர்கள் நல்ல முறையில் பராமரிக்கப்படுகின்றனர் எனவும் இலங்கை, மியன்மார், ஆப்கானிஸ்தான், திபெத் ஆகிய நாடுகளிலிருந்து அதிகளாக இந்தியா வந்தவர்களுக்கு மருத்துவ வசதி, கல்வி போன்றவை வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

"நாம் அகதிகளை நாட்டை விட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்தவில்லை. இந்தியா வரும் அகதிகள் தொடர்பில் எவ்வித கைச்சாத்துக்களும் இடம்பெறவில்லை.

எமது நாட்டுக்கு வரும் அகதிகள் தொடர்பில் ஐநாவின் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்திடம் 147 நாடுகள் கைச்சாத்து பெற்றுக் கொண்டுள்ளன" என மொன்செராட் பெக்ஸா மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

சென்னை நீதிமன்றத்தில் 6 இலங்கையருக்கு சிறை

விடுதலைபுலிகளின் அனுசரணை வழங்கியவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் 6 பேருக்கு சென்னை, தாம்பரம் நீதிமன்றம் ஒரு வருட சிறைத் தண்டைனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

2007 ஆம் ஆண்டு இவர்கள் 'கியூ' பிரிவு பொலிஸாரால் கைதுசெய்யபட்டனர். இவர்கள் தொடர்பான வழக்கு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு அவர்கள் குற்றவாளியாக இனங்காணப்பட்டதையடுத்து சென்னை உயர் நீதி மன்றம் இந்தத் தீர்ப்பினை வாங்கியுள்ளது.

இலங்கையைச் சேர்ந்த தம்பியண்ணா, சென்ஜேம்ஸ், ஜெயக்குமார், புஷ்பதன்ராஜ், பூமிநாதன், ரவிக்குமார் ஆகியோருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக அச்செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

இவர்கள் 2007 ஆம் ஆண்டு தமிழ் நாட்டிலிருந்து சட்டவிரோதமாக படகு ஒன்றில் இலங்கைக்கு செல்ல முயன்ற போதே அவர்கள் 'கியூ' பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

இராணுவ நீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்க்கட்சிகள் சபையில் எதிர்ப்பு

பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியும் கூட்டுப் படைகளின் பிரதானியுமான ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு முதலாவது இராணுவ நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் சபையில் நேற்று செவ்வாய்க்கிழமை கடும் எதிர் ப்பை தெரிவித்தமையினால் சபையில் பெரும் அமளி துமளி ஏற்பட்டது.

போலியான இராணுவ நீதிமன்றத்தின் மூலம் பதக்கங்களை பறிக்க முடியாது என்று சுட்டிக் காட்டிய எதிர்க்கட்சிகள் அவ்வாறான இராணுவ நீதிமன்றத்தின் அறிக்கைகளை சபையில் ஆற்றுப்படுத்துமாறும் கோரி நின்றனர்.

எதிர்க்கட்சியினரின் கடுமையான எதிர்ப்பை அடுத்து சபை நடவடிக்கைகள் ஐந்து நிமிடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டதுடன் எதிர்க்கட்சியினரின் எதிர்ப்பு சுமார் 30 நிமிடங்களுக்கு நீடித்தன.

பாராளுமன்றம் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1 மணிக்கு கூடியது. சபையின் பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் குடியியல் நடவடிக்கை முறைச் சட்டக் கோவை திருத்தச் சட்ட மூலம் மீதான விவாதம் நடைபெற்றது. விவாதத்தை நீதித்துறை அமைச்சர் அத்தாவுட செனவிரத்ன சட்ட மூலத்தை சமர்ப்பித்து உரையாற்றியதன் பின்னர் எதிர்க்கட்சி தரப்பிலிருந்து எதிர்க்கட்சி தலைவரும் ஐ.தே.க. தலைவருமான ரணில் விக்கிரமசிங்க உரையாற்றியதுடன் இராணுவ நீதிமன்றத்தின் அறிக்கைகளை சபைக்கு ஆற்றுப்படுத்துமாறும் கோரினார்.

இதனிடையே எழுந்த ஜனநாயக தேசியக் கூட்டணியின் எம்.பி. யான அனுர குமார திஸாநாயக்க ஒழுங்கு பிரச்சினையொன்றை முன் வைத்தார். இதன்போது அக்கிராசனத்தில் குழுக்களின் பிரதி தலைவர் முருகேசு சந்திரகுமார் இருந்தார்.

அனுர குமாரதிஸக்ஷிநாயக்கவின் ஒழுங்கு பிரச்சினையுடன் எதிர்க்கட்சிகள் தங்களுடைய ஆசனங்களுக்கு முன்பாக எழுந்து நின்றதுடன் தயாசிறி எம்.பி. சபா பீடத்திற்கு அருகில் சென்றார். இதன் போது பிற்பகல் 2.40 மணிக்கு குழுக்களின் பிரதித் தலைவர் அவையை 5 நிமிடங்களுக்கு ஒத்திவைத்தார்.

சரத் பொன்சேகாவை சூழ்ந்த எம்.பி.க்கள்

சபை ஒத்தி வைக்கப்பட்டபோது சரத் பொன்சேகா எம்.பி.யை எதிர்க்கட்சிகள் எம்.பி. க்கள் சூழ்ந்து கொண்டு உøரயாடிக் கொண்டிருந்தனர்.ஐ.தே.க. எம்.பி. க்களான ரவி கருணக்ஷிநாயக்க, ஜோன் மைக்கல் பெரேரா மற்றும் எம்.பி. பிரதமர் தி.மு. ஜயரட்னவிடம் உரையாடிக் கொண்டிருந்தனர்.இதேவேளை ஐ.தே.க. எம்.பி. க்களான ரவி கருணாநாயக்க மற்றும் தயாசிரி ஆகியோர் நாமல் ராஜபக்ஷ எம்.பி. யுடன் ஏதோ உரையாடிக் கொண்டிருந்தனர்.

இதனிடையே சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் சபை மீண்டும் 2.50 மணிக்கு கூடியது. அப்போது வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் உரையாற்றுவதற்கு தயாராகிக் கொண்டிருந்தார். இதனிடையே எழுந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீண்டும் எதிர்ப்பினை தெரிவித்தனர். இதனிடையே ஒழுங்கு பிரச்சினையை எழுப்பிய அனுர குமார திஸாநாயக்க எம்.பி. நீதி சட்ட மூலத்தை நாமே உருவாக்கி கொடுக்கின்றோம். எனினும் அந்தச் சட்டம் வெளியில் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என்று சுட்டிக் காட்டினார்.

இதனிடையே எழுந்த எதிர்க்கட்சி பிரதம கொறடாவான ஜோன் அமரதுங்க சபை ஒத்தி வைக்கப்பட்டதா? இடை நிறுத்தப்பட்டதா? என்று கேள்வி எழுப்பியதுடன் "பதிவை' கேட்டு விட்டு வந்து சபை நடவடிக்கையை முன்னெடுத்துச் செல்லுமாறு ஆலோசனை வழங்கினார்.மீண்டும் ஒழுங்குப் பிரச்சினை மீண்டுமொரு தடவை ஒழுங்கு பிரச்சினையை எழுப்பிய தயாசிறி ஜயசேகர எம்.பி. அவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் எனது நேரம் குறித்து கேட்டறிவதற்கு சபா பீடத்தை நோக்கி இறங்கி ஓடினேன் அவர் (சபைக்கு தலைமை தாங்கியவர்) ஆசனத்திலிருந்து எழுந்து ஓடி விட்டார் என்றார்.

இதனிடையே எழுந்த ஆளும் கட்சி எம்.பி. யான அஸ்வர் எதிர்க்கட்சி தலைவர் நீதிபதிகளையும் நீதிமன்றங்களையும் தீர்ப்புகளையும் விமர்சிக்கின்றார் அரசியலமைப்பின் பிரகாரம் அவருக்கு விமர்சிக்க முடியாது ஜனாதிபதியின் தீர்மானத்தை மதிக்க வேண்டும் என்றும் சுட்டிக் காட்டினார்.மீண்டும் குறுக்கிட்ட ரணில் விக்கிரமசிங்க நீதிமன்ற தொகுதியும் இராணுவ நீதிமன்றமும் வேறு வேறுபட்டது. சபை ஒத்திவைக்கப்பட்டமையால் அவையில் "வெற்றிடம்' நிரம்பியுள்ளது. சபையை தொடர்ந்து முன்கொண்டு செல்ல முடியாது என்றார்.

சந்திரகுமார் விளக்கம் இதனிடையே எழுந்த குழுக்களின் பிரதி தலைவர் முருகேசு சந்திரகுமார் நான் அவை நடவடிக்கைகளை ஐந்து நிமிடங்களுக்கு இடை நிறுத்தி வைத்தேன். கூச்சல் குழப்பத்தினால் நான் கூறியமை உங்களுக்கு கேட்காமல் இருந்திருக்கலாம் என்று சுட்டிக் காட்டினார். இதனிடையே எழுந்த அனுர குமார திஸாநாயக்க போலியான இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்க முடியாது அந்த போலியான அறிக்கையை அகற்ற வேண்டும்.பாராளுமன்றத்தில் அமுல்படுத்தப்படும் சட்டம் வெளியில் நடைமுறைப்படுத்துவதில்லை என்பதனால் இராணுவ நீதிமன்றத்தின் அறிக்கையை சபையில் ஆற்றுப்படுத்த வேண்டும் என்று கோரி நின்றார்.

வாத விவாதங்களை அவதானித்த சபாநாயகர் பாராளுமன்ற நடவடிக்கைகளும் இராணுவ நடவடிக்கைகளும் வேறு வேறு என்று சுட்டிக் காட்டினார். இதனிடையே எழுந்த ஆளும் கட்சி பிரதம கொறடாவான தினேஷ் குணவர்த்தன சபாநாயகரின் தீர்ப்பை விமர்சிக்கவோ, விவாதிக்கவோ முடியாது. அதற்கு இடமளிக்கவும் முடியாது. தீர்ப்பு தவறானதாயினும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

வாத, விவாதங்கள், ஆர்ப்பாட்டம் மற்றும் கருத்து மோதல்கள் அமளி துமளிக்கு மத்தியிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. க்கள் இவற்றை அவதானித்துக் கொண்டு அமைதியாகவே இருந்தனர். தொடர்ந்தும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் உரையாற்றினார்.
மேலும் இங்கே தொடர்க...

பிரபாகரன் மாத்தையாவை கொன்றதை விடவும் பொன்சேகாவுக்கு இழைக்கப்படும் அநீதி கொடுமை:ரணில்

ஜெனரல் சரத் பொன்சேகாவின் பதவிகளைப் பறித்து ஓய்வூதியத்தையும் நிறுத்தும் அளவிலான தீர்ப்பொன்றை இராணுவ நீதிமன்றம் வழங்கியிருப்பதன் மூலம் முழு இராணுவத்துறையும் அவமானப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, இராணுவ நீதிமன்றத்தின் வழக்கு விசாரøணகளின் அனைத்து அறிக்கைகளும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று சபையில் வலியுறுத்தினார்.

பொய்க் குற்றச்சாட்டுகளை சுமத்தி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரது உரிமைகளைப் பறித்து அவரை சிறையில் அடைத்து வைத்திருப்பதானது மாத்தயாவை பிரபாகரன் கூண்டில் போட்டு கொன்றதையும் விட கொடுமையானது. இது உறுப்பினர் ஒருவரது சிறப்புரிமைப் பிரச்சினை. இதன் விசாரணை நடவடிக்கைகள் பொம்மையைப் போன்று போலியானதாக அமைய முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குடியியல் திருத்தச் சட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறுகையில்,

இந்தப் பாராளுமன்றத்தில் பல்வேறு சட்டங்கள் அங்கீகரிக்கப்படுகின்றன. பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்படுகின்ற சட்டங்களை எந்த நிறுவனமோ அல்லது நீதித்துறையோ நீதிமன்றங்களோ அமுல்படுத்துகின்றனவா அல்லது கடைப்பிடிக்கின்றனவா என்று கேள்வியெழுப்பினால் அவ்வாறு இல்லை என்பதே பதிலாக இருக்கும்.

முன்னாள் இராணுவத் தளபதியான ஜெனரல் சரத் பொன்சேகா தற்போது மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்றார். இருப்பினும் அரசாங்கத்தினாலும் இராணுவ நீதிமன்றத்தினாலும் அவரது உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்ட நிலையில் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளார்.

இராணுவ சேவையில் உள்ள ஒருவர் அரசியலில் ஈடுபடவோ அல்லது தேர்தல்களில் போட்டியிடவோ முடியாது என்பது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளது. அதேபோல் அவ்வாறான சேவையில் உள்ள ஒருவர் அந்த சேவையில் இருந்து விலகியதன் பின்னரோ அல்லது ஓய்வு பெற்றதன் பின்னரோ அரசியலில் ஈடுபடுவதற்கும் தேர்தல்களில் போட்டியிடுவதற்கும் சகல உரிமைகளும் இருக்கின்றது என்று அரசியலமைப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்பதையும் இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான சட்ட வாக்கத்தில் நாம் கைச்சாத்திட்டிருக்கின்றோம். ஆனாலும் இங்குள்ள நிலைமை என்ன என்பது கேள்விக்குறியாகும். முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா ஐக்கிய தேசியக் கட்சியுடன் தொடர்பு கொண்டிருந்ததாக இராணுவ நீதிமன்றத்தில் ஜனாதிபதி சட்டத்தரணி அலுவிகார குற்றம் சுமத்தியிருந்தார். இந்த குற்றச்சாட்டினை இராணுவ நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டுள்ளது.மேலும் அவர் மீது தேசத் துரோகம், சதித் திட்டம், அரச விரோதம் என்றவாறெல்லாம் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஜெனரல் சரத் பொன்சேகா கூட்டுப் படைகளின் பிரதானி என்ற பதவியை 2009 நவம்பர் மாதம் 12 ஆம் திகதி ராஜினாமா செய்வதாக அறிவித்ததையடுத்து அதனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் ஏற்றுக் கொண்டதாக அறிவித்தார்.

அன்றைய கால கட்டத்தில் அரசாங்கம் முதலில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதா அல்லது பொதுத் தேர்தலை நடத்துவதா என்ற அறிவிப்பு எதனையும் விடுக்காத காரணத்தினால் ஐக்கிய தேசியக் கட்சிகளாகிய நாம் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் தெரிவில் தாமதத்தை ஏற்படுத்தினோம். அது தொடர்பில் அப்போது நாம் எதுவும் கூறாதிருந்தோம்.

இந்நிலை அதே மாதம் 26 ஆம் திகதி நடைபெற்ற கட்சிக் கூட்டத்தின் போது ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கென பொது வேட்பாளர் ஒருவரைத் தெரிவது என எமது கட்சியின் தவிசாளர் காமினி ஜயவிக்கிரம பெரேரா கொண்டு வந்த யோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டதன் பேரிலே நாம் ஜெரனல் சரத் பொன்சேகாவுடன் தொடர்பினை ஏற்படுத்தினோம். அந்த சந்தர்ப்பத்தில் ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவ சேவையில் எந்த பதவியிலும் இருக்கவில்லை என்பதை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். இவ்வாறான நிலையில் ஜெனரல் பொன்சேகா எமது கட்சியுடன் தொடர்பு கொண்டிருந்ததாக ஜனாதிபதி சட்டத்தரணியினால் கூறப்பட்ட பொய்க் குற்றச்சாட்டினை ஏற்றுக் கொண்ட இராணுவ நீதிமன்றம் அவரது பதவிகளையும் பட்டங்களையும் பறித்ததுடன் அவரது ஓய்வூதியத்தையும் நிறுத்துவதற்கு உத்தரவிட்டுள்ளது.

ஜெனரல் பொன்சே விடயத்தில் உண்மையான நிலைவரத்தை கண்டறியாத இராணுவ நீதிமன்றத்தின் இத்தகைய தீர்ப்பினால் இந் நாட்டின் முழு இராணுவத்துறைக்குமே அவமானத்தை ஏற்படுத்திவிட்டது. மேலும் ஜெனரல் சரத்பொன்சேகா சி.டி.எம்.ஏ. தொலைபேசியுடன் தொடர்பு கொண்டு பேசியதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் சாட்சியமளித்துள்ளார். அப்படியாக அதில் பதிவு செய்யப்பட்டுள்ள குரல் ஜெனரல் பொன்சேகாவினுடையதா என்று ஆராய்ந்து பார்க்க வேண்டிய தேவையும் இராணுவ நீதிமன்றத்துக்கு இருக்கின்றது. இவ்வாறிருக்கும்போது இராணுவ நீதிமன்றத்தினால் ஜெனரல் பொன்சேகாவுக்கு எதிராக இவ்வாறானதொரு தீர்ப்பினை எவ்வாறு வழங்க முடியும்? பொய்யான குற்றச்சாட்டுகளாக எமது சக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் உரிமைகள் பறிக்கப்பட்டவராகியுள்ளார். ஜெனரல் பொன்சேகாவின் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டமையானது ஏனைய அரச ஊழியர்களது ஓய்வூதியத்தையும் நிறுத்துவதற்கு ஒரு ஆரம்பமாக அமைந்துள்ளது. மேலும் புலிகளின் இரண்டாம் நிலைத் தலைவரான மாத்தயாவை பிரபாகரன் கூண்டில் போட்டு கொலை செய்ததை விட பொன்சேகாவுக்கு இழைக்கப்படுகின்ற அநீதி கொடுமையானது என்றே கூற வேண்டும்.

இது பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரது சிறப்புரிமைப் பிரச்சினையாகும். இது தொடர்பிலான விசாரணைகள் போலியானதாக அமையாமல் அதனை இந்த சபையில் விவாதிப்பதற்கும் சந்தர்ப்பங்கள் உருவாக்க வேண்டும்.அத்துடன் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான இராணுவ நீதிமன்றத்தின் அனைத்து வழக்கு விசாரணை நடவடிக்கைகளின் அறிக்கைகளையும் இந்த பாராமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன். ஏனெனில் அவர் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினராவார் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

கொழும்பு - தூத்துக்குடி; தலைமன்னார் - ராமேஸ்வரம்:

கப்பல் சேவைகளை விரைவில் ஆரம்பிக்க இலங்கை, இந்திய அரசுகள் நடவடிக்கை

தென்பகுதி ரயில்பாதை புனரமைப்பு ஒக்டோபரில்


கொழும்பு - தூத்துக்குடி மற்றும் தலைமன்னார் - ராமேஸ்வரத்துக்கான கப்பல் சேவைகளை விரைவில் ஆரம்பிப்பதற்கான முன்னோடி நடவடிக்கைகளை இலங்கை, இந்திய அரசாங்கங்கள் மேற்கொண்டு வருவதாக இந்தியத் தூதுவர் அசோக் கே. காந்த் தெரிவித்தார்.

அத்துடன் தென்பகுதி ரயில் பாதை புனரமைப்பு நடவடிக்கைகளை ஒக்டோபரில் ஆரம்பிக்கவுள்ளதாகத் தெரிவித்த அவர் இதற்கென 167.4 மில். அமெரிக்கன் டொலர்களை நிதியுதவியாக இந்தியா வழங்கவுள்ளதெனவும் அவர் தெரிவித்தார்.

மதவாச்சி - தலைமன்னார் ரயில் பாதை புனரமைப்பு தொடர்பான உடன்படிக்கைக் கைச்சாத்து நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

முல்லை, கிளிநொச்சி மாவட்ட மாணவர்கள் இலவச சுற்றுலா வட மாகாண சபை ரூ.16 இலட்சம் நிதி ஒதுக்கீடு


கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவ, மாணவிகள் 500 பேர் வெளி மாவட்டங்களுக்கு இலவச சுற்றுலா பயணத்திற்காக அழைத்துச் செல்ல அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 250 மாணவ, மாணவிகளும், 20 ஆசிரியர்களும் நாளை தமது முதலாவது சுற்றுப் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார். சுமார் எட்டு நாட்கள் மேற்கொள்ளவுள்ள இந்த சுற்றுப் பயணத்திற்காக வட மாகாண சபை 16 இலட்சம் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்து ள்ளது.

தரம் 8 முதல் க.பொ.த. சாதாரண தரம் வரை கல்வி கற்கும் 500 மாணவர்களே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள் ளனர். பாராளுமன்றம், நூதனசாலை, உயர் கல்லூரிகள், அநுராதபுரம், காலி, மாத்தறை, கதிர்காமம், கண்டி, நுவரெலியா மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளுக்கு அழைத்துச்செல்லப்படவுள்ளனர் என்றும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.
மேலும் இங்கே தொடர்க...

கூட்டமைப்பு எம். பிக்கள் மூவருக்கு மட்டு. நீதிமன்றம் அழைப்பாணை

மட்டக்களப்பு மாவட்ட நாடாளு மன்ற உறுப்பினர்களான பொன். செல்வராசா, பா. அரியநேந்திரன், எஸ். யோகேஸ்வரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா. துரைரட்ணம் மற்றும் கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத் தின் தலைவர் கே. ஜெய ராஜா ஆகியோரை எதிர்வரும் 7ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மட்டக்களப்பில் கடந்த புதன் கிழமை கிழக்கு மாகாண வேலை யற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்ட ஊர்வலம் தொடர்பாக பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கை யின் பிரகாரம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஜனநாயகக் குடியரசு அரசுக்கு எதிராக வேலைவாய்ப்பு வழங்கக்கோரி பதாகைகளை ஏந்திய வாறு பொலிஸ் அனுமதி பெறாமல் வீதியில் ஊர்வலம் சென்றதாகவும் ஊர்வலத்தைக் கலைப்பதற்கு நீதி மன்ற உத்தரவைப் பெற நேரம் போதவில்லை என்றும் காத்தான் குடி பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

வீடமைப்பு அதிகார சபைக்கு சொந்தமான காணிகளை கண்டறிய விசேட நடவடிக்கை ஓகஸ்ட் 31க்கு முன்னர் பூர்த்தி செய்ய திட்டம்


வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதிலும் வீடமைப்புத் திட்டங்களை நிர்மாணிப்பதற்காக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான சகல காணிகளையும் கண்டறியும் நடவடிக்கையை அதிகார சபை இம்மாதம் முதல் ஆரம்பித்துள்ளது.

அமைச்சர் விமல் வீரவங்சவின் அறிவுறுத்தலுக்கமைய நடைமுறைப்படுத்த ப்படவுள்ள இத்திட்டத்தின் நோக்கம் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான சகல காணிகளையும் உரிய முறையில் இனங்கண்டு கொள்வதும், இனங்காணப்பட்ட காணிகளை மிகவும் குறுகிய காலத்திற்குள் ஒழுங்கான முறையில் வீடமைப்பு மற்றும் குடியிருப்பு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்திக் கொள்வதுமாகும்.

இதன்போது தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு முறையாக ஒப்படைக்கப்பட்டுள்ள, ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய, அத்துமீறிய குடியிருப்புக்களைக் கொண்டுள்ள மற்றும் ஏற்கனவே முறையாக விபரங்களை ஒன்று சேர்த்து வைக்காத காணிகளின் பட்டியலொன்றை மிகவும் குறுகிய காலத்திற்குள் சரியான முறையில் தயாரித்துக்கொள்ள காணி நடவடிக்கைக் குழு ஒழுங்குகளை மேற்கொள்ளும்

காணிகளின் சகல விபரங்களும் இம் மாத முடிவுக்குள் பூர்த்தி செய்யப்பட உள்ளது. இந் நடவடிக்கையானது கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, கம்பஹா, கண்டி ஆகிய மாவட்டங்கள் சம்பந்தமாக விசேட கவனம் செலுத்தி மேற்கொள்ளப்படுவதுடன், அம் மாவட்டங்களின் குறைந்தது 500 ஏக்கர் அளவு காணி விபரங்கள் திரட்டப்பட்டு அக் காணியில் வீடில்லாத குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணிப்பதற்கு திட்டம் வகுக்கப்பட உள்ளதாக வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பொது முகாமையாளர் தெரிவித்தார்
மேலும் இங்கே தொடர்க...

தனியாருக்குரிய காணிகளில் இராணுவ முகாம்கள் இல்லை வடக்கில் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டும் பொறுப்பு பொலிஸாரிடம்


வடக்கில் பொது மக்கள் பகுதிகளிலிருந்து இராணுவப் பிரசன்னம் படிப்படியாக அப்புறப்படுத்தப்படுமென்றும் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டும் பொறுப்பு பொலிஸாருக்கு ஒப்படைக்கப்படுமென்றும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

பொதுமக்கள்
பகுதிகளிலிருந்து இராணுவ பிரசன்னம் படிப்படியாக
நீங்கும்

தனியார் காணிகளில் இராணுவ முகாம் அமைக்கப்படவில்லையென்றும் இராணுவ நிலைகள் அரச காணிகளில் வேறிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த பாதுகாப்புச் செயலாளர், வடக்கில் எவ்விதமான இராணுவக் குடியேற்றமும் மேற்கொள்ளப்பட வில்லையென்றும் குறிப்பிட்டார்.

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழு முன்னிலையில் நேற்று (17) பிற்பகல் சாட்சியமளித்த பாதுகாப்புச் செயலாளர், பயங்கரவாதம் மீண்டும் தலையெடுக் காதிருப்பதை உறுதி செய்வதற்காக இராணுவத்தினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுவதுடன் கடல் பாதுகாப்பும் பலப்படுத்தப்படும் என்று கூறினார்.

புலிகள் இயக்கத்தினர் காடுகளில் பயிற்சிகளை மேற்கொண்டதால், வன்னியின் காட்டுப்பகுதிகளைப் பாதுகாக்க வேண்டுமென்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆணைக்குழுவின் தலைவர் முன்னாள் சட்ட மா அதிபர் சித்திராஞ்சன் டி சில்வா தலைமையில் கொழும்பு ஏழு, ஹோட்டன் பிளே சிலுள்ள லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத் தில் இடம்பெற்ற விசாரணையில் சுமார் இரண்டரை மணித்தியாலமாக பாதுகாப்புச் செயலாளர் சாட்சியமளித்தார்.

பாதுகாப்பு நிலைகளைப் படிப்படியாக வேறிடங்களுக்கு மாற்றி வருகிறோம். ஆனால், தனியார் காணிகளில் எந்தவித இராணுவ முகாமும் அமைக்கப்படவில்லை. பொது மக்கள் தமது சொந்த இடங்களுக்குச் செல்ல முடியும். அரச காணிகளிலேயே பாதுகாப்பை ஸ்தாபித்திருக்கிறோம்.

இராணுவத்தினருக்குக் குடியிருப்புகள் அமைக்கப்படவில்லை. அங்கு கடமையாற்றும் படையினர் தங்குவதற்குப் பாசறைகளே அமைக்கப்படுகின்றன. நாட்டின் பாதுகாப்புக்காக அம்பாந்தோட்டை உள்ளிட்ட ஏனைய மாவட்டங்களிலும் இராணுவ முகாம்கள் உள்ளன. அதுபோல் வடக்கிலும் அமைத்திருக்க வேண்டிய பாதுகாப்புக் கட்டாயம் இருக்கிறது.

ஆனால், பொது மக்கள் வாழும் பகுதிகளி லிருந்து படைகளை அப்புறப்படுத்துவோம். ஆனால் அது இராணுவத்தை வாபஸ் பெறுவதாக கருத முடியாது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் பலாலி உள்ளிட்ட பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயங்கள் உள்ளன. இங்கு தனியார் கட்டடங்கள் பாதுகாப்புக்குத் தேவை எனின் அவற்றிற்கு உரிய நட்டஈட்டைக் கொடுத்து கொள்வனவு செய்வோம்.

அதேநேரம் புலிகள் இயக்கத்தின் தலைமையகங்களையும் பதுங்குக் குழிகளையும் எவரும் உரிமைகோர மாட்டார்கள் என நினைக்கிறேன், என்று தெரிவித்த பாதுகாப்புச் செயலாளர் ராஜபக்ஷ, தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டதும் விடுவிக்கப்பட்டுச் சொந்த இடங்களில் அவர்களின் பெற்றோருடன் மீளக்குடியமர்த்தப்படுவார்கள் என்று குறிப்பிட்டார்.

புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த பதினோ ராயிரம் போராளிகள் சரணடைந்தார்கள். இவர்களை மூன்று நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தி ஆறு மாதம், ஒரு வருடம், இரண்டு வருடம் எனப் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வருகிறது. குறித்த காலம் புனர்வாழ்வு நிறைவடைந்ததும் அவர்களை விடுவித்து விடுவோம். அவர்களுக்குத் தொழிற்பயிற்சிகளையும் அளித்து வருகிறோம்.

இந்தப் பதினோராயிரம் பேரில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட ஆயிரம் பேர் இனங்காணப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, யாழ்ப்பாணத்தில் சோதனைச் சாவடிகள் அகற்றப்பட்டதும் சிறு சிறு குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த சிலர், அரசியல்வாதிகளின் ஆதரவாளர்கள் கடத்தல், கப்பம் பெறுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவதாகக் கூறுகிறார்களே! என்று ஆணைக்குழுவின் தலைவர் சீ.ஆர்.டி.சில்வா கேட்ட கேள்விக்குப் பதில் அளிக்கையில் “கருணா, பிள்ளையான் குழுக்கள் மற்றும் ஈ.பி.டி.பி, ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகிய அமைப்புக்களின் ஆயுதங்களைக் களையுமாறு உத்தரவிட்டேன். அரசியல் தலைவர்கள் ஆதரவளிக்கவில்லை. கிரிமினல் குழுக்களே அவ்வாறான சம்பவங்களில் ஈடுபடுகின்றன” என்றார். தொடர்ந்து சாட்சியமளித்த பாதுகாப்புச் செயலாளர்,

“யுத்தத்தின் போது ஆறாயிரம் படையினர் கொல்லப்பட்டு முப்பதாயிரம் பேர் காயமுற்றார்கள். இதன்மூலம் புலிகள் எத்தகைய தாக்குதல் பலத்தைக் கொண்டிருந்தார்களென்று புரிந்து கொள்ள முடியும். அதேநேரம் இந்தளவு இராணுவத்துக்கு இழப்பு ஏற்பட்டதென்றால், புலிகளுக்கு ஏற்பட்ட இழப்பையும் நாம் ஊகித்துக் கொள்ள முடியும்.

ஆனால், எவரும் அதனைப் பேசுகிறார்கள் இல்லை. சிவிலியன்களைப் பற்றித்தான் பேசுகிறார்கள். சிவிலியன்களுடன் புலிகள் கலந்திருந்தார்கள். அதனால், காயமடைந்த புலி உறுப்பினர்களையும் சிவிலியன்களாகக் கணக்கிடுகிறார்கள்” என்றார்
மேலும் இங்கே தொடர்க...