3 ஆகஸ்ட், 2010

ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை அரசு நிறைவேற்ற வேண்டும்

ஊடகவியலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் தேவை அவசியமெனின் ஊடக அபிவிருத்தி அதிகாரசபையை அமைப்பதைவிட்டு மகிந்த சிந்தனையின் வேலைத்திட்டத்தின் கீழ் ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி ஊடகப் பேச்சாளர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

எதிர்க் கட்சி தலைவரின் வாசஸ்தலத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கயந்த கருணாதிலக மேற்படி தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

“கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாது ஊடக அபிவிருத்தி அதிகாரசபையை உருவாக்குவதானது 17 ஆவது அரசியல் யாப்பு சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்தாது புதிய அரசியல் யாப்பு சீர்திருத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சமனாகும்.

மற்றும் சியத தொலைக்காட்சி சேவையின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக நீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும். குற்றம் இழைத்தவர்களை அரசாங்கம் சட்டத்தின்முன் நிறுத்த வேண்டும்” என தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

அரச அதிகாரியை மரத்தில் கட்டிய மேர்வின் சில்வா

களனி பிரதேச சபை உறுப்பினர் ஒருவரை அமைச்சர் மேர்வின் சில்வா மரத்தில் கட்டியுள்ளார்.

களனி பிரதேசத்தில் பரவி வரும் டெங்கு நோயினைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் அவர் கலந்து கொள்ள தவறியமையினாலேயே அவருக்கு இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்லதாகத் தெரிவிக்கப்படுகிறது.

களனி பிரதேசத்தில் பரவி வரும் டெங்கு நோயினைக் கட்டுப்படுத்துவதான முயற்சிகளை மேற்கொள்ளத் தவறிய அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப் போவதாக நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் மேர்வின் சில்வா ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் இங்கே தொடர்க...

ஒபாமாவை விவாதமொன்றுக்கு வருமாறு ஈரான் ஜனாதிபதி அழைப்பு

ஈரானிய ஜனாதிபதி அஹமட் நிஜாட் அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா தன்னுடன் தொலைகாட்சி விவாதமொன்றுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

நான் ஒபாமாவை சந்திக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளதாவது:

நான் வரும் செம்டெம்பர் மாத இறுதியில் நியூயோர்க்கில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்திற்கு செல்லவுள்ளேன் அங்கு பராக் ஒபாமாவௌ சந்திக்க தயாராகவுள்ளேன் அத்துடன் அவருடன் உலக பிரச்சினைகள் தொடர்பாக விவாதிக்கவும் உள்ளேன் என அவர் குறிப்பிட்டார்.

உலகளாவிய ஊடகங்களுக்கு மத்தியில் இவிவாதம் நடைபெறவேண்டுமெனவும் யாருடைய விவாதம் அதிகம் ஏற்றுக் கொள்ளப்படவேஎண்டியது என்பதி பார்க்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.இவ்வாறான பல விவாதத்திற்க்கான அமைப்புகள் முன்னாள் அமெரிக்க அதிபர்களுக்கும் அஹமட் நிஜாட் மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும் அவர்கள் அதனை நிராகரித்திருந்தனர்.

அமெரிக்க அனு ஆயுத உற்பத்தி தொடர்பாக ஈரான் குற்றஞ்சாட்டியிருந்ததால் ஈரான் அதனை நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதி- எதிர்க்கட்சி தலைவர் இன்று சந்திப்பு



ஜனாதிபதி மஹிந்தவுக்கும் ஐ.தே.க.வின் தலைவர் ரணிலுக்குமிடையிலான இன்று சந்திப்பு இடம்பெறவுள்ளது. அலரி மாளிகையில் நடைபெறவுள்ள இந்தச் சந்திப்பில் இரு கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொள்ளவுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் இறுதித் தீர்மானம் ஒன்றை எட்டுவதே இந்த பேச்சுவார்த்தைத் தொடர்ச்சியின் நோக்கமாகவிருக்குமென தெரிவிக்கப்படுகிறது
மேலும் இங்கே தொடர்க...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் மக்களுக்கு ஜனாதிபதி உதவி



வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் மக்களுக்கு இலங்கை ஜனாதிபதி தமது அனுதாபங்களை தொலைபேசி மூலம் பாகிஸ்தான் அதிபருடன் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ இலங்கையிலிருந்து வைத்தியர் குழு ஒன்றையும் மருந்துப் பொருட்களையும் அனுப்பத் தயாராவதாக அரச செய்திகள் தெரிவிக்கின்றன.

அத்துடன் ஒரு தொகுதி தேயிலையும் அனுப்பிவைக்கப் படவுள்ளதாக மேலும் தெரிய வருகிறது. இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தொலைபேசி மூலம் பாகிஸ்தான் தலைவர் யூசுப்ராசா கிலானியுடன் தொடர்புகொண்டதாகவும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது
மேலும் இங்கே தொடர்க...

மட்டு.நகரில் காணிகளை இழந்தோர் மக்கள் நியாய சபையில் முறைப்பாடு

மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தினால் காணிகளை இழந்தோர் மக்கள் நியாய சபையில் முறைப்பாடு செய்து ஆவனங்களை சமர்ப்பித்து சாட்சியமளித்து வருகின்றனர். பிரஜா அபிலாஸை எனும் அமைப்பு ஏற்படுத்தயுள்ள பொதுசன நியாய சபையின் முலம் மக்களின் காணிப்பிரச்சினைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவைகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன.

பிரஜா அபிலாஸை அமைபின் இணைப்பாளர் சுகலா குமாரி தலைமையில் மட்டக்களப்பு ஹோப் இன் ஹோட்டலில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று இதன் விசாரணை இடம்பெற்றது.

கடந்த கால போர்ச்சூழலினால் காணிகளை இழந்து திருப்பி பெற்றக்கொள்ள முடியாதர்களினால் விண்ணப்பிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இதன் போது விசாரணை இடம்பெற்றது.

இவ்வமைப்பினால் நியமிக்கப்பட்ட குழுவின் முண்னிலையில் இவர்கள் தமது ஆவணங்களை சமர்ப்பித்து சாட்சியமளித்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

கோரிக்கை நிறைவேறாவிடின் இராஜினாமா:ப.கழக விரிவுரையாளர்கள்

தமது சம்பள உயர்வு கோரிக்கைகளை நிறைவேற்றப்படாவிட்டால் வரும் 16 ஆம் திகதியுடன் தமது பதவிகளை இராஜினாமாச் செய்யப்போவதாக பல்கலைக்கழக உபவேந்தர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

பல்கலைகழங்களில் பணியாற்றும் பெரும்பாளானோர் தொண்டர் அடிப்படையில் கடமையாற்றி வருவதாக பல்லைக்கழக ஆசிரியர்கள் சங்கங்களின் சம்மேளனத் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலின் போது தமக்கு குறுகிய கால தீர்வாக 25 சதவீத சம்பள உயர்வு வழங்க அரசாங்கம் உறுதியளித்ததாக அவர்கள் தெரிவிக்கின்றனர். பல்கலைக்கழக ஆசியர்கள் சங்கங்களின் சம்மேளனத்திற்கும் உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸ்ஸாநாயக்க தலைமையிலான உயர்கல்வி அமைச்சு பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று மாலை பேச்சுவார்த்தையொன்று நடைபெற்றுள்ளது
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை சிப்பந்திகளுடன் மற்றுமொரு கப்பலை சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தல்




இலங்கை சிப்பந்திகளுடன் பனாமா நாட்டிலிருந்து பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பலொன்றை இன்று காலை சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்தியுள்ளனர்.

இந்த கப்பலில் 23 சிப்பந்திகள் கடமையாற்றியதாக சோமாலியாவிலுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கடத்தப்பட்ட கப்பலில் இலங்கை சிப்பந்திகளுடன், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த சிப்பந்திகளும் கடமையாற்றி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கப்பல் ஏதன் வளைகுடாவில் பயணித்துக் கொண்டிருக்கையில் படகொன்னை வந்த சோமாலிய கடற்கொள்ளையர்கள் கப்பலை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

அதையடுத்தே இந்த கப்பல் கடத்தப்பட்டுள்ளதாக சோமாலியாவிலுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் கடற்படையினர் தகவல் வெளியிட்டுள்ளனர். கடத்தப்பட்ட கப்பலுடன் தொலைபேசியில் தொடர்புக் கொள்ள முயற்சித்த போதும் அது பயனளிக்கவில்லை எனவும், தொடர்ந்தும் கப்பலை மீட்;பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்நாட்டு கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

17300 தொன் எடையுடைய குறித்த கப்பலில் சீமெந்து மூடைகளே காணப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எம்.வி சுயிஸ் எனும் கப்பலே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

ஆசியாவிலேயே மிகப் பெரிய கண்தான வங்கி இலங்கையில்


ஆசியப் பிராந்தியத்தின் மிகப் பெரிய கண்தான வங்கி இலங்கையில் அமைக்கப்படவிருக்கின்றது.

இந்த வங்கியை இலங்கைக்கு இலவசமாக அமைத்துக் கொடுப்பதற்கு சிங்கப்பூர் அரசாங்கம் முன்வந்துள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சிங்கப்பூர் அரசாங்கத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கு ஏற்ப இக்கண்தான வங்கியைத் துரிதமாக அமைப்பதற்கு அந்நாட்டு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதனடிப்படையில் இக்கண்தான வங்கியை அமைப்பது தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை நேற்று கொழும்பில் கைச்சாத்திடப்பட்டது.

சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிரிசேன முன்னிலையில் அமைச்சின் செயலாளர் டாக்டர் ரவீந்திர ரூபேரும், சிங்கப்பூர் கண்தான வங்கியின் கீழுள்ள லீ மன்றத்தின் தலைவர் பேராசிரியர் டொனால்ட் டெங்குக்கும் இப்புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.

இந்த கண்தான வங்கி தேசிய கண்ணாஸ் பத்திரியுடன் சேர்த்து அமைக்கப்படவுள்ளது.

இலங்கையில் கண்தான வேலைத் திட்டத்தை விரிவுபடுத்துவதற்கும், ஒழுங்கு முறையாக முன்னெடுப்பதற்கும் மக்களின் பங்களிப்பை நூறு வீதம் பெற்றுக் கொள்வதற்கும் இந்த தேசிய கண்தான வங்கி பெரிதும் உதவுமென அமைச்சின் அதிகாரியொருவர் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

போக்குவரத்து சேவை மேம்பாடு; மேலும் ஐந்நூறு பஸ் வண்டிகள்





பொது மக்களின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் இலங்கை போக்குவரத்து சபைக்கு மேலும் 500 பஸ்களை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அமைச்சர் குமார வெல்கம உள்ளிட்ட அமைச்சு அதிகாரிகளுடனான கலந்துரையாடல் நேற்று (02) காலை அலரி மாளிகையில் நடைபெற்றது. இந்த கலந்துரையாடலின் போதே மேற்கூறிய தீர்மானம் எடுக்கப்பட்டது.

இதன் முதற் கட்டமாக 100 பஸ்களை உடனடியாக தருவிப்பதற்கு மேற்படி கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.

போக்குவரத்து சபையின் மூலம் மக்களுக்கு சீரான சேவையை பெற்றுத்தருவதுடன் சபை ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவேண்டுமென்றும் ஜனாதிபதி அங்கு குறிப்பிட்டார்.

அத்துடன் சகல டிப்போக்களிலும் உள்ள குறைகளை இனங்கண்டு அவற்றுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி அமைச்சு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
மேலும் இங்கே தொடர்க...

5 மாதம் கடற்கொள்ளையர்களால் தடுப்பு : 13 இலங்கை சிப்பந்திகளும் விரைவில் விடுதலை

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடந்த ஐந்து மாதங்களாக பணயக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ள 13 இலங்கை கப்பற்சிப்பந்திகளும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த மார்ச் முதலாம் திகதி அல் நிஸார் அல் செளதி என்ற கப்பல் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டது. இதில் இருந்த 13 இலங்கை கப்பற் சிப்பந்திகளும் மற்றும் கிஹஸை சேர்ந்த கப்பற் சிப்பந்தி ஒருவரும் கடற்கொள் ளையர்களால் பயணக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கடற்கொள்ளையர்கள் கோரியிருந்த பணயப்பணத்தை செலுத்த அந்தக் கப்பலின் சொந்தக்காரர்கள் இணைக்கம் தெரிவித்துள்ளதாகவும் இதன் காரணமாக பணயக்கைதிகளாக உள்ள கப்பற் சிப்பந்திகள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் தெரியவருகிறது.

பணயப் பணமாக கோரப்பட்ட 20 மில்லியன் டொலரை வழங்க கப்பல் சொந்தக்காரர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். இந்தப் பணம் வழங்கப்பட்டதும் பணயக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

டெங்கு ஒழிப்பு தேசிய திட்டம்: நாடெங்கிலும் நேற்று ஆரம்பம்


தேசிய டெங்கு ஒழிப்பு தின வேலைத் திட்டம் நேற்று 2ம் திகதி நாடெங்கிலும் வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்பு பிரிவு பணிப்பாளர் டாக்டர் நிமல்கா பன்னிலகெட்டி தெரிவித்தார்.

இவ்வேலைத் திட்டத்திற்கு நாடெங்கிலும் பொது மக்களின் ஒத்துழைப்பு பெரிதும் கிடைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வேலைத் திட்டம் அரசாங்க மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களின் பங்களிப்புடன் செயற்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார். அரசாங்கம் இம் மாதத்தின் நான்கு தினங்களை தேசிய டெங்கு ஒழிப்பு தினங்களாகப் பிரகடனப் படுத்தியுள்ளது. இதன் முதலாவது நாள் வேலைத் திட்டம் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதேநேரம் டெங்கு, நுளம்பு பெருக்கத்தை ஒழித்துக் கட்டும் நோக்கிலான இவ்வேலைத் திட்டம் வடக்கு, கிழக்கு பிரதேசங்களிலும் வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டன. இதன் நிமித்தம் மேற்கொள்ளப்பட்ட சிரமதானப் பணிகளில் முப்படையினரும் பொலிஸாரும் சிவில் பாதுகாப்பு அதிகா ரிகளும் மாத்திரமல்லாமல் பாடசாலை மாணவர்களும் பங்கு பற்றினர்.

இதேவேளை கண்டி மாவட்ட செயலாளர் கோட்டாபய ஜயரட்ன அக்குறணை, குண்டசாலை, நாவலப்பிட்டி, கங்கவட்ட கோரல ஆகிய நான்கு பிரதேச செயலகப் பிரிவுகளிலும் டெங்கு நோய் அச்சுறுத்தல் தீவிரமடைந்துள்ளது.

அதனால் இம் மாவட்டத்திலுள்ள இருபது பிரதேச செயலகங்களிலும் இருந்து டெங்கு ஒழிப்பு மத்திய நிலையங்களை அமைக்கவும், அதன் செயற்பாடுகளை துரித கெதியில் முன்னெடுக்கவும் தீர்மானித்துள்ளேன். இந்த டெங்கு ஒழிப்பு மத்திய நிலையங்கள் மூலம் ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவுகளிலும் டெங்கு தொடர்பான அனைத்து தகவல்களையும் சேகரிக்கவும் மற்றும் டெங்கு பரவும் இடங்களை அடையாளம் கண்டு உடனுக்குடன் இல்லாதொழிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும் இங்கே தொடர்க...

அச்சுவேலியில் நான்கு ஆடைத் தொழிற்சாலைகள் வடக்கில் நான்காயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு


யாழ்ப்பாணம், அச்சுவேலியில் 12 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நான்கு ஆடைத் தொழிற்சாலைகளை ஆரம்பிப்பதற்கு முதலீட்டாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

இதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன் இதன் மூலம் வடக்கில் 4000 பேருக்குத் தொழில் வாய்ப்புகளை வழங்க முடியுமென பாரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அமைச்சின் செயலாளர் சிவஞான சோதி தெரிவித்தார்.

இத்திட்டத்தை விரைவுபடுத்துவது தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தையொன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றுள்ளதுடன் முதலீட்டுச் சபையின் தலைவர் நீர், மின்சாரத்துறை சார்ந்த உயரதிகாரிகள் முதலீடுகளை மேற்கொள்ளும் நான்கு முக்கிய நிறுவனங்களின் முக்கியஸ்தர்களும் இப்பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டுள்ளனர். இப் பேச்சுவார்த் தையையடுத்து இது தொடர்பான செயற்பாடுகளை ஆராய்வதற்கான குழுவொன்றும் நியமிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கின் வசந்தம் அபிவிருத்தி கருத்திட்டத்தின் கீழ் யாழ். மாவட்டத்தில் பல்வேறு செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முப்பது வருட யுத்தத்தின் பின் யாழ். குடா நாட்டை அபிவிருத்தியில் கட்டியெழுப்பும் யுகமாக இந்த கால கட்டத்தைக் கருத முடியும்.

இந்த வகையில், யாழ். அச்சுவேலியின் நான்கு ஆடைத் தொழிற்சாலைகளை ஆரம்பிப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. ஒவ்வொன்றும் 3 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிறுவப்படவுள்ளன.

இதற்கான முதலீடுகளை ஒமேகாலைன், ஓரிட் எப்பரல்ஸ், டைலெக்ஸ் உட்பட நான்கு நிறுவனங்கள் மேற்கொள்ளுகின்றன. இதற்கான இணக்கப்பாட்டினையும் அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளதுடன் நீர் மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதி களைப் பெற்றுக் கொடுப்பதற்கான நட வடிக்கைகள் பற்றி தீர்மானங்கள் மேற் கொள்ளப்பட்டுள்ளன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...