2 டிசம்பர், 2010

பிரிட்டன் வெளியுறவுத்துறை முன்னாள் அமைச்சரின் ராஜதந்திரம் பரகசியம்



பிரித்தானியாவில் வாழும் தமிழர்களின் வாக்குகளைத் தேர்தலில் பெறுகின்றமைக்காகவே பிரிட்டன் வெளியுறவுத்துறை முன்னாள் அமைச்சர் டேவிட் மில்பார்ண்ட் தமிழர்களின் பாதுகாவலரைப் போல் நடந்து கொண்டார் என்று ராஜதந்திரிகள் நம்புகின்றனர் என்று விக்கிலீக்ஸ் இணையத் தளம் பரகசியப்படுத்தி உள்ளது.

இலங்கையில் கடந்த வருட யுத்தத்தின்போது இடம்பெற்றன என்று கூறப்படும் மனிதப் பேரழிவுகள் குறித்து அதிகம் இவர் அதிகம் பேசி வந்தமைக்கு இதுவே காரணம் என்று பிரித்தானிய தலைநகர் லண்டனில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு கடந்த வருடம் மே மாதம் அனுப்பி வைக்கப்பட்ட ராஜதந்திர பொதியில் இருந்த அறிக்கை ஒன்றில் கூறப்பட்டு உள்ளது.

பிரித்தானிய வெளியுறவு அமைச்சில் இலங்கை விவகாரங்களுக்கு பொறுப்பானவராக கடமையாற்றிய டிம் வெயிட் (Tim Waite) உயரதிகாரியை மேற்கோள் காட்டி இது குறிப்பிடப்பட்டு இருந்தது. "பிரித்தானிய அமைச்சர்கள் பிரிட்டனில் உள்ள இலங்கைத் தமிழர்களின் வாக்குகளைப் பெறவே இலங்கை விவகாரத்தில் மிகுந்த கவனம் செலுத்தினர்.

சுமார் 3 இலட்சம் இலங்கைத் தமிழர்கள் பிரிட்டனில் உள்ளனர். இத் தமிழர்கள் ஏப்ரல்-06 ஆம் திகதி பிரிட்டன் நாடாளுமன்றம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்." இவ்வாறும் அவ்வதிகாரி தெரிவித்து இருந்தார் என்று அறிக்கையில் உள்ளது. லண்டனில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் அரசியல் விவகாரங்களுக்கு பொறுப்பான உத்தியோகத்தர்களில் ஒருவரான ரிச்சர்ட் மில்ஸ் என்பவர் டிம் வெயிட் ஐ மேற்கோள்காட்டி அறிக்கையை தயாரித்து இருக்கின்றார்.

அப்போது தமிழர்களின் ஒற்றுமையை புரிந்து கொண்ட டேவிட் மில்லிபான்ட் வெளியுறவு அமைச்சராக இருந்ததால் தமிழர்களின் வாக்குகள் முழுவதும் எதிர்வரும் தேர்தலில் தனக்கு கிடைக்க வேண்டும் எனக் கருதியே இந்த பிரச்சினைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து தன்னுடைய 60 % பணி நேரத்தை இதற்காக செலவிட்டார் எனவும் அந்த அதிகாரி அமெரிக்காவிடம் கூறியுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெறும்போது இத்தாலியில் இருந்தேன்: ஜயலத் எம்.பி

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக லண்டனில் ஆர்ப்பாட்டம் செய்யும்போது இத்தாலியில் இருந்ததாக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஜனாதிபதிக்கு எதிராக விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் ஜயலத் எம்.பி கலந்துகொண்டதாக ஆளும் கட்சியின் நாடாளுமன்ற பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன குற்றம் சுமத்தினார்.

எனினும் அந்தக் குற்றச்சாட்டில் எதுவித உண்மையும் இல்லை என்றும் கடவுச்சீட்டை ஆதாரமாகக் காட்ட தயாரென்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

முல்லைத்தீவில் விலங்குகள் சரணாலயம்

இலங்கை முல்லைத்தீவின் சுமார் 40,000 ஹெக்டேயர் பரப்பளவான பிரதேசம் வனவிலங்குகள் சரணாலயமாக மாற்றப்படவுள்ளதாக அரசாங்கள் தெரிவிக்கின்றது.

இலங்கையின் வனவிலங்குகளைப் பாதுகாப்பதற்காகவே இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் காட்டு யானைகளின் எண்ணிக்கை 15 ஆயிரத்திலிருந்து 4 ஆயிரம் வரையாக குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இலங்கையின் வடக்கில் மட்டும் சுமார் 1.5 மில்லியன் கன்னிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளதாகவும் இவை முழுதாக அகற்றப்பட்ட பின்னர் அடுத்தவருடம் அளவில் இச்சரணாலயம் மக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்படும் எனவும் வனவிலங்கு அதிகாரியொருவர் தெரிவிக்கின்றார்.
மேலும் இங்கே தொடர்க...

கல்லடி பாலத்துக்கருகில் காணப்பட்ட பாம்புகள் குறித்து விலங்கியல் நிபுணர் விளக்கம்

மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தின் அருகில் செவ்வாய்க்கிழமை இரவு காணப்பட்ட ஆயிரக்கணக்கான நீர்பாம்புகள், ‘வாலக்கடியா’ என்ற வகையைச் சேர்ந்தவை என களனி பல்கலைக்கழக விலங்கியல் நிபுணர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதய பிரியந்த யாப்பா தெரிவிக்கின்றார்.

இவை கொடிய விஷமுள்ள ஓர் இனம் என அவர் கூறுகின்றார்.

இப்படியான பாம்புகள் வடகிழக்கு சமுத்திரத்தில் அதிகமாக இருப்பதாகவும் நீரியல் மாற்றங்கள் காரணமாக இவை இப்படியாக இடம்பெயர்வதாகவும் அவர் குறிப்பிடுகிறார். சுனாமிக்கும் இவ்வகையான பாம்புகளுக்கும் நேரடித் தொடர்புகள் பற்றி இதுவரை எதுவும் ஊர்ஜிதம் செய்யப்படாத போதும் கடற் தொழிலாளர்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது எனவும் அவர் கூறுகின்றார்
மேலும் இங்கே தொடர்க...

இவ்வாண்டு இலங்கை சுற்றுலாத்துறையில் 43 வீத வளர்ச்சி

இலங்கையில் இவ்வருடம் சுற்றுலாத் துறை 43 சதவீத வளர்ச்சியைக் காட்டுவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவிக்கின்றது.

இலங்கைக்கு கடந்த 10 மாதங்களில் சுமார் ஐந்து இலட்சம் பேர் வருகை தந்துள்ளதாகவும் எதிர்வரும் மாதங்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேற்கு ஐரேப்பாவில் இருந்து இரண்டு இலட்சம் பேரும், தென்னாபிரிக்காவில் இருந்து ஒரு இலட்சத்து 30ஆயிரம் பேரும், அவுஸ்திரேலியாவில் இருந்து 25 ஆயிரம் பேரும், தென்கிழக்காபிரிக்காவில் இருந்து 52 ஆயிரம் பேரும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து 30 ஆயிரம் பேரும் கிழக்கு ஐரோப்பாவில் இருந்து 26 ஆயிரம் பேரும் வட ஆபிரிக்காவில் இருந்து 32 ஆயிரம் பேரும் வருகைதந்துள்ளதாகவும் தரவுகள் கூறுகின்றன.
மேலும் இங்கே தொடர்க...

கடும் மழை காரணமாக மன்னாரில் 20 ஆயிரம் பேர் பாதிப்பு

மன்னார் மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக இதுவரை 5ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 20ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 1900 குடும்பங்களைச்சேர்ந்த 8ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் பிரதேச செயலாளர் திருமதி ஸ்ரான்லி டி மெல் வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

ஜோர்தானில் இலங்கைப் பெண் தற்கொலை

ஜோர்தானில் தொழில் புரிந்துவந்த இலங்கைப் பெண் ஒருவர் அங்கு தற்கொலை செய்து கொண்டுள்தாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் பிரதி முகாமையாளர் எல்.கே.றுகுனுகே தெரிவித்தார்.

இப்பெண் தனிப்பட்ட காரணங்களுக்காக நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. சடலம் இலங்கைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

மு.கா பாராளுமன்ற உறுப்பினர் நூர்தீன் மசூர் இன்று காலமானார்




மு.கா பாராளுமன்ற உறுப்பினர் நூர்தீன் மசூர் இன்று காலமானார்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நூர்தீன் மசூர் இன்று காலை காலமாகியுள்ளார் என கட்சியின் பொதுச்செயலாளர் ஹசன் அலி தெரிவித்தார்.

மாரடைப்பு காரணமாக தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் காலமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

இயல்பு வாழ்வை குழப்ப வெளிநாடுகளில் மீண்டும் சதி செனல் - 4 வீடியோவுக்கு அரசு கண்டனம்; மறுப்பு

வெளிநாடுகளில் உள்ள இலங்கைக்கு எதிரான பிரிவினைவாத சக்திகள் தொடர்ந்தும் அரசாங்கத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தி வருவதாக அரசாங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் இயல்பு வாழ்க்கையை மீள ஏற்படுத்தவும், வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்பவும் உதவுவதற்குப் பதிலாக இந்தச் சக்திகள் மீண்டும் பிரிவினைவாத சித்தாந்தத்திற்குப் புத்துயிரளித்து வருவதாக அரசாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவிற்கான இலங்கைத் தூதரகம் விடுத்துள்ள ஓர் அறிக்கையில் இந்தக் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய வீடியோ காட்சியைத் திட்டவட்டமாக நிராகரித்துள்ள இலங்கைத் தூதரகம் அதில் எந்தவிதமான நம்பகத்தன்மையும் கிடையாதென சுட்டிக்காட்டியுள்ளது. இவ்வாறான ஓர் ஒளிப்பதிவை கடந்த வருடம் செனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பியிருந்தது.

அதன் தொழில்நுட்ப நிலையைப் பரிசீலித்தால் முன்னைய வீடியோவிற்கும் தற்போதைய ஒளிபரப்பிற்கும் எந்த மாற்றமும் கிடையாதெனத் தெரிய வருவதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது. இவை இரண்டுமே போலியானவை. திரித்துக் கூறப்பட்டுள்ளவை என்றும் பொதுவாகவே இவ்வாறான முறையில் பிரசாரம் மேற்கொள்ளப்படுவதை அவதானிக்க முடிந்துள்ளதாகவும், இலங்கை அரசு ஜீ. எஸ். பீ. பிளஸ் சலுகையை நீடிப்பதற்காக விண்ணப்பித்தி ருந்த காலகட்டத்தில், இலங்கையின் போர்க் குற்றங்கள் எனக் குறிப்பிட்டு சில தரப்பினர் புகைப்படங்களைப் பிரசுரித்தி ருந்தனர்.

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் கடந்த ஒக்டோபர் மாதம் பிரிட்டன் சென்றிருந்த போது அந்நாட்டின் முன்னணி பத்திரிகையொன்றுக்கு போர்க் குற்றங்கள் புரிந்த காட்சிகள் எனக் கூறப்படும் புகைப்படங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

ஆனால், அதன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த முடியாத நிலையிலிருப்பதாக அந்தப் புகைப்படங்களை வழங்கியவர்கள் தெரிவித்துள்ளார்கள். தற்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரிட்டனுக்குச் சென்றிருக்கின்றவேளை புதிதாக ஒளிபரப்பு இடம்பெற்றுள்ளது. அரசாங்கத்திற்கு எதிரான சக்திகள் இதன் பின்னணியில் உள்ளன என்பதில் எந்தச் சந்தேகமும் கிடையாது என்று குறிப்பிட்டுள்ள பிரிட்டனுக்கான இலங்கைத் தூதரகம், புலிகளின் தோல்வியானது முழு நாட்டிலும் ஜனநாயக சுதந்திரத்தை வியாபிக்கச் செய்துள்ளது.

மோதல் முடிவுக்கு வந்துள்ள நிலையில் கடந்த கால சம்பவங்களில் கற்றுக்கொண்ட பாடங்களை அடையாளங் கண்டு, மீண்டும் முரண்பாடு ஏற்படாதிருப்பதற்கான பரிந்துரைகளைச் சமர்ப்பிக்கவும் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் எட்டுப்பேர் கொண்ட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. யுத்தம் நடைபெற்ற இடங்களைப் பார்வையிட்ட இந்தக் குழு, இடைக்கால அறிக்கையைச் சமர்ப்பித்திருக்கிறது’ என்றும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசாங்கம் துரிதமாக நிவாரணம் வழங்கி வருகிறது. இந்நிலையில் இவ்வாறான போலியானதும் தவறானதுமான பிரசாரத்தை மேற்கொள்வது அரசாங்கத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவது மாத்திரமல்லாமல், பாதிக்கப்பட்ட மக்களை மேலும் துயரத்தில் ஆழ்த்தும் செயலாகுமென்றும் அரசாங்கம் கண்டித்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

சமுர்த்தி அபிவிருத்திக்கான நிதி ரூ. 2000 மில்லியனாக அதிகரிப்பு உதவி பெறுவோர் 15 இலட்சம்; மேம்பாட்டுக்கும் திட்டங்கள்

சமுர்த்தி அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக கடந்த காலங்களில் 30 மில்லியன் ரூபாவே ஒதுக்கப்பட்டு வந்தபோதும் இம்முறை அத்தொகை 2000 மில்லியன் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சமுர்த்தி உதவி பெறுவோர் எண்ணிக்கை தற்போது 15 இலட்சமாக உள்ளதுடன் 40,000 மில்லியன் ரூபா நிதி சமுர்த்தி உதவியாக வழங்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்றைய தினம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் குழு நிலை விவாதத்தில் உரையாற்றிய ஐ.தே.க. எம்.பி. ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

தொடர்ந்து சமுர்த்தி உதவி பெறுபவர்க ளாக மக்களை வைத்திருக்காமல் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி சுயமாக அவர்களை வாழச் செய்வதே அரசாங்கத்தின் நோக்கமாகும். அதற்கான செயற்திட்டங்களையே பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மேற்கொண்டு வருகிறது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

ரவி கருணாநாயக்க எம்.பி. தமது கேள்வியின் போது சமுர்த்தி உதவி பெறுவோர் மற்றும் அவர்களுக்கான செயற்றிட்டங்கள் சம்பந்தமாகத் தெளிவு படுத்துமாறு கேட்டுக் கொண்டார்.
மேலும் இங்கே தொடர்க...

சந்தேகநபர் குண்டை வெடிக்க வைத்து பலி; 12 பொலிஸ் காயம் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் சம்பவம்


நுவரெலியா பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்ட சந்தேகநபரொருவர் குண்டொன்றை வெடிக்க வைத்ததில் சந்தேக நபர் கொல்லப்பட்டதோடு 12 பொலிஸாரும் இரு சிவிலியன்களும் காயமடைந்தனர்.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் தலைமையக இன்ஸ்பெக்டர் தீவிர சிகிச்சைப் பிரிவில்அனுமதிக்கப்பட்டு ள்ளார். இதேநேரம் படுகாயமடைந்த போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி மேலதிக சிகிச்சைக்காக கண்டிக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

இந்தக் கைக்குண்டுத் தாக்குதல் சம்ப வம் நேற்றுப் பிற்பகல் 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். இந்த வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது:-

கஞ்சா போதைப் பொருள் பாவனையுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை நுவரெலியா பொலிஸார் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர். பொலிஸ் நிலையத்திலிருந்து தப்பிச் செல்ல முயன்ற சந்தேகநபர் அங்கு சுற்றிவளைத்து நின்ற பொலிஸார் மீது கைக்குண்டை வீசியுள்ளார்.

கைக்குண்டை வீசிய சந்தேக நபர் முன்னர் இராணுவத்திலிருந்து தப்பி வந்தவரென ஆரம்பகட்ட விசாரணைகளிலி ருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

தாழமுக்க வலயம் நகர்வு: மழை குறையும்; மழையால் 46,000 பேர் பாதிப்பு 5000 பேர் இன்னும் முகாம்களில்

இலங்கைக்கு அண்மையில் நிலைகொண்டிருந்த தாழமுக்க வலயம் இலங்கையை விட்டு தூர நகர்வதால் எதிர்வரும் தினங்களில் மழை குறைவடையுமென காலநிலை அவதான நிலையம் நேற்று தெரிவித்தது.

இதேவேளை வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று மாலை மற்றும் இரவு வேளைகளில் இடைக்கிடை கடும் மழை பெய்யுமென எதிர்பார்க்கப் படுகிறது.

இதேவேளை தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக காலி, நுவரெலியா, புத்தளம், யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள நிலை தணிந்து வருவதாகவும், முகாம்களில் இருந்த மக்கள் வீடுகளுக்கு திரும்புவதாகவும் இடர் முகாமைத்துவ நிலையப் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி கூறினார்.

தற்பொழுது 5000 பேர் 17 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குத் தேவையான நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

வெள்ளம் காரணமாக 11,333 குடும்பங்க ளைச் சேர்ந்த 45,779 பேர் பாதிக்கப்பட்டு ள்ளனர். வெள்ளத்தினால் 500 வீடுகள் பாதி சேதமடைந்துள்ளதோடு, 62 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. மன்னாரில் 101 வீடுகளும் யாழ்ப்பாணத்தில் 69 வீடுகளும் குருநாகலையில் 254 வீடுகளும் சேதமடைந்துள்ளதாகவும் கொடிப்பிலி கூறினார்.

வெள்ளத்தினால் மன்னாரில் 5855 குடும்பங்களைச் சேர்ந்த 23,680 பேரும், யாழ்ப்பாணத்தில் 5189 பேரும், முல்லைத்தீவில் 1108 பேரும், கிளிநொச்சியில் 182 குடும்பங்களும், புத்தளத்தில் 6456 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை நேற்று காலையுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மட்டக் களப்பில் 127.8 மி.மீ. உம், அம்பாறையில் 98 மி.மீ. உம், திருகோணமலையில் 89.7 மி.மீ உம், அநுராதபுரத்தில் 68.5 மி.மீ. மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

தாழமுக்க நிலை இலங்கைக்கு வெளியே நகர்கின்ற போதும் வடக்கு, கிழக்கு பிரதேசங்களை அண்டிய கடற்பகுதிகளுக்கு இதனால் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக வும் காலநிலை அவதான நிலையம் கூறியது.
மேலும் இங்கே தொடர்க...

நிதி, கணக்கீட்டுத் துறையில் இலங்கை உலகில் 16வது இடம் 3 ஆண்டுகளுக்கு முன்னர் 25வது இடத்தில்

உலகின் முன்னணி தொழில் நிறுவனங் களுக்கு வெளி வர்த்தக சேவைகளை வழங்குவது தொடர்பான கருத்துக்கணிப் பினை மேற்கொள்ளும் அமெரிக்காவின் ஏ. ரீ. கியனி குலோபல்சேர்விசஸ் (அ. ப. ஓடீஹஙுடூடீஞி) கம்பனியின் பூகோள சேவைகள் குறிகாட்டியின் பிரகாரம் நிதி மற்றும் கணக்கீட்டுப் பிரிவிலே இலங் கைக்கு 16ஆவது இடம் கிடைக்கப் பெற்றுள்ளது. 2007ஆம் ஆண்டிலே இலங்கை 25ஆவது இடத்திலேயே காணப்பட்டது. அதிலிருந்து மிகவும் குறுகிய காலத்தினுள் 13 இடங்களைத் தாண்டி இலங்கை பெற்றுள்ள முன்னேற் றத்தைப் பாராட்டுதல் வேண்டுமென ஆசியா மற்றும் பசுபிக் வலயத்திற்கான ஐ.எப்.எஸ். நிறுவனத்தின் ஆணைத் தலைவர் ஜயந்த டி சில்வா குறிப்பிட்டார்.

உலகப் புகழ்பெற்ற அமெரிக்காவின் ஆலோசனை நிறுவனம் ஒன்றான ஏ. ரீ. கியனி (அ. ப. ஓடீஹஙுடூடீஞி) கம்பனியின் 2007-2009 இற்கான பூகோலா சேவைகள் குறிகாட்டி அறிக்கையின் மூலம் இது வெளியிடப்பட்டுள்ளது.

2008ஆம் ஆண்டிலே யுத்தம் முடிவடை வதற்கு முன்னர் இந்நாட்டில் காணப்பட்ட காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த குறிகாட்டி தயாரிக்கப்பட்டுள்ளதுடன், தற்போது இந்நாட்டின் சூழ்நிலை முழுமையாக மாற்றமடைந்து உள்ளமையால் எமது நாடானது இதைவிடவும் முன்னிலை வகிக்குமென நம்பப்படுவதாக சில்வா மேலும் குறிப்பிட்டார்.

உலகிலே துரிதமாக முன்னேற்றமடையும் (ஆஊஞ) சேவைகள் காரணமாக பாரிய அளவு நிதி இந்நாட்டிற்குக் கிடைக்கப்பெற்று ள்ளது. கணனித்துறையில் தொழில்புரியும் இளைஞர்களுக்கு அதிக வருமானத்தைப் மாதாந்தம் பெற்றுக்கொள்ள இத்துறை துணைபுரிகின்றது. இதனை இந்நாட்டிற்கு அந்நிய செலாவணியை கொண்டுவரும் முக்கியமான துறையொன்றாக விரைவில் மாற்றியமைக்க முடியுமெனவும் சில்வா மேலும் சுட்டிக்காட்டினார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷஉரை ரத்து






இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஆக்ஸ்போர்டில் வியாழக்கிழமை ஆற்ற இருந்த சிறப்பு உரை ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ஆக்ஸ்போர்ட் யூனியன் அமைப்பு அறிவித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பு தனது இணையத் தளத்தில் ஒரு அறிவித்தலை வெளியிட்டிருந்தது.

இந்த உரையை ஆற்றுவதற்காக இலங்கை ஜனாதிபதி பிரிட்டனுக்கு வந்ததை பிரிட்டனில் வாழும் தமிழர்கள் வன்மையாக கண்டித்து விமான நிலையத்தில் ஒரு ஆர்ப்பாட்டத்தையும் நடத்தியிருந்தார்கள்.

நாளை அவர் உரையாற்றவிருந்த மன்றத்தின் முன்பாகவும் ஆர்ப்பாட்டம் நடத்த தமிழ் அமைப்புக்கள் சிலவற்றால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையிலேயே அந்த உரை நிகழ்வு தவிர்க்க முடியாத காரணங்களால் ரத்துச் செய்யப்படுவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புக் காரணங்களுக்காகவே அந்த உரை ரத்துச் செய்யப்பட்டதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது. இந்த ரத்து காரண்மாக தாம் வருத்தமடைவதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

நடக்கக்கூடிய ஆர்ப்பாட்டங்களின் அளவு பெரிதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இந்த உரை பாதுகாப்பாக நடக்கும் என்று தாம் கருதவில்லை என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

போர்க்குற்றம்' புதிய வீடியோ







சானல் 4 இன் புதிய வீடியோ
பிரிட்டனின் சானல் 4 தொலைக்காட்சி இலங்கை இராணுவம் போர் குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டும் கூடுதல் வீடியோ காட்சிகளை ஒளிபரப்பியுள்ளது.

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பிரிட்டனுக்கு ஆக்ஸ்போர்ட் யூனியனின் அழைப்பின் பேரில் விஜயம் செய்திருக்கும் நிலையில் இந்த வீடியோ பிரதியை சானல் 4 ஒளிபரப்பியுள்ளது.

கடந்த வருடத்தில் சானல் 4 இனால் ஒளிபரப்பட்ட வீடியோவின் விரிவான பகுதியே இது என்று கூறி இதனை அந்த தொலைக்காட்சி ஒளிபரப்பியது.

பலர் இலங்கை இராணுவம் போன்று காணப்படுபவர்களால் சுட்டுக்கொல்லப்படுவதாக அந்த வீடியோவில் காண்பிக்கப்பட்டது.

இந்த வீடியோவின் பிரதியில் மேலும் நிர்வாணமான நிலையில் இறந்த பெண்களின் சடலங்களும் காண்பிக்கப்பட்டிருந்ததாகவும் சானல் 4 கூறியுள்ளது. ஆயினும் அந்தக் காட்சிகளை கோரமானவை என்பதால் தணிக்கை செய்ததாகவும் அது கூறியிருந்தது.


இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
அந்த வீடியோவில் காணப்பட்ட சில விரசமான உரையாடல்களைக் கொண்டு பார்க்கும் போது அந்தப் பெண்கள் கொல்லப்படுவதற்கு முன்னதாக பாலியல் வன்கொடுமைகள் நடந்திருக்கலாம் என்று கூறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் சானல் 4 கூறியுள்ளது.

இந்த வீடியோ காட்சியை பிரிட்டனுக்கான இலங்கை தூதரகம் முற்றாக நிராகரிப்பதாக கூறியுள்ளது. கடந்தவருடமும் இப்படியான வீடியோ வெளியான போது அவற்றை தொழில்நுட்ப பரிசோதனைக்கு உட்படுத்தி இலங்கை அரசாங்கம் அவை உண்மையானவை அல்ல, போலியானவை என்று கூறியிருந்ததாகவும் இலங்கை தூதரகம் கூறியுள்ளது.

ஆனால், கடந்த வருடம் வெளியான வீடியோ உண்மையானதாக தென்பட்டதாக ஐ நா சோதனைகள் கூறின.

இந்த வீடியோ காட்சிகள் மிகவும் கொடூரமானவையாக இருந்ததாகக் கூறுகிறார் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பின் ஆசிய பசிபிக் பிராந்திய இயக்குனரான பிராட் அடம்ஸ், எந்தவொரு பொறுப்புள்ள அரசாங்கமும் இத்தகைய வீடியோக்கள் வெளியாகும் சூழ்நிலையில் அவை குறித்து புலனாய்வுகளை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும் இங்கே தொடர்க...