3 பிப்ரவரி, 2010


சூரியனில் ஆய்வு நடத்த நாசா திட்டம்!




சூரியனைத் தீப் பிழம்பு என்பார்கள். ஆனால் அந்தப் பிழம்பிலேயே ஆய்வு நடத்தப் போகிறார்கள் விஞ்ஞானிகள்.

இந்த ஆய்வை நடத்த அமெரிக்காவின் 'நாசா' நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதன் மூலம் சூரிய மண்டலத்தில் நிகழும் அதிசயங்கள், இதனால் பூமியில் ஏற்படும் குழப்பங்கள் என்பவற்றுக்கும் தீர்வுகாண முடியும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்காக எதிர்வரும் 9 ஆந் திகதி முதல் விண்வெளியில் 'காப்ளக்ஸ் - 41' என்ற ஆய்வகத்தை ஏற்படுத்த முடிவு செய் யப்பட்டுள்ளது. அங்கிருந்து 5 ஆண்டுகள் ஆய்வு நடத்தவும் திட்டமிடப்பட்டிருப்பதாக நாசா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் இங்கே தொடர்க...
தேர்தல்கள் ஆணையாளரிடம் ஜெனரல் சரத் பொன்சேகா முறைப்பாடு-


எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகா தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்கவை இன்று சந்தித்துள்ளார். இதன்போது அன்னம் சின்னத்திற்கு புள்ளடியிடப்பட்டு நிராகரிக்கப்பட்டவையென இரத்தினபுரியில் புதைத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் வாக்குச்சீட்டுக்கள் தொடர்பில் அவர் தேர்தல்கள் ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார். இந்நிலையில் இது தொடர்பாக இன்றைய ஊடக சந்திப்பில் பதிலளித்த தேர்தல்கள் ஆணையாளர் இது தொடர்பில் தாம் விசாரணைகளை மேற்கொள்வதாக உறுதியளித்ததாக கூறியுள்ளார்.

வவுனியாவில் தனது மனைவியையும் அவரது தாய், சகோதரர் ஆகியோரை படுகொலை செய்தநபர் கைது-

வவுனியா நெலுக்குளம் பகுதியில் நேற்றையதினம் இரவு இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு மூவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அனுராதபுரம் பொலீசார் தெரிவிக்கின்றனர். கொலைச் சந்தேகநபர் தனது மனைவியின் தாயார், மனைவியின் சகோதரர் மற்றும் தனது மனைவி ஆகியோரை இரும்புக் கம்பியினால் தாக்கிப் படுகொலை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இவரது தாக்குதலின்போது அவரது மனைவியின் சகோதரியொருவரும் படுகாயமடைந்த நிலையில் அனுராதபுரம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றார். சம்பவத்துடன் தொடர்புடையவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அனுராதபுரம் பொலீசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை ஆட்சேபித்து கொழும்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்-

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சிகள் இன்று ஆர்ப்பாட்டப் பேரணி மற்றும் கூட்டமொன்றினை நடத்தியுள்ளன. இந்த ஆர்ப்பாட்டப்பேரணி மற்றும் கூட்டத்தினை ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் ஜே.வி.பி என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பொது வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகா, கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன உள்ளிட்ட பல அரசியல்வாதிகளும் முக்கியமாக ஜே.வி.பியினரும் கலந்து கொண்டிருந்தனர். இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக பல்வேறு பகுதிகளிலும் வாகன நெரிசல் அதிகரித்துக் காணப்பட்டது.

கம்பளை விகாராதிபதி உள்ளிட்ட இருவர் கொலைச் சந்கேதநபர் கைது-


கம்பளை விகாரை நலன்புரி விகாராபதிமீது குண்டுத்தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக பாதாள உலகக் கோஷ்டியைச் சேர்ந்தவர் எனக் கருதப்படும் சந்தேகநபர் ஒருவரை நேற்றுக் கைதுசெய்துள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி தேர்தலின் பின்னர், காலைவேளையில், வாகனம் ஒன்றில் வந்த சிலர் விகாரைமீது குண்டுத்தாக்குதல் நடத்தியுள்ளனர். இச்சம்பவத்தில் 73வயதான விகாராதிபதியும் மற்றொரு நபரும் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுவந்த கம்பளை பொலிஸார், நேற்று களுத்துறை பிரதேசத்தில் மறைந்து திரிந்த சந்தேகநபரைக் கைதுசெய்துள்ளனர். சந்தேகநபர் இராணுவத்திலிருந்து தலைமறைவாகியவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை இச்சம்பவம் தொடர்பாக மேலும் அரசியல்வாதி ஒருவரையும் மற்றும் இராணுவத்திலிருந்து தலைமறைவாகியதாகக் கூறப்படும் மேலும் சில இராணுவ வீரர்களையும் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.

அடக்குமுறைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்-

சர்வதேச மன்னிப்புச்சபை- ஊடகங்கள்மீது பிரயோகிக்கப்பட்டுவரும் அடக்குமுறைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டுமென சர்வதேச மன்னிப்புச்சபை கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் ஊடகவியலாளர்கள் மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்கள்மீது கடந்தவாரம் நடைபெற்றுமுடிந்த தேர்தலின்பின்னர் பல்வேறு அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டு வருவதாக சர்வதேச மன்னிப்புச்சபை சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன் இலங்கையில் கருத்து சுதந்திரம் மறுக்கப்படும் நிலை காணப்படுவதாக சர்வதேச மன்னிப்புச்சபையின் ஆசிய பசுபிக் வலய பிரதிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் அரச ஊடக நிறுவனங்களில் பணிபுரிவோர் உள்ளிட்ட 56 ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச மன்னிப்புச்சபை குறிப்பிட்டுள்ளது.

இறக்குவானை மாதம்பை ஆற்றிலிருந்து சடலமொன்று மீட்பு-

குருநாகல் மாவட்டம் இறக்குவானை மாதம்பை ஆற்றிலிருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. இந்த சடலம் இன்று பிற்பகலில் மீட்கப்பட்டதாக இறக்குவானைப் பொலீசார் தெரிவித்துள்ளனர். கொட்டகவெல கலஇட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 29வயதுடைய இந்திக்க என்ற இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முச்சக்கரவண்டியில் நேற்று முன்தினம் சென்றிருந்த குறித்த இளைஞர் வீடு திரும்பாததையடுத்து குடும்பத்தினர் பொலீசில் முறைப்பாடு செய்திருந்தனர். இந்நிலையில் குறித்த இளைஞன் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை இறக்குவானைப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...


'ராணுவ புரட்சி செய்ய முயன்றேனா' : மறுக்கிறார் பொன்சேகா


கொழும்பு : "ராஜபக்ஷே அரசை கவிழ்க்க, ராணுவ புரட்சியை ஏற்படுத்த முயன்றதாக என் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உண்மை அல்ல' என, இலங்கை ராணுவ முன்னாள் தளபதி சரத் பொன்சேகா கூறினார்.இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவரும், ராணுவ முன்னாள் தளபதியுமான சரத் பொன்சேகா கூறியதாவது: என்னுடன் சேர்ந்து கொண்டு, ராணுவ புரட்சி நடத்தி ராஜபக்ஷே அரசை கவிழ்க்க முயற்சித்ததாக, 12 ராணுவ அதிகாரிகளை பதவி நீக்கம் செய்துள்ளனர். நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தற்போது, எனக்கு நான்கு போலீசார் மட்டுமே பாதுகாப்பு அளித்து வருகின்றனர். இவர்களை வைத்துக் கொண்டு, நான் எப்படி ராணுவ புரட்சியில் ஈடுபட முடியும். உண்மையில் எங்களின் பாதுகாப்பு கருதியே, தேர்தல் முடிவு வெளியான அன்று, ஓட்டலில் தங்கியிருந்தோம். இதை சதி ஆலோசனை என்று கூறியுள்ளனர். ராணுவ புரட்சி நடத்த முயற்சித்ததாக என் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மை அல்ல. எனக்கு 40 லட்சம் மக்கள் ஓட்டளித்துள்ளனர். எனவே, நாட்டை விட்டு ஒரு போதும் வெளியேற மாட்டேன்; நீதிக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன். இவ்வாறு சரத் பொன்சேகா கூறினார்.

11 ஆயிரம் தமிழ் இளைஞர்களின் கதி என்ன?: இலங்கை அரசு மீது புகார்










வாஷிங்டன், ​​ பிப்.​ 2: இலங்கையில் ராணுவத்தால் பிடித்துச் செல்லப்பட்ட 11 ஆயிரம் தமிழ் இளைஞர்களின் நிலை குறித்து எந்தத் தகவலையும் இலங்கை அரசு வெளியிட மறுத்து வருகிறது.​ அவர்களைப் பற்றிய தகவல்களை இலங்கை அரசு இருட்டடிப்புச் செய்கிறது என்று அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமை அமைப்பான "ஹூயூமன் ரைட்ஸ் வாட்ச்' புகார் கூறியுள்ளது.

11 ஆயிரம் தமிழ் இளைஞர்களை நீண்ட நாள்களாக மோசமான சிறைகளில் அடைத்து துன்புறுத்தி வருவதாகவும் அந்த அமைப்பு குற்றம்சாட்டி வருகிறது.

அவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது அந்த இயக்கத்தோடு தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள்.

ரகசிய சிறைகளில் அடைக்கப்பட்டு அவர்களைப் பற்றி விவரங்களும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.​ இந்த விஷயத்தில் இலங்கை அரசு எல்லாவற்றையும் மூடி மறைப்பதால் அவர்களின் கதி குறித்து பெரும் கவலை ஏற்பட்டுள்ளது என்று மனித உரிமை அமைப்பின் ஆசிய பிராந்திய இயக்குநர் பிராட் ஆதம்ஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக 30 பக்க அறிக்கையை அந்த அமைப்பு வாஷிங்டனில் வெளியிட்டுள்ளது.​ மனித உரிமை ஆர்வலர்கள்,​​ மனித உரிமை அமைப்பின் ஊழியர்கள்,​​ சிறையில் அடைக்கப்பட்டுள்ள இளைஞர்களின் உறவினர்கள் ஆகியோர் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமைகளை மீறுவதை இலங்கை அரசு வாடிக்கையாகவே கொண்டுள்ளது.​ குறிப்பாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களின் அடிப்படை உரிமைகள் முற்றிலுமாக நிராகரிக்கப்படுகின்றன.​ அவர்கள் கொடூரமாக துன்புறுத்தப்பட்டு வருவதாக பரவலாக புகார் உள்ளது.

அவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ள இடத்தில் என்ன நடக்கிறது என்பது யாருக்கும் தெரியாது.​ அவர்களில் பலரைக் காணவில்லை.​ அவர்களது கதி என்ன என்பது மர்மமாக உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்று காணாமல் போனவர்கள் ரகசிய இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் தமிழர் அமைப்புகள் அச்சம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழர்கள் துன்புறுத்தப்படுவது குறித்தும் மனித உரிமைகள் மீறப்படுவது குறித்தும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தாலும் இலங்கை அரசு இதை பொருட்படுத்துவதில்லை.

தலாய் லாமாவை ஒபாமா சந்திக்கக் கூடாது; அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை




சீனத் தலைவர்களுடன் பேச்சு நடத்திய பின் அதன் விவரத்தை தலாய் லாமாவிடம் தெரிவிப்பதற்காக இமாசலப் பிரதேசம் தர்மசாலாவில் செவ்வாய்க்கிழமை காத்திருக்கும் பிரதிநிதிகளுடன் திபெத் போட்டி அரசின் பிரதமர் சாம்தோங் ரின்போசே ​(நடுவில் இருப்பவர்)

பெய்ஜிங்,​​ பிப்.​ 2:​ திபெத்திய ஆன்மிக தலைவர் தலாய் லாமாவை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சந்திக்கக் கூடாது.​ அவ்வாறு சந்தித்தால் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே உள்ள உறவு கடுமையாகப் பாதிக்கும் என்று சீன வெளியுறவுத் துறை துணை அமைச்சர் ஜு வெய்கூன் எச்சரித்தார்.

திபெத்தை சீனா ஆக்கிரமித்தபோது அங்கு இருந்து தப்பி இந்தியாவில் அடைக்கலம் புகுந்தார் திபெத் நாட்டு ஆன்மிக தலைவர் தலாய் லாமா.​ அவர் இமாசலப்பிரதேச மாநிலம் தர்மசாலாவிலிருந்து செயல்பட்டு வருகிறார்.

திபெத்துக்கு சுயாட்சி கோரி தலாய் லாமா,​​ ஆதரவாளர்கள் போராடி வருகின்றனர்.​ இது தொடர்பாக சீன கம்யூனிஸ்ட் அரசுடன் அவ்வப்போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.​ கடந்த வாரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை.​ தலாய் லாமா தரப்பில் சுயாட்சி கோரிக்கை மீண்டும் வலியுறுத்தப்பட்டது.​ ஆனால் அதை சீனா நிராகரித்துவிட்டது.​ இருப்பினும் இரு தரப்பிலும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் தலாய் லாமா வரும் 16-ம் தேதி முதல் 10 நாள்கள் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.​ அமெரிக்காவில் தங்கியிருக்கும்போது திபெத்திய ஆன்மிகத் தலைவர் தலாய் லாமாவை அதிபர் ஒபாமா சந்திப்பார் என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

ஆன்மிகத் தலைவர் தலாய் லாமாவைச் சந்திக்க ஒபாமா விருப்பமாக உள்ளார் என்று அமெரிக்கா சீனாவிடம் தெளிவுபடுத்திவிட்டது என்றும் அவர் கூறினார்.

ஆனால் இதற்கு சீனா கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.​ தலாய் லாமாவை ஒபாமா சந்தித்தால் இரு நாட்டுக்கும் இடையே மலர்ந்து வரும் நட்புறவில் கடும் விரிசல் ஏற்படும் என்று எச்சரித்துள்ளது.​ அமெரிக்க நிறுவனங்களுக்கு சீனாவில் தடை விதிக்கப்படும் என்றும் மிரட்டி உள்ளது.

தலாய் லாமாவின் அமெரிக்க பயணத்தைத் தொடர்ந்து சீன அதிபர் ஹு ஜிண்டாவோ அமெரிக்கா செல்கிறார்.​ எனவே தலாய் லாமாவை ஒபாமா சந்திப்பதை சீனா விரும்பவில்லை.

ஏற்கெனவே தைவானுக்கு அமெரிக்கா ஆயுதம் விற்பனை செய்வதால் இரு நாடுகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில் தலாய் லாமா பிரச்னை எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் ஆகிவிடும் என்று கருதப்படுகிறது.

தலாய் லாமா அமெரிக்க உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்வது தனது சுயாட்சி கோரிக்கைக்கு ஆதரவு தேடித்தான் என்று சீனா சந்தேகப்படுகிறது.

தலாய் லாமாவுடன் திபெத்தின் முக்கியத் தலைவர்கள் சிலர் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் இந்தப் பயணத்தின் போது அவர்கள் அதிபர் ஒபாமாவை சந்தித்து திபெத்தின் சுயாட்சி விவகாரம் குறித்து விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திபெத் பிரச்னைக்குத் தீர்வு காண்பது குறித்து சீன கம்யூனிஸ்ட் தலைவர்களும்,​​ தலாய் லாமாவின் பிரதிநிதிகளும் 2002-ல் இருந்து தொடர்ந்து ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.​ எனினும்,​​ இந்த விவகாரத்தில் இதுவரை எவ்விதத் தீர்வும் எட்டப்படவில்லை.

மேலும் இங்கே தொடர்க...

மீள்குடியேற்றப் பணிகள் மீண்டும் ஆரம்பம்: பூநகரி பகுதியில் நேற்று 1000 பேர் மீள்குடியமர்வு

5ம் திகதி மாந்தையில்; 7ம் திகதி முல்லைத்தீவில்



இடம்பெயர்ந்த மக்களை மீள் குடியேற்றும் பணிகள் நேற்று (2) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதாக மீள் குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சின் செயலாளர் யு. எல். எம். ஹால்தீன் தெரிவித்தார்.

முதற்கட்டமாக கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேசத்தில் ஆயிரம் பேர் தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்பட்டனர். இவர்கள் பஸ்களில் ஏற்றப்பட்டு நேற்று பிற்பகல் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் ஐந்தாம் திகதி மற்றொரு பகுதியினர் மாந்தை கிழக்கு பகுதியில் மீளக்குடியேற்ற திட்டமிட்டுள்ளதாக கூறிய அவர், மீள்குடியேற்றப்பட உள்ள குடும்பங்கள் அடையாளங் காணப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். எதிர்வரும் ஏழாம் திகதி முல்லைத்தீவு பகுதியில் மீள் குடியேற்ற பணிகளை முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

கண்ணி வெடிகள் அகற்றும் பணிகளில் ஏற்பட்ட தாமதம், ஜனாதிபதித் தேர்தல் ஆகியவற்றினால் மீள்குடியேற்றச் செயற்பாடுகள் சிலவாரங்கள் தாமதமாகின. ஜனவரி 31 ஆம் திகதியுடன் மீள்குடியேற்றப் பணிகளை பூர்த்தி செய்ய திட்டமிடப்பட்டபோதும் மேற்படி காரணங்களினால் இந்தப் பணிகள் சற்று தாமதமடைந்தன.

மோதல் காரணமாக வடக்கு, கிழக்கை சேர்ந்த சுமார் 4 இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்தனர். இவர்களில் பெரும்பாலான மக்கள் ஏற்கெனவே மீள் குடியேற்றப்பட்டுள்ளதோடு ஒரு இலட்சத்துக்கும் குறைவானவர்களே வவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

எஞ்சிய மக்களை மீள்குடியேற்றுவதற்காக கண்ணி வெடிகளை அகற்றும் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கண்ணிவெடிகள் அகற்றப்படுவதற்கு ஏற்ப மக்கள் அந்தப் பிரதேசங்களில் மீள்குடியேற்றப்படுவர் எனவும் ஹால்தீன் கூறினார்.

மீள்குடியேற்றப்படும் மக்களுக்கு 6 மாதத்துக்குத் தேவையான உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருவதோடு விவசாயம், மீன்பிடித்துறை என்பவற்றை முன்னெடுக்க உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றது. வடக்கில் மீள்குடியேற்றம் நடைபெறும் பிரதேசங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளும் துரிதமாக இடம்பெற்று வருகின்றன.


ஜனாதிபதி படுகொலை சதி முயற்சி: விசேட பொலிஸ் குழுவால் 37 பேர் கைது

பொன்சேகா அலுவலகத்திலிருந்து சதித்திட்ட ஆவணங்களும் மீட்பு



ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் மீதான படுகொலை சதி முயற்சி குறித்து விசாரணைகளை நடத்தி வரும் விஷேட பொலிஸ் பிரிவினர் இதுவரை 37 முக்கிய சந்தேக நபர்களை கைது செய்துள் ளனர்.

கொழும்பிலுள்ள சரத் பொன்சேகா அலுவலகத்தை கடுமையான சோதனைக்கு உட்படுத்திய பொலிஸார் பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதன் மூலம் சதித்திட்டம் தொடர்பான பல முக்கிய தகவல்கள் தெரியவந்துள்ளதாக பொலிஸ் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இராணுவப் பொலிஸார், குற்றப் புலனாய்வு பிரிவு மற்றும் பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸார் ஆகியோரின் பங்களிப்புக்களுடன் பல்வேறு கோணங்களில் இந்த விசாரணைகளை முன்னெடுத்து வரும் விசேட பொலிஸ் குழுவுக்கு தேர்ச்சி பெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவர் தலைமை தாங்கி வருகின்றார்.

இராணுவ மேஜர் ஜெனரல், பிரிகேடியர் உட்பட இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற பலர் கைது செய்யப்பட்ட 37 பேரில் அடங்குவர். இந்த விசாரணைகள் முடி வுறும் வரை அனைவரும் அவசரகால சட்ட விதிகளுக்கு அமைய தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பிலுள்ள சரத் பொன்சேகாவின் அலுவலகத்தை சோதனைக்குட்படுத்திய போது மாத்திரம் இராணுவத்திலிருந்து தப்பி ஓடிய 22 பேர் கைது செய்யப்ப ட்டுள்ளனர்.

சோதனைக்காக பொன்சேகாவின் அலுவலகத்திற்குச் சென்ற இரகசிய பொலிஸார், அலுவலகம் மூடியிருந்ததை அடுத்து கதவைத் தட்டிய போது உள்ளே இருந்து எந்தவித பதிலும் கிடைக்காததால் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது அலுவலகத்தின் உள்ளே மறைத்திருந்த 23 பேரை கைது செய்துள்ள துடன், சம்பவத்துடன் தொடர்புடைய பல்வேறு ஆவணங்கள், பெயர் விபரங்க ளையும் கைப்பற்றியுள்ளனர். இவர்களில் நால்வரைத் தவிர ஏனைய 19 பேரும் முன்னாள் இராணுவத்தினராவார்கள்.

இதேவேளை தேர்தல் காலத்தின் போது கொழும்பிலுள்ள பொன்சேகாவின் அலுவலகத்தில் இருப்பவர்களின் பாவனைக்காக 500 கையடக்கத் தொலை பேசிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த கையடக்கத் தொலைபேசியை பெற்றுக் கொடுத்த முன்னாள் ஜெனரல் ஒருவர் குறித்தும் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பொன்சேகாவின் அரசியல் நடவடிக்கை களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கிய முன்னாள் இராணுவ கெப்டன் ஒருவரே கொழும்பிலுள்ள ஹோட்டலில் அறைகளை பதிவு செய்துள்ளார். இந்தப் பதிவுக்காக ஹோட்டல் முகாமைத்துவத்திற்கு பொய்யான பெயரும், விலாசமும் கொடுக்கப்பட்டுள்ளமையும் இதற்கான முழுக்கொடுப்பனவுகளும் பணமாக செலுத்தப்பட்டுள்ளமையும் விசாரணைகளிலி ருந்து தெரிய வந்துள்ளது.

கொழும்பிலுள்ள இரண்டு நட்சத்திர ஹோட்டல்களில் 70 ற்கும் அதிகமான அறைகள் பதிவு செய்யப்பட்டிருந்த போதிலும் பல அறைகள் பாவிக்காமல் வைக்கப்பட்டுள்ளன.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர்கள் பாவித்ததாக கூறப்படும் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வாகனங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்த மோட்டார் சைக்கிள்களில் பல போலியான இலக்கத்தகடுகளை கொண் டவை. சில வாகனங்கள் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஹோட்டலின் மூன்றாவது மாடியை முழுமையாக ஒதுக்கியிருந்த பொன்சேகாவின் குழுவினர் அந்த ஹோட்டலில் வைக்கப்பட்டிருந்த (ரிவி ஹிய) கண் காணிப்பு கமராக்களை செயலிழக்கச் செய்துள்ளதுடன் அறை உதவியாளர்கள் வருவதையும் தடை செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதேவேளை மாளிகாவத்தை பிரதேசத்தில் பெளத்த விகாரையிலிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் மற்றும் பணம் என்பன கொழும்பிலுள்ள சரத் பொன்சேகாவின் அலுவலகத்திலிருந்தே எடுத்துச் செல்லப்பட்டுள்ளமையும் உறுதி செய்யப் பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித் தனர்.

இந்த ஆயுதத்தை விநியோகித்த சந்தேகத்தின் பேரில் 2 தமிழர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவற்றை விநியோகிக்க எட்டு இலட்சம் ரூபா ஒப்பந்தம் பேசப்பட்டுள்ளதுடன் அவற்றில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா முற்பணமாக கொடுக்கப்பட்டுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

62 வது சுதந்திர தின வைபவம்: கண்டியில் நாளை கோலாகலம்

தலதா மாளிகையிலிருந்து ஜனாதிபதி நாளை நாட்டு மக்களுக்கு உரை


இலங்கையின் 62வது சுதந்திர தின பிரதான வைபவம் நாளை காலை கண்டியில் மிக கோலாகலமாக நடைபெறவுள்ளது

கண்டி தலதா மாளிகை வளவில் நடைபெறவுள்ள சுதந்திர தின பிர தான வைபவத்திற் கான சகல ஏற் பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன் முப்படை மற்றும் பொலிஸாரின் ஒத்திகைகளும் இடம்பெற்றன.

சுதந்திர தின பிரதான வைபவம் மற்றும் தேசத்திற்கு மகுடம் தேசிய கண்காட்சியை முன்னிட்டு எதிர்வரும் 10ம் திகதி வரை திட்டமிட்ட வகையில் விஷேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இம்முறை சுதந்திர தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு கடமைகளுக்கென பத் தாயிரத்திற்கும் மேற்பட்ட பொலிஸாருடன், பொலிஸாருக்கு உதவியாக முப் படையினரும் ஈடு படுத்தப்பட்டு ள்ள னர்.

சுதந்திர தின த்தை முன்னிட்டு சமய வழிபாடுகள் இடம்பெற்று வருவதுடன் நாளை முதல் எதிர்வரும் 10ம் திகதி வரை பள்ளேகளவில் தேசத்திற்கு மகுடம் தேசிய கண்காட்சியும் நடை பெறவுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் காலை 8.30 மணிக்கு சுதந்திர தின பிரதான வைபவம் ஆரம்ப மாகவுள்ளது. பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க, சபாநாயகர் டபிள்யூ.

ஜே. எம். லொக்குபண்டார, பொது நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் சந்திரசிறி கஜதீர, மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்க நாயக்க, பிரதம நீதியரசர் அசோக்க டி சில்வா, பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி எயார் சீப் மார்ஷல் ரொஷான் குணதிலக்க, முப்படைக ளின் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் மற்றும் அமைச்சர்கள் உட் பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

முப்படையினர், பொலிஸார், சிவில் பாதுகாப்புப் படையினரின் மரி யாதை அணி வகுப்புகள் பாண்ட் வாத்தியங்களுடன் கலாசார நிகழ்ச் சிகளும் இடம்பெறவுள்ளன.

இம்முறை சுதந்திர தினத்தின் போது கடற்படை, விமானப் படை யின் சாகசங்களும் தவிர்த்து கொள் ளப்பட்டுள்ளதுடன் கனரக வாகன ங்களின் அணி வகுப்புகளும் குறைக் கப்பட்டுள்ளன.

இந்த தேசத்தின் சுதந்திரத்திற்காக உயிர் நீத்தவர்களுக்காக இரண்டு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப் படவுள்ளதுடன் மரியாதை நிமிர்த் தம் 21 பீரங்கி வேட்டுக்களும் தீர்க்கப் படவுள்ளன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலதா மாளிகையிலிருந்து நாட்டு மக்களுக்காக தனது சுதந்திர தின உரையை நிகழ்த்தவுள்ளார்.

முப்படையினருக்கு மேலதிகமாக சுதந்திர தின பிரதான வைபவத்தி ற்காக மூவாயிரம் பொலிஸாரும், தேசத்திற்கு மகுடம் தேசிய கண் காட்சிக்காக ஏழாயிரத்திற்கும் அதிக மான பொலிஸாரும் கடமையில் ஈடுப்படுத்தப்படவுள்ளதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமல் மெதிவக்க தெரிவித்தார்.

பொது மக்களுக்கு பாதிப்பு ஏற் படாத வகையில் சிறந்த முறையில் பாதுகாப்பு முன்னெடுக்கப்பட்டுள் ளதுடன் கண்டி நகரையும் அதனை அண்டிய சில வீதிகள் தற்காலிகமா கவும், சில வீதிகள் நிகழ்ச்சி நடைபெறும் நேரங்களுக்கும் மூடப்படவுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...