22 ஆகஸ்ட், 2010

தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்கையம்மன் ஆலய தேர்த் திருவிழா




வரலாற்றுப் புகழ் மிக்க தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்கையம்மன் ஆலய வருடாந்த தேர்த் திருவிழா இன்று பகல் 9.30 மணிக்கு இடம் பெற்றது அதிகாலை முதல் இடம் பெற்ற விசேட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து தேரில் ஆரோகணித்த துர்க்கையம்மன் அடியவர்களின் அரோகரா ஒலியுடன் தேரில் ஏறி வெளி வீதியுலா வரும் நிகழ்வு இடம் பெற்றது.

இந்நிகழ்வில் யாழ் குடா நாட்டின் பல பகுதிகளில் இரந்தும் வருகை தந்த சுமார் பத்தாயிரத்திற்க்கும் மேற்பட்ட அடியவாகள் கலந்து கொண்டார்கள.கடநத கால சம்பவங்களினால் பாதிக்கப்பட்ட அடியவாகள் பறவைக்காவடி தூக்குக் காவடி கற்பூரச்சட்டி காவடிகள் எடுத்து தமது நேர்திகளை நிறைவேற்றியமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

அடியவர்கள் ஆலயத்திற்க்கு கூடி தமது நேர்திகளை நிறைவேற்றியதுடன் தூர இடங்களில் இருந்து வருகை தந்தவாகள் உட்பட பெரும் எண்ணிக்கையான அடியவாகள் அன்னதான மடத்தில் அன்னதானம் அருந்தி சென்றனர்.

மேலும் இங்கே தொடர்க...

மன்னார் மாவட்ட அபிவிருத்தி கூட்டம் இன்று நடைபெற்றது


மன்னார் மாவட்ட அபிவிருத்தி தொடர்பான அவசரக் கூட்டம் ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் மன்னார் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மன்னார் மாவட்ட அதிபர் நிக்கொளாஸ் பிள்ளையின் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, கைத்தொழில் வர்த்தக துறை அமைச்சர் றிஸாட் பதியூதின், கல்வித்துறை அமைச்சர் பந்துல குணவர்தன, மீள்குடியேற்ற அமைச்சர் மில் ரோய் பெனாண்டோ,வடமாகாண ஆளுநர் ஜி.ஏ சந்திரசிறி இராணுவ,கடற்படை பொலிஸ் அதிகாரிகள் என பலர் கலந்துக்கொண்டனர்.

இதன் போது மீள் குடியேற்றப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மிதி வெடிகளை அகற்றுதல்,மீள்குடியேற்றம்,அபிவிருத்தி,கல்வி,சுகாதாரம்,
மருத்துவம்,
போக்குவ்ரத்து போன்ற வேலைத்திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் இங்கே தொடர்க...

இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கை விஜயம் செய்யவுள்ளார்

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா எதிர்வரும் ஒக்டோபர் மாதம் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வரவுள்ளதாக அரசதரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த புதன் கிழமை இந்தியாவின் மத்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து இலங்கை தமிழர்கள் பிரச்சினை,இந்திய மீனவர்கள் மீதான தாக்குதல் ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தியிருந்தார்.

இதன் போது மீள் குடியேற்றப்பட்ட மக்களின் நிலைமைகளை நேரில் பார்வையிடும் நோக்கிலும், மீனவர் பிரச்சினை குறித்து ஆராய்வதற்கும் விசேட பிரதிநிதி ஒருவர் இலங்கைக்கு விரைவில் விஜயம் செய்ய உள்ளதாக நிரூபா ராவ் அறிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இந்தியாவின் சிறப்பு தூவதராக உள்துறை அமைச்சர் சிதம்பரம் அல்லது டீ.ஆர் பாலு விஜயம் இலங்கைக்கு செய்யலாம் எனவும் தகவல்கள் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் இங்கே தொடர்க...

கிழக்கு மீள்குடியேற்ற பிரதேச புனரமைப்பு பணிக்காக 42.3 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

கிழக்கில் மீளக் குடியமர்த்தப்பட்ட மக்களின் வீடுகளின் புனரமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்து வதற்கென 42.3 மில்லியன் ரூபாவை அரசாங்கம் வழங்குவதாக மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிரன் தெரிவித்தார்.

அமைச்சர் முரளி தரனின் ஆலோசனைக்கமைய கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீளக்குடியமர்த்தும் திட்டத்துக்கு இணையாக அந்த மக்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்குடனேயே இந்த 42.3 மில்லியன் ரூபாவை அரசு ஒதுக்கியுள்ளது.

யுத்தத்தால் பாதிக்கப்பட்டு சேதத்துக்குள்ளான 482 வீடுகளை மீண்டும் புதுப்பிப் பதற்காக 27.3 மில்லியன் ரூபாவும் குழாய்நீர் கிணறுகள், மற்றும் குடிநீர்க் கிணறுகளுக்கென 15 மில்லியன் ரூபாவும் வழங்கப்படவுள்ளது.

கல்குடா, வாகரை வடக்கு மற்றும் வாகரை மத்தி போன்ற பகுதிகளில் வீடுகளை புனரமைக்கும் திட்டத்துக்கும் போரதீவுபற்று, மண்முனை தென்மேற்கு, மண்முணை மேற்கு, ஏறாவூர்பற்று, கோரளைப்பற்று தெற்கு போன்ற பகுதிகளில் கிணறுகள், குழாய்க்கிணறுகள் திட்டத்துக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் ஊடாக மேற்குறிப்பிடப் பட்ட பகுதிகளில் நீண்ட காலமாக நிலவி வந்த குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் எனவும் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். இதே போன்று கிழக்கில் ஏனைய பகுதிகளிலும் நிலவும் குடிநீர்ப் பிரச்சினைக்கும் இவ்வாறான திட்டம் விரைவில் நடைமுறைப் படுத்தப்படும் என்றும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்
மேலும் இங்கே தொடர்க...

இந்திய சிறப்பு தூதுவரை இலங்கை வரவேற்பதன்பொருள் என்ன?: நெடுமாறன் கேள்வி

சிறப்பு தூதுவர் ஒருவரை இலங்கைக்கு அனுப்பிவைப்பதால் அவர் மூலம் என்ன உண்மை வெளியுலகுக்குத் தெரிந்துவிடப் போகிறது என உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று நடைபெற்ற கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டியில் ஜீவா பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற போது செய்தியாளர்களுக்கு வழங்கிய செவ்வியில், அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதாக இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியாவிற்கு விஜ்யம் செய்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை சந்தித்து, இலங்கைத் தமிழர்கள் நிலைமை குறித்து விளக்கியுள்ளனர். சென்னைக்கு வந்து முதல்வர் கருணாநிதியையும் சந்தித்துப் பேசியுள்ளனர்.

இங்கிருந்து சிறப்புத் தூதரை அனுப்பி என்ன உண்மை தெரியவரும். ஐ.நா. குழுவை அனுமதிக்காத இலங்கை அரசு இந்திய அரசின் தூதரை வரவேற்கிறது என்றால் அதன் பொருள் என்ன? இந்தியத் தூதர் வெளியிடும் அறிக்கை, ஐ.நா. குழுவை அனுமதிக்க மறுத்ததற்குப் பதிலாக காட்டப்படும். வேறு எதுவும் நடக்காது என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

ஆசிய நாடுகளில் அரிசி உற்பத்தி குறையும் அபாயம்





அதிகரித்து வரும் உலக வெப்பம், மனிதர்கள், விலங்குகளை மட்டுமல்லாது பயிர்களையும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், அடுத்த சில ஆண்டுகளில், ஆசிய நாடுகளில் பெரும்பாலான மக்களின் உணவாக பயன்படும் அரிசி உற்பத்தி கடுமையாக பாதிக்கும் என்று சமீபத்திய ஆய்வு தெரிவித்துள்ளது.அமெரிக்கா, பிலிப்பைன்ஸ் மற்றும் உணவு மற்றும் விவசாய நிறுவனம் (எப்.ஏ.ஓ.,) ஆகியவற்றை சேர்ந்த விஞ்ஞானிகள் இணைந்து, கடந்த 1994ம் ஆண்டு முதல் 1999ம் ஆண்டு வரை சீனா, இந்தியா, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து மற்றும் வியட்நாம் நாடுகளில் உள்ள நெல் பயிரிடும் 227 இடங்களின் அதிகபட்ச, குறைந்த பட்ச வெப்ப நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.இதில், புவி வெப்பம் அதிகரித்து வருவதால் நெல் உற்பத்தி பாதிக்கப்படுவது தெரிய வந்துள்ளது.

இந்த ஆய்வு குறித்து கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர் ஜர்ரோட் வெல்ச் கூறியதாவது:தினசரி நிலவும் குறைந்தபட்ச இரவு நேர வெப்ப நிலை அதிகரிப்பால், நெல் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்படுகிறது. பகலில் காணப்படும் அதிகபட்ச வெயில் நெற்பயிர் வளர்ச்சிக்கு பெருமளவு உதவுகிறது.ஆனால், இரவில் காணப்படும் அதிகபட்ச வெப்பத்தால் நெற்பயிர் வளர்ச்சி பாதிக்கப்பட்டு, நெல் மணிகளின் எடை குறைந்து விடுகிறது.உலக வெப்பம் அதிகரித்து வரு வதன் காரணமாக, கடந்த 25 ஆண்டுகளில் நெற்பயிர் உற்பத்தி ஏற்கனவே 10 முதல் 20 சதவீதம் வரை குறைந்து விட்டது.

இவ்வாறு தொடர்ந்து வெப்பம் அதிகரிப்பால் இந்த நூற்றாண்டின் மத்தியில் நெல் உற்பத்தி மிக மோசமாக பாதிக்கப்படும்.தற்போது பகல் நேரத்தில் காணப்படும் மிக அதிகபட்ச வெப்பம் கூட நெல் உற்பத்தியை பாதிக்கும் என்பதால் இழப்பு அதிகமாக இருக்கும். உலகில் உள்ளவர்களில் 300 கோடி மக்களின் தினசரி உணவாக அரிசி உள்ளது.ஆசியாவில் உள்ள 100 கோடி அரிசி சாப்பிடும் ஏழை மக்களில், 60 கோடி மக்களுக்கே தற்போது அரிசி கிடைக்கிறது. நெல் உற்பத்தியில் ஏற்படும் வீழ்ச்சி, அதிகளவு மக்கள் ஏழ்மை நிலைக்கு மாற்றி விடும்.எனவே, நெல் உற்பத்தி முறையை மாற்ற வேண்டும் அல்லது அதிக வெப்ப நிலையை தாங்கி வளரும் நெற்பயிர் ரகத்தை உருவாக்க வேண்டும்.இல்லையென்றால் அடுத்து வரும் 20 அல்லது 30 ஆண்டுகளில் நெல் உற்பத்தியில் பெருமளவில் நஷ்டம் ஏற்படும்.இவ்வாறு ஜர்ரோட் வெல்ச் கூறியுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

ஆஸ்திரேலிய பார்லிமென்ட் தேர்தல்:எந்த கட்சிக்கும் மெஜாரிட்டியில்லை





மெல்போர்ன்:ஆஸ்திரேலியாவில் 70 ஆண்டுகளுக்குப் பின், தொங்கு பார்லிமென்ட் அமையும் நிலை ஏற்பட்டுள்ளது.ஆஸ்திரேலியாவில் பார்லிமென்ட் தேர்தல் நடந்தது. இதில் ஆளும் கட்சியான, பிரதமர் ஜூலியா கிளார்டு தலைமையிலான ஆஸ்திரேலிய தொழிலாளர் கட்சிக்கும், டோனி அபோட் தலைமையிலான கன்சர்வேடிவ் லிபரல் தேசிய கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

தேர்தலில் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டன. 58 சதவீத ஓட்டுகள் எண்ணி முடிக்கப்பட்ட நிலையில், தொழிலாளர் கட்சி 68 இடங்களிலும், கன்சர்வேடிவ் லிபரல் கட்சி 62 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன. பல தொகுதிகளிலும் இந்த இரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி காணப்பட்டது.இதுகுறித்து ஆஸ்திரேலிய அரசியல் வட்டாரங்கள் கூறுகையில், "தற்போது உள்ள சூழ்நிலையை பார்த்தால், எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காது என, தெரிகிறது. இதனால், ஆஸ்திரேலிய அரசியலில் 70 ஆண்டுகளுக்குப் பின், தற்போது தொங்கு பார்லிமென்ட் அமையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது' என்று கூறியுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

செஞ்சிலுவை சங்க மட்டு. கிளையில் ஒரு சில பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு அலுவலகம் மூடப்பட்டுள்ள போதிலும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளை அலுவலகத்தில் வாரத்தில் ஒருநாள் சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தின் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் இலங்கைக்கான பிரதி வதிவிடப்பிரதிநிதி அலி நறாக்கி தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்திலிருந்த சர்வதேச நெஞ்சிலுவை சங்கத்தின் அலுவலகங்கள் மூடப்பட்டு விட்டன. இந்நிலையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களை அவர்களின் குடும்ப உறவினர்கள் சென்று பார்வையிடுவதற்கான செலவு மற்றும் போக்கு வரத்து வசதிகளை சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் மேற்கொண்டு வந்தது.

இந்த நடவடிக்கையை தெடர்ந்து மேற்கொள்வதற்காகவே இலங்கை செஞ்சிலுவை சங்க அலுவலகத்தில் வாரத்தில் ஒரு நாள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பணிகளை மேற்கொள்ளவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

போர் முடிவடைந்து ஒரு வருடம் கழிந்தும் பெண்கள் மீதான வன்முறை தொடர்கிறது


போர் முடிவடைந்து ஒரு வருடமும் இரண்டு மாதங்களும் நிறைவடைந்த போதும் தொடர்ந்தும் வெற்றிக்களிப்பின் ஊடாக மனித அவலக் குரல்கள் மறைக்கப்படுகின்றன.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் கட்ட விழ்த்து விடப்பட்டுள்ளன.

இது குறித்து சிவில் சமூக அமைப்புகளினாலும், அரசியல் கட்சிகளினாலும், அரசாங்கத்தரப்பினராலும் கணக்கில் எடுக்கப்படுவதாகவோ அல்லது உரிய நடவடிக்கை எடுப்பதாகவோ அல்லது நிவாரணம் பெற்றுக் கொடுப்பதாகவோ இல்லை என்று வடக்கு, கிழக்கு பெண்கள் அமைப்பு விசனம் தெரிவித்துள்ளது.

மேற்படி அமைப்பு இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;

போர் இடம்பெற்ற பிரதேசங்களில் இடம் பெற்ற உயிரழிவுகள் மற்றும் உளவியல் ரீதியான பாதிப்புகள் சொல்ல முடியாத சொத்திழப்புகள் முதல் எம்மவர்கள் இழந்தவை ஏராளம்.

அவ்வாறு இழந்த பின்னரும் குடும்ப அங்கத்தவர்களைத் தடுப்பு முகாம்களிலும் அங்கவீனர்களாகவும் கொண்டுள்ள குடும்பங்களில் ஆண்களற்றுத் தனித்துள்ள பெண்கள் ஏராளம் பேர்வரை மீள் குடியேற்றப்பட்ட பகுதிகளில் தனித்து வாழ்கின்றனர்.

அவ்வாறு வாழ்கின்ற போது கிடைக்கின்ற நிவாரணங்களை மட்டும் நம்பியே பல பெண்கள் தமது குடும்பத்தைப் பிள்ளைகளைப் பராமரிக்கின்றனர்.

மீள் குடியேற்றம் செய்யப்பட்ட பல பகுதிகள் குறிப்பாக மாந்தை மேற்கு உட்பட வன்னிப்பகுதிகளில் கூடார வாழ்க் கையும் தற்காலிக இடங்களுமே பல குடும்பங்களுக்குத் தஞ்சமாக உள்ளன. இவ்வாறு உயிர்கள், உடைமைகள், சொத் துகள் என்பவற்றை இழந்து கேட்க இடமின்றி அங்கவீனத்தோடும் மன உளச்சலோடும் வாழ் கின்ற பெண்கள் நாளாந்தம் இரவுகளில் வன் முறைகளுக்கும் துன்புறுத்தல்களுக்கும் இலக் காவது வேதனைக் குரியது. அதிகாரம், பணம் மற்றும் ஆயுத பலம் என்பவற்றின் செல்வாக் கோடு இருப்போரை சாதாரண பெண்கள் எவ்வித அரசியல் பலமுமின்றிய வாழும் பொது மக்கள் எப்படி எதிர்கொள்ள முடியும்? என்றும் அந்த அறிக்கையில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

பல குடும்பங்களுக்குத் தஞ்சமாக உள்ளன.இவ்வாறு உயிர்கள், உடைமைகள், சொத்துகள் என்பவற்றை இழந்து கேட்க இடமின்றி அங்கவீனத்தோடும் மன உளச்சலோடும் வாழ் கின்ற பெண்கள் நாளாந்தம் இரவுகளில் வன் முறைகளுக்கும் துன்புறுத்தல்களுக்கும் இலக் காவது வேதனைக் குரியது. அதிகாரம், பணம் மற்றும் ஆயுத பலம் என்பவற்றின் செல்வாக் கோடு இருப்போரை சாதாரண பெண்கள் எவ்வித அரசியல் பலமுமின்றிய வாழும் பொதுமக்கள் எப்படி எதிர்கொள்ள முடியும்? என்றும் அந்த அறிக்கையில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

செல்வச் சந்நிதி ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா நாளை



வரலாற்றுப் புகழ் மிக்க தொண்டமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய வருடாந்த தேர்த் திருவிழா நாளை திங்கட்கிழமை 23ஆம் திகதி காலை 9.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

அதிகாலை முதல் விசேட பூசைகள் மற்றும் அபிஷேகங்கள் இடம் பெறவுள்ளன. இதனைத் தொடர்ந்து முருகன் தேரில் வீதியுலா வரும் நிகழ்வு இடம்பெறும். அடியவர்களின் நன்மை கருதி யாழ்.குடாநாட்டின் நான்கு புறங்களில் இருந்தும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.00 மணிமுதல் விசேட பஸ் சேவைகளை யாழ். மாவட்ட இலங்கைப் போக்குவரத்துச் சபையினர் நடத்துகின்றனர்.

தனியார் சிற்×ர்திச்சேவையினரும் கூட விசேட சேவைகளை குடாநாட்டின் பலபகுதிகளில் இருந்தும் நடத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதேவேளை நீண்ட காலத்தின் பின்னர் இம்முறை ஆலய சுற்றாடலில் அடியவர்கள் ஞாயிற்றுக்கிழமை கூடுவார்கள் எனவும் காவடிகள் மற்றும் பால்குடம் எடுப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகம் காணப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களும் மற்றும் யாழ்.குடாநாடு உட்பட இலங்கையின் பல பகுதிகளிலும் வாழும் தமிழ் மக்கள் உட்பட தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகளும் கூட தேர்த்திருவிழாவில் கலந்து கொள்வார்கள் எனவும் எதிர் பார்க்கப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

விமான நிலையத்தில் இருந்துவிமானம் கொள்ளை போனது எப்படி?



காரக்காஸ்(வெனிசூலா):சைக்கிள், பைக், கார் என வாகனங்கள் திருடு போவதைப் போல், விமான நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்த தனியார் நிறுவன சிறிய ரக விமானத்தையும் யாரோ கொள்ளை அடித்துச் சென்று விட்டனர்.போதைப் பொருள் கடத்துபவர்கள் தங்களது தேவைக்காக விமானத்தை கொள்ளை அடித்திருக் கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

வெனிசூலா நாட்டின் தலைநகரான காரக்காஸ் நகரின் மைகெட்வியா சர்வதேச விமான நிலையத்தில், தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான சிறிய ரக விமானம் நிறுத்தப்பட்டிருந்தது. இவ்விமானத்தை 13ம் தேதி பார்த்தவர்கள் உண்டு.ஆனால், 16ம் தேதி காலையில் அவ்விமானத்தை அங்கு காண வில்லை. அவ்விமானம் மாயமானது குறித்து விசாரணை நடந்து வருகிறது.விமான நிலையத்தில் நிறுத்தப் படும் விமானங்கள் குறித்து பாது காக்கப்படும் தகவல்களிலும் அவ் விமானம் எப்போது எங்கு பறந்து சென்றது என்பது குறித்த விவரங்கள் இல்லை.

போலீசார் விசாரணையில் போதைப் பொருள் கடத்தும் கும்பல் தங்களது கைவரிசையை காட்டியிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.அவ்விமானம் விமான நிலைய ஓடு பாதையில் (ரன்வே) 100 மீட்டர் ஓடினாலே வான் நோக்கி மேலெழும்ப முடியும்.இதனால் விமானங்கள் நிறுத்தப் படும் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இவ்விமானத்தை மிக எளிதாக இயக்கி கொள்ளை நடந்திருக்கலாம் என விமான நிலைய அதிகாரிகள் கருதுகின்றனர்.எது எப்படியோ, சைக்கிள்,பைக், கார் போன்ற வாகனங்களை நிறுத்தப்பட்ட இடத்தில் இருந்து களவாடி செல்வது போல், தற்போது சிறிய ரக விமானத்தையும் களவாடி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...