26 ஜூன், 2010

இடம்பெயர்ந்த மக்கள் கோயில் தரிசனம்

மயிலிட்டி பகுதியில் ஒரு கோயில்
மயிலிட்டி பகுதியில் ஒரு கோயில்
கோயில்கள் பராமரிப்பின்றியும் சேதமடைந்தும் போயிருந்தன

இலங்கையில் உயர்பாதுகாப்பு வலயப் பகுதி ஒன்றில் உள்ள ஆலயங்களை ஒரு முறை தரிசித்து திரும்ப இடம்பெயர்ந்த மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

வடக்கே யாழ் குடாநாட்டில் வலிகாமம் வடக்கில் மயிலிட்டியில் உள்ள ஆலயங்களுக்குச் சென்று வர அந்தப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கு வெள்ளியன்று இராணுவம் அனுமதி வழங்கியிருந்தது.

தாங்கள் கற்பனையில் எதிர்பார்த்திருந்ததைவிட நிலைமைகள் வேறான இருந்ததாகவும், இருபது வருடங்களுக்குப் பின்னர் தமது ஊரைப் பார்த்த மக்கள் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி கண்ணீர் சொரிந்து மகிழ்ந்ததாகவும், இடப்பெயர்வுக்கு பின்னர் பிறந்தவரான உருத்திரமூர்த்தி கவிந்தன் என்ற 19 வயது இளைஞன் தெரிவித்தார்.


அடுத்தவங்க சொல்லி கேள்விப்பட்டிருக்கேன். இன்றுதான் எனது சொந்த ஊரை நேரில் சென்று பார்த்திருக்கேன்.

உருத்திரமூர்த்தி கவிந்தன்

மக்கள் பொங்கல் வைத்து சாமி கும்பிட்டனர்

தங்களை கோவிலைச் சூழ்ந்த இடத்திற்கு அப்பால் செல்வதற்கு இராணுவம் அனுமதிக்காததனால், ஊருக்குச் சென்றோம் என்ற மகிழ்ச்சியுடன் கவலையும் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மீள்குடியேற்றம் எப்போது நடைபெறும் என்பது தெரியாத நிலையில், உற்சவகால நன்னாளில் ஊருக்குச் சென்று இரண்டு ஆலயங்களில் பூஜை வழிபாடுகளைச் செய்வதற்கு இராணுவம் அனுமதித்துள்ளதாகத் தெரிகிறது.
மேலும் இங்கே தொடர்க...

உள்ளதைச் சொல்லுகிறேன்

உலகத்தலைவன் என்னும் பாணியில் உள்ளதைச் சொல்லுகிறேன் என்று வந்து விட்டானே என்று அங்கலாய்க்காதீர்கள். உலகத்தில் நடக்கும் நிகழ்வுகளைப் பலரும் பல கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள் பார்வ்வைக்குப் பார்வை காட்சிகள் வித்தியாசப்படுகின்றன.


நாம் காணும் காட்சியை எப்படி பார்க்க விரும்புகிறோமோ அப்படியே பார்க்கத் தலைப்படுகிறோம். அது தவறில்லை ஆனால் அந்தப் பார்வைக்கு நாம் கற்பித்த அர்த்தத்தை மற்றவர் மீது திணிக்கத் தலைப்படும் போதுதான் நிலமை மோசமடைகிறது.


அந்தத் திணிப்புகள் வெறும் திணிப்புகளாக மட்டும் இருந்து விடாது மற்றவர்களின் வாழ்க்கையைப் பாதிக்கும் நிலையை அடையும் போது அது மனிதர்களின் வாழ்வின் அடிப்படையே அசைக்கிறது.


எதற்கு இவ்வளவு பீடிகை ? உங்கள் கேள்விகள் என் காதுகளில் விழுகிறது. ஈழத்தமிழர்களின் இன்றைய நிலை பலராலும் பல அரசியல் தேவைகளுக்காகப் பந்தாடப்படும் நிலையைப் பார்க்கும் போது நெஞ்சத்தில் எழும் வேதனையின் ஒலி மெளனமாய் இதயத்தில் வலிப்பதனால் காகிதத்தில் விழுகிறது.


புலிகள் அழிக்கப்பட்டார்களா ? இல்லை அவர்களது சகாப்தம் முடிவுக்கு வந்து விட்டதா? இதைப்பற்றியெல்லாம் ஆராயும் அளவிற்கு புத்தி ஜீவியல்ல நான். ஆனால் புலிகளின் காலம் என்றொரு காலம் ஈழத்தின் அரசியல் வரலாற்றில் இருந்தது என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.


அந்தக்காலம் ஈழத்தமிழர்களின் வரலாற்றை ஒளியுறச் செய்ததா? அன்றி இருளடையச் செய்ததா? என்பதுவே கேள்வி.


பிரபாகரன் என்றொரு மனிதன் ஈத்தமிழர்களின் வரலாற்றில் மறைக்கப்பட்முடியாத அடையாளத்தை விட்டிருப்பது மட்டும் உண்மை என்பது தெளிவு. அதன் தாக்கம் எத்தகையது என்பதை இப்போது என் அன்பான புலி ஆதரவாளர்கள் என்னும் பெயரில் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் தமிழ் அன்பர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் காலத்தின் சக்கரச் சுழர்வில் நிச்சயம் புரிந்து கொள்வார்கள் என்பது உண்மை.


அதற்காக ஈழத்தமிழ் போராட்டங்களில் ஈடுபட்ட மற்றைய இயக்கங்கள் அனைத்தும் சுத்தமான வெள்ளைப்புறாக்கள் என்று நான் கூறவில்லை.


ஈழத்து தமிழர்களின் அரசியல் வாழ்வில் சுபீட்சத்தை ஏற்படுத்தப் போகிறோம் என்று கோஷமிட்டு உண்மையான உணர்வுகளினால் உந்தப்பட்டு அந்த இலட்சியத்துக்காக தம்மை ஈந்த உன்னதமான எம் தமிழ் உயிர்கள் பலவற்றை விடுதலை இயக்கங்கள் அனைத்துமே முற்றிலும் சரியான வழியில் தான் வழிநடத்தினார்களா ? என்பது கேள்வியே.


ஏன் இன்று ஈழத்தமிழன் இந்த நிலையை வந்தடைந்துள்ளான். சிந்தித்துப்ப்பார்க்கிறேன் உண்மையாக, உள்ளதைச் சொல்லப்போனால் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவருமே தாம் சார்ந்த இயக்கங்களை நேசித்தார்களே ஒழிய தமிழர்களின் விடுதலையை நேசிக்கவில்லை.


ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கான வழி என்பதை தாம் சார்ந்த இயக்கங்கள் என்னும் குறுகிய ஜன்னல் வழியாகப் பார்த்தார்களே ஒழிய, தமிழர்கள் என்னும் பரந்த பார்வையைக் கொண்டிருக்கவில்லை.


இன்றும் கூட என்ன நடந்து கொண்டிருக்கிறது? புலம் பெயர்ந்த தமிழர்கள் தாம், தமது என்னும் சுயநலப்போக்கான பார்வையைக் கொண்டிருக்கிறார்களே ஒழிய ஈழம் என்னும் அந்த குறுகிய நிலப்பரப்புக்குள் தமிழர் வாழும் பகுதிகள் என்னும் இன்னும் குறுகிய நிலத்தினுள் அடைப்பட்டு, அல்லல் பட்ட தமிழர்களின் நலன்களைக் கணக்கிலெடுத்துக் கொள்கிறார்களா என்பது சந்தேகமே?


போராட்டத்தின் உசச நிலைக்குள் ஈழத்தின் வடபுலம் சிக்கிக் கொண்டிருந்த வேளையில் அங்கு சென்று வந்த என் நண்பனொருவன் கூறிய செய்தி. தான் சென்ற ஒரு இல்லத்தில் வசிக்கும் சிறுவன் தன் தந்தையிடம் மேலே பொருத்தப்பட்டிருக்கும் மின்விசிறியைக் காட்டி அது என்ன? அது ஏன் அங்கே பொருத்தப்பட்டிருக்கிறது.


அந்தக் கேள்விக்கு என்ன காரணம், அந்தக்காலகட்டத்தில் வடபகுதியில் மின்சாரமே இல்லாமல் இருந்ததால் அந்த மின்விசிறி இயங்கி அந்தச் சிறுவன் பார்த்ததேயில்லை அவனுக்கு அந்த மின்விசிறியின் இயக்கம் என்னவென்றே தெரியாது.


இதை ஏன் சொல்கிறேன் என்றால் அப்படியான ஒரு இருளடைந்த காலகட்டத்தை கடந்து, பசி, பட்டினி, பஞ்சம், வியாதி என்னும் பல நிலைகளை அம்மக்கள் அனுபவித்த போது புலம்பெயர்ந்தோர்கள் வசதியாகத்தான் வாழ்ந்தார்கள்.


ஈழத்தில் வாழும் தம் தொப்புள் கொடி உறவுகளின் மூலம் தமது கொள்கைகளைப் பரீட்சித்துப் பார்க்கத் தலைப்பட்டார்கள்.


அது மட்டுமா? தமக்கு சுபீட்சத்தை ஏற்படுத்தப் போகிறோம் என்று கூறிய இயக்கங்கள் மீதமிருந்த தமது ஒன்றிரண்டு சுதந்திரங்களையும் பறித்து ஆயுத பலத்தின் அதிகாரத்தை நிரூபித்துக் கொண்டிருந்தார்கள்.


அப்போது அனைவரும் இயக்கங்களின் விசுவாசத்தைத் தான் சுவாசித்துக் கொண்டிருந்தோம். அதற்கு நாம் சூட்டிய பெயர் ஈழத்தமிழரின் விடுதலைப் போராட்டம்.


இயக்கங்கள் தம்முள் நடந்த உட்கட்சிப் போராட்டங்களினால் உயிரிழந்த தமிழ் இளைஞர், விடுதலையின் பெயரால் மாற்று இயக்கத்தினரால் காவு கொள்ளப்பட்ட இளைஞர், யுவதிகள். நாமே தமிழரின் ஏகோபித்த பிரதிநிதிகள் என்று கூறிக் கொண்ட புலிகளால் காவு கொள்ளப்பட்ட இளம் உயிர்கள் . ஈழப்போராட்டத்தை நசுக்குகிறோம் என்று தம்மோடு பொருதிய புலிகளை எதிர்க்கிறோம் என்று சிறீலங்கா அரசு எடுத்த இராணுவ நடவடிக்கைகளினால் அழிந்த உயிர்கள்.


பழிக்குப்பழி என்று புலிகளினால் காவு கொள்ளப்பட்ட சிங்கள மக்கள். அப்பப்பா, ஒரு இனத்தின் விடுதலைக்காக நாம் கொடுத்த விலை. . . எண்ணிப்பார்க்கவே நெஞ்சம் அச்சத்தால் நடுக்குகிறது.


உங்கள் கர்ஜனை எனக்குக் கேட்கிறது. சேர,சோழ, பாண்டிய மன்னர் காலத்து வீர சகாப்தங்களை எல்லாம் உங்கள் துணைக்கு நீங்கள் இழுத்துப் போட்டுக் கொள்வது தெரிகிறது.


சரித்திரக் கதைகளைச் சான்றாக வைத்துக் கொண்டு ஒரு இனத்தின் சரித்திரத்தையே இருளடையச் செய்வதுதான் புத்திஜீவிகளின் புத்தி சாதுர்யமா?


போகட்டும், ஒர் சூரிய அஸ்தமனம் மற்றொரு விடியலுக்கு ஆரம்பமாக அமைவதில்லையா? சூரியகுமாரன் என்று போற்றப்படும் புலிகளின் தலைவனின் அஸ்தமனமும் ஒரு விடியலுக்கு அத்திவாரமிட்டதாகவே எடுத்துக் கொள்ளுங்கள்.


இப்போதாவது நாம் என்ன செய்யவேண்டும் ? நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்று புலம்பிக் கொண்டிருப்பதை விட்டு விட்டு, எஞ்சியிருக்கும் தமிழ் அமைப்புக்களை இனியாவது இயக்கங்கள், அமைப்புக்கள் என்னும் கண்ணடிக்குள் பார்க்கும் பார்வையைத் தவிர்த்து, தமிழன் என்னும் பரந்த அடிப்படையில் ஒன்றுபடச் செய்வதே இன்றைய புலம்பெயர் சமூகத்தின் கடமையாகிறது.


அன்று இயக்கமாக இருந்த போதோ அன்றி சாதாரணத் தமிழனாக இருந்த போதோ எமது இன்னல்களுக்கு உறுதுணையாகவும், ஆதரவாகவும் இருந்தவர்கள் எமது அருமைத் தமிழக உடன்பிறப்புக்களே.


அவர்கள் எந்தக் கட்சி என்பது பெரிதல்ல அவர்கள் அனைவரும் தமிழர் என்ற ரீதியில் ஈழத்தமிழர்களுக்கு அனுசரணையாகவும், ஆறுதலாகவும் இருந்தார்கள் என்பதுவே உண்மை.


ஈழத்தமிழர்கள் நாம் அனைவரும் ஓரணியில் திரண்டு தமிழகத்தில் இருக்கும் மாநில சுயாட்சியை முன்மாதிரியாகக் கொண்ட அரசியலமைப்பு ஒன்று ஈழத்தமிழருக்கு அளிக்கப்பட்வேண்டும் என்று கோருவதே தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் எமக்கு ஆதரவாக குரல் கொடுப்பதற்கு நாமளிக்கும் பலமாக இருக்கும்..


அதை விடுத்து தமிழக முதல்வர் கலைஞர் கருணாதிக்கு எதிராகவோ, அன்றி எதிர்க்கட்சித் தலைவர் செல்வி ஜெயலலிதாவிற்கு எதிராகவோ, அன்றி திரைப்பட உலகினர்க்கு எதிராகவோ, அன்றி இந்திய அரசிற்கு எதிராகவோ அன்றி உண்மையை உரக்கக் கூவிடும் நண்பர் சோவிற்கு எதிராகவோ கூக்குரலிடுவதனால் பலனேதும் இல்லை.


தமிழகத்தில் தங்கள் அரசியல் பயணத்தை நடத்த ஈழத்தமிழர்களை ஓடங்களாகப் பயன்படுத்தும் ஒரு சில தலைவர்களின் வலைக்குள் நாம் விழுந்து விடக்கூடாது.


திரைப்படங்களில் நடிப்பது, விழாக்களில் பங்கு கொள்வது என்பது தமிழக சினிமாத்துறையினரின் அன்றாடப்பணிகள் எமது நிறைவேறாக் கனவுகளுக்கு அவர்களின் மீது வசைபாடுவதை, காழ்ப்புணர்ச்சியைக் காட்டிக்கொள்வதை ஈழத்தமிழர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.


ஈழத்தில் நடைபெறும் அனைத்து விழாக்களையும் பகிஷ்கரியுங்கள் என்னும் ஓலம் சிங்கள மக்களை மட்டும் பாதிக்கவில்லை கால்நூற்றாண்டுக்கு மேலாக இயல்பு வாழ்க்கையை இழந்து தவித்த எமது இன்னுயிர் ஈழத்தமிழ் உறவுகளின் கொஞ்சநேர நிம்மதியான இடைவேளையையும் தட்டிப்பறிக்கும் செயல் என்பதை மறந்து விடாதீர்கள்.


ஈழத்தில் எதுவிதமான கலைவிழாக்களும் நடைபெறக்கூடாது என்று கோஷமிடும் அதேவேளை புலம்பெயர் நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்கள் கலைவிழாக்களையும், திரைப்படங்களையும் வேறு நிகழ்வுகளையும் கண்டுகளிக்கத் தவறுவதில்லை.


என் அன்பான உறவுகளே சுய அறிவுக்கு கொஞ்சம் வேலை கொடுங்கள்.


செம்மொழி மாநாடு கோவையில் நடைபெறுவதால் ஈழத்தமிழரின் அரசியல் தீர்வு எந்த வகையில் பாதிக்கப்படுகிறது ?


ஈழத்தமிழருக்குத் தீர்வு வரும்வரை தமிழத் தமிழ் என்றே அழைக்கக்கூடாது என்றும் கோஷம் போடலாமே? அதுவும் எமக்கு இனிக்கத்தானே செய்கிறது.


ஈழத்தமிழர் என்றால் என்ன? மலேசியத் தமிழர் என்றால் என்ன, கனடாத் தமிழர் என்றால் என்ன. தமிழன்னையின் தலையில் மகுடம் சூட்டப்படுவதும் அதைச் சூட்டுவதற்கான பணிகளுக்காக கலைஞர் போற்றப்படுவதையும் உலகத்தமிழர்கள் அனைவரும் வரவேற்க வேண்டும்.


ஏனெனில் இது அரசியலுக்கு அப்பாற்பட்டது. தயவுசெய்து தமிழர்களின் அரசியலை நடத்துங்கள். தமிழை அரசியலாக்காதீர்கள்.


அதேபோல ஈழத்தமிழருக்காக பதினெட்டு அம்சக் கோரிக்கையை முன்வைக்கும் செல்வி ஜெயலலிதாவின் முயற்சிகளையும் பாராட்டத் தயங்கக்கூடாது.


தொடர்ந்து கலஞர் கருணாநிதியையும், இந்திய அரசையும் வசைபாடுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். இப்போது ஈழத்தமிழருக்குக் கிடைக்ககூடிய அனைத்து ஆதரவுகளையும் ஒன்று திரட்டுவது ஒன்றே எமது குறிக்கொளாக இருக்க வேண்டும்.


ஒன்றுபட்ட இலங்கைக்குள் மாநில சுயாட்சி அதிகாரம் கொண்ட இனமாக நாம் வாழும் நிலையைத் தோற்றுவிக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும்.


டக்லஸ் தேவானந்தாவை குற்றவாளி எனப்புனைந்திட முயற்சிப்போரே ! இயக்கங்களைச் சார்ந்தவர்களில் குற்றம் புரியாதோர் எத்தனை பேர் என்று கணக்கிட்டு விட்டுப் பின்னர் கோஷமிடுங்கள்.


பேச்சுவார்த்தை என்ற பெயரில் எத்த்னை தடவைகள் புலிகளின் தலைவர்களும், இராணுவத் தளபதிகளும் உலகை வலம் வந்தார்களே ! அப்போது எங்கே போயிற்று உங்கள் கோஷம் ?


இன்றும் கூட உண்மைகளை நெஞ்சுக்குள் அமுக்கி வைத்துக் கொண்டு மெளனமாய் அழும் எத்தனையோ பேர் வாழ்ந்து கொண்டுதானிருக்கிறார்கள். அவர்களின் இதயத்தின் ஓலங்களை வாய்விட்டுக் கதற முடியாத அளவிற்கு தமிழீழ அரசியலின் அதிகாரவெறி கண்களை மறைத்து நிற்கிறது.


உள்ளதைச் சொன்ன எனக்குக் கிடைக்கப் போகும் வசைகளை அறியாதவன் அல்ல, இருந்தாலும் உண்மை நெஞ்ச உறுத்தும் ஒரு ஈழத்தமிழன் என்பதால் கொஞ்சம் கதறுகிறேன்.


ஊர்க்குருவி
மேலும் இங்கே தொடர்க...

அடுத்த மாதம் வடக்கில் குறைந்த விலையில் எரிபொருள் : அமைச்சர் தகவல்






எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் வடக்கு மக்கள் தற்போதைய விலையிலும் பார்க்க குறைந்த விலையில் எரிபொருட்களைப் பெற்றுக் கொள்ள முடியுமென பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பெற்றோலியக் கூட்டுத்தபான அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

வடக்கில் தற்போது சாதாரண விலையிலும் பார்க்க கூடுதலான விலையிலேயே எரிபொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதற்கு போக்குவரத்து செலவீனங்களே காரணமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், வட பகுதிக்கு எரிபொருட்களை எடுத்துச் செல்ல, ரயில் சேவையைப் பயன்படுத்துமாறு பெற்றோலியக் கூட்டுத்தபான அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்தின் ஆலோசனைப்படி அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் வடக்கில் பெற்றோல் லீற்றர் ஒன்றில் விலை 1 ரூபா 50 சதத்தினாலும் டீசல் லீற்றர் ஒன்றின் விலை ஒரு ரூபாவினாலும், மண்ணெண்ணெய் 50 சதத்தினாலும் விலை குறைக்கப்படவுள்ளன.




மேலும் இங்கே தொடர்க...

முல்லைத்தீவு மக்கள் திங்களன்று மீள்குடியேற்றம்

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வவுனியா மாவட்டத்தில் உறவினர்களது வீடுகளில் தங்கியிருக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தொகுதி மக்கள் மீள்குடியமர்த்தப்படவுள்ளனர்.

இவர்கள் திங்களன்று அவர்களது சொந்த இடங்களில் மீளகுடியமர்த்தப்படவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஸ்ரீரங்கன் தெரிவித்தார்.

உறவினர்களது வீடுகளில் வாழும் 195 குடும்பங்களைச் சேர்ந்த 556 பேரே இவ்வாறு மீள்குயமர்த்தப்படவுள்ளனர்.

முல்லைத்தீவு கரைத்துறை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 19 கிராம சேவகர் பிரிவுகளில் இவர்கள் மீள்குடியமர்த்தப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்
மேலும் இங்கே தொடர்க...

இன்று சர்வதேச சித்திரவதைக்காளானோரின் தினம்

சித்திரவதைக்கு ஆளானோரின் சர்வதேச ஆதரவு தினம் இன்று உலகம் முழுவதும் அனுஷ்டிக்கப்படுகிறது.

உலகலாவிய ரீதியில் உள, உடல் ரீதியாக பல்வேறு சித்திரவதைக்கு ஆளானோருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வருடாந்தம் ஜூன் 26ஆம் திகதி இன்றைய நினைவு தினம் பிரகடனப்படுத்தப்பட்டது.

1987ஆம் ஆண்டு ஜூன் 26ஆம் திகதி, ஐக்கிய நாடுகள் சபை சித்திரவதைக்கு எதிராக தீர்மானம் எடுத்திருந்தது. அதனை நினைவுகூரும் பொருட்டே இன்றைய தினம் பிரகடனப்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மனித சமூகத்தின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படுவதன் மூலமே உலகில் விடுதலை, நீதி மற்றும் அமைதி ஏற்பட வாய்ப்புண்டு என்பதை ஐ.நாவின் இந்தத் தீர்மானம் எடுத்துக் காட்டுகின்றது.

அதேவேளை, சித்திரவதைக்கு உள்ளதக்கப்பட்டவர்கள் உலகம் முழுவதிலுமுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது
மேலும் இங்கே தொடர்க...

பான் கீ மூனினால் உருவாக்கப்பட்டுள்ள நிபுணர்கள் குழுவிற்கு தாம் ஆதரவளிப்போம்- நோர்வே

ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனினால் உருவாக்கப்பட்டுள்ள நிபுணர்கள் குழுவிற்கு தாம் ஆதரவளிப்பதாக நோர்வேயின் சுற்றாடல் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

ஒஸ்லோவிற்கு விஜயம் செய்துள்ள இலங்கை ஊடகவியலாளர் மத்தியில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய எரிக்,

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் சரணடைவதற்கு விருப்பம் தெரிவித்திருந்ததாகவும், குமரன் பத்மநாதன் மற்றும் புலித்தேவன் போன்ற முக்கிய தலைவர்களுடன் நோர்வே தொடர்புகளைப் பேணி வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளைக் கொடிகளை அசைப்பதன் மூலம் மட்டுமே சரணடைய முடியும் என அறிவிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சரணடைவது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் யார் யார் பங்கு பற்றினார்கள் என்பது தொடர்பில் அவர் தகவல்களை எதனையும் வெளியிடவில்லை.

கடந்த 2009ம் ஆண்டு மே மாதம் 17ம் திகதி வரையிலும் சரணடைவது குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீண்ட கால யுத்தத்தை எதிர்நோக்கிய இலங்கையில் அரசியல் ரீதியான தீர்வுத் திட்டத்தின் மூலம் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

மீண்டும் வன்முறைகள் வெடிப்பதற்கு இடமளிக்கப்படக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நோர்வே அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பல்வேறு வழிகளில் ஒத்துழைப்பு வழங்கி வந்ததாக முன்னாள் விடுதலைப் புலி கட்டளைத் தளபதியும், பிரதி அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக எரிக் சொல்ஹெய்மிற்கும் புலிகளின் சிரேஸ்ட தலைவர்களுக்கும் நெருங்கிய தொடர்பு காணப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளர்ர்.

எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை சொல்ஹெய்ம் திட்ட வட்டமாக மறுத்துள்ளார். நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதன் மூலம் பொருளாதாரத்தினை அபிவிருத்தி செய்ய முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

தமிழ்க் கட்சிகளிடையே ஐக்கியம்


தமிழ் மக்களின் அரசியலுரிமை தொடர்பாகப் பின் பற்றப்பட வேண்டிய அணுகுமுறை பற்றியும் இம் மக்கள் அன்றாட வாழ்க்கையில் முகங்கொடுக் கும் பிரச்சினைகளுக்கான தீர்வு பற்றியும் பொது உட ன்பாடு காணும் நோக்கில் தமிழ்க் கட்சிகளுக்கிடையி லான ஒரு சந்திப்பு அண்மையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வாசஸ்தலத்தில் நடைபெற்றுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவிர்ந்த மற்றைய தமி ழ்க் கட்சிகள் எல்லாம் இதில் பங்குபற்றின.

தமிழ் மக்கள் ஐக்கியப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டு வருகின்றபோதி லும் கட்சிகளுக்கிடையே ஐக்கியம் ஏற்படவில்லை. ஐக்கியத்தை மேடையில் வலியுறுத்திய அரசியல் கட் சிகளே நடைமுறையில் ஐக்கியத்துக்கு முரணாகச் செய ற்பட்டிருக்கின்றன. மறுபுறத்தில், சரியான கொள்கை நிலைப்பாடு இல்லாமல் ஏற்படுத்தப்பட்ட ஐக்கியம் அழிவுகளுக்கே வழிவகுத்துள்ளது. தமிழர் விடுதலை கூட்டணியை உதாரணமாகக் கூறலாம். நடைமுறைச் சாத்தியமற்றது எனத் தெரிந்துகொண்டும் தனிநாட்டுத் தீர்மானத்தை நிறைவேற்றியதன் மூலம் ஆயுதக் குழு க்களின் வளர்ச்சிக்கும் அதன் விளைவாகத் தமிழ் மக் களின் அரசியலுரிமைப் போராட்டம் பின்னடைவு காண் பதற்கும் கூட்டணி வழிவகுத்துள்ளது.

கடந்த கால அனுபவங்கள் எல்லா அரசியல் கட்சிகளுக் கும் படிப்பினைகளே. இப்போது ஐக்கியமாகச் செயற் பட முன்வந்திருக்கும் கட்சிகளும் அமைப்புகளும் கடந்த காலங்களில் இடம்பெற்ற தவறுகளை இனங்க ண்டு அவ்வாறான தவறுகள் மீண்டும் ஏற்படாதிருக் கும் வகையில் செயற்படக் கடமைப்பட்டுள்ளன. நடை முறைச் சாத்தியமற்ற கோரிக்கைகளை வலியுறுத்திய தும் உண்மையான நண்பர்களுடன் இணைந்து செயற் படாமையும் கடந்த காலத்தின் பிரதான தவறுகள் என லாம்.

சமஷ்டிக்குக் கிட்டுதலான அரசியல் தீர்வை அடையும் கட்டத்துக்கு வந்த நாங்கள் இன்று வெகுவாகப் பின் னடைவு கண்டிருக்கிறோம். இதற்கான காரணம் பற்றி யும் தவறு விட்டவர்கள் யார் என்பது பற்றியும் பல சந்தர்ப்பங்களில் பேசப்பட்டு விட்டது. இப்போது அந்த விசாரணைகளில் காலத்தைக் கடத்தாமல் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிச் சிந்திப்பதே முக்கியம்.

ஐக்கிய இலங்கையில் அரசியல் தீர்வைத் தவிர வேறு வழி இல்லை என்பது முடிந்த முடிவாகிவிட்டது. அர சியல் தீர்வு அரசியலமைப்புத் திருத்தத்துடன் சம்பந்த ப்பட்டதென்பதால் பெரும்பான்மையான சிங்கள மக்க ளின் ஆதரவும் அவசியமாகின்றது. தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக் கோரிக்கை சிங்கள மக்களால் சந்தே கக் கண்கொண்டு பார்க்கப்படும் நிலை இப்போது இரு ப்பதை நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டும். இந்த நிலையில் கிடைக்கக்கூடிய தீர்வை ஏற்றுக்கொண்டு படிப்படியாகக் கூடுதலான அதிகாரங்களைப் பெறுவ தன் மூலம் முழுமையான அரசியல் தீர்வை அடை யும் அணுகுமுறையே பொருத்தமானது. சிங்கள மக் களிடம் தோன்றியுள்ள தப்பபிப்பிராயத்தை நீக்கும் செயற்பாடும் சமகாலத்தில் மேற்கொள்ளப்படல் வேண் டும். இனப் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் கை கொடுக்கக் கூடிய நண்பர்களை இனங்கண்டு அவர்க ளுடன் இணைந்து செயற்படும் பட்சத்தில் இது சிரம மான பணியாகாது.

தமிழ்க் கட்சிகளுக்கும் அமைப்புகளுக்கும் மத்தியிலான ஐக்கியத்தின் உண்மையான பலனை அடைவதற்கு இதைத் தவிர வேறு வழி இல்லை
மேலும் இங்கே தொடர்க...

குடாநாட்டு மீனவர்களுக்கு இலங்கை வங்கியில் இலகு கடன் வழங்க அரசு தீர்மானம்



யாழ். குடா நாட்டின் கடற்றொழில் துறையை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் குடாநாட்டு மீனவர்களுக்கு இலங்கை வங்கியினூடாக 550 இலட்சம் ரூபாவை கடனாக வழங்க அரசாங்கம் தீர்மானித்து ள்ளதாக கடற்றொழில் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார். இதன் முதற்கட்டமாக 200 கடற்றொழிலாளர்களுக்கு 200 லட்சம் ரூபாவையும் இலங்கை வங்கியினூடாக வழங்கினார்.

யாழ். கலாசார மண்டபத்தில் நடைபெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்ட போதே அமைச்சர் ராஜித மேற்படி கடனுதவியை வழங்கினார்.

முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி பிரதேசங்களைச் சேர்ந்த கடற்றொழிலாளர்களு க்கும் இக்கடனுதவிகள் வழங்கப்பட்டன. இரண்டு வருடத்திற்குள் திருப்பிச் செலுத்தும் விதத்தில் 10 வீத சலுகை வட்டியில் இக்கடன் தொகைகள் வழங்கப்பட்டன. கடன் வழங்குவதற்காக 550 இலட்சம் ரூபா இலங்கை வங்கி ஒதுக்கியுள்ளதுடன் ஏனைய கடற்றொழில்க ளுக்கு எதிர்வரும் காலங்களில் கடனுதவிகள் வழங்கப்படும். யுத்தம் காரணமாக சிதைந்த நிலையில் காணப்படும் சீநோர் வள்ளங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை மீண்டும் இயங்க வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவித்தார். சிறிய மற்றும் நடுத்தர ஆழ்கடல் வள்ளங்கள் தயாரிக்கவும் இதனூடாக வட பகுதி மீன்பிடித்துறையை ஊக்குவிக்கவும் வழிவகைகள் செய்யப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே, அமைச்சின் செயலாளர் கலாநிதி தமிதா த சொய்சா ஆகியோரும் கலந்து கொண்டனர்
மேலும் இங்கே தொடர்க...

218 குடும்பங்கள் முல்லைத்தீவில் மீள்குடியேற்றம்



இடம்பெயர்ந்து புத்தளத்தில் தங்கியுள்ள முஸ்லிம்கள் உட்பட 218 குடும்பங்களைச் சேர்ந்த 642 பேர் அடுத்த வாரம் முல்லைத்தீ வில் மீள்குடியேற்றப்படவுள்ளதாக முல்லைத்தீவு அரச அதிபர் அலுவலகம் கூறியுள்ளது.

இதன்படி யுத்த சூழ்நிலை காரணமாக முல்லைத்தீவில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்தில் தமது உறவினர் வீடுகளில் தங்கியுள்ள 195 குடும்பங்களைச் சேர்ந்த 550 பேர் எதிர்வரும் திங்கட்கிழமை கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவிலுள்ள 19 கிராம சேவகர் பிரிவுகளில் மீள்குடியேற்றப் படவுள்ளதாக மாவட்ட திட்டப் பணிப் பாளர் எஸ். ஸ்ரீரங்கன் கூறினார். மேற்படி 19 கிராம சேவகர் பிரிவுகளிலும் ஏற்கனவே பலர் மீள்குடியேற்றப்பட் டுள்ளதோடு எஞ்சியவர்களே திங்கட்கிழமை மீள்குடி யேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தவிர 1990 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து புத்தளத்தில் தங்கியுள்ள 23 குடும்பங்களைச் சேர்ந்த 92 பேர் எதிர்வரும் 30 ஆம் திகதி கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவில் மீள்குடியேற்ற உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். முதற் தடவையாக இடம்பெயர்ந்த கூடுதலான மக்கள் புத்தளத்தில் இருந்து மீள்குடியேற் றப்படுவதாகவும் அறிவிக்கப்படுகிறது
மேலும் இங்கே தொடர்க...

நிறைகுறைவான பாண், அதிகவிலைக்கு பால்மா விற்பனை செய்த 60 பேர் கைது



பல்வேறு பகுதிகளில் நடத்திய தேடுதல்களின் போது பால்மாவை கூடுதல் விலைக்கு விற்ற 20 பேரை யும் நிறைகுறைவான பாண் விற் பனை செய்த 40 பேரையும் கைது செய்ததாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை கூறியது.

கடந்த வாரம் முதல் பால்மா விலைகள் அதிகரிக்கப்பட்டன.

ஆனால் பழைய விலைக்கு உள்ள பால்மா பக்கெட்டுகளை அதே விலைக்கு விற்க வேண்டும் என வர்த்தக அமைச்சு அறிவித்திருந்தது.

ஆனால் பழைய விலை குறிப் பிடப்பட்டுள்ள பால்மா பக்கெட்டு களை புதிய விலைக்கு விற்ற 20 வியாபாரிகளே இவ்வாறு பிடி பட்டதாக அதிகார சபை பேச்சாளர் ஒருவர் கூறினார்.

இதேவேளை நிறைகுறைவான பாண் விற்பனை செய்த 20 வியா பாரிகள் கொழும்பு மற்றும் கம்பஹா பகுதிகளில் கைது செய்யப் பட்டதாகவும் அதிகார சபை கூறியது.

இவர்கள் 350 கிராம் எடையுள்ள பானை விற்பனை செய்துள்ளது சுற்றிவளைப்பு தேடுதல்களின் போது தெரியவந்துள்ளது. விசேட சுற்றிவளைப்புக் குழுவொன்று இந்தத் தேடுதலை நடத்தியது.

தொடர்ந்து இத்தகைய தேடுத ல்கள் நடத்தப்படும் எனவும் அறி விக்கப்படுகிறது
மேலும் இங்கே தொடர்க...

அரசுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்த இணையத்தில் அபாண்ட செய்திகள்

அரசுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்த இணையத்தில் அபாண்ட செய்திகள்
லண்டனுக்கு தப்பியோடிய சூத்திரதாரி அம்பலம்; உடனடியாக கைது செய்ய ‘இன்ரபோல்’ நடவடிக்கை

அரசாங்கத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் பொய்யான தகவல்களை வெளியிட்ட ‘லங்கா நியூஸ் வெப்’ இணையத் தளத்தை இயக்கி வருபவர் இலண்டனுக்குத் தப்பிச் சென்ற சந்திமா அனில் விதானாராச்சி என்பது குற்றப் புலனாய்வுத் துறையினர் நடத்திய விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இவர் நீதிமன்றத்திற்குச் சமுகமளிக்காமை காரணமாக கொழும்பு மேல் நீதிமன்றம் இவருக்குப் பகிரங்க பிடியாணை பிறப்பித்திருக்கும் நிலையில் தமது மனைவியுடன் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இவர் இலண்டனுக்குத் தப்பிச் சென்றிருப்பது ஊர்ஜிதமாகியுள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் கோரிக்கைக்கு அமைய உடனடியாக இவரைக் கைதுசெய்ய சர்வதேச பொலிஸார் (இன்ரபோல்) நடவடிக்கை எடுத்துள்ளனர். இதன்படி சந்திமா அனில் விதானாராச்சி ஒரு தேடப்படும் நபராக இன்ரபோல் அறிவிப்புச் செய்திருக்கிறது. போலி ஆவணங்களைச் சமர்ப்பித்த குற்றச்சாட்டு இவர் மீது சுமத்தப்பட்டிருப்பதாக இன்ரபோலின் எச்சரிக்கை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘லங்கா நியூஸ் வெப்.கொம்’ என்ற பெயரில் ரகசியமான ஓர் இணையத்தைப் பதிவு செய்துள்ள அவர் மறைமுகமாக அதனை நடத்தி வந்திருக்கிறார். ஆகவே, அவரது பெயர், முகவரி, தொலைபேசி இலக்கங்கள் இணையத்தில் குறிப்பிடப்படவில்லை. ஒரு மின்னஞ்சல் முகவரி மட்டும் தரப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர் எவ்வாறு ஜனாதிபதியையும் அரசாங்கத்தின் ஏனைய உயர் உறுப்பினர்களையும் அபகீர்த்திக்கு உள்ளாகும் வகையில் செய்திகளைப் புனைந்து வெளியிட்டார் என்பது புலனாகுவதாக குற்றப் புலனாய்வுத் துறையினர் சுட்டிக்காட்டுகிறார்கள்.

லண்டனில் உள்ள வீட்டிலிருந்து இணையத்தளத்தை நடத்திய விதானாராச்சியுடன் இலங்கையிலிருந்தும் பலர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கு எதிரான இவர்களின் விபரங்களையும் திரட்டி விட்டதாகக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கூறுகிறார்கள்.

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளில் வாழும் சில ஊடகவியலாளர்களுடன் சேர்ந்து, தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம் உதவி பெறும் முயற்சியில் விதானாராச்சி ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த முயற்சிக்கு அரசுக்கு எதிரான நிலைப்பாட்டில் ஐரோப்பாவில் உள்ள சில ஊடகவியலாளர்கள் ஒத்துழைப்புகளை நல்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ங்காநியூஸ்வெப் இணையத்தளம் பிரிட்டனின் சட்ட திட்டங்களுக்கு உட்படாத வகையிலேயே நடத்தி வரப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது. இலங்கையை அபகீர்த்திக்கு உள்ளாக்க பிரித்தானிய மண்ணைப் பயன்படுத்தியமை குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு நந்திக்கடல் ஏரியில் இறந்த மனித சடலங்களை அப்புறப்படுத்தும் பணியை சீன நிறுவனமொன்றுக்கு அரசாங்கம் பொறுப்பளித்திருந்ததாகக் கடந்த வாரம் ஒரு பரபரப்புச் செய்தியை குறித்த இணையத்தளம் வெளியிட்டிருந்தது. இந்தச் செய்தியானது நேச நாடுகளுக்கும் இலங்கைக்குமிடையிலான நல்லுறவைச் சீர்குலைக்கும் நடவடிக்கையாகுமென அரசாங்கம் கருதுகின்றது.

இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சு பிரித்தானிய அரசாங்கத்திடம் முறைப்பாடு செய்துள்ளது.

விதானாராச்சி இலங்கையில் தேட ப்படும் நபர் என்ற விடயத்தை வெளி யிடாமல், அவர் பிரிட்டன் குடியு ரிமைக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...