12 அக்டோபர், 2010

தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்பிக்கள் விடுதலை


தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பனர்களான பா.அரியநேத்திரன், பி.செல்வராசா, சீ.யோகேஸ்வரன் உட்பட ஐவரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி வீ.இராமகமலன் இன்று விடுதலை செய்துள்ளார்.

மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கருகில் கடந்த ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதி வேலையற்ற பட்டதாரிகள் நடாத்திய ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்ததாகவும், போக்குவரத்திற்கு தடை ஏற்படுத்தியதாகவும், அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்டதாகவும் குற்றம் சுமத்தி காத்தான்குடி பொலிஸார் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன்,பி.செல்வராசா, சீ.யோகேஸ்வரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரட்னம், வேலையற்ற பட்டதாகீரிகள் சங்க தலைவர் ஆகியோர் மீது வழக்குதாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த வழக்கு இன்று காலை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது 5 எதிராளிகளையும் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

பொதுநலவாய நிறைவு விழாவில் இலங்கை ஜனாதிபதிக்கு கௌரவமா? : வைகோ கண்டனம்



பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளின் நிறைவு விழா நாளை மறுதினம் நடைபெறவிருக்கின்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள மத்திய அரசு இலங்கை ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்துள்ளதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது :

"71 நாடுகள் கலந்து கொள்ளும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள், தலைநகர் டில்லியில், 70,000 கோடி செலவில் நடத்தப்படுகின்றன.

விழாவைக் கோலாகலமாக ஆரம்பித்து வைக்க, இங்கிலாந்து அரசு குடும்பத்தின் பிரதிநிதியாக, இளவரசர் சார்ள்ஸ், இந்திய அரசால் அழைக்கப்பட்டு, அவரும் பங்கேற்றுத் தொடங்கி வைத்தார்.

நாளை மறுநாள் நடக்கப்போகும் இந்தப்போட்டிகளின் நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று முடித்து வைக்க, இலங்கை ஜனாதிபதிக்கு இந்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம், இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களுக்காக, வரிச்சலுகைகளை ரத்து செய்தது. அனைத்து உலக நாடுகளில் இலங்கையில் நடத்தப்பட்ட கொலைகள் பற்றிய, விழிப்புணர்வு வேகமாக ஏற்பட்டு வருகிறது. எனவே இலங்கை ஜனாதிபதியைப் பாதுகாப்பதற்காகவே, இந்த துரோகத்தில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது.

தாங்கள் விரும்பியவாறு போரை நடத்திய, இலங்கை அரசுக்கு, உதவவே, இந்திய அரசு இலங்கை ஜனாதிபதியை இந்தியாவுக்கு அழைத்து வந்து, நான்கு நாட்கள் அரசு விருந்தாளியாக ஏற்கனவே உபசரித்தது.

அதே அரசுதான் இன்று பொதுநலவாய விளையாட்டுப் போட்டியை முடித்து வைக்கின்ற கௌரவத்தை அவருக்குக் கொடுத்துள்ளது.

தமிழர்களுக்கு இலங்கை அரசு, கொடுமை செய்யவில்லை என்ற எண்ணத்தை, உலக நாடுகளிடம் ஏற்படுத்த வேண்டும் என்ப தற்காகவே, இதை இந்திய அரசு செய்கிறது.

நியூசிலாந்து நாட்டின் தொலைக்காட்சி நிருபர் ஒருவர், டில்லி மாநில முதல்வரை அவமதித்து விட்டதாகக் கூறி, இந்திய அரசு கண்டனம் தெரிவித்ததற்கு நியூசிலாந்து அரசு வருத்தம் தெரிவிக்க நேரிட்டது.

மும்பையில், பாகிஸ்தான் தீவிரவாதிகளால் இந்தியர்கள் கொல்லப் பட்டதற்கு, பாகிஸ்தானோடு போர் தொடுப்போம் என்று, அன்றைய வெளி விவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி மிரட்டல் விடுத்தார்.

தமிழக மீனவர்கள், நமது கடலிலேயே இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவதும், சுட்டுக்கொல்லப் படுவதும் அன்றாடச் சம்பவங்களாகி விட்டன.

அப்படியானால், தமிழர்கள் இந்தியக் குடிமக்களே இல்லையா? வேல் பாய்ந்த இதயத்துக்குள்ளே சூட்டுக்கோலைத் திணிப்பதுபோல, தற்போது, இலங்கை ஜனாதிபதிக்கு, பொதுநலவாய போட்டிகளை முடித்து வைக்கின்ற மரியாதையை வழங்கி உள்ளதற்கு பிரதமர் மன்மோகன்சிங் அரசும், அதனை இயக்குகின்ற தலைமையும், அந்த அரசில் அங்கம்வகிக்கும் கட்சிகளுமே பொறுப்பாளிகளாவர்."

இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் தெரிவித்திருக்கின்றார்.
மேலும் இங்கே தொடர்க...

‘ஒரு வருடத்திற்கு முன்னர் ஆயிரக்கணக்கானவர்களைப்


போலவா இந்த மக்கள் இருக்கிறார்கள்? அல்லது, பெரிய மரணப் பொறிக்குள் சிக்கித்தவித்தவர்களைப் போலவா இவர்கள் தெரிகிறார்கள்? என்று ஆச்சரியப்படுகிறார் வெளிநாடொன்றில் இருந்து வன்னிக்கு வந்திருக்கும் நண்பர் ஒருவர். அந்தளவுக்கு வன்னியில் மக்களின் வாழ்க்கை வேகமடைந்திருக்கிறது. வன்னி நிலைமைகளில் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியும் என்ற மாதிரி வளர்ச்சியும் ஏற்பட்டுக் கொண்டேபோகிறது. இந்த வளர்ச்சி அந்தச் சூழல் மாற்றங்களுக்குட்படுத்தி வருகிறது.

மக்கள் எப்போதும் பரபரப்போடு இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். தெருக்களில் சனப்புழக்கம் அதிகரித்துள்ளது. கோவில்களில் வழிபாடுகள் நடப்பதன் சாட்சியமாக ஒலிபெருக்கிகள் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன. கடைகளும், தெருக்களும், வளவுகளும் புதுப்பொலிவடையத் தொடங்கியுள்ளன. பாடசாலைகளில் இப்போது மாணவர்களின் வரவு முன்னரைவிடவும் அதிகரித்துள்ளதாக அதிபர்கள் சொல்கிறார்கள். சந்தைகளுக்கு உள்ளுர்ப்பொருட்களே வரத்தொடங்கியிருக்கின்றன.

எல்லா வயல்களும் விதைப்பதற்காக உழப்பட்டுள்ளன. மீனவர்கள் தொழிலுக்கு போகிறார்கள். இளைய பெண்களைத் தவிர இப்போது யாருக்கும் வன்னியில் வேலை இல்லை என்றில்லை. எந்த வேலைக்கும் ஆட்களைத் தேடுவதென்பது இப்போது வன்னியில் கடினமான காரியம்.

கட்டுமானப் பணிகள், வளவு வேலைகள் புதிய தொழில் முயற்சிகள், தொண்டர் அமைப்புக்களின் பணிகள், போக்குவரத்துச் சேவைகள், கல்வி முற்சிகள், தையல், வெல்டிங் என்று பல வேலை வாய்ப்புக்கள் வன்னியில் உருவாகியிருக்கின்றன.

ஏல்லாவற்றையும் புதிதாகக் கட்டவேண்டுமல்லவா! ஏல்லாவற்றையும்! தொடக்கத்திலிருந்தே ஒவ்வொன்றையும் ஆரம்பிக்கவேண்டியிருப்பதால் ஏராளமான வேலைகள், பணிகள், பகீரத முயற்சிகள் என உருவாகியிருக்கின்றன.

மக்கள் ஓடிக் கொண்டிருக்கிறார்கள் இழந்தவைகளைப் பெறுவதற்காக.. தேவையானவற்றைப் புதிதாக உருவாக்குவதற்காக… இழந்த எல்லாவற்றையும் பெறமுடியாத போதும் மிஞ்சியிருக்கும் வாழ்க்கையை வாழவேண்டுமே! அதற்காக… இப்படி அவர்கள் எல்லாவற்றுக்காகவும் ஓடுகிறார்கள். வீட்டைக் கட்டுவதற்காக, வேலிகளை அடைப்பதற்காக, புதிதாக ஒரு தொழிலைத் தொடங்குவதற்காக, அல்லது கிடைத்த தொழிலை வடிவாகச் செய்ய வேண்டும் என்பதற்காக, பிள்ளைகளைப் படிப்பிப்பதற்காக என்று அவர்கள் ஓடிக்கொண்டேயிருக்கிறார்கள்.

இந்த ஓட்டம் அவர்கள் முன்னர் அகதிகளாக ஓடிய ஓட்டம் அல்ல. இது அகதிகளாக ஓடிய ஓட்டம் அல்ல இது அகதி நிலையிலிருந்து மீள்வதற்கான ஓட்டம். மீண்டும் வாழ்வைக் கட்டியெழுப்புவதற்கான ஓட்டம் புதிதாக வாழ வேண்டும் என்ற வேட்கை கொண்ட ஓட்டம்.

இதுநாள் வரையிலும் ஓடியோடிக் களைத்தவர்கள். பெரும் பாரங்களைச் சுமந்தவர்கள். நெருக்கடி நிலைகளிலேயே வாழ்ந்தவர்கள், போரினால் சுற்றி வளைக்கப்பட்டிருந்தவர்கள். இப்போது புதிதாக வாழத் துடிக்கிறார்கள். அதற்காக ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்களைப் பார்க்கும்போது மனதில் துக்கம் கவிகிறது. ஓவ்வொரு குடும்பத்திலும் ஏதோ ஒரு வகையிலான இழப்புக்கள் இருக்கும் போதும் அவற்றையும் தாங்கிக் கொண்டு ஓடுகிறார்கள். தங்களுக்கு முன்னேயிருக்கும் சவால்களை வெல்வதற்காக… அந்தச் சவால்களை வென்று வாழவேண்டும் என்பதற்காக ஓடுகிறார்கள். இவ்வாறு வன்னிச் சூழலில் ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. என்பது உண்மைதான். ஆனால் அது எந்த அளவுக்கு என்பதும் கேள்விக்குரியது. அதாவது என்னதான் முயன்றாலும் இந்த மக்களால் ஒரு எல்லைக்கு மேலே நகரமுடியவில்லை.

குறிப்பாக பிள்ளைகளைப் படிப்பிக்க வேண்டும் என்றால் பாடசாலையில் அடிப்படை வசதிகளே இல்லாத நிலை, புதிதாக தொழில்களைச் செய்வதற்கு பலருக்கும் மின்சாரமில்லாத நிலை, வீடுகள் அமைக்கும் நடவடிக்கைகள் நடந்து கொண்டிருந்தாலும் எண்பது வீதமானவர்கள் எதிர்வரும் மாரி மழைக்கு அந்தரிக்கத்தான் போகிறார்கள்.

இந்த மாதிரிப் பிரச்சினைகள் மக்களைத் தொடர்ந்தும் வாட்டுகின்றன. இன்னும் இவர்களுடைய பாரச் சிலுவைகளும் துயரச் சிலுவைகளும் அகன்று விடவில்லை. இன்னும் இவர்களுடைய நெருக்கடிகள் நீங்கிவிடவில்லை. அவை ஏதோ வகைகளில் தொடர்ந்துகொண்டேயிருக்கின்றன.

இதற்குள் நிர்வாக ரீதியான இழுபறிகள், நடவடிக்கைத் தாமதங்கள் என்பவற்றாலும் அதிகாரிகளின் அசமந்தப் போக்குகளாலும் பொருத்தமற்ற நடவடிக்கைகளாலும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புஙீறப்பு – இறப்பு பதிவுகள், வங்கிகளின் கடன் நடவடிக்கைகள், காணி வழங்கல், அல்லது காணிகளுக்கான உறுதிப் பத்திரம் வழங்குதல், கட்டுமானப்பணிகளுக்கான மூலப் பொருட்களை பெறுவதில் இருக்கும் ஒழுங்கீனங்கள் போன்றவை மக்களை மேலும் அழைக்கழிக்கின்றன.

இதைப்போல, தடுப்பு முகாம்களிலிருந்து இன்னும் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் விடுவிக்கப்படாமை பல குடும்பங்களின் பொருளாதார வளர்ச்சியிலும் வாழ்வைக் கட்டியெழுப்பும் முயற்சியிலும் தடைகளை ஏற்படுத்தியிருக்கின்றன.

ஆனாலும் வன்னியில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் அடுத்த ஓரிரண்டு ஆண்டுகளில் பெரும் வளர்ச்சியைக் காட்டக்கூடியனவாகவே இருக்கின்றன.. கடந்த ஜனவரியில் இருந்ததற்கும் இப்பொழுது இருக்கும் நிலைமைக்கும் இடையில் நிறைய மாற்றங்களும் நிறைய வளர்ச்சிகளும் ஏற்பட்டுள்ளன.

இதுவொரு சந்தோசம் தரக்கூடிய நிலைமைதான். போரின் காயங்களை ஆற்றுவதற்கு இந்த நிலை மாற்றம் அவசியம். இதையே உளநல மருத்துவர்களும் வலியுறுத்துகிறார்கள். மக்கள் புதிய வாழ்க்கைக்குள் நுழைந்தால்தான் அவர்களுடைய மன வடுக்களை நீக்க முடியும். அவர்கள் தங்களுடைய வாழ்வில் கண்டு சந்தித்த ஆழமான மனக்காயங்களை ஆற்றுவதற்கு அவர்களுக்குப் புதிய வாழ்க்கை அவசியம் என்று இந்த உளநல மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

தவிர பொதுவாகவே மக்களின் இயல்பென்பது துயரங்களைக் கடப்பதற்கு முயற்சிப்பதுதான் எந்த மனிதரும் வாழவே அவாவுறுகின்றனர். துக்கத்தைக் கொண்டாடுவதையும் விட ஒரு கணநேர மகிழ்ச்சியை அனுபவிக்கவே ஒவ்வொரு மனித மனமும் துடிக்கிறது.

மகிழ்ச்சியைப் பெறுவதற்காகவே மனிதர்கள் ஓடிக்கொண்டும் உழைத்துக் கொண்டும் இருக்கிறார்கள். படிப்பதாக இருக்கட்டும், தொழில் செய்வது, சம்பாதிப்பது, வீட்டைக் கட்டுவது பொருட்களை வாங்குவது எனச் சகலதும் வாழ்வதற்காகவே அதிலும் மகிழ்ச்சியாக வாழ்வதற்காகவே

எவரும் துக்கத்தை விரும்பவில்லை. எவரும் வீணே செத்து மடியவும் விரும்ப வில்லை. எவரும் அவலத்தை ஏற்கத்தயாராகவும் இல்லை. எல்லோரும் அவலங்களைக் கடக்கவே விரும்புகின்றனர். தங்களுடைய கடந்த காலத்தின் துயர வெளிகளிலிருந்து மீண்டு விடவே அவர்கள் விரும்புகின்றனர். அந்த நெருப்புக் காலங்களின் அவலங்களை விட்டு வெளியேறுவதற்காகவே அவர்கள் துடிக்கிறார்கள்.

அதற்காகவே அவர்கள் எந்த இடர்களுக்குள்ளாலும் தங்களின் வாழ்வைத்துளிர்க்க வைக்க முயல்கின்றனர். கல்லின் இடுக்குகளுக்குள்ளிருந்தும் வேர் விட முயலும் ஆலமரத்தைப்போல, மாபெரும் நெருக்கடிகளுக்குள்ளிருந்தும் அவர்கள் தங்களின் வாழ்வின் வேரைப் பாய்ச்ச முயல்கிறார்கள்.

இப்படிச் சொல்வதன் மூலம் வன்னியில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் ஏதோ இயல்புநிலை வந்து விட்டதாகவும் மக்களுக்கு எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்து விட்டதாகவும் யாருமே கருதவேண்டியதில்லை. இந்த மாவட்டங்களில் ஏராளமான பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவேண்டியுள்ளன.

மக்களின் பெரும்பாலான பிரச்சினைகள் இன்னும் அப்படியேதானிருக்கின்றன. ஆனால் நிலைமைகளில் முன்னேற்றமும் ஒரு குறிப்பிட்டளவுக்கான வளர்ச்சியும் ஏற்பட்டுள்ளன. இந்த வளர்ச்சியையும் மாற்றங்களையும் இந்த மக்களே சிறுகச் சிறுக ஏற்படுத்தி வருகிறார்கள். எறும்புகளைப் போல, சின்னஞ்சின்னனாக ஒவ்வொன்றையும் மிகக் கடினப்பட்டு இவர்கள் உருவாக்கியும் கட்டியெழுப்பியும் சேமித்தும் வருகிறார்கள்.

இதைத்தான் இப்போது பலரும் புரிந்து கொள்ள வேண்டும். மிகக் கொடிய போரிலிருந்து தப்பிய மக்களை உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்கள் ஆறுதற்படுத்தவில்லை. என்பது மிகக் கசப்பான உண்மையாகும். அதாவது இந்த மக்களுக்காக அனுதாபப் பட்டிருக்கிறார்கள். இந்த மக்கள் அகதி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டபோது அதற்கெதிராக குரல் கொடுத்திருக்கிறார்கள். மீள் குடியேற்றத்தின் போதாமைகளைப் பற்றி கண்டனந் தெரிவித்திருக்கிறார்கள்.

ஆனால் இந்த காயங்கள் நிறைந்த மனிதர்களுக்கு உதவி அவர்களை ஆற்றுப்படுத்தி, அவர்களுடைய வாழ்வை மீளக் கட்டியெழுப்புவதில் போதிய பங்களிப்பை உலகத் தமிழர்கள் செய்யத்தவறி விட்டனர். இது கசப்பான ஒரு நிலைமையாகும். அதிலும் புலம் பெயர் தமிழர்கள் இதிலிருந்து விலகி நிற்பது வேதனைக்குரியதே.

ஒரு குறிப்பிட்ட வீதத்தினர் (ஆனால் இந்த எண்ணிக்கை குறைவானது) தாங்களாகவே முயற்சித்துச் சில வழிகளைக் கண்டு பிடித்து உதவி வருகிறார்கள். இந்த உதவியும் அதன் வீச்சும் மிகவும் மெல்லியதே. மற்றும்படி ஏனையோர் எல்லாம் அரசாங்கம் உதவ அனுமதிக்கவில்லை என்ற ஒற்றைச் சொல்லில் பழியைப் போட்டுவிட்டு ஒதுங்கியிருக்கின்றனர். அல்லது தாங்கள் உதவினால் அந்த உதவியில் அரசாங்கம் அரசியல் ஆதாயத்தைப் பெற்றுவிடும் என்ற காரணத்தைக் கூறுகின்றனர்.

பாதிக்கப்பட்டிருப்பவர்கள் தமிழர்கள். அவர்கள் பாதிப்புக்களைச் சந்தித்தது விடுதலைப் போராட்டத்தின் பேரால், சந்தித்த பாதிப்போ வார்;த்தைகளில் அளவிடவும் விளக்கவும் முடியாத அளவுக்கானது. இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமை இருந்தும் இதைத் தீர்க்க முயலாது. காரணங்களை மட்டும் சொல்லிக் கொண்டிருப்பது மாபெரும் அரசியற் பலவீனமன்றி வேறென்ன? இது ஒரு வகையில் குற்றமும் கூட உதவக்கூடிய மக்களைத் திசை திருப்பும் தவறான செயல்.

சொந்த மக்களுக்கு உதவக்கூடிய ஒரு வலுவான சர்வதேச நியமனங்களோடு தமிழர்கள் கொண்டிருக்கவில்லை. என்பது எவ்வளவு கசப்பான உண்மை? அதைப்போல அரசாங்கத்தைக் கடந்தே அரசாங்கத்தைப் பயன்படுத்தியோ பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முடியவில்லை என்பது தமிழர்களின் சாதுரியக் குறைபாடன்றி வேறென்ன? உண்மையில் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்கு உதவக்கூடிய மனப்பாங்கோடும் பொருளாதார அறிவியல் வளங்களோடும் ஈழத்தமிழர்களே உலகெங்கும் உள்ளனர். ஆனால், அவர்களை அவர்களுடைய மனங்களும் அவர்களை வழிப்படுத்தும் அமைப்புகளுமே தடுத்தாள்கின்றன.

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பாதிப்படைந்த நிலையில் மிகச் சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அல்லது அவர்கள் தாங்களாகவே கடினங்களின் மத்தியில் தங்களைத் மீளத் தூக்கி நிறுத்த வேண்டியுள்ளது. அப்படித்தான் அவர்கள் தங்களைத் தாங்களாகவே நிறுத்திக்கொண்டிருக்கிறார்கள். உதவக்கூடியவர்களோ ஆயிரமாயிரம் சாட்டுகளையும் காரணங்களையும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலை நிச்சயமாக புலம் பெயர்ந்த மக்களுக்கும் தாயகத்தில் இருக்கும் மக்களுக்கும் இடையே பெரும் இடைவெளியை ஏற்படுத்தும். முன்னர் புலம் பெயர் மக்களின் பங்களிப்புகள் விடுதலைப்புலிகளுக்கு கணிசமான அளவுக்குக் கிடைத்தன அதனால் அவர்கள் புலிகளிடத்தில் கணிசனமான அளவுக்குச் செல்வாக்கைச் செலுத்தினர். போரின் இறுதிவரையில் இந்தச் செல்வாக்கு இருந்தது.

ஆனால் இப்போது அந்த நிலை மாறியுள்ளது. புலம் பெயர்ந்தோரின் அரசியல் மற்றும் உதவிப் பணிகளின் போக்கு மாறித் திசைதிரும்பியுள்ளது. அது நடைமுறையில் இடைவெளிகளை அதிகரிப்பதாகவே அமைந்து செல்கிறது.

அதனால் போதிய உதவிகளும் ஆதரவும் இல்லாத நிலையில் தங்களின் வாழ்வைத் தாங்களாகவே இந்த வன்னி எறும்பு – மனிதர்கள் கண்டடைந்தும் கட்டியெழுப்பியும் வருகின்றனர். அந்தப் பரபரப்பே இப்போதைய வன்னி – எறும்பு மனிதர்கள் எல்லோருடைய கால்களுக்குள்ளும் நசிபடுகிறார்கள். நசிபட்டுத்தான் ஆகவும் வேணும் படையினர், அரசாங்கம், அரசாங்க அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், சிங்கள, முஸ்லிம் வியாபாரிகள், தமிழ் அரசியல்வாதிகள் எனப் பலருடைய கால்களுக்குள்ளும் நசிபட்டே எழுகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

ஆயிரக்கணக்கான முன்னாள் போராளிகளின் உயிருடன் விளையாடாதீர்கள்!





ஆயிரக்கணக்கான முன்னாள் போராளிகளின் உயிருடன் விளையாடாதீர்கள்! வன்னியில் சமூகசேவையில் ஈடுபடுபவருடனான நேர்காணல்.

கேள்வி- தடுப்பு முகாம்களில் இன்னமும் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் விஷயத்தில் தற்போது என்ன நடைபெறுகின்றது? இவர்கள் விடுவிக்கப்படுவதற்கான முயற்சிகள் ஏதாவது நடைபெறுகின்றனவா?

பதில்- கடந்த வருடம் யுத்தம் முடிவுக்கு வந்தபின் தடுத்து வைக்கப்பட்ட ஆயிரக் கணக்கான முன்னாள் போராளிகள் தற்போதும் தடுப்பு முகாம்களில் இருக்கிறார்கள். அவர்களில் சிலர் அரசாங்கத்தால் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருவதை நீங்கள் செய்திகளில் பார்த்திருக்கலாம். கடந்த வாரம் பம்பைமடு முகாமிலிருந்து 508 முன்னாள் போராளிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். தடுப்பு முகாம்களிலுள்ள மற்றயவர்களையும் விடுவிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கேள்வி- தடுப்பு முகாம்களிலுள்ள போராளிகள் அனைவருமே விடுவிக்கப்படுவது ஏன் தாமதமாகின்றது?

பதில்- இந்தக் கேள்விக்கு துரதிஷ்டவசமானதும் சோகமானதுமான ஒரு பதில் இருக்கிறது. இந்த முன்னாள் போராளிகள் அனைவரும் விரைவில் விடுவிக்கப்படுவதில் இன்றைய சூழ்நிலையில் முக்கிய தடையாக இருப்பது வெளிநாடுகள் சிலவற்றில் மேற்கொள்ளப்படும் சில நடவடிக்கைகள்தான். அந்த நடவடிக்கைகளை மேற்கொள்வது குறிப்பிட்ட சில தமிழர்கள்தான் என்பதே இங்குள்ள துரதிஷ்டமான விஷயம்.

கேள்வி- புலிகளின் முன்னாள் போராளிகள் விரைவில் விடுவிக்கப்படுவதில் வெளிநாடுகளிலுள்ள சில தமிழர்கள் எப்படித் தடையாக இருக்க முடியும்? அதைக் கொஞ்சம் விரிவாக கூறமுடியுமா?

பதில்- வெளிநாடுகளில் தமிழ் மக்கள் மத்தியில் சிலரால் செய்யப்படும் பிரச்சாரங்களே இந்த முன்னாள் போராளிகள் விடுவிக்கப்படுவதில் தாமத்த்தையும் தடையையும் ஏற்படுத்துகின்றது.

கேள்வி- நீங்கள் இங்கு குறிப்பிடும் பிரச்சாரங்கள் விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் அதன் முன்னாள் போராளிகளுக்கும் எதிராகச் செய்யப்படும் பிரச்சாரங்களா?

பதில்- அப்படியில்லை. அதுதான் இங்குள்ள சோகம். இந்தப் பிரச்சாரங்களைச் செய்பவர்களும் தாங்கள் புலிகளின் ஆதரவாளர்கள் என்பதுபோலத்தான் வெளியே காட்டிக் கொள்கிறார்கள். இலங்கையிலுள்ள தமிழ் மக்களுக்கு ஆதரவாகச் செயற்படுவதாகத்தான் வெளியே கூறிக்கொள்கிறார்கள். ஆனால் அவர்களது திட்டமிட்ட நடவடிக்கைகள்தான் இலங்கையில் நிலைமையை மேலும் சிக்கலாக்குகிறது.

கேள்வி- நீங்கள் குறிப்பிடுவது எவ்வகையான நடவடிக்கைகளைப் பற்றி?

பதில்- புலம்பெயர் தமிழ் மக்களைத் தொடர்ந்தும் கனவுலகில் வைத்திருக்கும் திட்டத்துடன் ஒரு சிலரால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளைப் பற்றியே இங்கு குறிப்பிடுகிறேன். புலம்பெயர் உறவுகளைக் குழப்பும் நோக்கில் சிலரால் வெளியிடப்படும் சில கருத்துக்கள்தான் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளில் விடுதலைக்குத் தடையாக இருக்கின்றது. இவர்கள் கூறும் கதைகள் இன்றைய திகதியில் இலங்கையிலுள்ள யதார்த்தமான சூழ்நிலையிலிருந்து வேறுபட்டவை. இரண்டுக்குமிடையே மலைக்கும் மடுவுக்குமுள்ள வித்தியாசம் இருப்பதைச் சமீபகாலமாக இலங்கைக்கு வந்து திரும்பிய புலம்பெயர் உறவுகளில் பெரும்பாலானோர் நேரில் கண்டிருக்க முடியும்.

கேள்வி- கதைகள் என்று கூறுகிறீர்கள். எவ்வகையான கதைகள் இவை?

பதில்- விடுதலைப்புலிகளின் தலைவர் மீண்டும் வெளிப்பட்டு படையுடன் வருவார் என்று ஒரு கதை. அந்தக் காட்டில் இத்தனை ஆயிரம் பேர் ஆயுதங்களுடன் தயாராக இருக்கிறார்கள், அல்லது இந்த நாட்டில் இத்தனை ஆயிரம் பேர் பயிற்சி எடுத்தபின் காத்திருக்கிறார்கள் என்று மற்றொரு கதை. இந்த ரீதியில் கூறப்படும் உசுப்பேற்றிவிடும் கதைகள் எவையும் உண்மைக்கு அருகில்கூட இல்லை. ஆனால் இப்படியான கதைகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளைத்தான் சிக்கலுக்குள் தள்ளிவிடுகின்றன. இங்கு நான் குறிப்பிடுவது ஓரிருவரை மாத்திரம் பாதிக்கும் விஷயமல்ல, ஆயிரக்கணக்கான முன்னாள் போராளிகளைப் பாதிக்கும் விஷயம். அவர்களது வாழ்க்கையுடன் விளையாடும் விஷயம்.

கேள்வி- இந்தக் கதைகள் முன்னாள் போராளிகளை எப்படிப் பாதிக்கின்றன?

பதில்- இந்த முன்னாள் போராளிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு அவர்கள் தமது இயல்பு வாழ்க்கையைத் தொடரக்கூடிய சாத்தியம் இருக்கின்றது. அதை எவ்வளவு விரைவில் சாத்தியமாக்க முடியுமோ அவ்வளவு விரைவில் செயற்படுத்த முயற்சிகள் ஒருபுறம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனால் மறுபுறத்தில் புலம்பெயர் உறவுகள் மத்தியில் சிலரால் வெளியிடப்படும் உண்மைக்கு மாறான அல்லது உசுப்பேற்றி விடும் கருத்துக்கள் தடுப்பு முகாம்களிலுள்ள முன்னாள் போராளிகள் விடுவிக்கப்படுவதற்கு உலை வைக்கும் வகையிலேயே அமைந்துள்ளன.
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். நாளைக்கே மீண்டும் ஆயுதப் போராட்டம் தொடங்கும் என்று வெளியே சும்மா கதை விட்டுக் கொண்டிருந்தால் எந்தவொரு அரசாங்கம்தான் தமது பிடியிலுள்ள முன்னாள் போராளிகளை விடுவிக்க முன்வரும்? இந்தக் கதைகள் நிச்சயமாக தடை முகாமிலுள்ள போராளிகள் விடுவிக்கப்படுவதில் அரசியல் ரீதியாகத் தாமதங்களை ஏற்படுத்தும். சில வேளைகளில் நிரந்தரமாகத் தடையைக்கூட ஏற்படுத்திவிடக்கூடிய அபாயமும் உள்ளது.

கேள்வி- இப்படியான கதைகளை வெளிநாடுகளில் பரப்பும் ஆட்கள் அதானால் எதைச் சாதிக்க முடியும்? அல்லது எதையாவது சாதிக்க முடியுமா?

பதில்- எதையும் சாதிக்க முடியாது. ஆனால் எல்லாவற்றையும் குழப்பிவிட முடியும். இப்படியான அம்புலிமாமாக் கதைகளை வெளிநாடுகளில் பரப்புவது புலம்பெயர் உறவுகளில் மிகச் சிலரை சிறிது காலத்துக்கு ஒருவித மாயையில் வைத்திருக்க வேண்டுமானால் உதவலாமே தவிர நீண்ட காலத்துக்கு இதேபோல கனவுக் காட்சியைக் காட்டிக்கொண்டிருக்க முடியாது. இதோ வருகிறார் தலைவர், அதோ தொடங்குகிறது மீண்டும் யுத்தம் என்று எவ்வளவு காலத்துக்குத்தான் போக்குக் காட்டிக்கொண்டிருக்க முடியும்? காலப்போக்கில் இவையெல்லாம் பொய் என்பது தெரியவரத்தான் போகின்றது.

கேள்வி- அப்படியானால் இந்தக் கதைகளைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடலாமே?

பதில்- விட்டுவிடலாம். அதில் சிக்கல் ஏதுமில்லை. சிக்கல் எங்கே வருகின்றதென்றால் இந்தக் கதைகள் பொய் என்று அனைவராலும் உணரப்படும் காலம் வரும்வரை அரசாங்கத்தில் பிடியிலுள்ள முன்னாள் போராளிகளின் விடுதலையும் தள்ளிக்கொண்டு போகும்.
தொடர்ந்தும் தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ளவர்களில் அநேகர் தாமாக விரும்பியோ, அல்லது சந்தர்ப்ப சூழ்நிலைகளாலோ கடந்த வருடம்வரை ஆயுதப் போராட்டத்தில் இணைக்கப்பட்டிருந்தவர்கள். தற்போது ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்திருக்கின்றது. இதை யார் ஏற்றுக் கொண்டாலும் கொள்ளாவிட்டாலும் நிஜம் அதுதான்.

நீங்களே சொல்லுங்கள்… இனிமேல் நடக்கவே சாத்தியமில்லாத ஒரு ஆயுதப் போராட்டத்துக்காக ஏற்கனவே ஒரு ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடுத்தப்பட்ட இந்த முன்னாள் போராளிகள் தொடர்ந்தும் தண்டனை அனுபவிக்க வேண்டுமா?

கேள்வி- இந்த விஷயம் இப்படியான கதைகளை வெளிநாடுகளில் பரப்பிக் கொண்டிருப்பவர்களுக்குத் தெரியாதா?

பதில்- நிச்சயமாகத் தெரியும். ஆயுதப் போராட்டம் இனியும் சாத்தியமில்லை என்பது யாருக்குத் தெரிகிறதோ இல்லையோ, இப்படியான கதைகளை உலாவ விட்டுக் கொண்டிருக்கும் புண்ணியவான்களுக்கு மிக நன்றாகவே தெரியும். அவர் இருக்கிறார் இவர் இருக்கிறார் என்றெல்லாம் வெளியே கூறிக்கொண்டிருக்கும் இவர்களுக்கு அந்த அவர் இவர் யாருமே உயிருடன் இல்லை என்பது மிகத் தெளிவாகத் தெரியும். தனிப்பட்ட முறையில் என்னுடன் பேசும்போது அதை அவர்களே ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். அப்படியிருந்தும் தமது சுய அரசியல் விளையாட்டுக்களுக்காக இந்தக் கதைகள் அவர்களால் பரப்பப்படுகின்றன. அப்படியானவர்களிடம் நான் கேட்டுக்கொள்வது ஒன்றே ஒன்றுதான். உங்கள் சுய லாபத்துக்கான நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்துவிட்டுப் போங்கள். ஆனால் தடை முகாம்களில் விடுதலைக்காக்க் காத்திருக்கும் இந்த முன்னாள் போராளிகளில் வாழ்க்கையோடு விளையாடாதீர்கள்.

அவர்களில் பலர் இனித்தான் தமது வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டிய வயதுகளில் இருக்கிறார்கள். கிட்டத்தட்ட அனைவரும் இனித்தான் பூச்சியத்திலிருந்து தமது வாழ்கையைக் கட்டியெழுப்ப வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். அவர்களது விடுதலையில் உங்களால் ஏற்படுத்தப்படும் தாமதம் எவ்வளது கேவலமானது என்பதைப் பற்றி நீங்கள் வெளியே யாரிடமும் கேட்க வேண்டாம், உங்கள் மனச்சாட்சியையே கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

அவர்களை விடுவிப்பதற்கு நீங்கள் உதவிதான் செய்யவில்லை. உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை. உபத்திரபமாவது செய்யாமல் இருந்தால் போதும். இதுவே இந்த முன்னாள் போராளிகளுக்கு உங்களால் செய்யக்கூடிய மிகப்பெரிய உபகாரமாக இருக்கும்.
மேலும் இங்கே தொடர்க...

தாயின் கருவில் இருக்கும் 17 வார குழந்தையும் சிரிக்கும்: போட்டோ எடுத்து டாக்டர் சாதனை

.



லண்டனை சேர்ந்த லூயிஸ் என்ற கர்ப்பிணி பெண் தனது கணவர் சாம்ஹென்றியுடன் பேராசிரியர் ஸ்டூவர்ட் கேம்பெல் என்பவரிடம் “ஸ்கேன்” பரசோதனைக்கு வந்தார்.

இவர் லண்டனில் உள்ள பிரபலகிங்ஸ் கல்லூரியில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆஸ்பத்திரியில் மகப்பேறு மருத்துவ துறையின் தலைவ ராக பணியாற்றியவர்.

இவர் லூயிஸ் வயிற்றில் வளரும் கருவை “ஸ்கேன்” மூலம் பரிசோதித்தார். அப்போது கருவில் இருந்த குழந்தை அழகாக சிரித்தது. இதைப் பார்த்த டாக்டர் கேம்பல் ஆச்சரியமடைந்தார். ஏனெனில் அது 17 வாரமே ஆன கருவாகும்.

உடனே அக்காட்சியை அவர் போட்டோ எடுத்தார். இதற்கு முன்பு “ஸ்கேன்” செய்த குழந்தைகளிடம் இருந்து அவர் சிரிப்பை பார்க்கவில்லை. மாறாக 18 மற்றும் 19 வார குழந்தை களின் அழுகையுடன் கூடிய முகத்தை பார்த்து இருக்கிறார்.

இந்த போட்டோவை 3டி மற்றும் 4டி வசதியுள்ள “ஸ்கேனர்” மூலம் அவர் எடுத்து சாதனை படைத்துள்ளார். தான் எடுத்த போட்டோவை குழந்தையின் பெற்றோரிடம் காட்டி மகிழ்ந்தார்.

இதுகுறித்து அவர் கூறும் போது, பொதுவாக கருவில் இருக்கும் குழந்தைகளின் சிரிப்பை 22 வாரங்களுக்கு பிறகுதான் பார்க்க முடியும். ஆனால் நான் 5 வாரங்களுக்கு முன்பே பார்த்து விட்டேன். இது மிகவும் மகிழ்ச்சிகரமான அனுபவம். இது ஒரு சாதனையாகும் என தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கைப் பெண் சென்னையில் கைது



சட்ட விரோத புகலிட தடுப்புச் சட்டத்தின் கீழ் இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர் சென்னையில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 28 வயதான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பாமினி என இனங்காணப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட இவர் புழல் சிறையில் வைக்கப்பட்ட பின்னர் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 30 வருட காலம் இலங்கையில் நடைபெற்ற யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதையடுத்து அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, நோர்வே போன்ற நாடுகளுக்கு சட்ட விரோதமாக செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இலங்கை மார்க்கமாகச் செல்வதிலும் சிரமம் உள்ளதால் அநேகமானவர்கள் இந்தியாவிலிருந்து மேற்படி நாடுகளுக்குச் செல்கின்றனர். கியூ பிரிவு பொலிஸார் கைதான பெண் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

சரத்தின் தண்டனை நியாயமானது : முன்னேஸ்வரத்தில் தேங்காய் உடைப்பு

வெலிக்கடைச் சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்ட தண்டனை நியாயமானது எனத் தெரிவித்து இன்று காலை 11.30 மணியளவில் சிலாபம் முன்னேஸ்வரம் காளி கோவிலில் தேங்காய் உடைக்கும் நிகழ்வொன்று இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சுமார் 200 பேரளவில் கலந்து கொண்டனர். அவர்கள் களனி பிரதேசத்திலிருந்து பஸ்களில் வருகை தந்திருந்தாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் சரத் பொன்சேகாவுக்கான இராணுவ நீதிமன்ற தீர்ப்பு நியாயமானது எனக்கூறி முன்னேஸ்வரம் காளி கோவிலிலும், ஈஸ்வர கோவிலிலும் தேங்காய் உடைத்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு உறுப்பினர் அந்தஸ்து?


ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியாவுக்கு உறுப்பினர் அந்தஸ்து கிடைப்பது உறுதியாகிவிட்டது. ஏறக்குறைய 19 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இந்தியா நிரந்தரம் அல்லாத உறுப்பினர் அந்தஸ்தைப் பிடிக்க உள்ளது. இதற்கான தேர்தல் ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற உள்ளது.

÷ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தரம் அல்லாத உறுப்பு நாடாக இடம்பெறுவதற்கு போட்டியிட்ட கஜகஸ்தான் போட்டியிலிருந்து விலகிக் கொண்டது. இதனால் இந்தியாவின் வாய்ப்பு பிரகாசமடைந்துள்ளது.

÷ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்க பிராந்தியங்களுக்கு நடைபெறும் தேர்தலில் ஒரே ஒரு நாடு மட்டுமே போட்டியிடுவதால் அந்தந்த நாடுகள் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. மேற்கு ஐரோப்பாவுக்கு 2 பிரதிநிதிகளுக்கான இடம் உள்ளது. இந்த இரு இடங்களுக்கு கனடா, ஜெர்மனி, போர்ச்சுக்கல் ஆகிய 3 நாடுகள் போட்டியிடுகின்றன.

÷ஆப்பிரிக்க நாடுகளில் தென்னாப்பிரிக்காவின் இடம் உறுதியாகிவிட்டது. இதனால் மூன்று வளரும் பொருளாதார நாடுகளான இந்தியா, பிரேஸில், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் இடம்பெற உள்ளன. வரும் ஆண்டுகளில் பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியா, சீனா, பிரேசில், ரஷியா உள்ளிட்ட நாடுகள் மிக முக்கிய பங்காற்றும் என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்திய பிரதிநிதி ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.

÷ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சிலில் இடம்பெறுவதற்கு உறுப்பு நாடுகளில் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளைப் பெற வேண்டும். இதன்படி இந்தியாவுக்கு 128 நாடுகளின் ஆதரவு தேவை.

÷கடைசியாக 1992-ம் ஆண்டு பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியா இடம்பெற்றிருந்தது.

பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தரம் அல்லாத உறுப்பினராக உள்ள ஆஸ்திரியா, ஜப்பான், மெக்ஸிகோ, துருக்கி, உகாண்டா ஆகியவற்றின் உறுப்பினர் காலம் நிறைவடைய உள்ளது. இதையொட்டி நடைபெறும் தேர்தலில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் போட்டியிடுகின்றன.

÷ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் கவுன்சில் சீர்திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

÷ஜெர்மனி வெற்றி பெற்றால் ஜி-4 நாடுகள் (இந்தியா,பிரேஸில், ஜப்பான், ஜெர்மனி) அனைத்தும் பாதுகாப்புக் கவுன்சிலில் இடம்பெற்றுவிட்டன என்ற பெருமை கிடைக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதியிலிருந்து தொடங்கும்.

÷கடந்த செப்டம்பரில் நியூயார்க்கில் நடைபெற்ற ஜி-4 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் பாதுகாப்புக் கவுன்சிலில் சீர்திருத்தம் கொண்டுவருவது குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது சீர்திருத்தம் கொண்டு வருவது குறித்து விரைவாக முடிவெடுக்க வேண்டும் என்றும் அப்போது கருத்து தெரிவிக்கப்பட்டது.

÷ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றும்போது, நிரந்தர மற்றும் நிரந்தரம் அல்லாத உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா வலியுறுத்தினார். இது மிகவும் அவசியமாகும். அப்போதுதான் ஒருமித்த கருத்தை எட்டுவதற்கு வசதியாக இருக்கும் என்று அவர் மேலும் கூறினார்.

÷அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, இந்தியாவில் அடுத்த மாதம் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும்போது இந்த விவகாரம் குறித்து முக்கியமாக விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
மேலும் இங்கே தொடர்க...

12.000 வீரர்கள் கொண்ட இராணுவம் உருவாக்கம் : அல்-கொய்தா அறிவிப்பு

யேமன் நாட்டைத் தளமாகக் கொண்டியங்கும் அல்-கொய்தா இயக்கமானது சுமார் 12,000 வீரர்களைக் கொண்ட இராணுவத்தை உருவாக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

தென் யேமனில் இயங்கும் எடென்- எபியான் இஸ்லாமிய போராளி அமைப்பு போன்று இந்த இராணுவம் செயற்படுமென அதன் தலைமைக் கட்டளை அதிகாரி காசிம் அல்-ரயீமி தெரிவித்துள்ளார்.

மேற்படி படையானது இஸ்லாமையும், இஸ்லாமிய நாடுகளையும் சிலுவைப்போர் மற்றும் சமயத்துரோக முகவர்களிடமிருந்தும் பாதுகாக்கப் போராடுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

"இதற்கான நிதி மற்றும் பொருள் உதவியை யேமனிய மக்களிடமிருந்து எதிர்ப்பார்க்கின்றோம். அவர்கள் இதற்குப் பங்களிப்புச் செய்ய வேண்டும்" என காசிம் அல்-ரயீமி தனது 14 நிமிட உரை கொண்ட ஒலிநாடாவில் குறிப்பிட்டுள்ளார்.

அல்-கொய்தா இயக்கமானது யேமன் நாட்டில் நன்கு வியாபித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

அரசியல் தீர்வினை எட்டுவதற்கு அடிப்படையை விட்டுக் கொடுக்காமல் செயற்பட வேண்டும்:மாவை எம்.பி

அரசியல் தீர்வு ஒன்றை நாம் எட்டுவதற்கு எமது அடிப்படையை விட்டுக் கொடுக்காமல் செயற்பட வேண்டும். நாம் சிறு சிறு கட்சிகளாக பிளவுகளாக பிரிந்து நிற்காமல் எவ்வளவுக்கு ஒன்றாக நிற்கும் பலத்தை இணைத்து உருவாக்க முடியுமோ அதற்காக மக்களனைவரும் உழைக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா கூறினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தர்கள், பிரதேசக் கிளைகளின் உறுப்பினர்கள, ஆதரவாளர்கள் கலந்து கொண்ட மாவட்ட மட்ட கூட்டம் கல்முனை வை.எம்.சீ.ஏ. மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வில்லியம் தோமஸ் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உட்பட மாவட்ட கட்சி முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அரசு பக்கம் தாவியுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன மீது கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்வதுடன் அவரை கட்சியை விட்டும் நீக்க வேண்டுமென கல்முனை மாநகர சபை எதிர்க்கட்சித் தலைவர் ஹென்றி மகேந்திரன் முன் வைத்த பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதுடன் பொடியப்பு பியசேன பாராளுமன்றப் பதவியிலிருந்து விலக வேண்டுமெனக் கோரவும் தீர்மானிக்கப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில் தெரிவித்ததாவது,

இன்றைய சூழ்நிலையில் நாம் எவ்வளவு தூரம் மக்களின் ஒற்றுமையைப் பேண முடியுமோ அதைப் பேண வேண்டும். வடக்கு கிழக்கு பிரிந்திருக்கின்றது என அரசு தம்பட்டமடிப்பது கடந்த பொதுத் தேர்தலில் நிராகரிக்கப்பட்டு விட்டது. இதேவேளை அவர்களால் மக்களைப் பிரிக்க முடியவில்லை. மக்கள் நன்றாகத்தானிருக்கிறார்களென்பது கடந்த தேர்தலில் நிரூபிக்கப்பட்டுள்ளது. மக்களின் இந்தத் தீர்ப்பை நிறைவேற்றுவதற்குப் பல வழிகளுண்டு. வடக்கு கிழக்கு இணைந்த தாயகத்தில் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு ஒன்றை எட்டுவதற்கு அடிப்படைகளை விட்டுக் கொடுக்காமல் செயற்பட வேண்டும்.

இதில் முக்கியமான அங்கம் நாம் ஒன்றுபட்டிருப்பது மட்டுமல்ல, கிழக்கில் இன்னுமொரு முக்கியமான அங்கமாகவுள்ள முஸ்லிம் மக்களுடனும் நாம் இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும்.முஸ்லிம் மக்களுக்கும் ஓர் அரசியல் தீர்வு அவசியம் தேவை. இதையும் நாம் ஏற்று அவர்களுடன் பேசி இணக்கம் கண்டு முஸ்லிம் மக்களின் ஒற்றுமையும் நமக்கிருக்கும்போது தான் நாம் இலக்கை நோக்கிச் செல்லும் பயணம் இலகுவாகவிருக்கும். நம் இலட்சியத்தை அடையலாம்.

அடிப்படையை விட்டுக் கொடுக்க முடியாது

அதாவது சுய நிர்ணய அடிப்படையில் இணைந்த தாயகத்தில் நாம் ஓர் அரசியல் தீர்வை அடைவதற்கு அடிப்படையை விட்டுக் கொடுக்க முடியாது. இந்திய அரசின் பிரதமரும் நீங்கள் உங்களது அடிப்படைகளை எந்த வகையிலும் விட்டுக் கொடுக்காமல் அரசுடன் பேச வேண்டுமென்றே எம்மிடம் கூறியுள்ளார். நம் மக்கள்அளித்த தீர்ப்பின் பின்னர் இதைக் கூறி நாங்கள் உங்களுடன் இருக்கிறோமெனவும் உறுதியளித்துள்ளார். இது நமக்குப் பலமான வார்த்தைகளாகும்.

முஸ்லிம் மக்களுடன் முரண்பாடுகள் இல்லாமலிருக்க முடியாது, ஆனால் அவர்களு இருக்கும் பிரச்சினைகளை நாமுணர்ந்தும் நமக்கிருக்கும் பிரச்சினைகளை அவர்கள் உணர்ந்தும் முரண்பாடுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.இத்தகைய மன உணர்வுகளை நாம் ஒன்றுபடுத்தினால் தான் பேரினவாதத்திற்கு இடம் கொடுக்காமல் நாம் நம் இலக்கை நோக்கி முன்னேற முடியும்.

இது முஸ்லிம் மக்களுக்கும் அவசியமாகவேயுள்ளது. அவர்கள் நன்றாக உணர்ந்துள்ளனர். பேரினவாதம் எவ்வளவு தூரம் முஸ்லிம் மக்களுக்கு எதிராக செயல்படுகின்றதென்பதை அவர்கள் மனம் திறந்து எம்மிடம் கூறுகின்றனர். அவர்களுடைய தேவைகளை நாமறிந்து நாங்கள் தான் எமது இலக்கில் அவர்களுக்கு ஒரு தீர்வை கொடுக்க வேண்டியதாகவும் நாமும் அவர்களும் இணைந்து அந்த அடிப்படையில் தமிழர்களுடைய எதிர்கால அரசியலில் ஒரு இனப்பிரச்சினைக்கான தீர்வை அடைவதற்கு அதிக பொறுப்புள்ளவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர். தமிழரசுக் கட்சியினர் தான் என்பதையும் இங்கு சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.

கட்சியிலிருந்து நீக்க நடவடிக்கை

இங்கு பல கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. அதில் குறிப்பாக அரசு பக்கம் தாவியுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன தொடர்பில் கட்சியென்ற ரீதியில் அவருக்கு எதிராக கட்சியிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். இதற்கான அறிவித்தல் அவருக்கு அனுப்பப்பட்டுள்ளது. சட்ட முறைப்படி படிமுறையாக இதனை மேற்கொள்வோம்.

ஜனாதிபதித் தேர்தலின் போது அரை குறை உயிர்களாக கருகிய உடல்களோடு பல்வேறு உறவுகளைப் பலி கொடுத்து விட்டு முகாமுக்குள் அடைபட்டிருந்த மூன்று லட்சம் மக்களும் தனக்கே வாக்களிப்பரென ஜனாதிபதி மனப்பால் குடித்திருந்தார். ஆனால் அந்த மக்கள் எத்தகைய தீர்ப்பை வழங்கினரென்பதை உலகே அறியும்.

அந்த மக்கள் இக்கட்டான நிலையிலும் ஜனாதிபதிக்கு எதிராகவே வாக்களித்தனர். அத்தனை கொடூரமான பேரவலத்தைச் சந்தித்து அரை குறை ரீதியாகவிருந்த மக்களுக்கிருந்த இந்த தத்துவம் உள்ளுணர்வு தமிழ்ப் பிரதேசங்களில் சுகமாக வாழ்ந்தவர்களுக்கு வரவில்லையென்பது கவலையளிப்பதாகும். அதேபோல் நீங்களும் வாக்களித்தவர்களும் பல நெருக்கடிகளுக்கும் அவலங்களுக்கும் மத்தியில் நம் மக்கள் வடக்கு கிழக்கில் இவ்வளவு மக்களும் வாக்களித்ததால் தான் 14 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகக் கூடியதாகவிருந்தது.அம்பாறை மாவட்ட மக்கள் பல பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர். அதைவிடப் பெரிய பிரச்சினைகளை இன்று யாழ்ப்பாண மக்கள் எதிர்கொள்ள வேண்டிய நிலையுள்ளது.

குறிப்பாக ஆயிரக்கணக்கான சிங்களவர்கள் புகையிரத நிலையத்தில் வந்து குவிந்து தங்களுக்கு வீடு வேண்டும், காணி வேண்டுமெனச் சண்டை பிடிக்குமளவுக்கு நிலை மாறியுள்ளது. இது மட்டுமின்றி எமது மக்கள் அங்கு அரை நூற்றாண்டுக்கு மேலாக வாழ்ந்த பிரதேசங்களில் புதிய குடியேற்றங்கள் நடைபெற்றுள்ளன. அதேபோல் நம் மக்களின் நிலங்கள் இராணுவ முகாம்கள் அமைக்கப்படுவதற்கு ஆயிரம் ஆயிரம் ஏக்கர்கள் எடுக்கப்பட்டுள்ளன. தந்தை செல்வா 1949 இல் கிழக்கு மக்களுக்கு வடக்கு மக்கள் பலத்தைக் கொடுக்க வேண்டுமெனச் சொன்னார்.

வடக்கிலிருந்து கிழக்கைப் பிரித்து விட்டோமெனச் சொன்ன பிறகும், பிள்ளையானின் தலைமையில் கிழக்கில் மாகாண சபை அமைக்கப்பட்ட பிறகும் கருணா அம்மான் அமைச்சராகப் பவனி வந்த போதிலும் கிழக்கு மாகாண மக்கள், குறிப்பாக அம்பாறை மாவட்டத் தமிழ் மக்கள் தடம்புரளாது உறுதியுடன் தமிழ்த் தேசியத்துடன் நாம் வடக்கு கிழக்கு மக்கள், தந்தை செல்வாவிற்குப் பின்னால் அணி திரண்ட சமுதாயம் என்பதை நிரூபித்துள்ளனர்.கொள்கைக்காக இலட்சியத்திற்காகவே நீங்கள் வாக்களித்தீர்களே தவிர பியசேனவுக்காக அல்ல என்பதே நிரூபணமாகும்.

பியசேன அரசு பக்கம் தாவியது ஒரு பொருட்டல்ல, அவர் முளைவிடும் நெல்லாக இல்லை, பதராகப் போய்விட்டார். ஆனால் இங்குள்ள மக்கள் கொள்கையிலும் இலட்சியத்திலும் மேலும் எழுச்சி பெற்றுள்ளனர் என்பதை நாம் உணர்கிறோம் இவ்வாறு அவர் கூறினார்
மேலும் இங்கே தொடர்க...

2011 இல் நாடுதழுவிய ரீதியில் சனத்தொகை கணக்கெடுப்பு

வடக்கு கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட நாடளாவிய ரீதியில் 2011 ஆம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவுள் ளது. இதற்கு தேவையான ஆரம்பகட்ட ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. வட க்கு கிழக்கில் 30 வருடங்களுக்கு பின்னர் சனத்தொகை கணக்கெடுப்பு நடைபெறுவது விசேட அம்சமாகும் என்று புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டி.பி.பி. சுரஞ்சனா வித்தியாரட்ன தெரிவித்தார்.

அதாவது 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இலங்கையில் இருக்கின்ற மக்களே சனத் தொகைக்கு உள்ளடக்கப்படுவர். அந்த வகையில் இந்தியாவில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் ஆகஸ்ட் மாதத்தில் இலங்கையில் தங்கியிருக்காவிடின் அவர்கள் சனத்தொகை கணக்கெடுப்புக்கு உள்ளடக்கப்படமாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

பணிப்பாளர் நாயகம் அங்கு மேலும் கூறியதாவது:

வடக்கு கிழக்கு மாகாணங்களில் கடந்த காலங்களில் நிலவிய யுத்தம் காரணமாக அங்கு 30 வருடங்களாக புள்ளிவிபரவியல் கணக்கெடுப்புக்களை மேற்கொள்ள முடியவில்லை. தற்போது யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் 2011 ஆம் ஆண்டுக்கான சனத் தொகை மற்றும் புள்ளிவிபரவியல் கணக்கெடுப்பு வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாடளாவிய ரீதியில் நடைபெறும். அதற்கான ஏற்பாடுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வரைப்படம் தயாரித்தல் கட்டடங்களை வரிசைப் படுத்தல் என தேவையான ஆரம்பகட்ட அனைத்து நடவடிக்கைகளும் இடம்பெற்றுவருகின்றன.

அந்த வகையில் 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதமளவில் சனத் தொகை கணக்கெடுப்பு நடவடிக்கைகள் ஆரம்பமாகும். இதற்காக நாடளாவிய ரீதியில் ஒரு மாதத்துக்கு பணிபுரிய 65 ஆயிரம் தற்காலிக உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படவுள்ளனர். பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம சேவகர்கள் இது தொடர்பான செயற்பாடுகளை மேற்கொள்வர்.

இந்நிலையில் சனத்தொகை கணக்கெடுப்பு முடிவடைந்து ஒரு மாதத்தில் ஆரம்பகட்ட முடிவுகளை வெளியிட முடியும். அதாவது சனத் தொகை இன மத வயது அடிப்படையில் சனத் தொகை புள்ளிவிபரங்கள் போன்றன வெளியிடப்படும். அதன் பின்னர் கட்டம் கட்டமாக ஏனைய புள்ளிவிபரங்கள் வெளியிடப்படும். கணக்கெடுப்பு முடிவடைந்து ஒரு வருடத்தில் இறுதி முடிவுகள் வெளியிடப்படும். எனவே இந்த வேலைத்திட்டத்தை மிகவும் சிறப்பாக செய்து முடிக்க எதிர்பார்க்கின்றோம்.

இதேவேளை சனத்தொகை கணக்கெடுப்பு எடுக்கப்படுகின்ற காலத்தில் அதாவது அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் நாட்டில் இருப்பவர்களே சனத்தொகை கணக்கெடுப்புக்கு உள்ளடக்கப்படுவார்கள். அதன்படி பார்க்கும்போது தற்போது இந்தியாவில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் ஆகஸ்ட் மாதத்தில் இலங்கையில் இருக்காவிடின் அவர்கள் சனத் தொகை கணக்கெடுப்பில் உள்ளடக்கப்படமாட்டார்கள்.
மேலும் இங்கே தொடர்க...

செங்கலடியில் 490 மனுக்கள் ஆணைக்குழுவிடம் கையளிப்பு

செங்கலடி பிரதேச செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற சாட்சியமளிப்பில் காணாமல் போன, கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மற்றும் கொலை செய்யப்பட்ட குடும்ப அங்கத்தினரில் 490 பேர் தங்களுடைய மனுக்களை கையளித்தனர்.இதேவேளை ஆறு பேர் மூடிய அறைக்குள் சுமார் இரண்டரை மணி நேரம் தனித்தனியாக சாட்சியமளித்தனர். பல்கலைக்கழக விவகாரம் தொடர்பிலும் இரகசியமாக சாட்சியமளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கற்றுக்கொண்ட பாடங்களுக்கும் நல்லிணக்கத்திற்குமான ஜனாதிபதி ஆணைக்குழு மூன்றாவது நாளாகவும் சாட்சிகளை செங்கலடி பிரதேச செயலகத்தில் வைத்து பதிவு செய்து கொண்டது.

சாட்சியமளிப்பதற்கு செங்கலடி, ஏறாவூர், கோரளைப்பற்று, (கிரான்) ஆகிய பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட நூற்றுக்கணக்கானோர் சாட்சியமளித்தனர். கடத்தல், காணாமல்போதல் மட்டுமன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளோர், விசேடமாக குற்றப்புலனாய்வு பிரிவினர் தேசிய புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு இதுவரையில் காணவே கிடைக்காதவர்கள் தொடர்பிலான விபரங்களையும் சாட்சியளிக்க வந்தவர்கள் விபரித்தனர்.

யுத்த காலத்திலும் யுத்தம் நிறைவடைந்ததன் பின்னரும் கருணா மற்றும் பிள்ளையான் குழுவினரால் உறவினர்கள் கடத்தப்பட்டதாக சாட்சியமளித்தவர்கள் அவர்களின் விருப்பத்தின் பேரில் ஆணைக்குழு முன்னிலையில் மிக இரகசியமாக சாட்சியமளித்தனர்.

இரண்டரை மணி நேரத்திற்குள் அறுவரின் சாட்சியங்களும் பெற்றுக் கொள்ளப்பட்டதுடன் 2.30 மணியளவில் ஆணைக்குழுவின் விசாரணை நிறைவு பெற்றது. ஜனாதிபதி ஆணைக்குழு மட்டக்களப்பு மாவட்ட அலுவலகம், ஓட்டமாவடி பிரதேச செயலகம், செங்கலடி பிரதேச செயலகம் மற்றும் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் சாட்சிகளை பதிவு செய்து கொள்வதற்காக நிகழ்ச்சி நிரல்கள் தயாரிக்கப்பட்டிருந்த போதிலும் களுவாஞ்சிக்குடியில் நேற்று திங்கட்கிழமை மாலை நடைபெறவிருந்த சாட்சிகளை பதிவு செய்து கொள்வது இரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

அமெரிக்க வர்த்தகர்கள் யாழ்ப்பாணத்தில் முதலீடு நிலைமையை ஆராய விஷேட குழு இன்று விஜயம்


முப்பது பேர் அடங்கிய அமெ ரிக்க வர்த்தகத் தூதுக்குழு நேற்று இலங்கை வந்தடைந்தது.

அமெரிக்க அரச மற்றும் தனியார் வர்த்தகப் பிரதிநிதிகளைக் கொண்ட இந்த தூதுக்குழு இன்று (12) வட மாகாணத்திற்கு, விஜயம் செய்யவு ள்ளது. யாழ்ப்பாணத்தை இன்று காலை சென்றடையும் மத்திய மற் றும் தெற்காசியாவுக்கான அமெரிக்க வர்த்தக அமைப்பின் (மடூடுசிடீசிக்ஷ நசிஹசிடீ பஙுஹக்ஷடீ தடீஙீஙுடீஙூடீடூசிஹசிடுசுடீ- மநபத) பிரதிநிதி மைக்கல் மெலன் தலை மையிலான உயர்மட்ட அமெரிக்க வர்த்தக தூதுக்குழுவினருக்கும் வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறிக்கும் இடையி லான விஷேட சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.

யாழ்ப்பாண பொது நூலகத்தில் வட மாகாண ஆளுநர் தலைமையில் நடைபெற வுள்ள இந்த சந்திப்பின் போது வட மாகாணத்திலுள்ள முதலீட்டு வாய் ப்புக்கள் குறித்தும், வட பகுதியில் முதலீடு செய்வது குறித்தும் விரி வாக ஆராயப்படவுள்ளன.

இலங்கை அரசாங்கத்தின் சார்பில் அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய தலைமையில் அமெரிக்காவிலுள்ள இலங்கை தூதரகத்தின் வர்த்தக பொறு ப்பாளர் நிமல் கருணாதிலக்க, இல ங்கை வர்த்தக திணைக் களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜி. ரி. சேனாதீர, இலங்கை வெளி விவகார அமை ச்சு, இலங்கை முதலீட்டுச் சபை ஆகியவற்றின் பிரதி நிதிகளும் இன்று யாழ்ப்பாணத்திற்குச் செல்லவுள்ளனர்.

அச்சுவேலி கைத்தொழில் பேட்டை, மண்டத்தீவு, கேரதீவு, தீவு பகுதிகளு க்கும், வட பகுதியிலுள்ள கைத் தொழில் மற்றும் சுற்றுலா பிரதேசங் களுக்கும் இந்த வர்த்தகத் தூதுக்குழு அழைத்துச் செல்லப்படவுள்ளனர். அத்துடன் யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் வர்த்தக துறையினரையும் சந்தித்துப் பேசவுள்ளனர். அமெரிக் காவிலுள்ள இலங்கை தூதரகத்தின் ஏற்பாட்டில் இலங்கை வந்துள்ள இந்த வர்த்தகத் தூதுக் குழுவின் சுமார் ஐந்து நாட்கள் இலங்கையில் தங்கியிருக்கவுள்ளனர்.

இருநாட்டு அரசாங்கங்களுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட அமெ ரிக்க- இலங்கை வர்த்தக மற்றும் முதலீட்டு திட்ட ஒப்பந்தத்திற்கு அமைய (மந- நஙுடுங்ஹடூகூஹ பஙுஹக்ஷடீ & ஐடூசுடீஙூசிஙிடீடூசி ஊஙுஹஙிடீசூச்ஙுகூ அகிஙுடீடீ ஙிடீடூசி பஐஊஅ) தனியார் வர்த்தக துறை யினரின் ஒத்துழைப்பை, பெற்றுக் கொள்ளும் வகையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவிலுள்ள இலங்கை தூதுரகத்தின் வர்த்தக பொறுப்பாளர் நிமல் கருணாதிலக்க தினகரனுக்குத் தெரிவித்தார்.

இதேவேளை நாளை 13ம் திகதி கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெறவுள்ள தனியார் மற்றும் அரச பங்குடமை மாநாட்டில் இந்தத் தூதுக்குழுவினர் கலந்து கொள்ள வுள்ளனர். அத்துடன் 14ஆம் திகதி இருநாட்டு அரசாங்க பிரதி நிதிகளுக்கும் இடையில் அமெரிக்க- இலங்கை வர்த்தக மற்றும் முதலீ ட்டு திட்ட ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தையும் இடம்பெறவுள் ளது.

வடக்கில் முதலீட்டுத்துறையை மேம்படுத்தும் பொருட்டு அரசா ங்கம் பல்வேறு திட்டங்களையும், செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்த வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி, தற்பொழுது அதிகமான உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்து தமது பணிகளை ஆரம்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

அரச காணிகளை சுவீகரித்திருப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை ஜனாதிபதி பணிப்பு






வட மேல் மாகாணத்தில் அரச காணிகளை பலாத்காரமாக சுவீகரித்துள்ளோருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாகாண செயலாளருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்தார்.

வடமேல் மாகாணத்தில் பல்வேறு வித செல்வாக்குகளைப் பயன்படுத்தி சிலர் 150, 200 ஏக்கர் என பெருமளவான அரச காணிகளை சொந்தமாக்கிக் கொண்டுள்ளதாகத் தமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, இத்தகையோருக்கெதிராக உடனடியாக சட்ட நடவடிக் கைகளை மேற்கொள்ள வேண்டு மென கேட்டுக் கொண்டார்.

இந்நடவடிக்கைகளுக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்ப டுத்தும் அமைச்சர்கள், மாகாண அமைச்சர்கள் மற்றும் அரச அதிகாரிகள் பூரண ஒத்துழைப் பினை வழங்க வேண்டுமெனவும் ஜனாதிபதிக் கேட்டுக் கொண்டார்.

வடமேல் மாகாண அபிவிருத்திச் செயற்பாட்டு மீளாய்வுக் கூட்டம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் மாதம்பை கூட்டுறவு சங்க மண்டத்தில் நடைபெற்றது. அமைச்சர்கள், மாகாண அமைச்சர்கள், ஜனாதிபதியின் செயலாளர், நிதியமைச்சின் செயலாளர் உட்பட அமைச்சுக்களின் செயலாளர்கள் அரச உயரதிகாரிகள் பெருமளவில் கலந்து கொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்,

இப்பிரதேசங்களில் குளங்களுக்கு அருகிலுள்ள காணிகளும் இவ்வாறு பலாத்காரமாக அபகரிக்கப்பட்டு வருவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அத்தகையோர் எவராயினும் எதுவித பாரபட்சமுமின்றி சட்டத்தின் முன் கொண்டுவரப்பட வேண்டும்.

இத்தகைய நடவடிக்கைகளைத் தடுப்பதற்கு நில அளவையாளர்களைக் கொண்டு அரச காணிகளை அளக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்.

தனியார் துறை நில அளவையாளர்களை இதற்கு நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

மேற்படி மாகாணத்தில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக மாகாண செயலாளர் தாம்புகல ஜனாதிபதிக்கு விளக்கினார். அதன் போது அரச காணிகளை பலாத்காரமாக அபகரித்து வருவது தொடர்பிலும் அவர் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.

இதற்குப் பதிலளிக்கையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு பணிப்புரைகளை விடுத்தார். நேற்றைய இந்நிகழ்வில் குருநாகல், புத்தளம் மாவட்ட அரசாங்க அதிபர்கள் தத்தமது மாவட்டங்களின் அபிவிருத்தி தொடர்பான அறிக்கைகளை ஜனாதிபதிக்குச் சமர்ப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

மீன்பிடி கட்டுப்பாடுகள் யாவும் நேற்று முதல் முற்றாக நீக்கம்

40 குதிரைவலு என்ஜின்களை பயன்படுத்த பாதுகாப்பு அமைச்சு அனுமதி

மீனவர்களின் வாழ்வாதார த்தை மேம்படுத்தும் நோக்கில் நாட்டின் கடற் பிரதேசங்களில் மீன்பிடிப்பதற்கு விதிக்கப்பட்டி ருந்த அனைத்து கட்டுப்பாடுக ளையும் அரசாங்கம் நேற்று முதல் தளர்த்தியுள்ளது.

கிளிநொச்சி மற்றும் யாழ்ப் பாண மாவட்டங்களில் உள்ள கடற்பகுதியில் உள்ள கண்ணி வெடிகள் முற்றாக அகற்றப்படாததால் அவ்வாறு கண்ணிவெடிகள் இருக்கலாமென சந்தேகிக்கப்படும் இடங்களைத் தவிர மற்றைய அனைத்து கடற்பகுதிகளிலும் மீனவர்கள் இனி மீன் பிடிக்க முடியும் என்று மீன்பிடி மற்றும் நீர்வள அமைச்சு தெரிவித்துள்ளது.

மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சர் ராஜித சேனா ரட்னவைச் சந்தித்து பேசிய பாதுகாப்பு அமைச்சின் அதிகாரி கள் இந்த தீர்மானத்தை எடுத்து ள்ளனர்.அத்துடன் வடக்கு, கிழக்கு மாகாணத்தை தவிர்ந்த ஏனைய கடற்பிரதேசங்களில் 40 குதிரைச் சக்தி என்ஜின்களைக் கொண்ட படகுகளை பயன்படுத்தவும் முதல் முறையாக பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த 40 குதிரைச் சக்தி வலுவுடன் கூடிய 141 படகுகளை பாதுகாப்பு அமைச்சு மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சிடம் கையளித்துள்ளது. மீன்பிடி அமைச்சு அப்படகுகளை உரிய மீனவர்களிடம் ஒப்படைக்கும்.

மீன் பிடித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போது கடற்படையினர் இந்தப் படகுகளை கைப்பற்றியி ருந்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

சண்டே லீடரில் வெளியான செய்திக்கு பொன்சேகா மறுப்புத் தெரிவிக்கவில்லை பிரெட்ரிகா ஜான்ஸ்




வெள்ளைக் கொடி விவகாரம் தொடர்பாக, 2009 டிசம்பர் 12ம் திகதி ‘சண்டே லீடர் பத்திரிகையில் வெளியான தலைப்புச் செய்திக்கு சரத் பொன்சேகா ஒரு போதும் மறுப்புத் தெரிவிக்கவில்லை என்று சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் பிரெட்ரிகா ஜான்ஸ் மேல் நீதிமன்றத்தில் நேற்று இடம்பெற்ற ட்ரயல் - அட்-பார் விசாரணையின் போது தெரிவித்தார்.

வெள்ளைக் கொடி விவகாரம் தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அச்சமயம் பிரதி சட்ட மா அதிபர் வசந்த நவரட்ண பண்டாரவினால் குறுக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போதே ‘சண்டே லீடர்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியர் இவ்வாறு கூறினார்.

அத்துடன் புலிகள் இயக்க தலைவர்கள் வெள்ளைக் கொடிகளை ஏந்தி வந்த போது கொல்லப்படவில்லை என்றும் யுத்தத்தின் போதே அவர்கள் கொல்லப்பட்டதாகவும் கூறும் தெளிவான விளக்கமொன்றை 2009 டிசம்பர் 20ம் திகதி ‘சண்டே லீடர்’ பத்திரிகையில் பிரசுரிக்குமாறு சரத் பொன்சேகா பின்னர் ஒரு தடவை கூறியதாகவும் மங்கள சமரவீர உள்ளிட்ட நண்பர்கள் பலருடன் கலந்துரையாடிய பின்னரே சரத் பொன்சேகா இவ்வாறு தன்னிடம் கூறியதாகவும் பிரெட்ரிகா ஜான்ஸ் குறுக்கு விசாரணையின் போது கூறினார்.

குறிப்பிட்ட தெளிவான விளக்கத்தை பத்திரிகையில் பிரசுரித்த பின் சரத் பொன்சேகாவை தன்னால் தொடர்பு கொள்ள முடியாமற் போனதாக அவர் மேலும் கூறினார்.

விளக்கம் பத்திரிகையில் வெளியானதை யடுத்து ஜே.வி.பி.யினர் தனக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்ட தாகவும் தனது நற்பெயருக்கு களங்கம் விலைவிக்க முற்பட்டதாகவும் அவர் குறுக்கு விசாரணையின் போது குறிப்பிட்டார்.

வெள்ளைக் கொடி விவகாரம் தொடர்பான கட்டுரை பத்திரிகையில் வெளிவந்ததையடுத்து ஆயிரம் பேருக்கு மேல் அதனைப் பாராட்டியதாகவும் அது தொடர்பாக பி.பி.ஸி கூட தன்னை தொடர்பு கொண்டதாகவும் கூறிய பிரெட்ரிகா ஜான்ஸ் வெள்ளை கொடி விவகாரம் தொடர்பாக தான் எந்தவொரு ஊடகவியலாளர் மாநாட்டிலும் கலந்து கொள்ள வில்லை என்பதுடன் அவ்விடயம் பற்றி பத்தாரிகைச் செய்தி வெளியான பின் ஒரே ஒரு முறை மாத்திரம் சரத் பொன்சேகாவிடம் தான் பேசியதாகவும் குறிப்பிட்டார்.

வழக்கு விசாரணை இன்று காலை 10.30க்கு தொடரும்.
மேலும் இங்கே தொடர்க...