27 டிசம்பர், 2010

சிங்களவர்களுடன் எவ்வாறு வாழ்வது? சிறுபான்மையினருக்கு விரைவில் கருத்தரங்கு - நீதியமைச்சர்

சிறுபான்மை ,இனத்தவர்கள் பெரும்பான்மை ,இனத்தவருடன் எவ்வாறு வாழ வேண்டும் என்பதைப் பற்றி விளக்குவதற்காக விரைவில் கருத்தரங்கொன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

மடவளை மதீனா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பட்டுள்ளார்.

இந்நாட்டில் சிறுபான்மை என்ற ,இனபேதம் ,இல்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

,இருப்பினும் சிறுபான்மையினர் பெரும்பான்மையினரை சார்ந்து வாழும்போது கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகள் உண்டு' என அவர் அங்கு மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

மஹரகமவில் கொள்ளையர் மீது பொலிஸ் சூடு: ஒருவர் பலி அடகுக்கடையை கொள்ளையிட முயன்றபோது சம்பவம்




மஹரகமவில் ஆயுதம் தாங்கிய கொள்ளைக் கும்பல் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மற்றுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொள்ளைக் கும்பலுடன் தொடர்புடைய மேலும் ஒருவர் தப்பியோடியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார்.

மஹரகம, ஹைலெவல் வீதியிலுள்ள நகை அடகு வைக்கும் இடமொன்றைக் கொள்ளையிடவென நேற்றுக் காலை 9.30 மணியளவில் ஆயுதம் தாங்கிய மூன்று கொள்ளையர் முற்பட்டுள்ளனர். இது தொடர்பாக உரிய நேரத்தில் கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து அங்கு உடனடியாக விரைந்த பொலிஸார் கொள்ளையர்களை மடக்கிப் பிடிக்க முற்பட்டுள்ளனர்.

இதனையடுத்து இரு தரப்பினரும் சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளனர். இதன்போது, பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இரண்டாவது நபர் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளதுடன் மற்றையவர் தப்பிச் சென்றுள்ளார்.

சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி மற்றும் ரவைகளை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.

தப்பிச் சென்ற கொள்ளையரை கைது செய்யும் பொருட்டு மஹரகம மற்றும் நுகேகொட பொலிஸார் விசேட தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

‘தமிழ் மக்கள் ஒருமித்த குரலில் தேவைகளை முன்வைக்க வேண்டும்’


தமிழ் மக்கள் அரசியல் ரீதியாக தமது தேவைகளை ஒரு குழுவாக ஆராய்ந்து ஜனாதிபதி அவர்களிடம் சமர்ப்பிக்கும் பட்சத்தில் அது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என விஞ்ஞான அலுவல்கள் சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸ வித்தாரண தெரிவித்தார்.

அமரத்துவம் அடைந்த இலங்கையின் புகழ்பூத்த கலைஞர்களை நினைவு கூரும் நோக்கில் நேற்று முன்தினம் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் உரையாற்றிய அவர், தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை ஆராயும் உபகுழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 3 உறுப்பினர்களும், தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் மூவரும் அடங்குகின்றனர்.

இவ் உறுப்பினர்கள் ஒன்றிணை ந்து தமிழ் மக்களின் பிரச்சினைகள், அரசியல் தேவைகள் போன்ற வற்றை ஆராய்ந்து ஜனாதிபதி அவர் களிடம் கையளிக்க வேண்டும்.

ஜனாதிபதி அவர்கள் அதனைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துத் தீர்வைப் பெற்றுக்கொடுக்க முடி யும்.

மாகாண மட்டத்திலும் கிராமிய மட்டத்திலும் மக்கள் சபை உரு வாக்கப்பட்டு அவற்றுக்குரிய நிர் வாகம், அதிகாரம், நிதி வசதிகள் போன்றவை வழங்கப்படும். இதற் குரிய திட்டங்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நடைமுறைப்படு த்தப்படும் என்றார்.

இந்நிகழ்வை, கலைஞான கேசரி எஸ்.கே. தங்க வடிவேல் ஒருங்கி ணைத்திருந்தார்.

வழக்கறிஞர் கே. பத்மநாதன் தலைமை தாங்கியிருந்ததுடன், பிர தம விருந்தினராக கிழக்கு மாகாண மக்கள் வங்கியின் முன்னாள் உதவிப் பொது முகாமையாளர் ரகு துரை சிங்கமும், கெளரவ விருந்தினராக கொழும்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் மு. கதிர்காமநாதனும் சிறப்பு விருந்தினராக வானொலி நாடகத் தந்தை அமரர் சானாவின் புதல்வி திருமதி சுமதி பாலஸ்ரீதரனம் கலந்துகொண்டிருந்தனர். நிகழ்வில் செல்வி துலக்ஷிகாவின் பக்திப் பாடல்களும் பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி மாணவர்களின் பட்டிமன்றமும் நடைபெற்றன.
மேலும் இங்கே தொடர்க...

பெளத்த கொடிக்குக் கொடுக்கும் கெளரவம் ஏனைய மதக் கொடிகளுக்கும் வழங்கப்படும் ஜனாதிபதி தெரிவிப்பு

பெளத்த கொடிக்கு நாட்டில் கொடுக்கப்படும் அதே அந்தஸ்தையும் கெளரவத்தையும் ஏனைய மதங்களின் கொடிகளுக்கும் வழங்கப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அறிவித்துள்ளார்.

நாட்டின் பிரதான மதங்களின் கொடிகளான இந்துக்களின் நந்திக்கொடி, இஸ்லாமியரின் பிறைக்கொடி, கத்தோலிக்கர்களின் புனித பாப்பரசருக்கான வெள்ளை – மஞ்சள் கொடி ஆகியவற்றிற்கும் பெளத்த கொடிக்கு கிடைத்திருக்கும் அதே மதிப்பையும் மரியாதையையும் வழங்குவதற்கு நடவடிக்கைகளை எடுத்து சகல மதக் கொடிகளையும் ஜனரஞ்சனப்படுத்துவேன் என்று ஜனாதிபதி அவர்கள் உறுதியளித்துள்ளார்.

இன்று பத்து பன்னிரண்டு வயதைக் கொண்ட எங்கள் நாட்டின் பிள்ளைச் செல்வங்கள் 2020 ஆம் ஆண்டில் இந்நாட்டின் ஆட்சியாளர்களை தெரிவு செய்யும் பொறுப்பான பிரஜைகளாகி விடுவார்கள். அவர்களுக்கு நீஇப்போது இருந்தே பெற்ற தாயும் பிறந்த பொன் நாடும் அவர்களின் வாழ்க்கையில் முதலிடம் பெற வேண்டும் என்ற நற்பண்பை கற்றுக் கொடுப்பது என்னுடைய நோக்கம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்நாட்டிலுள்ள சகல இன, மதங்களைச் சேர்ந்த சிறுவர், சிறுமியர் நாட்டுப்பற்றுடன் துளிர் விட்டு வளரும் இதேவேளையில் அவர்கள் மனதில் மற்ற மதங்களை கெளரவிக்கும் நற்பண்பும் குடிகொள்ளும். இதன் மூலம், நாட்டில் உண்மையான இன ஐக்கியத்தையும், மதங்களிடையே பரஸ்பரம் நல்லெண்ணத்தையும், புரிந்துணர்வையும் வலுப்படுத்தி இலங்கையில் என்றென்றும் சமாதான வெண்புறா ஆகாயத்தில் அச்சுறுத்தல் எதுவுமின்றி கம்பீரமாக பறந்து செல்வதற்கான வாய்ப்பை நாம் ஏற்படுத்திக் கொடுக்க முடியும்.

30 ஆண்டு கால பயங்கரவாத யுத்தத்தின் வேதனை வடுக்கள் இந்நாட்டு மக்கள் அனைவரின் மனதிலும், இப்போது நிலைத்து இருக்கின்றது என்ற உண்மையை தாம் மறக்கத் தயார் இல்லை என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இந்த வேதனை வடுக்கள் இப்போது உள்ள வயது வந்தவர்களின் மனதிலிருந்து முற்றாக அகன்று விடுவதற்கு நிச்சயம் சில காலம் எடுக்கும் என்று கூறினார்.

எனவே, நாம் நாட்டின் தேசிய ஐக்கியத்தையும், பல்வேறு மதங்களிடையே உண்மையான புரிந்துணர்வையும், ஒற்றுமையையும் எமது சிறுவர்கள் மத்தியில் இப்போது இருந்தே வளர்ப்பது அவசியம் என்றும், அதன் மூலம் இன்னும் 9, 10 வருடங்களில் நாம் அனைவரும் இலங்கை மாதாவின் பிள்ளைகள்.

எங்கள் அனைவருக்கும் சம உரிமையும், சமவாய்ப்பும், சகல துறைகளிலும் இருக்கின்றது என்ற உணர்வு இந்த பிள்ளைகளின் அடிமனதில் நிரந்தரமாக குடிகொண்டுவிடும் என்று ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

ஒருவர் தன்னை இந்தியன் என்று கூறுவதைப் போல் நாமும் இனி இலங்கையர் என்று மார்பைத்தட்டி அறிமுகம் செய்யும் நாள் வரை நான் ஆவலோடு காத்திருக்கிறேன் என்றும் சுட்டிக்காட்டினார். இலங்கை மக்களும், நான் சிங்களவன், நான் தமிழன், நான் முஸ்லிம், நான் பறங்கியன் என்று தன்னை அறிமுகம் செய்து கொள்வதற்கு பதில், நான் ஒரு இலங்கையன் என்று பெருமையோடு தன்னை அறிமுகம் செய்யும் மாற்றத்தை ஏற்படுத்துவதே எனது இலட்சியக்கனவாகும். அந்தக் கனவு நிச்சயம் நனவாகிவிடும் என்று ஜனாதிபதி அவர்கள் மேலும் தெரிவித்தார்.

பெற்றோர், ஆசிரியர்கள், மதத் தலைவர்கள் மற்றும் சமூகத்திலுள்ள கற்றறிந்த பெரியோர்கள் இந்த நற்பண்புகளை எமது பிள்ளைச் செல்வங்களின் மனதில் பதியச் செய்ய வேண்டும். இறைவனின் முன்னால் எல்லோரும் சமமானவர்கள். எல்லாம்வல்ல இறைவன் ஒருவரின் இனத்தையோ, மதத்தையோ பார்த்து மக்களை நேசித்து, அவர்களுக்கு தன்னுடைய அருளாசியை தெரிவிப்பது இல்லை.

ஒருவன் நல்லவனா? கெட்டவனா? என்பதை தெரிந்து கொள்வதிலேயே, இறைவன் தனது அவதானத்தை செலுத்துகிறார் என்ற உண்மையை பிள்ளைச் செல்வங்களின் மனதில் இந்த பெரியவர்கள் நிரந்தரமாக நிலைத்திருக்கக் கூடிய வகையில், அவர்களுக்கு கற்றுக் கொடுப்பது அவசியம் என்றும் ஜனாதிபதி அவர்கள் மேலும் தெரிவித்தார்.

இவ்விதம் மற்ற இனங்களையும், மதங்களையும் மதித்து அவற்றிற்கு மரியாதை செலுத்தும் இளம் சந்ததியினர் 2020 ஆம் ஆண்டளவில் நாட்டில் உருவாகினால், இலங்கையில் வன்முறைகளோ, கிளர்ச்சிகளோ, உருவாகுவதற்கு வாய்ப்பு இருக்காது. இனக்கலவரங்கள் வளருவதற்கும் எவ்வித அடித்தளமும் அமைந்திருக்காது.

அதனால், அன்று ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் இளம் சந்ததியினருக்கு நாட்டை பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைச் செய்து தெற்காசியாவில் தேனும், பாலும் ஊற்றெடுக்கும் பொன் விளையும் ஒரு சொர்க்கப் பூமியாக மாற்றிவிட முடியும் என்று நான் அசையாத நம்பிக்கை கொண்டிருக்கிறேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மேலும் வலியுறுத்தினார்.
மேலும் இங்கே தொடர்க...

இயற்கை அழிவுகளில் மக்களைப் பாதுகாக்க அரசு திடமான திட்டம் யாழ்ப்பாணத்தில் பிரதமர் தெரிவிப்பு


சுனாமி போன்ற அனர்த்தங்கள் எதிர்காலத்தில் ஏற்படுவதை முன்கூட்டியே அறிந்துகொண்டு அழிவுகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரசாங்கம் முழு மூச்சுடன் செயற்பட்டு வருவதாக பிரதமர் டி. எம். ஜயரத்ன நேற்று (26) யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.

நாட்டுக்குக் கிடைத்த சிறந்த அரசியல் தலைமைத்துவத்தின் காரணமாகவே, நாட்டை இலகுவில் மீளக் கட்டியெழுப்ப முடிந்ததென்றும் பிரதமர் குறிப்பிட்டார். யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு தின நிகழ்வில் கலந்துகொண்டு பிரதமர் உரையாற்றினார்.

சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதிலும் இழப்புகளை மீளக் கட்டியெழுப்புவதிலும் இலங்கை முதலிடம் வகிப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

பாடசாலைகளின் பாண்ட் வாத்தியம் மற்றும் கலாசார நடன நிகழ்வுகளுடன் பிரதமர் தி.மு. ஜயரத்ன தலைமையில் யாழ்ப்பாணத்தில் நேற்று தேசிய பாதுகாப்பு தினம் அனுட்டிக்கப்பட்டது.

காலை 9.15 மணியளவில் ஹெலிகொப்டர் மூலம் யாழ் முற்றவெளியில் வந்திறங்கிய பிரதமர் தி.மு. ஜயரத்னவை பாரம்பரிய கைத்தொழில் மற்றும் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி, யாழ்.

அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் உள்ளிட்ட குழுவினர் நிகழ்ச்சி நடைபெற்ற வீரசிங்கம் மண்டபத்து க்கு அழைத்து வந்தனர். 9.20 மணியளவில் வீரசிங்கம் மண்டப வாயிலை வந்தடைந்த பிரதமர் மற்றும் அமைச்சர்கள் குழுவினரை அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர, பிரதியமைச்சர் டுலிப் விஜேசேகர ஆகியோர் வரவேற்று உடனடியாகவே 9.25க்கு சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூர்ந்து மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

நேற்று நடைபெற்ற தேசிய பாதுகாப்பு தின நிகழ்வில் கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட அலங்கார ஊர்திகள், மாணவர்களின் கோலாட்டம், சிலம்பாட்டம், காவடியாட்டம், தீப்பந்தம், பொய்க்கால் குதிரையாட்டம், நடனம் என்பனவும் கடற்படை, இராணுவம், விமானப்படை, பாடசாலை மாணவர்களின் பாண்ட் இசையும் அமைந்திருந்தன.

அலங்கார ஊர்திகள் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இருந்து ஆரம்பமாகி பண்ணை வீதியூடாக இடம்பெற்றது. இவ் அலங்காரப் பேரணி இடம்பெற்றபோது ஆயிரக்க ணக்கான மக்கள் இவ் ஊர்திகளை பார்வையிட்டு மகிழ்ந்தனர்.

இவ் அலங்கார ஊர்தி பவனியை பிரதமர் டி. எம். ஜயரத்ன, அமைச்சர்கள் மகிந்த அமரவீர, டக்ளஸ் தேவானந்தா, பிரதியமைச்சர்கள் டிலிப் விஜயசேகர, சுஜித் விஜயசுந்தர, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அஸ்வர், உட்பட பலரும் கண்டு களித்தனர்.

தேசிய பாதுகாப்பு தினத்தில் தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மிக இனிமையாக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர்களும் வேம்படி மகளிர் கல்லூரி மாணவிகளும் பாடினர். வரவேற்புக் கீதத்தை யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி மாணவர்கள் இசைத்தனர்.

நிகழ்வில் பாடசாலை மாணவர்களுக்கு தேசிய பாதுகாப்பு தினத்தையொட்டி நடாத்தப்பட்ட போட்டியில் மாகாண மட்டத்தில் வெற்றியாளர்களாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பரிசளிப்பும் இடம்பெற்றது.

ஞாபகார்த்த மலர், வழிகாட்டி நூல் என்பனவும் வெளியிட்டு வைக்கப்பட்டன.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர், 2004ம் ஆண்டு நாட்டில் இடம்பெற்ற சுனாமி அனர்த்தங்களில் 35000 மக்கள் தமது இன்னுயிரை இழந்தனர். பல கோடி ரூபா சொத்துக்கள் இழக்கப்பட்டன. இந்த கோர அனர்த்தம் நாட்டின் பதின்மூன்று மாவட்டங்களில் இடம்பெற்றன. அரசாங்கம் உயிரிழந்தவர்களைவிட சகல இழப்புகளுக்கும் நிவாரணம் வழங்கியுள்ளது. இதற்கு ஜனாதிபதி அவர்களின் தீர்க்கதரிசனமிக்க தலைமைத்துவமும் சிறந்த வழிகாட்டலும் இப்பணியை நிறைவேற்ற உதவியிருந்தது.

நிகழ்வில் இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர பிரதியமைச்சர் டுலிப் விஜயசேகர பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி முயற்சித் திறன் ஊக்குவிப்பு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர்கள் அஸ்வர், திருமதி விஜயகலா மகேஸ்வரன், மு. சந்திரகுமார், வடமத்திய மாகாண முதலமைச்சர் பேர்ட்டி பிரேம்லால் திசாநாயக்க, பிரதியமைச்சர் அப்துல் காதர், யாழ்.

மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த துறுசிங்க, வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி, யாழ். மாநகரசபை மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா, யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

பிரதமர் ஜயரத்ன சில நிமிட நேரம் தமிழிலும் உரையாற்றியபோது அங்கு குழுமியிருந்த மக்களுக்கு பெரும் வியப்பைக் கொடுத்தது. அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், அரசாங்கம் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் எந்தவித பாரபட்சமுமின்றி நிவாரணப் பணிகளையும் ஒரே நேரத்தில் மேற்கொண்டமையால் பணிகள் துரிதமாக இடம்பெற்றன.

இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் ஆறுதல் அடைந்தனர். இதன் காரணமாக சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழமையான வாழ்க்கைக்குத் திரும்ப முடிந்தது. உலகத்தில் அதுவும் ஆசிய மக்கள் மத்தியில் சுனாமி நிவாரணப் பணிகளை இலங்கைதான் சிறப்பாகச் செய்துள்ளது என்ற உலகத்தின் பாராட்டுக் கிடைத்தது.

இன்றைக்கு நாட்டில் சமாதானம் உருவாகியுள்ளது. இந்த நாடு பல்லின மக்கள் வாழும் நாடாகும். அவர்கள் வெவ்வேறு மதங்கள், கலாசாரம், பண்பாடுகளைக் கொண்டிருந்தாலும் எல்லோரும் ஐக்கியப்பட்டு தாம் வாழும் நாட்டை சுபிட்சமிக்க நாடாக மாற்ற ஒற்றுமைப்பட்டு உழைத்து வருகிறார்கள். ஜனாதிபதி அவர்கள் கூட சகல மக்களையும் தன் பிள்ளைகளாக சிந்தித்து அபிவிருத்தியில் சமவாய்ப்பு வழங்கி வருகிறார்.

புதிய வரவு செலவுத் திட்டத்தில் கூட மற்றைய மாவட்டங்களைவிட வடக்குக் கிழக்குக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு பொருளாதார சுபிட்சமிக்க பூமியாக மாறும் நிலை உருவாகியுள்ளது. நாட்டில் வடக்குக் கிழக்கு உட்பட 200 தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

ஜனாதிபதியின் மதிநுட்பமான தலைமைத்துவத்தால் கொடிய பயங்கரவாதம் அழிக்கப்பட்டதால் நாட்டில் வாழும் +(யிஙுஜி மக்களும் மகிழ்ச்சியாக வாழும் நிலையை ஜனாதிபதி அவரஙகளஙஏற்படுத்தித் தந்துள்ளார். இன்றைக்கு நாம் எதிர்கொள்ளும் சவால் ஆசியாவில் இலங்கையை பொருளாதார சுபிட்சமிக்க நாடாக கட்டியெழுப்புவதுதான்.

அதற்கு நாம் அனைவரும் எமது நாடு என்ற சிந்தனையில் ஒற்றுமைப்பட்டு எல்லோரும் எல்லா நலன்களும் பெற்றவர்களாக வாழ்வதுதான். அதற்கான கால்கோளை ஜனாதிபதி அவர்கள் எமக்கு ஏற்படுத்தி கொடுத்துள்ளார் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...