27 மார்ச், 2010

பொதுமக்கள் கைவிட்டு வந்த வாகன பட்டியல்...






முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் பொதுமக்கள் கைவிட்டுவந்த வாகனங்கள், பற்றிய விபரங்களடங்கிய பட்டியல் வவுனியா மாவட்ட செயலகம், மற்றும் வவுனியா மாவட்ட பிரதேச செயலகங் களில் பார்வைக்கு வைக்கப் பட்டுள்ளன.

தமது வாகனங்கள், உடை மைகள் குறித்து உரிமை கோருபவர்கள். தகுந்த ஆதா ரங்களுடனும், ஆவணங்களு டனும் வருமாறு வவுனியா அரச அதிபர் திருமதி பீ. எம். எஸ். சார்ள்ஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

மூன்று தமிழ் வேட்பாளர்கள் ஐ.ம.சு.மு.வில் இணைவு






திகாமடுல்ல மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிடும் மூன்று தமிழ் வேட்பாளர்கள் ஐ.ம.சு.மு வில் இணைந்துள் ளனர்.

ரீ.எம்.வி.பி. வேட் பாளர்களான காத்தமுத்து கணேஸ், ஜெயரட்ணம் நேசராசா மற்றும் ஈரோஸ் வேட்பாளரான த. இராசலிங்கம் ஆகியோரே அரசுடன் இணைந்து கொண்டவர்களாவர்.

ஐ.ம.சு.மு. தமிழ் வேட்பாளர் கு. இனியபாரதிக்கு ஆதரவு தெரிவித்தே இவர்கள் இணைந்து கொண்டனர்.

இதேவேளை, தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட செயலாளர் எஸ். பன்னீர்செல்வமும் ஆளும் கட்சி வேட்பாளர் இனியபாரதியுடன் இணைந்துகொண்டுள் ளார்.
மேலும் இங்கே தொடர்க...

பரப்பாங்கண்டல் பிரதேசத்தில் புதிய வீடுகளை நிர்மாணிக்கும் பணி துரிதம்





200க்கு மேற்பட்ட குடும்பங்கள் மீள்குடியேற்றம்



மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பரப் பாங்கண்டல் பிரதேசத்தில் துரிதகதி யில் புதிய வீடுகளை நிர்மாணிப்ப தற்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மன்னார் பிரதேச செயலாளர் திரு மதி நந்தினி ஸ்ரான்லி டி மெல் தெரி வித்தார்.

பரப்பாங்கண்டல் பகுதியில் சுமார் 200 ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள் ளனர்.

பரப்பாங்கண்டல் பகுதியில் மீள் குடியேற்றம் செய்யப்பட்டவர்களில் கணிசமானோருக்கு மீள்குடியேற்றக் கொடுப்பனவுத் தொகை வழங்கப் பட்டிருக்கின்றது.

ஏனையோருக்கும் அதனை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு ள்ளதாக பிரதேச செயலாளர் குறிப்பி ட்டார்.

இவை தவிரவும் அப்பகுதிகளில் மீள்குடியேறியிருக்கும் மக்களுக்கான அடிப்படை வசதிகளையும் தேவைக ளையும் மேம்படுத்தும் பொருட்டு அனுமதிபெற்ற சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலமாக தற்காலிக வீடுகள், நிரந்தர வீடுகள் உள்ளடங்கலாக பல தேவைகளை யும் பெற்றுக்கொடுப்பதற்கான ஏற் பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வரு வதாகவும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களின் பிரதிபலன்களை 2012இல் பெறலாம்




ஜா-எலயில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ



இன, மதங்களுக்கிடையிலான அமைதியும் ஒற்றுமையும் அபிவிருத்தி யுகத்துக்கு மிக முக்கியமானதாகுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாம் நாட்டை ஐக்கியப்படுத்தியது போன்றே இன, மத பேதமின்றி சகல மக்களையும் சகல உரிமைகளுடனும் சுதந்திரமாக வாழ வைப்போம். அதற்கான பொறுப்பினையும் ஏற்றுள்ளோம் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நாட்டின் எதிர்காலத்திற்காக மேற் கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங் களின் பிரதிபலன்களை 2012ம் ஆண்டில் பெற்றுக்கொள்ள முடியுமென தெரிவித்த ஜனாதிபதி; எதிர்கால அபிவிருத்திக்காக இணைந்து செயற்படவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்கும் மாபெரும் மக்கள் பேரணிக் கூட்டம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலை மையில் ஜா - எல பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

அமைச்சர்கள் டி. எம். ஜயரத்ன, பீலிக்ஸ் பெரேரா, ஜோன்ஸ்டன் பெர்னா ண்டோ, சரத்குமார குணரத்ன, ஜனாதி பதியின் ஆலோசகரும் வேட்பாளருமான பெஷில் ராஜபக்ஷ உட்பட அமைச்சர்கள் வேட்பாளர்கள் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இப்பிரசாரக் கூட்டத்தில் ஜனாதிபதி மேலும் உரையாற்றுகை யில் :-

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 18 இலட்சம் மேலதிக வாக்குகளைப் பெற்று நான் அமோக வெற்றிபெற பாரிய பங்களிப்புச் செய்த கம்பஹா மாவட்ட மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவிப்பதற்கு இச்சந்தர்ப் பத்தினைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.

அத்துடன் நான் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறாவிட்டால் என்னைச்

சிறையிலடைப்பதற்கும் மண்ணுக்கே அனுப்புவதற்கும் சதிகள் மேற்கொள்ள ப்பட்டிருந்தன. இந்த வெற்றியின் மூலம் அத்தகைய நிலையிலிருந்து என்னைப் பாதுகாத்தமைக்காகவும் நான் மக்களுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.

2005ம் ஆண்டு நான் மஹிந்த சிந்தனைத் திட்டத்தை முன்வைத்து தேர்தலில் நின்றபோது இந்த நாட்டை மீட்டுத்தருமாறு மக்கள் கோரினர்.

அப்போது இந்த நாட்டில் சிங்கப்பூரைப் போன்ற இருபது மடங்குப் பிரதேசம் பயங்கரவாதிகளிடமே இருந்தது. அதனை நாம் மீட்டோம்.

நாட்டு மக்கள் அனைவரதும் மனங்களை ஒன்றுதிரட்டு அதனை நாம் வெற்றிகரமாக முன்னெடுக்க முடிந்தது. பயங்கரவாதிகளை பயங்கரவாதிகள் எனக் கூறத் தயங்கிய தலைவர்கள் போலல்லாது பயங்கரவாதிகளை பயங்கரவாதிகள் என அழைப்பதற்குப் பழகினோம். இத்தகைய சூழலிலே நாம் பயங்கரவாதத்திடமிருந்து தாய்நாட்டை மீட்டு அதனை அபிவிருத்திக்கு உட்படு த்தினோம்.

முதல் தடவையாக 45,000 பட்டதாரிகளுக்குத் தொழில் வாய்ப்பினை வழங்கியதுடன் அரச சேவை ஊழியர்களை 12 இலட்ச மாக்கவும் முடிந்தது. இதன் பிரதிபலனை நாம் இப்போது காண முடிகின்றது. கடந்த தேர்தலைப் போலவே இம்முறை தேர்தலிலும் 75 வீத அரச ஊழியர்கள் எமக்கே வாக்களித்துள்ளனர்.

நாட்டின் மின் உற்பத்தித் துறையை மேம்படுத்தினோம். பங்களாதேஷ் போன்ற நாடுகளில் பல மணித்தியாலய மின் துண்டிப்பு தொடர்ச்சியாக இடம் பெறுகின்ற போதிலும் இங்கு அவ்வாறி ல்லை. மின் உற்பத்தி நிலையங்கள், துறை முகங்கள், மேம்பாலங்கள் நெடுஞ்சாலைகள் என பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

இவற்றின் பிரதிபலன்களை 2012ம் ஆண்டில் எம்மால் பெற்றுக்கொள்ள முடியும்.

எதிர்கால சந்ததியினருக்காகவே இத்தகைய திட்டங்களை முன்னெடுத்துள் ளோம். இதன் மூலம் நாட்டின் பொரு ளாதாரத்தில் பெரும் பலனை நாம் எதிர்காலத்தில் பெற முடியும். இந்த நாட்டில் யுத்தம் இடம்பெற்ற காலத்திலேயே நாம் இத்தகைய அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்தோம். அதன் பிரதிபலன் மக்களை வந்து சேரும் யுகம் தற்போது ஆரம்பமாகியுள்ளது.

இத்தகைய திட்டங்களைத் தொடர்ந்தும் முன்னெடுக்க மக்களின் ஆதரவு எமக்கு அவசியம்.

நாம் நாட்டை ஒன்றிணைத்தது போன்றே சகல இன, மத மக்களையும் சகல உரி மைகளுடனும் சுதந்திரத்துடனும் வாழ வைப்பதும் எமது பொறுப்பாகும். அதே போன்று அவரவரது மத வழிபாடுகளுக் கான உரிமைகளை வழங்குவதும் எமது பொறுப்பு, அதனை நாம் நிறைவேற்று வோம். இன, மதங்களுக்கிடையிலான அமைதியும் ஒற்றுமையும் நாட்டின் அபிவிருத்தி யுகத்துக்கு மிக முக்கியமானது. அதேபோன்று வினைத்திறனுள்ள அரசியல் தலைவர்களை உருவாக்குவதும் எமது பொறுப்பாகும். அதற்காக நாம் அனைவ ரும் ஒன்றிணைவோம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

மெனிக்பாம் மி வலயம் 2, வவுனியா தமிழ் ம.வி.: இடம்பெயர்ந்தவர்கள் வாக்களிக்க 33 வாக்குச் சாவடிகள்




இடம்பெயர்ந்துள்ள வாக்காளர்களுக்கென வவுனியா மெனிக்பாம் வலயம் மி 2 மற்றும் வவுனியா தமிழ் மகா வித்தியாலயம் என்பவற்றில் 33 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன் இலவச போக்குவரத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

தேர்தல் திணைக்களத்தினால் அங்கீகரிக் கப்பட்டுள்ள ஆளடையாளத்துடன் நேர காலத்துடன் வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று வாக்களிக்குமாறு வவுனியா தெரிவத்தாட்சி அதிகாரி திருமதி பீ. எம். எஸ். சார்ள்ஸ் அறிவித்துள்ளார்.

நிவாரணக் கிராமங்களிலுள்ளவர்களுக்கென மெனிக்பாம் வலயம் இரண்டில் 17 வாக்குச் சாவடிகளும், இதுவரை மீளக் குடியமர்த்தப்படாத நிவாரணக் கிராமங்களில் அல்லாதவர்களுக்கென வவுனியா தமிழ் வித்தியாலயத்தில் சுமார் 16 வாக்குச் சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்தல் திணைக்களத்தினால் அங்கீகரிக்க ப்பட்டுள்ள எட்டு ஆளடையாள அட்டை களும் இல்லாதவர்கள் உடனடியாக வவு னியா உதவித் தேர்தல் திணைக்களத் துடன் தொடர்புகொண்டு ஆளடையாள அட்டையை பெற்றுக்கொள்ளுமாறும் கேட்கப்படுகின்றனர்.

நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ள இடம்பெயர்ந்தவர்கள் வாக்களிக்கச் செல்வதற்காக இலவச பஸ் சேவையை பெற்றுக்கொள்ள காமினி வித்தியாலயத்துக்கு செல்லவேண் டும்.

வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் உள்ளடங்கிய வன்னி மாவட்டத்தில் 209 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.

மீளக்குடியமர்த்தப்பட்டவர்கள் தாம் வதியும் பகுதியிலுள்ள வாக்குச் சாவடியில் வாக்களிக்க முடியும்.

அத்துடன் இடம்பெயர்ந்துள்ள வாக்காளர்களாக தம்மை பதிவு செய்துகொள்வதற்காக விண்ணப்பிக்காத, விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களும் உடனடியாக மாவட்ட செயலகம், மற் றும் நிவாரணக் கிராமங்கள் அமை க்கப்பட்டுள்ள விசேட கரும பீடத்தில் பதிவு செய்துகொள்ளுமாறும் தெரிவத்தாட்சி அலுவலர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

இஸ்லாத்துக்கு மாறிய சிங்களப்பெண்ணை விடுவிக்குமாறு கோரிக்கை

பௌத்தத்திலிருந்து இஸ்லாத்துக்கு மாறி பௌத்தத்துக்கு எதிராக நூல்கள் எழுதினார் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ள இலங்கைப் பெண்ணை விடுவிக்குமாறு பஹ்ரேன் மனிதஉரிமை ஆர்;வலர்கள் இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக கல்ப் டெய்லி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. சாரா மலனி பெரேரா என்ற சிங்களப்பெண் தனது இளவயது முதல் பஹ்ரேனில் வசித்து வந்தவராவார். இஸ்லாத்தை தழுவிக்கொண்ட சாரா, தான் அந்த மதத்தை நேசிப்பதற்கான காரணத்தை விளக்கியும், மதங்களை ஒப்பிட்டும் இருநூல்கள் எழுதியுள்ளார். இந்நிலையில் விடுமுறைக்காக இலங்கை வந்தபோது அவர் கைதுசெய்யப்பட்டதாக கூறப்படுகிறது. சாராவை விடுதலை செய்வதற்கு நடவடிக்கைகளை எடுத்துவருவதாக பஹ்ரேன் மனித உரிமைகள் சங்கத்தின் செயலாளர் நாயகம் டொக்டர் அப்துல்லா அல் டீரசி தெரிவித்துள்ளார். 1999ம் ஆண்டு சாரா இஸ்லாம் மதத்துக்கு மாறியதாகவும், அவரைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினரும் இஸ்லாம் மதத்தை தழுவிக்கொண்டதாகவும் பஹ்ரேனின் கல்ப் டெய்லி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இருளிலிருந்து வெளிச்சத்துக்கு என்ற நூலும் கௌதம புத்தரின் உண்மையான போதனைகள் மற்றும் கேள்வி பதில் அடங்கியதாக மற்றுமொரு நூலினையும் அவர் வெளியிட்டுள்ளார். அவற்றை இலங்கையிலிருந்து பஹ்ரேனுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தபோதே அவர் கைதுசெய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

வாக்கு முடிவுகளை அறிவிக்கும் நிலையத்தில் கண்காணிப்பில் ஈடுபட அனுமதி


நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்குமுடிவுகளை அறிவிக்கும் நிலையத்தின் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் மத்திய நிலையங்களில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட பெப்ரல் மற்றும் தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் ஆகியவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்கவுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக பவ்ரல் அமைப்பின் பிரதி நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராய்ச்சி தெரிவித்துள்ளார். இந்நிலையில் தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துச் செல்வதாக தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் கூறியுள்ளது. தேர்தல் தொடர்பில் இதுவரை 214வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் நிலையம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

வடக்கில் மீள்குடியேற்றத்தை விரைவுபடுத்தியுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவிப்பு

வவுனியா நலன்புரி நிலையத்திலுள்ள இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்தும் பணிகளை விரைவுபடுத்தியுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் ஒருகட்டமாக வவுனியா நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ள வவுனியா வடக்குப் பகுதியைச் சேர்ந்த 540பேர் இன்றையதினம் மீள்குடியமர்த்தப்படுவதாக அமைச்சு அறிவித்துள்ளது. அத்துடன் வவுனியா செட்டிகுளம் மெனிக்பாம் நலன்புரி நிலையத்தில் தங்கியிருந்த 1150பேர் நேற்றையதினம் அவர்களது சொந்த இடமான கிளிநொச்சி கரைச்சி பகுதியில் மீள்குடியமர்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை வவுனியா நலன்புரி நிலையங்களில் 76,000பேர் மாத்திரமே இன்னமும் எஞ்சியுள்ளதாகவும் அவர்களும் விரைவில் மீள்குடியமர்த்தப்படுவர் என்றும் மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

புளொட் தலைவர் த.சித்தார்த்தன், புளொட் வன்னி அமைப்பாளர் க.சிவநேசன் (பவன்) ஆசிகுளம் பகுதிக்கு விஜயம்-



வன்னி மாவட்டத்தில் நங்கூரம் சின்னத்தில் போட்டியிடும் புளொட் வேட்பாளர்களான புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன், புளொட்டின் வன்னிப் பிராந்திய அமைப்பாளர் கந்தையா சிவநேசன் (பவன்) மற்றும் புளொட் முக்கியஸ்தர்களும், ஆதரவாளர்களும் இன்று வவுனியா ஆசிகுளம் பகுதிக்கு விஜயம்செய்து அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடியுள்ளனர். அங்கு உதயசூரியன் விளையாட்டுக் கழகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்திலும் அவர்கள் உரையாற்றினர். இங்கு உரையாற்றிய புளொட் தலைவர் த.சித்தார்த்தன் மற்றும் புளொட் வன்னி அமைப்பாளர் க.சிவநேசன் (பவன்) ஆகியோர், ஆசிகுளம் கிராமத்தைப் பொறுத்தமட்டில் இது ஓர் எல்லைப்புறக் கிராமமாகும்.

இந்த எல்லைப் பகுதியைப் பாதுகாப்பதற்காக எமது கட்சி எந்தளவுக்கு பாடுபட்டதென்பதும், எவ்வளவு பிரச்சினைகளுக்கும், சவால்களுக்கும் முகம் கொடுத்தது என்பதும் இங்கு வாழும் மக்கள் அனைவரும் நன்கு அறிந்த விடயமாகும். நாம் பாராளுமன்றத்தில் இருந்த காலத்தில் இப்பகுதிகளில் மேற்கொண்ட அபிவிருத்திப் பணிகளுக்குப் பிறகு இப்பிரதேசங்களில் எந்தவிதமான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படவில்லை. அத்துடன் அபிவிருத்திக்கான எந்தவொரு முன்னெடுப்புக்களும் மேற்கொள்ளப்படவில்லை. நாங்களும் தமிழ் தேசியவாதிகள் தான். அதில் யார் கூட யார் குறைய என்று சொல்வதற்கு எதுவுமில்லை. ஆயினும் தமிழ்த் தேசியத்தின் பெயரினால் மக்களின் அவலத்தில் அரசியல் நடத்த முடியாது. இப்பகுதியில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. வன்னியில் இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியமர்த்தப்பட வேண்டும். மீள்குடியமர்ந்துள்ள மக்களின் தொழில் வாய்ப்பு, போக்குவரத்து, கல்வி, மருத்துவம் என பல்வேறு அத்தியாவசிய தேவைகளும் பூர்த்திசெய்து கொடுக்கப்பட வேண்டும். அத்துடன் தமிழ்பேசும் மக்களின் பிரச்சினைக்கு உரிய தீர்வொன்றை பெற்றுக்கொள்வதற்கான முனைப்புக்களையும் மேற்கொள்ள வேண்டும். ஆகவே இந்நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு மக்களின் ஆதரவு மிகவும் அவசியமாகும். எனவே பொதுத் தேர்தலின்போது நீங்கள் நங்கூரம் சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) வேட்பாளர்களுக்கு உங்கள் பூரண ஆதரவினை வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இப்பகுதி மக்கள் சிலர் இங்கு உரையாற்றுகையில், புளொட் அமைப்பு இப்பகுதியில் இல்லாதிருந்தால் இப்பகுதிகளில் நாம் பாதுகாப்பாக வாழ்ந்திருக்க முடியாது. இனிமேலும் இப்பகுதிகளில் பாதுகாப்பாக வாழவும் முடியாது.

எனவே அனைத்து மக்களும் புளொட் அமைப்பினரை வரவேற்று பூரண ஒத்துழைப்பினையும், ஆதரவினையும் வழங்குவதே சிறந்ததாகும். கடந்த காலங்களில் புளொட் அமைப்பினர் இப்பகுதி மக்களின் அமைதியான வாழ்விற்காக பல்வேறு அர்ப்பணிப்புகளுடனான சேவைகளை புரிந்துள்ளனர். இதன்போது பல்வேறு இழப்புக்களையும் அவர்கள் சந்தித்துள்ளனர். அவர்களின் சேவைகள் தற்போதும் தொடர்ந்த வண்ணமேயுள்ளன. எனவே அவர்களின் சேவைகள் தொடர வேண்டும். இதற்கு அனைவரும் பூரண ஆதரவினை வழங்க வேண்டுமென்று தெரிவித்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

இந்திய எல்லைக்கு பாகிஸ்தான் கூடுதல் படைகளை





இந்திய எல்லைக்கு பாகிஸ்தான் கூடுதல் படைகளை அனுப்பி உள்ளதாக லண்டனில் உள்ள அந்நாட்டு தூதர் வாஜித் ஷாம்சுல் ஹசன் தெரிவித்தார்.

லண்டனிலிருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மும்பை தாக்குதலை அடுத்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.​

இதன் காரணமாகவே இந்திய எல்லைக்கு கூடுதல் படைகளை அனுப்ப வேண்டிய கட்டாயம் பாகிஸ்தானுக்கு ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

இந்தியாவுடன் தொடர்ந்து நிலவி வரும் பதற்றம் காரணமாக ஆப்கானிஸ்தான் எல்லையில் தலிபான் பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் முழுத் திறமையையும் பாகிஸ்தானால் வெளிப்படுத்த முடியவில்லை என்றும் அவர் கூறினார்.

இந்திய எல்லையில் பாகிஸ்தான் படைகள் பலவீனமாக இருக்கக் கூடாது என்பதையும் பாகிஸ்தான் அரசு கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

ஆப்கானிஸ்தான் எல்லையில் முகாமிட்டுள்ள தலிபான் தீவிரவாதிகளை ஒடுக்க ராணுவத்தின் முழு பலத்தையும் பயன்படுத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது.​

ஆனால்,இந்தியாவின் நெருக்குதல் காரணமாக எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற நிச்சயமற்ற நிலையில் பாகிஸ்தான் உள்ளது.

ஆப்கானிஸ்தான் எல்லையில் முழு பலத்தோடு எங்களால் செயல்பட முடியவில்லை.​ இந்திய எல்லையில் அமைதி நிலவ வேண்டும்.​

அப்போது தான் தலிபான்களுக்கு எதிராக சிறப்பாக போரிட முடியும்.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள பதற்றத்தைக் குறைக்க சர்வதேச நாடுகள் தலையிட வேண்டும் நாங்கள் அழைப்பு விடுத்தாலும் எந்தவொரு நாடும் இது குறித்து இந்தியாவிடம் பேச மறுக்கிறது என்றார் அவர்.

இந்திய எல்லைக்கு கூடுதல் படை வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளதை பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் ஒப்புக்கொள்கின்றனர்.​ ஆனால் எவ்வளவு படைகள் அனுப்பப்பட்டுள்ளது என்ற விவரம் வெளியிடப்படவில்லை.

இந்தியாவின் அதிவேக வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட வேண்டும் என்ற நோக்கத்தில் காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளித்து ஆயுதப் பயிற்சி அளித்து வருகிறது பாகிஸ்தான்.​

அதேநேரத்தில் சர்வதேச

நாடுகளிடம் தான் நல்ல பிள்ளை போல் வேஷம் போடுகிறது.​

தான் அமைதிக்குத் தயாராக இருப்பது போலவும் இந்தியாதான் அமைதிப் பேச்சுக்கு முன்வருவதில்லை என்றும் பிரசாரம் செய்து வருகிறது பாகிஸ்தான்.
மேலும் இங்கே தொடர்க...

இந்திய மாணவர்களிடமிருந்து பணம் பறிக்கும் பல்கலைக்கழகங்களுக்கு பிரிட்டன் எச்சரிக்கை



:

மாணவர்களிடமிருந்து அதிக அளவில் பணம் பறிக்கும் பல்கலைக்கழகங்களுக்கு பிரிட்டிஷ் கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்திய மாணவர்கள் மற்றும் ஐரோப்பிய நாடுகள் அல்லாத வெளிநாட்டு மாணவர்களை கவர்ந்து இழுக்கும் வகையில் பிரிட்டனில் உள்ள சில பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன.​

உயர் கல்வி என்ற பெயரில் அவர்களிடமிருந்து அதிக அளவில் பணம் பறிக்கப்படுகிறது.​ ஆனால் அதற்கேற்ப கல்வி போதிக்கப்படுவதில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது.

பிரிட்டன் பல்கலைக்கழங்களின் முகவர்கள் இந்தியாவில் செயல்பட்டு வருகின்றனர்.​ ​ வெளிநாட்டில் உயர் கல்வி என்ற ஆசையில் முகவர்கள் மூலம் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் ஆண்டுதோறும் பிரிட்டனில் படிக்கச் செல்கின்றனர்.

சாதாரணமாக பிரிட்டன் மாணவர்களிடம் வாங்கும் கட்டணத்தைபோன்று மூன்று மடங்கு கட்டணம் இந்திய மாணவர்களிடம் வசூலிக்கப்படுகிறது.​ அதாவது முதுகலைப் பட்டத்துக்காக ஓராண்டுக்கு பிரிட்டன் மாணவரிடமிருந்து ரூ.2 லட்சம் கட்டணம் வசூலிக்கப்படும்போது,​​ அதுவே இந்திய மாணவரிடமிருந்து ரூ.6 லட்சமாக வசூலிக்கப்படுகிறது.​

இவ்வாறு பணத்துக்காகவே பிரிட்டனில் உள்ள சில பல்கலைக்கழங்கள் செயல்பட்டுவருவதுடன் அவற்றின் கல்வி போதிப்புத் தரமும் மிகவும் மோசமாக இருப்பதாக புகார்கள் வந்துள்ளன.​ இதனால் இந்திய மாணவர்கள் பலர் ஏமாற்றம் அடைகின்றனர் என்று பிரிட்டிஷ் கவுன்சிலின் தலைமை அதிகாரி மார்ட்டின் டேவிட்சன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:​ கடந்த சில ஆண்டுகளாக இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு மாணவர்களை அழைத்து வருவதில் பிரிட்டன் பல்கலைக்கழகங்கள் போட்டி போட்டுக்கொண்டு செயல்படுகின்றன.​ இதன் மூலம் அப்பல்கலைக்கழங்கள் பணம் கொழிப்பதால்,​​ கல்வியை போதிப்பதில் கோட்டைவிடுகின்றன.​

இதனால் அதுபோன்ற பல்கலைக்கழங்களுக்கு வழங்கப்படும் நிதியை ரத்து செய்யப்போவதாக பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது.​

இதன் மூலம் அப்பல்கலைக்கழங்கள் அதிக அளவில் மாணவர்களை தேர்வு செய்வது தடுக்கப்படும் என்று டேவிட்சன் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கையில் வறுமையால் மகன்களை நீதிமன்றத்தில் ஒப்படைத்த பெண்!




இலங்கையில் தனது குழந்தைகளுக்கு உணவுகூட அளிக்க முடியாத அளவுக்கு வறுமை வாட்டியதால் 4 குழந்தைகளையும் நீதிமன்றத்தில் ஒப்படைத்தார் ஒரு பெண்.

​ பெண்ணின் துயரமான வாழ்க்கை நிலைமையையும்,​​ அவரது கோரிக்கையையும் பரிசீலித்த நீதிபதி,​​ 4 குழந்தைகளையும் ஏற்று அரசு குழந்தை காப்பக மையத்திடம் ஒப்படைத்தார்.

​ அந்த பெண்ணின் மற்றொரு மகன் சில தினங்களுக்கு முன்பு மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இறந்தான்.

​ வறுமையால் 3-வயதுடைய அந்த சிறுவனை அவரது தாய் தான் ஆற்றில் தூக்கி வீசினார் என்றும்,​​ இதனால் கோமா நிலையை அடைந்து உயிருக்குப் போராடிய சிறுவன் சிகிச்சை பலனின்றி இறந்தான் என்றும் புகார் கூறப்பட்டது.

​ இந்தச் சம்பவம் நடந்த சில தினங்களிலேயே வழக்கறிஞர் ஒருவரின் உதவியுடன் நீதிமன்றத்தை அணுகிய அந்த பெண்,​​ தனது நிலைமையை எடுத்துக்கூறி தனது 4 குழந்தைகளையும் அரசு ஏற்றுக்கொள்ள உத்தரவிட வேண்டும் என்று கோரினார்.​ இதை பரிசீலித்த நீதிமன்றமும் 4 குழந்தைகளையும் ஏற்றுக்கொள்ளுமாறு அரசு குழந்தை காப்பக மைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.​ இதையடுத்து அந்த 4 குழந்தைகளையும் அரசே ஏற்றுக்கொண்டது.

​ இலங்கையின் மேற்கு பகுதியான ஹோமகாமாவில் அந்த பெண் தனது கணவர்,​​ 5 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.​ இந்நிலையில் அந்த பெண்ணின் கணவர் அவரை குழந்தைகளுடன் கைவிட்டுவிட்டு தலைமறைவாகிவிட்டார்.​

இதனால் வாழ்க்கை நடத்த வருமானம் ஏதும் இன்றி அந்த பெண் தனது குழந்தைகளுடன் திண்டாடியுள்ளார்.​ வீட்டுக்கு வாடகை கொடுக்க முடியவில்லை.​ இதனால் வீட்டை காலி செய்யுமாறு வீட்டு உரிமையாளர் நெருக்குதல் அளித்துள்ளார்.

​ அந்த பெண்ணின் தாய்,​​ தந்தை ஏற்கெனவே இறந்துவிட்டனர்.​ அவருக்கு இருந்த ஒரே ஆதரவு அவரது சகோதரிதான்.​ ஒரு சில மாதங்கள் உதவி வந்த அவரது சகோதரியும் மேலும் உதவ முடியாத நிலைக்கு ஆளானார்.​

இதனால் அந்த பெண் தனது குழந்தைகளுக்கு உணவுகூட அளிக்க முடியாத அளவுக்கு வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டார்.

​ இதனால் விரக்தி அடைந்துதான் ஒரு மகனை ஆற்றில் வீசியதாகவும்,​​ பிற குழந்தைகளையும் கொன்றுவிட்டு அவரும் தற்கொலை செய்து கொள்வது குறித்து யோசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.​

இந்நிலையில் அவரது நிலைமையை அறிந்த சிலர் நீதிமன்றத்தை அணுக யோசனை தெரிவித்ததாகவும்,​​ இதையடுத்து அவர் நீதிமன்றத்தை அணுகியதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

'மதமாற்றம் தவறல்ல'-சாராவை விடுவிக்கக் கோரும் மனித உரிமை அமைப்புகள்

பௌத்தத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறி பௌத்தத்துக்கு எதிராக நூல்கள் எழுதினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கைப் பெண்ணை விடுவிக்குமாறு பஹ்ரேன் நாட்டு மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக கல்ப் டெய்லி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சாரா மலனி பெரேரா என்ற சிங்களப் பெண் தனது இளவயது முதல் பஹ்ரேனில் வசித்து வந்தவராவார். இஸ்லாத்தை தழுவிக்கொண்ட சாரா, தான் அந்த மதத்தை நேசிப்பதற்கான காரணத்தை விளக்கியும் மதங்களை ஒப்பிட்டும் இரு நூல்கள் எழுதியுள்ளார்.

இந்நிலையில் விடுமுறைக்காக இலங்கை வந்தபோது அவர் கைது செய்யப்பட்டதாக பி.பி.சி. செய்திச் சேவை தெரிவித்தது.

சாராவை விடுதலை செய்வதற்கு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக பஹ்ரேன் மனித உரிமைகள் சங்கத்தின் செயலாளர் நாயகம் டாக்டர் அப்துல்லா அல் டீரசி தெரிவித்துள்ளார்.

"சாரா மலனி பெரேரா அவரது சொந்த விருப்பின் பேரிலேயே இஸ்லாம் மதத்துக்கு மாறியுள்ளார். அவரை யாரும் பலவந்தப்படுத்தவில்லை. அவர் எழுதிய நூல்களில் பௌத்த மதத்துக்கு எதிரான கருத்துகள் இருப்பதாக நான் நினைக்கவில்லை.

இலங்கை அதிகாரிகள் அவரை விடுதலை செய்து பஹ்ரேனுக்கு அனுப்ப வேண்டும். பஹ்ரேனில் அவர் நீண்டகாலம் வசித்தவர். அவருக்கு இது சொந்த நாட்டைப் போன்றது" என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

1999 ஆம் ஆண்டு சாரா இஸ்லாம் மதத்துக்கு மாறினார். அவரைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினரும் இஸ்லாம் மதத்தை தழுவிக் கொண்டதாக பஹ்ரேனின் கல்ப் டெய்லி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

'இருளிலிருந்து வெளிச்சத்துக்கு' என்ற நூலும் கௌதம புத்தரின் உண்மையான போதனைகள் மற்றும் கேள்வி-பதில் அடங்கியதாக மற்றுமொரு நூலினையும் அவர் வெளியிட்டுள்ளார். அவற்றை இலங்கையிலிருந்து பஹ்ரேனுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தபோதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதேவேளை, பஹ்ரேனின் பல்வேறு மனித உரிமை அமைப்புக்களும் சாராவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

எதிர்க்கட்சிக்குத் தாவிய யோகராஜன்மீது இ.தொ.கா. ஆதரவாளர்கள் தாக்குதல்

ஐக்கியத் தேசிய கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.யோகராஜன் நேற்றுமாலை ஹட்டன் கொட்டகலை மேபீல்ட் தோட்டத்தில், இ.தொ.கா. ஆதரவாளர்களால் தாக்கப்பட்டதுடன் அவரது வாகனமும் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து, பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது ஆர்.யோகராஜன் சிறு காயங்களுக்குள்ளானதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

இது தொடர்பாக பத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினராக இருந்துவந்த ஆர்.யோகராஜன் கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது கட்சித் தலைமைப் பீடத்துடன் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக எதிர்க்கட்சியில் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

விவசாயியின் வயிற்றில் 500 கிராம் எடையில் கல்! : மகியங்கனையில் சம்பவம்



விவசாயி ஒருவரின் சிறுநீரகத்திலிருந்து சுமார் 500கிராம் எடையுள்ள கல் ஒன்று சத்திர சிகிச்சை மூலம் எடுக்கப்பட்ட சம்பவம் ஒன்று மகியங்கனை பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

எச்.எம்.ஆரியசேன (வயது 43) என்பவர் கடந்த சில மாதங்களாக வயிற்றுவலியால் பாதிக்கப்பட்டிருந்தார். இவரை பரிசோதனை செய்த வைத்தியர்கள் சிறுநீரகத்தில் கல் இருப்பதனை உறுதி செய்தனர்.

இவரை சத்திர சிகிச்சைக்கு உட்படுத்திய வேளை, வைத்தியர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் 26 சென்றி மீற்றர் சுற்றளவுடைய கல் இருந்தமை தெரிய வந்துள்ளது.

மகியங்கனை வைத்தியசாலையில் இவ்வாறானதொரு சத்திர சிகிச்சை இடம்பெற்றது இதுவே முதல் தடைவ என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

யாழ். வணிகர் சங்கக் கண்காட்சி இன்று ஆரம்பம்




யாழ்ப்பாண வணிகர் கழகத்தின் மூன்று நாள் வர்த்தகக் கண்காட்சி இன்று முதல் ஆரம்பமாகிறது.

யாழ்ப்பாண வணிகர் கழகம் ஏற்பாடு செய்திருந்த வர்த்தகக் கண்காட்சி இன்று முதல் தொடர்ந்து மூன்று தினங்கள் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையிலும், யாழ். மத்திய கல்லூரியிலும் ஆரம்பமாகிறது.

இக்கண்காட்சியில் யாழ்ப்பாண உள்ளூர் உற்பத்திப் பொருட்களுடன் தென்னிலங்கை வர்த்தகர்களின் பொருட்களும் காட்சிக்கு வைக்கப்படுகின்றன.

வர்த்தகக் கண்காட்சியை யாழ். மாநகர மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா ஆரம்பித்து வைக்கின்றார்.
மேலும் இங்கே தொடர்க...

யாழ். பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா நேற்று ஆரம்பம்




யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் 25ஆவது பட்டமளிப்பு விழா கடந்த ஐந்து வருடகால இடைவெளியின் பின்னர் நேற்று வெள்ளிக்கழமை ஆரம்பமாகியது. யாழ். பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் ம.சிவசூரியா தலைமையில் தமிழ் பண்பாடுகளுடன் மிகவும் எழுச்சிகரமாக இந்நிகழ்வு இடம்பெற்றது.

பல்கலைக்கழக வேந்தா பேராசிரியர் ம.சிவசூரியா, உப வேந்தா பேராசிரியர் நா.சண்முகலிங்கன் ஆகியோர் குடை ஆலவட்டத்துடன் முன்னே செல்ல அதனைத் தொடர்ந்து பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் சென்றனர். அவர்களைத் தொடர்ந்து பட்டம் பெறும் மாணவாகள் அணிவகுத்துப் பட்டமளிப்பு விழா நடைபெறும் கைலாசபதி மண்டபத்திற்கு மங்கள் வாத்தியத்துடன் அழைத்துச் செல்லப்பட்டனர்.

2005, 2006, 2007ஆம்ஆண்டுகளில் பயிற்சிநெறிகளை நிறைவு செய்த 3972 பேர் பட்டமளித்துக் கௌரவிக்கப்பட்டனர்.

நேற்று ஆரம்பமான இந்நிகழ்வு இன்று சனிக்கிழமையும், நாளை ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறும். தினமும் ஐந்து அமர்வுகள் என்ற அடிப்படையில் இந்த பட்டமளிப்பு விழா இடம்பெறுகின்றது. இதில் கலாநிதி முதுகலைமாணி, இளமாணி, பட்டப்பின் டிப்ளோமா எனப் பட்டங்கள் வழங்கப்படுகின்றன.

432 பேர் முதுகலைமாணிப் பட்டத்தையும், 361 பேர் முதுகலைமாணி டிப்ளோமாவையும், 2427 பேர் இளமாணிப் பட்டததையும், 625 பேர் வெளிவாரிப் பட்டத்தையும் 127 பேர் டிப்ளோமாப் பட்டத்தையும் பெறுகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

பௌத்தத்திலிருந்து இஸ்லாமுக்கு மதம் மாறிய பெண் கைது : நாட்டுக்குத் துரோகம் பண்ணியதாகப் புகார்


பௌத்த சமயத்திலிருந்து இஸ்லாமிய மதத்திற்கு மாறிய இலங்கைப் பெண்ணொருவர் நாட்டுக்கு எதிராகச் செயற்பட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார் என பி.பி.சி. செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

பாஹ்ரேனில் வசித்துவரும் இப்பெண்மணி அவரது மதமாற்றம் குறித்து இரு புத்தங்களைச் சிங்களத்தில் எழுதியுள்ளார். விடுமுறையில் இலங்கை வந்திருந்த அவர், தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக அச்செய்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பெண் நாட்டுக்கு அல்லது அரசுக்கு எதிராகச் செயற்பட்டமை தொடர்பில் சந்தேகிக்கப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பி.பி.சி. செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார்.

குற்றச்சாட்டுகள் குறித்துப் போதுமான விளக்கம் தராத பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிங்களப் பெயருடைய அப்பெண் முஸ்லிம்களைப் போல் உடை அணிவதாகத் தெரிவித்தார்.

இது குறித்து பாஹ்ரேனில் வெளியாகும் 'கல்ப் டெய்லி நியூஸ்' ,

"தடுத்து வைக்கப்பட்டுள்ள சாரா மலனி பெரேரா என்றழைக்கப்படும் பெண் அவரது இள வயதிலிருந்து, அதாவது 1980 களின் மத்திய காலப்பகுதியிலிருந்து பாஹ்ரேனில் வசித்து வருகிறார்" எனத் தெரிவித்துள்ளது.

அத்துடன் இவர் 1999 ஆம் ஆண்டு இஸ்லாமிய மதத்தைத் தழுவிக்கொண்டுள்ளதுடன் அவரது பெற்றோர் சகோதரிகளும் மதம் மாறியுள்ளனர்.

பாஹ்ரேனில் இருக்கும் அவரது சகோதரி தெரிவிக்கையில்,

"இஸ்லாம் மதம் குறித்தும், மதங்களை ஒப்பிட்டும் இரு புத்தகங்களை சாரா மலனி பெரேரா எழுதியுள்ளார். இவற்றுள் ஒன்று 'இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு'. இந்தப் புத்தகத்தில், ஏன் அவர் மதம் மாறினார் என்பது குறித்து எழுதியுள்ளார்" என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

இரணைமடு விமான ஓடுபாதையை சகல வசதிகளையும் கொண்ட விமான ஓடுபாதையாக நிர்மாணிக்க நடவடிக்கை





புலிகளால் முன்னர் நிர்மாணிக்கப்பட்ட இரணைமடு விமான ஓடுபாதையினை சகல வசதிகளையும் கொண்ட விமான ஓடுபாதையாக நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. விமான சேவைகளைக் கொண்ட தொகுதியாக நிர்மாணிக்கப்படும் இந்த திட்டம் வடமாகாணத்தின் முக்கிய அபிவிருத்தித் திட்டமாக அமையுமென்று நம்பப்படுகிறது. புலிகள் அப்பகுதியில் இருந்தகாலத்தில் இரணைமடுகுளத்தை அண்டிய அடர்ந்த வனப்பகுதியில் இந்த விமான ஓடுபாதை நிர்மாணிக்கப்பட்டிருந்தது. உத்தேச விமான நிலையத் தொகுதியில் விமான சேவைகள் தொடர்பான பயிற்சி மற்றும் ஆய்வுகளை மேற்கொள்ளக்கூடிய நிலையங்கள் அமைக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அண்மையில் உத்தேச முதலீட்டாளர்களுடனான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோர பகுதியில் மீன்பிடியினைக் கருத்திற் கொண்டு நவீன தொழில்நுட்ப சாதனம் பொருத்தப்பட்ட நிலையமொன்றை உருவாக்குவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரியவருகிறது.
மேலும் இங்கே தொடர்க...

கொழும்பிலுள்ள ஏனைய ஓடைகளிலும் படகுச் சேவைகளை ஆரம்பிப்பதற்கு கடற்படையினர் நடவடிக்கை


கொழும்பிலுள்ள மேலும் சில ஓடைகளில் படகுச் சேவைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கடற்படையினர் கவனம் செலுத்தியுள்ளனர். இதன் பிரகாரம் புனித செபஸ்ரியன் ஓடை, தியவன்னா குடா, தெகிவளை ஓடை, பேலியகொட ஓடை மற்றும் ஹீனெல ஆகியவற்றின் ஊடாக படகுச் சேவைகளை ஆரம்பிக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் நலனைக் கருத்திற் கொண்டே இந்தப் படகு சேவைகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் அத்துல சேனாரத் தெரிவித்துள்ளார். ஏற்கனவே வெள்ளவத்தையின் கிருலப்பனை ஓடையில் கடற்படையினரின் படகுசேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வெள்ளவத்தையிலிருந்து நாவல திறந்த பல்கலைக்கழகம் வரை இந்த படகுச்சேவை இடம்பெற்று வருவதாகவும் கெப்டன் அத்துல சேனாரத் தெரிவித்துள்ளார். ஏனைய ஓடைகளிலும் படகு சேவைகளை ஆரம்பிப்பதற்காக ஓடைகளை சுத்திகரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். படகு சேவைகளை சீராக நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கும்வகையில் ஓடைகளைச் சுத்தமாக வைத்திருக்குமாறு அதன் இரு புறங்களிலும் வாழும் மக்களிடம் கடற்படையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

வன்னி மாவட்டத்தில் 209சாதாரண வாக்களிப்பு நிலையங்களையும் 32இடம்பெயர்ந்தோருக்கான வாக்களிப்பு நிலையங்களையும் அமைக்க ஏற்பாடு




எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வன்னித் தேர்தல் மாவட்டத்தில் 209 சாதாரண வாக்களிப்பு நிலையங்களும் இடம்பெயர்ந்த வாக்காளர்களுக்கென 32வாக்களிப்பு நிலையங்களும் அமைக்கப்படவுள்ளதாக மாவட்ட தேர்தல்கள் அலுவலகம் தெரிவித்துள்ளது. மெனிக்பாம் நிவாரணக் கிராமங்களிலுள்ள வாக்காளர்களுக்காக 16வாக்களிப்பு நிலையங்களும் சரணடைந்து புனர்வாழ்வு நிலையங்களில் வாழும் வாக்காளர்களுக்கென 12வாக்களிப்பு நிலையங்களும் அமைக்கப்படவுள்ளதாக வவுனியா மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் எஸ்.சுதாகரன் தெரிவித்துள்ளார்.


வன்னித் தேர்தல் மாவட்டத்தில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மூன்று தேர்தல் தொகுதிகள் காணப்படுகின்றன. முல்லைத்தீவு தேர்தல் தொகுதியில் 50வாக்கெடுப்பு மாவட்டங்கள் காணப்படுகின்றன. இவற்றுள் முல்லைத்தீவு தொகுதியில் தற்போது மீள்குடியமர்த்தப்பட்ட பகுதியில் 18வாக்களிப்பு நிலையங்களையும், மீளக்குடியமர்த்தப்படாத பிரதேசங்களுக்காக வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் 32வாக்களிப்பு நிலையங்களையும் அமைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மன்னார் தேர்தல் தொகுதியில் 02இடம்பெயர்ந்த வாக்காளர்களுக்குரிய வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதுடன், மன்னாரிலிருந்து இடம்பெயர்ந்து புத்தளம் தேர்தல் மாவட்டத்தில் வதியும் வாக்காளர்களுக்கான வாக்களிப்பு நிலையங்களை புத்தளத்தில் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் பொதுத் தேர்தலில் மன்னார் தேர்தல் தொகுதியில் 85,322 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களும், வவுனியா தேர்தல் தொகுதியில் 1,12,924 பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களும், முல்லைத்தீவு தேர்தல் தொகுதியில் 68,729 பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களுமாக மொத்தம் வன்னித் தேர்தல் மாவட்டத்தில் 2,66,975 வாக்காளர்களுக்கு வாக்களிக்கும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

மெனிக்பான் முகாமில் தங்கியிருந்த மேலுமொரு தொகுதி மக்கள் மீள்குடியமர்வு, தமிழகத்திலிருந்து இலங்கைக்கு தப்பிவர முயன்றவர்கள் படகுடன் கைது






வவுனியா செட்டிகுளம் மெனிக்பாம் நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த ஒருதொகுதி இடம்பெயர்ந்த மக்கள் இன்றையதினம் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர். 1150பேர் இன்றையதினம் அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது. கிளிநொச்சி கரைச்சி பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே இவ்வாறு மீள்குடியமர்த்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை மெனிக்பாம் நலன்புரி நிலையங்களிலுள்ள மேலுமொரு தொகுதி இடம்பெயர்ந்த மக்கள் நாளையதினம் மீளக்குடியமர்த்தப்படவுள்ளதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை இலங்கைக்கு தப்பிச்செல்ல முயன்ற 23 இலங்கைத் தமிழர்களை தமிழகப் பொலிசார் நேற்று கைதுசெய்துள்ளனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள முகாம்களில் வசித்து வந்துநிலையில் இவர்கள் இலங்கைசெல்ல முயற்சித்தபோது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

படகுகளின் மூலம் தப்பிச்செல்ல முயன்றதாக அப்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் வழங்கிய தகவலையடுத்து, இந்த 23பேரும் கைதுசெய்யப்பட்டதாக தமிழக பொலிசார் தெரிவித்துள்ளனர். இலங்கை கடல் எல்லைப் பகுதிவரை செல்வதற்காக இவர்களிடமிருந்து 5000ரூபா இந்தியப் பணம் அறவிடப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்ததாகவும் தமிழக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

அம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணப் பணியில் 75% நிறைவு


நவம்பரில் முதல் கப்பல் பயணிக்கும்
அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக நிர்மாணப் பணிகளில் 75 வீதமானவை நிறைவடைந்துள்ளன. ஆகஸ்ட் மாதத்தில் தோண்டப்பட்ட துறைமுகப் பகுதியில் கடல் நீர் நிறைக்கப்படவுள்ளதோடு நவம்பர் மாதத்தில் முதலாவது கப்பல் இங்கிருந்து பயணிக்கவுள்ளது. நீர் முழுமையாக நிறப்பப்பட முன்னர் நீரில் இறங்கி விளையாட பொதுமக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் என துறைமுகங்கள் மற்றும் விமானச் சேவைகள் அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

அம்பாந்தோட்டை துறைமுக பணிகளை பார்வையிடச் சென்ற ஊடகவியலாளர் மத்தியில் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது:- துறைமுக நிர்மாணப் பணிகள் பூர்த்தியாக 40 வருடங்கள் பிடிக்கும் என்று குற்றஞ்சாட்டிவரும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அன்றைய தினம் நீரில் விளையாட வருமாறு அழைப்பு விடுக்கிறேன். அவர் கூறுவது போலன்றி நவம்பர் மாதத்திற்கு முன் அம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணப்பணிகள் பூர்த்தி செய்யப்படும்.

துறைமுகத்தை அண்மித்த பகுதியில் பாரிய கைத்தொழில்களை ஆரம்பிப்பதற்காக 35 கம்பனிகள் முன்வந்துள்ளன. கனரக வாகன உற்பத்தி கம்பனி ஆட்டோ கம்பனி, இரு சீமெந்து உற்பத்திக் கம்பனிகள், உரக் கம்பனி, கப்பல் திருத்தும் கம்பனி உட்பட பல கம்பனிகள் என்பன இங்கு ஆரம்பிக்கப்பட உள்ளன. மற்றொரு எரிவாயுக் கம்பனியும் துறைமுக பகுதியினுள் ஆரம்பிக்கப்பட உள்ளது. இதன் மூலம் எரிவாயு விலைகள் எதிர்காலத்தில் குறையும். பல ஹோட்டல்களும் இங்கு புதிதாக கட்டப்பட உள்ளன.

துறைமுகம் காரணமாக அம்பாந்தோட்டை இளைஞர் யுவதிகள் 60 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் தொழில்வாய்ப்புக் கிடைக்கவுள்ளது.

இரண்டாம் கட்டப் பணிகள் நவம்பர் மாதத்தில் ஆரம்பிக்கப்பட உள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

கடத்தப்பட்ட கப்பலில் 19 சிங்களவர் ஒரு முஸ்லிம்

மீட்டெடுக்கும் பணிகளில் இலங்கை
சோமாலிய கடற்கொள்ளையர்களினால் கடத்தப்பட்டிருக்கும் பிஎம். வி. டல்காபீ எனும் கப்பலிலுள்ள 20 இலங்கை சிப்பந்திகளையும் பாதுகாப்பாக மீட்பது தொடர்பாக வெளிவிவகார அமைச்சு கூடிய அவதானத்துடன் செயற்பட்டு வருவதாக அமைச்சு அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இதேவேளை, கடத்தப்பட்டிருக்கும் 20 இலங்கையர்களில் 19 பேர் சிங்களவர்களெ னவும் ஒருவர் முஸ்லிம் இனத்தவரெனவும் கப்பலுக்கு பொறுப்பான உள்ளூர் முக வர் நிலையமான ஏ. எல். எப். சிப்பிங் பிரைவட் லிமிட்டடின் அதிகாரியொருவர் உறுதிப்படுத்தினார்.

பிரிட்டனுக்குச் சொந்த மான மேற்படி பிஎம். வி. டல்காபீ கப்பல் எகிப்தில் இருந்து ஈரான் நோக்கிச் சென்று கொண்டிருந்த வேளை ஓமான் கடல் எல்லையில் வைத்து கடந்த 23ஆம் திகதி சோமாலிய கடற் கொள்ளையர் களினால் கடத்திச் செல்லப்பட்டது.

இவ்விடயம் ஊடகங்கள் வாயிலாக வெளிவந்ததையடுத்து வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம உடனடியாக ஓமான், பிரிட்டன் மற்றும் கென்யா ஆகிய நாடுகளிலுள்ள இலங்கை தூதரகங்களை தொடர்பு கொண்டு தேவையான நடவடிக்கைகளை முன்னெடு க்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

முல்லை நகரிலும் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் ஆரம்பம்




வற்றாப்பளையில் மீள் குடியேற்றம் பூர்த்தி
முல்லைத்தீவு நகரிலும் மக்களை மீளக் குடியமர்த்தும் நடவடிக்கை ஆரம்பி க்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார். மோதல்களின் போது முல்லைத்தீவு நகரை விட்டு வெளியேறியவர்களுள் ஆறு குடு ம்பங்களைச் சேர்ந்த 16 பேர் தமது சொந்த இடங்களுக்கு திரும்பியிருப்பதாகவும் அரசாங்க அதிபர் சுட்டிக் காட்டினார்.

வற்றாப்பளைக் கிராமம் முழுவதும் வெற்றிகரமாக மீள் குடியேற்றம் செய்யப் பட்டிருக்கும் நிலையில் துணுக்காய், மாந்தை கிழக்கில் 90 சதவீதமான மீள் குடியேற்றம் பூரணப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அர சாங்க அதிபர் குறிப்பிட்டார்.

இடம்பெயர்ந்து நிவாரணக் கிராமங்கள் மற்றும் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தங்கியிருந்த 23 ஆயிரம் பேர் இதுவரை முல்லைத்தீவு மாவட்டத்துக்கு மீள அழைத்து வரப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

எதிர்காலத்தை சுபீட்சமாக்குவதற்கு பலமான பாராளுமன்றம் அவசியம்




பொறுப்புமிக்க பிரதிநிதிகளைத் தெரிவு செய்யுங்கள் மி ஜனாதிபதி
வெறும் பேச்சுக்களோடு காலம் கடத்துபவர்களை விடுத்து நாட்டுக்குச் சேவைசெய்யக் கூடிய பொறுப்புமிக்க பிரதிநிதிகளை மக்கள் இம்முறை தேர்தலில் வெற்றிபெறச் செய்வது முக்கிய மென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

விருப்பு வாக்குப் பட்டியலில் முதலா வதாக உள்ளவரன்றி இறுதியாக வருபவர் கூட அமைச்சராகலாம். அதனை நாமே தீர்மானிப்போமெனத் தெரிவித்த ஜானதி பதி; அதனால் விருப்பு வாக்கு விடயங்களில் குழப்பங்களை ஏற்படுத்த வேண்டிய அவசியமில்லை எனவும் குறிப்பிட்டார்.

மஹிந்த சிந்தனைத் திட்டத்தில் 2005ம் ஆண்டு வழங்கிய வாக்குறுதிகளில் 95 வீதமானவற்றைத் தம்மால் நிறைவேற்ற முடிந்துள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த சிந்தனை எதிர்காலத் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்குப் பலமான பாராளுமன்றம் அவசியமெனவும் தெரிவித்தார்.

மொனராகலை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்கும் மாபெரும் மக்கள் பேரணிக் கூட்டம் நேற்று முன்தினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் பிபிலை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. அமைச்சர்கள் மைத்திரிபால சிறிசேன, சுமேதா ஜீ ஜயசேன, ஜகத் புஷ்ப குமார, ஊவா மாகாண முதலமைச்சர் சகூந்திர ராஜபக்ஷ உட்பட மாகாண அமைச்சர்கள், வேட்பாளர்கள், முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில் :-

2005ம் ஆண்டு மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்தை முன்வைத்து நான் தேர்தலில் நின்றபோது நீங்கள் என்னை வெற்றிபெறச் செய்தீர்கள். அதனை நாம் நிறைவேற்றியுள்ளோம். நாட்டை ஒன்றிணைத்து 95 வீத வாக்குறுதிகளையும் நாம் நிறைவேற்றினோம்.

அதேபோன்று மஹிந்த சிந்தனை எதிர்காலத் திட்டத்தை முன்னெடுப்பதற்குப் பலமான பாராளுமன்றம் தேவை. அதற்காகவே இப்பாராளுமன்றத் தேர்தலை நடத்துகின்றோம். இதன் மூலம் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைக் கொண்ட பலமான பாராளுமன்றத்தை அமைப்பது அவசியமாகின்றது.

நாட்டைக் கட்டியெழுப்பவும் நாட்டு மக்களின் எதிர்காலத்தை சுபீட்சமயமாக்கவும் பலமான பாராளுமன்றம் அவசியம். மக்களுக்குப் பிரச்சினைகள் உள்ளன என்பதை நாம் உணர்ந்துள்ளோம். அதனை நிவர்த்தித்து மக்களுக்கான சேவையை உரிய முறையில் வழங்கும் பொறுப்பு அரசாங்கத்துக்கு உள்ளது. எதிர்க்கட்சியினர் வெறுமனே விமர்சனங்களை முன்னெடுப்பதையே தொழிலாகக் கொண்டுள்ளனர். எதிர்க் கட்சிகள் விமர்சனம் செய்வது இயல்பானதே. எனினும் அது நியாயமானதாக இருக்க வேண்டும்.

தற்போது ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு என ஒரு நிரந்தரமான கட்சி இல்லை. கட்சிக்குள்ளேயே உட்பூசல் போட்டி பொறாமைகள். மொனராகலை மாவட்டத்தில் போட்டியிடும் விஜேகோன் என்பவர் இதனால் நேற்று எம்முடன் வந்து இணைந்துகொண்டார்.

பிபிலை மக்கள் பல்லாண்டு காலமாக எம்முடன் உள்ளவர்கள். அவர்களுக்கு நான் புதிதாக ஒன்றும் கூறத் தேவையில்லை. வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும் சகல பிரதிநிதிகளும் எனது பிரதிநிதிகளே. அவர்களுக்கு மக்கள் முழுமையான ஆதரவினை வழங்க வேண்டும். அது எனக்கே வழங்கும் ஆதரவு என்பதை மறந்துவிடக் கூடாது.

நேற்று பிபிலைக்கு வருகை தந்த ஜனாதிபதி மேற்படி பிரசாரக் கூட்டத்திற்கு முன்பதாக பிபிலை நகரில் 116 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட் டுள்ள போதனா வைத்தியசாலையையும் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

மொனராகலை மாவட்டத்தில் இம்முறைத் தேர்தலில் இராமசாமி அழகன் என்ற தமிழர் ஒருவரும் போட்டியிடுகின்றமை குறிப் பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

தபால் மூலம் 75 வீத வாக்குப்பதிவு; 22 மாவட்டங்களிலும் சுமுகம்




முடிவுகளை அறிவிக்கும் நிலையத்தில் பிபல்லூடக பிரிவுபீ - ஆணையர் நேற்று அறிவிப்பு
பொதுத் தேர்தலுக்காக நாடு முழுவதும் நேற்றும் முன்தினமும் நடைபெற்ற தபால் மூல வாக்குப் பதிவு சுமுகமாக நிறைவடைந்ததாகத் தேர்தல்கள் செயலகம் தெரிவித்தது.

மூன்று தசாப்தங்களுக்குப் பின்னர் வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதும் 22 மாவட்டங்களிலுமுள்ள அரச அலுவலகங் களில் கடந்த இரண்டு தினங்களிலுமாக 75% வாக்குப்பதிவு இடம்பெற்றிருப்பதாகத் தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டது.

இதேவேளை, தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் நிலையத்தில் பல்லூடகப் பிரிவொன்றை ஸ்தாபிக்கப்போவதாகத் தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க நேற்று (26) அறிவித்துள்ளார்.

ஏப்ரல் மாதம் எட்டாந் திகதி நடை பெறவுள்ள பொதுத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு நாடு முழுவதும் 4 இலட்சத்து 14 ஆயிரத்து 430 அரச உத்தியோகத்தர்கள் தகுதிபெற்றிருந்தார்கள். இவர்களுக்கு நேற்றும் முன்தினமும் வாக்களிக்க அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இதன்படி 75 வீதமான அரச உத்தியோக த்தர்கள் வாக்களித்துள்ளனர்.

வாக்களிப்பு இடம்பெற்ற தினங்களில் குறித்த அரச அலுவலகங்கள் வாக்குச் சாவடிகளைப் போல் இயங்கின. தெரிவத் தாட்சி அதிகாரியாகக் கடமையாற்றிய அலுவலகத்தின் தலைமை அதிகாரி மற்றும் உத்தியோகத்தர்கள் தவிர்ந்த எவரும் அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்பட வில்லை. பொலிஸ் பாதுகாப்பு வழங்கப் பட்டிருந்ததுடன், வன்முறைகளைக் கண் காணித்து அறிக்கையிடும் குழுக்களின் பிரதிநிதிகளும் அனுமதிக்கப்பட்டிருந்த னர்.

தபால்மூல வாக்களிப்பின்போது பாரிய அசம்பாவிதச் சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லையென்றும், தேர்தல் சட்ட விதிகளை மீறிய சில முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாகக் கண்காணிப்புக் குழுவினர் தெரிவித்தனர். இதில் 45 வீதமான முறைப்பாடுகள் வாக்கெடுப்பு நிலைய அத்தாட்சிப்படுத்தும் உத்தியோக த்தர்கள் இல்லை என்றும், சட்ட விரோத பிரசாரம் மேற்கொள்ளப்பட்டதென்றும், வேட்பாளர்களின் பெயர்ப் பட்டியல் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கவில்லையென் றும் முறையிடப்பட்டதாகத் தெரிவிக்கப் பட்டது.

வாக்கெடுப்பு நிலைய அத்தாட்சிப்படுத்தும் உத்தியோகத்தர்கள் இருக்காததால், பெருமளவு வாக்குகள் அளிக்கப்படாமல் தவிர்க்கப்பட்டதாக வன்முறை கண்காணிப் பாளர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, வன்முறை கண்காணிப் பாளர் குழுக்கள் சில தேர்தல்கள் ஆணையாளரை நேற்றுச் சந்தித்துள்ளன. தேர்தல்கள் செயலகத்தில் நேற்றுப் பிற்பகல் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, வாக்குகளை எண்ணும் நிலையங் களில் தமது வன்முறை கண்காணிப்புக் குழுவின் பிரதிநிதி ஒருவர் வீதம் நியமிக்குமாறு ஆணையாளரைக் கேட்டுக் கொண்டனர். எனினும் ஆணையா ளர் இதனை நிராகரித்துவிட்டதாகக் கண் காணிப்புக் குழுவின் பிரதிநிதியொருவர் தினகரனுக்குத் தெரிவித்தார்.

மாறாக தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் நிலையத்தில் பல்லூடகப் பிரிவொன்றை ஸ்தாபிப்பதாக ஆணையாளர்அறிவித்ததாக அந்தப் பிரதிநிதி மேலும் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...