பிரான்சில் `பர்தா' அணிவதற்கு தடை விதிக்கும் சட்ட மசோதா, அந்த நாட்டு பாராளுமன்றத்தில் நிறைவேறியது. மொத்தம் 335 வாக்குகள் பெற்று இந்து சட்டம் நிறைவேறியது. அதிபர் சர்கோசி தலைமையிலான ஆளும் கூட்டணி மற்றும் சிறிய கட்சியான இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் சட்டத்துக்கு ஆதரவு அளித்தனர். பிரதான எதிர்க்கட்சியான சோசலிஸ்ட் கட்சி வெளிநடப்பு செய்தது.
அதை தொடர்ந்து, வரும் செப்டம்பரில் பிரான்சு மேல்சபையில் (செனட்) சட்ட மசோதா மீது வாக்கெடுப்பு நடைபெறுகிறது. அங்கும் நிறைவேற்றப்பட்டதும், `பர்தா' அணிவதற்கான தடைச் சட்டம் அமலுக்கு வரும். அதன் பிறகு, `பர்தா' அணிந்தால் 150 ïரோ அபராதம் விதிக்கப்படும். மேலும், விழிப்புணர்வு கல்வி வகுப்புகளுக்கும் அனுப்பி வைக்கப்படுவார்கள்.
இந்த சட்டத்துக்கு, பிரான்சு முஸ்லிம் அமைப்பின் தலைவர் முகமது முசொவுயி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் நாட்டில் 60 லட்சம் முஸ்லிம்கள் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.