13 ஆகஸ்ட், 2010

கல்லால் அடித்து கொலை தண்டனையை ஏற்ற ஈரான் பெண்


ஈரானை சேர்ந்தவர் சகினே மொகமதி ஆஷ்தியானி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது கணவர் கொலை செய்யப்பட்டார்.

இதற்கிடையே விதவைப் பெண்ணான ஆஷ்தியானி வேறு ஒரு ஆணுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததாக புகார் கூறப்பட்டது. எனவே, ஈரான் நாட்டு சட்டப்படி அவரை கல்லால் அடித்து கொலை செய்ய கடந்த 2006-ம் ஆண்டு கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த கொடூர தண்டனைக்கு உலக நாடுகளும், சமூக சேவை அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆஷ்தியானிக்கு கடந்த 2006-ம் ஆண்டே 99 சவுக்கடி வழங்கி தண்டனை நிறைவேற்றப்பட்டது. எனவே, அவருக்கு இந்த தண்டனை தேவையில்லை என மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக நாடுகளின் நிர்பந்தத்தினால் ஆஷ்தியானாவின் தண்டனையை நிறைவேற்றாமல் ஈரான் அரசு தள்ளிவைத்து இருந்தது. தற்போது, கல்லால் அடித்து கொலை செய்ய உள்ள தண்டனையை ஏற்றுக்கொள்வதாக ஆஷ்தியானா அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஈரான் அரசு டெலிவிஷனில் நேற்று முன்தினம் ஆஷ்தியானாவின் தண்டனை குறித்த ஒப்புதல் வாக்குமூலம் ஒளிபரப்பப்பட்டது. அதில், “என்னை கல்லால் அடித்து கொல்ல நான் சம்மதிக்கிறேன்” என அவர் பேசிய ஒலி மட்டும் ஒளிபரப்பானது.

ஆனால், அவரது வீடியோ காட்சிகள் ஒளிபரப்பப்படவில்லை. அவர் ஈரான் மொழியில் பேசியிருந்தார். எனவே, அவரது தண்டனை விரைவில் நிறைவேற்றப்படலாம் என தெரிகிறது.
மேலும் இங்கே தொடர்க...

ல்கொய்தா தலைவர் பின்லேடன் சமையல்காரருக்கு 14 ஆண்டு ஜெயில் தண்டனை: அமெரிக்க கோர்ட்டு தீர்ப்பு

அல்கொய்தா தீவிரவாதிகள் அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன்அல்கொய்தா தலைவர்    பின்லேடன் சமையல்காரருக்கு    14 ஆண்டு ஜெயில் தண்டனை:     அமெரிக்க கோர்ட்டு தீர்ப்பு. அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இவரையும், அல்கொய்தா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகளையும் அமெரிக்கா வேட்டையாடி வருகிறது.

ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் பாகிஸ்தானில் படைகளை குவித்து அவர்களை ஒடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. தலைமறைவாக இருக்கும் பின்லேடனை உயிருடன் பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக உள்ளது. அனால் அவர் எங்கு இருக்கிறார் என்ற விவரமும் தெரியவில்லை.

பின்லேடனிடம் சமையல்காரராக பணிபுரிந்தவர் இப்ராகிம் அல்குவாசி. பின்லேடனின் தீவிர விசுவாசி மற்றும் நம்பிக்கைக்குரியவராகவும் இருந்தார்.

அல்கொய்தா தீவிரவாதிகளுடன் சேர்ந்து இவரும் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தார். எனவே அவரை அமெரிக்க ராணுவம் கைது செய்து சிறையில் அடைத்தது.

இவர் மீது கவுந்தனோமாவில் உள்ள அமெரிக்க ராணுவ கோர்ட்டில் வழக்கு நடந்தது. வழக்கை ராணுவ “ஜீரிகள்” (நீதிபதிகள்) விசாரித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று அவருக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

அமெரிக்க அதிபர் ஒபாமா பொறுப்பேற்ற பிறகு அல்கொய்தா தீவிரவாதிகள் மீது எடுக்கப்பட்ட மிகப்பெரிய முதல் நடவடிக்கை இது என கூறப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

சரத் பொன்சேகாவின் பதவி நிலையைக் குறைக்க நீதிமன்றம் முடிவு

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இன்று முதலாவது இராணுவ குற்றவியல் நீதி மன்றத்தால் குற்றவாளியாக இனங்காணப்பட்டார். இதனையடுத்து அவருடைய இராணுவ பதவிகளின் நிலைகளை குறைக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என இராணுவ ஊடகப் பிரிவு எமது இணையத்தளத்திற்குத் தெரிவித்தது.

எனினும் இந்தத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்கான ஒப்புதலைப் பெறுவதற்காக ஜனாதிபதியிடம் தீர்ப்பு தொடர்பான அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்தது.
மேலும் இங்கே தொடர்க...

மலேசியாவில் கைதான இலங்கை அகதிகளில் 62 பேர் விடுவிப்பு

மலேசிய கோலாம்பூரில் 111 நாட்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த 75 இலங்கை அகதிகளில் 62 பேரை நேற்று நண்பகல் குடிவரவு திணைக்களம் விடுவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எஞ்சிய 13 பேர் இன்று விடுவிக்கப்படுவர் என மலேசியாவின் மாற்று நடவடிக்கைக்கான குழுத் தலைவர் வீ. கலைவாணரும் தமிழ் இறைமை இயக்கத்தின் தலைவர் டி.செம்பியனும் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் அவுஸ்திரேலியா செல்லும் வழியில், இவர்கள் பயணித்த படகு மலேசிய கடற்பரப்பில் விபத்துக்குள்ளானது. மலேசிய கடற்படையினர் இவர்களைக் காப்பாற்றி, பின்னர் கைது செய்தனர்.

இந்நிலையில் தடுப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட இவர்களை ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரகத்துக்கு அழைத்து சென்று அவர்களுக்கு அகதி அந்தஸ்து அட்டைகளைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப் போவதாக கலைவாணர் தெரிவித்துள்ளார்.

தம்மை மூன்றாம் நாடொன்றில் குடியமர்த்தக் கோரி, இரண்டு மாதங்களுக்கு முன்னர் உணவு தவிர்ப்புப் போராட்டத்திலும் இவர்கள் ஈடுபட்டிருந்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கைப் போர்க் குற்றம்: யு.எஸ். மனித உரிமை அமைப்பு கோரிக்கை

இலங்கையில் நடைபெற்ற போர் குற்றங்கள் குறித்து விசாரிக்க ஐ.நா. அமைத்த குழுவின் விசாரணைக்கு அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என நியூயார்க்கை மையமாகக் கொண்டு செயல்படும் மனித உரிமை அமைப்பு ஒன்று தெரிவித்து உள்ளது. இலங்கையில் சென்ற ஆண்டு போராளிகளுடன் நடந்த இறுதிக் கட்ட சண்டையின் போது கடைசி 5 மாதங்களில் மட்டும் சுமார் 7 ஆயிரம் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டதாகவும், அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் நடந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இது குறித்து விசாரிக்க ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் சென்ற ஜூன் மாதம் 3 நபர் குழுவை அமைத்தார். அக்குழுவின் விசரணைக்கு இலங்கை அரசு ஒத்துழைப்பு அளிக்கவில்லை.

இது குறித்து நியூயார்க்கில் செயல்படும் மனித உரிமை அமைப்பின் சட்ட பிரிவு இயக்குநர் ஜேம்ஸ் ரோஸ் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது:

"இலங்கையில் போர் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து முறையான விசாரணை நடத்தப்படவில்லை. இலங்கையில் ஐ.நா. குழு விசாரணை நடத்தவும் அது அளிக்கும் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படவும் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் அக்குழுவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

சீன உதவியுடன் கட்டப்படும் இலங்கை துறைமுகம் ராணுவத்துக்கு பயன்படுத்தப்படாது: ஜி.எல்.பெரீஷ்

இலங்கையில், சீனா உதவியுடன் கட்டப்படும் அம்பாந்தோட்டை துறைமுகம் ராணுவ நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படாது என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பெரீஷ் தெரிவித்தார்.

ஐந்து நாள் பயணமாக சீனா சென்றுள்ள அவர் அந் நாட்டு தலைநகர் பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

அம்பாந்தோட்டை துறைமுகத்தின் முதல் பகுதி ஆகஸ்ட் 19-ம் தேதி திறக்கப்படுகிறது. இந்த துறைமுகம் வணிகத்துக்காக மட்டுமே பயன்படுத்தப்படும். ராணுவத்துக்காக பயன்படுத்தப்படாது. துறைமுகம், நெடுஞ்சாலை, பள்ளிகள் மற்றும் மின்உற்பத்தி சார்ந்த திட்டங்களில் சீனா பெருமளவில் உதவி செய்து வருகிறது. அதற்காக சீன அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். ஆண்டுதோறும், கிழக்கு- மேற்கு கடல்மார்க்கத்தில் செல்லும் 70 ஆயிரம் சரக்கு கப்பல்களை கையாள திட்டமிட்டுள்ளோம் என்றார்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனாவின் முதலீடு குறித்து இந்திய தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படுவது குறித்து கேட்டபோது, இந்த விவகாரம் தொடர்பாக இந்தியா ஒருபோதும் பிரச்னை எழுப்பவில்லை என்று பெரீஷ் தெரிவித்தார்.

இலங்கை அதிபர் ராஜபட்சவின் சகோதரரும், அந் நாட்டு நாடாளுமன்றத் தலைவருமானசாமல் ராஜபட்சவும் சீனா சென்றுள்ளார். அவர் கூறும்போது, அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீரமைப்பது தொடர்பாக முதலில் இந்தியாவைத்தான் அணுகினோம், அவர்கள் ஈடுபாடு காட்டவில்லை. எனவே சீனாவின் உதவியை நாடினோம் என்றார்.

இலங்கை, பாகிஸ்தான், மியான்மர், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் சீனா துறைமுகங்களை அமைத்து வருகிறது. இதனால், தெற்காசியப் பிராந்தியத்தில் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஆசிய பாதுகாப்பு சிறப்பு நிபுணர் மரியா தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

நான் மீண்டும் வருவேன்:மேர்வின் சில்வா

நான் குற்றமற்றவன் என நிரூபிக்கப்பட்ட பின்னர் மீண்டும் பதவிக்கு வருவேன் என்று முன்னாள் பிரதி அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். களனியில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் நேற்று கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேர்வின் சில்வாவிற்கு ஆதரவு தெரிவித்தும் அவர் மீதான விசாரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் நேற்று களனியில் அவரது ஆதரவாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேர்வின் சில்வா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நான் மீண்டும் பதவிக்கு வருவேன் எனக்கு எதிராக மேற்கொள்ளப்படும் விசாரணைகள் குறித்து நான் கரிசணைகாட்டவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். களனி பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவரை மரத்துடன் கட்டிவைத்த சம்பவத்தை அடுத்து பிரதி அமைச்சர் மேர்வின் சில்வா பதவியிலிருந்து நீக்கப்பட்டதுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்புரிமையிலிருந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகம்.
மேலும் இங்கே தொடர்க...

பொன்சேகாவை விடுவிக்கக்கோரி காலியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எம்.பி.க்கள் கைது

ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுவிக்குமாறு கோரி காலியில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஜனநாயக தேசியக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான விஜித ஹேரத், அஜித் குமார, மாகாண சபை உறுப்பினர் நளின் ஹேவகே ஆகியோர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். காலி நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்படிருந்தபோதே இவர்கள்கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜெனரல் சரப் பொன்சேகாவை விடுவிக்கக்கோரி நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் காலி நகரில் ஜனநாயக தேசிய முன்னணியினரால் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பல நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் காலி பஸ் நிலையம் நோக்கி பேரணியாக வர முற்பட்டுள்ளனர். இதன்போது பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டு தாக்குதல் மேற்கொண்டதுடன் தடியடிப் பிரயோகத்திலும் ஈடுப்பட்டனர். இதனால் காலி பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. பொலிஸாரின் கண்ணீர் புகைக்குண்டுதாக்குதலில் எம்.பி.க்களான விஜித்த ஹேரத், அர்ச்சுனாரணதுங்க, ஜெனல் பொன்சேகாவின் பாரியாரான அனோமாக பொன்சேகா உட்பட பலரும் பாதிப்புக்குள்ளாகினர்.

தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த எம்.பி.க்களான விஜித்த ஹேரத், அஜித் குமார, மற்றும் நளின் கேவகே ஆகியோர் “உட்பட பலரும் கைது செய்யப்பட்டனர். இந்த ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி காரணமாக காலி நகரில் நேற்று மாலை பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டது. ஆர்ப்பாட்டம் மற்றும் பொலிஸாரின் தாக்குதலையடுத்து காலி நகரின் இயல்பு நிலை பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது
மேலும் இங்கே தொடர்க...

அரசியல் தீர்வுக்கு அரச தரப்போ புலிகளோ முழுமையாக அர்ப்பணிப்புடன் செயற்படவில்லை




நாட்டின் தேசிய பிரச்சினைக்கான நிரந்தர அரசியல் தீர்வைப் பெற்றுக் கொள்வதற்கு அரச தரப்போ புலிகள் தரப்போ தம்மை முழுமையாக அர்ப்பணித்துச் செயல்படவில்லை. அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பில் முறையானதொரு நிகழ்ச்சி நிரல் கூட முன் வைக்கப்படவில்லை என்று எமரிச்சஸ் மார்க்கஸ் அமைப்பின் தலைவர் கொப்ரி குணதிலக தெரிவித்தார்.

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இரண்டாவது நாள் பகிரங்க விசாரணை அமர்வு நேற்று சர்வதேச உறவுகள் மற்றும் கேந்திரோபாயக் கற்கைகளுக்கான லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் இடம்பெற்றது. அதன்போது சாட்சியமளிக்கையிலேயே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவித்ததாவது,

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது விடுதலைப் புலிகள் பெருந்தொகையான பொதுமக்களை பணயக்கைதிகளாக வைத்திருந்தார்கள். புலிகளின் இந்தச் செயற்பாடானது அந்த சந்தர்ப்பத்தில் சர்வதேசத்திற்கு விடுத்த அச்சுறுத்தலாக கருதப்பட்டது.

கடைசி கட்ட யுத்தத்தின் போது அப்பகுதிகளில் இருந்த சிறுபான்மையினர் பெருந்தொகையாக கொல்லப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் அதனை தடுத்து நிறுத்தி அவர்களை பாதுகாப்பதற்கான உரிய நடவடிக்கைகளை சர்வதேசம் செய்யவில்லை என்று கூட கூறலாம்.

விடுதலைப் புலிகளுடடான யுத்தத்தின் போது பல்வேறு மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றை ஆராய்ந்து பார்க்கின்ற போது பயங்கரவாத செயற்பாடுகளுக்காக சிறுவர் போராளிகளை இணைத்துக் கொண்டமை மற்றும் தற்கொலை குண்டுகளை வெடிக்கச் செய்து பாரிய உயிர் சேதங்களை ஏற்படுத்துதல் போன்றவற்றை குறிப்பிடலாம்.

இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலை புலிகளுக்கும் இடையில் 2002 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கையானது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விடயமாக இருந்தது. அக்கால கட்டத்தில் ஓரளவு சுமுகமான ஒரு நிலைமை இருந்ததையும் காண முடிந்தது. இருந்த போதிலும் அந்த யுத்த நிறுத்த உடன்படிக்கையினை இரு தரப்பும் பின் தள்ளின.

இவ்வாறு அந்த யுத்த நிறுத்த உடன்படிக்கையினை இரு தரப்பும் பின் தள்ளியதன் விளைவாகவே பாரிய இழப்புக்களையும் சஞ்சலங்களையும் எதிர்நோக்க வேண்டி ஏற்பட்டது. அதாவது யுத்த நிறுத்த உடன்படிக்கை காலத்தில் சிறு சிறு சம்பவங்கள் ஆங்காங்கே இடம்பெற்று வந்தன. அவ்வாறாக இடம் பெற்று வந்து மீண்டு மாவிலாறில் உச்சக் கட்டத்தை அடையவே யுத்த நிறுத்த ஒப்பந்தம் செயல் இழந்தது எனலாம்.

இவ்வாறு யுத்த நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு மீண்டும் மாவிலாற்றில் ஆரம்பித்த யுத்தமானது படிப்படியாக உக்கிரமடைய ஆரம்பித்தது. இந்த யுத்த நடவடிக்கைகள் தொடர்பாக சர்வதேச மட்டத்திலிருந்து பல்வேறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டது. இருந்தும் அது இடைநிறுத்தப்படாமல் தொடர்ந்தன. இவ்வாறாக நடைபெற்ற யுத்தமானது இறுதிக் கட்டத்தை அடைந்த போது பெருந்தொகையான மக்கள் இடம்பெயர ஆரம்பித்தார்கள். அதிலு

ம் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் அவர்கள் பணயக் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள். அது சர்வதேச மட்டத்தில் ஒரு அச்சுறுத்தலாக இருந்தது. மனித உரிமை மீறல்கள் அந்த சமயத்தில் மேலோங்கியிருந்ததாக சர்வதேச சமூகங்கள் கூறி வந்தது. ஆனால் அதனை தடுத்து நிறுத்தி பொதுமக்களை பாதுகாப்பதற்கான உரிய நடவடிக்கைகள் எதனையும் அந்த சமூகங்கள் செய்யவில்லை.

இன்று ஏதோ ஒரு வகையில் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதனை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஏன் இந்த பிரச்சினை ஆரம்பமானது. அதற்கான பிரதான காரணம் என்ன என்பதனையெல்லாம் ஆராய்ந்து அவ்வாறான ஒரு மோசமான நிலைமை மீண்டும் ஏற்படாமலிருக்க வழி செய்வதே சிறந்ததாகும்.

இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதன் மூலமே சமாதானத்தையும் சுபீட்சத்தையும் ஏற்படுத்த முடியும். இதில் தொடர்பாடல் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது. அதாவது தமிழர்கள் சிங்களத்தையும், சிங்களவர்கள் தமிழ் மொழியையும் எழுத வாசிக்க பேசக் கற்றுக் கொள்ள வேண்டும் அது நல்லிணக்கத்துக்கான ஒரு சிறந்த அடித்தளமாக அமையும் எனவும் அவர் தெரிவித்தார்
மேலும் இங்கே தொடர்க...

சன்கூ’ கப்பல் கனேடிய கடற்பரப்பை அடைந்தது சர்வதேச நியதிகளின் கீழ் விசாரணை



200 தமிழர்களை ஏற்றிக்கொண்டு செல்வதாக சந்தேகிக்கப்படும் எம்.வி.சன்கூ கப்பல் கனேடிய கடல் பரப்பை அடைந்துள்ளதாக கனேடிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

200 கடல் மைல் (370 கிலோ மீற்றர்) எல்லை கொண்ட கனடாவின் பிரத்தியேக பொருளாதார கடல் வலயப் பகுதியை அடைந்த இக்கப்பலை, அந்நாட்டு கடற்படையினர் தற்போது பிரிட்டிஷ், கொலம்பியா மாநில கரையோரத்தை நோக்கி அழைத்துச் சென்று கொண்டிருக்கின்றனர் என கனே டிய செய்தி நிறுவனமொன்று தெரி வித்துள்ளது.

இக்கப்பலின் தற்போதைய வேகத்தின்படி இன்று வெள்ளி காலை கனடாவின் ஆட்சி எல்லைக்குட்பட்ட 12 கடல் மைல் (22 கி.மீ) நீர் பரப்பை இக்கப்பல் அடையும் என எதிர்பார்க்கப் படுகிறது. கப்பலிலுள்ள ஆண்களும் பெண்களும் சிறைச்சாலைகளுக்கு அனுப்பப்படவுள்ளனர்.

சிறார்கள் இருப்பின் அவர்கள் பிரிட்டிஷ் கொலம்பிய மாநிலத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்தி அமைச்சின் பராமரிப்பில் வைக்கப்படுவார்கள் என கனேடிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த கப்பலில் முன்னதாக 200 இலங்கையர்கள் செல்வதாக தெரிவிக்கப்பட்ட போதும் தற்போது 500 பேர் இருப்பதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. எனினும் இன்னும் கப்பலில் உள்ளவர்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகவில்லை.

இந்த நிலையில் கப்பல் தொடர்பில் கருத்துரைத்துள்ள கனேடிய பொது பாதுகாப்பு துறை அமைச்சர் விக்டோவ்ஸ், கனேடிய துருப்பினர் இந்த கப்பலை கடந்த இரண்டரை மாதங்களாக கண்காணித்து வந்ததாக தெரிவித்துள்ளார். எனவே இந்த கப்பலில் இருப்பவர்கள் யார் என்பதில் தமக்கு தகவல்கள் கிடைத்துள்ள தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கப்பலில் வருவோர் சர்வதேச நியதிகளின் அடிப்படையில் கனேடிய சட்டத்திற்கு இணங்க விசாரணை செய்யப்படுவார்கள் என கனேடிய வெளியுறவுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

இக்கப்பல் ஆட்கடத்தலில் ஈடுபடுவதாகவும் இது மிகவும் ஆபத்தான செயல் என்றும் தெரிவித்த அதிகாரி, அதில் பயணம் செய்த ஒரு பயணி இறந்துள்ளார் என்றும் உறுதிப்படுத்தாத தகவலும் கிடைத்துள்ளதாகத் தெரிவித்தார். இதேவேளை இன்னொரு கப்பலும் கனடாவை நோக்கி வந்து கொண்டிருப்பதாக கனேடிய அரசாங்கம் அச்சப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இக்கப்பலில் வருபவர்களைத் தங்க வைப்பதற்கென கனடா சிறைச்சாலைகள் தயாராக உள்ள நிலையில் விக்டோரியா பொது மருத்துவமனையில் 75 பேரைச் சேர்க்கத்தக்கமாதிரி அது மீளத் திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள் ளது. இதேவேளை முன்னாள் அவசர மருத்துவமனைகளும் இவ்வகதிகளுக்குச் சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்படவுள்ளன.

தாய்லாந்து கொடியுடனான சன்கூ கப்பல் முன்னர் ஹரின் பனிச் 19 என்ற பெயரில் இருந்தது. 24 சிப்பந்திகளுடன் செயற்படும் சன்கூ கப்பல் வினோத் என்ற முன்னாள் கடற்புலியின் தலைமையில் பயணஞ் செய்வதாக தெரியவருகிறது.

முன்னர் ஆயுதக் கடத்தலுக்கு பயன்பட்டு வந்த இந்த கப்பலை கடந்த ஏப்ரல் மாதம் தாய்லாந்து கடற்படை ரோந்து படகுகள் கண்ணுற்றதாகவும் அப்போது முதல் அந்த கப்பல் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் குடியேற்றக்காரர்களை ஏற்றிக் கொண்டு கனடா செல்லும் முதல் கப்பல் சன்கூ அல்ல 10 மாதங்களுக்கு முன் ஓஸியன் லேடி என்ற கப்பலில் 76 இலங்கை தமிழர்கள் கனடாவுக்கு சென்றிருந்தனர். அந்த 76 பேரின் அகதி அந்தஸ்து தற்போது பரிசீலனையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சன்கூ மற்றும் ஓஸியன் லேடி ஆகிய கப்பல்கள் புலிகளுக்கு சொந்தமானவை என தெரியவருகிறது.

இந்நிலையில் நேற்று இந்தியாவில் கைது செய்யப்பட்ட தீவிரவாதி ஒருவர், உலகளாவிய ரீதியில் புலிகள் இயக்கத்தினர் உட்பட 1500 தமிழர்களை கடந்த ஒன்றரை வருட காலத்தில் 36 கப்பல்கள் மூலம் கனடா, அவுஸ்திரேலியா, இத்தாலி, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு கடத்திச் சென்றுள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

இலங்கை சட்டவிரோத குடியேறிகளை ஏற்றிய மேலும் இரண்டு கப்பல்கள் கனடாவை நோக்கிச் செல்ல தாய்லாந்தில் ஆயத்தமாவதாக பயங்கரவாதம் தொடர்பான நிபுணர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார்.

இந்தக் கப்பல்களில் 500 தமிழ் சட்டவிரோதக் குடியேறிகள் பயணிக்க உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த சட்டவிரோத குடியேறிகளில் தமிஸழ விடுதலைப் புலி உறுப்பினர்களும் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது கனடாவை நோக்கிப் பயணித்து வரும் இலங்கைச் சட்டவிரோதக் குடியேறிகளைக் கொண்ட கப்பலுக்கு அந்நாட்டு அதிகாரிகள் அளிக்கும் மரியாதையின் அடிப்படையில் ஏனைய இரண்டு கப்பல்களும் பயணத்தைத் தொடரும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கனேடிய அதிகாரிகள் இந்த விடயம் தொடர்பில் விழிப்புடன் செயற்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்
மேலும் இங்கே தொடர்க...

மாணவி கட்டப்பட்ட விவகாரம்: பரீட்சை முடிவடைந்த பின்னரே முழுமையான விசாரணை



உயர்தர பரீட்சை எழுதச் சென்ற மாணவி கை, கால் கட்டப்பட்டு வாயில் துணி அடைக்கப்பட்டிருந்த சம்பவம் தொடர்பான முழுமையான விசாரணைகளை பரீட்சைகள் யாவும் முடிவடைந்த பின்னரே நடத்துவது என பொலிஸார் முடிவு செய்துள்ளனர்.

எனினும் குறித்த மாணவி பாலியல் மற்றும் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப் பட்டிருக்கவில்லை என்பதும் வைத்திய பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உயர் தர பரீட்சைகள் தொடர்ந்தும் நடை பெற்று வருவதால் குறித்த மாணவியை பொலிஸ் விசாரணைக்குட்படுத்தும் போது மன அழுத்தங்களுக்கு உள்ளாகலாம் என்ற நோக்கம் காரணமாகவே விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இந்த மாணவியின் கைக்கட்டினை அகற்றிய பாடசாலை மின்சார பிரிவு சிற்றூழியர் இக்கட்டு மாணவி தன்னைத்தானே கட்டியதாக தெரியவில்லை என கூறியுள்ளதால் விசாரணைகள் பல திசைகளிலும் முடிக்கிவிடப்பட்டுள்ளன. மாணவி பரீட்சை முடியும் வரை தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்படமாட்டார் என பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

யாழ்தேவி, உதயதேவி புறப்படும் நேரங்கள் மாற்றம் 15 ஆம் திகதி முதல் அமுல்



கொழும்பு கோட்டையிலிருந்து தினமும் புறப்படும் தாண்டிக்குளம் யாழ்தேவி கடுகதி ரயில், மட்டக்களப்பு உதயதேவி கடுகதி ரயில் ஆகியவை புறப்படும் நேரங்கள் மாற்றம் செய்யப்பட்டு ள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் இந்த நேர மாற்றம் அமுலுக்கு வரும் எனவும் ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி கொழும்பு கோட்டையிலிருந்து தாண்டிக்குளம் நோக்கி புறப்படும் ரயில் காலை 5.45 க்கு புறப்படும். தாண்டிக்குளத்திலிருந்து 11.30 க்கு கொழும்பு நோக்கி புறப்படும்.

மட்டக்களப்பு நோக்கி புறப்படும் உதயதேவி புகையிரம் கொழும்பு கோட்டையிலிருந்து காலை 6.10 க்கு புறப்படும். இதேபோன்று கொழும்பு - அநுராதபுரம், கல்ஓயா - மட்டக்களப்பு, கல்ஓயா - திருமலை, திருமலை – மஹவ, பொலன்னறுவை – மட்டக்களப்பு வரையிலான ரயில் பஸ் சேவை, கல்ஓயா - மட்டு ரயில் பஸ் சேவை, குருணாகல் – மஹவ பேபி ரயில், மஹவ - பொல்கஹவல பேபி ரயில் நேரங்களிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

சிறுவர்களை படைக்கு சேர்ப்பதை தவிர்க்க போர் நிறுத்த ஒப்பந்தத்தில் எதுவும் இல்லை


நல்லிணக்க ஆணைக்குழு அமர்வில் கலாநிதி ஷிரந்தி விஜேமான சாட்சியம்



சிறுவர்களைக் காப்பதற்கு போர் நிறுத்த உடன்படிக்கை காலப்பகுதியே சிறந்த சந்தர்ப்பமாக இருந்ததென்றும் ஆனால், அந்த வாய்ப்பு கைநழுவிப் போய்விட்டதாகவும் கலாநிதி (திருமதி) ஷிரந்தி விஜேமான தெரிவித்தார்.

புலிகள் இயக்கம் 2009 மே 19 ஆம் திகதிவரை சிறுவர்களைப் படைக்குச் சேர்க்கும் நடவடிக்கையை முன்னெடுத்தத ண்கவும் அதற்குப் பின்னர் சிறுவர்கள் சேர்க்கப்படவில்லையென்றும் அவர் கூறினார்.

கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்க மும் பற்றிய ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் முன்னிலையில் நேற்று (12) சாட்சியமளிக்கையில் கலாநிதி விஜேமான தெரிவித்தார்.

சிறுவர்களைப் படைக்குச் சேர்ப்பதைத் தவிர்ப்பதற்கு போர் நிறுத்த உடன்படிக்கையில் எந்த வழிமுறையும் இருக்கவில்லையென்று குறிப்பிட்ட அவர், ஆக்காலப் பகுதியில் சிறுவர் நலனைக் கவனிப்பதற்கான அரச பொறிமுறை வடக்கு, கிழக்குப் பகுதிகளில் செயற்பட்டபோதிலும், அதனை வினைத்திறன்மிக்கதாக நடைமுறைப்படுத்தக்கூடிய சூழல் இருக்கவில்லையென்று கூறினார்.

ஆணைக்குழுவின் பகிரங்க அமர்வு நேற்று (12) இரண்டாவது நாளாக கொழும்பு ஹோட்டன் பிளேசிலுள்ள லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் நடைபெற்றது. முன்னாள் சட்ட மாஅதிபர் சீ.ஆர்.டி. சில்வா தலைமையில் நடைபெற்ற ஆணைக்குழு விசாரணையில் சாட்சியமளித்த திருமதி விஜேமான, சிறுவர் புனர்வாழ்வுப் பணிகளில் ஈடுபட்டபோது தமது அவதானிப்புகளை முன்வைத்தார்.

கொங்கோ, சோமாலியா உள்ளிட்ட நாடுகளின் போர் நிறுத்த உடன்படிக்கையில் சிறுவர்களின் நலன் தொடர்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தெற்காசிய பிராந்தியத்தில் இலங்கையிலும் நேபாளத்திலும்தான் சிறுவர்களைப் படைக்குச் சேர்த்திருக்கிறார்கள். புலிகள் இயக்கத்தில் 60% - 70% வரையில் பலவந்தமாக சேர்க்கப்பட்ட சிறுவர்களே இருந்தனர்.

புனர்வாழ்வு அளிக்கப்படும் சிறுவர்களுக்குச் சிறந்த கல்வியையும் எதிர்காலத்தையும் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். இளைஞர்கள் கெளரவமாகவும் சுயமரியாதையுடனும் வாழ அவர்களைப் புனர்வாழ்வுக்குட்படுத்த வேண்டும். கல்வி கற்காதவர்களுக்கு முறைசாராக் கல்வியையும் தொழில் பயிற்சிகளையும் வழங்கி அவர்களை சமூகமயப்படுத்த வேண்டும்.

இளைஞர்களுக்கு உரிய வாய்ப்பினை வழங்குவதன் மூலமே உரிய அபிவிருத்தியை எட்ட முடியும். நாம் என்னதான் புனர்வாழ்வை அளித்தாலும் சிங்கள மக்கள் மத்தியில் புலி இளைஞர்கள் பற்றிய சிந்தனை வேறாகத்தான் உள்ளது. எனவே, முன்னாள் புலிகள் இயக்க இளைஞர்களை அவர்களின் சொந்த வாழ்விடங்களில் பெற்றோர்களுடன் வாழவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இன்று நடைபெறும் ஆணைக்குழு விசாரணையில் எஸ்.எல். குணசேகரவும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரியும் சாட்சியமளிக்கின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

வெளிநாட்டு மாணவர்களுக்கு இலங்கையில் பட்டப்படிப்பு 200 புலமைப்பரிசில்கள் வழங்க நடவடிக்கை

வெளிநாட்டு மாணவர்கள் உள்ளூரில் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் வகையில் உயர்கல்வி அமைச்சு அடுத்த வருடம் 200 புலமைப்பரிசில்களை வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நடவடிக்கையின் முதலாவது தொகுதியாக சீனா, மத்தியகிழக்கு மற்றும் ஆபிரிக்க நாடுகளில் உள்ள மாணவர்கள் பயனடைவர்.

இலங்கை பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை அடுத்த ஐந்து வருடங்களில் உயர் கல்வி அமைச்சு அபிவிருத்தி செய்யவுள்ளது. 10 ஆயிரம் வெளிநாட்டு மாணவர் களை கவரும் நோக்கிலேயே இந்த அபிவிருத்தி செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

“வெளிநாட்டு வருமானத்தை ஈட்டுவதற்கு இது நல்ல வழியாகும். 5 ஆயிரம் அமெரிக்க டொலர்களுக்கு பட்டமொன்றை வழங்க நாம் எதிர்பார்க்கிறோம்” என்று உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க கூறுகிறார்.

13 மில்லியன் ரூபா பெறுமதியான கணனிகள், பிரின்டர்கள் மற்றும் போட்டோ பிரதி இயந்திரங்களை தென்கிழக்கு மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களுக்கு பகிர்ந்தளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இவ் வாறு கூறினார்.

அத்துடன் பல்கலைக்கழக மாணவர்களின் போக்குவரத்து வசதிகளை மேம்படு த்துவதற்காக இந்திய உயர் ஸ்தானிகர் 50 பஸ்களையும் 50 ஜீப் வண்டிகளையும் வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ள தாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்திய உயர் கல்வி அமைச்சரை அடுத்த மாதம் தான் சந்திக்க திட்டமிட்டுள் ளதாகவும் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்
மேலும் இங்கே தொடர்க...

நல்லிணக்கக் குழு விசாரணையில் அரசாங்கத் தலையீடு இல்லை

அமெ. காங்கிரஸின் கோரிக்கையை நிராகரிக்கின்றது அரசாங்கம்
இலங்கையில் இடம் பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் குறித்து சுயாதீனமான சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினர்கள் கோரியிரு ப்பதை அரசாங்கம் முற்றாக நிராகரித்துள்ளது.

இலங்கையில் போர்க் குற்றங்கள் இடம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை அரசாங்கம் ஆரம்பம் முதலே மறுத்து வருகிறது. யுத்த சமயத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவங்கள் குறித்து ஆராய ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு அதன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதென பதில் தகவல் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா கூறினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.

இலங்கையில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச சுயாதீன விசாரணைகள் நடத்த வேண்டும் என 57 காங்கிரஸ் உறுப்பினர்கள் கையொப்பமிட்டு அமெரிக்க பாதுகாப்பு செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். இது தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர்;

இலங்கையில் ஒரு போதும் போர்க் குற்றம் இடம்பெறவில்லை. ஆனால், யுத்த சமயத்தில் இடம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவங்கள் குறித்து ஆராய நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இந்த சுயாதீன ஆணைக்குழு முன் கருத்துக்களை முன்வைக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் என்ற வகையில் நாம் இந்த விடயம் தொடர்பில் சகல நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளோம். ஆணைக்குழுவின் விசாரணைகளில் அரசாங்கம் தலையீடு செய்யாது.

ஆனால், சில நாடுகள் தெரிவிக்கும் குற்றச் சாட்டுக்களை ஏற்க முடியாது. பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டப்பட்டு நாட்டில் அமைதியும் சுதந்திரமும் உருவாக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு மக்கள் மீள்குடியேற்றப்பட்டு உட்கட்டமைப்பு வசதிகளும் பாரிய அபிவிருத்திகளும் அங்கு முன்னெடுக்கப்படுகின்றன. சில வெளிநாடுகள் கூறுவதற்காக உண்மையை மறைக்க முடியாது. இதற்கு முன்னரும் ஐ. நா. மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக போர்க் குற்றம் தொடர்பில் பிரேரணை முன்வைக்கப்பட்டது. அதனை ஏனைய நாடுகளுடன் இணைந்து தோற்கடித்தோம்.

அமெரிக்கா என்ன சொன்னாலும் எமது பொறுப்பை நாம் சரிவர நிறைவேற்று வோம். நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகள் எதிர்காலத்தில் செயற்படுத்தப் படும்.

இதற்கு முன் நியமிக்கப்பட்ட குழுக்களின் சில சிபாரிசுகள் அமுல்படுத்தப்ப ட்டுள்ளன என்றார். இதேவேளை, அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களின் கோரிக்கை குறித்து தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ஆரியரத்ன அதுகல அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளார்
மேலும் இங்கே தொடர்க...