14 மார்ச், 2010

ஜனாதிபதி மஹிந்த பங்குபற்றும் 1வது கூட்டம் 19ஆம் திகதி கண்டியில்



பொதுத் தேர்தலை முன்னிட்டு வடக்கு, கிழக்கு உட்பட சகல மாவட்டங்களிலும் ஜனாதிபதி பங்கேற்கும் 26 பிரதான பிரசாரக் கூட்டங்கள் நடத்தப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார். ஜனாதிபதி பங்கேற்கும் முதலாவது பிரசாரக் கூட்டம் எதிர்வரும் 19ஆம் திகதி கண்டியில் நடத்தப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.

குருநாகல், கம்பஹா, கொழும்பு ஆகிய மாவட்டங்களில் தலா இரு கூட்டங்கள் நடத்தப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலும் ஜனாதிபதி பங்கேற்கும் பிரதான கூட்டங்கள் நடைபெற உள்ளன.

இது தவிர பிரதமர் தலைமையிலும் நாடளாவிய ரீதியில் பிரதான கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
மேலும் இங்கே தொடர்க...

வவுனியா வடக்கு; மீளக்குடியேறிய குடும்பங்களுக்கு இவ்வாரம் முதல் இலவச மின்சாரம்





வவுனியா வடக்கில் மீளக்குடியமர்த்தப் பட்டிருக்கும் குடும்பங்களுக்கு இவ்வாரம் முதல் இலவச மின்சார இணைப்புகள் வழங்கப்படவிருப்பதாக அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் நேற்றுத் தெரிவித்தார்.

மின்சார இணைப்பு வழங்கப்பட்டது முதல் தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு இலவசமாக மின் விநியோகம் செய்யப்படுமெனவும் இதற்காக எவ்வித கட்டணங்களும் அறவிடப்பட மாட்டாதெனவும் அவர் தெரிவித்தார்.

வடக்கின் வசந்தம் மற்றும் கமநெகும வேலைத் திட்டத்தின் கீழ் முதற் கட்டமாக நிறைவு செய்யப்பட்டிருக்கும் மின் இணைப்பை பெற்றுக் கொடுக்கும் 14 செயற்திட்டங்களே இவ்வாரம் முதல் பொதுமக்களிடம் கையளிக்கப்படவுள்ளன. அதன்படி கணேசபுரம், ஓமந்தை,

நொச்சிமோட்டை, கட்டான்குளம் உள்ளிட்ட 14 கிராம சேவகர் பிரிவுகளிலுள்ள மக்கள் இவ்வாரம் முதல் மின் இணைப்பை பெற்றுக் கொள்கின்றனர்.

இவர்களுள் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதிக்குப் பின்னர் அப்பகுதியில் மீளக்குடியமர்த்தப்பட்டவர்களுக்கே இலவச மின் இணைப்பு வழங்கப் படுகிறது.

வவுனியா மற்றும் செட்டிக்குளம் பிர தேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட 14 கிராம சேவகர் பிரிவுகளிலும் தற்போது 500 குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டுள்ளன. இவர்களுள் குறித்த திகதிக்கு பின்னதாக மீளக்குடியமர்த்தப்பட்டிருக்கும் சுமார் 200 குடும்பங்களே இலவச மின் இணைப்பை பெறவுள்ளன.

வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட 200 செயற் திட்டங்களுக்காக 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அதில் முதற் கட்டமாக நிறைவு செய்யப்பட்டிருக்கும் 14 செயற்திட்டங்களே பொதுமக்களின் இவ்வாரம் முதல் கையளிக்கப்படவிருப்பதாகவும் அரசாங்க அதிபர் நேற்றுத் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

நாட்டின் அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கு மக்கள் சக்தியுடன் கூடிய பாராளுமன்றம் தேவை




ஹம்பாந்தோட்டை பிரதேச அபிவிருத்தி பிபில, மஹியங்கனை வரை கொண்டு செல்லப்படும் என்கிறார் ஜனாதிபதி

நாட்டின் எதிர்கால அபிவிருத்தி திட்டங்களை புதிய உத்வேகத்து டன் முன்னெடுத்துச் செல்வதற்கு மக்கள் சக்தியினால் கட்டியெழுப் பப்பட்ட பாராளுமன்றம் அவசிய மாகிறது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

லுனுகம் வெஹேரயில் நேற்று (14) கடலோர கிராமமொன்றில் புதிய கலாசார நிலையமொன்றை திறந்து வைத்து பேசிய போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் கூறியதாவது, கோபத்துடனும் குரோதத்துடனும் அரசியல் செய்த யுகத்தை நாம் முடிவுக்குக் கொண்டு வருவோம். நாட்டைப் பற்றி சிந்தித்து செயலாற்றுவோம். சக்திமிக்க பாராளுமன்றை கட்டியெழுப்புவதன் மூலம் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டின் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்துச் செல்வோம்.

பிவிருத்தி இன்று கிராமத்துக்கு வந்துள்ளது. பாதைகள், பாலங்கள் மட்டுமன்றி எமது சிறுவர்களின் மனநிலையும் குணநலன்களும் கூட வளர்ச்சியடைந்துள்ளன. எந்த ஒருவரும் எம்மை விமர்சிக்க முடியும். ஆனால், நாட்டின் எதிர்காலத்தையோ அல்லது எமது சிறுவர்களின் எதிர்காலத்தையோ காட்டிக் கொடுக்க எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது.

நாம் இன்று இந்த கிராமத்தை அபிவிருத்தி செய்துள்ளோம். அது இந்த சிறுவர்களுக்காக அவர்களது கல்வி நடவடிக்கைகளுக்கு ஏற்ற சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக.

இந்த அபிவிருத்தித் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இந்த அபிவிருத்தி இன்று நாடு முழுவதற்கும் வியாபித்துள்ளது.

பாரிய துறைமுகங்கள் நிர்மாணிக் கப்படுகின்றன. விமான நிலையங்கள் உருவாக்கப்படுகின்றன. இரண்டு துறைமுகங்கள் அமைந்துள்ள ஒரே பிரதேசம் திஸ்ஸ மகாராம பிரதேசமாகும். இந்த அபிவிருத்தியை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

இன்று எமது கல்வி முறையாகட்டும், தொழில் பயிற்சி துறையாகட்டும் உயர்ந்த மட்டத்தில் உள்ளன. இன்று எமக்கு பாரிய தொழில் வாய்ப்புகள் கிடைத்துள்ளன. இன்று இப்பிரதேசம் உல்லாசப் பயணிகளின் வருகையை ஈர்க்கும் வகையில் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை பிரதேசத்தின் அபிவிருத்தியை இதனுடன் நிறுத்திவிடப் போவதில்லை. இது மொனராகலை, பிபில, மஹியங்கனை வரை கொண்டு செல்லப்படும்.

இன்று சிறந்த வீதிக் கட்டமைப்பு எமக்கு இருக்கிறது. இன்றைய நிலையை எதிர்பார்த்து இவற்றை நாம் செய்ய வில்லை.

நாளைய நிலையை நினைத்த நாம் அவற்றை மேற்கொண்டோம். நீண்ட எதிர்காலத்தை எதிர்பார்த்து நாம் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம்.

இன்று இந்த நாட்டை கட்டியெழுப்ப புதிய இளைய சமுதாயமொன்று முன்வந்துள்ளது.

அவர்களது கரங்களை பலப்படுத்தி எதிர்கால உலகத்தை வெற்றிக் கொள்ளக் கூடிய சிறுவர் பரம்பரையை கட்டியெழுப்புவதன் மூலம் அபிவிருத்தியடைந்த நாட்டை கட்டியெழுப்ப அனைவரும் கைகோர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி அங்கு குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

பொதுத்தேர்தல் வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்ட தினத்திலிருந்து இதுவரை 81தேர்தல் வன்முறைச் சம்பவங்கள்

 
பொதுத்தேர்தல் வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்ட தினத்திலிருந்து இதுவரை 81தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியிருப்பதாக தேர்தல் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான பிரதிப் பொலீஸ் மாஅதிபர் காமினி நவரத்ன தெரிவித்துள்ளார். இவற்றுள் ஒரே கட்சியின் ஆதரவாளர்களிடையேயான மோதல்கள் தொடர்பிலான 39சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் கொழும்பு மாவட்டத்தில் நேற்று 07 தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் பிரதிப் பொலீஸ் மாஅதிபர் காமினி நவரத்ன மேலும் கூறியுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் கண்காணிப்புப் பணிகளுக்காக ஐம்பது வெளிநாட்டுக்

 

நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் கண்காணிப்புப் பணிகளுக்காக ஐம்பது வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களை அழைத்துவர தீர்மானித்துள்ளதாக சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பான பெப்ரல் தெரிவித்துள்ளது. இந்தக்குழு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 1ம் திகதி இலங்கையை வந்தடையவுள்ளதாக அவ்வமைப்பு தெரிவித்துள்ளது. நீதியானதும் சுதந்திரமான முறையிலும் தேர்தல் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளும் நோக்கமாகவே வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களை வரவழைக்க எண்ணியுள்ளதாக பெப்ரல் குறிப்பிட்டுள்ளது. அத்துடன் தேர்தல் தொடர்பில் இதுவரை 44வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் அதிலி 37சம்பவங்கள் விசாரணைகளின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோகண ஹெட்டியாராய்ச்சி தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

திருமலை மாவட்டம் மூதூர் பிரதேசசெயலாளர் பிரிவு கங்குவேலி கிராமம்

 

திருமலை மாவட்டம் மூதூர் பிரதேசசெயலாளர் பிரிவு கங்குவேலி கிராமம் மீண்டும் ஒரு அரச ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி வருகின்றது. அரசினை காரணம்காட்டி பௌத்தபிக்கு தலைமையில் தமிழ்மக்களின் காணிகளை ஆக்கிரமிப்பு செய்யும் நடவடிக்கைகள் முடக்கி விடப்பட்டுள்ளது. நேற்று இப்பகுதிக்கு வந்த பௌத்த பிக்கு தலைமையிலான குழுவினர் தமிழர்களுக்கு சொந்தமான விவசாய நிலங்கைளில் வேலிபோட்டு குடிகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இது விடயமாக பொலிசாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக இப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் பொலிசார் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. காணிஉரிமை பற்றி தகுந்த ஆதாரங்கள் தெரிவிக்கும் பட்சத்தில் காணி உங்களுக்கு பெற்றுத்தரப்படும். இல்லாவிடடால் இது அரசுடமையாக்கப்படும் அரச காணிகளை எவரும் ஆட்சிசெய்யலாம் எனவும் தெரவிக்கப்பட்டுள்ளது. நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் தங்களது வெற்றிகளை உறுதிசெய்து கொள்ளும்முகமாக அரசகட்சியில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்களால் இம்முயற்சி செய்யப்பட்டுள்ளது. கடந்தவருடம் நவம்பர்மாதம் இப்பகுதியில் உள்ள அகத்தியர் தாபனம் திட்டமிடப்பட்ட முறையில் அரசபடைகளால் சிதைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அதன் இன்னொரு முயற்சியாக இது இருக்கலாம். இவ்விடயமாக பாராளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடும் தமிழ்க்கட்சிகள் வேட்பாளர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தமிழீழக் கோட்பாட்டை





தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தமிழீழக் கோட்பாட்டை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளதென தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இதனால் தமிழீழத்திற்கு ஆதரவாக பேசுவோரைக் கட்டுப்படுத்தும் புதிய சட்டத்தை உருவாக்குவதற்காக மூன்றில் இரண்டு பெரும்பான்மையை மக்கள் வழங்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அமெரிக்க வெளிவிவகார செயலர் கிலாரி கிளிண்டன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக அவசியமற்ற விமர்சனங்களை முன்வைத்துள்ளார். மனித உரிமைமீறல்கள் இலங்கையில் இடம்பெற்றதாக அமெரிக்க வெளிவிவகார செயலாளர் கிலாரி கிளிண்டனின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் இலங்கைக்கு எதிராக முன்வைக்கும் குற்றச்சட்டுக்களுக்கு பதிலளிக்கும் முகமாக எதிர்வரும் பொதுத்தேர்தலில் மக்கள் அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

பொலிசாரின் துப்பாக்கி சூட்டுக்கு உள்ளாகி உயிரிழந்தமையை கண்டித்து





பொலிசாரின் துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்தமையை கண்டித்து திருகோணமலையில் ஆர்பாட்டம் திருகோணமலையில் இளைஞர் ஒருவர் பொலிசாரின் துப்பாக்கி சூட்டுக்கு உள்ளாகி உயிரிழந்தமையை கண்டித்து திருகோணமலையில் உள்ள பொதுமக்களால் ஆர்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. வீதிகளில் டயர்களை எறித்து ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளதோடு பாதுகாப்பு கருதி பொலிசாரினால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இறந்த இளைஞனின் உடல் அவரது பெற்றோரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளதோடு, இறுதி கிரிகைகள் நாளை திருகோணமலை பொது மயானத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

இன்று இந்த மக்களின் அவலத்திற்கும் அவயங்கள் இழந்ததற்கும் யார் காரணம் ?



இலங்கை இறுதி போரில்     கை, கால்களை இழந்தவர்கள்    வாழ முடியாமல் அவதி:     அமெரிக்க செய்தி நிறுவனம் தகவல்


வெளிநாட்டில் உல்லாச வாழ்வை அனுபவிக்கும் புலி பினாமிகளே அன்று புலிகள் இயலாமையால் பின் வாங்கி ஓடினார்கள் அதை புரிந்து கொள்ளமுடியாமல் வெளிநாட்டில் வாழ்கின்ற புலிகள் புலி பினாமிகள் மக்களிடம் ஏமாற்றி அண்ணன் உள்ளே விட்டு அடிப்பார் வெளியே விட்டு அடிப்பார் என்று கூறி பணம் சேகரித்தார்கள் அனால் வன்னிப்பகுதியில் 2008.டிசம்பர் மாதத்திற்கு பிற்பகுதியில் வன்னி மக்களானாலும் சரி புலிகளானாலும் சரி வன்னியை விட்டு வெளியில் யாருக்கும் கொடுக்கவும் முடியாது வேண்டவும் முடியாத நிலையில் இலங்கை ராணுவம் நாலு திசைகளையும் மூடி இருந்தது

இந்தநிலையில் வெளிநாட்டு புலிகள் அண்ணை உள்ளை விட்டு அடிக்க பணம் வேண்டும் இது கடைசி யுத்தம் என்று சேர்த்த பணம் எங்கே ? வெளிநாட்டில் வாழும் தமிழ் உறவுகளே நீங்கள் கொடுத்த பணத்தை தயவு செய்து இந்த அவையங்கள் இழந்த எம் வன்னி மக்களுக்கு கொடுக்கும்படி நீங்கள் பணம் கொடுத்தவர்களிடம் வைப்புறுத்துங்கள் இவர்கள் இந்த பணத்தை ஏப்பம் விடுகின்றார்கள் இன்று வன்னிமக்களின் அவலத்திற்கு நீங்களும் ஒரு பங்காளிகள் அண்ணன் உள்ளை விட்டடிப்பார் என்று எதிர் பார்த்தோம் அண்ணன் ஏமாற்றிவிட்டார் என்று எண்ணாமல் நீங்கள் கொடுத்த பணத்தை எம் உறவுகள் கை கால் அவையங்கள் இழந்தவர்களுக்கு கொடுக்கும் படி வைப்புறுத்துங்கள் இவ் வளவு நாளும் நீங்கள் செய்த தவறுக்கு ஒரு பிராயச்சித்தம் தேடுங்கள்



இலங்கையில் கடந்த ஆண்டில் ஏப்ரல், மே மாதங்களில் இறுதிக் கட்ட போர் நடந்தது. மே மாதம் 18-ந்தேதி விடுதலைப் புலிகளிடம் இருந்த ஒட்டு மொத்த பகுதிகளையும் ராணுவம் கைப்பற்றியது. விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட தலைவர்கள் அனைவரையும் கொன்றுவிட்டதாக இலங்கை அரசு அறிவித்தது.

போரின்போது வெளியேறிய 2 லட்சத்து 80 ஆயி ரம் மக்கள் முகாம்களில் அடைக்கப்பட்டு இருந்தனர். அவர்களில் பெரும்பாலோர் இப்போது விடுவிக்கப்பட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.

அவர்களில் பலர் போரின்போது சண்டைக்கு நடுவில் சிக்கி கை, கால், மற்றும் உடல் உறுப்புகளை இழந்தவர்கள். அவர்களுக்கு அரசு தரப்பில் கொஞ்சம் உதவி செய்யப்படுகிறது. ஆனால் உடல் உறுப்புகளை இழந்து விட்ட நிலையில் இனி வாழ்க்கையே முடிந்துவிட்டது என்பது போல அவர்களுடைய நிலைமை உள்ளது.

இது பற்றி அமெரிக்க செய்தி நிறுவனமான சி.என்.என். பாதிக்கப்பட்ட மக் களை நேரில் சந்தித்து செய்தி ஒளிபரப்பியது. கை, கால்களை இழந்த மக்கள் இப்போது வாழ முடியாமல் மிகுந்த அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள். அவர்கள் நிலைமை மோசமாக உள்ளது. அவர்களின் கதை கண்ணீரை வரவழைப்பதாக உள்ளது என்று வேதனையுடன் கூறியுள்ளது.

பாதிக்கப்பட்ட சிலருடைய பேட்டியையும் ஒளிபரப்பியது.

ரவீந்திரன் (21) என்ற வாலிபர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த நேரத்தில் நாங்கள் உயிர் பிழைப்பதற்காக பல மாதங்களாக ஒவ்வொரு பதுங்கு குழியாக சென்று மறைந்து வாழ்ந்தோம்.

இறுதி கட்ட போரின்போது அதிக அளவில் குண்டு வீச்சு நடந்தது. நான் ஓடிப் போய் ஒரு பதுங்கு குழிக்குள் நுழைந்தேன். அதன் மீதே ஒரு குண்டு வந்து விழுந்தது.

இதில் என் உறவினர் உயிர் இழந்தார். எனது 2 கால்களும் துண்டாகி விட் டன. ஒரு கண்ணையும் இழந்தேன்.

இப்போது ஊருக்கு திரும்பி இருக்கிறேன். கால்களும், கண்ணும் இல்லாத நான் எப்படி வாழப் போகிறேன் என் பதே தெரியவில்லை. எனது வாழ்க்கை முடிந்து விட்டதாகவே கருதுகிறேன்.

இவ்வாறு கூறி அவர் கண்ணீர் விட்டு அழுதார்.

இதைப் போலத்தான் ஏராளமானோர் தங்கள் வாழ்க்கையே முடிந்து விட்டது இனி ஆகப்போவது ஒன்றும் இல்லை என்று பரிதாபமாக கூறினார்கள்.
மேலும் இங்கே தொடர்க...

கிழ.,தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விநடவடிக்கைகள் இடைநிறுத்தம்

கிழக்கு மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழகங்களில் மாணவ குழுக்களிடையே ஏற்பட்டுள்ள முறுகல் நிலை காரணமாக கல்வி நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்த நிர்வாகங்கள் தீர்மானித்துள்ளதாக பி.பி.சி தமிழோசை தெரிவித்துள்ளது .

பல்கலைக்கழகங்களில் சுமூக நிலையை ஏற்படுத்தும் வகையில் மாணவர்களை விடுதிகளிலிருந்து வெளியேறுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர் கலாநிதி பத்மநாதனை பதவியிலிருந்து விலகுமாறு வற்புறுத்திய மாணவர் பேரவை பிரதிநிதிகளுக்கும், இதன் காரணமாக மாணவர் பேரவையை கலைக்குமாறு கோரிக்கையை முன் வைத்த மாணவர்களுக்குமிடையில் முறுகல் நிலை தோன்றியுள்ளது.

இதனால் சுமூக நிலையை ஏற்படுத்தும் வகையில் வைத்திய பீடம் தவிர்ந்த ஏனைய பீடங்களின் விரிவுரைகளை இடைநிறுத்தம் செய்ய தீர்மானிக்கப்பட்டதாக பதில் துணைவேந்தர் கலாநிதி கே. பிரேம்குமார் தெரிவித்துள்ளார்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மாணவர் பேரவை தேர்தலின் பின்னர் இரண்டு மாணவ குழுக்களிடையே அமைதியற்ற சுழ்நிலை காணப்பட்டதாகவும் இதனையடுத்தே விரிவுரைகளை தற்காலிகமாக இடை நிறுத்தம் செய்ய முடிவெடுக்கப்பட்டதாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பதிவாளர் மன்சூர்.ஏ.காதர் கூறுகின்றார்.
மேலும் இங்கே தொடர்க...

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத் (புளொட்) இயக்கத் தலைவர் த. சித்தார்த்தன் வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய பேட்டி நேர்காணல்: ஏ.எச்.சித்தீக் காரியப்பர்






கேள்வி: நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் ஒன்று சேர்ந்து போட்டியிட வேண்டுமென்ற நோக்கில் நீங்கள் சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தீர்கள். ஆனால் இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியிலேயே முடிந்தது என்பதனை நீங்கள் எற்றுக் கொள்வீர்கள். உங்களது முயற்சி தோல்வியடையக் காரணமென்ன?



பதில்: யுத்தம் முடிவடைந்த நிலையில் எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு எம்மால் முடிந்தனவற்றைச் செய்ய வேண:;டும் என்ற நோக்கில் அனைத்துத் தமிழக்; கட்சிகளையும் ஒரு கூட்டமைப்பாக அல்லாவிடினும் ஓர் அணியாக ஒன்றுபடுத்தும் முயற்சியில்தான் எமது கட்சி இறங்கியது. இவ்வாறானதொரு முயற்சியை எமது கட்சி மட்டுமல்ல ஏனைய சில தமிழ்க் கட்சிகளும் மேற்கொண்டுதான் இருந்தன. இந்த முன்னெடுப்பு முயற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே யாழ்., வவுனியா உள்ளுராட்சித் தேர்தல்கள், ஜனாதிபதித் தேர்தல் ஆகியன இடம்பெற்றன. இதன் காரணமாக எமது முன்னெடுப்பில் தொய்வு நிலையேற்பட்டது.



கேள்வி: நீங்கள் குறிப்பிடும் தேர்தல்கள் நடைபெற்ற பின்னரும் எதிர்காலத்தில் ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பில் தொடர்ந்தும் நீங்கள் ஏனைய கட்சிகளுடன் பேசினீர்கள். இந்தப் பேச்சுவார்த்தையானது தமிழ் மக்கள் நலன் கருதியா மேற்கொள்ளப்பட்டது.?



பதில்: இல்லை..



கேள்வி: அவ்வாறெனின்…



பதில்: தேர்தல் கூட்டுச் சம்பந்தமாகவே பல கட்சிகளாலும் முயற்சி எடுக்கப்பட்டது. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பாகவோ அல்லது அந்தத் தீர்வுக்கான திட்டங்கள் தொடர்பிலோ நாங்கள் பேசவில்லை. இது ஒரு தேர்தல் கூட்டுக்கான பேச்சுவார்த்தையாக மட்டுமே அமைந்திருந்தது. இவ்வாறான பேச்சுவார்த்தையை முன்னெடுத்துக் கொண்டிருந்தபோது பல்வேறு பிரச்சினைகளுக்கும் முகம் கொடுக்க நேர்ந்தது. வேட்பாளர் தெரிவு, வேட்பாளர்களை நியமித்தல், மாவட்டங்களை விட்டுக் கொடுத்தல் போன்ற பல பிரச்சினைகள் எமது பேச்சுவார்த்தையின் போது எழுந்தன. இதன் காரணமாக இந்த முயற்சியும் தோல்வியிலேயே முடிந்தது. எது எப்படியிருப்பினும் யுத்தம் முடிந்து நடைபெறும் இத்தேர்தலானது ஜனநாயகத்தை மிளிர வைப்பதற்கான ஒரு வாய்ப்பாக அமையும் தேர்தலாகவே நான் பார்க்கிறேன். அது மட்டுமல்ல.. நாங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கற்பனையிலும் இருப்பதனைப் பார்க்கிலும் மக்கள் யாரைச் சரியாகத் தெரிவு செய்து கொள்ளப் போகிறார்களென்பதனை இந்தத் தேர்தலில் நாம் அறிந்து கொள்ள கூடியதாகவிருக்கும். சில தரப்பிலிருந்து அழுத்தங்கள் பிரயோகிக்கப்படலாம். ஆனாலும் இந்தத் தேர்தலை ஜனநாயக ரீதியாக இடம்பெறப்போகும் தேர்தலாகவே நான் கருதுகிறேன். அதுவே எமது கட்சியின் எதிர்பர்ப்புமாகும். அவ்வாறு இந்தத் தேர்தல் இடம்பெற்று தெரிவு செய்யப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்பேசும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் அனைத்தும் ஒரு புரிந்துணர்வுடன் செயற்பட்டால் அதன் ஊடாகக் கூட நாம் பலவற்றைச் சாதித்துக் கொள்ள முடியும்.



ஆகக் குறைந்தது தமிழ்மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகவேனும் நாம் ஐக்கியப்பட வேண்டும். அண்மையில் இலங்கை வந்திருந்த இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமாராவை நாம் சந்தித்த போது அவர் ஒரு கருத்தினை எம்மிடம் வலியுறுத்தியிருந்;தார். தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வாக ஒவ்வொரு கட்சிகளும் வௌ;வேறான தீர்வுத் திட்டத்தை சமர்ப்பித்தால் அவற்றினை எப்படி எங்களால் இலங்கை அரசிடம் அமுல்படுத்துமாறு கோரமுடியும்? நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலின் பின்னராவது நீங்கள் அனைவரும் ஒற்றுமைப்பட்டு ஒரு நியாயமான, பொதுவான தீர்வை நீங்கள் முன்வைத்தால் அதனை அமுல்படுத்துவதற்கு நாம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்வுக்கு அழுத்தத்தைக் கொடுக்கலாமெனத் தெரிவித்திருந்தார். தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் நாங்கள் அனைவரும் ஒற்றுமைப்பட்டு செயற்பட்டால் மட்டுமே அதனைச் சாத்தியமாக்கலாமென்பதனையே அவரது வேண்டுகோள் எமக்குத் தெரிவித்திருந்தது. இரனைக் கருத்தில் கொண்டு நாம் தேர்தலின் பின்னரும் முயற்சிகளை எடுக்கவுள்ளோம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு விடயத்திலாவது நாம் ஐக்கியப்படவேண்டும்.



கேள்வி: வெளியிலிருந்து வரும் அழுத்தங்களுக்கோ ஆலோசனைகளுக்கோ நாம் இடமளிக்கப் போவதில்லையென்று அரசு தரப்பில் கூறப்படும் நிலையில் இந்தியா எப்படி அழுத்தம் கொடுத்தும் பயன் கிடைக்கப் போவதில்லையே?



பதில்: தேர்தல் காலங்களில் சில பேரினவாத சிங்கள அரசியல் கட்சிகள் கூறும் விடயங்களை விசேடமாகத் தமது வாக்கு வங்கியைப் பாதுகாத்துக் கொள்ளவதற்காகச் சொல்லப்படும் கதைகளை நாம் காதில் போட்டுக் கொள்ளக் கூடாது. தேர்தல் முடிந்த பின்னர் அவர்கள் யதார்த்தத்தைப் புரிந்து கொள்வர்.



கேள்வி: கட்சிள் மாத்திரமல்ல. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் இவ்வாறு தெரிவித்திருந்தாரே?



பதில்: இந்தியாவினது அழுத்தங்களுக்கு அடிபணிந்து அவர் செயற்பட மறுக்கலாம். ஆனால், நாம் அனைவரும் ஒன்றிணைந்து எமது மக்களுக்கான தீர்வு தொடர்பில் அழுத்தம் கொடுத்தால் ஜனாதிபதியால் எப்படி மறுக்க முடியும்?



கேள்வி: நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் முதலாவது நகர்வாகவே இனப்பிரச்சினைக்கான தீர்வையா நீங்கள் ஜனாதிபதியிடம் வலியுறுத்துவீர்கள்? ஏனெனில் இனப்பிரச்சினைக்கான தீர்வென்பது கையை நீட்டியதும் கிடைக்கப் போவதில்லையே.. தமிழ்மக்களின் அடிப்படைப் பிரச்சினைக்க முன்னுரிமை வழங்கி அவற்றினைத் தீர்த்து வைக்கும் நகர்வை முதலில் மேற்கொள்ளலாமல்லவா?



பதில்: ஆமாம்.. இதுவே இன்றைய முதல் தேவை.. இதிலும் நாம் ஐக்கியப்பட்டேயாக வேண்டும். அபிவிருத்தி வேலைகள், அகதிகளாகவுள்ள மக்களை மீள்குடியேற்றுதல், அவ்வாறு குறியேற்றப்பட்ட மக்கள் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் தாங்கள் தங்களது சொந்தக் காலில் நிற்கக் கூடியதான வாழ்க்கை வசதி, புலிகள் இயக்கத்தில் சேர்ந்த அல்லது பலாத்காரமாகச் சேர்க்கபட்ட சுமார் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்களை விடுவித்தல், போன்றனவற்றினை அடிப்படையாகக் கொண்டே எமது முதல் முழு நகர்வினையும் எடுக்க வேண்டும். இதன் பின்னரே இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான நகர்வை முன்னெடுக்க வேண்டும்.. ஆனால் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது இரண்டாம் பட்சமானதல்ல என்பதனையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.



கேள்வி: எவ்வளவோ அவலங்களையும் அழிவுகளையும் முகங்கொண்ட தமிழ் மக்களுக்கு அவர்களின் பிரச்சினைக்கான தீர்வானது 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு உட்பட்டதாகத்தானே இருக்கப் போகிறது?



பதில்: 13 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாகத் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்குமென்று நாம் ஒருபோதும் கூறவில்லை. இலங்கை-இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தானபோதே இதனைத் தெரிவித்திருந்தோம். ஆனால் எமது மக்களின் பிரச்சினைக்கான தீர்வு எங்கோ ஒரு மூலையிலிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டுமென்பதில் நாம் தீவிரமாக இருந்தோம். இதனடிப்படையில் 13 ஆவது திருத்தச் சட்ட மூலத்தை ஓர் ஆரம்பமாகப் பார்க்கிறோம் அத்துடன் இந்த விடயம் இந்தியாவின் நேரடிக் கண்காணிப்பிலுள்ளது அத்துடன் பதின்மூன்றாவது அரசியலமைப்பில் மேலும் மாற்றங்கள் செய்யபட்டு முழுமையான அதிகாரங்கள் கிடைக்க வேண்டும். அதற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை அரசுக்கு வேண்டும்.



கேள்வி;: இப்போது இருக்கும் அதிகாரங்களே சரியாக வழங்கப்படாத நிலையில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை அரசுக்குக் கிடைத்தால் 13 ஆவது அரசியலமைப்பில் மேலும் திருத்தங்களை அரசாங்கம் செய்யுமென்றா நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?



பதில்: நிச்சயமாக இல்லை..அப்படி இந்த அரசுக்கு மூன்றிலிருந்து அதிகப் பெரும்பான்மை கிடைத்தால் கூட அதிகாரப் பரவலாக்கலைத் தருவார்களென்று நான் நம்பவில்லை. அவர்கள் அதிகாரப் பரவலாக்கத்துக்காக மூன்றிலிரண்டு பெரும்பான்மையைக் கேட்கவில்லை. இன்றையத் தேர்தல் முறையை மாற்றுவதற்காகத்தான் அதனைக் கேட்கிறார்கள். இன்றையத் தேர்தல்முறையின் கீழ் தாம் சிறுபான்மைக் கட்சியின் ஆதரவிலேயே தங்கியிருக்க வேண்டியுள்ளதால் அதிலிருந்து மீட்சிபெற்றுக் கொள்வதற்காவே இந்த மூன்றிலிரண்டு பெரும்பான்மை கோரப்படுகிறது.



கேள்வி: உங்கள் கட்சி எதிர்பார்க்கும் அதிகாரப் பகிர்வு எத்தகைய தன்மைகொண்டதாகவிருக்க வேண்டும்?



பதில்: எங்களது பகுதிகளில் தாங்களே தங்களது விடயங்களைப் பார்க்கக் கூடியளவுக்கான அதிகாரப் பரவலாக்கம் ஒன்று தேவை. இது அனைத்து விடயங்களுக்கும் பொருத்தமானதாக இருக்க வேண்டும். பொலிஸ், காணி அதிகாரம் உட்பட அனைத்து அதிகாரங்களும் வழங்கப்படவேண்டும்.



கேள்வி: கிழக்கு மாகாண சபையின் இன்றைய நிலையைப் பாருங்கள்.. நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் வடக்கிலும் மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் இங்கும் அதே நிலைதானே உருவாகும்?



பதில்: தமிழ்மக்களுக்கு மாகாண சபை ஊ+டான அனைத்து அதிகாரங்களையும் அரசாங்கம் வழங்க வேண்டும். இந்த விடயத்தில் நேர்மையாக அரசு செயற்படவேண்டும். ஆளுநரை வைத்துக் கொண்டு கொடுக்கப்பட்ட அதிகாரங்களைக் கூடக் கேலிக் கூத்தாக்கிக் கொண்டிருந்தால் அவர்கள் மிகப் பெரிய தவறைச் செய்து கொண்டிருக்கிறார்களென்றுதான் கூறமுடியும். தமிழ் மக்கள் இன்று களைப்படைந்த நிலையில் இருக்கின்றார்களென்பதே உண்மை.மீண்டுமொரு ஆயுதப் போராட்டத்துக்கு அவர்கள் போகமாட்டர்களென்பதும் உண்மை. ஆனால் அந்த மக்களுக்கான அரசியல் அதிகாரங்கள் அனைத்தும் மறுக்கபட்டு, தமிழ் பகுதிகளின் அபிவிருத்திகளும் முடக்கப்பட்டு தமது பிரதிநிதிகள் கூட அதிகாரமற்ற பொம்மைகளாக இருப்பதனை தமிழ் மக்கள் நீண்ட காலத்துக்குச் சகித்தக் கொண்டிருக்கமாட்டார்கள். ஆகவே அரசாங்கம் இந்த விடயத்தைப் புரிந்து கொண்டு சரியான முடிவை எடுக்க வேண்டும்.



கேள்வி: இன்று வடக்கு,கிழக்கில் சில வேண்டத்தகாத சம்பவங்களும் இடம் பெறுகின்றவே. உதாரணமாக தமிழ் பேசும் மக்களின் காணிகள் அபகரிப்பு,சிங்கள குடியேற்றங்கள்; இவை தொடர்பில் நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?



பதில்: வன்னியில் இவ்வாறான அரசினால் செய்யப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெறுவதாகத் தெரியவில்லை. ஆனால் அதற்கான முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டுதான் உள்ளன. அதனைத் தடுப்பதற்கான முயற்சிகளை நாம் மேற்கொண்டு வருகிறோம். இதேவேளை, கிழக்கில் இவை இடம்பெறுகின்றன. தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டத்துக்கான காரணிகளாக இவைகளும் அமைந்திருந்ததை அரசாங்கம் மறந்துவிடக் கூடாது. இந்த விடயத்தில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறான விரும்பத்தகாத செற்பாடுகளை மேற்கொண்டு இந்த நாட்டில் ஓர் அமைதியற்ற நிலை தொடர்வதனை அரசாங்கம் விரும்புகிறதா என்ற கேள்வியும் இங்கு எழுகிறது. எங்களுக்கு நிச்சயமாக அரசியல் அதிகாரம் கிடைத்தவுடன் இவற்றுக்கு எதிராகவெல்லாம் குரல் கொடுக்வுள்ளோம்.



கேள்வி: வடக்கு,கிழக்கில் அதிக அளவில் சுயேச்சைக் குழுக்களை நிறுத்தி வாக்குகளைச் சிதறடிக்கச் செய்து தமிழ்பேசும் மக்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைப்பதற்கு அரசு திட்டமிட்டுச் செயற்படுவதாகக் கூறப்படுகிறதே?



பதில்: இந்த விடயத்தில் உண்மையிருப்பதாகவே நினைக்கிறேன். சிலர் பலவந்தப்படுத்தப்பட்டும் அரசாங்க அதிகாரங்கள் பாவிக்கப்பட்டும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். ஆனால,; இவையெல்லாம் எதிர்பார்க்கப்பட்ட விடயங்களே. அரசியல் அதிகார தரப்பினர் இவ்வாறு நடந்து கொள்வதென்பதும் எதிர்பாhக்கப்பட்ட விடயமே ஆனால் மக்கள் இவ்வாறானவர்களை இனம்கண்டு புறந்தள்ளுவார்களானால் எந்தப் பிரச்சினையும் இல்லைதானே? இதன் மூலம் அரசாங்கமும் அரசின் ஏஜென்டுகளாகவும் அரசின் அற்பசொற்ப சலுகைகளுக்குமாக நிற்பவர்களும் நிச்சயம் பாடம் கற்றுக் கொள்வர்.



கேள்வி: உங்களது கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் அரசுடன் இணைந்து செயற்படும் எண்ணம் உள்ளதா?



பதில்: எங்களைப் பொறுத்த வரையில் அரசுடன் இணைந்து முழுமையாகச் செயற்பட வேண்டிய தேவையில்லை.வன்னியில் இடம்பெயர்ந்த மக்கள் மீளக் குடியேற்றப்பட வேண்டும். அபிவிருத்தி நடவடிக்கைகளும் துரிதமாக இடம்பெற வேண்டும் அவர்களுக்கான வீட்டு வசதிகள், தொழில் வசதிகள் சரியாக வழங்கப்படவேண்டும். இப்படி அங்கு பல வேலைகள் அதாவது மிகப் பெரிய வேலைகள் எம்முன் காத்திருக்கின்றன. அவற்றினை நாம் செய்ய வேண்டியுள்ளது. ஆகவே எமது தமிழ்பேசும் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ளும் வகையில் அரசுடன் புரிந்துணர்வுடன் நாம் செயற்படுவோம். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நாம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்~வையே ஆதரித்தோம். ஆகவே, நாங்கள் அவரிடம் உரிமையோடு எதனையும் கேட்க முடியும். அவர் எமது கோரிக்கைகளை நிச்சயம் நிறைவேற்றுவாரென்று எதிர்பார்க்கிறோம். அமைச்சுப் பதவியைப் பெற்றுத்தான் சேவை செய்ய வேண்டுமென்ற தேவை எமக்கு இல்லையே?



அதுமட்டுமல்ல, நாடாளுமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சி 113 க்கு மேற்பட்ட ஆசனங்களைக் கைப்பற்றும். இந்த நிலையில் ஏனைய கட்சிகளின் ஆதரவு அரசுக்குத் தேவைப்படாதும் போகலாமல்லவா?
மேலும் இங்கே தொடர்க...

இரா. சம்பந்தன் ஐயாவுக்கு




பொதுத் தேர்தலில் தெரிவாகும் தமிழ்த் தலைவர்களுடன் இனப் பிச்சினையின் தீர்வு தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக ஜனாதிபதி அறிவித்திருப்பதால் உங்களுடைய கட்சிக்காரரையே தமிழ் மக்கள் தெரிவு செய்ய வேண்டும் என்ற பாணியில் பேசியிருக்கின்றீர்கள் . பத்திரிகையில் படித்தேன்.

அப்படியானால் தேர்தலுக்குப் பின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பேசுவதற்கு உங்கள் கட்சி தயார். ஏற்கனவே அவருடன் பேசியிருக்கலாமே. பேச்சுக்கு அழைத்த போதும் நீங்கள் போகவில்லை. பத்திரிகையாளர் மகாநாடு கூட்டிப் போக முடியாது என்று கூறினீர்கள். இந்த ஜனாதிபதியுடன் பேசிப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியாது என்று சொன்னீர்கள். இப்போது அதே ஜனாதிபதியுடன் பேசுவதற்காக உங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று தமிழ் மக்களைக் கேட்கின்றீர்கள் . முரண்பாடாக இருக்குதே.

பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதையே மக்கள் விரும்புகிறார்கள். இது உங்களுக்கும் தெரியும். எப்படியாவது எம்.பி ஆகவேண்டும் என்று விரும்புவதால், பேச்சுவார்த்தைக்குத் தயார் என்ற பாணியில் பேசுகின்றீர்கள் என்று சிலர் சொல்கின்றார்கள். ஒரு தேர்தலில் திருமலை மாவட்டத்தில் உங்களிலும் பார்க்கக் கூடுதலான வாக்குகள் பெற்றுத் தங்கத்துரை தெரிவாகினார். அவர் இராஜினாமா செய்து உங்களுக்கு இடம்விட வேண்டும் என்று உங்கள் ஆதரவாளர்கள் மூலம் அழுத்தம் பிரயோகித்ததாக அப்போது தகவல்கள் வெளியாகின. அது உண்மையா பொய்யா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் இப்போதும் இடைக்கிடை அது பற்றிய பேச்சு எழுகின்றது. எம். பி பதவியில் உங்களுக்கு அவ்வளவு ஆர்வம் என்கிறார்கள்.

சர்வதேச சமூகம் பிரச்சினையின் தீர்வுக்கு உதவக் காத்திருக்கின்றது என்று அடிக்கடி கூறுகின்றீர்கள் . இது உங்களுடைய கட்சி இன்று நேற்றுக் கூறும் கதையல்ல. பல வருடங்களாகச் சொல்லி வருகின்றீர்கள் . சந்திரிகாவின் காலத்திலிருந்து நேற்றுவரை எத்தனையோ வெளிநாட்டுத் தூதரகங்களுக்குச் சென்று கோரிக்கை விடுத்தீர்கள். பல நாடுகளுக்குச் சென்று தலைவர்களைச் சந்தித்தீர்கள். ஒன்றும் நடக்கவில்லையே. யுத்தத்தில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அழிவுகளையாவது சர்வதேச சமூகத்தினால் தடுக்க முடிந்ததா?

இந்தியா உதவிக்கு வந்து பதின்மூன்றாவது திருத்தத்துக்கு வழிவகுத்தது. அதை நீங்கள் நிராகரிக்கின்றார்கள் . அத்திருத்தத்திலும் பார்க்கக் கூடுதலான தீர்வைப் பெறுவதற்கும் இலங்கை அரசாங்கத்துடனேயே பேச வேண்டும். இந்தியாவின் உதவி அந்தப் பேச்சுவார்த்தைக்கு வழிவகுக்குமேயொழிய அதற்கு மேல் எதிர்பார்க்க முடியாது. இந்த நிலையில், உங்கள் கட்சியின் கையாலாகாத் தனத்தை மறைப்பதற்காகவே பிரச்சினையின் தீர்வுக்கு எதையுமே செய்ய முடியாத சர்வதேச சமூகம் பற்றிப் பேசி மக்களை எமார்ருகிண்றீர்கள் என்று நினைக்க வேண்டியுள்ளது.

பட்டு வேட்டி கட்டினால் நன்றாகத்தான் இருக்கும். அதற்காகக் கட்டியிருக்கும் கோவணத்தைக் கழற்றி எறிவதா?

நீங்கள் நடந்து வந்த பாதையை ஒருமுறை திரும்பிப் பார்ப்பீர்களேயானால் இந்தக் கேள்வியின் அர்த்தம் புரியும்.

வடக்கு, கிழக்கு மாகாண சபையை நிராகரித்தீர்கள். அதனிலும் பார்க்கக் கூடுதலான அதிகாரங்களுக்காக நிராகரிக்கின்றீர்கள் என்று நான் நினைத்தேன். சந்திரிகாவின் அதிகாரப் பகிர்வுத் தீர்வுத் திட்டம் வந்தது. அதில் சிறுபான்மையினருக்குப் பல பாதுகாப்புகள் இருந்ததாகப் பத்திரிகையில் படித்தேன். மாகாண சபையிலும் பார்க்கக் கூடுதலான அதிகாரங்கள் என்றும் படித்தேன். இந்திய வம்சாவளியினர் அனைவரினதும் பிரசாவுரிமைக்கு அரசியலமைப்பில் உத்தரவாதம் இருந்தது என்றும் சொன்னார்கள். அந்தத் தீர்வுத் திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வந்த உங்கள் கட்சி திடீரென பல்டி அடித்து எதிர்த்தது. அதனால் தீர்வைக் கைவிட நேர்ந்தது.

அந்தத் தீர்வுத் திட்டம் நடைமுறைக்கு வந்திருந்தால் தமிழ் மக்கள் இன்று முகங்கொடுக்கும் எந்தப் பிரச்சினையும் இருந்திருக்காது என்று சொல்கின்றார்கள். அது சரி என்றே நினைக்கிறேன்.

கடைசியில் புலிகளுடன் சேர்ந்து உலக சாதனையொன்றைப் படைத்துவிட்டீர்கள். உண்மைதான். உலகில் எந்தவொரு அரசியல் கட்சியும் உங்கள் கட்சியைப் போலத் தனது சொந்த இனத்தின் பேரழிவுக்கு வழிவகுக்கவில்லை.
மேலும் இங்கே தொடர்க...

பிரபாகரனின் தாயாரை மலேஷியாவுக்கு கூட்டிச்சென்றது தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறேன் -எம்.கே.சிவாஜிலிங்கம்






நாட்டின் எந்த சட்டதிட்டங்களையும் மீறாத வகையிலேயே நான் பிரபாகரனின் தாயாரை மலேஷியாவுக்கு அழைத்துச் சென்றேன். இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களமே அவருக்கு அனைத்து நாடுகளுக்குமான கடவுச் சீட்டையும் எவ்வித பிரச்சினையுமின்றி வழங்கியது. ஆனால், இன்று பிரபாகனின் தயாரை ஏன் அழைத்துச் சென்றீர்களென்றும் எம்மிடம் ஏன் அனுமதி பெறப்படவில்லையென்றும் விசாரிக்கின்றனர். .

பிரபாகரனின் தாயாரை சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்றுவிட்டு நாடு திரும்பியபோது விமான நிலையத்தில் வைத்தும் இது தொடர்பில் விசாரிக்கப்பட்டேன். இதன் பின்னர் தற்போது தொலைபேசி ஊடாகவும் தொடர்ந்தும் என்னை விசாரித்து வருகின்றனர். இது எனக்கு மிகுந்த மனவேதனையைத் தருகிறது என்றார். பிரபாகரனின் தாயாரை மலேஷியாவுக்கு அழைத்துச் சென்றமை தொடர்பில் அவா மேலும் கூறுகையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தை தடுப்புக் காவலிலிருந்தபோது மரணமடைந்தார். அவரது பூதவுடலையும் அவரது மனைவியையும் எவ்வித நிபந்தனைகளுமின்றியே அரசாங்கம் என்னிடம் ஒப்படைத்தது. பிரபாகரனின் தந்தையின் மரணத்தின் பின்னர் அவரது தாயாரைத் தொடர்ந்து இலங்கையிலேயே பராமரிப்பதற்கு அவருக்கு நெருக்கமான உறவினர்கள் எவருமில்லை. அத்துடன் அவர் கடந்த பத்து வருட காலமாக பாரிசவாத நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்..

இதன் காரணமாக அவரை கனடாவிலுள்ள அவரது மகளிடம் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகளை நான் செய்தேன். இதற்காக பிரபாகரனின் தயாருக்கு அனைத்து நாடுகளுக்குமான கடவுச்சீட்டும் பெற்றுக் கொள்ளப்பட்டது.:.

இந்த மாதம் 2ஆம் திகதி பிரபாகரனின் தாயாரை வடக்கிலிருந்து கொழும்புக்கு அழைத்து வந்தேன். அவரை அழைத்து வருவதில் கூட எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை. 3 ஆம் திகதி முதல் 5ஆம் திகதி வரை கொழும்பில் தங்கவைக்கப்பட்டிருந்த அவரை 5 ஆம் திகதி இரவு சிங்கப்பூருக்கு அøழத்துச் சென்று அவரது உறவினர்களிடம் ஒப்படைத்து விட்டு நான் இலங்கை திரும்பினேன். :.

அதன் பின்னர் அவர் சிங்கப்பூரிலிருந்து மலேஷியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். கனடாவில் வசிக்கும் பிரபாகரனின் சகோதரியான விநோதினி ராஜேந்திரன் மலேஷியாவுக்கு வந்து தனது தாயாரை பொறுப்பேற்றுள்ளார். பிரபாகரனின் தந்தையின் பூர்வீகம் மலேஷியா என்பதால் அவரது உறவினர்களும் அங்கு இருக்கலாம். பிரபாகரனின் ஏனைய சகோதர, சகோதரிகளும் தற்போது மலேஷியா வந்துள்ளனர். ஆனால், அவரைக் கனடாவுக்கு அழைத்துச் செல்வதில் தற்போது சற்றுச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவரது உடல் நிலையைக் காரணம் காட்டி அவர் கனடாவில் குடியேறுவதற்கான அனுமதியை அந்த நாட்டு அரசாங்கம் சில வேளைகளில் நிராகரிக்கவும் முடியும். இவ்வாறானதொரு நிலையேற்பட்டால் அவரை இந்தியாவுக்கு அனுப்பி இந்தியா விலுள்ள அவரது இன்னொரு மகளான ஜெகதீஸ்வரி மதியாபரணத்துடன் வாழ வைக்க முடியும். அவ்வாறு இந்தியாவுக்கு அனுப்பு வதிலும் பிரச்சினைகள் ஏற்பட்டால் மீண்டும் இலங்கைக்கே அழைத்து வரவேண்டிய நிலை யேற்படலாம் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

முல்லைத்தீவில் குடியேற்றப்பட்டவர்களுக்கு உதவ 15 அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு அரசு அனுமதி

முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களின் வாழ்வாதார நடவடிக்கைகளுக்கான உதவிகளை வழங்கும் வகையில் சுமார் பதினைந்து அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகளுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தின் இரு பிரதேச செயலகப் பிரிவுகளில் சுமார் நூறு கோடி ரூபா செலவில் 2700 வீடுகளை அமைக்கும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன்படி, அரச சார்பற்ற சுமார் 15 நிறுவனங்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் தங்கியிருந்து குறிப்பிட்ட பணிகளைச் செய்ய முடியும். இதற்கான அனுமதியை வடக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி வழங்கியுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் வீரகேசரி வாரவெளியீட்டுக்குத் தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது, ஜனாதிபதி செயலணியினால் அனுமதிக்கப்பட்ட இந்த அரச சார்பற்ற நிறுவனங்களில் பல ஏற்கனவே முல்லைத்தீவு மாவட்டத்துக்கு வந்துள்ளன. மேலும் சில நிறுவனங்கள் வந்து சேரும். மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கான குடியிருப்புகள், குடிநீர் வசதிகள், அந்த மக்களின் வாழ்வாதாரச் செயற்பாடுகளுக்கு இந்த நிறுவனங்கள் உதவிகளை வழங்கவுள்ளன.

6787 குடும்பங்கள் மீளக் குடியமர்வு

மீள்குடியேற்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு கடந்த வியாழக்கிழமை வரையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் சுமார் 6787 குடும்பங்களைச் சேர்ந்த 20,245 பேர், அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். வற்றாப்பளை நகர பிரிவின் முதலாவது கிராமத்தில் இறுதியாக கடந்த வியாழக்கிழமை 284 குடும்பங்களைச் சேர்ந்த 846 பேர் மீளக் குடியேற்றப்பட்டுள்ளனர். இந்தப் பிரதேசத்துக்கான பிரதேச செயலகமும் கடந்த வியாழக்கிழமை முதல் இயங்கத் தொடங்கியுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் முன்னைய புள்ளி விபரங்களின்படி 28,500 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 1,20,000 பேர் வசித்து வந்தனர். ஏனையோரும் விரைவில் குடியமர்த்தப்படுவரென எதிர்பார்க்கபடுகிறது.

முல்லைத்தீவு அரசாங்க அதிபர் அலுவலகம் திறப்பு

இது வரை காலமும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்த முல்லைத்தீவு அரசாங்க அதிபர் அலுவலகம் கடந்த முதலாம் திகதி முதல் மீண்டும் எம்மிடம் கையளிக்கப்பட்டது. இதன் நிர்வாகச் செயற்பாடுகளும் கடந்த வியாழக்கிழமை முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன. முல்லைத்தீவு அரசாங்க அதிபர் பணிமனையிலேயே புதுக்குடியிருப்பு பிரதேச செயலகமும் தற்காலிகமாக இயங்கி வருகிறது.

குடியமர்த்தப்பட்ட மக்களுக்கான உதவிகள்

இந்த மாவட்டத்தில் குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு உலக உணவுத் திட்டத்தின் கீழ் ஆறு மாதங்களுக்குத் தேவையான உலருணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 4000 ஏக்கர் நெற் காணியில் விதைப்பு வேலைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

விவசாயிகளுக்குத் தேவையான உரங்கள் மானிய அடிப்படையில் வழங்கப்படுகின்றன. உழவு வேலைகள் இலவச மாகச் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. நீர்ப் பாசன வசதிக ளும் செய்து கொடுத்துள் ளோம்.

புதிய வீடுகள், மற்றும் திருத்தியமைத்தல்கள்

துணுக்காய், மாந்தை கிழக்குப் பகுதிகளில் மீளக் குடியேற்ற நடவடிக்கைகள் 90சத வீதமளவில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இந்த இரு பிரதேசங்களிலும் நிரந்தரமாக 2700 புதிய வீடுகளைக் நிர்மாணிப்பதற்கான பணிகளை ஏற்கனவே ஆரம்பித்துவிட்டோம். ஒரு வீட்டினைப் புதிதாக அமைப்பதற்கு மூன்றரை இலட்சம் ருபா வரையில் நிதி வழங்கி வருகிறோம். அரசின் வடக்கு, கிழக்கு வீடமைப்புத் திட்டத்தின் கீழும் உலக வங்கியின் உதவியுடனுமே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. சேதமடைந்த வீடுகளைத் திருத்திக் கொள்வதற்காக சேதமதிப்பீட்டுக்கு அமைய நிதி உதவி வழங்கப்படுகிறது. சேதமடைந்த வீடுகளின் திருத்தப் பணிகளுக்காக ஓர் இலட்சம் ரூபா முதல் ஒன்றரை இலட்சம் ரூபா வரை உதவிகளை வழங்கி வருகிறோம். துணுக்காய் பிரதேச செயலகம் விரைவில் எம்மிடம் கையளிக்கப்படவுள்ளது. நாம் அதனைப் பொறுப்பேற்றுக் கொண்டதும் விரைவில் அங்கு நிர்வாகப் பணிகள் ஆரம்பிக்கப்படும்.மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தைத் திருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அந்த வேலைகள் முடிவடைந்ததும் அங்கும் நிர்வாகப் பணிகள் இடம்பெறும்.

பாடசாலைகள் இயங்குகின்றன

முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்கள் குடியேற்றப்பட்ட இடங்களிலுள்ள பாடசாலைகள் வழமைபோல் இயங்கி வருகின்றன. துணுக்காய் பிரதேச செயலகப் பிரிவில் 17 பாடசாலைகளும் மாந்தை கிழக்குப் பகுதியில் 13 பாடசாலைகளும் ஒட்டிசுட்டானில் 03 பாடசாலைகளுமாக 33 பாடசாலைகள் இயங்குகின்றன. இந்த 33 பாடசாலைகளிலும் சுமார் நான்காயிரம் மாணவர்கள் கல்வி கற்கின்றனர். 418 ஆசிரியர்கள் கல்வி போதிக்கிறார்கள். இவர்களுக்கும் மேலாக 25 தொண்டர் ஆசிரியர்களை நியமித்துள்ளோம். பல பாலர் பாடசாøலகளும் இங்கு இயங்குகின்றன.

வடக்கின் வசந்தம்

இது தவிர அரசாங்கத்தின் வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழும் இந்த மாவட்டத்தில் பாரிய அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனது வீட்டில் ஐந்து பிரதேச செயலகங்கள் கடந்த ஆறுமாத காலமாக முல்லைத்தீவு மாவட்டத்தின் ஐந்து பிரதேச செயலகங்களும் எனது வீட்டிலேயே இயங்கி வந்தன. இந்த ஐந்து செயலகங்களின் பணிகளையும் வவுனியா செயலகத்தில் மேற்கொள்ள நான் முயற்சி எடுத்தேன். ஆனால், அங்கு இடமில்øல öயனக் கூறப்பட்டது. இதன் காரணமாகவே எனது வீட்டில் இந்த ஐந்து செயலகங்களையும் இயக்க வேண்டியிருந்தது. தற்போது மக்கள் மீளக்குடியேற்றப்பட்டு வருவதால் அனைத்து செயலகங்களும் அந்தந்தப் பிரதேசங்களுக்கு மாற்றப்பட்டு விட்டன என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

மனித உரிமை மீறல்கள் தொடர்பான அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை இலங்கை அரசாங்கம் புறக்கணிப்பு




கடந்த வருடம் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரின்போது மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றன என்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டை இலங்கை அரசாங்கம் புறக்கணித்துள்ளது. அத்துடன் இலங்கை மீது எந்நேரமும் குற்றம் சுமத்துவதை விடுத்து வடக்கு கிழக்கில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களில் அமெரிக்கா கவனம் செலுத்த வேண்டும் எனவும் இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் நேற்றுமுன்தினம் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து அரசாங்க பாதுகாப்புப் பேச்சாளரான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதுபோன்ற கருத்துக்களை கடந்த நான்கு வருடங்களாக அவர்கள் கூறிவருகிறார்கள். அமெரிக்க அரசாங்கம் மாத்திரமல்ல, மனித உரிமை குழுக்களும் அதையே செய்து வருகின்றன எனவும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறியுள்ளார். அமெரிக்க இராஜாங்கத் திணைக் களத்தின் மனித உரிமைகள் அறிக்கையில் தமி ழீழ விடுதலைப் புலிகள் இலங்கை அரசாங்கம் ஆகிய இரு தரப்புகள் மீதும் குற்றம் சுமத்தப் பட்டிருந்தது.

அரசாங்க ஆதரவிலான துணை இராணுவக் குழுக்களும் பாதுகாப்பு படைகளும் சிவிலியன்கள் மீது ஆயுதத் தாக்குதல்களை நடத்தியதõகவும் சித்திரவதை, ஆட்கடத்தல், ஆட்களை பணயம் வைத்தல், பணம் பறித்தல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. கடந்தவரும் மனித உரிமை மீறலுக்காக எந்தவொரு இராணுவத்தினரையோ பொலிஸ்ரையோ அல்லது துணை இராணுவ உறுப்பினரையோ எந்தவொரு சிவில் அல்லது இராணுவ நீதிமன்றமோ விசாரணை செய்து தண்டனை வழங்கியதாக செய்தி எதுவும் வெளியõகவில்லை எனவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டிருந்தது.அத்துடன் அரசியல் அமைப்புச் சபையை அமைக்கத் தவறியதன் மூலம் மனித உரிøமகள் ஆணைக்குழு இலஞ்ச விசாரணை ஆணைக்குழு பொலிஸ் ஆணைக்குழு நீதிச் சேøவகள் ஆணைக்குழு போன்றவற்றுக்கான பிரதிநிதிகள் நியமிக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறுகையில் ""அவர்கள் (அமெரிக்கா) இத்தகைய விமர்சனங்களை நிறுத்திவிட்டு வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப் பட் டுள்ள அபிவிருத்திகளை கவனத்திற்கொள்ள வேண்டும்'' எனக் கூறியுள்ளார். _
மேலும் இங்கே தொடர்க...



தமிழ் .இயூ Thamil.eu





அன்பானவச்சகர்களே எமது தமிழ் இணையத்தளம் தற்பொழுது thamil.eu என்று பெயரில் சிறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது கவே தாங்கள் பார்வை இடுவதானாலும் சரி தங்கள் நண்பர்களுக்கும் கூறவும் , http://thamil.eu/
தமிழ்.யூ என்று பார்வை இடலாம் நன்றி இப்படிக்கு தமிழ் இனையதாள சிரியர்

மற்றும் நன்றி புதியபாதை இணையகுளுவினருக்கு
மேலும் இங்கே தொடர்க...

இலங்கையின் நிலைப்பாடுகள் அவ்வப்போது இந்தியாவுடன் பகிர்வு வெளிவிவகார செயலர் ரொமேஷ் ஜயசிங்க







இலங்கையின் நிலைப்பாடுகளை அவ்வப்போது இந்திய அரசுடன் பகிர்ந்து வருவதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரொமேஷ் ஜயசிங்க தெரி வித்தார்.

இலங்கை - இந்திய தலைவர்களுக்கிடை யில் நெருங்கிய உறவு நிலவுவதாகவும் ரொமேஷ் ஜயசிங்க குறிப்பிட்டார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (12) நடந்த செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மஹிந்த சமரசிங்கவுடன் வெளிவிவகார அமைச்சின் செயலாளரும் கலந்து கொண்டார். அப்போது இலங்கைக்கு எதிரான சர்வதேச ரீதியாக முன்வைக்கப்படும் கருத்துக்களை முறியடிக்க இந்தியாவின் உதவி நாடப்பட்டதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு ரொமேஷ் ஜயசிங்க பதிலளிக்கையில், இலங்கையின் கருத்துக்கள், நிலைப்பாடுகள் தொடர்பில் எந்நேரமும் இந்தியாவிடம் பகிர்ந்து கொள்ளப்படுவதாகத் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

பிடிவிறாந்தில் தேடப்பட்டவர் துப்பாக்கிச்சூட்டில் பலி



திருகோணமலை மட்கோ வீதி விகாரையொன்றிற்கு அருகாமையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குடும்பஸ்தர் ஒருவர் பலியானார்.

வெள்ளி நள்ளிரவு 2 மணியளவில் பொலிஸார் நடத்திய இந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பிள்ளைகளின் தந்தையான வர்த்தகர் றெஜி பந்துல (வயது 35) என்பவரே பலியானார்.

பிடிவிறாந்தில் தேடப்பட்டு வந்த இந்நபரைக் கைது செய்வதற்காக திருகோணமலை தலைமைப் பொலிஸ் குழுவொன்று வீடு சென்றபோது வீட்டைவிட்டு வெளியே வராமல் ஜன்னலின் ஊடாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இதன் பின்னர் பதில் தாக்குதல் நடத்திய பொலிஸாரின் துப்பாக்கி வேட்டுக்கு இலக்காகி இவர் ஸ்தலத்திலேயே பலியானார்.

இத்துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது காயமடைந்த (எஸ்.ஐ) பிரேமதாச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

பலியானவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப் பட்டது. துப்பாக்கி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

தங்கத்தின் மீதான இறக்குமதி வரிகள், தீர்வைகள் நீக்கம்




தங்க இறக்குமதி மீது விதிக்கப்பட்டிருந்த வரிகள் மற்றும் ஏனைய தீர்வைகள் யாவும் நீக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி நேற்று அறிவித்துள்ளது.

2010 மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் விதத்தில் வரிகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

சந்தையில் தங்கத்தின் விலையை குறைவடையச் செய்து நாட்டில் தங்க மற்றும் ஆபரணக் கைத்தொழில்களை ஊக்குவிப்பதற்காக இந்த வரி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அறி விக்கிறது.

தங்கத்தின் மீதான இறக்குமதி தீர்வை மற்றும் ஏனைய வரிகள் நீக்கப்பட்டுள்ளமையை பயன்படுத்தி வர்த்தக வங்கிகளும், ஏனைய அதிகாரமளிக்கப்பட்ட ஆட்களும் கைத்தொழில் தேவைப்பாடுகளை ஈடுசெய்து கொள்ளும் விதத்தில் அவர்களது தங்க இறக்குமதிகளை அதிகரிக்க முடியும் எனவும் மத்திய வங்கி தெரிவிக்கிறது
மேலும் இங்கே தொடர்க...

இரு கிராம சேவகர் பிரிவுகளில் அடுத்த வாரம் மீள்குடியேற்றம்





நிலக்கண்ணி வெடிகள், மிதிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதாக சான்றிதழ் வழங்கப்பட வுள்ளன. வவுனியா வடக்கு இரண்டு கிராம சேவகர் பிரிவுகளில் அடுத்த வாரம் மீள்குடி யேற்றங்கள் நடைபெறவுள்ளன.

இன்று 14ஆம் திகதியும் எதிர்வரும் 31ஆம் திகதியும் படையினர் மிதிவெடிகள் அகற்றப்பட்ட தற்கான சான்றிதழ்களை வவுனியா அரச அதிபரி டம் வழங்கவுள்ளனர்.

இதன்படி வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஒழுமடு கிராம சேவகர் பிரிவிலும், ஊஞ்சல் கட்டி கிராம சேவகர் பிரிவிலும் சுமார் 300 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 900 பேர் மீளக்குடியமர்த்தப்படவுள்ளதாக வவுனியா அரச அதிபர் திருமதி பீ. எம். எஸ். சார்ள்ஸ் தெரிவித்தார். மீள்குடியமர்த்தப்படவுள்ள மக்கள் வவுனியா செட்டிக்குளம் நிவாரணக் கிராமங்களிலிருந்தே அழைத்து வரப்படவுள் ளனர்.

வவுனியா வடக்கு பகுதியிலுள்ள சுமார் 20 கிராம சேவகர் பிரிவுகளிலும் மக்கள் முழுமையாக மீளக்குடியமர்த்துவதற்கு ஏதுவாக மிதிவெடிகளை அகற்றும் நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டுள்ளனர். கட்டமாக கட்டம் மிதிவெடிகள் அகற்றப்பட்ட பகுதிகளுக்கான சான்றிதழ்கள் அரச அதிபரிடம் கையளிக்கப்படும்.

இதேவேளை, இன்னும் சுமார் 1000 பேர் கிளிநொச்சி மாவட்டத்துக்கு மீள்குடியேற்றத்துக்காக அனுப்பி வைக்கப்ப டவுள்ளனர் என்றும் அரச அதிபர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

வெளிநாட்டு கண்காணிப்பாளரை வரவழைக்க எந்த கட்சியும் கோரவில்லை தேர்தல்கள் மேலதிக ஆணையாளர்

பொதுத்தேர்தலைக் கண்காணிக்கவென வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களை வரவழைக்கும்படி எந்தவொரு அரசியல் கட்சியோ, சுயேச்சைக்குழுவோ கோரவில்லை என்று தேர்தல்கள் மேலதிக ஆணையாளர் டப்ளியூ. பி. சுமணசிறி நேற்றுத் தெரிவித்தார்.

இதன் காரணத்தினால் பொதுத் தேர்தலைக் கண்காணிக்கும் நோக்கில் வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களை வரவழைக்கும் எண்ணம் தேர்தல்கள் செயலகத்திற்கு இற்றைவரையும் கிடையாது என்றும் அவர் கூறினார்.

இதேவேளை பொதுத் தேர்தலைக் கண்காணிப்பதற்காக வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை வரவழைப்பதற்கு பெப்ரல் அமைப்புக்கும், தேர்தல்கள் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான மத்திய நிலையத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பி ட்டார்.

புஎமது வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவார்கள் என்று பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி கூறினார்.

இத்தேர்தலைக் கண்காணிப்பதற்கான வெளிநாட்டுப் பிரதிநிதிகளை இம்மாதம் 28 ஆம் திகதிக்குள் வரவழைக்கவே நடவடிக்கை எடுத்து வருகின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

வடக்கு, கிழக்கு தமிழர்களை தனிமைப்படுத்த கூட்டமைப்பு முயற்சி சர். உதவியை நாடுவது பாதிப்பை ஏற்படுத்தும்




இலங்கையின் ஏனைய சமூகங்களிலிருந்து வடக்கு, கிழக்கு தமிழ் மக்களை தனிமைப்படு த்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சி செய்கிறதென அமைச்சர் திஸ்ஸவிதாரண தெரிவித்தார்.

சர்வதேசத்தின் தலையீட்டை நாடுவதன் மூலம் இத்தகைய நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறார்களெனவும் அவர் கூறினார். பொதுத் தேர்தலுக்கான தேர்தல் விஞ் ஞாபனத்தை தமிழ்த் தேசிய கூட்ட மைப்பு நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் வெளியிட்டது.

இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த அவர், தமிழ்த் தாயக் கோட்பாட்டின் அடிப்படையிலான உள்ளக சுயாட்சியை வலியுறுத்தி எதிர்வரும் தேர்தலில் மக்கள் ஆணையைப் பெறும் முயற்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இறங்கியிருக்கிறது. தமிழ் கடும் போக்காளர்களாக இருக்கும் இவர்கள் சர்வதேச சமூகத்தை கொண்டுவர முயல்வது பெரும் பாதிப்பையே ஏற்படு த்தும் என்றார்.

உண்மையில் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுக் கூட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்ட மைப்பு பங்குபற்றவில்லை. ஏனென்றால் புலிகள் அவர்களைத் தடுத்தனர். ஆனால் புலிகள் இப்போது அரங்கில் இல்லை. இப்போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சுதந்திரமான அரசியல் கட்சியாக தேர்தலில் நிற்கிறது. இது தமிழ் மக்களின் அபிலாஷை களை நிறைவேற்றக் கூடியதாக இருக்க வேண்டும்.

அதேநேரம் அரசியல் தீர்வு யோசனையை அவர்கள் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவுக்கு முன்வைக்கலாம் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

ஓய்வுபெற்ற பின்னரும் நிரந்தர வருமானம் பெற நிதியம் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஏற்படுத்தத் தீர்மானம்


ஓய்வுபெற்ற பின்னரும் நிரந்தர வருமானமொன்றைப் பெற்றுக்கொள்ள வழிவகுக்கும் நிதியமொன்றை எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தின் மூலம் ஏற்படுத்தத் தீர்மானித்துள்ளதாகத் திறை சேரியின் செயலாளர் பி. பீ. ஜயசுந்தர தெரிவித்தார்.

இலங்கையை ஆசியாவின் வியத்தகு நாடாக உருவாக்குவதில் எதிர்கொள்ள நேரும் பல்வித சவால்களையும் மிகுந்த கவனத்துடன் வெற்றிகொள்ள வேண்டியுள்ள தாகவும் அவர் குறிப்பிட்டார்.

பு2020ம் வருடத்தில் இலங்கைபூ எனும் தொனிப் பொருளில் உரையாற்றிய அவர், 2020ம் ஆண்டில் நாட்டில் சகலருக் கும் வீடு, அடிப்படை வசதிகளுடன் தனிநபர் வருமானத்தை 7,000 அமெரிக்க டொலராக உயர்த்துவதே அர சாங்கத்தின் நோக்கமாகு மெனவும் தெரிவித்தார்.

மஹிந்த சிந்தனையின் எதிர்காலத் திட்டத்தை தொழிலாளர் வர்க் கத்தினருக்கு விளக்கும் மாநாடு கொழும்பு சுகததாச உள்ளரங்கில் நேற்று முன்தினம் நடைபெற்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்புரையாற்றும் போதே திறைசேரியின் செயலாளர் பி. பீ. ஜயசுந்தர இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:- மஹிந்த சிந்தனை எதிர்காலத் திட்டம் கடந்த தேர்தலோடு ஆரம்பமானது. தற்போது நாட்டில் தனிநபர் வருமானம் 2,000 அமெரிக்க டொலராக உள்ளது. இன்னும் ஐந்து வருடங்களில் 4,000 டொலராகவும், 2020ல் 7,000 அமெரிக்க டொலராகவும் அதிகரிக்கச் செய்வதே எமது இலக்காகும்.

சகலருக்கும் வீடு, அடிப்படை வசதிகள், மின்சாரம், கல்வி, சுகாதாரம், தொடர்பாடல், தொழில்நுட்ப வசதிகளுடன் சகல மாணவர்களுக்கும் கணனி அறிவை வழங்கும் திட்டமும் நடைமுறைப் படுத்தப்படும்.

அத்துடன் சிசுமரணத் தொகையை பூஜ்ஜியமாக்குவதற்கும் உகந்த வழிவகை மேற்கொள்ளல், ஆசியாவின் வியத்தகு நாடாக இலங்கையை உயர்த்துவதே மஹிந்த சிந்தனையின் நோக்கம். நாட்டின் அரசியல், பொருளாதார நிபுணர்களின் கவனத்தை இத்திட்டம் ஈர்த்துள்ளதுடன் நாட்டின் வளத்தைப் பெருக்குவதே இதன் இலக்காகும் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...