25 செப்டம்பர், 2010

சரத்பொன்சேகாவுக்கு ஆதரவாக வெளிநாடுகளில் சிங்களவர்கள் ஆர்ப்பாட்டம்!






சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனநாயத் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமாகிய, சரத் பொன்சேகாவிற்கு, சிறிலங்கா இராணுவ நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. இந்நிலையில், சரத் பொன்சேகாவை விடுதலை செய்து, நாட்டில் ஜனநாயகத்தை நிலை நிறுத்த வலியுறுத்தி, உலகின் பல்வேறு நாடுகளிலும் ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு வெளிநாடுகளில் நடத்தப்படவுள்ள ஆர்ப்பாட்டங்களின் முதற்கட்டமாக. சிங்களவர்கள் அதிகமாக வாழும் இத்தாலி நாட்டின், மிலானோவிலும், ரோமிலும், பிரான்சின் பாரிசிலும், நடைபெறவுள்ளதாகவும், இப்போராட்டங்களில், சரத்பொன்சேகாவின் புதல்வி அப்சரா பொன்சேகா, வெளிநாடுகளில் நடைபெறவுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் சரத் பொன்சேகாவின் புதல்வி அப்சரா பொன்சேகா, பாராளுமன்ற உறுப்பினர்களான அர்ஜூன ரணதுங்க, அனுரகுமார திஸாநாயக்க மற்றும் டிரான் அலஸ் ஆகியோர் கலந்து கொள்வார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

சப்ரகமுவவில் தனியார் பல்கலைக்கழகம் அமைக்க அரசு அனுமதி

சப்ரகமுவ மாகாணத்தில் தனியார் பல்கலைக்கழகம் அமைக்க அரசு அனுமதி அளித்துத்துள்ளது என சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில,; “அமெரிக்கா, இந்தியா மற்றும் பெலராஸ் ஆகிய இடங்களில் அமைந்துள்ள தனியார் கல்வி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். இந்நிறுவனங்களின் உதவியுடன் மிக விரைவில் தனியார் பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்கவுள்ளோம். இப் பல்கலைக்கழகம் மருத்துவம், பொறியியல், தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளை கொண்டு இயங்கும்” எனத் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கையை ஆச்சரியமிக்க நாடாக மாற்றுவதாயின் நல்ல சமுதாயத்தை உருவாக்க வேண்டும்: சரத் ஏக்கநாயக்க



ஆசியாவின் ஆச்சரியமிக்க நாடாக இலங்கையை மாற்றுவதாயின் குண நலப் பண்புள்ள மக்கள் சமுதாயத்தை உருவாக்குவதன் மூலமே அது சாத்தியமாகும். இதற்கு ஆசிரியர்களது பங்களிப்பு மிக முக்கியமென்று மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கா தெரிவித்தார்.

இன்று ரஜரட்ட பல்கலைக்கழக பொல்கொல்லை வளாகத்தில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் பிரதம அதிதியாகக் கலந்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

நாம் கொங்கிறீட் கட்டிடங்களை வான் உயரக் கட்டி ஆச்சரியமாகப் பாகீக்கலாம். நெடுஞ்சாலைகளையும் பாலங்களையும் அமைத்து அதனை ஆச்சரியமாகப் பார்க்கலாம். அல்லது சுற்றாடலை தூய்மைப் படுத்தி அழகு படுத்தி அபிவிருத்தி என்று கூறலாம்.

சிலர் நினைக்கக் கூடும் அதுதான் ஆசியாவின் ஆச்சரியமிக்க விடயம் என்று. அதுவல்ல ஆசியாவின் ஆச்சரியம். நல்ல பன்புகளையும் நற்குணங்களையும் கொண்ட ஒரு சமுதாயம் உருவாகுமானால் அது தான் ஆசியாவின் ஆச்சரியமிக்கது. இதற்காக நாம் எமது கல்வியின் மூலம் மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும். கல்வியின் மூலம் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு ஆசிரியர்களின் பங்களிப்பு மிக முக்கியம்.

எனவே இலங்கையை ஆசியாவின் ஆச்சரியமிக்க நாடாக்குவதாயின் ஆசிரியர்களது பங்கு முக்கியம் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை மண்ணில் எந்த ஒரு பயங்கரவாதிக்கும் கால் வைக்க முடியாது: கோத்தபாய

இலங்கை மண்ணில் எந்த ஒரு பயங்கரவாதிக்கும் கால் வைக்க முடியாது என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவிக்கின்றார்.

இலங்கையில் பாகிஸ்தான் நாட்டைத் தளமாகக் கொண்டு இயங்கும் ‘லஸ்கர்-அல்-தொய்பா’ பயங்கரவாத அமைப்பு பயிற்சிகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் விடயம் தொடர்பாக அவர் கருத்து வெளியிடும் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

உலகில் எந்த நாட்டிலும் இல்லாத வகையில் இலங்கை முற்று முழுதாக பயங்கரவாதத்தை அடியோடு அழித்துள்ள வேளை இலங்கை மண்ணில் ஒரு பயங்கரவாதி காலெடுத்து வைக்க முடியாத அளவு நாம் சக்தி பெற்றுள்ளோம். நாம் மிக விழிப்பாக இருக்கின்றோம். எனவே இங்கு அப்படி பயிற்சிகள் பெற வாயப்பு இல்லை என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பான் கீ மூன் சந்திப்பு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனை தற்போது சந்தித்து கலந்துரையாடுகின்றார்.

சற்றுமுன் ஆரம்பமான இக் கலந்துரையாடலில் மீள் குடியேற்றம், கற்றுக்கொண்ட பாடம் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் செயல்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இங்கே தொடர்க...

முள்ளிவாய்க்காலில் கைவிடப்பட்டுள்ள வாகனங்களை காட்சிப்படுத்த ஐந்து இடங்கள் தெரிவு


தெற்கிலிருந்து களவாடப்பட்ட வாகனங்களும் கண்டுபிடிப்பு


தெற்கில் களவாடப்பட்டு வன்னிக்குக் கொண்டு செல்லப்பட்டுத் தற்போது கைவிடப்பட்ட நிலையில் உள்ள வாகனங்களின் உரிமையாளர்களைக் கண்டறிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இறுதி யுத்தத்தின் போது கைவிடப்பட்ட வாகனங்களுள், தெற்கிலிருந்து களவாடிச் செல்லப்பட்ட பெருமளவு வாகனங்கள் உள்ளதாகவும், அவை போலி ஆவணங்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் முல்லைத்தீவு 59ஆம் படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரி கேணல் ஆரியசிங்க தெரிவித்தார்.

இந்த வாகனங்கள் மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தில் பதிவு செய்யப்படவில்லை என்று தெரிவித்த அவர், இதனால், சிலர் வேறு நபர்களுக்குச் சொந்தமான வாகனங்களைச் சொந்தமாக்க முயற்சிப்பதாகவும், மற்றவர்களின் சொத்துக்களைக் கைப்பற்ற முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டார்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழுவிற்கு முல்லைத்தீவில் இந்தத் தகவல்களைக் கூறிய கேணல் ஆசிரியசிங்க, முள்ளிவாய் க்காலில் கைவிடப்பட்டுள்ள வாகனங்க ளைக் காட்சிப்படுத்துவதற்கு ஐந்து இட ங்களை அடையாளம் கண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இவ்வாறு கைவிடப்பட்ட சுமார் 400 வாகனங்களைக் கொண்டு வந்திருப்பதாகத் தெரிவித்த அவர் அவற்றை மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்கள அதி காரிகள் மற்றும் அரசாங்க அதிபர் உள்ளிட்டோர் முன்னிலையில் உரியவர்களுக்கு ஒப்படைக்க நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க சுயாதீன தேர்தல் ஆணைக்குழு காரணமாக சேவையிலிருந்து விலக முடியாது


தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க 2002 ஆண்டு ஜனவரி 28 ஆம் திகதியுடன் ஓய்வு பெற வேண்டும். ஆனால் 17 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் தாபிக்கப்பட்ட சுயாதீன தேர்தல் ஆணைக்குழு காரணமாக அவருக்கு சேவையில் இருந்து விலக முடியாதுள்ளது. இதனால் அவரது மனித உரிமை மீறப்படவில்லை என ஆளும் தரப்பு பிரதம கொரடா தினேஷ் குணவர்தன கூறினார்.

ஐ.தே.க. எம்.பி. தயாசிறி ஜெயசேகர எழுப்பிய வாய்மூல விடைக்கான கேள்விக்குப் பதிலளித்த அவர், ஆணையாளரின் தற்போதைய மாதச் சம்பளம் 73,165 ரூபாவாகும். அவர் 2002ல் ஓய்வு பெற்றார். ஆனால் 2002 ஜனவரி 29 முதல் தேர்தல் ஆணையாளராக மீண்டும் நியமிக்கப்பட்டார்.

17 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் தாபிக்கப்பட்ட தேர்தல் ஆணைக் குழு 18 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் திருத்தப்பட்டுள்ளது. பாராளுமன்ற சபை நிறுவப்பட்ட பின் தேர்தல் ஆணைக்குழு அமைக்கப்படும்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கையில் வாழும் 20 இலட்சம் முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும். இந்த நாட்டிலுள்ள முஸ்லிம்கள் மத்தியில் எந்த பயங்கரவாத இயக்கமோ அல்லது ஆயுதக் குழுக்களோ இங்கில்லை. முஸ்லிம்களின் ஒற்றுமையை சீர்குலைப்பதற்காக சில ஊடகங்கள் தவறான செய்திகளை பிரசுரிக்கின்றன.

ஊடகங்கள் செய்திகளில் உண்மைத் தன்மையை எழுத வேண்டும். இவ்வாறு மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலானா தெரிவித்தார்.

உலமாக்கள், புத்திஜீவிகள், ஊடகவியலா ளர்கள் கலந்துகொண்ட விசேட கலந்துரை யாடலில் ஆளுநர் அலவி மெளலானா தெரிவித்தார்.

இலங்கை முஸ்லிம்களை இயக்க ரீதியாக பிரித்து காட்டுவதற்கு ஒரு சில தீய சக்திகள் முயற்சிக்கின்றன.

இதற்கெதிராக முஸ்லிம் சகோதரர்கள் துணைபோகக் கூடாது. முஸ்லிம்கள் கலிமாவின் அடிப்படையில் ஒற்றுமையின் கயிற்றைப் பற்றிப் பிடித்து ஒன்றுபடல் வேண்டும். இயக்கங்கள் கூறுகளாக பிரியக்கூடாது.

இதற்கு பின்னால் இஸ்லாத்துக்கு எதிரான சக்திகள் உள்ளன. நாம் விழிப்புடன் செயற்படல் வேண்டும்.

அண்மையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபாய ராஜபக்ஷ கூட இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கும் ஆயுதக் குழுக்களுக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லையென தெரி வித்துள்ளார் என அலவி மெளலானா கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

இனங்களுக்கிடையே முரண்பாடுகளைத் தீர்க்க நிறுவன ரீதியான ஏற்பாடு அவசியமானது முன்னாள் அமைச்சர் பேரியல் நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியம்

இனங்களுக்கிடையே அமைதியையும் ஒற்றுமையையும் ஏற்படுத்துவதற்கு நிறுவனமய ரீதியான ஏற்பாடொன்று அவசியமானதென்று முன்னாள் அமைச்சர் திருமதி பேரியல் அஷ்ரப் தெரிவித்தார்.

இனங்களுக்கிடையில் ஏற்படும் முரண்பாடுகளைத் தீர்த்து அமைதியை நிலைநாட்டும் பொருட்டு இந்த அமைப்பை தேசிய ரீதியில் ஏற்படுத்த வேண்டுமென்றும் திருமதி அஷ்ரப் குறிப்பிட்டார்.

கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக் குழு முன்னிலையில் அவர் நேற்று (24) பிற்பகல் சாட்சியமளித்தார்.

கொழும்பு 7, ஹோட்டன் பிளேசில் உள்ள லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் ஆணைக் குழுவின் தலைவர் சீ. ஆர். டி. சில்வா தலைமையில் இடம்பெற்ற விசாரணையில் சாட்சியமளித்த திருமதி பேரியல் அஷ்ரப், “முஸ்லிம்கள் ஏனைய இனத்தவர்களோடு சகவாழ்வுடன் வாழ தயாராக இருக்கிறார்கள். முஸ்லிம் மதத் தலைவர்களும் மெளலவிமார்களும் இதனையே வலியுறுத்துகிறார்கள்” என்று தெரிவித்ததுடன், கிழக்கில்

காணாமற்போன முஸ்லிம் இளைஞர்களைக் கண்டறிந்துகொள்வதற்கு நல்லிணக்க ஆணைக் குழு உதவ வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.

சுனாமி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டார்கள். கிழக்கில் கலவரத்தால் இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்கள் புலிகள் இல்லாதுபோனதன் பின்னர் திரும்பி வந்து தமது காணிகளைக் கோருகிறார்கள். எனினும் அவர்களின் காணிகளைப் பெற்றுக்கொள்வதில் சிரமங்கள் எதிர்நோக்கப்படுகின்றன. இவை நிவர்த்திக்கப்பட வேண்டும் என்றும் திருமதி அஷ்ரப் குறிப்பிட்டார்.

மேலும், அம்பாறை மாவட்டத்தில் தாம் வீடமைப்புத் திட்டமொன்றை ஆரம்பித்தபோது முஸ்லிம் என்பதால் தடுக்கப்பட்டதாகவும் ஆணைக்குழு முன்னிலையில் அளித்த சாட்சியத்தில் அவர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

பொருளாதாரக் கொள்கையின் ஊடாக அபிவிருத்தி இலக்கை இலங்கை விரைவில் எட்டும் ஜனாதிபதி




எமது நாட்டையும் அதன் பொருளாதாரத் தையும் அபிவிருத்தி செய்துவரும் நிலையில் அதற்கு நாம் சர்வதேச சமூகத்தின் ஆதரவினை வரவேற்கிறோம். சர்வதேச வர்த்தகம், முதலீடு மற்றும் வளர்ச்சி மூலம் சர்வதேச சமூகத்துடன் கூட்டாக செயல்பட நாம் தயாராக இருக்கிறோம்.

எமது பொருளாதார கொள்கையின் ஊடாக அபிவிருத்தி இலக்குகளை சுலபமாக பெறுவதற்குரிய நிலையில் நாம் இருக்கிறோம். இதனை இலங்கை விரைவிலேயே நிறைவேற்றும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐ. நா. பொதுச் சபையில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கைக்கு எதிரான சவால்களை அது இனங்கண்டுள்ளது. அதில் பாரிய சவாலாக இருப்பது எமது கடந்த காலத்தில் ஏற்பட்ட காயங்களை ஆற்றுவதாகும். இந்நிலையில் அதற்காக இவ்வருட முற்பகுதியில் கற்றுணர்ந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட்டு ள்ளது.

அது பொறுப்புத் தன்மையுடனான கொள்கைக்கு முற்றிலும் கட்டுப்பட்டது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் உரையாற்றிய போது கூறினார்.

ஐ. நா. பொதுச்சபை கூட்டத் தொடரில் உரையாற்றிய ஜனாதிபதி மேலும் கூறியதாவது:- எனது இரண்டாவது பதவிக் காலம் முதலாவது பதவிக் காலத்தை விட பெரிதும் மாறுபட்டது. 2005 ஆம் ஆண்டு நான் முதலில் தெரிவு செய்யப்பட்ட போது எனது நாட்டை பயங்கரவாதத்தில் இருந்து மீட்பதாக வாக்குறுதி வழங்கினேன். அதை நிறைவேற்றியுள்ளேன். சில காலத்துக்கு முன் அங்கு கனவாக மட்டுமே இருந்த சமாதானம் இப்போது அங்கு நனவாகி யுள்ளது.

எனது இரண்டாவது பதவிக் காலத்தில் சமாதானம் மற்றும் சபீட்சத்தை ஸ்திரப்படுத்துவதுடன் பயங்கரவாதம் மீண்டும் ஒருமுறை தலைதூக்க இடமளிக்க மாட்டேன் என்று வாக்குறுதியை எனது மக்களுக்கு வழங்குகிறேன்.

விரைவிலேயே மறந்துபோன உண்மை என்னவென்றால்; நாம் மிகவும் கொடூரமான, நன்கு திட்டமிட்டு செயற்பட்ட சிறந்த நிதி உதவியை பெற்று, நன்றாக இயங்கிய ஒரு பயங்கரவாத இயக்கத்தை நாம் எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்பதாகும். இது ஏனைய நாடுகளிலும் தனது வலையை விரிக்கக் கூடியதாக இருந்தது என்பதை மறந்துவிடக் கூடாது.

மேற்கு நாடுகள் அண்மைக் காலத்தில் அனுபவித்துவரும் பயங்கரவாதத்தின் கொடூரத்தை இலங்கை மக்கள் சுமார் 30 வருடங்கள் அனுபவித்து வந்துள்ளனர். சுமார் ஒரு இலட்சம் பேர் அதில் உயிரிழந்தனர்.

அவ்வாறு கொல்லப்பட் டவர்களில் இலங்கை ஜனாதிபதி ஒருவரும், முன்னோக்க தரிசனத்துடன் கூடிய ஒரு இந்தியத் தலைவரும், நூற்றுக்கணக்கான புத்தி ஜீவிகளும், அரசியல்வாதிகளும் அடங்குகின்றனர்.

வழிதவறிப் போன சிலருக்கு நான் சொல்ல வேண்டியது என்னவென்றால் பிரிவினைவாதம், குரோதம், மற்றும் வன்முறைக்கு துணை போகாதீர்கள். அதற்கு மாறாக எம்முடன் கைகோர்த்துக்கொள்ளுங்கள், பரஸ்பர நம்பிக்கையை ஏற்படுத்திய வண்ணம் புதிய பரிமாணங்களை நாம் எட்ட முடியும்.

எமது நாட்டை கட்டியெழுப்புவதற்கும் அதன் காயங்களை ஆற்றுவதற்குமான நடைமுறை எமக்குள்ளேயே உருவாக வேண்டும் என்று நாம் நம்புகிறோம். சரித்திரம் நமக்கு ஒன்றை சொல்லிக் கொடுத்திருக்கிறது என்றால், அது வெளியில் இருந்து திணிக்கப்பட்ட தீர்வுகள் மனக்கசப்பை தோற்றுவித்து இறுதியில் தோல்வியையே ஏற்படுத்தும் என்பதாகும். அதற்கு மாறான எமது உள்நாட்டு நடைமுறையானது எமது மக்களின் கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் பிரதிபலிப்பதாக அமைகிறது.

எமது நாட்டையும் அதன் பொருளாதாரத்தையும் அபிவிருத்தி செய்து வரும் நிலையில் அதற்கு நாம் சர்வதேச சமூகத்தின் ஆதரவினை வரவேற்கிறோம் சர்வதேச வர்த்தகம், முதலீடு மற்றும் பரிமாண வளர்ச்சி மூலம் சர்வதேச சமூகத்துடன் கூட்டாக செயற்பட நாம் தயாராக இருக்கிறோம்.

சமாதானத்தின் பெறுபேறாக எமது பொருளாதாரம் முன்னேற்றப்பாதையில் செல்கிறது. கடந்த காலாண்டு காலத்தில் எமது வளர்ச்சி நிலையாகவும் ஸ்திரமாகவும் உள்ளதுடன், 8 சதவீதத்துக்கு மேற்பட்ட வளர்ச்சி வீதத்தை காட்டி நிற்கிறது. பண வீக்கம் குறைந்த நிலையிலும் வட்டி வீதங்களும் குறைந்து காணப்படுகின்றன. கடந்த 5 வருடங்களில் எமது தனிநபர் வருமானம் இரட்டிப்பாகியுள்ளது. அதனை மேலும் முன்னேற்றச்செய்து 2016 ஆம் ஆண்டளவில் அதனை தற்போது இருப்பதிலும் இரட்டிப்பாக்குவது எமது குறிக்கோளாகும்.

மஹிந்த சிந்தனை, எதிர்கால நோக்கு என்ற எனது தேர்தல் விஞ்ஞாபனம் உறுதியான உட்கட்டமைப்பை கொண்டிருக்கும். எனது எதிர்கால தரிசனத்தை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. தேசிய, மாகாண மற்றும் கிராம மட்டங்களில் இடம்பெறும் இந்த தரிசனம் எமது முழுமையான சமூகத்தின் அபிவிருத்தியை அர்த்தமுள்ளதாக்கும்.

அதேவேளை எனது நாட்டின் பொருளாதார தந்திரோபாயம் புத்தாக்க அபிவிருத்தி இலக்குகளை சுலபமாக நிறைவேற்றக்கூடிய நிலையில் இருப்பதை சொல்லிக்கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன். ஐக்கிய நாடுகளின் காலக்கெடுவுக்கு முன்னரே அதனை இலங்கை நிறைவேற்றும் என்று நம்பலாம்.

ஐக்கிய நாடுகளின் அமைதிப்படைக்கு இலங்கை பங்களிப்பு வழங்கிய 50ஆவது நிறைவு 2010 ஆம் ஆண்டு எனக் கூறுவதில் மகிழ்ச்சியடைகிறேன். எமது படையினரும் பொலிஸாரும் இன்று சிறப்பான யுத்தப் பயிற்சியுடன் எந்தச் சவாலான நிலையிலும் கடமையாற்றக்கூடிய திறனுடன் உள்ளனர். ஐக்கிய நாடுகளின் அமைதிப் படையின் செயற்பாடுகளுக்கு தொடர்ந்து உதவும் எமது விருப்பத்தை நான் மீண்டும் உறுதிப்படுத்துகிறேன்.

எமது பிராந்தியத்தில் அண்மையில் இடம்பெற்ற இயற்கை அழிவுகள் முறையான செயற்பாட்டின் தேவையை கோடிட்டுக் காட்டுகின்றன. இதற்கு கூட்டான பங்களிப்பு தேவைப்படுகிறது. அதன் மூலமே மனித வேதனையைக் குறைக்க முடியும். சுவாத்திய மாற்றம் மற்றும் புவி வெப்பமடைதல் ஆகியவை இன்று அனைத்து நாடுகளினதும் அவதானத்தை ஈர்க்கும் விடயமாகியுள்ளதை இங்கு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

நீண்ட காலமாக இழுத்தடிக்கப்பட்டுவரும் அரசியல் விவகாரங்களில் பலஸ்தீன மக்களின் உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்படும் விடயத்தை சுட்டிக்காட்ட வேண்டும். இந்த விடயம் தாமதமின்றி தீர்க்கப்பட்டு, அடுத்த வருட பொதுச்சபை கூட்டத்தில் பலஸ்தீனம் பூரண அங்கத்துவ நாடாக கலந்துகொள்ளும் என்று நாம் நம்புகிறோம்.

உலகளாவிய ரீதியில் இன்று ஒவ்வொரு நாடும் ஒன்றையொன்று சார்ந்து இருக்க வேண்டியுள்ளது. எனவே நாம் ஒன்றுபட்டு பணியாற்ற வேண்டும். தேவையான வேளையில் நாம் ஒருவரோடு ஒருவர் ஆலோசனையுடன் செயற்பட முடியும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐ. நா. பொதுச்சபையில் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

கொழும்பின் புறநகர் பகுதியில் இனந்தெரியா ஆயுததாரிகளினால் பாரிய கொள்ளை


சிறிலங்கா தலைநகர் கொழும்பில் பாரிய கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக அறியப்படுகிறது. இக் கொள்ளைச் சம்பவத்தில் சுமார் 70 மில்லியன் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டிருப்பதாக முதற்கட்ட விசாரணைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் அறிகையில்; கொழும்பின் புறநகரில் அமைந்துள்ள பேலியகொட பிரதேசத்தில் இன்று அதிகாலையில் இக் கெள்ளைச் சம்பவம் இடம்பெற்றதாகவும், மோட்டார் சைக்கிள்களில் ஆயுதங்களுடன் வந்த இனந்தெரியாத நபர்களினாலேயே இக் கொள்ளை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிய வருகிறது.

தனியார் வங்கி ஒன்றின் தானியங்கி இயந்திரத்தில் வைப்புச் செய்வதற்காகக் கொண்டு வரப்பட்ட பணமே கொள்ளையிடப்பட்டதாகவும், இக் கொள்ளைச் சம்பவத்தில் ஆயுததாரிகள் ஐந்து பேர் ஈடுபட்டிருந்ததாகவும் காவல்துறை வட்டாரச் செய்திகளை மேற்கோள் காட்டித் தகவல்கள் வெளியாகியுள்ளன. இக் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை பொலிசார் முடுக்கிவிட்டுள்ளதாக அறியப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...