18 அக்டோபர், 2009

இலுப்பைக்குளம் நலன்புரி நிலையத்திலிருந்து 208 பேர் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பு


செட்டிக்குளம் நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டிருந்து மன்னார் இலுப்பைக்குளம் நலன்புரி நிலையத்திற்கு மாற்றப்பட்டவர்களில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தொகுதியினர் நேற்று மாலை அவர்களுடைய சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மன்னார் இலுப்பைக்குளம் நலன்புரி நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தவர்களில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 208 பேர் மேற்படி அவர்களுடைய சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியினைச் சேர்ந்த 18 குடும்பங்களைச் சேர்ந்த 45 பேரும் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 49 குடும்பங்களைச் சேர்ந்த 163 பேரும் பேருந்துகள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

மன்னார் நகரப்பகுதியை சேர்ந்த 163 பேரும் மன்னார் நகரப்பகுதியில் நேற்று மாலை 5.45 மணியளவில் இறக்கி விடப்பட்டனர்.இவர்கள் அழைத்து வரப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோநோகராதலிங்கம் மக்களுடன் கலந்துரையாடினார்
மேலும் இங்கே தொடர்க...
கனடாவுக்குள் கப்பல் மூலம் பிரவேசிப்பதற்கு முயற்சித்த 76 இலங்கையர்கள் கைது


இலங்கை அகதிகள் என்று சந்தேகிக்கப்படும் ஒரு குழுவினர் சென்ற கப்பல் ஒன்றை கடந்த சனிக்கிழமை கனடிய பொலிஸார் பிரிட்டிஷ் கொலம்பியா கடலின் கனடா கடற்பரப்பிற்குள் வைத்து கைப்பற்றியுள்ளார்கள். கப்பலில் உள்ள அகதிகள் எங்கிருந்து புறப்பட்டார்கள் என்று உடனடியாக தெரியவில்லை.

கனடாவின் கடற்படை பிரிவினரதும் இரண்டு பொலிஸாரினதும் பாதுகாப்புடன் கப்பல் தற்போது அகதிகளோடு விக்ரோறியாவிலுள்ள ஒரு துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 76 பேருடன் வந்த "ஓசன் லேடி' என்ற பெயர் பொறிக்கப்பட்ட இக் கப்பல் சனிக்கிழமை காலை கனடிய கடல் பிரதேசத்திற்குள் பிரவேசித்தது என்று கனடிய பொது பாதுகாப்பு அமைச்சர் பீட்டர் வேன் லோன் தெரிவித்தார்.

எங்கிருந்து இக்கப்பல் வந்தது என்று கேட்ட போது ஆரம்பத்தில் இலங்கையிலிருந்து வந்ததாக கருதப்பட்டது. ஆனால் இன்னமும் அது ஊர்ஜிதம் செய்யப்படவில்லை என்று அவர் கூறினார்.

கனடிய பொலிஸார் பிடித்த படங்களில் கப்பலில் இருந்தவர்கள் மேலே பறந்து சென்ற ஹெலிகொப்டர் ஒன்றை பார்த்து கைகளை அசைத்ததை காணக் கூடியதாக இருந்தது என்றும் சிவில் உடைகளுடன் காணப்பட்ட அவர்களில் சிலர் சேர்ட் அணியாமல் நின்றார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் இங்கே தொடர்க...
இடம்பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்றம்; ப.சிதம்பரம்-கருணாநிதி சந்தித்து ஆலோசனை


வடக்கே வவுனியாவில் முகாம்களி்ல் உள்ள மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துவது குறித்து முதல்வர் கருணாநிதியுடன் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இன்று ஆலோசனை நடத்தியுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

முதல்வரின் இல்லத்தில் நடந்த இந்தச் சந்திப்பின்போது, இலங்கைக்கு விஜயம் செய்த திமுக-காங்கிரஸ் எம்பிக்கள் வழங்கிய அறிக்கை குறித்தும் விவாதிக்கப்பட்டது.

சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய சிதம்பரம், "இதுவரை 5,000 தமிழர்கள் அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டு விட்டனர். மற்றவர்களையும் விரைவில் அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்புவது குறித்து இலங்கையுடன் மத்திய அரசு பேச்சு நடத்தும்.

அந்த மக்கள் வசித்த பகுதிகள் போரினால் பாதிக்கப்பட்டுள்ளதால் அந்தப் பகுதிகளை மேம்படுத்தவும், அடிப்படை வசதிகளை செய்து தரவும் மத்திய அரசு உதவத் தயாராக உள்ளது.

இலங்கை அரசு கோரினால் அந் நாட்டு மேலும் நிதியுதவி செய்யவும் அரசு தயாராக உள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்த குழு அளித்துள்ள அறிக்கை குறித்து மத்திய அமைச்சரவையில் விவாதி்த்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்
மேலும் இங்கே தொடர்க...