27 ஜூன், 2010

இந்தியக் கடற்பரப்பில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களுடன் கப்பல் முற்றுகை





இந்தியக் கடற்பரப்பில் வைத்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களுடன் கப்பல் ஒன்று இந்தியக் கடற்படையினரால் முற்றுகையிடப்பட்டுள்ளது. இந்தக் கப்பல் பங்களாதேசிலிருந்து பாகிஸ்தான் செல்லும்போதே முற்றுகையிடப்பட்டுள்ளது. இந்தியக் கடற்பரப்பான கல்கத்தா பகுதியில் வைத்தே இந்தக் கப்பல் முற்றுகையிடப்பட்டுள்ளதுடன், கப்பலின் கப்டன் இந்தியக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக இந்திய செய்திகள் கூறுகின்றன. குறித்த கப்பல் லைபீரியாவில் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும், ஆயுதங்கள் கொண்டுசெல்வதற்கான உரிய ஆவணங்கள் எதுவும் கப்பலில் இருக்கவில்லையென்றும் இந்தியக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இந்தக் கப்பலில் இருந்து எறிகணைகள், விமான எதிர்ப்பு பீரங்கிகள், வெடிபொருட்கள் என்பன மீட்கப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன
மேலும் இங்கே தொடர்க...

பயணிகள் சேவைக்கான விமானங்கள் வாங்க விடுதலைப் புலிகள் திட்டம்?






புலிகளின் ஐரோப்பிய வலையமைப்பு பயணிகள் சேவைக்கான விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏ-380 ரகத்தைச் சேர்ந்த இரு விமானங்களை வாங்கி "ஈழ விமான சேவை" என்ற பெயரில் அவர்கள் பயணிகள் போக்குவரத்து சேவையை வழங்கத் திட்டமிட்டுள்ளனர் என்று இலங்கை அரசுக்கு ஆதரவான சிங்கள மொழிப் பத்திரிகையான "திவயின" தகவல் வெளியிட்டுள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் தலைவரான ருத்திரகுமாரன் இதற்கான யோசனையை வழங்கியதாகவும் அந்த இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இதுகுறித்து புலிகள் தரப்பில் தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கைத் தமிழரின் பாதுகாப்பிற்கு மத்திய அரசு உறுதியளிக்க வேண்டும்- முதலமைச்சர் கருணாநிதி

இலங்கையில் தமிழ் மக்கள் தொடர்ந்து துன்ப, துயரங்களுக்கு ஆளாக்கப்படுவதும், இவர்களின் மீள் குடியேற்றம் மற்றும் மீள்குடியேற்றப்பட்டு முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டவர்கள் தொடர்பில் பாதுகாப்பையும், நல் வாழ்க்கையும் ஏற்படுத்த உறுதியளிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துவதாக முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்துள்ளதாக அங்கிருக்கும் எமது அலுவலக செய்தியாளர் சற்றுமுன் தெரிவித்தார்.

கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கடந்த 23ஆம் திகதி‌ காலை கோலாகலமாகத் ஆரம்பமாகி 4 நாட்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு இன்று நிறைவு பெறுவதையடுத்து செம்மொழி மாநாட்டின் தீர்மாணங்களை கூறும் போதே முதலமைச்சர் கருணாநிதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த முதலமைச்சர், இலங்கை தமிழர் தமது இன, மதம், மொழி முதலானவற்றை நிலைநாட்டிக் கொள்ள அவர்களால் நீண்ட காலம் உறுதி மொழிகள் முன்வைக்கப்பட்ட போதும் அதற்கு எவ்வித தீர்வுகளும் கிடைக்கப் பெறவில்லை.

இந்நிலையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பல இலட்சம் கணக்கான தமிழர்கள் கலந்து கொண்ட போதும் இலங்கை தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலையானது எமக்கும் இங்குள்ள அனைவருக்கும் வேதனை தருகின்றது.

எனவே இலங்கை தமழிர் பிரச்சினைத் தொடர்பில் முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு தீர்வினை பெற்றுத் தர வேண்டும் என இத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கேட்டு கொள்கின்றது.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கையின் எதிர்காலத்திற்கு மனித உரிமை விவகாரங்கள் அவசியம் தேவை : அமெரிக்கா



இலங்கையின் எதிர்கால நலனுக்கு மனித உரிமை விவகாரங்கள் மிகவும் அவசியம் தேவை என அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.

நாட்டில் யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில், நாட்டு மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் ஸ்திரமான உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. .

நாட்டு மக்களுடனான உறவுகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான சிறந்த வாய்ப்பு உருவாகியுள்ளதென அமெரிக்கா பல தடவைகள் சுட்டிக்காட்டியுள்ளதென ராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் பி.ஜே.க்ரவ்லி தெரிவித்துள்ளார். .

நிபுணர்கள் குழுவை நாட்டுக்குள் பிரவேசிக்க அனுமதிக்க முடியாது என்ற இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். .

மனித உரிமை விவகாரங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதன் மூலம் இலங்கையின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப முடியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

அடிப்படை வசதிகளின்றி மீள்குடியமர்வு : மாந்தையில் மக்கள் அவலம்

மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குட்பட்ட சவராய் சீது விநாயகர் குளம் பகுதி மக்கள், எவ்வித அடிப்படை வசதிகளுமற்ற நிலையில் மீள் குடியேற்றப்பட்டுள்ளதாகவும் இதனால்அவர்கள் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சவராய் கிராமத்தைச் சேர்ந்த 21 குடும்பங்களைச் சேர்ந்த 72 பேரும், சீது விநாயகர் குளம் பகுதியைச் சேர்ந்த 29 குடும்பங்களைச் சேர்ந்த 112 பேரும் இவ்வாறு மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

மேற்படி கிராமங்களில் 50 குடும்பங்களைச் சேர்ந்த 184 பேர் கடந்த 15ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் மீள் குடியேற்றம் செய்யப்படவுள்ளனர்.

எனினும் போக்குவரத்து பிரச்சினை தற்போது காணப்படுவதாகவும் தங்களுடைய கிராமத்திலிருந்து சுமார் 15 கிலோ மீற்றர் தூரம் நடந்து சென்ற பின்னரே பஸ்ஸில் பயணிக்க வேண்டியிருப்பதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றார்.

எனவே முதலில் உடனடியாக தங்களுடைய கிராமத்திற்குப் போக்குவரத்து வசதியை செய்து தருமாறு உரிய அதிகாரிகளிடம் அம்மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

மதுபோதையில் திரிவதற்குத் தடை : யாழ். பொலிஸ் அத்தியட்சகர் தெரிவிப்பு

யாழ்ப்பாணத்தின் பொது இடங்களில் மதுபோதையில் அலைவது மற்றும் சமூகச் சீரழிவு நடவடிக்கைகளில் ஈடுபடுவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென யாழ்.பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நெவின் பத்மதேவ தெரிவித்தார்.

இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்று நேற்று யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றது. அதன்போது கருத்துத் தெரிவித்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்,

"அண்மைக் காலமாக தென்னிலங்கையில் இருந்து வருபவர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் சிலர் யாழ்ப்பாணத்தின் முக்கிய பொது இடங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் மது போதையில் அலைந்து திரிந்து மக்களுக்கு இடையூறு விளைவிப்பது பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது.

நயினாதீவு, நல்லூர் மற்றும் நாக விகாரை போன்ற புனித இடங்களிலும், மற்றும் பொது இடங்களிலும் மது போதையில் நடமாடுவதும் சமூகச் சீரழிவு நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது. மீறி நடப்பவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அத்துடன் சுற்றுலாத் தலங்களுக்கு மதுபானம் கொண்டு வருவதும் தடைசெய்யப்பட்டுள்ளது. மேற்கூறப்பட்ட இடங்களுக்கு அருகில் மதுபான சாலையில் மதுபானம் விற்பனை செய்யப்படவும் கூடாது.

ஆலயங்கள், பொது இடங்களில் பிள்ளைகளைப் பிச்சை எடுக்க வைக்கும் பெற்றோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நடைமுறைகள் அனைத்தும் நாளை திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வரும்" எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

ஐநா நிபுணர் குழுவுக்கு பிரான்ஸ் ஆதரவு

ஐக்கிய நாடுகள் சபையினால் நியமிக்கப்பட்டுள்ள இலங்கை தொடர்பிலான நிபுணர்கள் குழுவுக்கு பிரான்ஸ் வரவேற்பளித்துள்ளது. ஏற்கனவே அமெரிக்கா, நோர்வே ஆகிய நாடுகள் ஆதரவு தெரிவித்திருந்தன.

பிரான்ஸின் வெளியுறவு கொள்கைகள் தொடர்பிலான உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழு, இலங்கையில் நடைபெற்ற சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள், வன்முறைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் விசாரணை செய்ய வேண்டும் என பிரான்ஸ் கோரியுள்ளது.

இதற்கிடையில் ஏற்கனவே யுத்தம் நிறைவடைந்தவுடன் யுத்த மீறல்கள் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதாக இலங்கை அரசாங்கம் உறுதியளித்திருந்தது.

இதன்படி, அண்மையில் ஜனாதிபதி நியமித்துள்ள மாண்புமிக்கோர் குழுவும், ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழுவுடன் இணைந்து இது தொடர்பில் செயல்பட வேண்டும் என பிரான்ஸ் கோரியுள்ளது.

இலங்கையில் யுத்தக் குற்றசாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள், தொடர்பான விசாரணைகள், இடைநடுவில் நின்றுவிடக் கூடாது. எனவே இதனை நிறைவு செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இதன் அடிப்படையிலேயே, இலங்கையின் எதிர்கால சந்ததியினருக்கு அமைதியான வாழ்கைச் சூழல் நிலவ முடியும் என பிரான்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது
மேலும் இங்கே தொடர்க...

நித்யானந்தாவுடன் தொடர்பு: எனது அனுபவங்களை புத்தகமாக எழுதுகிறேன்- சென்னையில் ரஞ்சிதா பரபரப்பு பேட்டி


6 மாதங்களில் ஏற்பட்ட சம்பவங்கள் தொடர்பாக நடிகை ரஞ்சிதா புத்தகம் எழுதுகிறார். நித்யானந்தாவுடன் தொடர்பு:  எனது அனுபவங்களை புத்தகமாக எழுதுகிறேன்-  சென்னையில் ரஞ்சிதா பரபரப்பு பேட்டிநித்யானந்தா சாமியாருடன் நடிகை ரஞ்சிதா படுக்கையில் ஒன்றாக இருந்த வீடியோ படம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்துக்கு பிறகு நடிகை ரஞ்சிதா தலைமறைவாகி விட்டார். நித்யானந்தா மீது பெங்களூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதுதொடர்பாக ரஞ்சாவிதாவிடம் விசாரணை நடத்துவதற்காக போலீசார் சம்மன் அனுப்பினார்கள். ஆனாலும் ரஞ்சிதா கடைசி வரை ஆஜராகவில்லை.

அவர் அமெரிக்காவில் இருக்கிறார், காஷ்மீரில் இருக்கிறார், கேரளாவில் இருக்கிறார் என அவரை பற்றி பல்வேறு தகவல்கள் வந்தன. ஆனால் அவர் இருப்பிடம் கடைசிவரை தெரியாமலே இருந்தது.

ஆனால் அவர் இந்த மாதம் தொடக்கத்தில் சென்னை திரும்பி விட்டதாக தகவல் வந்து உள்ளது. சென்னையில் ரகசிய இடத்தில் தங்கி இருக்கும் அவர் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பரபரப்பாக பேட்டி அளித்துள்ளார்.

இதுவரை நீண்ட கூந்த லுடன் சேலை அல்லது சுடிதாருடன் காட்சியளித்து வந்த அவர் இப்போது முற்றிலும் மாறி இருக்கிறார். முடியை “பாப்” கட்டிங் செய்து டீசர்ட் மற்றும் ஜீன்சில் மாடல் பெண் போல காட்சி அளிக்கிறார்.

அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

சாமியார் நித்யானந்தா சம்பந்தமாக கடந்த 6 மாதத்தில் எனக்கு ஏற்பட்ட பிரச் சினைகள், அதனால் ஏற்பட்ட அவலங்கள், எனது மனதில் ஏற்படுத்திய காயங்கள், அதை நான் எதிர்கொண்டவிதம் ஆகியவற்றை விவரித்து நான் ஒரு புத்தகம் எழுதுகிறேன்.

இந்த புத்தகம் தனிப்பட்ட பிரச்சினைகளில் சிக்கி தவிப்பவர்களுக்கு உதவும் வகையில் இருக்கும். புத்தகங்களை வெளியிட சில பதிப்பகங்களுடன் நான் பேசி வருகிறேன்.

இதுதவிர நான் இளைஞர் களுக்கு பயன்படும் வகையில் ஒரு நாவலும் எழுதுகிறேன். இதில் எனது அனுபவம் பற்றி எழுதும் புத்தகம்தான் முதலில் வெளிவரும். எனது அறையில் ஒரு யோகியின் சுயசரிதை புத்தகம், மத தலைவர் ஒருவருடைய ஆன்மீக புத்தகம் ஆகியவற்றை எப்போதும் வைத்துள்ளேன்.

நான் எப்போதுமே ஒரு புத்தக புழு. எல்லா நாவல்களையும் விரும்பி படிப்பேன். இப்போது தத்துவ புத்தகங்களுக்கு மாறிவிட்டேன். குறிப்பாக இந்திய ஆன்மீக புத்தகங்களை விரும்பி படிக்கிறேன்.

நான் தலைமறைவான விஷயங்கள் குறித்தோ அல்லது கடந்த கால சம்பவங்கள் குறித்தோ பேச விரும்ப வில்லை. கடந்த காலத்தை நினைத்து கொண்டிருக்க முடியாது. அதை விட்டு வெளியே வர விரும்புகிறேன்.

மன அழுத்தம், கஷ்டங்கள் என நான் மிகவும் காயப்பட்டு விட்டேன். அதை விட்டு புதிய வாழ்க்கையை நோக்கி செல்ல விரும்புகிறேன். எனக்கு எதிராக பல செய்திகள் பரப்பப்பட்டு விட்டன. நான் கொடுத்த பேட்டியையும் திரித்து வெளியிட்டு விட்டார்கள். இவை எல்லாவற்றையும் சமாளிக்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறேன்.

நடிகை என்றால் இது போன்ற கஷ்டங்களை தாங்கி கொள்வார்கள் என்று மக்கள் நினைக்கிறார்கள். அது உண்மை அல்ல. என் கணவர், சகோதரிகள், பெற்றோர் மற்றும் உறவினர் கள் அனைவரும் எனக்கு பக்க பலமாக இருந்து என் கஷ்டங்களை தாங்க வைத்து விட்டனர்.

நான் நடித்த ராவணன் படத்தை இன்னும் பார்க்கவில்லை. மீண்டும் சினிமாவில் நடிப்பது பற்றியும் சிந்திக்க வில்லை. சினிமாவில் இருந்து சற்று ஓய்வு எடுக்க விரும்புகிறேன். நடிக்காத நேரங்களில் நான் மற்ற ராணுவ வீரர்கள் மனைவிகள் போல சமூக சேவையில் ஈடுபடுவேன்.

நான் சமீப காலங்களில் முக்கிய நபர்கள் யாரையும் சந்திக்கவில்லை. நான் சகஜ நிலைக்கு திரும்ப சிறிது காலம் ஆகும் என நினைக்கிறேன். என காலடியை முன்னேற்ற பாதையை நோக்கி எடுத்து வைக்க விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

இருந்த போது முழு நேரமும் தியானத்தில் ஈடுபட்டேன். இது என்னை மேலும் வலுவாக்கி இருக்கிறது.

எனக்கு எதிராக நடந்த வர்களை பற்றி நான் சிந்தித்துக் கொண்டிருக்கவில்லை. எல்லாவற்றையும் மறந்து புதியவற்றை சிந்திக்கிறேன். அமைதி, சாதக எண்ணங் களை மட்டுமேரஞ்சிதாவுடன் இருக்கும்    ஆபாச வீடியோவால்    ஆன்மீக பணி பாதிக்காது:    நித்யானந்தா பரபரப்பு பேட்டி மனதில் கொண்டுள்ளேன். எல் லோரும் அமைதியாக வாழட்டும் எனக்கு எதிராக நடந்தவர்களும் அமைதி அடையட்டும் அவர்களை விட்டு விடுகிறேன்.

எனது ஜெயில் வாழ்க் கைக்கும் ஆசிரமம் வாழ்க்கைக்கும் சிறிய அளவில் மட்டுமே வித்தியாசம் உள்ளது. மனிதனுக்கு எந்த இடமும் சொந்தம் அல்ல. ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு வாழ்க்கை அனுபவத்தை தரும்.

ஜெயில் வாழ்க்கை உடல் ரீதியாக எனக்கு கஷ்டங்களை கொடுத்து இருக்கலாம். ஆனால் மன ரீதியாக எப்போதுமே நான் சாதா ரணமாகத்தான் இருந் தேன். மகிழ்ச்சியாகத்தான் இருந்தேன். மனிதனின் வெளி சுதந்திரத்தை பறிக்க லாம். ஆனால் உள் மனம் சுதந்திரத்தை யாராலும் பறிக்க முடியாது. இது அவரவர் விருப்பம் போலத்தான் அமையும்.

எனது ஆன்மீகப்பணிகள் வழக்கம் போல் தொடர்ந்து நடைபெறும். அதே நேரத்தில் ஐகோர்ட்டு சில உத்தரவுகளை பிறப்பித்து இருப்பதால் அதன்படிதான் நடக்க முடியும்.

உண்மை நிச்சயமாக வெல்லும் நீதி கிடைக்கும். மேகங்கள் சூரியனை மறைக் கலாம். ஆனால் சூரியனை அழித்து விட முடியாது. அதன்படி நீதி வெல்லும். நீதித்துறை மீது நான் மிகவும் நம்பிக்கை வைத்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

வீடியோ காட்சி வந்த பிறகு நடிகை ரஞ்சிதாவுடன் பேசினீர்களா? என்று கேட்டதற்கு பதில் சொல்ல மறுத்துவிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கையரின் சட்டவிரோதக் குடியேற்றம் குறித்து விரைவில் தீர்மானம்: ஜூலியா கில்லார்ட்

இலங்கை சட்டவிரோதக் குடியேற்றக்காரர்கள் தொடர்பில் விரைவில் தீர்மானம் எடுக்கப்படும் என அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமர் ஜூலியா கில்லார்ட் தெரிவித்துள்ளார். இலங்கையர்களின் புகலிடக் கோரிக்கை குறித்தத் தீர்மானம் அடுத்த மாதம் 8ஆம் திகதியளவில் முன்னெடுக்கப்படும் என அவுஸ்திரேலிய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களின் விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கைகளை முன்னாள் பிரதமர் கெவின் ரொட் தற்காலிகமாக இடைநிறுத்தியிருந்தார்.இந்தத் தீர்மானம் தொடர்பில் தற்போது ஆராயப்பட்டு வருவதாக ஜூலியா கில்லார்ட் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில், முன்னர் பிரதமராக பதவி வகித்திருந்த கெவின் ரூட் அரசியல் புகலிடக் கோரிக்கையை முன்வைத்துச் சென்ற இலங்கையர்கள் மற்றும் ஆப்கானிஸ்தர்கள் தொடர்பில் கடும்போக்கை கடைப்பிடித்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

மட்டக்களப்பில் சுனாமியால் வீடுகளை இழந்தோருக்கு 23962 வீடுகள்



மட்டக்களப்பு மாவட்டத்தில் சுனாமித்தாக்கத்தினால் வீடுகளை இழந்த மக்களுக்கென இதுவரை 23962 வீடுகள் கையளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் முகாமையாளர் எஸ்.ஜெகநாதன் தெரிவித்தார்.

வாகரையில்3254வீடுகளும் மட்டக்களபபு நகரில் 6010 வீடுகளும் ஆரையம்பதியில் 3147 வீடுகளும் காத்தான்குடியில் 3171 வீடுகளும் வாழைச்சேனையில் 1648 வீடுகளும் செங்கலடியில் 498 வீடுகளும் கிரானில் 58வீடுகளும் கையளிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்..இம்மாவட்டத்தில் சுனாமியினால் 24 ஆயிரம் வீடுகள் அழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கைத் தமிழர்களின் முக்கிய கோரிக்கைகள் குறித்து மத்திய அரசை தி.மு.க




இலங்கைத் தமிழர்கள் பிரச்சினை குறித்து இலங்கை அரசின் மனிதாபிமானமற்ற செயலை ஐ.நா.சபை உட்பட உலகத்திலுள்ள அனைத்து நாடுகளும் கண்டித்துள்ளன. இவற்றையெல்லாம் இந்திய அரசு மேற்கொள்ள மத்திய அரசை தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதி வற்புறுத்த வேண்டும். அத்துடன் இலங்கை அரசுக்கு மத்திய அரசால் கொடுக்கப்பட்ட 1500 கோடி ரூபா பணம் இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுக்காக பயன்படுத்தப்படுகிறதா என்று மத்திய அரசாங்கம் கண்காணிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சொந்த மண்ணிலேயே அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வில் கவனம் செலுத்தாத தி.மு.க. அரசைக் கண்டித்து கர்நாடக மாநில அ.திமு.க. சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அந்த அறிகையில் தெரிவித்துள்ளார். மேற்படி அறிக்கையில் அவர் மேலும் குறிப் பிட்டிருப்பதாவது,

அவ்வறிக்கையில், ''இலங்கையில் போர் முடிந்து ஓர் ஆண்டிற்கும் மேலாகிவிட்டது. இருப்பினும் இடம் பெயர்ந்த தமிழர்களை தங்களுடைய சொந்த இடங்களுக்கு இன்னமும் அனுப்ப வில்லை. இலங்கைத் தமிழர்கள் அனைவரும் தங்களுடைய சொந்த நாட்டிலேயே, இராணுவ முகாம்களில் அகதிகளாக வாழ்ந்து கொண்டி ருக்கின்றனர்.

இவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கான எந்த நடவடிக்கையையும் அந்நாட்டு அரசு எடுக்கவில்லை, எடுப்பதாகவும் தெரிய வில்லை. தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்குப் பதிலாக, தமிழர் வாழ் பகுதியான வட இலங்கையில் தமிழர்களின் அடையாளங்களை அழிக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு இராணு வம் ஈடுபட்டு வருவதாகவும், தமிழர்களின் பண்பாடு, சமயம் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகவும், தமிழில் பெயர் வைக்கப்படடிருந்த வீதிகளுக்கு சிங்களப் பெயர்கள் வைக்கப்படுவதாகவும், தமிழ் ஊர்க ளுக்கு சிங்களப் பெயர்கள் இடப்படுவதா கவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் அங்குள்ள நிலங்கள் அனைத்தும் சிங்கள நிலங்கள் என்று திரித்துக் கூற முயற்சி நடப்பதாகவும், போரின் போது சிதைந்து போன தமிழர்களின் கோயில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் ஆகிய வற்றை கட்டித்தர நடவடிக்கை எடுக்காமல், பௌத்த விகாரைகள் புதிது புதிதாக கட்டப்படுவதாகவும் தகவல்கள் வருகின்றன. மொத்தத்தில் தமிழ்ப் பகுதிகள் சிங்களமயமாக்கப்படுகின்றன.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் இடம் பெயர்ந் துள்ள தமிழர்களை அவர்களுடைய சொந்த இடங்களுக்கு இலங்கை அரசு அனுப்பி வைக்கும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?

அப்படியே அனுப்பினாலும் அங்கு சென்று அவர்களால் நிம்மதியாக வாழ முடியுமா? இந்த நிலைமையில், தமிழர்களின் மறுவாழ்வுக் காக 1,500 கோடி ரூபாய் நிதி உதவியை மத்திய அரசு அளித்திருக்கிறது. வெறும் நிதி உதவியை சிங்கள அரசிடம் அளித்ததன் காரணமாக, அங்குள்ள தமிழர்க ளுக்கு எவ்வித பயனும் ஏற்படப் போவ தில்லை. இலங்கைத் தமிழர்களுக்கு மத்திய அரசால் கொடுக்கப்பட்ட ரூ.1,500 கோடி பணம் இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுக்காக பயன்படுத்தப்படுகிறதா என்பதை இந்திய அரசு கண்காணிக்க வேண்டும்.

தமிழ்ப் பகுதிகள் அனைத்தும் சிங்கள மயமாக்கப்படுவதாக செய்திகள் வருவது குறித்து ஆராய்ந்து, அதில் உண்மை இருக்கும் பட்சத்தில் அதைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கைத் தமிழர்களின் முக்கிய கோரிக்கை களான மறுவாழ்வு, விவசாய நிலங்களை சீரமைத்தல், நீர் ஆதாரங்களை சீரமைத்தல், கல்வி நிறுவனங்களை சீரமைத்தல், வழிபாட்டுத் தலங்களை கட்டித் தருதல், அனைத்து நிவாரண உதவிகளும் பாதிக்கப் பட்ட இலங்கைத் தமிழர்களை சென்றடையும் வகையில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை பணியில் அமர்த்துதல், பத்திரிகையாளர்களை அனுமதித்தல் போன்ற பணிகளை இலங்கை அரசு மேற்கொள்கிறதா என்பதை இந்திய அரசு கண்காணிக்க வேண்டும்.

இவற்றையெல்லாம் இந்திய அரசு மேற் கொள்ள மத்திய அரசை தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதி வற்புறுத்த வேண் டும். இலங்கை அரசின் மனிதாபிமானமற்ற செயலை ஐக்கிய நாடுகள் உட்பட உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளும் கண்டித்துள்ளன. சொந்த மண்ணிலேயே அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வில் கவனம் செலுத்தாத தி.மு.க. அரசைக் கண்டித்து கர்நாடக மாநில அ.தி.மு.க. சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு பெங்களூர் எம்.ஜி. வீதி, மகாத்மா காந்தி சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்த ஆர்ப்பாட்டம் அ.தி.மு.க. தேர்தல் பிரிவு இணைச் செயலாளர் பாலகங்கா, எம்.பி., தலைமையிலும், கர்நாடக மாநிலக் கழகச் செயலாளர் புகழேந்தி முன்னிலையிலும் நடைபெறும்''என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

உண்மையில், இது செம்மொழி மகாநாடல்ல ஆளுங்கட்சியான தி.மு.க.,வின் மாநாடு.




ஈழப் பிரச்சினையிலிருந்தும் ஈழத்தில் நடந்த படுகொலைகளுக்கு உதவிய மத்திய அரசையும் தி.மு.க. அரசையும் மக்கள் கவனத்திலிருந்து திசை திருப்பவுமே முதல்வர் கருணாநிதி செம்மொழி மாநாடு நடத்துகிறார் என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் வைகோ பேசுகையில், இலங்கை உள்நாட்டுப் போரில், ராஜபக்ஷ தலைமையிலான இலங்கை அரசுக்கு ஆயுதம் கொடுத்து, பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் படுகொலைக்கு உதவியது இந்திய அரசு. அதற்கு உடந்தையாக இருந்தது தமிழக தி.மு.க., அரசு. அப்பிரசசி“னையிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவே, தமிழக முதல்வர் கருணாநிதி, கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்துகிறார்.

செலவுக்குப் பணம் கொடுத்து இலவசமாக பஸ்களில் மாநாட்டு“கு தி.மு.க.,வினர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

முல்லை பெரியாறு அணை பலவீனமாக உள்ளதாகக் கூறி, அந்த அணையை உடைக்க கேரள அரசு சதி செய்கிறது. அதற்காக, ம.தி.மு.க., சார்பில் கேரளாவுக்கு பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களை சாலையில் மறிப்பது உள்ளிட்ட பல போராட்டங்களை நடத்தினோம். அங்கு புதிய அணை கட்டப்பட்டால் மதுரை, தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து தென்மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்.இந்த அணைப் பிரச்னையில் நாங்கள் மத்திய, கேரள அரசுகளுக்கு எதிராக மட்டுமே போராட்டம் நடத்துகிறோம்“ தமிழக முதல்வர் கருணாநிதிக்கு எதிராக போராட்டம் நடத்தவில்லை என்றார்
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் என்பது பொய்-பிரதமர்



பூரண அமைதி நிலவும் நாட்டில் முன்னர் இடம்பெற்ற யுத்த விளைவுகளை மீள் பரிசீலிப்பதில் பயனில்லை. இன்று உலக நாடுகளில் அநியாயமாகப் பலர் தினமும் கொல்லப்படுகின்றனர். இதை தடுப்பதற்கு உலக நாடுகள் முன்வர வேண்டுமென பிரதமர் டி.எம்.ஜயரத்ன வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மடவளை மதீனா தேசிய பாடசாலையில் அஷ்ரப் கேட்போர் கூடத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 15 ஆவது வருட ஒன்று கூடலின் போது பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது,

ஊடகவியலாளர்கள் மீது பல்வேறு அழுத்தங்களும் மிரட்டல்களும் இடம்பெறுவதாகக் கூறப்படுகிறது. இதில் உண்மையில்லை. இலங்கையில் சிங்கள, தமிழ், முஸ்லிம், மலே, பறங்கிய இனங்கள் ஐந்தும் பௌத்தம், சமயக் கருத்துக்களை முறையாக கடைப்பிடிக்க வேண்டும். கொடூர யுத்தத்தை வெற்றி கொண்ட ஒரே நாடு இலங்கை என்ற வகையில் சில நாடுகள் எம்மீது பொறாமை கொண்டுள்ளனவா என்ற ஐயம் நிலவுகிறது.

இன்று பல உலக நாடுகளில் அநியாயமாக பலர் தினமும் கொல்லப்படுகின்றனர். இதை தடுக்க உலக நாடுகள் முன்வர வேண்டும். அதை புறம் தள்ளி விட்டு பூரண அமைதி நிலவும் நாட்டில் யுத்தத்தின்போது ஏற்பட்ட விளைவுகளை மீள் பரீசிலிப்பதில் பயன் இல்லை. ஊடகங்கள் தவறுகளை சுட்டிக்காட்டுதல் வேண்டும். நாம் அதனை ஏற்று தவறைத் திருத்திக் கொள்ள வேண்டும். ஆனால் தேவையற்ற பிழையான விடயங்களை திரும்பத் திரும்ப எழுதி அதனை பிரசாரமாக்கக் கூடாது.

ஏனெனில் தொடர்ந்து ஒன்றை உள்ளத்தில் திணித்து அதன் எதிர்த்தாக்கத்தை தாராளமாக்கி விடக் கூடாது. சமூக விரோத செயல்களை அடிக்கடி எழுதி பிரசார மேடையாக்கி சமூகத்தை வழிகெடுக்க காரணமாக மாறக் கூடாது. இன்று பல உலக நாடுகள் ஊடக சட்ட விதிகளைப் பின்பற்றுகின்றன. இதுபோல் இலங்கையிலும் ஊடக விதிகளை நாம் அனுசரித்து நடக்க முயற்சிக்க வேண்டும். ஊடகவியலாளர்கள் மீது பல்வேறு அழுத்தங்களும் மிரட்டல்களும் இடம்பெறுவதாகக் கூறப்படுகிறது. இதில் உண்மையில்லை. 30 வருட யுத்தம் காரணமாக பல்வேறு சம்பவங்கள் இடம்பெற்றன. இதில் ஓரிரு ஊடகவியலாளர் சம்பந்தப்பட்டிருக்கலாம். அவ்வாறான 30 வருட நீண்ட கால யுத்தத்தில் நடந்த ஓரிரு சிறு சம்பவங்கள் பெரிதுபடுத்தப்பட அவசியமில்லை.

இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் தமிழ் மொழி பேசிய போதும் மற்ற நாடுகளில் வெவ்வேறு மொழிகள் பேசுகின்றனர். அந்த வகையில் முழு உலக முஸ்லிம்களும் ஒரே இனமாகின்றனர். எவன் இஸ்லாத்தை விட்டு நீங்கினானோ அவன் முஸ்லிமாக இருக்க முடியாது. எனவே சகலரும் இதுபோல் தங்கள் சபயக் கருத்துக்களை அனுசரித்தல் வேண்டும். இவ்வைபவத்தில் பிரதி அமைச்சர் பைஸர் முஸ்தபா, நாடாளுமன்ற அங்கத்தவர்களான ஏ. எச். எம். அஸ்வர், எம். எச். ஏ. ஹலீம் உட்பட பலர் உரையாற்றினர்.ஊடகத்துறையுடன் தொடர்புபட்ட நீண்ட காலம் சேவை செய்த 10 பேரும் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து ஊடகவியலாளர்களும் கௌரவிக்கப்பட்டனர். காலம் சென்ற ஊடகவியலாளர் ஐ. ஏ. ரஸாக் நினைவாக ஐ. ஏ. ரஸாக் அரங்கம் என பெயரிடப்பட்டு இவ்வைபவம் நிறைவடைந்தது.
மேலும் இங்கே தொடர்க...

பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவதற்கு சார்க் பிராந்திய நாடுகள் தீர்மானம்

பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவது தொடர்பில் சார்க் நாடுகள் தீர்மானமொன்றை நிறைவேற்றியுள்ளன. பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் நடைபெற்று வரும் சார்க் வலய நாடுகளது உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பயங்கரவாதம் மற்றும் கடத்தல்களை கட்டுப்படுத்த பிராந்திய நாடுகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

பிராந்திய வலய நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு மிகவும் அவசியமானதென தெரிவித்துள்ள பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மாலிக் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத நடவடிக்கைகளினால் பிராந்திய ஒற்றுமை சீர் குலைந்துள்ளதுடன் பொருளாதார பாதிப்புக்களும் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், பயங்கரவாத ஒழிப்பு தொடர்பான சர்க் மற்றும் சர்வதேச பிரகடனங்களை முழுமையாக அமுல்படுத்த சகல நாடுகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் பயங்கரவாதம் தொடர்பான முக்கிய தகவல்களை சார்க் பிராந்திய வலய நாடுகள் பகிர்ந்து கொள்ள வேண்டுமென அவர் கோரியுள்ளார். பயங்கரவாதம், சட்டவிரோத ஆட்கடத்தல் போன்றவற்றுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது
மேலும் இங்கே தொடர்க...

அவுஸ்திரேலியாவில் இலங்கை தமிழ் அகதிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்





அவுஸ்திரேலியா, சிட்னியிலுள்ள மனித உரி மைச் செயற்பாட்டாளர்கள், இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு, அவுஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்து வழங்குவதற்கான நடவடிக்கைகளை புதிய பிரதமர் ஜுலியா கில்லார்ட் மேற்கொள்ளவேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அவுஸ்திரேலிய கிரீன்ஸ் கட்சியின் செனட் உறுப்பினர் சாரா ஹன்சன் யங் மற்றும் எழுத்தாளர் டொம் கெனெலி ஆகியோர் இணைந்து கொண்டனர். இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தானிய அகதிகள், மனிதாபிமான ரீதியாக அணுகப்பட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன் போது கருத்து வெளியிட்ட அகதிகள் நடவடிக்கை குழுமத்தின் பேச்சாளர் இயன் ரின்டோல், புதிய பிரதமர் ஜுலியா அகதிகள் தொடர்பில் மாற்று கொள்கை ஒன்றை வகுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தில் கெவின் ரூட், அகதிகள் தொடர்பில் முன்னெடுத்த கொள்கையின் கடினத்தன்மை காரணமாகவே, தொழில் கட்சியின் புகழ் பின்னடைந்தது.இந்த நிலையில், தொழில்கட்சியின் புகழை மீண்டும் கட்டியெழுப்ப, இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு புகலிட உரிமை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

ஐநா நிபுணர் குழு நியமனம் : அணிசேரா நாடுகள்-சீனா எதிர்ப்பு



இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் விசாரணை நடத்தும் நிபுணர் குழு நியமனத்திற்கு அணி சேரா நாடுகள் மற்றும் சீனா ஆகியன எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இலங்கையில் மனித உரிமை மீறல்கள், யுத்தக் குற்றச் செயல்கள் இடம்பெற்றனவா என்பது தொடர்பில் இந்த நிபுணர்கள் குழு ஆராயந்து, பான் கீ மூனுக்கு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது.

நிபுணர் குழு நியமனம் தொடர்பிலான நிலைப்பாடுகளை அணிசேரா நாடுகளும், சீனாவும் ஜனாதிபதியிடம் கேட்டறிந்து கொண்டன. இதனையடுத்து அவை தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

நிபுணர்கள் குழுவை நியமிப்பது குறித்த தீர்மானம் எடுப்பதற்கு முன்னர் பாதுகாப்புப் பேரவை அல்லது பொதுச்சபையில் அனுமதி பெற்றிருக்க வேண்டுமென ரஷ்ய வெளிவிவகார அமைச்சு ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவையில் வீட்டோ அதிகாரத்தைக் கொண்ட சீனா நிபுணர்கள் குழு நியமனத்திற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

நிபுணர்கள் குழு நியமனத்திற்கு அணி சேரா நாடுகளும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன
மேலும் இங்கே தொடர்க...

அரசியல் தீர்வுக்கான கூட்டுச் செயற்பாடு





ஆறு தசாப்தங்களாக இலங்கையின் இனப் பிரச்சினை தமிழ் மக்களின் அரசியலில் பிரதான இடத்தை வகி த்து வருகின்றது. ஒவ்வொரு தேர்தலின் போதும் இதுவே பிரதான பேசுபொருள். இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படப்போவதாக உணர்ச்சிகரமாக வாக்கு றுதி அளிப்பவர்களை மக்கள் ஒவ்வொரு தேர்தலிலும் தேர்ந் தெடுத்தார்கள். ஆனால் இன்று வரை தீர்வு கிடைக்கவில்லை.

தீர்வின்றி இனப் பிரச்சினை இழுபடுவதற்குச் சிங்களத் தலைவர்கள் மீது குறை கூறுவது தமிழ்த் தலைமைகளின் வழக்கமாகிவிட்டது. இத் தலைமைகள் கூறுவது போல சிங்களத் தலைவர்கள் தடை யாக இருப்பதாலேயே பிரச்சினை தீராதிருக்கின்றதென்றால், பிரச் சினைக்குத் தீர்வு காணப்போவதாக ஒவ்வொரு தேர்தலிலும் தமி ழ்த் தலைவர்கள் வாக்குறுதி அளிப்பதில் அர்த்தமில்லை. பிரச் சினை தீராதிருப்பதற்குச் சிங்களத் தலைவர்களின் தடை காரண மல்ல என்பதே இந்த வாக்குறுதியின் அர்த்தம்.

தமிழ்த் தலைவர்கள் தூரதிருஷ்டியுடனும் யதார்த்தபூர்வமாகவும் சிந் தித்துச் செயற்பட்டிருந்தால் பிரச்சினைக்கு எப்போதோ தீர்வு காண முடிந்திருக்கும் என்பதே உண்மை நிலை. தீர்வை நோக் கிச் செல்வதற்குக் கிடைத்த சந்தர்ப்பங்களைத் தமிழ்த் தலை வர்கள் சரியாகப் பயன்படுத்தத் தவறிவிட்டார்கள். இனப் பிரச்சி னையின் வரலாற்றை எடுத்துப் பார்த்தால் தமிழ்த் தலைவர்கள் இழந்த சந்தர்ப்பங்கள் அநேகம்.

பண்டா-செல்வா ஒப்பந்தம் சமஷ்டி அடிப்படையிலான தீர்வின் ஆரம்பம் என்று எஸ். ஜே. வி. செல்வநாயகம் கூறியிருந்தார். துர திஷ்டவசமாக அந்த ஒப்பந்தத்தைக் கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. எனினும் ஒப்பந்தத்தின் சரத்துகளை நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கான இரண்டு சந்தர்ப்பங்கள் பிந்திய நாட் களில் கிடைத்த போதிலும் தமிழ்த் தலைவர்கள் அவற்றை நிரா கரித்துவிட்டனர்.

பொதுசன ஐக்கிய முன்னணி அரசாங்கம் முன்வைத்த அதிகாரப் பகிர்வுத் தீர்வுத்திட்டமும் பண்டா-செல்வா ஒப்பந்தத்தைப் போல் சமஷ்டித் தன்மை கொண்டதே. இத் தீர்வுத் திட்டத்துக்கு ஆரம் பத்தில் ஆதரவு தெரிவித்துவந்த தமிழ்த் தலைவர்கள் கடைசி நேரத்தில் ஆதரவை விலக்கிக்கொண்டு தனிநாட்டு நிகழ்ச்சி நிர லின் பக்கம் திரும்பினார்கள்.

இவையிரண்டும் தமிழ்த் தலைவர்கள் இழந்த சந்தர்ப்பங்களுள் பிர தானமானவை. இவ்வாறு ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் இழந்த தன் விளைவாகவே இனப் பிரச்சினை இன்றுவரை தீர்வின்றியி ருக்கின்றது. இப்போது இன்னொரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கின் றது. இதைச் சரியாகப் பயன்படுத்துவதற்கு எல்லாத் தமிழ்க் கட் சிகளும் முன்வர வேண்டும்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வாசஸ்தலத்தில் தமிழ்க் கட்சி களின் சந்திப்பொன்று அண்மையில் நடைபெற்றது. தமிழ் மக் கள் நாளாந்த வாழ்வில் முகங்கொடுக்கின்ற பிரச்சினைகளுக்கும் இனப் பிரச்சினைக்கும் தீர்வு காண்பதற்கான கூட்டுச் செயற் பாடொன்றின் முன்னோடியாக இச் சந்திப்பு அமைந்ததெனக் கருதலாம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அமைச்சர் தேவா னந்தா அழைப்பு விடுத்திருக்கின்றார்.

அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் பொது நோக்கத்துக்காகக் கூட் டாகச் செயற்படுவதற்குக் கிடைத்திருக்கும் இச் சந்தர்ப்பத்தைச் சரியான முறையில் எல்லாக் கட்சிகளும் பயன்படுத்த வேண்டும். தீர்வுக்கான நீண்டகால வேலைத்திட்டத்தையும் குறுகியகால வேலை த்திட்டத்தையும் தயாரித்துத் தென்னிலங்கையிலுள்ள நட்பு சக்திக ளுடன் இணைந்து செயற்படும் பட்சத்தில் தீர்வு நிச்சயம் சாத்திய மாகும்.
மேலும் இங்கே தொடர்க...

ஏவுகணை சோதனை: ” வட கொரியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை


ஐ.நா. மற்றும் அமெரிக்கா எச்சரிக்கைகளையும் மீறி வடகொரியா தொடர்ந்து அணுகுண்டு மற்றும் ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இந்த நிலையில் வட கொரியா தனது நாட்டில் மேற்கு கடற்கரை பகுதிகளில் கப்பல்கள் செல்ல 9 நாட்கள் தடை விதித்து உள்ளது.

அணுகுண்டு அல்லது ஏவுகணை சோதனை நடத்தும் போதுதான் வடகொரியா இப்படி நடத்துவது வழக்கம். இப்போது தனது “பயான் கயாங்” ஏவுகணையின் புதிய ரகத்தை சோதனை செய்து பார்க்க வடகொரியா திட்டமிட்டு உள்ளதாக தெரிகிறது.

இதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. அமெரிக்கா வெளியுறவு செய்தி தொடர்பாளர் பிலிப் குரோஸி கூறும்போது வடகொரியா ஏவுகணை சோதனை நடத்துவது அந்த பகுதியில் பதட்டத்தை உருவாக்குகிறது. இதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து கொள்கிறோம்.

இதையும் மீறி சோதனை நடத்தினால் கடும் நடவடிக்கையை எடுக்க நேரிடும். எனவே ஏவுகணை சோதனையை நிறுத்த வேண்டும்” அண்டை நாடுகளுடன் வடகொரியா உறவை மேம்படுத்தி கொள்ள வேண்டும் இது போன்ற செயல்கள் அதை பாதிக்கும் என்றார்.

வடகொரியாவும், தென் கொரியாவும் பரம்பரை எதிரிகளாக உள்ளது. சமீபத்தில் தென்கொரியா போர் கப்பல் ஒன்று மர்மமான முறையில் கடலில் மூழ்கியது. இதற்கு கப்பலை வடகொரியா தான் ஏவுகணை தாக்குதல் மூலம் மூழ்கடித்ததாக தென்கொரியா புகார் கூறியது.

இதனால் இரு நாடுகளுக்கும் இடையே பதட்டம் நிலவுகிறது. இப்போது ஏவுகணை சோதனை நடத்துவதால் பதட்டம் மேலும் அதிகரித்து உள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

. விஞ்ஞானிகள் உருவாக்கும் செயற்கை நுரையீரல்






மனிதன் நுரையீரலை செயற்கையாக உருவாக்கும் முயற்சியில் அமெரிக்காவில் ஏல் பல்கலைக்கழக விஞ் ஞானிகள் ஈடுபட்டு உள்ளனர். இதற்காக முதலில் எலியின் நுரையீரலை உரு வாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். எலி நுரையீரலின் செல்லை எடுத்து அதை வளரச்செய்து அதன் மூலம் நுரையீரலை உருவாக்கினார்கள்.

அது எலி நுரையீரல் போலவே திறம்பட செயல்பட்டது. ஆய்வகத்தில் வைத்து நடத்தப்பட்ட இந்த சோதனையில் சுவாசிக்கும் காற்றில் இருந்து நுரையீரல் ஆக்சிஜன் மற்றும் கார்பன்டை ஆக்சைடை பிரிக்கும் வேலை யை சரியாக செய்தது. அதில் ஆக்சிஜனை ரத்தத்தில் உள்ள ஹீமோ குளாபினில் சேர்க்கும் பணியையும் செய்தது. இந்த நுரையீரல் 215 நிமிடத்தில் இருந்து 120 நிமிடம் வரை சரியாக செயல்பட்டது.

இதே அடிப்படையில் மனித நுரையீரலையும் உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் இறங்கி உள்ளனர்.

இதுபற்றி விஞ்ஞானி லாரா நிக்கல்சன் கூறும்போது, செயற்கை எலி நுரையீரல் வெற்றிகரமாக செயல்படுகிறது. இதை அடிப்படையாக வைத்து மனித நுரையீரலை உருவாக்க உள்ளோம்.

இதை உருவாக்கி பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிக காலங்கள் ஆகும். ஆனாலும் இது மருத்துவ முன்னேற்றமாக அமையும் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

குழந்தைகள் நலனுக்கு ரூ.25 ஆயிரம் கோடி ஜி-8 நாடுகள் ஒதுக்கியது





ஜி-8 நாடுகள் மாநாடு கனடாவில் நடந்து வருகி றது. அமெரிக்கா, கனடா, ஜப்பான், ரஷியா, இத்தாலி, பிரான்சு, ஜெர்மனி, இங்கி லாந்து தலைவர்கள் இதில் பங்கேற்று உள்ளனர்.

உலக வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பாக மாநாட்டில் ஆலோசிக்கப்பட்டது.

அதில் குழந்தைகள் நலன் மற்றும் கர்ப்பிணி பெண்கள் நலனுக்காக ரூ.25 ஆயிரம் கோடி ஒதுக்குவது என்று முடிவு செய்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

இந்திய கடற்படை தளபதி இன்று இலங்கை வருகை

இந்திய கடற்படைத்தளபதி அட் மிரல் நிர்மல் வர்மா இன்று இலங்கை வரவுள்ளார்.

இலங்கையின் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் திஸர சமர சிங்கவின் அமைப்பை ஏற்று இல ங்கை வரும் இந்திய கடற்படைத் தளபதியின் வருகையுடன் இந்திய கடற் படைக்குச் சொந்த மான ஐ.என்.ஐ. கப்பலும் இலங் கைக்கு வருகிறது.

இந்திய - இலங்கை நாடுகளுக் கிடையே உள்ள உறவை மேலும் வலுப்படுத்துவதாகவே இவரது வருகை அமையவுள்ளது
மேலும் இங்கே தொடர்க...

வன்னி மீள்குடியேற்றம், அபிவிருத்தி குறித்து ஜனாதிபதி செயலகத்தில் விசேட மாநாடு

வன்னி மாவட்டத்தில் நடைபெற்று வரும் மீள்குடியேற்றம், அபிவிருத்தி முன்னெ டுப்புகள் குறித்த விசேட மாநா டொன்று கொழும்பில் நடைபெறவுள்ளது.

இம்மாநாட்டை எதிர்வரும் செவ்வாய், புதன்கிழமைகளில் ஜனாதிபதி செயலகத்தில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வவுனியா அரச அதிபர் திருமதி பீ. எம்.எஸ். சார்ள்ஸ், முல்லைத்தீவு அரச அதிபர் இமெல்டா சுகுமார், கிளிநொச்சி அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி ஆகியோர் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.

வெளிநாட்டு வளங்களை எவ்வாறு மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு வழங்கு வது குறித்தும் இங்கு ஆராயப்படும். மீள்குடி யேற்ற பிரதேசத்தில் நடைபெற்று வரும் அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் முன் னேற்றம் குறித்தும் இங்கு பரிசீலிக் கப்படும்.

வவுனியா மாவட்டத்தில் வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் முழு மையான மீள்குடியேற்றம் நடை பெற்றுள்ளது.

தற்போது நெடுங் கேணியில் பாரிய அபி விருத்தி வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன. நகரம் வழமைக்கு திரும்பிவிட்டது. வர்த்தக நிலையங்களும் திறக்கப்பட்டுள்ளதாக நெடுங்கேணி பிரதேச செயலாளர் தெரி விக்கின்றார்
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை, தமிழக கடற்றொழிலாளர் பிரச்சினை குறித்து சென்னையில் கூட்டம்


இலங்கை தமிழக கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஆகஸ்ட் மாதம் சென்னையில் விசேட கூட்டங்கள் நடை பெறவுள்ளதாக இலங்கை வந்துள்ள தென்னிந்திய மீனவர் சங்கங்களின் சம் மேளனத்தின் ஆலோசகர் வி. விவேகானந்தன் தெரிவித்தார்.

இந்தியக் கடல் எல்லைக்குள் செல்லும் இலங்கை மீனவர்கள் கைது செய்யப் படுவதும், இலங்கை கடல் எல்லைக்குள் வரும் தமிழக மீனவர்கள் கைது செய் யப்படுவதும் என இரு சாராருக்கும் இடையே பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டு வந்துள்ளன.

இதனை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் மேற்படி தென்னிந்திய சம் மேளனத்தின் பிரதிநிதிகளாக வி. விவே கானந்தன், பு. அருளானந்தம், சூசை எஸ்ரேன் ஆகியோர் இலங்கை வந்துள்ளனர்.

முதற்கட்டமாக இவர்கள் மூவரும் யாழ். குடாநாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் பேச்சு நடத்தினர். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடற்றொழில் அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரட்ணவுடன் பேச்சுக்களை நடத்துவதற்கான தென்னிந்திய பிரதிநிதிகளை அழைத்துச் சென் றார்.

மிழக மீனவர் சங்கங்கள் சார்பாக முன்வைத்த கருத்துக்களை ஏற்றுக் கொண்ட அமைச்சர் ராஜித, இலங்கை - தமிழக மீனவர் சங்கங் களுக்கிடையேயான பேச்சுக்கள் நடத்தப்படல் வேண்டும் என் பதையும் உறுதி செய்தார்.

இதன்படி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இலங்கையிலிருந்து கடற் றொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள் குழுவினர் தமிழகம் செல் லவுள்ளனர். அங்கு தமிழக மீன் பிடித்துறை முகங்களை பார் வையிடுவதுடன் விசேட கலந்துரை யாடல்களிலும் அவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இறுதியாக நடத்தப்படும் மாநாட்டில் இலங்கையின் சார்பில் அமைச்சர் ராஜித சேனாரட்ன, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உட்பட இலங்கையின் கடற் றொழில் தொடர்புடைய அதி காரிகளும் கலந்து கொள்ள வுள்ளனர்.

அத்துடன் இந்திய மத்திய அரசினதும், தமிழக அரசினதும் கடற்றொழில் அமைச்சர்களும் கடற் றொழில் சங்கப் பிரதிநிதிகளும் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.

இலங்கை வந்துள்ள தென்னிந்திய மீனவர் சங்கங்களின் சம் மேளனத்தின் ஆலோசகர் வி. விவேகானந்தன் நிரபராதி மீன வர்களின் விடுதலைக்கான அமைப் பின் ஒருங்கிணைப்பாளர் பு. அருளானந்தம், மேற்படி சம் மேளனத்தின் முதன்மை நிர்வாகி சூசை எஸ்ரேன் ஆகியோர் இன்று தமிழகம் திரும்புகின்றனர்
மேலும் இங்கே தொடர்க...

செம்மொழி மாநாட்டின் இறுதிநாள் நிகழ்வு இன்று




தமிழகத்தின் கோவையில் நடை பெற்றுவரும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் இறுதிநாள் நிகழ்வு இன்று மிகவும் கோலாகலமாக நடைபெறுகிறது. நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி உரை யாற்றுகிறார். நிறைவு நாளான இன்று பாதுகாப்பு கடமையில் சுமார் 10,000 பொலிஸார் சேவையில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

இன்று காலை நடைபெறும் கருத்தரங்கில் நடிகர் சிவகுமார் உரையாற்றுகிறார். ‘வித்தாக விளங்கும் தமிழ் மொழி’ என்ற தலைப்பில் அவர் சிறப்புரை யாற்றவுள்ளார்.

உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் ஆவலோடு எதிர்பார்த்த தமிழ் அன்னைக்கு சீர்மிகு மாநாடாக உலகத் தமிழ் செம் மொழி மாநாடு கடந்த 23ம் திகதி கோவை யில் கோலாகலமாக தொடங்கியது. முதலமைச்சர் கருணாநிதி தலை மையில் ஜனாதிபதி பிரதீபா பட்டீல் மாநாட்டை தொடக்கி வைத்தார். ஆளுனர் சுர்ஜித்சிங் பர்னாலா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

2வது நாளில் ஆய்வரங்கை முதலமைச்சர் கருணாநிதி தொடக்கி வைத்தார். சிறப்பு மலரை நிதி அமைச்சர் பேராசிரியர் அன்பழகன் வெளியிட்டார்.

3ம் நாளான காலையில் கவிப்பேரரசு வைரமுத்து தலைமையில் கவியரங்கம், சத்தியசீலனை நடுவராகக் கொண்ட பட்டிமன்றம் என்பன நடந்தன. மாலையில் முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் “எங்கும் தமிழ் எதிலும் தமிழ்” என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் நடந்தது. சனிக்கிழமை கவிஞர் வாலி தலைமையில் கவியரங்கமும் சாலமன் பாப்பையாவை நடுவராகக் கொண்ட பட்டிமன்றமும் நடந்தது.

தமிழ் மொழியின் வற்றாத ஊற்றெடுத்த செம்மொழி மாநா ட்டின் நிறைவு விழாவும், தமிழ் இணைய மாநாட் டின் நிறைவு விழாவும் இன்று மாலை 4 மணி க்கு நடைபெறும். இதற்கு மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமை தாங்குகிறார். மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் முன்னிலை வகிக்கிறார். மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆ. ராசா சிறப்பு முத்திரையை வெளியிடுகிறார். முதலமைச்சர் கருணாநிதி மாநாட்டு நிறைவு பேரூரையை ஆற்றுவார். முன்னதாக தலைமை நிலைய செயலாளர் ஸ்ரீபதி வரவேற்புரை ஆற்றுவார். மாநாட்டு தனி அலுவலர் அலாவுதீன் நன்றியுரை நிகழ்த்தவுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதி செய்து விநியோகிக்க அரசு முடிவு


சகல அத்தியாவசியப் பொருட்களை யும் இறக்குமதி செய்து குறைந்த விலையில் பாவனையாளர்களுக்குப் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் தீர் மானித்துள்ளது. இவ்விடயம் தொடர் பாக வெளிநாட்டு நிறுவனங்களு டன் பேச்சுவார்த்தை நடத்தி வருவ தாக கூட்டுறவு, உள்நாட்டு வர்த்தகத் துறை அமைச்சர் ஜோன்ஸ்டன் பர் னாண்டோ தெரிவித்தார்.

இதுவரை காலமும் அத்தியா வசியப் பொருட்களின் விலைகளை தனியார் துறையினரே தீர்மானித் தனர். இனி அதற்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்பதுடன் நிர்ணய விலை யில் அனைத்துப் பொருட்களையும் பாவனையாளர்கள் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

அதிகரித்துவரும் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் அர சாங்கம் மேற்கொண்டுள்ள செயற் திட்டங்களை விளக்குகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அத்துடன் பொருட்களின் தர உத் தரவாதத்தை உறுதிப்படுத்துவதிலும் கூடிய கவனம் செலுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், நாடளாவிய ரீதியில் தற்போது 200 கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்கள் இயங்கி வரு கின்றன. மேலும் 50 விற்பனை நிலை யங்கள் எதிர்வரும் மாதத்தில் புதி தாகத் திறக்கப்படவுள்ளன. இதன் மூலம் கூட்டுறவு மொத்த விற்பனை நிலைய வலையமைப்பை மேலும் பலப்படுத்தி தனியார் துறை சுப்பர் மார்க் கட்டுகளுக்கு நிகரானதாக அவற் றைச் செயற்படுத்த நடவடிக்கை எடுக் கப்படும்.

இதற்கிணங்க முதற் கட்டமாக சகல கூட்டுறவு மொத்த விற்தீனை நிலை யங்களுக்கூடாகவும் அத்தியாவசியப் பொருட்களைக் குறைந்த விலையில் பொதுமக்கள் பெற்றுக் கொள்ள வழி வகை செய்யப்படும்.

இதற்கென குறைந்த விலையில் தரமான பொருட்களைப் பெற்றுக் கொள்ளக் கூடிய சர்வதேச வர்த்தக நிறுவனங்களை இனங்கண்டு அவற் றுடன் பேச்சுவார்த்தை நடத்தப் பட்டு வருகின்றன. தற்போது நியூசி லாந்து கம்பனியொன்றுடன் பால்மா கொள்வனவு தொடர்பாக பேச்சுவார்த்தை கள் மேற்கொள்ளப்படுகின்றன.

காத்திரமான செயற்திட்டமொன்றி னூடாக குறைந்த விலையில் சகல பொருட் களையும் நாட்டின் சகல பகுதிகளிலும் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பினை அரசாங்கம் விரைவாக மக்களுக்குப் பெற்றுக் கொடுக்கும். இதனூடாக தனியார்துறை வர்த்தக ஏகாதிபத்தியத்து க்கு முற்றுப் புள்ளி வைக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்
மேலும் இங்கே தொடர்க...