18 பிப்ரவரி, 2010

ரூ. 14 கோடி பெறுமதியான 28 கிலோ ஹெரோயின் முந்தலில் மீட்புபயணப் பொதி ஒன்றில் ஒவ்வொரு கிலோவாக பொதி செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்த 28 கிலோ ஹெரோயின் போதைப் பொருளை கற்பிட்டி பொலிஸார் நேற்று கைப்பற்றியுள்ளனர். இதன் பெறுமதி 14 கோடி ரூபா என மதிக்கப்பட்டு ள்ளது. ஹெரோயின் போதைப் பொருளை அருகில் வைத்திருந்தார் எனக் கூறப்படும் சந்தேக நபர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

முஸ்லிம் இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர். முந்தல் அக்கரவெளி பகுதி வீடொன்றில் இருந்தே 28 கிலோ ஹெரோயின் போதைப்பொருளை பொலிஸார் கைப்பற் றியுள்ளனர்.

சுமார் 14 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் குறிப்பிட்ட இடத்தில் ஒவ்வொரு கிலோ வாக பாதுகாப்பான முறையில் பொதிசெய்ய ப்பட்டு பயணப் பொதி ஒன்றில் வைத்து கொண்டு செல்லவுள்ளதாக கற்பிட்டி பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பேரிலேயே விசேட பொலிஸ் குழுக்கள் இச்சுற்றி வளைப்பை மேற்கொண்டன.

யாழ்தேவிபீ ஊடாக வடக்கும் தெற்கும் உறவை புதுப்பிப்பதை காண்பதே நோக்கம்
பிதெற்கின் தோழன்பீ நிதி அன்பளிப்பு நிகழ்வில் ஜனாதிபதி

வட மற்றும் தென் பகுதி மக்கள் தமக்கிடையிலான பழைய தொடர்புகளை யாழ்தேவி ஊடாக மீண்டும் புதுப்பித்துக் கொள்வதை காண்பதே தமது நோக்கமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.

பிதெற்கின் தோழன்பீ நிதியத்துக்காக அரச மற்றும் தனியார் அமைப்புகள் மற்றும் சங்கங்கள் ஜனாதிபதியிடம் நிதி அன்பளிப்புகளை கையளித்த நிகழ்வு நேற்று (18) அலரி மாளிகையில் இடம் பெற்றது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மேலும் கூறியதாவது:- பிதெற்கின் தோழன்பீ நிதியம் பெளதீக வளங்களை கட்டியெழுப்புவதற்கு மட்டும் ஆரம்பிக்கப்படவில்லை வடக்கு கிழக்கு மக்களின் மனங்களை வெல்வதற்குமாகும்.

பிதெற்கின் தோழன்பீ நிதியத்துக்காக தனிப்பட்ட மட்டத்தில் கொடுக்கப்படும் நிதி அன்பளிப்புகளை விட பொதுமக்கள் மற்றும் தொழிற்சங்க மட்டத்தில் வழங்கப்படும் நிதி அன்பளிப்புகளையே அரசாங்கம் எதிர்பார்க்கிறது என்று கூறினார்.

சிங்கர் ஸ்ரீலங்கா நிறுவனம், நோலிமிட் நிறுவனம், மக்கள் தோட்ட அபிவிருத்தி சபையின் தொழிற் சங்கம், இலங்கை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு தாய் சங்கம், தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம், இலங்கை ஏற்றுமதி கடன் காப்புறுதி ஊழியர்கள், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம், நவலோக கன்ஸ்ட்ரக்ஸன் தனியார் நிறுவனம் ஆகிய நிறுவனங்கள் மற்றும் சங்கங்கள் நேற்று ஜனாதிபதியிடம் நிதி அன்பளிப் புகளை கையளித்தன.
தேர்தலுக்கு இரு தினங்களுக்கு முன்னரே பெருந்தொகைப் பணம் பெட்டகத்தில் வைப்பு
பொன்சேகாவின் பணமென அசோகா திலகரட்ன தகவல்

* நகை வைக்கும் பெட்டகத்தில் பணம் வைக்கப்பட்டது ஏன்?
* 2000 டொலர்களை மாத்திரமே நம்முடன் வைத்திருக்க முடியும்
* ஆர்ப்பாட்டம் நடத்துவதால் சட்டத்திலிருந்து தப்ப முடியாது?தேர்தல் நடைபெறுவதற்கு இரு தினங்களுக்கு முன்னரே சரத் பொன்சேகா பெருந்தொகைப் பணத்தை வங்கியின் பெட்டகத்தில் வைத்துள்ளமை தெரியவந்து ள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.

சரத் பொன்சேகாவின் புதல்வி அப்சரா பொன்சேகா கூறியதற்கிணங்க, பொன்சேகாவின் அலுவலகத்திலிருந்தே அந்தப் பணத்தைக் கொண்டு பெட்டகத்தில் வைத்ததாக ஜெனரல் பொன்சேகாவின் மருமகனின் தாயாரான அசோகா திலகரட்ன கூறியுள்ளார்.

அவை தன்னுடைய பணம் அல்லவென்றும் அவர் கூறியுள்ளதாகக் கூறிய அமைச்சர் பீரிஸ், ஒரு பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்காதிருக்க முடியுமா என்றும் கேள்வி எழுப்பினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கு முகமாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (18) முற்பகல் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே பேராசிரியர் பீரிஸ் இதனைத் தெரிவித்தார். இந்தச் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சரவையின் மற்றொரு பேச்சாளரான அமைச்சர் டலஸ் அழகப்பெருமவும், அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட்டவும் கலந்து கொண்டனர்.

சம்பத் வங்கியில் பெரிய பெட்டகமொன் றைக் கேட்டிருக்கிறார்கள். அங்கு பெரியவை இல்லாததால், திருமதி அசோகா திலகரட்னவின் பெயரில் இரண்டு பெட்டகங்களையும், மற்றையவர்களின் பெயரில் மேலும் இரண்டு பெட்டகங்களை யும் பெற்றுக்கொண்டுள்ளனர். இதன் அனைத்துத் திறப்புகளையும் அசோக்கா திலகரட்னவே வைத்திருந்தார்.

வேறு பெயர்களில் இருந்தாலும் பெட்டகங்களை அவர்தான் திறக்கமுடியும். நகைகள் வைக்கப்படும் பெட்டகத்தில் கற்றை, கற்றையாகப் பண நோட்டுக்களை வைத்திருக்கிறார்கள். வெளிநாட்டு நாணயத்தாள்களை இலங்கை ரூபாய்க்கு மாற்றவும் இல்லை.

வங்கியில் நடைமுறைக் கணக்கோ, சேமிப்புக் கணக்கோ ஆரம்பிக்காமல் மூடைகளில் பெட்டகத்தில் ஏன் வைத்தார்களென்று தெரியவில்லை. இலங்கையின் சட்டத்தின்படி வெளிநாடுகளி லிருந்து வரும் ஒருவர் பிரகடனப்படுத்தாமல் 15 ஆயிரம் டொலர் வரை கொண்டு வர முடியும்.

அதற்கு மேலதிகம் என்றால் மத்திய வங்கியின் சட்டதிட்டத்தின்படி அனுமதி பெறவேண்டும். பின்னர் இலங்கை ரூபாய்க்கு மாற்றிவிடவேண்டும். நாம் சுமாராக இரண்டாயிரம் டொலர்களை மாத்திரமே தம்முடன் வைத்திருக்க முடியும். ஆனால், அசோகா திலகரட்ன பெற்றிருந்த நான்கு பெட்டகங்களில் 527,000 அமெரிக்க டொலர் நாணயத்தாள்கள் இருக்கின்றன.

அனைத்தும் புத்தம் புது நோட்டுக்கள். வரிசைக் கிரமப்படி இலக்கங்களைக் கொண்ட அவை முன்பு பயன்படுத்தப்படாத பணத்தாள்கள். இவை எங்கிருந்து, எவ்வாறு, ஏன் கிடைத்தன என்பதைப்பற்றிய விபரங்களை அறியவேண்டாமா? இது முற்றிலும் சட்டத்துக்குப் புறம்பான செயல். நீதிமன்றத்தின் அனுமதியின்படி குற்றப்புலனாய்வுத்துறையினர், வங்கி அதிகாரிகள் மற்றும் அசோகா திலகரட்ன முன்னிலையில்தான் பெட்டகங்கள் திறக்கப்பட்டன.

நூறு ஸ்ரேலிங் பவுண்கள், ஒன்றரை இலட்சம் இலங்கை நாணயத்தாள் என மூன்று நாடுகளின் பண நோட்டுகளை வைத்திருக்கிறார்கள். ஆகவே இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்காமல் எந்தவொரு அரசாலும் இருக்க முடியாது என்று தெரிவித்த அமைச்சர் பேராசிரியர் பீரிஸ், சரத் பென்சேகாவின் மருமகன் மீது பாரிய மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

அது தொடர்பில் விரைவில் வழக்குத் தாக்கல் செய்யப்படும் என்று சுட்டிக்காட்டியதுடன், சரத் பொன்சேகா மீதான இராணுவ நீதிமன்ற விசாரணையானது மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பின் கீழேயே மேற்கொள்ளப்படுமென்றும், அதற்கு மேலதிகமாக உச்சநீதிமன்றத்திற்கே செல்ல வேண்டுமென்றும் குறிப்பிட்டார்.

சட்டம் அனைவருக்கும் பொதுவானது. குற்றமிழைத்தவர் ஆர்ப்பாட்டம் செய்விப்பதற்குத் தகுதியுடையவரென்றால், அவருக்கு விலக்களிப்பது சட்டத்துக்கு முரணான செயற்ர்பாடாகும் என்றும் பேராசிரியர் மேலும் தெரிவித்தார்.


காலத்தின் அவசியத்தை இனங்காண்பதே மக்கள் அரசியலின் கடமையும் பொறுப்பும்

ஜனாதிபதி

அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை நிரந்தர பகைவரும் இல்லை. காலத்தின் அவசியத்தை இனம் காண்பதே மக்கள் அரசியலின் கடமையும் பொறுப்பும் ஆகும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.

தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவி பேரியல் அஷ்ரப் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் சேர்ந்து கொண்ட நிகழ்வு நேற்று (18) அலரி மாளிகையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து பேசிய ஜனாதிபதி மேலும் கூறியதாவது:-

அரசியலில் ஒவ்வொரு யுகம் உள்ளது. அந்த யுகங்களின் போதுதான் யுக புருஷர்கள் தோன்றுகின்றனர். இவ்வாறான ஒரு யுகத்தின் தேவையின் போதுதான் அமைச்சர் அஷ்ரப் முஸ்லிம் காங்கிரஸை ஆரம்பித்து அதனை கட்டியெழுப்பினார். இன்று அந்த யுகம் முடிந்துவிட்டது. இன்று இந்த நாடு ஐக்கியப்பட்டுள்ளது. இன்று யுத்தம் முடிந்துள்ளது. இந்த நாட்டு மக்களுக்கு சுதந்திரமாக பயணம் செய்வதற்கு இருக்கும் உரிமை உறுதி செய்யப்பட்டுள்ளது. தமது பாஷையை பேசுவதற்கான சுதந்திரம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் இந்த யுகத்தின் தேவை பலம் மிக்க அரசியல் கட்சியாக கட்டியெழுப்பப்பட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சுற்றி சகல இனத்தவரையும் சேர்க்கும் பொறுப்பு இன்று உள்ளது. ஒரு சமூகம் அதன் கலாசாரத்தை பாதுகாத்துக்கொண்டு அதேசமயம் மற்றைய சமூகத்தின் கலாசாரத்தை கெளரவிப்பதுடன் அவர்களுடன் சுமுகமாக வாழ அனைத்து சமூகங்களும் இப்போது தயாராகி வருகின்றன.

இவ்வாறான சூழ்நிலையில் இன்று எடுக்கப்படும் தீர்மானம் தேசிய ஒற்றுமைக்கு பெரும் உந்துசக்தியாகும். அதன் காரணமாகத்தான் இது சரித்திர நிகழ்வாகிறது.

இலங்கையர்களான எமக்கு அதிக பயன்களை தருவது பிரிந்து வெவ்வேறாக இருப்பதா? இல்லை அனைவரும் ஒன்று சேர்ந்து பலமிக்க சக்தியாக முன்னேறிச் செல்வதா என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும்.

நீங்கள் எப்போதுமே ஆழ்ந்து சிந்திக்கும் ஒரு தலைவியாவீர்கள். நீங்கள் நன்றாக யோசித்தே எந்தக்கருத்தையும் முன்வைப்பீர்கள். அவ்வாறான ஒருவர் எமது அமைச்சரவையில் இருப்பது எமக்கு மிகுந்த சக்தியை தருகிறது என்று ஜனாதிபதி கூறினார். நாட்டை கட்டியெழுப்பும் மற்றும் சகல இனத்தவர்களும் சமாதானத்துடன் வாழக்கூடிய நாட்டை கட்டியெழுப்பும் ஜனாதிபதியின் வேலைத்திட்டத்துக்கு ஆதரவு வழங்கும் நோக்கில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் சேருவதற்கு தேசிய ஐக்கிய முன்னணி தீர்மானித்திருந்தது.

அத்துடன் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவி பேரியல் அஷ்ரப்பும், கட்சி யின் ஏனைய உறுப்பினர்களும் இங்கு ஜனா திபதியிடமிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்துவத்தை பெற்றுக்கொண் டமை குறிப்பிடத்தக்கது.

கம்பளை விகாரை தாக்குதலில்
ஜே.வி.பி. உறுப்பினருக்கும் தொடர்பு தலை மறைவு விசாரணையில் அம்பலம்!கம்பளை பிரதேசத்திலுள்ள பெளத்த விகாரையொன்றின் மதகுரு மற்றும் அவருடன் இணைந்த மற்றுமொருவரினது கொலைச் சம்பவம் தொடர்பில் கங்க இஹல பிரதேச சபையின் ஜே.வி.பி. உறுப்பினர் ஒருவரும் சம்பந்தப்பட்டிருப்பதாக பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

குறித்த ஜே.வி.பி. உறுப்பினர் தான் வசிக்கும் இடத்தை விட்டும் தலைமறைவாகி கொழும்பு பிரதேசத்தில் மறைந்து இருப்பதாகவும் மேலும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இருவருடைய மரணம் தொடர்பாக பிரதான சந்தேக நபராக விளங்கும் இரா ணுவத்தை விட்டு தப்பியோடிய இருவருக் கும் கைக்குண்டொன்றை வழங்கியவர் குறிப்பிட்ட ஜே.வி.பி. உறுப்பினர் என பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கம்பளை தெமிலிகல ஸ்ரீ போதிரெக்காராம விகாரை வளாகத்தில் நடத்தப்பட்ட கைக்குண்டு தாக்குதலில் விகாரையின் மதகுருவான மாத்தரை விமலானந்த தேரரும் மற்றும் ஐ.ம.சு.மு. ஆதரவாளர் ஒருவருமே இந்த குண்டு வெடிப்பில் மரணமாகியிருந்தனர்.

இந்த இருவரினது மரணம் தொடர்பாக மேலும் இருவரை கம்பளை பொலிஸார் கைது செய்து கம்பளை பிரதேச நீதிமன்ற நீதவான் விராஜ் பண்டார ரணதுங்கவிடம் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 26ம் திகதி வரையும் அவர்கள் இருவரையும் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும் இங்கே தொடர்க...
இந்தியாவில் கடன்அட்டை மோசடியில் ஈடுபட்டிருந்த இலங்கையர் ஒருவர் கைதுஇந்தியாவில் கடன்அட்டை மோசடியில் ஈடுபட்டிருந்த இலங்கையர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். வங்கியொன்றினால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் நேற்றையதினம் இவர் மத்திய குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட குறித்த இலங்கையர் ஒரு வர்த்தகத்துறை பட்டதாரியாவார். கைதுசெய்யப்படும்போது இவரிடம் போலியான மூன்று கடன் அட்டைகள் இருந்துள்ளன. பொலிசாரின் விசாரணைக்கமைய அவரது வீட்டில் நடத்தப்பட்ட தேடுதலின்போது 110தன்னியக்கப் பணம்தரும் அட்டைகளும், 07கடன் அட்டைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவர் தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாவட்டங்களிலேயே அதிகளவிலான மோசடிகளில் ஈடுபட்டிருந்தமை ஆரம்பக்கட்ட விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.


யானைச் சின்னத்தில் போட்டியிடுவதா அல்லது அன்னம் சின்னத்தில் போட்டியிடுவதா  

யானைச் சின்னத்தில் போட்டியிடுவதா அல்லது அன்னம் சின்னத்தில் போட்டியிடுவதா என்பது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீரவுக்கும் அதன் செயலாளர் டிரான் அலசுக்குமிடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. .தே.முன்னணியின் யானைச் சின்னத்தில் போட்டியிட மங்கள சமரவீர இணக்கம் வெளியிட்டுள்ள நிலையில் டிரான் அலஸ் பொதுச் சின்னத்தில் போட்டியிட வேண்டுமென்ற நிலைப்பாட்டினைக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அமைச்சரவைப் பேச்சாளர்களாக இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி சர்வதேச வர்த்தகத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோரே அமைச்சரவைப் பேச்சாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் இவ்விருவரும் கலந்துகொண்டு அமைச்சரவை முடிவுகள் பற்றி விளக்கமளித்தனர். அமைச்சரவைப் பேச்சாளராக கடமையாற்றிய அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா கடந்தவாரம் அப்பதவியிலிருந்து விலகியதையடுத்து இவ்விரு அமைச்சர்களும் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் நடைபெறவுள்ள தமிழாராய்ச்சி மாநாட்டிற்காக 49நாடுகளிலிருந்து 7256பேர் பதிவு


தமிழகத்தில் நடைபெறவுள்ள தமிழாராய்ச்சி மாநாட்டிற்காக 49நாடுகளிலிருந்து 7256பேர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் கூறுகின்றனர். அவர்களில் 1500பேர் தமது ஆராய்வை மாநாட்டின்போது சமர்ப்பிப்பரென்று தமிழக முதல்வா மு.கருணாநிதி தெரிவித்துள்ளார். கோயம்புத்தூரில் நடைபெறவுள்ள இம்மாநாட்டில் இலங்கையிலிருந்து 91பேரும், கடனாவிலிருந்து 23பேரும், அமெரிக்காவிலிருந்து 44பேரும், அவுஸ்திரேலியாவிலிருந்து 15பேரும், லண்டனிலிருந்து 18பேரும், சீனாவிலிருந்து 4பேரும் கலந்து கொள்கின்றனர். அத்துடன் 6800பேரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கண்டி மாவட்ட வேட்பாளர் பட்டியலில் 

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கண்டி மாவட்ட வேட்பாளர் பட்டியலில் இலங்கை கிரிக்கட் அணியின் நட்சத்திர சுழற் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் உபதலைவராக போட்டியிடவுள்ளாரென்று தகவல்கள் தெரிவிக்கின்றன. டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கட்டுகளை வீழ்த்தி முத்தையா முரளிதரன் உலக சாதனை படைத்துள்ளார். முத்தையா முரளிதரனை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் இணைப்பதன்மூலம் தமிழ் சிங்கள இளைஞர்களின் வாக்குகளைக் கவரமுடியும் என ஆலோசிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, நட்சத்திர துடுப்பாட்ட வீரரான சனத் ஜயசூரிய ஆளும் கட்சியில் சார்பில் மாத்தறை மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார். எனினும் முத்தையா முரளீதரன் இது குறித்து உத்தியோகபூர்வமாக தகவல்கள் எதனையும் வெளியிடவில்லையென்று கூறப்படுகின்றது.

முல்லைத்தீவு வைத்தியசாலை இராணுவத்தினரால் சுகாதாரத் திணைக்கள அதிகாரிகளிடம்

 

முல்லைத்தீவு வைத்தியசாலை இராணுவத்தினரால் சுகாதாரத் திணைக்கள அதிகாரிகளிடம் நேற்றுக் கையளிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. வன்னியில் இறுதியுத்தம் நடைபெற்ற பகுதியில் முல்லைத்தீவு வைத்தியசாலை அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வைத்தியசாலையில் இருந்த மருந்துகள் மற்றும் கருவிகள், உபகரணங்கள் போன்றவை புத்துவெட்டுவான் பகுதியில் தற்போது பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன என்றும் அவற்றை படையதிகாரிகள் விரைவில் சுகாதாரத் திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கவுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வருடம் முதல் 9 வீதியின் ஊடாக யாழ் செல்வோரின் எண்ணிக்கைஅதிகரிக்கும்

 
இவ்வருடம் முதல் 9 வீதியின் ஊடாக யாழ் செல்வோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதுடன் அதனூடான வருமானமும் அதிகரிக்கலாமென இலங்கை பேருந்துசபை தெரிவித்துள்ளது. தற்போது 9 வீதியூடாக யாழ்ப்பாணத்திற்கும் கொழும்புக்குமிடையில் நாளாந்தம் 600பயணிகள் பயணிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்பு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் பயனை தற்போது அரசாங்கம் அனுபவிப்பதாக போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் எதிர்வரும் காலங்களில் மேலும் பேருந்து சேவைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது இலங்கை போக்குவரத்து சபையினால் யாழ் கொழும்பிடையே 10பஸ்சேவைகள் நடத்தப்படுகின்றன. யாழ். கண்டிக்கிடையில் 04பஸ்சேவைகளும், யாழ் திருமலையிடையே 02பஸ் சேவைகளும், மட்டக்களப்பிலிருந்து யாழுக்கு 02பஸ் சேவைகளும் இடம்பெற்று வருகின்றன.
மேலும் இங்கே தொடர்க...
இங்கிலாந்து புறப்பட்ட மாணவர் பாக். விமான நிலையத்தில் கைது!இங்கிலாந்தில் உள் பர்மிங்ஹாம் நகருக்குச் செல்ல பாகிஸ்தான் இண்டர்நேஷனல் ஏயார் லைன்ஸ் விமானத்தில் மாணவர் இக்பால் அசார் பயணம் செய்ய முயன்ற போது, பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

இவர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள கோகி ரத்னா பகுதியை சேர்ந்தவர்ஆவார்.

சம்பவ தினத்தன்று அசார் இக்பால் விமானத்தில் புறப்படுவதற்காக ராவல் பிண்டியில் உள்ள பெனாசிர் பூட்டோ சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தார்.

அப்போது வழக்கமாக விமானத்தில் பயணிகளை ஏற்றுவதற்கு முன்பு செய்யப்படும் எக்ஸ்ரே கருவி மூலம் அவரை 'ஸ்கேனிங்' சோதனை நடத்தினார்கள்.

அப்போது அவரது காலணிகளில் துப்பாக்கி, மற்றும் 2 கத்திகளை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இதைஞ்கு தொடர்ந்து விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர். பின்னர் அவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...
ஜெனரல் பொன்சேகாவை சிவில் நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் : லியாம் பொக்ஸ்தன்மை தலையாய அம்சமாக இருக்கும் சிவில் நீதிமன்றத்திலேயே ஜெனரல் சரத் பொன்சேகாவை விசாரணை செய்யவேண்டும் என்று பிரிட்டிஷ் நிழல் பாதுகாப்பு அமைச்சர் லியாம் பொக்ஸ் தெரிவித்துள்ளார்.

லியாம் பொக்ஸ் நேற்று மாலை கொழும்பில் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவை சந்தித்த பின்னர் செய்தியாளர் மாநாட்டில் பேசுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் கூறியதாவது:

"சட்டம் ஆதிக்கம் செலுத்தும் என்ற மனோதிடத்துடன் சகல குற்றச்சாட்டுக்களும் விசாரிக்கப்படக் கூடிய சிவில் நீதிமன்றத்திலேயே ஜெனரல் பொன்சேகா விசாரிக்கப்பட வேண்டும் என்பதே எமது திடமான கருத்தாகும்.

சிவில் நீதிமன்றத்தில் நிலவும் ஒளிவுமறைவற்ற தன்மை, உள்ளூர், சர்வதேச சமுதாயங்களுக்கு நியாயாதிக்க நடைமுறைகளில் ஒரு நம்பிக்கையைக் கட்டியெழுப்பும்.

பொன்சேகாவை சூழ்ந்துள்ள நிலைமை இலங்கையின் மதிப்புக்குக் குந்தகம் ஏற்படுத்தலாம். இந்த நாடு எதிர்காலம் பற்றிய ஒரு முக்கியமான காலகட்டத்தை எட்டும்போது, ஒரு பழிவாங்கும் செயலாக இத்தகைய ஒரு சிரேஷ்ட இராணுவ அதிகாரியை சித்திரிப்பது பொருத்தமானதாக இருக்காது.

எவ்வாறாயினும், இலங்கையின் செயற்பாடுகள் தொடர்பாக தீர்ப்புக் கூறுவதற்கு எந்தவொரு நாட்டுக்கும் உரிமை இல்லை. யாரை விசாரணை செய்யவேண்டும், யாரை விசாரணை செய்யக் கூடாது என்று வெளிநாடு அல்லது வெளிநாட்டமைப்பு ஒன்றினால் கூறமுடியாது.

ஆனால், நிகழ்வுகள் இடம்பெறும் விதத்தைப் பொறுத்து வெளிநாடுகள் இலங்கையைப் பற்றி புரிந்துகொள்ளும். சட்டம் நேர்மையாக அமுல்படுத்தப்பட்டால் மட்டும் போதாது. அது நேர்மையாக அமுல்படுத்தப்படுகின்றது என்பது மற்றவர்களால் உணரப்படவும் வேண்டும்.

மதிப்பு என்பது ஒரு பெரிய விடயம். இந்த நாடு பெருமதிப்பைப் பெறவேண்டிய ஒரு நாடாகும். இந்தக் குறிக்கோளை அடைய சகல அரசியல்வாதிகளும் பாடுபடுவார்கள் என்று நம்புகின்றோம்." இவ்வாறு அவர் கூறினார்.


பொதுத் தேர்தலையொட்டி பொலிஸ் விடுமுறை ரத்து
தேர்தல் கடமைகளை மேற்கொள்ளவென பொலிஸ் உயர் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் மற்றும் விசேட பொலிஸ் பிரிவைச் சேர்ந்த அனைவரினதும் விடுமுறைகள் நாளை மறுதினம் முதல் தேர்தல் தினம் வரை ரத்துச் செய்யப்படவுள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி இலங்கையின் ஏழாவது நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை செய்வதற்காகவும் பாதுகாப்பைத் தீவிரப்படுத்துவதற்காகவும் இந்த நடைமுறையைப் பின்பற்றுவதாகப் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.சிங்களவர், படையினர், மகாசங்கத்தினர் மத்தியில் அரசு பிளவை ஏற்படுத்தியுள்ளது : ரணில்வரலாற்றில் முதன் முறையாக சிங்கள மக்கள், படையினர் மற்றும் மகா சங்கத்தினர் மத்தியில் அரசாங்கம் பிளவுகளை ஏற்படுத்தியுள்ளது. பிரபாகரனால் செய்ய முடியாததை அரசாங்கம் இன்று செய்துள்ளது என்று எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நாட்டைப் பாதுகாத்த ஜெனரல் சரத் பொன்சேகா தேசத் துரோகியாகி விட்டார். கே.பி. இன்று தேசப்பற்றாளர் ஆகிவிட்டார் என்றும் எதிர்க் கட்சித் தலைவர் சுட்டிக் காட்டினார்.

ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வழங்கப்படவுள்ள 10 இலட்சம் மக்களின் கையெழுத்துக்களை பெறும் நடவடிக்கையின் உத்தியோகபூர்வ நிகழ்வு நேற்று கொழும்பு ஜே.ஆர். ஜயவர்த்தன நிலையத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது,

"குற்றங்களை முன்வைத்தே எவரையாவது கைது செய்ய முடியும். இது தான் சட்டம். அரசியலமைப்பும் இதனையே வலியுறுத்துகிறது. ஆனால், இவையனைத்தையும் மீறி ஜெனரல் பொன்சேகா கைது செய்யப்பட்டுள்ளார். இது அப்பட்டமான அரசியல் பழிவாங்கலாகும். இன்று அவரது மருமகனின் தாயாரைகீ கைது செய்துள்ளனர். எதிர்காலத்தில் இறந்து போன அவர்களது உறவினர்களின் புதை குழிகளையும் தோண்டினாலும் அது அதிர்ச்சிக்குரிய விடயமல்ல.

எமது நாட்டு அரசியல் வரலாற்றில் தேர்தலில் போட்டியிட்ட ஒருவர் கைது செய்யப்பட்டமை இதுவே முதற் தடவையாகும்.

இவை போன்ற சம்பவங்கள் மியான்மாரில் இடம்பெற்றன. இன்று எமது நாட்டிலும் நடைபெறுகிறது. நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட பின்னர் அரசாங்கம் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்த்தோம். ஆனால், இன்று இனங்களிடையே அரசாங்கம் பிளவுகளை ஏற்படுத்தி வருகிறது.

முதன் முறையாக சிங்கள மக்களை, மகா சங்கத்தினரை, படையினரை அரசாங்கம் பிளவுபடுத்தியுள்ளது. தாய்நாட்டை பாதுகாத்தவரை தேசத் துரோகியாக முத்திரை குத்தி நாட்டை காட்டிக் கொடுத்த கே.பிக்கு தேசப்பற்றாளன் முத்திரையை அரசாங்கம் குத்தியுள்ளது.

நாட்டில் அனைவராலும் மதிக்கப்படும் மகா சங்கத்தினர் விமர்சிக்கப்படுகிறார்கள்; அச்சுறுத்தப்படுகிறார்கள். அந்தளவுக்கு ஒழுக்கம் சீர்குலைந்து போய்விட்டது.

ஜெனரல் பொன்சேகா நாட்டில் பயங்கரவாதத்தை ஒழித்து மக்களைப் பாதுகாத்தார். அவர் தேசிய வீரர். எனவே தேர்தலின் போது அவருக்கு வாக்களித்தோர், வாக்களிக்காதோர் அனைவரும் அவரின் விடுதலைக்கான மகஜரில் கையெழுத்திட வேண்டியது அவசியமாகும்.

இது ஜெனரல் பொன்சேகாவின் விடுதலைக்காக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் மட்டுமல்ல, நாட்டில் ஜனநாயகத்தை நிலை நிறுத்தி மனித உரிமைகளை பாதுகாப்பதற்குமான போராட்டமுமாகும்.

இந்த நாட்டை மியன்மாராக மாற்றுவதற்கு இடமளிக்க மாட்டோம். எனவே மக்கள் அனைவரும் சர்வாதிகாரத்திற்கு எதிராக அணி திரள வேண்டும்." இவ்வாறு ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

சோமவன்ச அமரசிங்க

"ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதற்கு 10 லட்சம் கையெழுத்துக்கள் அல்ல, அதனையும் தாண்டி ஒரு கோடி கையெழுத்துக்களைப் பெற வேண்டும். அவரின் விடுதலைக்காக தேசிய, சர்வதேச ரீதியில் இன்று போராட்டங்கள் வெடிக்க ஆரம்பித்துள்ளன. இதனை மேலும் உத்வேகப்படுத்த வேண்டும்.

இந்த அரசாங்கத்திடம் அதிகாரம் இருக்கின்றது. ஆனால், புத்திசாலித்தனம் கிடையாது. அண்மையில் லங்கா பத்திரிகை சீல் வைக்கப்பட்டது. நீதிமன்றத் தீர்ப்பால் சீல் உடைக்கப்பட்டது.

அதேபோன்று அதன் ஆசிரியர் கைது செய்யப்பட்டார். நீதிமன்றம் சென்றார்கள். குற்றமற்றவர் என நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். இத் தீர்ப்பு வெளியாகி அரை மணித்தியாலத்தில் ஊடகவியலாளர்களைக் கைது செய்யும்போது தன்னிடம் அறிவிக்குமாறு ஜனாதிபதி அறிக்கை வெளியிட்டார். இவ்வாறு அரசாங்கம் தோல்விகளைச் சந்தித்து வருகிறது.

சர்வதேச ரீதியாக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கு அரசாங்கம் ஆளாகியுள்ளது. இதனால் ஜி.எஸ்.பி. வரிச் சலுகையும் பறிபோயுள்ளது."

திஸ்ஸ அத்தநாயக்க

"ஜெனரல் பொன்சேகாவை எதுவிதமான நிபந்தனையுமின்றி விடுதலை செய்ய வேண்டும். அரசியலமைப்புக்கு விரோதமான அரசின் நடவடிக்கைகள் கைவிடப்பட வேண்டும்."

இந்நிகழ்வில் ஐ.தே.க.வின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய, தவிசாளர் ருக்ஷன் சேனாநாயக்க, பிரதித் தவிசாளர் காமினி ஜயவிக்கிரம பெரேரா மற்றும் ஆர். யோகராஜன், எம். சச்சிதானந்தன், மேல் மகாண சபை உறுப்பினர்களான முஸம்மில், முஜிபுர் ரஹ்மான், எஸ். சதாசிவம் மற்றும் முன்னாள் எம்.பி.க்கள், ஆதரவாளர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
யானை சின்னத்தில் போட்டியிடுவது குறித்து தீர்மானிக்கப்படவில்லை: மனோ கணேசன்ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் யானை சின்னத்தில் போட்டியிடுவது குறித்து இதுவரை தீர்மானிக்கபடவில்லை என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் வீரகேசரி இணையத்தளத்துக்கு சற்றுமுன்னர் தெரிவித்தார்.

ஜனநாயக மக்கள் முன்னணி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மக்கள் பிரிவு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் யானை சின்னத்தில் போட்டியிட சம்மதம் தெரிவித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் குறிப்பிட்டதாக செய்திகள் வெளியாகின. இதுகுறித்து மனோ கணேசனிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள கட்சியின் செயற்குழுக் கூட்டத்தின் பின்னரே தமது முடிவினை அறிவிப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஆட்சிப் பலம் சொந்த அதிகாரங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது: ஜே.வி.பி


பலத்தை சொந்த அதிகாரங்களுக்காகப் பயன்படுத்தப்படும் அரசியலை இப்போதுதான் பார்ப்பதாகவும் பாதாளத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் நாட்டை மீட்டெடுக்க அனைவரும் முன்வரவேண்டும் எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்தார்.

ஜெனரல் சரத் பொன்சேகாவின் பாதுகாவலர்கள் உள்ளிட்ட 14பேர் விசாரணையின் பின்னர் இன்று விடுதலை செய்யப்பட்டனர். அவர்களைச் சந்தித்தபின்னர் ஊடகங்களுக்கு கருத்துக் கூறுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

புகைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதால் அவர்கள் நிரபராதிகள் என்பது தெளிவாகிறது. ஏனையோரும் இவ்வாறு விடுதலை செய்யப்படுவார்கள் என்ற நம்பிக்கை உண்டு.

எந்தத் தவறையும் செய்யாதவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்கள். இது எந்த வகையில் நியாயம் என எனக்குத் தெரியவில்லை என அவர் அங்கு மேலும் தெரிவித்தார்
ஜெனரல் சரத் பொன்சேகாவின் பாதுகாவலர்கள் 11 பேர் உள்ளிட்ட 14 பேர் நீதிமன்றத்தால் விடுதலைதேர்தலின் பின்னர் கைது செய்யப்பட்டு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் தீவிர விசாரணைக்குட்படுத்தப்பட்டுவந்த ஜெனரல் சரத் பொன்சேகாவின் பாதுகாவலர்கள் 11 பேர் உள்ளிட்ட 14 பேர் கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தால் இன்று புதன்கிழமை விடுவிக்கப்பட்டனர்.

விடுதலை செய்யப்பட்டோரில் ஜெனரல் சரத் பொன்சேகாவின் களுத்துறை மாவட்ட தேர்தல் கண்காணிப்புப் பணிகளுக்குப் பொறுப்பான அதிகாரி ஒருவரும் சிவிலியன்கள் இருவரும் அடங்குவர்.

குற்றப்புலனாய்புப் பிரிவினரால் பெறப்பட்ட வாக்குமூலங்களில் எதுவித குற்றங்களும் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் பிணைகளிலன்றி முழுமையான விடுதலைக்கு உத்தரவிடுவதாகவும் நீதவான் சம்பா ஜானகி அறிவித்தார்.

இதனையடுத்து கொழும்பு 07 ராஜகீய மாவத்தையில் அமைந்துள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவின் அலுவலகத்துக்கு அழைத்துவரப்பட்ட அவர்களை அனோமா பொன்சேகா, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ச வீரசிங்க ஆகியோர் சந்தித்து கலந்துரையாடினர்.

தாம் விசாரணைக்காக தடுத்துவைக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் தவறாக நடத்தப்படவில்லை என விடுதலை செய்யப்பட்டோர் தெரிவித்தனர்.

தனது கணவர் உட்பட தடுத்துவைக்கப்பட்டிருக்கும் அனைவரும் விரைவில் விடுதலை செய்யப்படவேண்டும் என்பதை தொடர்ச்சியாக வலியுறுத்திவருவதாக குறிப்பிட்ட ஜெனரல் சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா சந்தர்ப்பவாத அரசியலுக்கு எதிராக அனைவரும் அணி திரள வேண்டும் எனத் தெரிவித்தார்.

10 இலட்சம் கையெழுத்துக்கள் திரட்டும் நடவடிக்கை இன்று ஆரம்பம்பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யக்கோரி நாடு முழுவதிலும் 10 இலட்சம் கையெழுத்துக்களைத் திரட்டும் நடவடிக்கை இன்று ஆரம்பமானது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்வின் தலைமையில் இந்நிகழ்வு கேம்பிட்ஜ் ரெரஸில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி. , ஸ்ரீ லங்க முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவு, இடதுசாரி முன்னணி, ஐக்கிய சோஷலிசக் கட்சி, புதிய சிஹல உறுமய, மற்றும் பெருந்தோட்டத் துறையை பிரதிநிதித்துவப்படுத்துகிற தொழிற்சங்கங்கள், புத்திஜீவிகள் அமைப்பு, ஜனநாயகக் குழுக்கள் ஆகிய அமைப்புகள் ஊடாக இந்த கையெழுத்து திரட்டும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.


தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் துரைராஜா ரவிஹரன் போட்டி


முல்லைத்தீவு மாவட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் துரைராஜா ரவிஹரன் போட்டியிடும் வகையிலான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவேண்டும் என முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து திருகோணமலையில் இடம்பெயர்ந்து வாழ்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக கட்சியின் தலைவர் இரா சம்பந்தரை திருகோணமலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான மகஜர் ஒன்றினையும் இவர்கள் கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராஜாவுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரவிஹரன் 1993 ஆம் ஆண்டிலிருந்து 2000 ஆம் ஆண்டுவரை முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாஜ தலைவராக பணியாற்றியவர் எனவும் இந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.முல்லைத்தீவு மாவட்டத்தில் த.தே.கூ சார்பில் ரவிஹரனை நிறுத்தக் கோரிக்கை
முல்லைத்தீவு மாவட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் இலங்கை முல்லைத்தீவு மாவட்டத்தில் த.தே.கூ சார்பில் ரவிஹரனை நிறுத்தக் கோரிக்கை
வீரகேசரி இணையம் 2/17/2010 3:45:34 டங - முல்லைத்தீவு மாவட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் துரைராஜா ரவிஹரன் போட்டியிடும் வகையிலான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவேண்டும் என முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து திருகோணமலையில் இடம்பெயர்ந்து வாழ்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக கட்சியின் தலைவர் இரா சம்பந்தரை திருகோணமலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான மகஜர் ஒன்றினையும் இவர்கள் கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராஜாவுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரவிஹரன் 1993 ஆம் ஆண்டிலிருந்து 2000 ஆம் ஆண்டுவரை முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாஜ தலைவராக பணியாற்றியவர் எனவும் இந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யிடும் வகையிலான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவேண்டும் என முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து திருகோணமலையில் இடம்பெயர்ந்து வாழ்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக கட்சியின் தலைவர் இரா சம்பந்தரை திருகோணமலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான மகஜர் ஒன்றினையும் இவர்கள் கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராஜாவுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரவிஹரன் 1993 ஆம் ஆண்டிலிருந்து 2000 ஆம் ஆண்டுவரை முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாஜ தலைவராக பணியாற்றியவர் எனவும் இந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...
வேட்புமனுத் தாக்கல் நாளை ஆரம்பம்; முடிவுகள் எட்டாத நிலையில் சிறுகட்சிகள்

கூட்டுச் சேர்வதிலும் சின்னத்தை தெரிவதிலும் பெருந்திண்டாட்டம
வேட்பாளர் நியமனப்பத்திரங்களைத் தயாரிக்கும் பரபரப்புக்கு மத்தியிலும், தேர்தலில் போட்டியிடும் சின்னத்தைத் தெரிவு செய்வதில் சிறு அரசியல் கட்சிகள் இன்னமும் முடிவெடுக்க முடியாத நிலையில் இறுதி நேர பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளன.

பெரிய அரசியல் கட்சிகள் வேட்பாளர் நியமனப் பத்திரங்களைத் தயாரிக்கும் இறுதிக்கட்டப் பணிகளில் ஈடுபட்டுள்ளன. அதேநேரம் சிறிய கட்சிகளுக்கு ஆசனங்களை ஒதுக்கிக் கொடுப்பதில் முனைப்புக் காட்டியுள்ளன.

இந்த நிலையில் பெரிய கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்திருக்கும் சில அரசியல் கட்சிகள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதா அல்லது இணைந்தே போட்டியிடுவதா என்பதில் இன்னமும் தெளிவான முடிவை எடுக்க முடியாத நிலையில் உள்ளன.

யாழ்ப்பாணத்தில் தனித்துப் போட்டியிடுவதெனவும் அதேநேரம் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் நட்புறவுடன் செயற்படுவதெனவும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) தீர்மானித்திருக்கிறது. எனினும், அரச தரப்புடன் நேற்றைய தினமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகக் கட்சியின் பேச்சாளரொருவர் தினகரனுக்குத் தெரிவித்தார்.

அரசாங்க ஆதரவு கட்சியாகத் தேர்தலில் களமிறங்குவதுடன், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து போட்டியிடுவதனை விடவும், தனித்து வீணைச் சின்னத்தில் போட்டியிடுவது சாதகமானது என ஈ.பி.டி.பி. நம்புகிறது.

இதேபோன்று ஆளுந்தரப்பில் உள்ள மலையக மக்கள் முன்னணி நுவரெலியா, பதுளை மாவட்டங்களில் தனித்து கட்சியின் மண்வெட்டிச் சின்னத்தில் போட்டியிடத் தீர்மானித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவித்தன. அமரர் பெ. சந்திரசேகரனின் பாரியார் சாந்தினி சந்திரசேகரனின் தலைமையில் நுவரெலியா மாவட்டத்திலும், மாகாண சபை உறுப்பினர் எஸ். அரவிந்த்குமார் தலைமையில் பதுளை மாவட்டத்திலும் மலையக மக்கள் முன்னணி களமிறங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இறுதிக் கட்டத்திலும் அரச தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேவேளை, தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நேற்றும் கூடி ஆராய்ந்துள்ளது. இம்முறை கூட்டமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் பலருக்குப் போட்டியிட வாய்ப்பளிக்காதிருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக எம்.கே. சிவாஜிலிங்கம், என்.ஸ்ரீகாந்தா ஆகியோருக்கு வாய்ப்பளிக்கக் கூடாதெனக் கூட்டமைப்பின் பெரும்பாலானோர் கூறியுள்ளனர்.

இந்நிலையில், சிவாஜிலிங்கமும், ஸ்ரீகாந்தாவும் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தலைமையிலான புதிய இடதுசாரி விடுதலை முன்னணி கட்சியில் போட்டியிடுவதாகத் தெரிவிக்கப்பட்டது.


வாக்கெண்ணும் நிலையங்களில் அதிகாரிகளை இரட்டிப்பாக்க தேர்தல் திணைக்களம் தீர்மானம்


பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நாளை (19) ஆரம்பமாகின்றது. 22 மாவட்டங்களிலும் உள்ள தெரிவத்தாட்சி அதிகாரிகள் முன் னிலையில் வேட்புமனுக்களை கையேற் பதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள் ளதுடன் மாவட்ட செயலகங்களுக்கு அருகில் பொலிஸாரை பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் கூறியது.

இதேவேளை இம்முறை தேர்தலில் வாக்குகள் எண்ணும் நிலையங்களையும் வாக்கு எண்ணும் நிலைய உத்தியோக ஸ்தர்கள் எண்ணிக்கையையும் அதிகரிக்க தேர்தல் திணைக்களம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் வாக்குகள் எண்ண 35 ஆயிரம் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவது குறித்து திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளது.

ஜனாதிபதி தேர்தலைவிட பாராளுமன்றத் தேர்தலில் அதிக வேலைகள் உள்ளதுடன் விருப்பு வாக்குகளை எண்ண வேண்டி யுள்ளதாகவும் உதவித் தேர்தல் ஆணையாளர் குலதுங்க தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் 20 ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு வாக்கு எண்ணும் நிலையம் என்ற அடிப்படையில் 888 வாக்கு கள் எண்ணும் நிலையங்கள் அமைக்கப் பட்டன இம்முறை 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரையான வாக்காளர்களுக்கென ஒரு வாக்களிப்பு நிலையம் அமைப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. எனினும் வாக்களிப்பு நிலையங்கள் அதிகரிக்கப்படமாட்டாது என்று அவர் தெரிவித்தார்.

இம்முறை தேர்தலில் 10 இலட்சத்து 875 வாக்களிப்பு நிலையங்கள் நிறுவப் படவுள்ளன. இடம்பெயர்ந்த வாக்காளர் களுக்கு மற்றொரு வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிப்பதற்கு ஒழுங்குகள் செய்யப் படவுள்ளன.

அரசாங்க ஊழியர்கள் தபால் மூலம் வாக்களிப்பதற்காக விண்ணப்பிப்பதற்கு 22ஆம் திகதி வரை கால அவகாசம் வழங் கப்பட்டுள்ளது.

இதேவேளை சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்துவதற்கு 26ஆம் திகதி நண்பகல் வரை அவகாசம் வழங்கப் பட்டுள்ளது.


எதிர்க்கட்சிகளின் தவறான ஆர்ப்பாட்டங்களை முறியடிக்க கூட்டுத் தொழிற்சங்கம் தீர்மானம்அரசுக்கு எதிராக பொய்யான முறையில் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆர்ப்பாட்டங்களையும் எதிர்ப்புப் பேரணிகளையும் மோதல்கள் அற்ற முறையில் முறியடிப்பதற்கு கூட்டுத் தொழிற்சங்க சம்மேளனம் முடிவு செய்துள்ளது.

இது தொடர்பான தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகளின் சதிகளை முறியடிக்கும் வகையில் நாட்டின் சகல பாகங்களிலும் உள்ள மக்களின் பங்களிப்புடன் பாரிய எதிர்ப்புக் கூட்டங்களை நடத்தவும் இதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐ. ம. சு. மு. மற்றும் அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகளு டன் பேச்சுவார்த்தை நடத்தி உதவிகளை பெற்றுக் கொள்வதென வும் கூட்டுத் தொழிற்சங்க சம் மேளனம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான கூட்டம் சம்மேளனத்தின் தலைவரும், மேல் மாகாண ஆளுநருமான அலவி மெளலானா தலைமையில் நேற்று நடந்தது. பம்பலப்பிட்டியிலுள்ள மேல் மாகாண ஆளுநரின் பணிமனையில் இந்தக் கூட்டம் நடந்தது.

இங்கு உரையாற்றிய ஆளுநர் அலவி மெளலானா கூறியதாவது,

ஜனாதிபதித் தேர்தலின் மூலம் இந்த நாட்டு மக்கள் ஈட்டிய வெற்றியை முறி யடிக்க தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் எடுக்கப்படும் முயற்சிகளைத் தோற்கடிக்க தொழிலாளர் வர்க்கத்தினர் தயாராகவுள்ளனர்.

தமது குறுகிய அரசியல் இலாபத்திற்காக மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய தேசி யக் கட்சி உட்பட எதிர்க்கட்சிகள் சில முன்னெடுத்துவரும் சட்டவிரோத ஆர்ப் பாட்டம் தொடர்பில் மக்கள் விழிப்புடனும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

மனித படுகொலைகள் மூலமும் இரத் தக் களரிகள் மூலமும் தமது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்த ஜே. வி. பி.யினரின் தூண்டுதல்களின் மூலமே பொன்சேகாவும் சதித் திட்டங்களை தீட்டியுள்ளார். இதனை மக்கள் நம்பப் போவதில்லை.

மக்கள் ஈட்டிய வெற்றியை நிர்மூலமாக்கு வதற்கு இனியும் இந்த நாட்டு மக்களும் தொழிலாளர் வர்க்கத்தினரும் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்றார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மிகவும் நல்லவர். சகல இன மக்களின் ஆதரவுடன் ஜனநாயக வழியில் நாட்டை முன்னேற்ற திட்டமிட்டுள்ளார். இதனை முறியடிக்க பல சக்திகள் முனைந்து வருகின்றன.

சுவரொட்டிகள் மூலம் நாட்டில் புரட் சியை ஏற்படுத்த பலர் முனைகின்றனர். ஆர்ப்பாட்டத்தின் மூலம் குழப்பங்களை விளைவித்து அது தமக்கு எதிராக முன் னெடுக்கப்பட்டது என புகைப்படங்கள் எடுத்து வெளிநாடுகளுக்கு காண்பிக்க முயற்சிக்கின்றனர் என்றும் அலவி மெளலானா சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதியின் ஆலோசகர் ஏ.எச்.எம். அஸ்வர் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் இதில் கலந்து கொண்டனர்.


தனுன திலகரட்னவின் தாயார் கைதாகி பிணையில் விடுதலைகுற்றப்புலனாய்வுப் பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சரத் பொன்சேகாவின் மருமகனான தனுன திலகரத்னவின் தாயார் அசோக்கா திலகரத்ன நேற்று கல்கிஸ்சை நீத வான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு பிணை யில் விடுதலை செய்யப்பட்டார்.

ஏழரை கோடி ரூபா பணம் அசோக்கா திலக ரத்னவின் வங்கி பாதுகாப்பு பெட்டகங்களிலி ருந்து கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர் பில் விசாரணை செய்யப்பட்ட பின்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸாரால் தனுனவின் தாயார் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் பிரி ஷாந்த ஜயகொடி தெரிவித்தார்.

கண்டெடுக்க ப்பட்ட பணம் தொடர்பாக விசார ணைக்காக குற்றப்புலனாய்வுப் பிரிவு பொலிஸரூக்கு வரு மாறு நேற்று முன்தினம் அசோக்கா திலகரத்ன வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிவித்த அவர், முழுமையான விசாரணைக்கு பின்னர் கைது செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.


தேர்தல் முடிவுக்கு எதிரான உச்சமன்ற மனு:
கணனி மூலம் திரிபு படுத்தப்பட்டதாக கூறப்பட்ட குற்றச்சாட்டை மனுவில் சேர்க்காதது ஏன்?ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் கணனி மூலம் திரிபுபடுத்தப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டும் எதிர்க்கட்சிகள், உச்ச நீதிமன்றத்திற்கு தாக்கல்செய்துள்ள தேர்தல் முடிவுகளுக்கு எதிரான மனுவில் அதனைக் குறிப்பிடாத தேன் என ஊடகத் துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபே வர்தன கேள்வியெழுப்பினார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் இது குறித்து தெரிவித்த அமைச்சர், நாட்டு மக்களும் சர்வதேசமும் நீதியானதென ஏற்றுக் கொண்ட தேர்தலை மோசடி என்று கூறுபவர்கள் பொதுத் தேர்தலில் இதைவிட மோசமான படுதோல்வியைச் சந்திப்பது நிச்சயமெனவும் குறிப்பிட்டார்.

தகவல் ஊடகத்துறை அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட் டில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

நடந்து முடிந்த தேர்தல் நீதியானதென ஐரோப்பிய ஆணைக் குழு உறுதிப் படுத்தியுள்ளது. அதற்கான சான்றிதழையும் வழங்கியுள்ளது. தேர்தல் வாக்களிப்பு முடி வடைந்த அன்றைய தினம் 4.00 மணிக்கு அத்தேர்தல் நீதியானதும் அமைதியுமானது மெனக் கூறிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அது தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தமது நன்றி களையும் தெரிவித்துக் கொண்டார்.

எனினும், தேர்தல் முடிவுகள் அறிவிக் கப்பட்ட பின்னர் அவருடன் இணைந்திருந்த ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்க கணனி மோசடியொன்று இடம்பெற்றதாகக் குறிப்பிட்டார். நீதிமன்றத்துக்கு சமர்ப் பிக்கப்பட்டுள்ள மனுவில் அரச வளங்கள் உபயோகப்படுத்தப்பட்டதாகவும் மேலும் சில குற்றச்சாட்டுக்களையும் குறிப்பிட் டுள்ளவர்கள் ஏன் கணனி மோசடி என் பதைக் குறிப்பிடவில்லை. இதன் மூலம் இவர்கள் அடுத்துவரும் தேர்தலுக்கான சூழ்ச்சிகளை இப்போதி ருந்தே ஆரம்பித்துள்ளமையே தெளி வாகிறது.

வீண் பிரசாரங்களை விட்டுவிட்டு நியாயமான அத்தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்ளுமாறு நாம் கேட்டுக் கொள்கிறோம்.

பொதுநலவாய அமைப்பின் கூற்று தேர்தல் ஜனநாயக ரீதியில் நடைபெறவில்லை எனத் தெரிவிக்கின்றதே என செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், ஐரோப்பிய ஆணைக் குழு போன்ற பிரசித்திபெற்ற அமைப்புக்கள் நியாயமான தேர்தல் என குறிப்பிடும் போது சில அமைப்புக்கள் சில சக்தி களுக்கு சார்பாக அதற்கெதிரான கூற்றுக்களைத் தெரிவிப்பதை நாம் பெரிதுபடுத்த முடி யாது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் 150 ஆசனங்களைப் பெற்று அரசியலமைப்பில் மாற்றம் கொண்டு வந்து நல்லாட்சி யொன்றை அமைக்க முற்படும் அரசாங் கத்துக்கு மக்கள் பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டுமெனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...
2004ம் ஆண்டு பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கு 56சதவீத பெண்கள் தகுதிபெற்றிருந்தனர்.


2004ம் ஆண்டு பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கு 56சதவீத பெண்கள் தகுதிபெற்றிருந்தனர். எனினும் அந்தத் தேர்தலில் 6.6சதவீதமான பெண்களே போட்டியிட்டிருந்தனர் என பெண்கள் மற்றும் ஊடகத் தகவல்மையம் தெரிவித்துள்ளது. இலங்கையின் பெண்களின் சனத்தொகை 52சத வீதமாக உள்ளபோதிலும் 225நாடாளுமன்ற உறுப்பினர்களில் 11ஆசனங்களே பெண்களுக்கு கிடைத்ததாகவும் தகவல்மையம் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் பெண்களுக்கு எதிர்வரும் பொதுத்தேர்தலில் 30சதவீத வேட்பாளர் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டுமென்று பெண்கள் மற்றும் ஊடகத் தகவல் மையம் கோரிக்கை விடுத்துள்ளது.

 

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தபால்மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்கள் நேற்று முதல் ஏற்கப்படுவதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2008ம் ஆண்டைய வாக்காளர் இடாப்பில் பதியப்பட்டுள்ள அரச ஊழியர்களுக்கே இம்முறை தேர்தலில் தபால்மூலம் வாக்களிப்பதற்கு விண்ணப்பம்செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது. இம்முறை தேர்தலில் கூடுதலான அரசாங்க ஊழியர்களை தேர்தல் கடமையில் ஈடுபடுத்த தேர்தல் திணைக்களம் முடிவுசெய்துள்ளது. இதன்படி 2008ம் ஆண்டின் வாக்காளர் இடாப்பு சகல அரச நிறுவனங்களிலும் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. தபால்மூலம் வாக்களிக்க 22ம் திகதிவரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

எம்.கே. சிவாஜிலிங்கம் மற்றும் சிறீகாந்தா ஆகிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
 

எம்.கே. சிவாஜிலிங்கம் மற்றும் சிறீகாந்தா ஆகிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் கட்சியிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கட்சி கொள்கைகளுக்கு முரணானவகையில் தனித்து சுயாதீனமாக சிவாஜிலிங்கம் தேர்தலில் போட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கட்சி கோட்பாடுகளுக்கு முரண்பட்ட வகையில் செயற்பட்ட காரணத்தினால் குறித்த இரண்டு பேரையும் விலக்குவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. குறித்த இருவரும் இடதுசாரி விடுதலை முன்னணி கடசியில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையிலிருந்து குழந்தையொன்றை கடத்திச் செல்வதற்கு முற்பட்டமைக்காக மூவருக்கு நெதர்லாந்தில் சிறைத்தண்டனை
 

இலங்கையிலிருந்து குழந்தையொன்றை கடத்திச் செல்வதற்கு முற்பட்டமைக்காக மூவருக்கு நெதர்லாந்தில் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் போலி ஆவணங்களைத் தயாரித்து இக்குழந்தையை கடத்திவர முற்பட்டதாக சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். இதில் முக்கிய பிரதிவாதியான பெண்ணுக்கு 189நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மற்றுமொருவருக்கு 134நாள் சிறைத்தண்டனையும், மேற்படி இருவருக்கும் போலி ஆவணங்களை தயாரித்து வழங்கிய இன்னொருவருக்கு 06நாள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் வேண்டுகோளின்பேரில் மாத்தறை மக்களுக்கு சேவையாற்ற அரசியலில் காலடி 

ஜனாதிபதியின் வேண்டுகோளின்பேரில் மாத்தறை மக்களுக்கு சேவையாற்ற அரசியலில் காலடி எடுத்துவைத்ததாக இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்டவீரர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் மாத்தறை மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் சனத் ஜயசூரிய மாத்தறையில் பிரசித்திபெற்ற மகாபோதி விகாரையில் இன்று முற்பகல் மதவழிபாடுகளில் ஈடுபட்டார். அதன் பின்னர் கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்தாது மாத்தறை மக்களின் நன்மைக்காக பாடுபடுவேன். நாட்டுக்காக விளையாடுவதிலும் சேவை செய்வதிலும் மகிழ்வடைகிறேன் என அங்கு மேலும் குறிப்பிட்டுள்ளார். சனத் ஜயசூரியவை பெருமளவிலான மக்கள் திரண்டு வரவேற்றதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் கைதுசெய்யப்பட்டு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்த ஜெனரல் சரத் 

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் கைதுசெய்யப்பட்டு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்த ஜெனரல் சரத் பொன்சேகாவின் பாதுகாவலர்கள் 11பேர் உள்ளிட்ட 14 பேர் கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தால் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர். விடுதலை செய்யப்பட்டோரில் ஜெனரல் சரத் பொன்சேகாவின் களுத்துறை மாவட்ட தேர்தல் கண்காணிப்புப் பணிகளுக்குப் பொறுப்பான அதிகாரி ஒருவரும் சிவிலியன்கள் இருவரும் அடங்குவர். குற்றப்புலனாய்புப் பிரிவினரால் பெறப்பட்ட வாக்குமூலங்களில் எதுவித குற்றங்களும் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் பிணைகளிலன்றி முழுமையான விடுதலைக்கு உத்தரவிடுவதாகவும் நீதவான் சம்பா ஜானகி அறிவித்துள்ளார்.


வடபகுதியில் நிலக்கண்ணி வெடிகள், மிதிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் 

வடபகுதியில் நிலக்கண்ணி வெடிகள், மிதிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் நோக்குடன் அவுஸ்திரேலியா அரசு சுமார் 250மில்லியன் ரூபா பெறுமதியான மிதிவெடிகளை அகற்றும் 5தன்னியக்க இயந்திரங்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளது. ஸ்லோவேக்கியா நாட்டுத் தயாரிப்பான பொஸேனா 4ரக ஐந்து இயந்திரங்களும் நேற்று தேசநிர்மாண அமைச்சின் செயலாளரிடம் அவுஸ்திரேலியா தூதுவர் கையளித்துள்ளார். கொழும்பு காலிமுகத் திடலுக்கு முன்னால் அமைந்துள்ள அமரர் பண்டாரநாயக்கவின் உருவச்சிலைக்கருகே கையளிப்பு வைபவம் நடைபெற்றது. மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க, ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி நீல் பூனே உட்பட. ஐ.நா.வின் நிலக்கண்ணி வெடிகள் அகற்றும் மனிதாபிமான அமைப்பின் பிரதிநிதிகள் உட்பட, அவுஸ்திரேலிய தூதரகத்தின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.


ஜெனரல் சரத்பொன்சேகாவை விடுதலை செய்யக்கோரி நாடு முழுவதிலும் 10லட்சம் கையெழுத்துக்களைத் திரட்டும் நடவடிக்கை 

ஜெனரல் சரத்பொன்சேகாவை விடுதலை செய்யக்கோரி நாடு முழுவதிலும் 10லட்சம் கையெழுத்துக்களைத் திரட்டும் நடவடிக்கை இன்று ஆரம்பமானது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்வின் தலைமையில் இந்நிகழ்வு கேம்பிட்ஜ் ரெரஸில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி. , சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி, சிறீலங்கா சுதந்திரக்கட்சி மக்கள்பிரிவு, இடதுசாரி முன்னணி, ஐக்கிய சோஷலிசக் கட்சி, புதிய சிஹல உறுமய, மற்றும் பெருந்தோட்டத் துறையை பிரதிநிதித்துவப்படுத்துகிற தொழிற்சங்கங்கள், புத்திஜீவிகள் அமைப்பு, ஜனநாயகக் குழுக்கள் ஆகிய அமைப்புகள் ஊடாக இந்த கையெழுத்து திரட்டும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.


கிளிநொச்சியிலிருந்து மாங்குளம் மற்றும் ஒட்டிசுட்டான் ஆகிய  

கிளிநொச்சியிலிருந்து மாங்குளம் மற்றும் ஒட்டிசுட்டான் ஆகிய நகரங்களுக்கிடையிலான பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த பஸ்சேவைகள் நாளை மறுதினம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி வவுனியாவிலிருந்து மாங்குளம் ஊடாக ஒட்டிசுட்டானுக்கு இரண்டு பஸ் வண்டிகளும், கிளிநொச்சியிலிருந்து மாங்குளம் ஊடக ஒட்டிசுட்டானுக்கு இரு பஸ் வண்டிகளும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. மேலும் இந்த நகரங்களுக்கிடையிலான போக்குவரத்துச் சேவையில் வவுனியா போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் வண்டிகளே ஈடுபடவுள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

 
பொதுத் தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் 9 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 7லட்சத்து 21ஆயிரத்து 359பேர் 11 தொகுதிகளில் வாக்களிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...