16 பிப்ரவரி, 2011

டான்தமிழ்ஒளி தொலைக்காட்சியின் புதிய அலைவரிசை(11938)27500.H









தொழில்நுட்ப காரணங்களால் தற்காலிகமாக ஐரோப்பிய நாடுகளில் இடைநிறுத்தப்பட்டிருந்த டான் தமிழ்ஒளி தொலைக்காட்சி நேற்று முதல் டான் யாழ் ஒளி என்ற பெயரில்(10.02.2011) புதுப்பொலிவுடன் மீண்டும் ஒளிபரப்பாகின்றது
யாழ்ப்பாணத்திலிருந்து மேலும் பல புதிய நிகழ்ச்சிகளுடன் டான் யாழ். ஓளி என்ற புதிய பெயரில் தற்போது ஒளிபரப்பாகி வருகின்றது.
டான்யாழ் ஒளி தொலைக்காட்சியின் அலைவரிசை விபரங்கள்
Eurobird-9 (9˚ East)
FREQUENCY : 11938 H
S/R : 27500, FEC : ¾
Name: Yaarl Oli
மேலும் இங்கே தொடர்க...

புலிகளே கப்பலில் ஆட்களை கடத்துவதில் ஈடுபடுகின்றனர்



புலிகள் போரில் தோற்றதன் பின்னர் கப்பலில் ஆட்களைக் கடத்துவதைப் பிரதானமான தொழிலாகக் கொண்டுள்ளதாகவும் கனடாவிலுள்ளவர்களுக்கும் இந்நடவடிக்கையில் தொடர்புண்டு எனத்தான் நம்புவதாகவும் கனடிய குடிவரவு அமைச்சர் ஜேசன் கென்னி "நசனல்போஸ்ற்' என்ற பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இந்தக் கப்பல் ஆட்கடத்தல் நடவடிக்கையில் ஆகக்குறைந்தது நான்கு பரிமாற்று இடங்கள் இருந்திருக்கலாம் என்றும் இலங்கையின் வடக்கிற்கு ஆயுதக் கடத்தலை மேற்கொள்ளவென வடிவமைக்கப்பட்ட அனுபவம் பெற்ற இந்தக் கடத்தல் வழிகளால் இப்போது அவர்கள் ஆட்களைக் கடத்துகிறார்கள் என்று தெரிவித்த அமைச்சர், கனடாவிலுள்ளவர்களின் துணையுடனே இக்கடத்தல் நடைபெறுகிறது என்பதை அனுமானிப்பதற்கான சான்றுகள் இருப்பதாகவும் இந்தக் கடத்தல்காரர்கள் மேற்படி பயணிகள் ஒவ்வொருவரும் பயண முடிவில் கொடுக்க வேண்டிய மீதத் தொகை யான 40ஆயிரம் டொலர்களை கனடாவில் வசூலிப்பதற்கு உரியவர்கள் கனடாவில் இருக்க வேண்டுமென்றும் கூறியுள்ளார்.

இறுதியாக வந்த "சண் சீ' கப்பலில் குறிப்பிடக்கூடியளவு தொகையினர் பயங்கரவாத சட்டவிரோத நடவடிக்கைகளில் தொடர்புடையவர்கள் என்றும் கனடாவின் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிப்பவர்கள் என்றும் மேற்படிஅமைச்சர் தெரிவித் துள்ளார்.

கனடியப் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற போதும் இன்னமும் இக்கப்பல் விவகாரம் தொடர்பாக யாரையும் கைது செய்யவில்லை. அதேவேளை, இக்கப்பல் விவகாரத்தில் தொடர்புடையவர்கள் என்று கருதப்படும் இருவரை மேற்படி பத்திரிகை தொடர்பு கொண்ட போதும் அவர்கள் தங்களது விசாரணைகள் சம்பந்தமான விடயங்களை பகிர விரும்பவில்øலை. இதேவேளை இவ் அகதிகளை தடுத்து வைத்துப் பராமரிப்பதற்கென இதுவரை 18 மில்லியன் கனடிய டொலர்களை கனடிய அரசாங்கம் செலவு செய்துள்ளது எனவும் தற்போது 107 பேர் தொடர்ந்தும் தடுப்புக்காவலில் உள்ளதாகவும் தெரிய வருகிறது.
மேலும் இங்கே தொடர்க...

வடக்கில் மீண்டும் இனவாதத்தை பரப்புவதற்கு தீவிர முயற்சி






வடக்கில் மீண்டும் இனவாதத்தை பரப்பும் முயற்சிகள் இடம்பெறுகின்றன. அவ்வாறான முயற்சிகளை நாங்கள் நிராகரிக்கி ன்றோம். எனவே, இவ்விடயங்கள் குறித்து முக்கியமக்ஷிக தமிழ் ஊடகங்கள் கவனம் செலு த்தவேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும் அமைச்சருகைன டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள மாகவலி கேந்திர நிலையத்தில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இந்த விடயங்களை கூறினார்.

அவர் அங்கு மேலும் கூறியதாவது: 30 வருடங்களின் பின்னர் வடக்கு கிழக்கில் ஜனநாயகம் மலர்ந்துள்ளது. ஜனநாயக ரீதியில் தேர்தல்கள் நடைபெறுகின்றன. ஜனநாயக ரீதியில் உள்ளூராட்சிமன்றங்களுக்கு மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் வடக்கில் மீண்டும் இனவாதத்தை பரப்பும் வகையில் தீவிர முயற்சிகள் இடம்பெறுவதாக தெரிகின்றது. இது தொடர்பில் ஊடகங்கள் கவனம் செலுத்தவேண்டும். முக்கியமாக தமிழ் ஊடகங்கள் இது விடயத்தில் சிந்தித்து செயற்படவேண்டும். அவ்வாறான முயற்சிகளை நிராகரிக்கவேண்டும். வடக்கில் மீண்டும் இனவாதத்தை பரப்பும் முயற்சிகளை நாங்கள் நிராகரிக்கின்றோம். இந்த தேர்தல் ஏன் தீர்க்கமானது என்பதனை நாம் புரிந்துகொள்ளவேண்டும். அதாவது இலங்கை அரசியல் மிகவும் ஸ்திரமானது என்பததற்கான மக்களின் சான்றிதழை சர்வதேசத்துக்கும் காட்டும் தேர்தலாகவே இந்த தேர்தல் அமைந்துள்ளது. மக்களின் சான்றிதழ் இந்த தேர்தல் மூலம் எமக்கு கிடைக்கும்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் செயற்பாட்டில் மீண்டும் எதிர்க்கட்சித் தலைவர்


பொதுநலவாய நாடுகளின் ஆசிய வலய மாநாட்டில் கலந்துகொண்ட எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க இலங்கை தொடர்பில் தவறான கூற்றை வெளியிட்டுள்ளார். அவர் வழமைபோன்று மீண்டும் இந்த செயற்பாட்டை ஆரம்பித்துள்ளமை தொடர்பில் நாங்கள் கவலையடைகின்றோம். யுத்தகாலத்தில் இலங்கை அரசாங்கத்தையும் இராணுவத்தையும் அசௌகரியப்படுத்தும் நோக்கில் மேற்கு நாடுகளில் எதிர்க்கட்சி தலைவர் தவறான பிரசாரங்களை மேற்கொண்டுவந்தார். அதனை மீண்டும் அவர் செய்து வருகின்றார் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

கடவுளின் சாபக்கேட்டினாலேயே நாட்டில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. ஆனால் ஐக்கிய தேசிய கட்சிக்கே தற்போது கடவுளின் சாபக்கேடு ஏற்பட்டுள்ளது. கட்சியின் ஆதரவாளனுக்கு யார் தலைவர் என்றே தெரியாத நிலைமை காணப்படுகின்றது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

கொழும்பில் அமைந்துள்ள மாகவலி கேந்திர நிலையத்தில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இந்த விடயங்களை கூறினார்.

அவர் அங்கு மேலும் கூறியதாவது: பொதுநலவாய நாடுகளின் ஆசிய வலய மாநாட்டில் கலந்துகொண்ட எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க இலங்கை தொடர்பில் தவறான கூற்றை வெளியிட்டுள்ளார். அது தொடர்பில் நாங்கள் கவலையடைகின்றோம். அவர் கடந்த காலங்களிலும் பல தடவைகள் இலங்கை அரசாங்கம் மற்றும் இராணுவம் தொடர்பில் தவறான பிரசாரங்களை மேற்கு நாடுகளில் மேற்கொண்டுவந்தார். வழமைபோன்று அதே விடயத்தை மீண்டும் ஆரம்பித்துள்ளார். நாட்டின் உள்விவகாரங்கள் தொடர்பில் தவறான விடயங்களை கூறிவந்தார்.

யுத்தகாலத்திலும் இலங்கை அரசாங்கத்தையும் இராணுவத்தையும் அசௌகரிப்படுத்தும் நோக்கில் மேற்கு நாடுகளில் எதிர்க்கட்சி தலைவர் தவறான பிரசாரங்களை மேற்கொண்டுவந்தார். மீண்டும் இந்த செயற்பாட்டை ரணில் விக்ரமசிங்க ஆரம்பித்துள்ளார். அமெரிக்காவுக்கும் சென்று அக்காலத்தில் இலங்கை தொடர்பாக தவறான பிரசாரங்களில் ஈடுபட்டுவந்தார். தற்போது பொதுநலவாய மாநாட்டில் மீண்டும் ஒரு முறை தவறான பிரசாரத்தை செய்துள்ளார்.

கடவுளின் சாபத்தினாலேயே நாட்டில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி கூறியுள்ளது. ஆனால் கடவுளின் சாபம் ஐக்கிய தேசிய கட்சிக்கே ஏற்பட்டுள்ளது. சஜித் பிரேமதாசவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு அக்கட்சியின் ரவி கருணாநாயக்கவே கோரிக்கை விடுத்துள்ளார். யார் தலைவர் என்று கட்சியின் ஆதரவாளருக்கே தெரியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் கட்சிக்குள் எந்தளவு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன என்பது தெளிவாகின்றது. எமது ஆளும் கட்சியில் எவ்விதமான நெருக்கடியும் பிரச்சினையும் இல்லை. நாங்கள் மிகவும் சிறப்பாக தேர்தலுக்கு தயாராகிவருகின்றோம்.
மேலும் இங்கே தொடர்க...

200 அடி பள்ளத்தில் பாய்ந்து பஸ் விபத்து பெண்ணொருவர் பலி; 25 பேர் படுகாயம்

தனியார் பஸ்ஸொன்று பாதையை விட்டு விலகி சுமார் இருநூறு அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் இருபத்தைந்து பேர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்துச்சம்பவம் நேற்று காலை 11 மணியளவில் கொத்மலை காச்சாமலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

புசல்லாவையிலிருந்து பெரட்டாசி நோக்கி சென்ற தனியார் பஸ் வண்டியே இதன்போது விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் எஸ்.ஆரோக்கியமேரி (வயது 61) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார். காயமடைந்த ஏனைய இருபத்தைந்து பேர் சிகிச்சைக்காக புசல்லாவை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் சாரதி உட்பட நால்வரின் நிலை கவலைக்கிடமாக இருந்ததையடுத்து அந்நால்வரும் மேலதிக சிகிச்சைகளுக்காக கம்பளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் ஆறு முன்பள்ளிச்சிறுவர்கள், வியாபாரிகள், வன இலாகா அதிகாரிகள் எனப்பலரும் அடங்குவதாக தெரிவிக்கும் புசல்லாவை பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இதேவேளை, காயமடைந்தவர்களை மத்திய மாகாண சபை உறுப்பினர் எம்.ரமேஷ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உதவிச்செயலாளர் எம்.எஸ்.எஸ்.செல்லமுத்து ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

மேலும், இந்த தனியார் பஸ் விபத்து ஏற்படுவதற்கு பாதை சீர்கேடே பிரதான காரணம் என பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். புசல்லாவை பெரட்டாசி பாதை நீண்ட காலமாக புனரமைக்கப்படாத நிலையில் உள்ளதோடு, இந்த பாதை சீர்கேட்டை காரணம் காட்டி இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி இப்பாதையில் அண்மைக்காலங்களில் மட்டும் ஏற்பட்ட விபத்துக்களில் சுமார் ஏழு பேர் வரை உயிரிழந்துள்ளதோடு, பாதையை சீர் செய்து தருமாறு கோரி பல்வேறு ஆர்ப்பாட்டங்கள், வேலைநிறுத்தங்கள் இப்பகுதி மக்களால் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பு





வெள்ளத்தால் தொழில் வாய்ப்பு இழந்தவர் ஒருவர்இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் "பணத்திற்காக வேலை" என்ற வேலைவாய்ப்பு நிகழ்ச்சித் திட்டமொன்றை அனர்த்த முகாமைத்துவ அமைச்சு ஆரம்பித்துள்ளது.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தமது வாழ்வாதாரங்களை இழந்துள்ள குடும்பங்களுக்கு வருமானத்தைப் பெற்றுக் கொடுப்பதும், பாதிக்கப்பட்ட பிரதேசங்களை புனரமைப்பு செய்வதையும் நோக்கமாகக் கொண்டதாக இத்திட்டம் அமல்படுத்தப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிக்கையொன்று கூறுகின்றது.

இத்திட்டத்தின் கீழ் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள குடும்பமொன்றைச் சேர்ந்த ஒருவருக்கு நாளொன்றிற்கு ரூ.500 என்ற அடிப்படையில் தொழில் வாயப்பு வழங்கப்படுகின்றது.

ஆரம்பத்தில் இரண்டு மாத காலத்திற்கு இத்திட்டம் அமல்படுத்தப்படுவதாக தெரிகிறது.

வெள்ளம் மற்றும் மண்சரிவுகளினால் சேதமடைந்த உள்-வீதிகள், கால்வாய்கள் மற்றும் குளங்கள் போன்றவற்றின் புனரமைப்பு பணிகளில் இவர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இத்திட்டத்தின் மூலம் சுமார் 25 ஆயிரம் குடும்பங்கள் பயன்பெறுவதாக கூறும் அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தமது வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்ப இத்திட்டம் உறுதுணையாக அமையும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

புலிகளின் விடுதலைக்கு பரிந்துரை '676 விடுதலைப்புலிகளின் விடுதலைக்கு பரிந்துரை'



பூசா மற்றும் ஓமந்தை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் 676 பேர் விடுதலை செய்யப்படலாம் என்று சட்ட மா அதிபர் பரிந்துரைத்துள்ளதாக இலங்கை படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் ஊடக ஆலோசகர் லக்ஷமன் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதியினால் ஏற்படுத்தப்பட்ட பல்துறை நடவடிக்கைகளுக்கான ஆலோசனைகுழுவினால், ''தடுத்து வைக்கப்பட்டுள்ள 676 விடுதலைப்புலிகளை'' விடுதலை செய்வதற்காக சிபாரிசு செய்யப்பட்டுள்ளதாக லக்ஷ்மன் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை விரைவு படுத்த வேண்டும் என்ற நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு ஏற்ப இந்த நடவடைக்கை எடுக்கப்பட்டது.

இது குறித்து பிபிசி சந்தேசியவிடம் பேசிய அவர், நல்லிணக்க ஆணைக்குழு வடக்கு, கிழக்கில் தனது விசாரணைகளை நடத்திய போது, அங்கு சாட்சியமளித்த ''தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்களின் பெற்றோர்கள்'', தமது பிள்ளைகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு கேட்டிருந்தனர் என்றும் அதற்கமைய தாம் சட்ட நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட வேண்டும் என்று இலங்கை ஜனாதிபதிக்கு இடைக்கால பரிந்துரை ஒன்றை செய்துள்ளதாகவும் கூறினார்.

அந்த இடைக்கால பரிந்துரையின் அடிப்படையில் ஒரு பல்துறை நடவடிக்கைகளுக்கான ஆலோசனைக்குழு ஒன்றை ஜனாதிபதி அமைத்தார். அதற்கு தலைவராக சட்ட மா அதிபர் நியமிக்கப்பட்டார்.

அத்துடன் இந்த விடுதலைப் புலிகளின் ஒவ்வொருவரது விடயத்தையும் தனியாக ஆராய சட்ட மா அதிபர் திணைக்களத்துக்குள் சிறப்புக்குழு ஒன்றை சட்ட மா அதிபர் ஏற்படுத்தினார்.

தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 676 பேரை நேரடியாகவோ அல்லது புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு பின்போ விடுதலை செய்ய சிபாரிசு செய்வது என்று அந்த குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் சட்ட மா அதிபர் தற்போது முடிவெடுத்துள்ளார். இவர்களில் பூசா முகாமில் இருந்து 251 பேரும், ஓமந்தையில் இருந்து 425 பேரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று கூறினார் லக்ஷ்மன் விக்கிரமசிங்க.

அதேவேளை மே மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னதாக நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி பரிந்துரைகள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

பெப்ரவரி 18, 19 ஆகிய திகதிகளில் ஆணைக்குழு காலியிலும், மாத்தளையிலும் சாட்சியங்களை பதிவு செய்யும். ஏற்கனவே பின்போடப்பட்ட அம்பாறை விசாரணைகள் மார்ச் மாத இறுதியில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குற்ரிப்பிட்டார்.

வடக்கு கிழக்கை பொறுத்தவரை 5008 எழுத்துமூலமான சாட்சியங்களும், சுமார் 500 வாய் மூல சாட்சியங்களையும் தாங்கள் பதிவு செய்துள்ளதாகவும், கொழும்பு பதிவுகள் குறித்து புள்ளிவிபரங்களை நாங்கள் ஆராய்ந்து வருவதாகவும் லக்ஷ்மன் விக்கிரமசிங்க கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

டான்தமிழ்ஒளி தொலைக்காட்சியின் புதிய அலைவரிசை(11938)27500.H








தொழில்நுட்ப காரணங்களால் தற்காலிகமாக ஐரோப்பிய நாடுகளில் இடைநிறுத்தப்பட்டிருந்த டான் தமிழ்ஒளி தொலைக்காட்சி நேற்று முதல் டான் யாழ் ஒளி என்ற பெயரில்(10.02.2011) புதுப்பொலிவுடன் மீண்டும் ஒளிபரப்பாகின்றது
யாழ்ப்பாணத்திலிருந்து மேலும் பல புதிய நிகழ்ச்சிகளுடன் டான் யாழ். ஓளி என்ற புதிய பெயரில் தற்போது ஒளிபரப்பாகி வருகின்றது.
டான்யாழ் ஒளி தொலைக்காட்சியின் அலைவரிசை விபரங்கள்
Eurobird-9 (9˚ East)
FREQUENCY : 11938 H
S/R : 27500, FEC : ¾
Name: Yaarl Oli
மேலும் இங்கே தொடர்க...

அரச ஊழியர் சம்பள முரண்பாட்டுக்கு உடனடி தீர்வுகாண ஜனாதிபதி பணிப்பு




திடீர் அனர்த்தக் கடன் மீள அறவிடும் காலத்தை 24 மாதங்களாக அதிகரிக்கவும் தீர்மானம்அரசாங்க ஊழியர்களின் சம்பள முரண்பாட்டைத் துரிதமாகத் தீர்த்துவைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

தொழிற்சங்கங்கள் முன்வைத்த கோரிக்கைகளின் அடிப்படையிலேயே ஜனாதிபதி மேற்படி பணிப்புரையை வழங்கியுள்ளார்.

அத்துடன் அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள திடீர் அனர்த்த கடன்களை மீள அறவிடும் காலத்தை 24 மாதங்களாக அதிகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் தொழிற் சங்கத் தலைவர்களுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அனர்த்த கடன்களை அறவிடும் காலம் இதுவரை 10 மாதங்களாக இருந்த போதும் அதனை 24 மாதங்களாக அதிகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் சங்கத்தினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தையொன்று நேற்று முன்தினம் அலரிமாளிகையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அமைச்சர்கள் பஷில் ராஜபக்ஷ, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, காமினி லொகுகே, கீதாஞ்சன குணவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, மேல்மாகாண ஆளுநரும் தொழிற்சங்கத் தலைவருமான அலவி மெளலானா உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

அரச ஊழியர்களின் பதவியுயர்வுகள் சம்பந்தமாக இப்பேச்சுவார்த்தையின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன் அரச ஊழியர்கள் முகங்கொடுக்கும் அரச மொழிக்கொள்கை பிரச்சினைகள் பற்றியும் ஆராயப்பட்டது.

முறையான பயிற்சி செயற்றிட்டங்கள் மூலம் இதற்குத் தீர்வு காணப்படுவதற்கான வழி காட்டுதல்களை இதன் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளார்.

சுகாதாரத்துறையில் நிலவும் நெருக்கடிகள் தொடர்பாக இங்கு கலந்துரையாடப்பட்டு ள்ளது. இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள் மக்களுக்கு மிக முக்கியமான சுகாதார சேவை தடைப்பட இடமளிக்க முடியாது. சுகாதாரத் துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வு காணப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட தொழில் சங்கத்தினருடன் கலந்துரையாடிய ஜனாதிபதி அவர்களுடைய கருத்துக்களையும் பெற்றுக்கொண்டுள்ளார். இதன்போது கருத்துத் தெரிவித்த தொழிற் கல்வித் தலைவர்கள் மக்களின் மேம்பாட்டிற்கான திட்டமான மஹிந்த சிந்தனை கருத்திட்டத்திற்கு உச்ச அளவில் பங்களிப்பினை வழங்கப் போவதாகவும் ஜனாதிபதி அவர்களிடம் உறுதியளித்தனர்
மேலும் இங்கே தொடர்க...

வெள்ளப்பெருக்கு, மண்சரிவால் சேதமுற்ற பிரதேசங்களை மீளக்கட்டியெழுப்ப அனைவரும் பங்களிப்பு செய்ய வேண்டும்




தேர்தலை நோக்காகக் கொண்டு செயற்படவேண்டாமெனவும் ஜனாதிபதி வேண்டுகோள்வெள்ளப் பெருக்கு மற்றும் மண்சரிவு காரணமாக சேதத்திற்குள்ளான பிரதேசங்களை மீளக் கட்டியெழுப்புவதற்கு அரசியல் பிரதிநிதிகள் உட்பட அனைவரும் பங்களிப்பு செய்ய வேண்டும். முக்கியமாக அரச அதிகாரிகள் இதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

இந்த செயற்பாட்டின்போது எந்த விதத்திலும் தேர்தலை நோக்காகக் கொண்டு செயற்படக் கூடாதெனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கேட்டுக்கொண்டார்.

தற்காலிக தீர்வுகளுக்குப் பதிலாக திட்டமிட்டு நீண்டகால வேலைத் திட்டமொன்றுடன் இதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஜனாதிபதி அவர்கள் மேலும் சுட்டிக்காட்டினார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குதல் மற்றும் சேதத்திற்குள்ளான பிரதேசங்களை மீள கட்டியெழுப்புதல் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் முதல் கூட்டம் நேற்று (15) அலரி மாளிகையில் ஜனாதிபதி அவர்கள் தலைமையில் கூடியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

துரிதமாக மேற்கொள்ள வேண்டிய பணிகளை நேரடியாக மாவட்டச் செயலாளர்களின் கண்காணிப்பு மற்றும் தலையீட்டின் கீழ் உடனடியாக மேற்கொள்ள வேண்டுமெனவும், மறுசீரமைப்புப் பணிகளை அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் என்பவற்றுடன் இணைந்து மேற்கொள்ள வேண்டுமெனவும் ஜனாதிபதி அவர்கள் இதன்போது வலியுறுத்தினார்.

எதிர்வரும் போகத்தில் பயிரிடக் கூடியவாறு முன்னுரிமை அளித்து குளங்கள் வாய்க்கால்கள் என்பன துரிதமாக திருத்தம் செய்யப்பட வேண்டுமெனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டது. விளை நிலங்களை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்காக பாதுகாப்புப் படையினரதும் பொதுமக்களதும் பங்களிப்பினைப் பெற்றுக்கொள்வதற்கும் அதற்கு உபகாரமாக நிதி அன்பளிப்பு, பொருள் அன்பளிப்பு மற்றும் உலர் உணவு மானிய முறைமையொன்று என்பவற்றினை அறிமுகம் செய்வதற்கும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

மண்சரிவினால் சேதத்திற்குள்ளான வீடுகளை புனரமைப்பது தொடர்பாகவும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. பாடசாலைகள், மருத்துவமனைகள் மற்றும் அரச கட்டடங்களின் புனரமைப்புப் பணிகள் தொடர்பாகவும் கூடிய கவனம் செலுத்தப்பட்டது.

முழுமையாக சேதத்திற்குள்ளான வயல் நிலங்களுக்கு அடுத்த போகத்தில் இலவசமாக விதை நெல், உரவகைகள் பெற்றுக்கொடுப்பது தொடர்பாகவும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

அமைச்சர்கள், சேதத்திற்குள்ளான பிரதேசங்களைச் சேர்ந்த முதலமைச்சர்கள், ஜனாதிபதியின் செயலாளர் உள்ளிட்ட அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், குறித்த பிரதேசங்களுக்கான மாவட்ட செயலாளர்கள் உட்பட அரச அதிகாரிகள் பலரும் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

பருத்தித்துறை கடற்பரப்பில் 112 இந்திய மீனவர்கள் கைது






யாழ். பருத்தித்துறைக் கடற்பரப்பில் அத்துமீறி இழுவைப் படகுகள் மூலம் மீன்பிடித்துக் கொண்டிருந்த 112 இந்திய மீனவர்கள் இலங்கை மீனவர்களால் சுற்றிவளைக்கப்பட்டு கரைக்கு கொண்டுவரப்பட்டனர். அவர்களது 18 இழுவைப் படகுகளையும் இழுத்து வந்துள்ளனர்.

இச் சம்பவம் நேற்றுப் பிற்பகல் 3 மணியளவில் பருத்தித்துறைமுனைக் கடற்பரப்பில் இடம்பெற்றுள்ளது.

இந்திய மீனவர்கள் கடந்த சில நாட்களாக இலங்கைப் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து இழுவைப் படகுகள் மூலம் மீன்பிடிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இழுவைப் படகுகள் மூலம் மீன்பிடிப்பதால் இலங்கை மீனவர்களின் வலைகள், மீன்பிடி உபகரணங்கள் சேதமாக்கப்பட்டு, மீனவர்களுக்குப் பெரும் நஷ்டம் ஏற்பட்டிருந்தது. இது தொடர்பாக இந்திய மீனவர்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நேற்றுப் பிற்பகல் பருத்தித்துறைமுனை மீனவர்கள் இணைந்து அத்துமீறி மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் 112 பேரையும் சுற்றிவளைத்துப் பிடித்து கரைக்கு அழைத்து வந்தனர். இவ்வாறு கரைக்குக் கொண்டுவரப்பட்டவர்கள் இந்தியாவின் நாகப்பட்டினம் மற்றும் வேதாரணியம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.

இவ்வாறு அழைத்துவரப்பட்ட இந்திய மீனவர்கள் பருத்தித்துறைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். பருத்தித்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி லலித் புஸ்ஸல்லகே தலைமையிலான குழுவினர் குறிப்பிட்ட பகுதிக்கு விஜயம் செய்து இந்திய மீனவர்களை கைது செய்து பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

இதேநேரம், காரைநகர், மாதகல் கடற் பரப்பில் மீன்பிடியில் ஈடுபடும் இலங்கை மீனவர்களின் வலைகள் அறுத்து சேதமாக்கப்படுவதாக யாழ். மீனவர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாஜத் தலைவர் எஸ். தவரட்ணம் தினகரனுக்குக் கூறியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

எமது பிரச்சினைகளை எம்மால் தீர்க்க முடியும் வெளிநாடுகளில் தவறான பிரசாரம் மேற்கொள்வது நல்லதல்ல

‘எமது நாட்டுப் பிரச்சினை களை எம்மால் தீர்க்க முடியும் என்பது நிரூபணமா கியுள்ள நிலையில் அவற்றை வைத்து வெளிநாடுகளில் தவறான பிரசாரங்களை மேற்கொள்வது எந்த விதத்தி லும் நல்லதல்ல என இல ங்கை தொழிலாளர் காங்கி ரஸின் தலைவரும் பிரதிய மைச்சருமான முத்து சிவலிங்கம் தெரிவித்தார். நாட்டில் அமைதியற்ற யுகமொன்றிருந்தது.

தற்போது அந்த யுகம் மாற்றமடைந்து பூரண அமைதி நிலவுகின்றது. இத்தகைய தருணத்தில் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்த முயல்வது சிறந்ததல்ல எனவும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.

முப்பது வருடகால நெருக்கடியான சூழல் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டு நாட்டில் அமைதி நிலவுகிற காலகட்டம் இது. நாடு அபிவிருத்தியில் முன்னேற்ற மடைந்துவரும் இத்தகைய தருணத்தில் நாட்டிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வெளிநாடுகளில் பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறார்.

இது தொடர்பில் கேட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே பிரதியமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:

நமது பிரச்சினைகளை எம்மால் தீர்க்க முடியும் என்பதை ஜனாதிபதியவர்கள் தமது செயற்பாட்டின் மூலம் நிருபித்துக் காட்டியுள்ளார். நாட்டின் அமைதியற்ற சூழலை அமைதிச் சூழலாக மாற்றியமை இதற்கு சிறந்த உதாரணம்.

இத்தகைய அமைதிச் சூழல் நிலவும் வேளையில் அரசியல் நோக்கங்களுக்காக வெளிநாடுகளில் வீண் பிரசாரங்களைச் செய்வதோ பிரச்சினைகளை ஏற்படுத்துவதோ எவராயினும் சரி அதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

நாடு பூராகவும் 40 இலட்சம் தென்னை மரக்கன்றுகள் நட திட்டம்






இந்த வருடத்தில் நாடு பூராவும் 40 இலட்சம் தென்னை மரக்கன்றுகளை நட உள்ளதாக தெங்கு அபிவிருத்தி மற்றும் மக்கள் தோட்ட அபிவிருத்தி அமைச்சர் ஜகத் புஷ்பகுமார நேற்று கூறினார்.

‘திவிநெகும’ திட்டத்தின் கீழ் அடுத்த மாதம் 13 இலட்சம் தென்னை மரக்கன்றுகள் நடப்படவுள்ளதோடு ஒக்டோபர் மாதத்தில் 27 இலட்சம் தென்னை மரக்கன்றுகளும் நட உள்ளதாகவும் அவர் கூறினார்.

‘திவி நெகும’ தேசிய திட்டம் குறித்து விளக்கமளிக்கும் கூட்டம் நேற்று கொழும்பிலுள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்றது.

இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர், 10 இலட்சம் வீட்டு பொருளாதார அபிவிருத்தி அலகுகளை முன்னெடுக்கும் திட்டத்தினூடாக தெங்கு பயிர்ச்செய்கையையும் ஊக்குவிக்க உள்ளோம். ஒவ்வொரு வருடமும் 20 இலட்சம் தென்னை மரங்களை நட வேண்டும் என்ற திட்டம் ஒழுங்காக நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் தேங்காய் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்காது.

ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலும் குறிப்பிட்டளவு தென்னை மரங்களை நட திட்டமிட்டுள்ளோம். இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதன் மூலம் தெங்கு உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்.

2 வருடங்களுக்கு முன்னர் வடக்கு கிழக்கில் தெங்கு பயிரிடப்படவில்லை. ஆனால் வடக்கில் பளை, அச்சுவேலி போன்ற இடங்களில் தெங்கு நாற்று மேடைகள் அமைக்கப்பட்டுள்ளதோடு குச்சவெளி, பாசிக்குடா போன்ற இடங் களிலும் தெங்கு நாற்றுமேடைகள் அமை க்கப்பட்டுள்ளன. வடக்கு கிழக்கில் தெங்கு உற்பத்தியை மேம்படுத்த உள்ளோம்.

தென்னை தட்டுப்பாடு காரணமாக கேரளாவில் இருந்து தேங்காய் இறக்குமதி செய்யப்பட்டதாக குற்றஞ் சாட்டப்பட்டது. ஆனால் ஒரு தேங்காய் கூட நாம் இறக்குமதி செய்யவில்லை என்றார்.

அமைச்சின் செயலாளர் அநுர சிறிவர்தன கூறியதாவது: வீட்டுத் தோட்டங்களிலோ காணிகளிலோ மரம் நடக்கூடிய சகல இடங்களில் மரம் நட திட்டமிட்டுள்ளோம். கடந்த வருடத்தில் தேங்காய் தட்டுப்பாடு ஏற்பட்டது.

கடந்த வருடம் 2700 மில்லியன் தேங்காய் உற்பத்தி எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2317 மில்லியன் தேங்காய்களே உற்பத்தி செய்யப்பட்டன. 400 மில்லியன் குறைவாகவே தேங்காய் பெறப்பட்டது. இந்தத் திட்டத்தினூடாக தெங்குப் பயிர்ச் செய்கைக்கு பாரிய உந்து சக்தி வழங்கப்படும் என்றார். இந்த நிகழ்வில் சிரேஷ்ட அமைச்சர் அதாவுத செனவிரத்ன, அமைச்சர் எஸ். எம். சந்திரசேன உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

வீதியில் நடப்போரை பொலிஸார் கைது செய்வார்கள்விபத்தை தவிர்க்க




பாதசாரிகள் வீதி ஒழுங்குகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டுமென்றும் இல்லையானால் கடுமையான சட்ட நடவடிக்கைகள் அவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படுமென்றும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.

பாதசாரிகள் பாதுகாப்பாக வீதியில் செல்வதற்கு மேல் மாகாணத்தில் உள்ள பெரும்பாலான வீதிகள் இப்போது நடைபாதைகள் அமைக்கப்பட்டி ருப்பதனால் அவர்கள் இனிமேல் வீதிகளில் செல்லும் வாகனங்களுக்கு தடையாக வீதியில் நடந்து சென்றால் அல்லது மஞ்சள் கோட்டைத் தவிர மற்ற இடங்களில் வீதியைக் கடந்தால் பாதசாரிகளுக்கு எதிராக பொலிஸார் கடும் நடவடிக்கையை எடுப்பார்கள்.

இந்த நடைமுறை இம்மாதம் 21ம் திகதி முதல் பொலிஸார் கடுமையாக அமுலாக்கவுள்ளார்கள். பாதசாரிகளே நாட்டில் நடைபெறும் வீதி விபத்துக்களில் சுமார் 50 விகிதத்திற்கு காரணமாக இருக்கிறார்கள் என்று பொலிஸ் திணைக் களம் சேகரித்துள்ள புள்ளி விபரங்கள் மூலம் தெரிவந்துள்ளது.

இவற்றைவிட துவிச்சக்கரவண்டிகளில் செல்பவர்களுள் வீதியோரமாக பயணம் செய்வதற்கு பதில் வீதியின் நடுவில் செல்வதனாலும், திடீரென்று குறுக்குப் பாதைகளில் இருந்து பிரதான பாதையில் நுழைவதனாலும் வீதி விபத்துக்கள் அதிகமாக இடம்பெறுவதாக பொலிஸார் சுட்டிக்காட்டுகின்றார்கள்.

துவிச்சக்கர வண்டிகளில் செல்பவர்கள் ஒரே வரிசையாக சரிசமமாக பிரயாணம் செய்து கொண்டு அரட்டை அடித்துக் கொண்டு செல்வதனா லும் அவர்களுக்கு பின்னால் வரும் வாகனங்கள் தங்கள் வேகத்தைக் குறைக்க முடியாத காரணத்தினால் விபத்துக்கள் ஏற்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இரவில் விளக்குகள் இன்றி செல்லும் துவிச்சக்கரவண்டிகளில் செல்பவர்களுக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை எடுப் பார்கள். இவை பற்றி தகவல் தெரிவித்த மேல் மாகாணத்தில் வாகனப் போக்கு வரத்துக்கு பொறுப்பான உதவிப் பொலிஸ் மா அதிபர் அசோக்கா விஜயதிலக்க இவ்விதம் தற்போது மேல்மாகாணத்தில் பாதசாரிகளுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் விரைவில் நாடெங்கிலும் விஸ்தரிக்கப்படும் என்று கூறினார். இவ்விதம் குற்றமிழைப்பவர்களுக்கு எதிராக நீதிமன்றங்கள் 5000 ரூபாவிற்கு அதிகமாக அபராதத் தொகையை விதிக்குமென்றும் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

ஏனைய மதத்தினருடன் நெருக்கமாக வாழ உறுதிபூணுவோம்






நபிகள் நாயகம் அவர்களின் பிறந்த நாளான இன்றைய தினத்திலே அன்னார் போதித்தவாறு, ஏனைய மதத்தவர்களுடன் நெருக்கமாக பழகி, சகோதரத்துவத்துடனும் அமைதியாகவும் வாழ்வதற்கு நாம் உறுதிபூணுவோம் என்று பிரதமர் டி. எம். ஜயரத்ன விடுத்துள்ள மீலாத் தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இதில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:-இற்றைக்கு ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் அரேபியாவில் பிறந்த முஹம்மத் நபியவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு, இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கும் உலகவாழ் முஸ்லிம் களுக்கும் வாழ்த்துச் செய்தியொன்றினை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

“அல் அமீன்" மற்றும் “அஸ் ஸாதிக்" அதாவது “நம்பிக்கையாளர்" மற்றும் “உண்மையாளர்" போன்ற பெயர்கொண்டு அழைக்கப்பட்ட அன்னார் ஒரு போதும் பொய் சொல்லாத ஒருவராகக் காணப்பட்டதுடன், வியாபாரியாகக் காணப்பட்ட அவர் வியாபாரத்தில் ஒருபோதும் மோசடியில் ஈடுபட்டதில்லை என்பது வரலாற்றின் மூலம் தெளிவாகின்றது.

அத்துடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த நாளான இன்றைய தினத்திலே அன்னார் போதித்த, உண்மைத்தன்மை, நம்பகத்தன்மை, பொறுமை, அடுத்தோர் நலனில் அக்கறை செலுத்துதல், கருணை மற்றும் அன்பு போன்ற நற்பண்புகளுக்கு முக்கியத்துவ மளித்து ஏனைய மதத்தவர்களுடன் நெருக்கமாக பழகி, சகோதரத்துவத்துடனும் அமைதியாகவும் வாழ்வதற்கு மேலும் நாம் உறுதிபூணல் வேண்டும்.

எனவே, அன்னார் போதித்த இஸ்லாம் சமயத்தையும், அவர் வழிகாட்டிய நற்பாதையையும் பின்பற்றி ஒருவருக்கொருவர் சமாதானமாகவும், சகவாழ்வுடனும் வாழ்ந்து செழிப்பானதோர் இலங்கை தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைவோம்
மேலும் இங்கே தொடர்க...