10 நவம்பர், 2009

சரத் பொன்சேகாவின் இராஜிநாமா ஏற்றுக்கொள்ளப்படும்?

தலைமை அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகா தேர்தலில் போட்டியிடுவது குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், சரத் பொன்சேகா இராஜிநாமா கடிதத்தை வழங்கினால் அதற்கான மறுமொழியை துரிதமாக வழங்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிரேஷ்ட அமைச்சர்கள் சிலருடன் கலந்துரையாடும்போது பேசுகையில், தனது உயரதிகாரிகளுக்கு இதுதொடர்பாக அறிவுறுத்தியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மக்கள் நலனுக்காக, தமது சீருடையை அகற்றிக்கொள்வதற்கு தாம் எப்போதும் தயாராக உள்ளதாக ஜெனரல் சரத்பொன்சேகா அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
மேலும் இங்கே தொடர்க...
தமிழ் தேசிய கூட்டமைப்பு-ஜனநாயக தமிழ் தேசிய முன்ணி இன்று சந்திப்பு
தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் ஜனநாயக தமிழ் தேசிய முன்ணிக்குமிடையில் இன்று முதற் தடவையாக கொழும்பில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

புளொட் அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன் , என். ஸ்ரீகாந்தா, பா. அரியநேத்திரன், செல்வம் அடைக்கலநாதன், எம். கே. சிவாஜிலிங்கம் ஆகியோரும் ஜனநாயக தமிழ் தேசிய முன்னனி சார்பில் புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈ. பி. ஆர். எல. எப். பத்மநாபா அணியின் தலைவர் சு.கு.ஸ்ரீதரன் உட்பட அம்முன்னணியின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.

சுமார் 4 மணி நேரம் இடம்பெற்ற இச்சந்திப்பில் குறிப்பாக இனப்பிரச்சினைக்கான தீர்வு யோசனை,மீள் குடியேற்றம் ,வடக்கு கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள குடியேற்ற முயற்சிகள் உட்பட சில பொதுவான விடயங்கள் குறித்து ஆராயப்பட்டு இவ்விடயங்களில் ஒருமித்து செயல்பட வேண்டியதன் அவசியததை இரு தரப்பினரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இனப் பிரச்சினைக்கான தீர்வு யோசனையானது திம்பு கோட்பாட்டின் அடிப்படையில் அமைய வேண்டியதன் அவசியத்தையும் இரு தரப்பும் ஒருமித்த கருத்ததாக கொண்டிருந்தன.

இச் சந்திப்பில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாகவோ ,பாராளுமன்ற தேர்தல் தொடர்பாகவோ எதுவும் பேசப்படவில்லை என தெரிய வருகின்றது.

மேலும் எதிர் காலத்தில் தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒரு மித்து செயல்படுவது தொடர்பாகவும் கருத்துக்கள் பரிமாறப்பட்ட போதிலும் எதிர்காலத்தில் இது தொடர்பாக தொடர்ந்து பேசுவது என்றும் இரு தரப்பினருக்குமிடையில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது
மேலும் இங்கே தொடர்க...
இலங்கைக்கு எதிராக தடை விதிக்கும் திட்டமில்லை : ஐரோப்பிய ஒன்றியம்இலங்கைக்கு எதிராக தடைகள் விதிக்கும் திட்டமெதுவும் இல்லை என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.

இலங்கையில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பில் தடைகள் விதிக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரிவிக்கப்படுவதாவது :

"மனித உரிமை மீறல் பிரச்சினை தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் தொடர்ச்சியாக ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

இலங்கையின் உயர் இராணுவ அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு எதிராக பயணத் தடைகள் விதிக்கப்படலாம் என வெளியான செய்திகளில் உண்மையில்லை.

இலங்கைக்கு எதிராக தடைகளை விதிப்பது தொடர்பில் இதுவரையில் எவ்விதத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை.

ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகைத் திட்ட நீடிப்பு தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை. குறித்த சலுகைத் திட்டம் மறுக்கப்பட்ட போதிலும், அதனை அடிப்படையாகக் கொண்டு தடைகள் விதிக்கப்பபட மாட்டாது.

பயணத் தடைகள் விதிக்கப்பட வேண்டுமாயின், ஐரோப்பிய ஒன்றியத்தின் அனுமதி பெற்றுக் கொள்ளப்பட வேண்டும்.

இலங்கையுடன் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழு விரும்புகின்றது.

சலுகைத் திட்டம் வழங்குவது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்ட அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் கடந்த வாரம் உத்தியோகபூர்வ பதில் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது." இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் இங்கே தொடர்க...
கண்ணிவெடிகளை அகற்றியதும் மீள்குடியேற்றம் : 'ஜனஹமுவ' நிகழ்வில் ஜனாதிபதி"நிவாரணக் கிராமங்களில் இன்னமும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேரே இருக்கின்றனர். இவர்களின் உயிருக்கு நானே பொறுப்பு. எனவே கண்ணிவெடிகளை அகற்றிய பின்னரே குறிப்பிட்ட பிரதேசங்களில் மக்களை மீள்குடியேற்ற முடியும்" என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவத்தார்.

'ஜனஹமுவ' மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜனாதிபதி, ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

"இந்நாட்டை மக்கள் என்னிடம் கையளித்தபோது, நாடு இரண்டாகப் பிளவுபட்டிருந்தது. இதனை ஐக்கியப்படுத்துவது மக்களினது எதிர்பார்ப்பாகும். அந்த எதிர்பார்ப்பு நிறைவேற்றப்பட்டுள்ளது.

புலிப் பயங்கரவாதிகளின் இராணுவக் கட்டமைப்புக்கள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன. எதிர்காலப் பரம்பரைக்கேற்ற வகையில் நாட்டை உருவாக்கியுள்ளோம். எமது நடவடிக்கைகள் தேர்தலை நோக்காகக் கொண்டதல்ல. மாறாக, நாட்டின் அபிவிருத்தியைக் குறியாகக் கொண்டது.

கிழக்கின் உதயம் தோன்றியுள்ள அதேவேளை, வடக்கின் வசந்தம் தொடர்பிலான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சம்பள அதிகரிப்பு தொடர்பில் தற்போது போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. எதிர்வரும் ஜனவரி மாதம் சம்பள அதிகரிப்பை வழங்குவது தொடர்பில் தெளிவாக அறிவித்திருக்கின்றோம். சர்வதேச நாணய நிதியம் மட்டுமல்ல, வேறு எந்த அமைப்பும் எமக்கு எந்தவித அழுத்தங்களையும் கொடுக்கவில்லை. அதேபோல், உழைக்கும் வர்க்கத்தினரின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டாம் என்று கூறவும் இல்லை.

சரத் குறித்துக் கூற எதுவுமில்லை

சரத் பொன்சேகா குறித்து எதுவும் கூறுவதற்கில்லை. அவர் இராணுவத்தின் உயர் அதிகாரியாவார். அதுமட்டுமே எனக்குத் தெரியும்.

எமது நாட்டின் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சி கண்டிருப்பதாக பல கதைகள் கூறப்பட்டன. முழு உலகிலுமே பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்ட போதிலும், எமது நாட்டின் சிறந்த முகாமைத்துவம் காரணமாக உலக சவால்களுக்குள் அகப்பட்டுக் கொள்ளாது செயற்பட முடிந்தது.

நான் பிரான்ஸில் இருந்தோ அல்லது இங்கிலாந்தில் இருந்தோ வரவில்லை. ஆகவே, எனக்கு இங்குள்ள நிலைமைகளை நன்கறிய முடியும். யுத்தத்தை வெற்றி கொள்ள முடியாது என்ற நிலையை மாற்றியமைத்து, அதனை நாம் முடிவுக்குக் கொண்டு வந்தோம்.

அரசாங்கம் என்கின்ற வகையில், எந்தவொரு போராட்டத்திற்கும் முகம் கொடுப்பதற்குத் தயாராக இருக்க வேண்டும். தற்போது ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது அரசியல் தேவை கருதிய குழுவொன்றினாலேயே இயக்கப்படுகின்றது.

யுத்த காலத்தின் போது நாம் கிளிநொச்சியை நெருங்கிய சந்தர்ப்பத்தில், தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் இதுபோன்ற அழுத்தங்கள், நெருக்குதல்கள் எமக்கு வந்தன. இதனை எல்லோரும் நினைவில் கொள்ள வேண்டும். ஊழியர்கள் மட்டுமல்லாது, அனைவருமே தமது தாய்நாடு தொடர்பில் பொறுப்புடன் செயற்பட வேண்டியது அவசியமாகும்.

மே மாதம் 19ஆம் திகதி தான் யுத்தம் முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் சுமார் 3 லட்சம் வரையிலான மக்கள் எமது பிரதேசத்திற்கு வருகை தந்தனர். யுத்த காலத்தில் பெருமளவிலான மக்கள் இங்கு வருகை தரக் கூடும் என அறிந்திருந்தமையால், சுமார் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பேருக்கான தங்குமிட வசதிகளை ஏற்பாடு செய்திருந்தோம்.

ஆனால், ஒரேயடியாக 3 லட்சம் மக்கள் வருகை தந்தமையால் அவர்களுக்கான தேவைகளையும் நிறைவேற்ற வேண்டியதாயிற்று. அதனையும் நாம் செய்தோம்.

பிரபாகரனின் பெற்றோர்

இது குறித்து பலவிதமாகப் பேசப்படலாம். இவ்வாறு வருகை தந்தவர்களோடு, பயங்கரவாதிகளும் ஊடுருவினர். இவர்களில் தான் பிரபாகரனின் பெற்றோரும் தமிழ்ச்செல்வனின் மனைவி, பிள்ளைகளும் அடங்கியிருந்தனர்.

அரசாங்கத்தை நம்பி வந்த மக்களை அவர்களது பிரதேசங்களில் மீள்குடியேற்ற வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். அதனை இப்போது நாம் மேற்கொண்டு வருகிறோம். இற்றை வரையில் சுமார் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேரை மீளக்குடியமர்த்தியுள்ளோம்.

மீட்கப்பட்ட பிரதேசங்களில் கண்ணிவெடிகள் நிறைந்து காணப்படுகின்றன. எனவே, கண்ணிவெடிகளுக்குள் மக்களை தள்ளிவிட முடியாது. மீண்டும் ஒரு பயங்கரவாத நிலைமை உருவாவதற்கு இடமளிக்கவும் முடியாது.

அவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தி, தங்குமிட வசதிகள், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. உள்நாட்டின் அழுத்தம் காரணமாகவோ அல்லது சர்வதேச நெருக்குதல் காரணமாகவோ நாம் இதனை மேற்கொள்ளவில்லை" என்றார்.

இந்தச் சந்திப்பில், அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, ஜீ.எல். பீரிஸ், ரிஷாத் பதியுதீன், மைத்திரிபால சிறிசேன, பந்துல குணவர்த்தன, சம்பிக்க ரணவக்க, அதாவுல்லா, முரளிதரன் மற்றும் விமல் வீரவன்ஸ எம்.பி., பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, திறைசேயின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தர, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் கலந்து கொண்டனர்
மேலும் இங்கே தொடர்க...
சமூக சேவையின் பொருட்டு சீருடையை கழற்றவும் தயார் : ஜெனரல் பொன்சேகா


நாட்டின் தற்போதைய சாதகமான நிலைமையினை அரசியல்வாதிகள் பயன்படுத்திக்கொள்ளாவிடின், சமூக சேவைகளில் ஈடுபடும் முகமாக சீருடையை கழற்றி வைப்பது தொடர்பில் தற்போது தயாராகி வருவதாக பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

சர்வதேச செய்தி நிறுவனமொன்றின் ஊடகவியலாளர் ஒருவருடன் தனது கொழும்பு அலுவலகத்தில் வைத்து உரையாடும் போதே மேற்படி கருத்தினை அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக அனைவரதும் கவனம் முன்னாள் இராணுவ தளபதியும் தற்போதைய பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரியுமான ஜெனரல் சரத் பொன்சேகாவின் மீது திரும்பியுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

"பல தசாப்தங்களாக நாட்டில் ஊடுருவியிருந்த பயங்கரவாதிகளுடனான இராணுவத்தினரின் யுத்தம் இவ்வருடம் முடிவுக்கு வந்துள்ளது. இதனையடுத்து நாடு சிறந்த பொருளாதார வளர்ச்சியை நோக்கி முன்னோக்கிச் செல்ல ஆரம்பித்துள்ளது.

இதனை நாட்டின் அரசியல் தலைவர்கள் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளாமல் விடுவார்கள் என்றால், சமூக சேவையாற்றும் பொருட்டு எனது சீருடையினை கழற்றி வைப்பதற்கு தயாராகியுள்ளேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகாவின் பதவிக்காலம் எதிர்வரும் டிசம்பர் 15ஆம் திகதியுடன் றிறைவு பெறுகிறது.

இந்நிலையில் அவரது பதவிக் காலத்தை நீடிப்பது தொடர்பில் அரசாங்கம் இதுவரையில் எவ்வித முடிவினையும் எடுக்கவில்லையெனக் கூறப்படுகிறது. அதேவேளை குறிப்பிட்ட சேவைக்காலத்துக்குள் அவர் தனது பதவியை ராஜினாமா செய்யமாட்டார் என்றும் பாதுகாப்பு தரப்பு வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது. இருந்த போதும் ஐக்கிய தேசிய முன்னணி கட்சியின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக ஜெனரல் பொன்சேகாவை நிறுத்துவதற்கு முஸ்தீபுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
மேலும் இங்கே தொடர்க...

புதுக்குடியிருப்பு, விஷ்வமடு மற்றும் அக்கராயன் குளம்:

புலிகள் இயக்கம் மறைத்து வைத்திருந்த ஆயுதங்கள் மீட்பு

புதுக்குடியிருப்பு, விஷ்வமடு மற்றும் அக்கராயன்குளம் பகுதிகளில் மேற் கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது புலிகள் இய க்கத்தினால் மறைத்து வைக்கப்பட்ட பெருமளவு ஆயுதங்கள் மீட்கப் பட்டதாக பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் கூறியது.

புதுக்குடியிருப்பு கடற்கரை பகுதியில் புதைத்து வைக்கப்பட் டிருந்த 152 மில்லி மீட்டர் ரக பீரங்கிகள் நான்கு மற்றும் 130 மி.மீ. ரக பீரங்கி என்பவற்றின் பாகங்கள் மீட்கப்பட்டன. இது தவிர 81 மி.மீ. ரக மோட்டார் குண்டுகள் 36, 60 மி.மீ. ரக மோட்டார் குண்டுகள் 7 என்பனவும் கண்டெடுக்கப்ப ட்டுள்ளன.

62 ஆவது படைப்பிரிவினர் புதுக்குடியிருப்பு பகுதியில் நடத்திய தேடுதலின் போது எம். 16 ரக ரவைகள் 200, இரண்டு பெட்டரிகள் புலிகளின் சீருடைகள் 04 என்பனவும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. புதுக்குடியிருப் பின் மற்றொரு பிரதேசத்தில் நடத்திய தேடுதலில் ஆர். பி. ஜி. குண்டொன்றும் மற்றும் சில வெடிபொரு ட்களும் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் கூறியது.

கிளிநொச்சி, அக்கராயன்குளம் பகுதியில் நடத்தப்பட்ட தேடுதலில் 60 மி.மீ. ரக இரண்டு குண்டுகள், 21 மிதிவெடிகள், 3 கைக்குண்டுகள் என்பனவும் மீட்கப்பட்டன.


மேலும் இங்கே தொடர்க...

சூழ்ச்சிகரமான செயற்பாடுகளில் ஈடுபட முயன்றால் தடைபோட தயங்கமாட்டேன்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எச்சரிக்கை


நாட்டில் பிரச்சினைகளை தோற்று விக்கும் சூழ்ச்சிகரமான செயற்பாடு களில் எவரேனும் ஈடுபட முயன் றால் அதற்குத் தடை போடுவதற்கு தயங்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரி வித்தார்.

பொருட்கள் தட்டுப்பாடு என்ற போர்வையில் மேற்கொள்ளப்படும் சூழ்ச்சிகளுக்கு மக்களின் சார்பில் பதில் கொடுப்பதற்குத் தாம் தயாரா கவுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி; வெற்றி கொண்டுள்ள சுதந்திரத்தைப் பாதுகாக்கும் பலம் தமக்குள்ளதா கவும் தெரிவித்தார்.

கொழும்பு சிலோன் கொண்டி னென்டல் ஹோட்டலில் நேற்று நடைபெற்ற தனியார் தேயிலைத் தொழிற்சாலை உரிமையாளர் சங்கத் தின் 18வது வருடாந்த மாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமதுரையில் மேலும் தெரிவித்ததா வது,

பயங்கரவாதத்தை ஒழித்து யுத்தக் கொடூரமில்லாத நாட்டில் சகலரும் அச்சமின்றி வாழக்கூடிய சூழ் நிலையை உருவாக்குவதாக அன்று மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நாம் நிறைவேற்றியுள்ளோம். அத னால்தான் இன்று எம்மால் சுதந் திரம் பற்றி பேச முடிந்துள்ளது.

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கும் சமாதானத்தை நிலை நாட்டு வதற்கும் நாம் உபயோகித்த பல த்தை இப்போது அபிவிருத்தியின் பக்கம் திருப்பியுள்ளோம்.

நாட்டின் இறைமையை பாதுகாப் பதற்கு பொருளாதாரத்தைப் பலப் படுத்துவது மிகவும் அவசியமாகி றது.

யுத்தத்துக்கான பாரிய செலவுகளு க்கு மத்தியில் நாட்டின் அபிவிருத்தி யையும் பொருளாதாரத்தையும் மேற்கொள்ள வேண்டியிருந்தது.

அத்துடன் பயங்கரவாதத்தை ஒழிப்பதில் சர்வதேசத்தின் நிலைப் பாட்டையும் முகாமைத்துவம் செய்ய நேர்ந்தது. பயங்கரவாதத் துக்கு எதிரான செயற்பாடுகளுக்கு ஆதரவளித்த நாடுகளின் கூற்றை ஏற்றுக் கொண்டு அதற்கெதிரான சக்திகளை புறந்தள்ளி நாட்டை ஐக்கியப்படுத்தும் செயற்திட்டத்தைச் சவால்களுக்கு மத்தியில் முன் னெடுக்க எம்மால் முடிந்துள்ளது.

உயர்ரக தேயிலையினால் உலக சந்தையில் சர்வதேச பலமுள்ளவ ர்களோடு எம்மால் போட்டியிட முடிந்துள்ளது. இதன் மூலம் தேயிலைத் தொழிற்துறைக்கு வசந்த காலம் பிறந்துள்ளது.

உலக பொருளாதார நெருக்கடி வேளையிலும் பெருந்தோட்டக் கைத்தொழில் துறையினருடன் பேச்சு வார்த்தை நடத்தி பல்வேறு நிவார ணங்களை வழங்க அரசாங்கம் முன் வந்துள்ளது. உரமானியம், மின்சார மானியம் மற்றும் வங்கிக் கடன் களைப் பெற்றுக் கொடுப்பதிலும் அரசாங்கம் தலையிட்டுள்ளது. தேசிய பொருளாதாரத்தின் அடித் தளம் விவசாயத்துறையே என்பதில் அரசாங்கம் நம்பிக்கை கொண்டு ள்ளதன் காரணமாகவே இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.

எத்தகைய சவால்கள் வந்த போதும் இத்துறையை பாதுகாக்க அரசாங்கம் துணிவுடன் முன்வந்தது.

இன்று எமக்கென சுதந்திரமான நாடு உள்ளது. கைத்தொழில் துறை யினர் என்ற வகையில் நாம் மீட்டெடுத்த பிரதேசங்களில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியுள்ளது எனவும் ஜனாதிபதி மேலும் தெரி வித்தார்.

நிகழ்வில் அமைச்சர்கள் டி. எம். ஜயரத்ன, லக்ஷ்மன் யாப்பா அபே வர்தன உட்பட துறைசார்ந்த முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...