7 மே, 2010

ஆங்கில மொழியில் உ/தரம் கற்பிக்க 554 ஆசிரியர்கள் திங்கள் பத்திரிகையில் விண்ணப்பம்


ஆங்கில மொழியில் க.பொ.த. உயர் தரம் கற்பிப்பதற்கென 554 ஆசிரியர்களை சேர்த்துக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்து ள்ளது. இது தொடர்பான விண்ணப்பம் நாளை மறுதினம் திங்கட்கிழமை (10) சகல தேசிய பத்திரிகைகளிலும் வெளியாகுமென கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

கல்வி அமைச்சில் நேற்று நடந்த செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் குணவர்தன இதுபற்றி அறிவித்தார். “வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதும் 85 பாடசாலைகளில் உயர்தரம் ஆங்கிலத்தில் கற்பிக்கப்படுகிறது. ஆனால் ஆங்கில ஆசிரியர்கள் போதியளவு இல்லை என்று கூறுகிறார்கள்.

இந்தக் குறையை நிவர்த்திக்கும் வகையில் 554 ஆங்கில ஆசிரியர்களை சேர்த்துக்கொள்ள முகாமைத்துவ திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது. தற்போது விஞ்ஞான பாடத்திற்கு மட்டுமே ஆங்கில ஆசிரியர்கள் உள்ளனர். வர்த்தகம், கலை பிரிவுகளுக்குப் போதிய ஆசிரியர்கள் இல்லை. ஒரு பாடத்தினைக் கற்க குறைந்தது 20 மாணவர்களாவது இருந்தால் அந்தப் பாடசாலைக்கு ஆங்கில ஆசிரியர் பெற்றுக்கொடுக்கப்படுவார் என்றும் அமைச்சர் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை மீது எவ்வித அழுத்தமும் கொடுக்கவில்லை ஐரோப்பிய யூனியன்




ஜீ. எஸ். பி. வரிச் சலுகைக்காக இலங்கை மீது ஐரோப்பிய யூனியன் எவ்வித அழுத்தங்களையும் பிரயோகிக்கவில்லையென ஐரோப்பிய யூனியன் வதிவிடப் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நீதித்துறையை ஐரோப்பிய யூனியன் மதித்துச் செயற்படுகிறது. ஆகையால் இப்போது நடந்துகொண்டிருக் கும் வழக்குகள் தொடர்பில் கருத்துக் கூறும் நிலையில் ஐரோப்பிய யூனியன் இல்லையெனவும் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் இந்த விவகாரம் தொடர்பாக இலங்கை உயர் மட்டக் குழு இந்த மாத இறுதியில் பிரசல்ஸ் வரவுள்ளதெனவும் அவர் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

அரசாங்கத்தின் நல்லிணக்க ஆணைக்குழு மக்கள் அபிலாஷைகளை நிறைவேற்ற கூடியதாக அமைய வேண்டும் - சம்பந்தன்



அரசாங்கம் நியமிக்க உத்தேசித்துள்ள நல்லிணக்க ஆணைக்குழு மக்கள் அபிலாஷைகளை முழுமையாக நிறைவேற்றக்கூடியதொன்றாக அமைய வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றக் குழுத் தலைவர் ஆர். சம்பந்தன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

கடந்த கால நடவடிக்கைகளில் உண் மைத் தன்மை குறித்த மூலகாரணங்களை இனங்கண்டு அவற்றுக்குத் தீர்வு காணப்படாவிட்டால் அர்த்த புஷ்டியான நல்லிணக்கம் ஏற்பட முடியாதெனவும் அவர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று, முன்னாள் அமைச்சர் அமரர் ரிச்சட் பத்திரனவின் அனுதாபப் பிரேரணையில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தமதுரையில் மேலும் தெரிவிக்கையில், உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழு அமைப்பது தொடர்பில் அண்மைக்காலமாக பல்வேறு கருத்துக்கள் வெளிவருகின்றன.

கடந்த கால நடவடிக்கைகளைக் கண்டறியவும் அவ்வாறான தவறுகள் இனியும் இடம்பெறாமல் தடுப்பது தொடர்பில் ஆராயவுமே இந்த நல்லிணக்க ஆணைக்குழு நியமிக்கப்படவுள்ளதென தெரிவிக்கப்படுகின்றது. தமக்கான கெளரவம் மீள நிலைநாட்டப்பட வேண்டும். ஆட்சியதிகாரம் நல்லிணக்கம் போன்றவற்றையே மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மத்தியில் இருக்கின்ற அதிகாரங்கள் பிராந்திய ரீதியில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் சட்டம், ஒழுங்கு, காணி, கல்வி உள்ளிட்ட அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்ற முற்போக்குச் சிந்தனை கொண்டவராக ரிச்சட் பத்திரன திகழ்ந்தார் எனவும் சம்பந்தன் எம்.பி. மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

பிரிட்டிஷ் தேர்தல் முடிவுகள்




பிரிட்டிஷ் நாடாளுமன்றத் தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் ஆட்சியமைப்பதற்குத் தேவையான அறுதிப் பெரும்பான்மை கிடைக்காது என்பதாக இதுவரை வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.


இடமிருந்து வலமாக கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் டேவிட் கேமரன், தொழிற்கட்சித் தலைவர் கோர்டன் பிரவுன் மற்றும் லிபரல் டெமாக்கிரடிக் கட்சித் தலைவர் நிக் கிளெக்

மொத்தமுள்ள 650 நாடாளுமன்றத் தொகுதிகளில் 621 தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், அதிக இடங்கள் பெற்ற கட்சியாக கன்சர்வேடிவ் கட்சி விளங்குகிறது. அக்கட்சி 295 இடங்களை இதுவரை பெற்றுள்ளது.

ஆட்சியிலுள்ள தொழிற்கட்சி இதுவரை 251 ஆசனங்களைப் பெற்றுள்ளது. சென்ற முறை தேர்தலில் அக்கட்சி பெற்ற இடங்களோடு ஒப்பிடுகையில் அக்கட்சி 85க்கும் மேற்பட்ட இடங்களை இழந்துள்ளது.

மூன்றாவது நிலையில் உள்ள லிபரல் டெமாக்கிரடிக் கட்சி 52 ஆசனங்களைப் பெற்றுள்ளது.

ஏனைய பிராந்தியக் கட்சிகளும் சுயேட்சைகளுமாக 27 ஆசனங்களைப் பெற்றுள்ளனர்.

1974ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஐக்கிய ராஜ்ஜியத்தில் தொங்கு நாடாளுமன்றம் அமையவிருப்பதாகத் தெரிகிறது.

எந்த ஒரு கட்சியும் அறுதிப் பெரும்பான்மையைப் பெறாத நிலையில், எக்கட்சிகள் இடையில் கூட்டணி ஆட்சி ஏற்படும், யார் பிரதமராக வருவார் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

குடியேற்றப்பட்ட பகுதிகளில் தபாலகங்கள்’






வன்னிப் பிரதேசத்தில் இடம்பெயர்ந்த மக்கள் மீளக்குடியேறிய அனைத்து இடங்களிலும் தபால் நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளதென வடபிராந்திய பிரதி அஞ்சல்மா அதிபதி வீ. குமரகுரு தெரிவித்தார்.

இதுவரையில், 18 இடங்களில் தபாலகங்கள் திறக்கப்பட்டுள்ளதெனக் குறிப்பிட்ட அவர், கடைசியாக முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளியவளையில் திறக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

தபாலகங்கள் திறக்கப்படுவதினால் மீள்குடியேறியுள்ள அனைத்து மக்களுக்கும் எமது சேவை திருப்திகரமான முறையில் வழங்கப்படுகின்றதெனவும் பிரதி அஞ்சல் மா அதிபதி தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

ஐ. தே. கவுக்குள் உட்கட்சி மோதல் உக்கிரம்: செயற்குழு தீர்மானங்களை மாற்ற சிலர் சதித்திட்டம் தீட்டுவதாக சஜித் ஆவேசம்




ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் மேற்கொண்ட தீர்மானங்களை மாற்றுவதற்குக் கட்சியில் சிலர் சதித் திட்டம் தீட்டுவதாக ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ குற்றஞ்சாட்டியுள்ளார்.

நேற்று முன்தினம் (05) நடைபெற்ற கட்சியின் செயற் குழுக்கூட்டத்தில் வரலாற்று முக்கியத்துவமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள சஜித் பிரேமதாச, கட்சியின் அனைத்துப் பதவிகளுக்கும் ஜனநாயக முறையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டுப் பொருத்தமானவர்கள் தெரிவு செய்யப்படவேண்டுமெனத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் தலைமைப் பதவியைத் தவிர ஏனைய பதவிகள் அனைத்திற்கும் தேர்தல் நடத்து வதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக சிலர் தகவல்களை வெளியிட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

‘ஐக்கிய தேசிய கட்சி என்பது ரணசிங்க பிரேமதாசவின் குடும்பத்திற்குச் சொந்தமானதோ அல்லது வேறு தனி நபர்களுக்குச் சொந்தமானதோ அல்ல’ என்று தெரிவித்துள்ள சஜித் பிரேமதாச, நாட்டில் அனைத்துத் தராதரங்களைச் சேர்ந்தவர்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் கட்சி மறுசீரமைக்கப்பட வேண்டுமெனக் கூறியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல், பொதுத் தேர்தல் தோல்விகளுக்குப் பின்னர் கட்சிக்குள் உள் முரண்பாடுகள் வலுவடைந்துள்ளன. தலைமைத்துவத்தை மாற்ற வேண்டுமென சிலர் வலியுறுத்தி வரும் நிலையில், பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய சிலர் பாராளுமன்றத்தில் தனித்து இயங்க முடிவு செய்துள்ளனர். இதில் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலரும் விதிவிலக்காக இல்லை.

இவ்வாறு, தேர்தல் தோல்வி, தேசியப் பட்டியல் ஆசனப் பகிர்வில் அதிருப்தி எனச் சிக்கித் தவிக்கும் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை மாற்றிவிட்டு, சஜித் பிரேமதாச போன்ற ஒருவரைத் தலைவராக்க வேண்டுமெனச் சில உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும், சஜித் பிரேமதாசவுக்குத் தலைவர் பதவியின்றி உதவித் தலைவர் பதவி வழங்க வேண்டுமென ஒரு பிரிவினரும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

இதனிடையே, தேர்தல் வாக்கெடுப்பின் மூலமே எந்தப் பதவியையும் ஏற்றுக் கொள்வதாக சஜித் பிரேமதாச திட்டவட்ட மாகத் தெரிவித்துள்ளார்
மேலும் இங்கே தொடர்க...

மின்சாரசபைக்கு ஏற்படும் நஷ்டங்களைத் தடுக்க ஜூன் முதல் விசேட திட்டம்







இந்த வருடத்தில் இலங்கை மின்சார சபைக்கு 32 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பாரிய நஷ்டங்களை தடுப்பதற்கு ஜூன் முதலாம் திகதி முதல் விசேட திட்டமொன்றை முன்னெடுக்க உள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சர் பாடலி சம்பிக ரணவக்க கூறினார்.

கெரவலப்பிட்டிய மின் நிலைய பணிகளை நேற்று (6) பார்வையிட்ட பின் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது:-

கடந்த 10 வருடத்தில் மின்சார சபைக்கு 148 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டது. எதிர்வரும் 10 வருடத்தில் 391 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படுமென கணிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரஜையும் மின்சார சபையின் நஷ்டத்தில் 1600 ரூபாவை தாங்க வேண்டியுள்ளது.

இந்தப் பிரச்சினைக்கு ஒரே நாளில் தீர்வு காண முடியாது. மோசடி, செயற்திறனின்மை காரணமாக மட்டுமன்றி, இந்த நஷ்டங்களுக்கு காரணமான பல பிரிவுகளை நாம் அடையாளங் கண்டுள்ளோம். எரிபொருள் மூலமே மின்சாரம் கூடுதலாக உற்பத்தி செய்வதால் அதிக செலவு ஏற்படுகிறது.

வீதி மின்விளக்குகளுக்காக மின்சார சபை கட்டணம் அறிவிடுவது கிடையாது. இதனால் மின்சாரம் வீண் விரயம் செய்யப்படுகிறது. இதனைத் தடுப்பதற்கான உள்ளூராட்சி சபைகளுக்கு ஜூன் முதலாம் திகதி முதல் விசேட வழிகாட்டல்கள் வழங்கப்படும். ஹோட்டல்களுக்கு வழங்கப்பட்டுள்ள எரிபொருள் சீராக்கல் கட்டணச் சலுகை மே முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் நீக்கப்பட்டுள்ளது.

மின்சார சபைக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை மட்டுப்படுத்துவதற்கான 6 மாத கால குறுகிய காலத் திட்டம் ஜூன் மாதம் முதல் அமுல்படுத்தப்படுகிறது. இது தொடர்பான ஐந்து வருட திட்டம் 2011 ஆம் ஆண்டு முதல் அமுல்படுத்தப்படும். இதனூடாக எதிர்காலத்தில் மின்சார சபைக்கு ஏற்பட உள்ள பாரிய நஷ்டத்தைக் குறைக்க உள்ளோம்.

இது தவிர பல நிறுவனங்களுக்கு மின்சாரசபை 161 பில்லியன் ரூபா கடன் செலுத்த வேண்டும். அத்தோடு 300 பில்லியன் ரூபா முதலீடும் செய்யப்பட்டுள் ளது. மின்சார சபைக்கு அரச நிறுவனங்களில் இருந்து பெறுமளவு பணம் கிடைக்க வேண்டியுள்ளது. குறித்த நிறுவனங்களுடன் பேசி அவற்றை மீளப் பெறத் திட்டமிட் டுள்ளோம். ஆஸ்பத்திரிகள், பாதுகாப்புப்ப டையினருக்கு வழங்கும் மின்சாரம் துண்டிக்கப்படமாட்டாது என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

ஷெல் - ரூ. 219, லாஃப் - ரூ. 323 சமையல் எரிவாயுக்களின் விலைகள் அதிகரிப்பு



சமையல் எரிவாயுக்களின் விலைகள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன. இதன்படி ஷெல் காஸின் விலை 219 ரூபாவாலும், லாஃப் காஸின் விலை 323 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

நேற்று நள்ளிரவு முதல் இவைகள் அதிகரிக்கப்பட்டிருப்பதாக கூட்டுறவு உள்ளூர் வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ நேற்றுத் தெரிவித்தார்.

இதற்கமைய ஷெல் சமையல் எரிவாயு வொன்றின் புதிய விலை 1769 ரூபாவாகவும், லாஃப் சமையல் எரிவாயு வின் புதிய விலை 1744 ரூபாவாகவும் இன்று முதல் விற்பனை செய்யப்படவுள்ளது.

சமையல் எரிவாயு விலையதிகரிப்புத் தொடர்பாக விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று அமைச்சில் நடைபெற்றது. இதன்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உலக சந்தையில் சமையல் எரிவாயுவின் விலையில் ஏற்பட்ட அதிகரிப்புக் காரணமாகவே ஷெல் மற்றும் லாஃப் சமையல் எரிவாயுக்களின் விலையில் மாற்றங்களை செய்ய வேண்டி ஏற்பட்டிருப்ப தாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

வடபகுதி மக்கள் மனங்களை வெல்வது எமது பாரிய பொறுப்பு முப்படைகளின் பங்களிப்புடன் மக்கள் நலன் பேண நடவடிக்கை





கிளிநொச்சியை வென்றது போன்று மக்கள் மனங்களை வெல்வதும் எமது பாரிய பொறுப்பாகும். முப்படை யினரின் பங்களிப்புடன் வடபகுதி மக்களின் நலன்களை பேண பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப் பட்டு வருவதாக பாதுகாப்பு அமைச்சின் செய லாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

2009 ஜனவரி 2ஆம் திகதி கிளிநொச்சி நகரம் படையினரால் மீட்கப்பட்டதை நினைவுகூரும் முகமாக கிளிநொச்சியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியை பாதுகாப்புச் செயலாளர் நேற்று (06) திறந்து வைத்தார். இங்கு உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது :- 30 வருடம் நீடித்த பயங்கரவாதம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு ஒருவருடம் நிறைவடைகிறது.

பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் மனிதாபிமான நடவடிக்கையின் முக்கிய இடமாக கிளிநொச்சி நகரம் காணப்பட்டது. கிளிநொச்சி நகரை வீழ்த்த முடியாதென புலிகளும் பாதுகாப்பு ஆய்வாளர்களும் தொடர்ச்சியாக கூறிவந்தனர்.

ஆனால், எமது பாதுகாப்புப் படையினர் கிளிநொச்சியை மீட்டது மட்டுமன்றி புலிகளின் பிடியில் சிக்கியிருந்த அப்பாவி மக்களையும் அவர்களின் உடமைகள், உயிர்கள் என்பவற்றையும் மீட்டது மிகப் பெரும் வெற்றியாகும்.

வடபகுதி மக்களின் நலன்களை பாதுகாக்கவும் அவர்களின் தேவைகளை நிறைவேற்றவும் வேண்டிய பாரிய பொறுப்பு பாதுகாப்புப் படையினருக்கு இருக்கிறது.

இந்த நிலப்பரப்பை வெற்றிகொண்டது போன்று மக்களின் மனங்களை வெல்ல வேண்டிய எமது பொறுப்பாகும்.

மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க இடமளிக்க மாட்டோம். இப்பகுதி மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவத ற்காக ஒவ்வொரு பிரதேசத்திலும் இராணுவ முகாம்களை அமைக்க உள்ளோம் என்றார்.

இந்த நிகழ்வில் பாதுகாப்புப் படை பிரதம அதிகாரியும் விமானப் படைத் தளபதியுமான எயார்சீப் மார்சல் ரொசான் குணதிலக, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜெயசூரிய, கடற் படைத் தளபதி வைஸ்அட்மிரல் திசர சமரசிங்க, பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய, கிளிநொச்சி கட்டளையிடும் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன ராஜகுரு, வன்னி கட்டளையிடும் தளபதி கமல் குணரத்ன உட்பட பல உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

சங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இலங்கைக்கு பங்காளி அந்தஸ்த்து முக்கிய உடன்படிக்கைகளில் நேற்று இலங்கை கைச்சாத்து


நாட்டின் பாதுகாப்பு, நாணயமாற்று மற்றும் வீடமைப்பு உட்பட பல அம்சங்களை உள்ளடக்கிய முக்கிய உடன்படிக்கையொன்றில் அரசாங்கம் நேற்று கைச்சாத்திட்டதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கீழ் நேற்று மேற்கொள்ளப்பட்ட இவ்வொப்பந்தக் கைச்சாத்தில் சீனா, ரஷ்யா போன்ற நாடுகளும் பங்கேற்றதாக அமைச்சர் தெரிவித்தார். சங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இலங்கை பங்காளி அந்தஸ்தைப் ளிடுஹங்ச்கி ஙீஹஙுசிடூலீஙு பெற்றுள்ளதையடுத்தே இது சாத்தியமாகியுள்ளதென அமைச்சர் பீரிஸ் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றம் நேற்றுக் காலை 9.30 மணிக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் தலைமையில் கூடியது. வழமையான நடவடிக்கைகளுக்குப் பின்னர் ஏற்றுமதி இறக்குமதி கட்டளைச் சட்ட ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தைச் சபையில் சமர்ப்பித்து உரையாற்றிய போதே அமைச்சர் பீரிஸ் இதனைத் தெரிவித்தார்.

அமைச்சர் தமதுரையில் மேலும் தெரிவிக்கையில் :-

சங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் ரஷ்யா பிரதான உறுப்பு நாடாகவுள்ளது. சுகாதார சீர்கேடுகளைத் தடுத்தல், கலாசார சீர்கேடுகளைத் தடுத்தல், அரச ஊழியர் வீடமைப்பு, மீனவர்கள் முன்னேற்றம், மின்சக்தித் துறை தொடர்பான அம்சங்களும் இவ்வுடன்படிக்கையில் அடங்குகின்றன.

அடுத்த வாரத்தில் நமது நாட்டுக்குச் சில பொருளாதார நன்மைகள் கிடைக்கவுள்ளன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெஹ்ரானில் ஜீ-15 மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளதுடன் ஈரான் உட்பட முக்கிய அரச தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

எமது உற்பத்திப் பொருளுக்கான சந்தை வாய்ப்பை அதிகரிக்கவும் நாடுகளுக்கிடையிலான நல்லுறவுகளை மேம்படுத்தவும் இது பெரிதும் உதவும். இலங்கை 80 வீத கறுவாவை ஆர்ஜன்டீனா, வெனின்சுலா போன்ற நாடுகளுக்கே ஏற்றுமதி செய்கின்றது.

தெஹ்ரான் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் இதற்கான வாய்ப்புக்களை மேலும் வலுப்படுத்தும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...