22 நவம்பர், 2010

புதிய அமைச்சரவை விபரம்


ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இரண்டாவது தடவையாக பதவியேற்றுக் கொண்டதன் பின்னர் ஜனாதிபதி செயலகத்தில் புதிய அமைச்சர்கள்,பிரதியமைச்சர்கள் இன்று ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

தி.மு.ஜயரத்ன - பிரதமர்
நிமல் சிறிபால டி சில்வா - பெருந்தெருக்கள், நீர்ப்பாசன முகாமைத்துவம்
மைத்திரிபால சிறிசேன - சுகாதாரம்
சுசில் பிரேமஜயந்த - பெற்றோலியம்
ஆறுமுகம் தொண்டமான் - கால்நடை கிராமிய அபிவிருத்தி
தினேஷ் குணவர்தன - நீர் வழங்கல், வடிகாலமைப்பு
டக்ளஸ் தேவானந்தா - பாரம்பரிய கைத்தொழில் சிறு கைத்தொழில் அபிவிருத்தி
ஏ.எல்.எம்.அதாவுல்லா - உள்ளூராட்சி, மாகாண சபைகள்
ரிசாட் பதியுதீன் - கைத்தொழில், வர்த்தகம்
சம்பிக ரணவக்க - மின்சக்தி, எரிசக்தி
விமல் வீரவன்ச - நிர்மாணத்துறை, பொறியியல் சேவை, வீடமைப்பு வசதிகள்
ரவூப் ஹக்கீம் - நீதி
பசில் ராஜபக்ஷ - பொருளாதார அபிவிருத்தி
வாசுதேவ நாணயக்கார - தேசிய மொழிகள், சமூக ஒருங்கிணைப்பு
எஸ்.பி.திஸாநாயக்க - உயர்கல்வி
ஜி.எல்.பீரிஸ் - வெளியுறவு
டபிள்யூ.டி.ஜே.செனவிரத்ன - பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள்
சுமேதா ஜி ஜயசேன - பாராளுமன்ற அலுவல்கள்
ஜீவன் குமாரதுங்க - தபால் சேவைகள்
பவித்ரா வன்னியாரச்சி - தொழில்நுட்பம்
அநுர பிரியதர்ஷன யாப்பா - சுற்றாடல்
திஸ்ஸ கரலியத்த - சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகாரம்
காமினி லொக்குகே - விவசாயம்
பந்துல குணவர்தன - கல்வி
மகிந்த சமரசிங்க - பெருந்தோட்டக் கைத்தொழில்
ராஜித சேனாரத்ன - கடற்றொழில் நீரியல்வள அபிவிருத்தி
ஜனக பண்டார - காணி, காணி அபிவிருத்தி
பீலிக்ஸ் பெரேரா - சமூக சேவைகள்
சி.பி.ரத்னாயக்க - தனியார் பிரயாண சேவைகள்
மகிந்தயாப்பா அபேவர்தன - கைத்தொழில்
கெஹெலிய ரம்புக்வெல்ல - ஊடகம்
குமார வெல்கம - போக்குவரத்து
டலஸ் அழகப்பெரும - இளைஞர் விவகாரம்
ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ - கூட்டுறவு உள்நாட்டு வர்த்தகம்
சந்திரசிறி கஜதீர - சிறைச்சாலை புனர்வாழ்வு
சாலிந்த திஸாநாயக்க - தேசிய வைத்தியம்
ரெஜினோல்ட் குரே - சிறு ஏற்றுமதி
டிலான் பெரேரா - வெளிநாட்டு வேலைவாய்ப்பு
ஜகத் புஷ்பகுமார - தென்னை அபிவிருத்தி
டி.பி.ஏக்கநாயக்க - கலாசாரம்
மகிந்த அமரவீர - இடர் முகாமைத்துவம்
எஸ்.எம்.சந்திரசேன - கமநல சேவைகள்
குணரத்ன வீரக்கோன் - மீள்குடியேற்றம்
மேர்வின் சில்வா - மக்கள் தொடர்பு
மகிந்தானந்த அலுத்கமகே - விளையாட்டு
தயாசிறீத திசேறா - அரச வளங்கள்
ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய - தொலைத் தொடர்பாடல், தகவல் தொழில்நுட்பம்
ஜகத் பாலசூரிய - தேசிய உரிமைகள்
லக்ஷ்மன் செனவிரத்ன - உற்பத்தித் திறன்
நவீன் திஸாநாயக்க - அரச முகாமைத்துவம்

சிரேஷ்ட அமைச்சர்கள்

பிரதமர் தி.மு.ஜயரத்ன - பௌத்த சாசனம், மத விவகாரம்
ரத்னசிறி விக்ரமநாயக்க - ஆட்சி பரிபாலனம், உட்கட்டமைப்பு வசதிகள்
டீ.ஈ.டபிள்யூ. குணசேகர - மனித வளங்கள்
அதாவுத செனவிரத்ன - கிராமிய விவகாரம்
பி.தயாரத்ன - உணவு, போசணை
ஏ.எச்.எம்.பௌசி - நகர அபிவிருத்தி
எஸ்.பி.நாவின்ன - நுகர்வோர் நலன்
பியசேன கமகே - பொது வளங்கள்
திஸ்ஸ விதாரண - விஞ்ஞானம்
சரத் அமுனுகம - சர்வதேச முதலீட்டு ஊக்குவிப்பு
மேலும் இங்கே தொடர்க...

புதிய வரிக் கட்டமைப்பு, சம்பள உயர்வு பொதுமக்களுக்கு உரிய நிவாரணங்கள்

இலங்கையை ஆசியாவின் ஆச்சரியமான நாடாக மாற்றியமைக்கும் வேலைத்திட்டத்தின் அடிப்படை விடயமாக இம்முறை வரவு செலவுத் திட்டம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்க த்தினால் முன்வைக்கப்படும். புதி ய வரிக்கட்டமைப்பு, அரச ஊழிய ர்களுக்கு சம்பள உயர்வு, மக்களுக்கு நிவாரணங்கள், அபிவிருத்திக்கான தடைகளை நீக்குதல் போன்ற முக்கிய அம்சங்கள் வரவு செலவுத்திட்டத்தில் இடம்பெறும் என்று வீடமைப்பு நிர்மாணத்துறை பொது வசதிகள் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் அடுத்த வருடத்துக்கான வரவு செலவுத்திட்டம் இன்று திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் அது தொடர்பில் தகவல் வெளியிடுகையிலேயே அமைச்சர் வீரவங்ச இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது இரண்டாவது தடவை பதவிக்காலத்துக்காக கடந்த வெள்ளிக்கிழமை பதவியேற்றுக்கொண்ட நிலையில் இன்று திங்கட்கிழமை அடுத்த வருடத்துக்கான வரவு செலவுத்திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

வரவு செலவுத்திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்பிப்பதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியே சபையில் வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றுவார் என்றும் தெரிகின்றது.

இந்நிலையில் அமைச்சர் விமல் வீரவங்ச வரவு செலவுத்திட்டம் தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில் நாட்டின் அபிவிருத்தியை விரைவுபடுத்தும் நோக்கில் இம்முறை வரவு செலவுத்திட்டம் முன் வைக்கப்படவுள்ளது. அதாவது முக்கியமாக இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் புதிய வரிக் கட்டமைப்பு அறிமுகப்படுத்தப்படும்.

இதுவரை காலம் நாட்டில் பேணப்பட்ட சிக்கலான வரிகட்டமைப்பு முறைமைக்கு பதிலாகசிக்கல்கள் அற்ற புதிய வரிக் கட்டமைப்பு அறிமுகப்படுத்தப்படும். மேலும் நாட்டில் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு தடையாக அமையும் விடயங்களை நீக்கும் வகையில் முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்கள் வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்படவுள்ளன.

நாட்டில் அமைதி நிலைமை ஏற்பட்டுள்ள நிலையில் அரசாங்கம் அபிவிருத்தி திட்டங்களை ஏற்கனவே விரைவு படுத்தியுள்ளது. ஆனால் அவற்றை மேலும் விரைவுபடுத்தி அவற்றுக்கு தடையாக இருக்கும் காரணிகளை நீக்கும் வகையில் யோசனைகள் வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படவுள்ளமை விசேட அம்சமாகும்.

அத்துடன் இம்முறை வரவு செலவுத் திட்டத்தின ஊடாக அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படும் என்பதுடன் பொது மக்களுக்கு நிவாரணங்கள் பலவற்றை வழங்குவதற்கான யோசனைகள் இடம்பெறும். இந்த நாட்டை ஆசியாவின் ஆச்சரியமிக்க நாடாக மாற்றியமைப்பதில் அடுத்த வருடத்துக்கான வரவு செலவுத் திட்டம் அடிப்படை விடயமாக அமையும். உள்நாட்டு வர்த்தகர்கள் கைத்தொழிலாளர்கள் ஆகியோரை கட்டியெழுப்புவதற்கு தேவையான உள்ளடக்கங்கள் இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் இடம்பெறும்.

வீடமைப்பு துறை மற்றும் நிர்மாணத்துறைகளிலும் பாரிய வகையில் முன்னேற்றங்கள் ஏற்படும் வகையில் அடிப்படை விடயங்கள் யோசனைகளாக முன்வைக்கப்படும் என்றார்.

பந்துல குணவர்த்தன கருத்து

இதேவேளை 2011 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பில் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தகவல் வெளியிடுகையில் வரவு செலவுத்திட்டத்தின் உள்ளடக்கங்கள் என்னவென்று தற்போதைக்கு எதிர்வு கூற முடியாது. ஆனால் அரசாங்கத்தின் வரவுசெலவுத்திட்ட கொள்கையை விளக்க முடியும். அதாவது 2016 ஆம் ஆண்டில் நாட்டில் தனிநபர் வருமானம் 4000 டொலர்களாக அமையும் வகையில் வரவு செலவுத்திட்டத்தின் யோசனைகள் முன்வைக்கப்படும்.

இம்முறை வரவு செலவுத்திட்டமானது ஒரு திருப்புமுனை என்று கூறலாம். புதிய இலங்கையை கட்டியெழுப்புவதற்கான பின்னணி வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக உருவாக்கப்படும். உற்பத்தி துறை, வருமானம், சேவை, தொழில்கள், விலைமட்டம், கொடுப்பனவுகள், சேமிப்புகள், முதலீடு போன்ற துறைகளில் சாதகமான மாற்றங்கள் வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக முன்வைக்கப்படும் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

தற்போதைய காலநிலை டிசம்பர் வரை தொடரும் பலத்த காற்று; இடி, மின்னல் எச்சரிக்கை






தற்போதைய இடைப்பருவப் பெயர்ச்சி மழை வீழ்ச்சி டிசம்பர் மாதத்தின் முதல் வாரம் வரையும் நீடிக்க முடியுமென வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் சமிந்திர டி சில்வா நேற்றுத் தெரிவித்தார்.

இடைப்பருவ பெயர்ச்சி மழை வீழ்ச்சி காலநிலையில் பெரும்பாலும் பிற்பகலில் இடி, மின்னலுடன் தான் மழை பெய்யும். அதனால், இடி, மின்னல் பாதிப்புக்களிலிருந்து தவிர்ந்து கொள்ளுவதில் ஒவ்வொருவரும் கூடிய கவனம் செலுத்துவது அவசியம் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

இடி, மின்னலுடன் மழை பெய்யும் போது சிலவேளைகளில் கடும் காற்றும் வீச முடியும் என்றும் அவர் கூறினார்.

தற்போதைய மழைக்காலநிலை அடுத்துவரும் சில தினங்களுக்கு நீடிக்கும் எனக் குறிப்பிட்ட அவர், நேற்றுக் காலை 8.30 மணிக்கு முடிவுற்ற 24 மணி நேர மழை வீழ்ச்சிப் பதிவுப்படி ஆகக் கூடிய மழை வீழ்ச்சி 90.8 மி.மீட்டர்களாகப் பதிவாகியுள்ளது என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

மத்திய மாகாண சபை ஒதுக்கீடு: யாழ். மிருசுவில் ரயில் நிலையம் ரூ. 20 மில்லியனில் புனரமைப்பு






யாழ்ப்பாணம், மிருசுவில் ரயில் நிலையம் 20 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

மத்திய மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டில் இந்த புகையிரத நிலையம் நிர்மாணிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தலைமையிலான குழுவினர் எதிர்வரும் 27ம் திகதி சனிக்கிழமை மிருசுவில் பிரதேசத்திற்கு நேரில் விஜயம் செய்து நிலைமைகளை பார்வையிடவுள்ளனர்.

ரயில் நிலையத்தை புதிதாக நிர்மாணிப்பதற்கென 20 மில்லியன் ரூபாவுக்கான காசோலையை அன்றைய தினம் மத்திய மாகாண முதலமைச்சர் டிக்கிரி கொப்பேகடுவ தன்னிடம் கையளிக்கவுள்ளதாக வடமாகாண ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

ரயில் நிலைய நிர்மாணப் பணிக்கான கேள்விப்பத்திரம் வடமாகாண சபையினால் வெகுவிரைவில் கோரப் படவுள்ளதாகத் தெரிவித்த ஆளுநர், மூன்று மாத காலத்திற்குள் நிர்மாணப்பணிகளை நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை அகதிகள் நாடு திரும்புவதற்கு உதவும் வகையில் நடமாடும் சேவை 115 அகதி முகாம்களில் துணைத் தூதரகம் ஏற்பாடு






தமிழக அகதி முகாம்களில் தங்கியிருக்கும் இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கு ஏதுவான ஆவணங்களை வழங்கும் நோக்கில் சென்னையிலுள்ள இலங்கைத் துணைத் தூதுவர் வீ. கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடமாடும் சேவையொன்று நடத்தப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக மதுரையில் அப்பகுதி மாவட்ட ஆட்சியர் ஊடாக இம்மாதம் 20ஆம் 21ஆம் திகதிகளில் இந்நடமாடும் சேவை நடைபெற்றதாகத் துணைத்தூதுவர் தினகரனுக்குத் தெரிவித்தார்.

இதேபோல் இலங்கைத் தமிழர்கள் தங்கியிருக்கும் 115 அகதி முகாம்களில் அந்தந்தப் பகுதி மாவட்ட ஆட்சியாளர்கள் ஊடாக நடமாடும் சேவை முன்னெடுக்கப் படும்.

இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர்; ‘வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதை விட நாட்டுக்குத் திரும்ப வேண்டும்’ என்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ‘மஹிந்த சிந்தனை’க்கு அமைய 115 முகாம்களிலும் இந்த நடமாடும் சேவை நடத்தப்படவுள்ளது.

அகதி முகாம்களிலுள்ள இலங்கையர்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பிறப்புகள், திருமணங்கள் சட்ட ரீதியான பதிவுகள் இல்லாமல் உள்ளன. அகதிகளுக்கான சலுகைகளைப் பெறுவதாயினும், நாடு திரும்பி மீள்குடியேறுவதாயினும் ஆவணங்கள் அவசியம்.

இதற்காகவே, மதுரையில் நாம் நடமாடும் சேவையை ஆரம்பித்துள்ளோம். ஏனைய பகுதிகளிலும் இச்சேவை விஸ்தரிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

இந்திய அமைச்சர் கிருஷ்ணா 27ம் திகதி வடக்கு விஜயம் யாழ்., மன்னார் மாவட்டங்களில் பல்வேறு அபி.திட்டங்கள் அங்குரார்ப்பணம்


இலங்கை வரவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா எதிர்வரும் 27ம் திகதி சனிக் கிழமை வட மாகாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.

யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்க ளுக்கு செல்லும் எஸ். எம். கிருஷ்ணா, இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் வட மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பல்வேறு பாரிய அபிவிருத்தித் திட்டங்களையும் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, பாரம்பரிய சிறுகைத்தொழில் ஊக்குவிப்பு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வர்த்தக வாணிப த்துறை அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன், வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி, இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே காந்த் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

வட மாகாணத்தில் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் ஐம்பதாயிரம் வீடுகள் நிர்மாணிக்க, புனரமைக்கப்படவுள்ளதாக தெரிவித்த வட மாகாண ஆளுநர், இவற்றில் ஆயிரம் வீடுகளை புதிதாக நிர்மாணிக்கும் பரீட்சார்த்த நடவடிக்கையை யாழ்ப்பாணத்தில் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

யாழ். நகரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்திய கவுன்ஸிலர் பிரிவையும் ஆரம்பித்து வைக்கவுள்ளார். இதேவேளை மதவாச்சி முதல் தலைமன்னார் வரையிலான ரயில் பாதை அமைக்கும் பணிகளும் இந்திய அரசின் நிதியுதவியில் முன்னெடுக்கப்ப டவுள்ளது. இதனை இந்திய வெளிவிவகார அமைச்சர் ஆரம்பித்து வைக்கவுள்ளதாக மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

லலித் வீரதுங்க, காமினி செனரத்துக்கு மீண்டும் அதேபொறுப்பு





ஜனாதிபதியின் செயலாளராக லலித் வீரதுங்க மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, ஜனாதிபதியின் பிரதம அதிகாரியாக காமினி எஸ். செனரத்தும் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

கடந்த 19ம் திகதி வெள்ளிக்கிழமை முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. லலித் வீரதுங்க, காமினி செனரத் ஆகிய இருவரும் ஏற்கனவே இந்த பதவிகளை வகித் தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

* வறுமை, வேலையில்லா பிரச்சினை ஒழிப்புக்கு முன்னுரிமை




* பொதுவசதிகள் மேம்பாட்டுக்கு கூடுதல் நிதி

* நகரமும் கிராமமும் வேறுபாடின்றி அபிவிருத்தி

வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதியினால் இன்று சமர்ப்பிப்பு 2011



2011ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று பிற்பகல் 1.35 மணிக்கு வரவு - செலவுத் திட்டத்தைப் பாராளு மன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றவுள்ளார்.

நீண்டகால மற்றும் குறுகிய கால அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்டே இவ் வரவு - செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டிருப்பதாக நிதிய மைச்சு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மஹிந்த சிந்தனையில் குறிப்பிடப்பட்டி ருப்பதற்கு அமைவாகக் கிராமங்களை அபிவிருத்தி செய்து ஏழை, பணக்காரன் என்ற வர்க்க ஏற்றத்தாழ்வுகளை நீக்கி அனைவருக்கும் சமமாகப் பகிரக்கூடிய வகையிலேயே இவ் வரவு - செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

அபிவிருத்தி அடைந்த நாடாக இலங்கையை மாற்றுவதற்குக் காணப்படும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், பாதுகாப்பு, நலன்புரி, கல்வி மற்றும் பொருளாதாரம் போன்ற முக்கிய துறைகள் குறித்து இவ்வரவு - செலவுத் திட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தப் பட்டுள்ளது.

வறுமை மற்றும் வேலையில்லாப் பிரச்சினையை ஒழிப்பதற்கு முன்னுரிமை வழங்கப்படும். நகரத்தின் பொது வசதிகளை மேம்படுத்தும் செயற்பாடுகளுக்கு அதிக நிதியை ஒதுக்குவதற்கும் தீர்மானிக்க ப்பட்டிருப்பதாகத் தெரிய வருகிறது.

ஜனாதிபதி பதவியின் இரண்டாவது பதவிப் பிரமாணத்தின் பின்னர் அவர் சமர்ப்பிக்கும் முதலாவது வரவு - செலவுத் திட்டம் இதுவாகும். அத்துடன் மஹிந்த சிந்தனை எதிர்கால நோக்கு கொள்கைப் பிரகடனத்தின் கீழ் இடம்பெறும் முதலாவது வரவு - செலவுத் திட்டம் இதுவாகும்.

நாட்டின் அனைத்து மக்களும் பொரு ளாதார அபிவிருத்தியின் பங்குதாரர்களாகும் மற்றும் அபிவிருத்தியின் பெறுபேறுகள் அனைவருக்கும் சென்றடைவதை உறுதி செய்வதும் இம்முறை வரவு - செலவு திட்டத்தின் முக்கிய அம்சமாகும். அதிவேக நெடுஞ்சாலைகள், மாகாண சபை வீதி மற்றும் கிராமப்புர பாதைகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த அதிக நிதி ஒதுக்கப்படும் அதேவேளை, சிறிய நடுத்தர முதலீட்டாளர்களுக்கு அதிக பெறுபேறுகளை பெற்றுத் தரும். அவர்களை ஊக்குவிக்கும் யோசனைகளும் வரவு - செலவுத் திட்டத்தில் உள்ளடக்க ப்பட்டுள்ளன.

எமது நாட்டின் வரி முறையை இலகுபடுத்தும் வகையிலான முறையொன்று வரவு - செலவுத் திட்ட த்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிய வருகிறது.

விவசாயம், கைத்தொழில் மற்றும் சேவைகள் பிரிவுகள் மேம்படுத்தப் படுவதுடன் கடற் படை, விமானப் படை ஆகியவற்றை பலப்படுத்தி ஆசியாவின் உன்னதமான நாடாக இலங்கையை மாற்றும் நோக்கத்தை ஸ்திரப்படுத்தும் யோசனைகளும் இம்முறை வரவு - செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

வரவு - செலவுத் திட்ட அறிக்கையில் இடம்பெறும் அரச வருமானம், செலவு மற்றும் வரவு - செலவுத் திட்ட பற்றாக்குறையை 2011 ஆம் ஆண்டின் இறுதியில் அதேபோன்று வைத்திருப்பதில் அரசாங்கம் இம்முறை அதிக அவதானம் செலுத்தியுள்ளது.

2010ஆம் ஆண்டில் வரவு - செலவுத் திட்ட பற்றாக்குறை தேசிய வளர்ச்சி விகிதத்தில் நூற்றுக்கு 9.8 சதவீதமாகும். அதனை நூற்றுக்கு 7 சதவீதம் என்ற மட்டத்தில் பேணுவதற்கே எதிர்பார்க் கப்பட்டது. அதிக நிதியை நாட்டின் அபிவிருத்திக்காக முதலீடு செய்ய வேண்டியுள்ளதன் காரணமாக இந்த விகிதம் அதிகரித்துள்ளது.

இம்முறை வரவு - செலவுத் திட்ட பற்றாக்குறையை நூற்றுக்கு 7 சத வீத மட்டத்தில் வைத்திருப்பதே இலக்காகக் கொள்ளப்பட்டுள்ளது.

அரசாங்கத்துக்கு கிடைக்கும் வெளிநாட்டு கடன், உள்ளூர் மொத்த உற்பத்தியில் நூற்றுக்கு 80 என்ற மட்டத்தில் தொடர்ந்து வைத்திருப்பது இலக்காகக் கொள்ளப்பட்டுள்ளது.

2005 இல் நாட்டின் கடன் உள்ளூர் மொத்த உற்பத்தி விகிதத்தில் நூற்றுக்கு 105 சதவீதமாக இருந்தது. அது படிப் படியாக நூற்றுக்கு 84 சதவீதம் வரை குறைந்தது.

நாட்டை அபிவிருத்தி செய்யும் யோசனைகளை வெறும் வார்த்தைகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தாமல் அவற்றை செயலுருப்படுத்தும் வரவு - செலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பதன் மூலம் நாட்டு மக்களுக்கு முக்கிய செய்தியொன்றை ஜனாதிபதி வழங்கியுள்ளார்.

பாராளுமன்றத்துக்கு அரசாங்கம் அண்மையில் சமர்ப்பித்த குறைநிரப்பு பிரேரணைக்கு ஏற்ப 2011ஆம் ஆண்டில் மீண்டுவரும் செலவு 1080.9 பில்லியன் ரூபாவாகவும் மூலதனச் செலவு 458.1 பில்லியன் ரூபாவாகவும் மதிப்பிடப் பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...