2 மே, 2010

வடக்கில் அபிவிருத்தி பணிகளை துரிதமாக்க விசேட செயலணி


7ம் திகதி முதல் நடைமுறை; 16இல் யாழ். நகரில் செயலமர்வு; வடமாகாண ஆளுநர் சந்திரசிறி தகவலவட மாகாணத்தின் கைத்தொழில் கூட்டுறவுத் துறை மற்றும் கிராமிய அபிவிருத்திப் பணிகளைத் துரிதமாக்கும் வகையில் நான்கு பேர் கொண்ட விசேட செயலணி நியமிக்கப்பட்டுள்ளது.தன்னால் நியமிக்கப்பட்டுள்ள இந்த செயலணி, எதிர்வரும் 7ம் திகதி தொடக்கம் தமது நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

வட மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (மாகாண பொது நிர்வாக) இராசநாயகம் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த செயலணியில் மாகாண கைத்தொழில் பணிப்பாளர், கிராமிய அபிவிருத்தி பணிப்பாளர், கூட்டுறவு பணிப்பாளர் ஆகியோர் அடங்குவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

வட மாகாணத்தில் கைத்தொழில் கூட்டுறவுத் துறை மற்றும் கிராமிய அபிவிருத்தி பணிகளை துரிதமாக மேற்கொள்ளும் அடிப்படையில் இந்த செயலணி தமது திட்ட அறிக்கையை எதிர்வரும் மூன்று மாத காலத்திற்குள் தன்னிடம் சமர்ப்பிக்கவுள்ளதென்றும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

இந்த செயலணி இம்மாதம் 7ம் திகதி தொடக்கம் மாவட்ட ரீதியில் கூட்டுறவு கிராமிய அபிவிருத்தி மற்றும் கைத்தொழில் துறைசார்ந்த அதிகாரிகளை சந்தித்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் தீர்மானித்துள்ளது என்றார்.

இந்த செயலணி தமது அடுத்த கட்ட நடவடிக்கையாக யாழ். மாவட்டத்திலுள்ள கைத்தொழில், கிராமிய மற்றும் கூட்டுறவு ஆகிய துறைகளைச் சேர்ந்தவர்களுக்கென விசேட செயலமர்வு ஒன்றை எதிர்வரும் 16ம் திகதி யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடத்தவுள்ளது.

இந்தச் செயலமர்வின் போது மூன்று துறைகளைச் சார்ந்தவர்களுக்குத் தெளிவு படுத்தப்படவுள்ளதுடன் அவர்களது குறைநிறைகளும் கேட்டறியப்படும். மேற்படி மூன்று துறைகளையும் துரிதமாக மேம்படுத்துவதற்கான சில ஆலோசனை களையும் இந்த செயலணி வழங்கவுள்ளது.

இந்த செயலணி, வழங்கும் ஆலோசனை க்கு அமையவும், வேண்டுகோளுக்கமையவும் வட மாகாண சபையின் ஊடாக மேற்படி மூன்று துறைகளின் மேம்பாட்டுக்காக நிதியை ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆளுநர் தெரிவித்தார்.

ஒட்டுசுட்டானில் ஓட்டுத் தொழிற்சாலை உட்பட பல்வேறு தொழிற்சாலைகள் சில தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், மீன்பிடித் துறை மேம்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த செயலணியின் மூலம் செயற் பாடுகள் மேலும் துரிதப்படுத்தப்படவுள்ளதாக வும் ஆளுநர் குறிப்பிட்டார்
மேலும் இங்கே தொடர்க...

ஊடக சுதந்திரத்தை உறுதி செய்யும் செயற்பாடுகளை முன்னெடுப்போம்

ஊடக சுதந்திரத்தை மேலும் உறுதிப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்கும் அதேவேளை ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி வசதிகளை மேம் படுத்துதல், பயிற்சி நிறுவனங்களை அமைத்தல், வீடமைப்பு திட்டங்களை ஆரம்பித்தல், ஓய்வூதிய திட்ட மொன்றை நடைமுறைப் படுத்துதல் ஆகிய தேவைகள் பூரணப்படுத்தப்படும் அதேவேளை, ஊடக சுதந்திரத்தைப் போல் நாட்டின் ஒழுக்கவிழுமியங்களை பாதுகாக்க வேண்டும் என்பதையும் மறந்துவிடக் கூடாது என்று ஊடக த்துறைக்கான பிரதி அமைச்சர் மேர்வின் சில்வா இன்றைய உலக ஊடக சுதந்திர தின செய்தி யில் குறிப்பிட்டுள்ளார். அச் செய்தியில் அவர் மேலும் கூறியுள்ளதாவது :-

1991 மே மாதம் 3ஆம் திகதி நமீபியாவில் ஆபிரிக்க அச்சு ஊடக மாநாட்டில் ‘விண்டோக்’ பிரகடனம் நிறைவேற்றப் பட்டது. அப்பிரகடனத்தின் மூலம் ஜனநாயக மற்றும் அடிப்படை மனித உரிமை சுதந்திர ஊடகமொன்றின் தேவை உணரப்பட்டதுடன், சர்வதேச மட்டத்தில் சுதந்திர, சுயாதீன மற்றும் பல்தர ஊடகமொன்றை நடத்திச் செல்வதற்கு தேவையான அக்கறை உணரப்பட்டது.

யுனெஸ்கோ அமைப்பின் 26ஆவது உச்சி மாநாட்டில் விண்டோக் பிரகடனம் நிறைவேற்றப்பட்டதுடன், அப்பிரகடனம் ஐக்கிய நாடுகள் அமைப்பினால் ஏற்றுக்கொள்ளப் பட்டதையடுத்து சர்வதேச பத்திரிகை சுதந்திர தினம் அனுஷ்டிக்கப்பட ஆரம்பித்தது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் உலகளாவிய மனித உரிமை பிரகடனத்தின் 19ஆவது சரத்தின் மூலம் அனைத்து மக்கள் பிரிவினருக்கும் பேச்சு சுதந்திர உரிமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை கடந்த காலத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்த போதும் அந்த உரிமையை உறுதிப்படுத்த முயற்சித்தே வந்துள்ளது.

30 வருட கால யுத்தத்தை முடித்து நாட்டின் சமாதானம் ஏற்படுத்தப்பட்ட பின் முதல்முறையாக இப்போதே நாம் உலக சுதந்திர தினத்தை அனுஷ்டிக்கிறோம். எனவே புதிய ஊடக கலாசாரத்தை ஆரம்பிப்பதற்கு உதவும் வகையில் ஊடகத் துறையுடன் தொடர்புபட்ட அனைவரும் இந்த தினத்தை உபயோகப்படுத்த உதவ வேண்டும் என்றும் பிரதி ஊடக அமைச்சர் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

தற்போதைய சூழலுக்கேற்ப அவசரகால சட்டத்தில் திருத்தம்

சபையில் நாளை சமர்ப்பிக்க அரசு தீர்மானம்; அமைச்சர்கள், ஆளும் தரப்பு எம்.பிக்களுக்கு ஜனாதிபதி விளக்கம்தற்போதைய சூழ்நிலைக்கேற்ப அவசரகால சட்டத்திலுள்ள சில சரத்துக்களில் திருத்தங்களைச் செய்து நாளை 4ம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற ஆளுங் கட்சி பாராளுமன்றக் குழுக் கூட்டத்திலேயே இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதம், ஆயுத விடயங்கள் மற்றும் காலத்துக்குத் தேவையான சில ஷரத்துக்களுடன் மட்டுமே இம்முறை அவரசரகால சட்டம் விவாதத்திற்கு உட்படுத்தவுள்ளது. நாளையும் நாளை மறுதினமும் இதன் மீதான விவாதம் இடம்பெற்று வாக்களிப்புக்கு விடப்படு மென அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கி ன்றன. பாராளுமன்றம் நாளை 4ம் திகதி கூடுவதை முன்னிட்டு ஆளும் கட்சி பாராளுமன்றக் கூட்டம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்றது.

பிரதமர் டி. எம். ஜயரட்ன உட்பட அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், எம்.பிக்கள், கட்சித் தலைவர்கள் கலந்து கொண்ட இக் கூட்டத்தில் அவசரகாலச் சட்டம் உட்பட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடலுக்கு உட்படுத்தப்பட்டன.

பாராளுமன்றத்தில் வாய் மூல விடைக்களுக்கான வினாக்கள் வேளையின் போது கேட்கப்படும் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்களே பதிலளிக்க வேண்டுமென்ற பணிப்புரையை ஜனாதிபதி இங்கு விடுத்துள்ளார்.

இதன்கென அமைச்சர்கள் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகும் நாட்களில் 9.30 மணிக்கு சபைக்கு சமுகமளிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். நேற்றைய இந்த ஆளுங் கட்சிப் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தின் போது அமைச்சுக்களின் வாகனங்களை ஒப்படைத்தல் சம்பந்தமாகவும் கவனத்தில் கொள்ளப்பட்டன.

முன்பிருந்த அமைச்சுக்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அமைச்சுக்களுக்குப் பாரமளிக்க வேண்டிய வாகனங்களை இதுவரை ஒப்படைக்காமலுள்ளன. இவற்றை விரைவாக ஒப்படைக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். வாகனங்களை ஒப்படைக்கும் பட்சத்தில் புதிய அமைச்சுக்க ளுக்குத் தேவைப்படும் வாகனங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் ஜனாதிபதி தெரிவித் துள்ளார். இதற்கிணங்க வாகனங்களை ஒப்படைப்பதற்கு அமைச்சர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். நேற்றைய இக் கூட்டத்தின் போது பாராளுமன்றத்திற்கான புதிய சபைத் தலைவர் மற்றும் ஆளுங் கட்சியின் பிரதம கொறடா ஆகியோர் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
மேலும் இங்கே தொடர்க...

அரசியல் சார்பற்ற சகல இனங்களும் அங்கம் வகிக்கும் புத்திஜீவிகள் குழுவை நியமிக்க அரசாங்கம் தீர்மானம்-

வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு அரசாங்கம் முன்வைக்க தீர்வுயோசனை குறித்து சிறுபான்மை கட்சிகள் மற்றும் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசியல் சம்பந்தமற்ற சகல இனங்களும் அங்கம் வகிக்கும் புத்திஜீவிகள் குழுவொன்றை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது. அரசாங்கத்தின் இத்தீர்மானம் குறித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பூட்டான் திம்பு நகரில் வைத்து, இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கிடம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்திய - இலங்கை தலைவர்களிடையில் அங்கு அதிகாரபூர்வ பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. இதன்போது 13வது அரசியல் சாசனத் திருத்தத்தை விரிவுப்படுத்துவது, செனட் சபையை அமைப்பது, செனட் சபையின் பணிகள், வடக்கு கிழக்கு பிராந்தியத்தின் புனரமைப்பு பணிகள் மற்றும் மீள்குடியேற்ற விடயங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளன. இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக தமிழ் அரசியல் கட்சிகளுடன் மாத்திரமல்லாது, நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்காத கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்த தயாராகவிருப்பதாக ஜனாதிபதி, இந்திய பிரதமரிடம் இதன்போது தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பில் புளொட் தலைவரின் கருத்து-


காலத்தின் தேவை கருதி தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுவது இன்று அவசியம் என உணரப்பட்டுள்ள நிலையில் இன்று (02-05-2010) வெளியான வீரகேசரி வாரவெளியீட்டில் ஏ.எச்.சித்தீக் காரியப்பரின் கருத்துக்களத்தில் புளொட் தலைவர் சித்தார்த்தன் அவர்களும் இவ்விடயம் தொடர்பில் புளொட்டின் நிலைப்பாட்டினைத் தெரிவித்துள்ளார். அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என்று தமிழ்க் கட்சிகள் அனைத்தும் குரல் கொடுக்கக்கூடிய ஒரு சூழல் உருவானால் அது வரவேற்கத்தக்கது. அவ்வாறானதொரு ஐக்கியம் ஏற்பட்டால் அதனை நாங்கள் வரவேற்போம். எங்களது பங்களிப்பினையும் வழங்கத் தயாராகவுள்ளோம். இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில் நாங்கள் எவருடனும் பேசத் தயாராகவிருக்கிறோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மத்தியிலும் இதற்கு ஓர் இணக்கப்பாடு ஏற்பட்டால் அதனை வரவேற்கிறோம். ஆனால், தமிழ் மக்களின் பிரச்சினைக்கான இறுதித் தீர்வாக 13வது திருத்தச் சட்டமூலம் இருக்கமுடியாது. அதற்கு மேலாகத்தான் இருக்கவேண்டும். தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நியாயமான தீர்வு வழங்கப்படல் வேண்டும். அது ஒரு சமஷ்டி அமைப்பைக் கொண்ட தீர்வாக இருக்கவேண்டும். தமிழ் மக்கள் தாங்களே தங்கள் விடயங்களைக் கையாளக்கூடிய அதிகாரப் பகிர்வாக அது இருக்கவேண்டும். மேலும் வடக்கும் கிழக்கும் இணைய வேண்டுமென்ற விடயத்தில் ஆர்வம் காட்டாவிட்டால் அது ஒரு சாத்தியமான முடிவாக இருக்குமென நான் நம்பவில்லை. தனித்தனியே பேசுவதைவிட கூட்டுச் சேர்ந்து பேசுவது நல்லது என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிறேமதாசவின் ஞாபகார்த்த தினம்-

காலஞ்சென்ற முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிறேமதாசவின் 17வது ஞாபகார்த்த தினம் நேற்று . முன்னாள் ஜனாதிபதியின் ஞாபகார்த்த தினத்தை முன்னிட்டு நாட்டின் பல இடங்களிலும் விசேட நிகழ்வுகளும் சமய அனுஸ்டானங்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. பிரதான ஞாபகார்த்த நிகழ்வு கொழும்பு புதுக்கடை பிறேமதாச உருவச்சிலைக்கு அருகாமையில் நடைபெற்றது. எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் ஆரம்பமாக இரண்டுநிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து கொழும்பு மாநகரசபையின் பிரதம நிர்வாகி உமர் காமில் ரணசிங்க பிறேமதாசவின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர், பிரதித் தலைவர், பிறேமதாச குடும்பத்தினர், அரசியல்வாதிகள் என பலரும் மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வில் அரசியல்வாதிகள் பிறேமதாச குடும்பத்தினர் உள்ளிட்ட அதிக எண்ணிக்கையிலானோர் கலந்து கொண்டிருந்தனர். ரணசிங்க பிறேமதாச 1993ம் ஆண்டு கொழும்பு, ஆமர்வீதியில் மேதின ஊர்வலத்தில் கலந்து கொண்டிருந்தபோது இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட நிலையில் கைதான 110பேரும் விடுதலை-

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா நோக்கிப் பயணமானபோது கைதுசெய்யப்பட்ட 110பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். மாத்தறை பிரதம நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டமை தொடர்பாக குற்றத்தை ஒப்புக் கொண்டதால் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதற்கமைய இவர்களுக்கு தலா 20ஆயிரம் ரூபா அபராதத்தையும், 06மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையையும் மாத்தறை பிரதம நீதவான் விதித்துள்ளார். அவுஸ்திரேலியாவில் தஞ்சம்கோரும் நோக்கில் நான்கு மாதங்களுக்கு முன்னர் இவர்கள் சட்டவிரோதமான முறையில் செல்ல முயற்பட்டபோது காலி கடலில் வைத்து கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

நடிகை ரஞ்சிதாவை கைது செய்ய போலீஸ் முடிவு?

: இரு முறை நோட்டீஸ் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாத நடிகை ரஞ்சிதாவை கைது செய்து விசாரிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று டி.ஐ.ஜி. சரண் ரெட்டி தெரிவித்தார்.

இதுகுறித்து சனிக்கிழமை அவர் கூறியதாவது:

÷நடிகை ரஞ்சிதா கர்நாடக போலீஸக்ஷ்ரைத் தொடர்பு கொண்டு பேசியதாக வெளியான செய்தியில் உண்மை இல்லை. நித்யானந்தா குறித்து ரஞ்சிதாவிடம் விசாரணை நடத்த அவருக்கு இருமுறை நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். ஆனால் அவரிடம் இருந்து இதுவரை எந்தப் பதிலும் இல்லை.

÷மேலும் அவரைத் தொடர்பு கொள்ள தமிழக போலீஸக்ஷ்ரின் உதவியையும் நாடியுள்ளோம். அப்படியும் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. ரஞ்சிதாவிடம் விசாரணை நடத்துவது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளோம்.

÷உயர் அதிகாரிகள் உத்தரவிடும்பட்சத்தில் ரஞ்சிதா எங்கு இருந்தாலும் அவரைப்பிடித்து வந்து விசாரணை நடத்தத் தயங்க மாட்டோம்.

அதே சமயத்தில் நித்யானந்தா தொடர்பாக விசாரணை நடத்த தன்னை யாரும் தொடர்பு கொள்ளவில்லை என்று ரஞ்சிதா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நித்யானந்தா வழக்கில் முக்கிய சாட்சியான சச்சிதானந்தாவிடம் விசாரணை நடத்த தீர்மானித்துள்ளோம். திங்கள்கிழமை அவரிடம் விசாரணை நடத்தப்படும். நித்யானந்தா பற்றிய முழு விவரம் அவருக்குத் தெரியும். எனவே அவரிடம் நடத்தும் விசாரணையில் சில தகவல்கள் கிடைக்கலாம் என எதிர்பார்க்கிறோம்.

நித்யானந்தா மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே அவரிடம் இன்னும் சில வழக்குகள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டியது உள்ளன. மீண்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்பது குறித்தும் ஆலோசித்து வருகிறோம்.

÷இதுதொடர்பாக வழக்கை விசாரித்துவரும் ராம்நகர் மாவட்ட நீதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்வோம். நித்யானந்தாவுக்கு ஜாமீன் வழங்காவிட்டால் அவரை மீண்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்போம் என்றார் அவர்
மேலும் இங்கே தொடர்க...

நாட்டின் அபிவிருத்தியில் எதிரணியினர் பேதங்களை மறந்து அரசுடன் கைகோர்க்க வேண்டும்:ஜனாதிபதிஎத்தகைய அழுத்தங்கள் வந்தாலும் அவற்றுக்கு சளைக்காது ஈடுகொடுத்து நாட்டை அபிவிருத்தி பாதையில் இட்டுச் செல்லுவோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார்.

இந்த நாட்டை கட்டியெழுப்பவும், அபிவிருத்தி செய்யவுமென எதிர்க்கட்சிகள் பேதங்களை மறந்து அரசாங்கத்துடன் கைகோர்த்து செயற்பட முன்வரவேண்டும் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மே தினக் கூட்டம் ‘வேலைத் தளத்திற்குச் சக்தி, தொழிற்சாலைக்குப் பலம், தாய் மண்ணுக்கு சமாதானம்' என்ற தொனிப் பொருளில் கொழும்பு மாநகர சபை மைதானத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

இக் கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

"இன்று தொழிலாளர் தினத்தை நாம் பெருமையுடனும், கௌரவமாகவும் கொண்டாடுகின்றோம். முப்பது வருட காலப் பயங்கரவாதம் முழுமையாக ஒழிக்கப்பட்டதன் பலனே இது. யுத்தம் நிலவிய காலத்தில் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். இதனை நாமறிவோம்.

பயங்கரவாதத்தை முழுமையாக ஒழித்து இந்தப் பாரிய வெற்றியைப் பெற அடித்தளமிட்டவர்கள் தொழிலாளர்கள் தான். மனிதாபிமான இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட சமயத்தில் வேலைத் தளத்தில் என்ன தான் பிரச்சினைகள் இருந்த போதிலும் அவற்றைப் பேசித் தீர்த்துக்கொள்வதற்குத் தொழிலாளர்கள் பெரிதும் ஒத்துழைப்பு நல்கினார்கள். அரசாங்கம் அவர்களுக்கு உரிய சந்தர்ப்பங்களில் சம்பள உயர்வுகளையும் வழங்கியது.

கடந்த கால ஆட்சியாளர்கள் அரசாங்க நிறுவனங்களில் தொழிலாளர்களை குறைப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்திற்கு உடன்படிக்கை மூலம் இணங்கி இருந்தார்கள். அப்படி இருந்தும் நாம் பதவிக்கு வந்ததும் அதனைச் செய்யவில்லை. அரசாங்கத் துறைக்கு ஆட்சேர்ப்பு செய்து அரச துறையை வலுப்படுத்தினோம். அரச சொத்துக்கள் எதனையும் நாம் தனியார் மயப்படுத்தவில்லை.

உலகப் பொருளாதார நெருக்கடி காரணமாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் லட்சக் கணக்கானோர் தொழில்களை இழந்தனர். வங்கிகள் வீழ்ச்சி அடைந்தன. இருந்தும், எமது எந்தவொரு வங்கியும் வீழ்ச்சி அடையவோ, எவரும் தொழில் இழக்கவோ இடமளிக்கவில்லை.

நிதி நெருக்கடிகளிலிருந்தும், பொருளாதார வீழ்ச்சியிலிருந்தும் நிறுவனங்களையும் வங்கிகளையும் நாம் பாதுகாத்தோம். நாம் நீண்ட காலம் தொழிலாளர்களுடன் இணைந்து செயற்பட்டு வந்ததன் பயனாகவே இதனைச் செய்துகொள்ள முடிந்தது.

பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து நாட்டை மீட்டெடுத்து ஐக்கியப்படுத்துவதற்கு பங்களிப்பு செய்தது போல் பிரிந்துள்ள உள்ளங்களை மீண்டும் ஐக்கியப்படுத்தவும் தொழிலாளர்கள் பங்களிப்பு செய்ய வேண்டும்.

நாட்டைப் பொருளாதார ரீதியாக அபிவிருத்தி செய்வதற்கு தொழிலாளர்களின் பங்களிப்பு இன்றியமையாதது. அதனை நான் எதிர்பார்க்கின்றேன். பொருளாதார அபிவிருத்திப் போராட்டத்தின் வீரர்கள் தொழிலாளர்கள் தான். இதற்கு நீங்கள் முழுமையாக ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

தொழிலாளர்கள் பலம் மிக்க சக்தி கொண்டவர்கள். அவர்களால் எந்தச் சக்தியையும் இறங்கி வரச் செய்ய முடியும். அதனால் தொழிலாளர்கள் தங்கள் பலத்தை பிழையான வழியில் பயன்படுத்தி அதனை வீணடித்து விடாது பாதுகாக்க வேண்டியது தொழிற்சங்க தலைவர்களின் பொறுப்பாகும்.

நாம் ஒரே நேரத்தில் ஐந்து துறைமுகங்களை அபிவிருத்தி செய்கின்றோம். இதேபோல், உட்கட்டமைப்பு துறைகளையும் மேம்படுத்தி வருகின்றோம். இந்நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான பின்புலத்தை ஏற்படுத்த நாம் ஒருபோதும் பின்நிற்க மாட்டோம். இந்நாட்டில் அச்சம், பீதியின்றி வாழக் கூடிய சூழலை ஏற்படுத்துவது எமது பொறுப்பு. அமைச்சர்கள் தம்மை விடவும் நாட்டையும், நாட்டு மக்களையும் கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும்.

நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது என்பதை எதிரணியினருக்கு சொல்லி வைக்க விரும்புகின்றேன். நாட்டைக் கேலி செய்யாதீர்கள் என்றும் அவர்களைக் கேட்டுக்கொள்ளுகின்றேன்.

இந்நாட்டின் அபிவிருத்திக்கு இடைஞ்சல்களை ஏற்படுத்தாதீர்கள் என்றும் அவர்களுக்குக் கூறுகிறேன். நாட்டு மக்கள் எமக்கு தெளிவான ஆணையை வழங்கியுள்ளார்கள். இதனை எதிரணியினர் புரிந்துகொண்டு நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக எம்முடன் கைகோர்த்து செயற்பட முன்வர வேண்டும்." எனத் தெரிவித்தார்.

இம்மேதினக் கூட்டத்தில் ஐந்து யோசனைகள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.இக்கூட்டத்தில் பிரதமர் டி. எம். ஜயரட்ண, அமைச்சர்கள் மைத்திரிபால சிறிசேன,டக்ளஸ் தேவானந்தா, சுசில் பிரேம ஜயந்த, டளஸ் அழகப்பெரும, பசில் ராஜபக்ஷ, தினேஷ் குணவர்த்தன, மேல் மாகாண ஆளுநர் எஸ். அலவி மௌலானா உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டார்கள்
மேலும் இங்கே தொடர்க...

வட.முஸ்லிம்கள் தமது தாயகத்தில் மீளக்குடியேறுவதையே இலக்காககொண்டுள்ளனர்:றிசாத் பதியுதீன்வடமாகாண முஸ்லிம்கள் தமது தாயகத்தில் மீள்குடியேறுவதையே இலக்காக கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள கைத்தொழில் மற்றும் வர்த்தக துறை அபிவிருத்தி அமைச்சர் றிசாத் பதியுதீன் அதனை அடைந்த கொள்வதற்கான ஆக்க பூர்வமான பணிகளை ஜனாதிபதி முன்னெடுப்பதாக தம்மிடம் தெரிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

புத்தளம் புளிச்சாக்குளம் ஹிஜ்ரத்புரம் இடம் பெயர்ந்த மக்கள் வசிக்கும் கிராமத்தில் இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் அவர் அங்கு பேசுகையில் கூறியதாவது :-

"கடந்த 2004 ஆம் ஆண்டு வன்னி மாவட்டத்தில் ஆளுங்கட்சிக்கு இருந்த ஒரு நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் தற்போது இரண்டாக அதிகரித்துள்ளது.ஜனாதிபதியின் மீதும்,எம் மீதும் மக்கள் கொண்ட நம்பிக்கையால் அதனை அடைய முடிந்தது.

தேர்தல் காலங்களில் பிரிந்து நின்றவர்கள்,அதனைவிடுத்து தற்போது மக்களுக்கு கிடைக்கும் நன்மைகளுக்காக ஒன்றுபட வேண்டும்.எமக்குள் பிரச்சினைகளும்,பிளவுகளும்; தேவையில்லை நாம் ஒன்றுபட்டு எமது இலக்கை நோக்கிய பயணத்தில் ஒன்றுபடுவோம்" என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

அமைச்சுகளுக்குத் தேவையான நிதியை வழங்குமாறு திறைசேரிக்கு ஜனாதிபதி உத்தரவுஅமைச்சுகளின் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குத் தேவையான நிதியை வழங்குமாறு திறைசேரிக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

அடுத்த மூன்று மாத காலத்திற்குத் தேவையான நிதியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிதியமைச்சர் என்ற வகையில் திறைசேரி செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவுக்கு நேற்றுமுன்தினம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வருடத்திற்கான வரவுசெலவுத்திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாத நிலை யில் முதல் நான்கு மாதங்களுக்கான கணக்கு வாக்கெடுப்பையே கடந்த நவம்பர் மாதம் நடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. அக் கணக்கு வாக்குகெடுப்பின் செலவினங்களுக் கான கால எல்லை ஏப்ரல் 30 ஆம் திகதியுடன் முடிவடைந்துவிட்டமை குறிப்பிடத்தக்கது.

வரவுசெலவுத் திட்டமொன்று நிறைவேற்றப் படும் வரை அமைச்சுகளுக்குத் தேவையான நிதியை திறைசேரியிலிருந்து ஒதுக்குவதற்கு அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஜூலை முதல் டிசெம்பர் வரையான ஆறு மாத காலத்திற்காக குறுகிய கால வரவு செல வுத் திட்டமொன்றை சமர்ப்பிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அடுத்த வருடத்திற்கான வரவுசெலவுத்திட்டம் வழமைபோல் நவம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக் கப்படும் எனவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அண்மையில் கூறியிருந்தமை குறிப் பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்த விசாரணைக்காக முழுமையாகச் செயற்படுவோம்-பிரித்தானிய தொழிற்கட்சி அறிக்கையில் தெரிவிப்பு


இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பில் சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்படுவதற்கு நாங்கள் முழுமையாக செயலாற்றுவோம் என பிரித்தானிய தொழிற் கட்சியால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"பிரித்தானியா வாழ் தமிழ் மக்களுக்கு தொழிற்கட்சியின் வேண்டுகோள்' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இலங்கை அரசால் தமிழ் மக்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடாத்தப்படுகின்றனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் இடம் பெயர்ந்தும் உள்ளனர். இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்திருந்தாலும், தமிழ் மக்களின் அமைதிக்கான போராட்டம் இன்னும் நடந்து கொண்டே இருக்கின்றது.

தமிழ் மக்கள் தொடர்பில் இலங்கை அரசு தனது கொள்கைகளையும், அணுகுமுறைகளையும் மாற்றுவதோடு, தமிழ் மக்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை மதிக்கவும் வேண்டும். இதுகுறித்து அனைத்துலக சமூகத்தின் கவனத்துக்கு கொண்டு வந்து தமிழ் மக்களின் அரசியல் விருப்புகளை நிறைவு செய்வதற்கு கொள்கைகளையும், அணுகுமுறைகளையும் மாற்றுவதோடு, தமிழ் மக்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை மதிக்கவும் வேண்டும். இதுகுறித்து அனைத்துலக சமூகத்தின் கவனத்துக்கு கொண்டு வந்து தமிழ் மக்களின் அரசியல் விருப்புகளை நிறைவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

ஏன் தொழிற்கட்சி?

தொழிற்கட்சியின் முக்கிய பெறுமானங் களான அனைத்துலக தேசியம், சுதந்திரம் மற்றும் சமூக நீதி போன்ற அடிப்படை அம்சங் கள் தமிழ் மக்களின் அடிப்படை அம்சங்களாக அமைகின்றன. அதேவேளை, இப்பெறுமானங்களே இலங் கையில் தமிழ் மக்கள் சுதந்திரத்தையும், அமைதியையும் பெறுவதற்கு முக்கிய அடிப்படை அம்சங்களாக அமைகின்றன.

தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் நாம் மேற்கொண்ட சில நடவடிக் கைகள் வெற்றி கண்டுள்ளன. இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத் தின் கடன் நிறுத்தப்படுவதற்கும், ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான ஏற்றுமதி வரிச்சலுகை தற்காலிகமாக இடை நிறுத்தப் படுவதற்கும் தொழிற்கட்சியின் அழுத்தங்க ளும், புதிய கொள்கைகளும் காரணமாக அமைந்துள்ளன. 2011ம் ஆண்டில் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை கொழும்பில் நடத்துவதற்கு தொழிற்கட்சி தெரிவித்த எதிர்ப்பின் காரண மாக, அம்மாநாட்டை அங்கு நடத்துவதில்லை என்ற தீர்மானம் எடுக்கப்பட்டது.

போர் நடைபெற்ற காலங்களில் இலங்கை மேற்கொண்ட போர்க் குற்றங்கள் தொடர்பில் நீதியான, சுதந்திரமான விசாரணைகள் நடாத் தப்பட வேண்டும் என்பதை தொழிற்கட் சியின் தேர்தல் அறிக்கை வலியுறுத்தியுள்ளது. தமிழ் மக்கள் நீதியையும், சுதந்திரத்தையும் பெறுவதற்கான நீண்ட பயணத்தில் தொழிற் கட்சி உங்களுடன் தொடர்ந்து தோளுக்குத் தோள் நின்று உழைத்து வரும் என்பதை உறுதி செய்கின்றோம்.

இலங்கை போர்க் குற்றங்கள் தொடர்பில் சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்படுவ தற்கு நாங்கள் முழுமையாக செயலாற்று வோம். அத்துடன், பிரித்தானியா தமிழர் பேரவை, உலகத் தமிழர் பேரவை மற்றும் நாடு கடந்த அரசு உட்பட பிரித்தானியாவில் இருக்கின்ற எல்லா அமைப்புகளுடனும் இணைந்து, போரின் போது இடம்பெயர்ந்த தமிழ் மக்களை மீளக்குடியேற்றுவது, போரினால் சிதைக்கப்பட்ட தமிழர் தாயகத்தை மீளக் கட்டியெழுப்புவது, இலங்கையின் இனப்பிரச்சினைக்கு ஒரு அரசியல் தீர்வு காண்பதற்கு ஜனநாயக ரீதியில் இவ்வமைப்புகளால் மேற்கொள்ளப்படுகின்ற எல்லா வகையான நடவடிக்கைகளையும் முன் னெடுப்பதற்கு நாம் ஆதரவு வழங்கிச் செய லாற்றுவோம் என்பதை உறுதிப்படுத்துகின்றோம்.

இந்நிலையில், பிரித்தானியாவில் மட்டு மல்ல இலங்கையில் வாழ்கின்ற தமிழ் மக்களின் நலன்களிலும் தொழிற்கட்சி அனைத் துலக அளவில் ஆக்கபூர்வமான நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டுமானால், அக்கட்சி ஆட்சிபீடத்தில் மீண்டும் அமரும் வகையில் எதிர்வரும் ஆறாம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அதன் வெற்றியை உறுதிப்படுத்த வேண்டியது உங்களின் கடமையாகும் என மேற்படி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் இங்கே தொடர்க...

சுவிஸில் புளொட்டின் மேதின ஊர்வலம்.. சிறப்பாக நடைபெற்றது!!
சுவிஸில் உள்ள இடதுசாரிகள் மற்றும் முற்போக்கு முன்னணிகளுடன் ஈபிஆர்எல்எப் -பத்மநாபா அமைப்புடன் இணைந்து தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) அமைப்பால் சுவிஸில் நேற்று சனிக்கிழமை காலை மேதின ஊர்வலம் நடைபெற்றது. காலை 10மணிக்கு சுவிஸ் கெல்வெத்தியா பிளாத்ஸ் என்னும் இடத்தில் ஆரம்பமான புளொட் இயக்கத்தின் மேதின ஊர்வலம் பெல்வி என்னும் இடத்தில் நிறைவடைந்தது கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது பெண்கள் குழந்தைகள் கழகதோழர்கள் கழக ஆதரவாளர்களும் கலந்து கொன்டு சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.. மேற்படி மேதின ஊர்வலத்தில் புளொட் ஜேர்மன் கிளைத் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை இவ் ஊர்வலத்தில் மற்றும் ஒர் பகுதியில் கலந்து கொன்ட சுவிஸ் புலிகளின் மேதின ஊர்வலத்தில் இதுவரை காலமும் இல்லாத வகையில் முதன்முறையாக மிக சொற்ப அளவிலேயே மக்கள் கலந்து கொன்டு இருந்தனர். இதுவரை காலம் சுவிஸ் புலிகளின் மேதின ஊர்வலத்தில் பல நூற்றுக்கணக்கான பொதுமக்கள் (புலிகளின் இணையங்களில் 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொன்டுள்ளனர் என தெரிவிப்பார்கள்) கலந்து கொன்ட போதும் இம்முறை குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு 50ற்கும் 100க்கும் இடைபட்ட பொதுமக்களே கலந்து கொன்டுள்ளதுடன் அதிலும் பிரபாகரனின் இரு புகைப்படங்களும் சிறுவர்களின் கையில் பத்துக்கும் குறைவான புலிக்கொடிகளே காணப்பட்டது இது குறித்து அங்கிருந்த அரசியல் விமர்சகர் தெரிவிக்கையில்.. வெளிநாட்டில் இருந்த புலி ஆதரவு மந்தைகளை நம்பி பிரபாகரன் போராட்டத்தில் ஈடுபட்டது மிகவும் கவலைக்குரிய விடயம் என்பது தற்போது தெளிவாகப் புரிகின்றது எனத் தெரிவித்தார்


மேலும் இங்கே தொடர்க...