3 செப்டம்பர், 2010

அரசியலமைப்பு திருத்தம் : ஐதேக உறுப்பினர்கள் இருவர் ஆதரவு




அரசியலமைப்பு திருத்தம் : ஐதேக உறுப்பினர்கள் இருவர் ஆதரவு அடுத்த வாரம் இடம்பெறவுள்ள அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவாகத் தாம் வாக்களிக்கவுள்ளதாக ஐக்கியத் தேசியக் கட்சியின் பிரதி செயலாளர் லக்ஷ்மன் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் சற்று முன்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, ஐதேகவின் பொலன்னறுவ மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏர்ள் குணசேகரவும் அரசியலமைப்பு திருத்தச் சட்டத்துக்கு ஆதரவளிக்கப் போவதாக நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

அரச ஊழியர்களின் உரிமைகள் பறிபோகும் சூழல் தோன்றியுள்ளது : ரணில்



அரச ஊழியர்களின் உரிமைகள் பறிபோகும் ஆபத்தான சூழல் நாட்டில் தோன்றியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எச்சரிக்கை விடுத்தார். பதினெட்டாவது அரசியலமைப்பு திருத்தத்தினூடாக சுயாதீன அரசு சேவை ஆணைக்குழு மற்றும் சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு என்பவற்றை, நீக்குவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

கொழும்பு கேம்டபிரிஜ் ரெரஸிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் வாசஸ்தலத்தில் தொழிற்சங்க பிரதிநிதிகளுடனான சந்திப்பு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இங்கு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

அங்கு எதிர்க்கட்சித் தலைவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

நாட்டில் மனித உரிமைகளை பாதுகாக்குமாறு அன்று அரசாங்கத்தை கோரினோம். இதன்போது நாம் புலிகளுக்கு துணை போவதாக ஜனாதிபதி எம் மீது குற்றம் சாட்டினார். ஆனால் இன்று விடுதலைப் புலிகளை அழித்து நாட்டை ஒன்றுபடுத்திய சரத் பொன்சேகா சிறை வைக்கப்பட்டுள்ளார்.

அவரது பதவிகள் பறிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாது ஓய்வூதியமும் பறிக்கப்பட்டுள்ளது. இது சிவில் மற்றும் அரசியல் உரிமைகளை மீறும் செயலாகும். ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்த்தன, சந்திரிகா ஆகியோர் சர்வதேச சிவில் அரசியல் உரிமைகள் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருந்தனர். எனவே உள்ளூரில் நியாயம் கிடைக்கா விட்டால் சர்வதேசத்தின் உதவியை கோர சந்தர்ப்பம் இருந்தது.

ஆனால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் இதில் கையெழுத்திடாததால் சரத் பொன்சேகாவின் பதவிகள், ஓய்வூதியம் பறிக்கப்பட்டது தொடர்பில் சர்வதேச ரீதியில் குரல் கொடுக்க முடியாதுள்ளது.

நாற்பது வருட காலம் அரச துறையில் நாட்டுக்கு சேவை செய்தவர் சரத் பொன்சேகா. அதற்கு கிடைத்த வெகுமதியே ஓய்வூதியமாகும். நாட்டிலுள்ள அனைத்து அரச ஊழியர்களும் அவர்களது சேவையை கௌரவித்தே ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இது மனித உரிமை சம்பந்தப்பட் விடயமாகும். இந்த உரிமையை பறிப்பதென்பது மனித உரிமை மீறலாகும். எமது நாட்டின் அரசியலமைப்பிற்கு எதிரான செயற்பாடாகும். பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னரே சரத் பொன்சேகா அரசியல் தொடர்பில் கவனம் செலுத்தினார்.

அதற்கு முன்பு அவர் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அரசாங்கம் பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்துகிறது. அரசாங்கம் அரச ஊழியர்களின் உரிமைகளை பறித்து அவர்களை அடிமைகளாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. அரச ஊழியர்கள் மரத்தில் கட்டி வைத்து தாக்கப்படுகின்றனர். தேசிய இறைவரித் திணைளக்கள அதிகாரி பஸ்ஸில் வைத்து தாக்கப்படுகின்றார்.

இவ்வாறு நாடு தழுவிய ரீதியில் அரச ஊழியர்களுக்கு எதிரான அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் அரசியல்வாதிகளின் பிள்ளைகளை வகுப்பேற்றும் செய்யா விட்க்ஷில் ஆசிரியர்களும் தாக்கப்படும் அபாயம் ருக்கின்றது. சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு இல்லாததன் பலாபலன்கள் இன்று இவ்வாறு தலைதூக்கியுள்ளது.

அரசியலமைப்பு திருத்தத்தின் போது சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு மற்றும் சுயாதீன அரச சேவை ஆணைக்குழுவை நீக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இவ்வாறு படிப்படியாக அரச ஊழியர்கள் மீதான அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்படுவதோடு அவர்களது உரிமையான ஓய்வூதியத்தை பறிக்கும் நடவடிக்கைக்கும் அரசாங்கம் பிள்ளையார் சுழி போட்டுள்ளது.

அரசாங்கத்தின் சர்வாதிகார பயணத்தை தடுத்து நிறுத்தி அரச ஊழியர்களை பாதுகாக்க வேண்டும். இதற்கு தொழிற்சங்கங்கள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும். போராட வேண்டும். இதற்கு பங்களிப்பை வழங்க ஐ. தே. கட்சி தயாராகவுள்ளது என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

- அமெரிக்காவில் அதிசயம் 40-வது மாடியில் இருந்து விழுந்தவர் உயிர் பிழைத்தார்






அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் தாமஸ் மகில் (வயது 40). சில பிரச்சினைகளால் மனவேதனையில் இருந்த அவர் தற்கொலை செய்ய முடிவு எடுத்தார். இதற்காக தனது குடியிருப்பில் 40-வது மாடி உச்சிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்தார். ஆனாலும் அவர் அதிசயமாக உயிர் பிழைத்து விட்டார்.

கட்டிடத்துக்கு கீழே ஏராளமான கார்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. அதில் ஒரு கார் மேற்கூரை இல்லாமல் திறந்த அமைப்பில் இருந்தது. அந்த காரின் பின் இருக்கையில் அவர் விழுந்தார். இதனால் அவர் காயத்துடன் தப்பி விட்டார்.

ஆனாலும் அவருடைய கால் எலும்பு உடைந்து விட்டது. இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் இங்கே தொடர்க...

சர்வதேச பொலிஸ் எனக்கூறி பணம், நகைகள் கொள்ளை டுபாயிலிருந்து வந்த பெண்ணிடம் சிலாபத்தில் கைவரிசை: ஆறுபேர் கைது


டுபாயிலிருந்து இலங்கை வந்த பெண்ணொருவரிடம் சர்வதேச பொலிஸார் எனக் கூறி, 5 இலட்சம் ரூபா பணத்தையும் நகைகளையும் கொள்ளையிட்ட ஆறு பேரை சிலாபம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நீண்டகாலமாக டுபாயில் தொழில் புரிந்த பின் நாடு திரும்பிய சிலாபம் கொஸ்வத்த பொத்துவடவன பகுதியிலுள்ள மேற்படி பெண் வீட்டிலிருந்த சமயம் அரச இலச்சினை பொறிக்கப்பட்ட வெள்ளை நிற டிபெண்டர் வாகனமொன்றில் வந்த சந்தேக நபர்கள் வீட்டை முற்றுகை யிட்ட துடன் வெளிநாட்டில் தங்க நகை மோசடி செய்யப்பட்டுள்ளதாக கூறி மேற்படி பெண்ணை தீவிரமாக விசாரணைக்குட்படுத்தியுள்ளனர்.

வீட்டை சோதனையிடுவதாக கூறி, வீட்டிலிருந்த சுமார் ஒரு இலட்சத்து 2000 ரூபாவையும் தங்க நகைகளையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். மீண்டும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் மறுநாள் கொழும்புக்கு வருமாறும் கூறிச் சென்றுள் ளனர். கொழும்பில் தாம் குறிப்பிட்ட இடத்துக்கு வருமாறு சந்தேக நபர்கள் தெரிவித்தமைக்கு இணங்க மேற்படி பெண் வந்துள்ளார்.

அங்கும் வெளிநாட்டில் தங்க நகை மோசடி தொடர்பாக தீவிரமாக விசாரணை களை மேற்கொண்டதுடன் பெண்ணின் வைப்புக் கணக்கிலிருந்து 4 இலட்சத்து 75,000 ரூபாவினையும் பெற்றுக்கொண்டு ள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக தான் ஏமாற்றப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் அத்தியட்சகரிடம் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து பொலிஸ் தீவிர விசாரணைகளை ஆரம்பித்தனர்.

பெண்ணின் வீட்டுக்கு வந்த டிபெண்டர் ஜீப் வண்டியுடன் நபர் ஒருவர் பொரளையில் கைதாகியுள்ளார். இவரிடம் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் கடுவெல, தெமட்டகொட, கொச்சிகடை போன்ற பகுதிகளிலிருந்து ஏனைய சந்தேக நபர்கள் 5 பேரும் கைதாகியுள்ளனர்.

அவர்களிடமிருந்து 5 லட்சத்து 81,000 ரூபா பணத்தையும் தங்க நகைகளையும் கைப்பற்றினர். சந்தேக நபர்கள் 6 பேர் நேற்று மாரவில மாஜிஸ்திரேட் முன்னி லையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

சம்பிரதாய யோசனைகளைத் தவிர்த்து அபிவிருத்தியை பூர்த்தி செய்யும் பட்ஜட் ஜனாதிபதி அமைச்சர்களுக்கு அறிவுறுத்தல்

நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் பாரிய அபிவிருத்தித் திட்டங்களைப் பூர்த்தி செய்யும் வகையில் 2011 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்துக்கான உத்தேச மதிப்பீட்டு ஆலோசனைகளை முன்வைக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சகல அமைச்சர்களுக்கும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

சம்பிரதாய வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிக்கும்; அதனை நடைமுறைப்படுத்தும் கட்டமைப்பிலிருந்து விலகி, 2011ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்ட யோசனைகளை முன்வைக்குமாறு ஜனாதிபதி அமைச்சர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மூன்று தசாப்த கால யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் ஆசியாவின் பொருளாதாரத்தில் வளர்ச்சியடைந்து வரும் நாடாக இலங்கையை உருவாக்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். எனவே, நாடு முழுவதும் ஆரம்பிக்கப்பட்டுள்ள விசேடமாக பொருளாதார உட்கட்டமைப்பு வளங்கள் மற்றும் கைத்தொழில்துறை அபிவிருத்தி உள்ளிட்ட சகல செயற்றிட்டங்களையும் பூர்த்தி செய்யும் வகையில் அடுத்த நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டைச் செய்யும் பொழுது விசேட கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி திறைசேரிக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

இதன்படி, திறைசேரி அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து தமது அமைச்சுகளின் உத்தேச மதிப்பீட்டை முன்வைக்குமாறு சகல அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல்களைப் பெற்றுக்கொடுக்குமாறு அமைச்சர்களுக்கு ஜனாதிபதி தெளிவுபடுத்தியுள்ளார்.

நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திப் பணிகளைத் துரிதமாகப் பூர்த்தி செய்யும் வகையில் 2011 ஆம் ஆண் டில் முன்னுரிமை அளித்துச் செயற்படும் வகையில் ஜனாதிபதி முன்வைத்த பிரேர ணையை அமைச்சரவை அண்மையில் அங்கீகரித்தது.

அடுத்த ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இம்மாதம் இறுதி யில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் படவு ள்ளது. அதற்கேற்றவாறு அதனைத் தயாரித்து நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி மேலும் அறிவுறுத்தியுள்ளதாகவும் தகவல் திணை க்களம் குறிப்பிட்டுள்ளது
மேலும் இங்கே தொடர்க...

மக்களின் இறைமையை வலுப்படுத்துவதற்கே அரசியலமைப்புத் திருத்தம் சு.க.மாநாட்டில் ஜனாதிபதி






எனது பதவிக் காலத்தை நீடித்துக் கொள்ளுவதற்காக அரசியல் யாப்பு திருத்தத்தை முன்வைக்கவில்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார்.

ஜனாதிபதி பதவியை இரண்டு தடவைகள் வகித்த காரணத்திற்காக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை இந்த யாப்பு திருத்தத்தில் நீக்கப்படுவதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

இந்தக் கட்டுப்பாட்டை நீக்கினாலும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அபேட்சகரை கட்சி தான் தெரிவு செய்யும் எனவும் ஜனாதிபதி கூறினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வெற்றிகரமான 59வது வருடாந்த தேசிய மாநாடு அலரி மாளிகையில் நேற்று நடைபெற்றது. இம்மாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

இம்மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில், ஜனாதிபதி பதவியை இரண்டு தடவைகள் வகித்த ஒருவரை மீண்டும் அப்பதவிக்கு தெரிவு செய்வதா? இல்லையா என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் இத்திருத்தத்தின் ஊடாக மக்களிடம் அளிக்கப்படுகின்றது. நாம் மக்கள் மயமான அரசியல் யாப்பு திருத்தத்தையே முன்வைக்கவிருக்கின்றோம். இதனூடாக ஆறு வருட பதவிக் காலத்தை 12 வருடங்களாக நீடிக்கும் நோக்கம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. மக்கள் விரும்புபவர் தான் ஜனாதிபதியாகத் தெரிவாவார்.

தற்போது நடைமுறையிலுள்ள அரசியல் யாப்பின் கீழ் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற முடியாது என அரசியலமைப்பு விமர்சகர்கள் கூறினர். ஆனால் நாம் அதனை முடியும் என நிரூபித்துள்ளோம். சூரியனும், சந்திரனும் இருக்கும் வரையும் இந்த யாப்பு இருக்க வேண்டியதில்லை. நாட்டு மக்களின் தேவைக்கு ஏற்ப அது திருத்தப் படவேண்டும். அபிவிருத்தியும், தேசிய சமத்துவமும் மாறவேண்டும். மக்களின் இறையாண்மையை வலுப்படுத்தக்கூடிய வகையில் அரசி யல் யாப்பு மாற வேண்டும்.

இந்த அரசியல் யாப்பின் ஊடாக மக்களின் விருப்பு, வெறுப்புக்களை நிறைவேற்ற முடியாவிட்டால் தேவையான பலத்தை பெற்று வலு வான அரசை அமைத்து அதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன் னெடுப்பது எமது பொறுப்பு என் பதை நினைவூட்ட விரும்புகின் றேன்.

நாம் இப்போது அரசியலமைப்பு திருத்தத்தை மக்கள் முன்வைத்திருக் கின்றோம். அது மக்கள் மயமான அரசியல் யாப்பு. இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதையும், அபிவிருத்தி செய்வதையும் நோக் காக கொண்டு தான் இந்த யாப்பு திருத்தம் முன்வைக்கப்பட்டிருக் கிறதே தவிர எனது பதவிக்காலத்தை நீடித்துக்கொள்ளுவதற்காக அல்ல. அப்படி நினைப்பது தவறு. இத் திருத்தம் ஜனாதிபதி பதவிக்கால த்தை நீடிக்கக் கூடியதல்ல.

தற்போதைய அரசியல் யாப்பின் 9 ஆவது ஷரத்தில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தகுதியற்ற வர்களின் பட்டியல் உள்ளது. அதில் மன நோயாளர்கள், லஞ்சம் பெற்ற வர்கள், வங்குரோத்து காரர்கள் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர். மக்களின் வாக்கு மூலம் இருமுறை ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்ய ப்பட்டவர்களும் அப்பட்டியலில் இவர்களுடன் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனை நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அரசியலமைப்பு சபை பாராளு மன்றத்திற்கு வெளியே இருக்கி ன்றது. இதற்கு மாற்றமாக பாரா ளுமன்ற சபாநாயகர், பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் மூவரையும் இன அடிப்படையில் தமிழர் சார்பாக ஒருவரும், முஸ்லிம் சார்பாக ஒருவரும் இச்சபைக்கு நியமிக்கப்படுவர்.

மக்கள் பாராளுமன்றத்திற்கு அதி காரத்தை வழங்கும் படியும், அதுவே உயரிய இடம் என்கின்ற னர். அதனையே நாம் செய்கின் றோம். அதனால் மக்களுக்கு உண் மைகளை தெளிவுபடுத்த வேண்டி யுள்ளது.

நாம் நாட்டை ஐக்கியப்படுத்தியுள் ளோம். இனி நாட்டை அபிவிருத்தி பாதையில் இட்டுச் செல்ல வேண்டி யுள்ளது.

இதற்கு ஸ்ரீல. சு. கட்சி வலுவான பங்களிப்பை அளிக்கவேண்டும். அதனையே நாம் எதிர்பார்க்கின் றோம்.

நாம் இப்போது இலங்கையில் வலுவான அரசியல் கட்சியாக இருக்கின்றோம். அதற்காக சிறிய அரசியல் கட்சிகளை குறைத்து மதிப்பிடக்கூடாது என்பதை நான் சொல்லி வைக்கின்றேன். எம்மால் தனியே அரசியல் செய்ய முடியாது. எமக்கு எப்போதும் இடதுசாரிக் கட்சிகள் பக்கபலமாக இருந்தன. எமது தனித்துவத்தையும், அந்தக் கட்சிகளின் தனித்துவத்தையும் பேணிக் கொண்டு நாட்டுக்காக வேலை செய்ய எமக்கு சந்தர்ப்பம் கிடைக்கப்பெற வேண்டும்.

அத னால் நாம் எல்லாக் கட்சி களுடனும் சக வாழ்வுடன் செயற் பட கூடிய வர்களாக இருக்கவேண் டும்.

இன்று ஸ்ரீல. சு. கட்சி இந்நாட்டில் வாழுகின்ற சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்று சேரக்கூடிய தேசியக் கட்சியாக மாறியுள்ளது.

இப்போது தமிழ், முஸ்லிம் தலைவர்கள் எமது கட்சியில் உரு வாகி வருகின்றார்கள். ஆனால் ஒரு சந்தர்ப்பத்தில் எமது கட்சி யாழ்ப் பாண தமிழரை பிரதிநிதித்துவப்படு த்துவதற்காக மிகவும் சிரமப்பட்டிரு க்கின்றது.

இன்று அந்த நிலைமை இல்லை. எல்லா இனத்தவரும், எல்லா கட்சியிலிருந்தும் எமது கட்சியோடு இணையவேண்டும். புதிய இளமை முகம் கட்சிக்கு வரவேண்டும். அப் போது தான் கட்சி நவீனமான முறையில் வலுவாக முன்னேறும் என்றார்.

இம்மாநாட்டில் பிரதமர் டி.எம். ஜயரட்ண, அமைச்சர் மைத்திரிபால சிறிசேன உட்பட அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், எம்.பி.க்கள், மாகாண ஆளுநர்கள், முதலமை ச்சர்கள், உறுப்பினர்கள், உள்ளூரா ட்சி மன்ற தலைவர்கள், உறுப்பி னர்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...