கொழும்பு: வளர்ச்சியே அடையாத நாடு இலங்கை எனவும், ஆண்டு வருமானம் 2 ஆயிரம் டாலருக்கும் குறைவாக உள்ளதாகவும் உலக வங்கி அறிவித்துள்ளது. உலக வங்கியின் பொதுமோலாளர் நகோசி ஒகோன்ஜோ இவியாலா , இது குறித்து ஜிங்கூவா பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், வளர்ந்து வரும் நாடுகள் மற்றும் நடுத்தர ஊதியம் பெறுவோர் உள்ள நாடுகளில் இலங்கை மட்டும் பின்தங்கியுள்ளது. மேலும் இலங்கை தனது புற நகர் பகுதிகளில் மறுபுணரமைப்பு மற்றும் உள்கட்டமைப்பு பணிகளுக்கான சர்வதேச நிதி அமைப்புகள் மற்றும் உலக வங்கியிடம் வர்த்தக கடனாக 265 மில்லியன் டாலர் அளவுக்கு நிதி உதவியை கோரியுள்ளது. இது குறித்து அதிபர் ராஜ பக்ஷேவிடம் பரிசீலிப்பதாக கூறியுள்ளேன். வளர்ச்சியில் மிகவும் பின்தங்கியுள்ள நாடாக இலங்கை உள்ளது. இந்நிலையில் நாட்டின் ஒட்டுமொத்த ஆண்டு வருமான வீதம் 2000 டாலருக்கு குறைவாக உள்ளதால் சர்வேதச நிதி நிறுவனங்களிடமிருந்த குறைந்த வட்டிக்கு கடன் பெற தகுதியில்லாதவையாக உள்ளன என கூறினார்.
18 டிசம்பர், 2010
வளர்ச்சியடையாத நாடு இலங்கை: உலக வங்கி கருத்து
கொழும்பு: வளர்ச்சியே அடையாத நாடு இலங்கை எனவும், ஆண்டு வருமானம் 2 ஆயிரம் டாலருக்கும் குறைவாக உள்ளதாகவும் உலக வங்கி அறிவித்துள்ளது. உலக வங்கியின் பொதுமோலாளர் நகோசி ஒகோன்ஜோ இவியாலா , இது குறித்து ஜிங்கூவா பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், வளர்ந்து வரும் நாடுகள் மற்றும் நடுத்தர ஊதியம் பெறுவோர் உள்ள நாடுகளில் இலங்கை மட்டும் பின்தங்கியுள்ளது. மேலும் இலங்கை தனது புற நகர் பகுதிகளில் மறுபுணரமைப்பு மற்றும் உள்கட்டமைப்பு பணிகளுக்கான சர்வதேச நிதி அமைப்புகள் மற்றும் உலக வங்கியிடம் வர்த்தக கடனாக 265 மில்லியன் டாலர் அளவுக்கு நிதி உதவியை கோரியுள்ளது. இது குறித்து அதிபர் ராஜ பக்ஷேவிடம் பரிசீலிப்பதாக கூறியுள்ளேன். வளர்ச்சியில் மிகவும் பின்தங்கியுள்ள நாடாக இலங்கை உள்ளது. இந்நிலையில் நாட்டின் ஒட்டுமொத்த ஆண்டு வருமான வீதம் 2000 டாலருக்கு குறைவாக உள்ளதால் சர்வேதச நிதி நிறுவனங்களிடமிருந்த குறைந்த வட்டிக்கு கடன் பெற தகுதியில்லாதவையாக உள்ளன என கூறினார்.
கடும் பனிப்பொழிவு : கிறிஸ்துமஸ் கொண்டாட முடியாமல் ஐரோப்பிய நாடுகள் தவிப்பு
பெர்லின்: ஐரோப்பா நாடுகளில் கடும் பனிப்பொழிவு ஏற்படுவதால் விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜெர்மன் ,சுவீ்ட்சர்லாந்து, உள்ளிட்ட நாடுகளைச்சேர்ந்த 450 -க்கும் மேற்பட்ட விமானங்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்தாண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையினை கொண்டாட முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஐரோப்பா நாடுகளில் தற்போது கடும் குளிர் நிலவி வருகிறது. 0 டிகிரிக்கு உறைபனி நிலவி வருகிறது. இதன் காரணமாக ஜெர்மன், பிரிட்டன், இத்தாலி, சுவிட்சர்லாந்து , நெதர்லாந்து நாடுகளில் மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் பனி சூழ்ந்துள்ளதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு ஆங்காங்கே வாகன விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. இதில் பெர்லின் நகரில் விபத்தில் 3 பேர்பலியானார்கள். மேலும் ஜெர்மனியில் பிராங்பர்ட், முனிச், சுனோர்வாங் ஆகிய விமான நிலையங்களில் விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு்ள்ளது. சில நகரங்களில் விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. ஜெர்மனின் வூட்டன்பெர்க் நகரில் ஏற்பட்டசாலை விபத்தில் 2 பேர் பலியானார்கள். இதே போன்று ஜெனிவா, ஜூரிச் ஆகிய விமான நிலயைங்களில்விமான சேவை ரத்து செய்யப்பட்டு்ள்ளது. ஐரோப்பிய நாடுகளில் நிலவும் பனிப்பொழிவு அடுத்த வாரம் கிறிஸ்துமஸ் பண்டிகை வருவதால் பண்டிகை விடுமுறையை கொண்ட பிற நாடுகளுக்கு தங்கள் குழந்தை குடும்பத்தினருடன் பயணிக்க முடியாமல் ஐரோப்பியர்களுக்கு பெரும் ஏமாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது.
சகலரும் ஐக்கியப்பட வேண்டுமென்பதோ, நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமென்பதோ அவசியமானதொன்றல்ல என்பதையே பெரும்பான்மை சிங்கள சமூகம் கூறிவருகின்றது-புளொட் தலைவர்
சகலரும் ஐக்கியப்பட வேண்டுமென்பதோ, நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமென்பதோ அவசியமானதொன்றல்ல என்பதையே பெரும்பான்மை சிங்கள சமூகம் கூறிவருகின்றது-புளொட் தலைவர்- வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தமிழ் மக்களின் தாயகம் அல்ல என்றும் அதற்கான எவ்விதமான சட்டபூர்வ ஆதாரங்களும் இல்லையென்றும் ஜாதிக ஹெலஉறுமய எம்.பி எல்லாவெல மேதானந்ததேரர் நல்லிணக்க ஆணைக்குழுமுன் சாட்சியமளிக்கையில் தெரிவித்திருந்தது தொடர்பாக புளொட் தலைவர் த.சித்தார்த்தன் கருத்துத் தெரிவிக்கையில், விஹாரைகள் அமைக்கப்பட்டிருப்பதற்கான சான்றுகளை வைத்துக் கொண்டு வடக்கு பிரதேசம் சிங்களவர்களுக்கு சொந்தமானது என்று தீர்மானிக்க முடியாது. அப்படிப் பார்க்கையில் இந்தியா முழுதும் விஹாரைகள் இருக்கின்றன. புத்தர் என்கின்ற சித்தார்த்தன் யார் என்பதை இன்றைய சிங்களவர்கள் தேடியறிந்து கொள்ள வேண்டியவர்களாக உள்ளனர். அநாவசியமான கருத்துக்கள் மக்களிடையே அசௌகரியங்களை உண்டு பண்ணுகின்றன. எல்லாவல மோதானந்த தேரர் போன்றோரது இவ்வாறான கருத்துக்கள் நல்லிணக்கத்துக்கு தடையாகவே அமைகின்றன. அதாவது, இந்நாட்டில் சகலரும் ஐக்கியப்பட வேண்டுமென்பதோ இங்கு நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமென்பதோ அவசியமானதொன்றல்ல என்பதையே பெரும்பான்மை சிங்கள சமூகம் கூறிவருகின்றது. சர்வதேசம் இவ்வாறான உள்நோக்கம் கொண்ட கருத்துக்களை நம்பிவிடப் போவதில்லை. ஏனெனில் இலங்கையின் வரலாற்றினை சர்வதேசம் புரிந்து கொண்டுள்ளது. இவ்வாறான காலப்பகுதியில் தான் அரசாங்கம் தேசிய கீதம் தொடர்பில் குழப்பிக் கொண்டிருக்கின்றது என்று தெரிவித்துள்ளார்.
ஐநா நிபுணர் குழு விரைவில் இலங்கை வருகை
ஐநா நிபுணர்கள் குழு வெகு விரைவில் இலங்கை வரவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தத்தில் இடம்பெற்றன என்று கூறப்படும் போர்க் குற்றங்கள் குறித்து ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு ஆலோசனை கூற அவரால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவே வரவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இக்குழு எதிர்வரும் ஜனவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் ஐ.நா செயலாளர் நாயகத்துக்கு இறுதி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு முன் குழுவினர் இங்கு வருவர் என்றும் இலங்கையின் தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவினரைச் சந்திப்பர் என்றும் செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சரத் தலைமையிலான அரசு விரைந்து செயற்படுமென அமெ. எதிர்பார்ப்பு : விக்கிலீக்ஸ் தகவல்
ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் இராணுவ தளபதியும் ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவருமான சரத்பொன்சேகா வெற்றி பெற்றால் அவரது தலைமையிலான அரசாங்கம் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தைவிட விரைந்து செயற்படும் என்று எதிர்பார்க்கலாம் என கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவர் பட்ரீசியா புடெனிஸினால் கடந்த ஜனவரி மாதம் 22 ஆம் திகதி அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்துக்கு அறிவித்திருந்ததாக விக்கிலீக்ஸ் அறிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலின் போது எதிர்கட்சி வெற்றி பெற்றால் பிரதான பிரச்சினைகளில் இலங்கை அரசாங்கம் பற்றி பொது கண்காணிப்புக்களில் முக்கிய மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் பற்றீசியாவினால் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட கேபிளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது.
எதிர்க்கட்சி வேட்பாளர் சரத் பொன்சேகா பிரதான பிரச்சினைகளில் முக்கியமான வாக்குறுதிகளை வழங்கியுள்ளார். இவரது அரசாங்கம் அமைக்கப்படும் பட்சத்தில் அது ராஜபக்ஷ அரசாங்கத்தை விட துரிதமாக இயங்கும்.
இருப்பினும் தேர்தலுக்கு அப்பால் பிரச்சினைக்குரிய விடயங்கள் இரு பகுதியினரையும் பொறுத்தளவில் ஒன்றாகத்தான் உள்ளது. எந்த அரசாங்கமாக இருப்பினும் முன்னேற்றம் தொடருமென எதிர்பார்க்கின்றோம் என்றும் அவர் தனது கேபிளினூடாக அமெரிக்க ராஜாங்க திணைக்களத்துக்கு அறிவித்துள்ளார் என்று விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அரசின் பங்காளிக் கட்சியாகப் புலிகள் அமைப்பு மாறலாம் : ரணில்
விடுதலைப் புலிகளின் தற்போதைய தலைவரான கே.பி. குமரன் பத்மநாதன் புலம்பெயர் தமிழர்களிடமிருந்து பணத்தை பெற்றுக்கொள்வதற்கான அமைப்பின் தலைமைப் பொறுப்பை வழங்கியுள்ள ஜனாதிபதி, எம் மீது புலி முத்திரையை குத்த முயற்சிப்பது என்ன நியாயம்? மிகவிரைவில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சியாக விடுதலைப் புலிகள் அமைப்புக்கு அரசாங்கம் சந்தர்ப்பம் வழங்கலாம்" என்று எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க கூறினார்.
ஈ.பி.டி.பி நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களை பதவிகளை கொண்டுள்ளது. ஆனால் கே.பி.எந்தப் பதவியும் இல்லாமல் அரச மாளிகையில் சுகபோகம் அனுபவித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
களனியில் வியாழன்று இடம்பெற்ற அமைப்பாளர்கள் கூட்டத்தில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
விடுதலைப் புலிகள் அமைப்பின் தற்போதைய நிலைமை என்னவென்பதை ஜனாதிபதி தெளிவுபடுத்த வேண்டும். அன்று விடுதலைப் புலிகள் அமைப்பை ஜனாதிபதி தடை செய்தார். ஆனால் வேலுப்பிள்ளை பிரபாகரன் தோல்வி கண்ட பின்னர் புலிகள் அமைப்பின் தலைமைப் பதவியை ஏற்ற கே.பி. யை ஜனாதிபதி தன்னோடு இணைத்துக் கொண்டதோடு அவர் ஆதரவு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
அது மட்டுமல்லாது புலம்பெயர் தமிழர்களிடமிருந்து பணத்தை பெற்றுக் கொள்வதற்கு கே.பி. தலைமையில் அமைப்பொன்றையும் உருவாக்கியுள்ளார். எனவே விடுதலைப் புலிகளும் கே.பி.யும் அரசாங்கத்திற்கு முழுமையான ஆதரவை வழங்குகின்றனர்.
அத்தோடு ஈ.பி.டி.பியினரும் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதோடு வடக்கில் ஜனாதிபதிக்காகவே பிரசாரத்தை மேற்கொள்கின்றனர். இரு தரப்பினரும் மஹிந்த சிந்தனையை ஏற்றுக் கொண்டுள்ளனர். ஈ.பி.டி.பியினர் நாடாளுமன்றத்தில் உள்ளனர் விடுதலைப் புலிகள் அங்கில்லை. இதுவே இரு தரப்பினருக்கும் உள்ள வேறுபாடாகும்.
இவ்வாறானதொரு நிலைமையிலும் புலிகளின் கே.பி. அரச மாளிகையில் சுகபோகங்களை அனுபவிக்கின்றார். விடுதலைப் புலிகள் ஈ.பி.டி.பி, நீலப் படையணி உட்பட பல்வேறு அமைப்புக்களும் பணத்தை சேகரித்து அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் உதவி புரிகின்றனர். இவ்வாறானதொரு நிலையில் விடுதலைப் புலிக்கும் நீலப்படையணிக்குமிடையே உள்ள வித்தியாசம் என்ன?
காட்டுச் சீருடைக்கு மேலாக சால்வையை போட்டுக் கொண்ட புலிகள் மஹிந்த சிந்தனை லேபலை ஒட்டிக்கொண்டு செயற்படுகின்றனர். இதுதான் உண்மை. ஆனால் இதனை மறைத்து ஐ.தே.க. மீது புலி முத்திரை குத்தி மக்களை திசை திருப்ப முயற்சிப்பது எதற்காக?
விடுதலைப் புலிகளின் 17 கப்பல்களை இங்கு கொண்டு வர வேண்டும். இதன் மூலம் குறைந்த கட்டணத்தில் பொருட்களை இறக்குமதி செய்யலாம்.
வெளிநாடுகளிலுள்ள பெற்றோல் நிரப்பு நிறுவனங்களின் வருமானத்தை இங்கு கொண்டு வர வேண்டும். சுவிஸ் வங்கியிலுள்ள பணத்தையும் இங்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு கே.பி.யிடம் உள்ள புலிகளின் சொத்துக்களை நமது நாட்டுக்கு கொண்டு வந்தால் சம்பளத்தை அதிகரிக்க முடியும். அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைத்து மக்களுக்கு சலுகைகளை வழங்க முடியும்.
அச்சொத்துக்கள் அனைத்தும் அவ்வாறே தேங்கிக் கிடக்கின்றன. அத்தோடு கே.பி.யும் பாதுகாப்பாக உள்ளார். எனவே மஹிந்தராஜபக்ஷவின் அரசாங்கம் புலிகளுக்கு எதிரானது என எவ்வாறு கூற முடியும்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை தொடர்பில் கே.பி. இந்தியாவுக்குத் தேவை. எனவே எமது நாட்டுக்கு கே.பி. தேவையில்லையெனில் அரசாங்கம் கே.பியை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்.
மிகவிரைவில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக்கட்சியாக விடுதலைப் புலிகள் அமைப்புக்கு அரசாங்கம் சந்தர்ப்பம் வழங்கும் என நம்பலாம்" என்றார்.
அவசியமில்லாமல் இரவில் நடமாடுபவர்கள் கைது செய்யப்படுவர் – மானிப்பாய் பொலிஸார் அறிவிப்பு
யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களாக கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக மானிப்பாய் பகுதியில் அவசியமில்லாமல் இரவில் நடமாடுவோர் கைது செய்யப்படுவர் எனப் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இரவு நேரங்களில் ரோந்து நடவடிக்கைகள் தொடரும் எனத் தெரிவித்த பொலிஸார் கொள்ளையர்கள் தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை, யாழ். பழம் வீதியில் கொள்ளையடிக்கச் சென்றதாகக் கூறப்படும் மூவர் அந்தக் கிராமத்தின் இளைஞர்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.
அரச ஊழியர்களுக்கு அமைச்சரின் அறிவுரை
ஆசியாவின் ஆச்சரியமிக்க நாடாக இலங்கையை மாற்ற வேண்டுமாயின் தனியார் துறை ஊழியர்களைப் போல அரச ஊழியர்கள் மும்முரமாகச் சேவை செய்ய வேண்டும் என உள்நாட்டு வர்த்தகத்துறை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
குருநாகல் மாவட்டத்தில் நேற்றிரவு நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“தனியார் துறையினர் ஒரு தேவையை இலக்காகக் கொண்டு சேவை செய்கின்றனர். ஆரச துறையினர் அதனை உணர்வதில்லை. வெற்றி என்பது இலகுவாகப் பெற்றுக்கொள்ளக் கூடியதல்ல. அதனை அடைய திடசங்கற்பம் அவசியம்.
தனியார் துறையினரின் பொருளாதாரப் பங்களிப்பைப் போன்று அரச துறையினரிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கு அவர்களைத் வேண்டியுள்ளது" என அமைச்சர் அங்கு மேலும் தெரிவித்துள்ளார்.
தமிழர் தாயகத்தை அபகரிக்கச் சதி : எல்லாவல தேரரின் கருத்துக்குத் தமிழ்க் கட்சிகள் கண்டனம்
தமிழ் மக்களுக்கு இந்த நாடு உரிமையானது என்பதை நிரூபிப்பதற்கு தேவையான சான்றாதாரங்கள் இருக்கின்றன. எனவே, வந்தேறு குடிகளான சிங்கள இனத்தைச் சார்ந்தவர்களில் இனவாத நோக்கம் கொண்ட சிலர் தமிழர் பற்றியோ அல்லது தமிழர் தாயகம் பற்றியோ பேசுவதற்கு அருகதையற்றவர்கள் எனத் தெரிவித்துள்ள தமிழ்க் கட்சிகள், எல்லாவல மேதானந்த தேரரினால் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் அளிக்கப்பட்ட சாட்சியத்துக்கு கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளன.
ஜாதிக ஹெல உறுமய மற்றும் தேசிய சுதந்திர முன்னணி உள்ளிட்ட இனவாதக் கட்சிகளின் தற்கால நிலைப்பாடுகள் இந்நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கானதல்ல. மாறாக தமிழர்களை இல்லாதொழிக்கின்ற தீய எண்ணங்களையே கொண்டிருக்கின்றன.
இவ்வாறாக செயற்பட்டு தமிழ் மக்களை மீண்டும் ஒரு போராட்டத்துக்குள் தள்ளி விட வேண்டாம் என்று திடமாகக் கூறி வைக்க விரும்புவதாகவும் அக்கட்சிகள் குறிப்பிட்டுள்ளன.
ஜாதிக ஹெல உறுமயவின் எல்லாவல மேதானந்த தேரர் எம்.பி வியாழக்கிழமை நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த போது வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் அல்லவென்றும் அவ்வாறு கூறுவதற்கு எந்த உரிமையும் தமிழ் மக்களுக்கு கிடையாது என்றும் தெரிவித்திருந்தார். அவரது இந்த சாட்சியம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு மற்றும் புளொட் ஆகிய தமிழ்க் கட்சிகள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளன.
த. தே. வி. கூ.
தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும் முன்னாள் எம்.பியுமான எம். கே. சிவாஜிலிங்கம் இது தொடர்பில் கூறுகையில்,
"சிங்களவர்களின் மகாவம்சம் கூறுகின்ற வரலாறுகளின் அடிப்படையில் தேசத்துரோக குற்றத்துக்காக இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட விஜயன் தனது 700 தோழர்களுடன் இலங்கை வந்தான். அவ்வாறு வந்தவரே இங்கு சிங்களத்தைப் பரப்பினார். இத்தகையவர்களின் வருகைக்கு முன்னரே இங்கு தமிழர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகளும் தமிழ் மன்னர்களின் ராஜ்ஜியங்களுக்கான ஆதாரங்களும் இருக்கின்றன.
வடக்கு கிழக்கு தமிழருக்கு சொந்தமானது அல்ல என்று கூறுவதற்கு சிங்களவர்களுக்கு உரிமை கிடையாது. ஏனெனில் தமிழர் உரிமை கோருவதற்கான தகுந்த ஆதாரங்கள் இருக்கின்றன. எனவே அநாவசியமாக பேசி மக்களிடத்தில் குழப்பங்களைத் தோற்றுவித்து இனவாதத்தை பரப்பி வருவதானது தமிழ் மக்களை மீண்டும் ஒரு போராட்டத்துக்குள் தள்ளி விடுவதற்கான சதியாகும். இதனைச் செய்ய வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்" என்றார்.
த. தே. கூ.
இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிச் செயலாளரும் வன்னி மாவட்ட எம்.பியுமான செல்வம் அடைக்கலநாதன் கூறுகையில்,
"வடக்கு கிழக்கு தமிழர்களின் பூர்வீகம். அது தமிழர்களுக்கே உரிய சொத்தாகும். இனவாதத்தைப் பரப்பி நாட்டிலும் மக்களிடத்திலும் குழப்பத்தை ஏற்படுத்தி தமிழர் தாயகத்தை அபகரித்து விடுவதற்கே திரைமறைவிலான சதிகள் தற்போது சிறிது சிறிதாக வெளிவருகின்றன.
யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது சிங்கள மக்களைத் திசை திருப்புவதற்காக இனவாதம் கக்கப்பட்டது. அது தற்போது மீண்டும் முளைவிட்டு வருவதானது தமிழின அழிப்புக்கு ஒப்பானதாகவே தெரிகின்றது.
வடக்கு கிழக்கு தமிழரின் பூர்வீக பூமி என்பதற்கு பன்மடங்கு ஆதாரங்கள் இருக்கின்றன. உண்மை வரலாறுகளை அறியாத இவர்கள் தாமாகவே வரலாறுகளை எழுதுவதற்கும் அதனை மெய்ப்பிப்பதற்கும் தந்திரோபாய முறைகளைக் கையாண்டு வருகின்றனர். இது நல்லதொரு எதிர்காலத்துக்கான அறிகுறியாகவும் தெரியவில்லை" என்றார்.
புளொட்
இது குறித்து புளொட் அமைப்பின் தலைவர் த. சித்தார்த்தன் கூறுகையில்,
"விஹாரைகள் அமைக்கப்பட்டிருப்பதற்கான சான்றுகளை வைத்துக் கொண்டு வடக்கு பிரதேசம் சிங்களவர்களுக்கு சொந்தமானது என்று தீர்மானிக்க முடியாது. அப்படிப் பார்க்கையில் இந்தியா முழுதும் விஹாரைகள் இருக்கின்றன.
புத்தர் என்கின்ற சித்தார்த்தன் யார் என்பதை இன்றைய சிங்களவர்கள் தேடியறிந்து கொள்ள வேண்டியவர்களாக உள்ளனர். அநாவசியமான கருத்துக்கள் மக்களிடையே அசௌகரியங்களை உண்டு பண்ணுகின்றன.
எல்லாவல மோதானந்த தேரர் போன்றோரது இவ்வாறான கருத்துக்கள் நல்லிணக்கத்துக்கு தடையாகவே அமைகின்றன" என்றார்.
ஜ. ம. மு.
இது குறித்து அறிக்கை விடுத்துள்ள ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் எம்.பியுமான மனோ கணேசன் கூறுகையில்,
கம்பராமாயணம் மகாவம்சத்தை தழுவி எழுதப்பட்டது என்றும் திருவள்ளுவர் சிங்கள பௌத்தர் என்றும் கௌதம புத்தர் அம்பாந்தோட்டையில் பிறந்தார் என்றும் தமிழர்களுக்கு வேஷ்டியும், சேலையும் கட்டுவதற்கு கற்றுக் கொடுத்ததே தனது மூதாதையர் என்றும் மேதானந்த எல்லாவல தேரர் நாளை கருத்து தெரிவித்தாலும் கூட நாம் ஆச்சரியப்படப் போவதில்லை.
ஏனென்றால் இவரை எமக்கு மிக நன்றாகத் தெரியும். தன்னைத்தானே 'வரலாற்று சக்கரவத்தி' என அழைத்துக் கொள்ளும் இந்தத் தேரருக்கு இன்றைய இனவாத யதார்த்தத்திற்கு ஏற்ற வகையில் வரலாற்றைத் திரிப்பதை தவிர வேறு எதுவும் தெரியாது. எனவே இவரது கட்டுக் கதைகளுக்கும் மோசடி கருத்துக்களுக்கும் பதில் கூறி எமது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை" என்றார்.
சிவனொளிபாதமலை யாத்திரை நாளை மறுதினம் ஆரம்பம்
இவ்வருடத்திற்கான சிவனொளிபாத மலைக்கான யாத்திரைப்பருவக்காலம் நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ளது.
இவ்வருடம் சிவனொளிபாத மலைக்கான யாத்திரைப் பருவக்காலம் நாளை மறுதினம் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது.
யாத்திரைப் பருவக்காலத்தை ஆரம்பிக்கும் வகையில் இரத்தினபுரி, பெல்மதுளை கல்பொத்தாவெல ஸ்ரீபாத இரஜமஹா விகாரையில் வைக்கப்பட்டுள்ள சமன் தேவ விக்கிரமும் பூஜைப்பொருட்களும் தாங்கிய இரதம் பவனியாக நாளை 19 ஆம் திகதி காலை சுபவேளையில் புறப்பட்டும்.
அதன்பின்னர் நாளை மறுதினம் 20 ஆம் திகதி அதிகாலையில் ஆலயத்தில் இடம்பெறவுள்ள விசேட பூஜைகளைத் தொடர்ந்து இவ்வருடத்திற்கான சிவனொளிபாதமலை யாத்திரைப்பருவக்காலம் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளது.
இவ்வருடம் சிவனொளிபாத மலைக்கான யாத்திரைப் பருவக்காலம் நாளை மறுதினம் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது.
யாத்திரைப் பருவக்காலத்தை ஆரம்பிக்கும் வகையில் இரத்தினபுரி, பெல்மதுளை கல்பொத்தாவெல ஸ்ரீபாத இரஜமஹா விகாரையில் வைக்கப்பட்டுள்ள சமன் தேவ விக்கிரமும் பூஜைப்பொருட்களும் தாங்கிய இரதம் பவனியாக நாளை 19 ஆம் திகதி காலை சுபவேளையில் புறப்பட்டும்.
அதன்பின்னர் நாளை மறுதினம் 20 ஆம் திகதி அதிகாலையில் ஆலயத்தில் இடம்பெறவுள்ள விசேட பூஜைகளைத் தொடர்ந்து இவ்வருடத்திற்கான சிவனொளிபாதமலை யாத்திரைப்பருவக்காலம் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளது.
புலிகளுக்கு ஆயுதக்கொள்வனவு செய்த இலங்கைத் தமிழருக்கு ஐக்கிய அமெரிக்காவில் சிறை
ஐக்கிய அமெரிக்காவில் 2006ம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்ட இலங்கைத் தமிழர் ஒருவருக்கு ஐந்து வருட சிறைத்தண்டனையை விதித் துள்ளதாக இலங்கைத் தூதுவராலய செய்திச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கையைச் சேர்ந்த பால்ராஜ் என்பவர் ஐக்கிய அமெரிக்காவில் மேரிலேண்ட் என்ற இடத்தில் 9 லட்சம் அமெரிக்க டொலர்களுக்கு ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்டதாக வழக்குத் தொடரப்பட்டது.
இதில் குற்றமிழைத்தவராகக் கருதப்பட்டு ஐந்து வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தேங்காய்க்கும் அரசாங்கம் வரி விதிக்கலாம் : ஜோசப் மைக்கல் பெரேரா
தேங்காய்க்கும் வரி விதித்து மக்கள் மீதான சுமையை எதிர்வரும் காலங்களில் அரசாங்கம் மேலும் அதிகரிக்கப் போகின்றது என்று ஐ.தே. க. எம்.பி ஜோசப் மைக்கல் பெரேரா தெரிவித்தார்.
அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் மற்றும் சம்பளம் அதிகரிக்கப்படாமையை எதிர்த்து எதிர்வரும் 22 ஆம் திகதி மாலை 4.00 மணிக்கு கொழும்பு மருதானையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாகவும் அவர் கூறினார்.
கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே ஜோசப் மைக்கல் பெரேரா எம்.பி இதனைத் தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
"அரசாங்க ஊழியர்கள் இன்று மூன்று மணித்தியாலங்களும் 20 வினாடிகள் மட்டுமே சேவையாற்றுகின்றார்கள் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இந்த நிலைமை ஏற்படக் காரணம் என்ன?
உறுதியளிக்கப்பட்ட சம்பள உயர்வு வழங்கப்படவில்லை. வாழ்க்கைச் செலவு அதிகரித்து அவர்கள் வாழ நெருக்கடிகளை சந்திக்கின்றனர். எனவே அவர்களது மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களுக்காக சேவைகளை வழங்குவதில் பின்னிற்கின்றனர்.
இவ்வாறான நிலைமை ஏற்படுமென பலமுறை நாங்கள் தெரிவித்தோம். அத்தோடு நஷ்டம் பெறும் அரச கூட்டுத்தாபன ஊழியர்களுக்கு ரூபா 1000 போனஸும் லாபம் பெறும் கூட்டுத்தாபன ஊழியர்களுக்கு ரூபா 10000 போனஸும் வழங்கப்படுமென அரசாங்கம் அறிவித்துள்ளது. இது நியாயமற்ற அநீதியான செயலாகும்.
அரச கூட்டுத்தாபனங்கள் நஷ்டமடைவதற்கு அரசாங்கமே காரணமாகும். திறமையற்ற அரசியல் கையாட்களை உயர் பதவிகளில் நியமித்தமையே நஷ்டத்திற்கு காரணமாகும். அரசாங்கத்தின் பிழையை அரசாங்க ஊழியர்கள் மீது சுமத்தக் கூடாது. எனவே லாபமோ, நஷ்டமோ அனைத்து கூட்டுத்தாபன ஊழியர்களுக்கும் குறைந்தது ரூபா 10000 போனஸ் வழங்கப்பட வேண்டும்.
அரசாங்கம் இன்று ஆட்டம் கண்டுள்ளது. கடந்த பொதுத் தேர்தலில் 11 இலட்சம் வாக்குகள் குறைந்துள்ளன. அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு மக்களுக்கு வாழ முடியாத சூழ்நிலையால் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துள்ளனர்" என்றார்.
பண மோசடிக் குற்றச்சாட்டில் பிரதேச சபை உப தலைவர் கைது
வெளிநாட்டுத் தொழில் வாய்ப்பை பெற்றுத் தருவதாகக் கூறி பல இலட்ச ரூபாய்கள் மோசடி செய்த குற்றத்தின் பேரில் ஹாரிஸ்பத்துவ பிரதேச சபையின் உப தலைவர் சுதத் அஸங்க பண்டாரவை கண்டி குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இன்று கைது செய்தனர்.
வெளிநாட்டுத் தொழில் வாய்ப்பை வாய்ப்பை தமக்கு பெற்றுத் தரவில்லை என பத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் தமக்கு முறைப்பாடு செய்துள்ளதாக கண்டி பொலிஸார் கூறுகின்றனர்.
கைது செய்யப்பட்ட பிரதேச சபையின் உப தலைவரை இன்று மாலை கண்டி பிரதம நீதவான் முன் ஆஜர் செய்யவுள்ளதாக பொலீஸார் தெரிவித்தனர்.
வெளிநாட்டுத் தொழில் வாய்ப்பை வாய்ப்பை தமக்கு பெற்றுத் தரவில்லை என பத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் தமக்கு முறைப்பாடு செய்துள்ளதாக கண்டி பொலிஸார் கூறுகின்றனர்.
கைது செய்யப்பட்ட பிரதேச சபையின் உப தலைவரை இன்று மாலை கண்டி பிரதம நீதவான் முன் ஆஜர் செய்யவுள்ளதாக பொலீஸார் தெரிவித்தனர்.
தேங்காய் விலையை குறைக்காவிடின் இறக்குமதி செய்வதை தவிர்க்க முடியாது
தெங்கு உற்பத்தியாளர் செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்த முயற்சி
சந்தையில் குறைந்த விலையில் தேங் காயை விநியோகிக்க தெங்கு உற்பத்தி யாளர்கள் முன்வர வில்லையானால் இந்தியாவிலிருந்து தேங்காய் இறக்குமதி செய்வதை தவிர்க்க முடியாது என கூட்டுறவு வர்த்தக அமைச்சு தெரிவிக்கிறது.
செயற்கை தட்டுப்பாடொன்றை ஏற்படுத்தி சந்தையில் அதிக விலைக்கு தேங்காயை விற்பனை செய்ததாலேயே தேங்காயை இறக்குமதி செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
மக்களுக்கு தட்டுப்பாடின்றி குறைந்த விலையில் தேங்காயை பெற்றுக் கொடுப்பதே அரசின் நோக்கமென தெரிவித்த கூட்டுறவு, வர்த்தக அமைச்சின் செயலர் சுனில் எஸ். சிறிசேன, தேங்காயை இறக்குமதி செய்வ தாக அறிவித்த மறு நாளே சந்தையில் 60 ரூபாவுக்கு விற் கப்பட்ட தேங்காய் 35 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது என்றார்.
தேங்காய் இறக்குமதி செய்யப்படுவதை தெங்கு உற்பத்தியாளர்கள் எதிர்க்கிறார்கள். இவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதை விடுத்து குறைந்த விலையில் தேங்காயை நுகர்வோருக்கு வழங்கினாலேயே போதும் என்றும் அமைச்சின் செயலர் சுனில் எஸ். சிறிசேன தெரிவித்தார்.
இவர்களது செயற்கை தட்டுப்பாட்டு முயற்சியின் காரணமாக மக்கள் அதிக விலைக்கு தேங்காயை வாங்க வேண்டியுள்ளதுடன் அரசின் மீதே அதிருப்தியடைகின்றனர். பண்டிகை காலத்தில் இவ்வாறான தட்டுப்பாட்டை நீக்கும் நோக்குடனேயே அரசு கேரளாவிலிருந்து தேங்காயை இறக்குமதி செய்யவுள்ளது என்றும் அமைச்சின் செயலர் சுனில் எஸ். சிறிசேன தெரிவித்தார்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்
ஜனாதிபதியின் ஏற்பாட்டில் கொழும்பிலிருந்து இன்று பொருட்கள் அனுப்பி வைப்புமீள்குடியேற்றப்பட்ட நிலையில் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அறிவுறுத்தலுக்கமைய நிவாரணப் பொருட்கள் வழங்குவதற்கு மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்ன வீரக்கோன் நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளார்.
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இம்மக்களுக்கான நிவாரணப் பொருட்கள் பகிர்ந்தளிப்பதற்கான நடவடிக்கை 20ஆம் திகதி தொடக்கம் 24ம் திகதி வரை நடைபெறும். இதற்கான சகல நடவடிக்கைகளையும் மீள்குடியேற்ற அமைச்சு மேற்கொண்டுள்ளது.
இந்த நிவாரணப் பொருட்களை பகிர்ந்தளிக்கும் நிகழ்வில் மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்ன வீரக்கோன், பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் உட்பட அமைச்சு அதிகாரிகள் இப் பிரதேசங்களுக்கு நேரடியாக விஜயம் செய்து அம்மக்களுக்கு இந்த நிவாரணப் பொருட்களை வழங்கவுள்ளனர்.
பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைகளை எடுத்துக் கூறினர்.
இது குறித்து ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தியதுடன் பாதிக்கப்பட்ட இம்மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறு மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்ன வீரக்கோனை ஜனாதிபதி கேட்டுக்கொண்டார். இதற்கமைய நிவாரணம் வழங்குவதற்கும் அதனை அம்மக்களிடம் நேரடியாக சென்று கையளிப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிவாரணம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த அழைப்பை அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளதுடன் நிவாரணம் வழங்கும் நிகழ்வில் நேரடியாக கலந்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
இது சம்பந்தமாக மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்ன வீரக்கோனுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இரண்டு பாராளு மன்ற உறுப்பினர்களான மாவை சேனாதி ராஜா மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் நேற்று மீள்குடியேற்ற அமைச் சுக்கு சென்று அமைச்சருடன் விரிவாக கலந்துரையாடினர்.
இங்கு பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கருத்துத் தெரி விக்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எப்பொழுதும் தயாராக இருக்கின்றது. இது ஒரு மனிதாபிமான நடவடிக்கை இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கலந்து கொள்வதுடன் பூரண ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கும் என்றார்.
மன்னார் மாவட்டத்திலும் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள் அவர்களுக்கும் விரைவாக நிவாரணம் வழங்குமாறு தாம் கேட்டுக் கொண்டதாகவும் அந்த நடவடிக்கை அடுத்த மாதம் ஆரம் பிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட மக்கள் விடயத்தில் அர சாங்கம் மேற்கொள்ளும் சகல நடவடிக்கை களுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒத்துழைப்பு கிடைக்குமென்று கூறிய பாராளுமன்ற உறுப்பினர் மீள்குடியேற் றப்பட்ட இடம்பெயர்ந்த மக்கள் எதிர்நோக் கும் ஏனைய பிரச்சினைகளுக்கும் தீர்வு களை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
நிவாரணம் வழங்குவதற்காக இன்று காலை மீள்குடியேற்ற அமைச்சிலிருந்து நிவாரணப் பொருட்கள் எடுத்துச் செல்லப் படவுள்ளன.
கிளிநொச்சி மாவட்டத்தின் கரச்சி பிரதேச செயலக பிரிவிலும், பூநகரி செயகல பிரிவிலும், கண்டாவளை பிர தேச செயலக பிரிவிலும் மீள்குடியேற் றப்பட்ட மக்களுள் சுமார் 1100 குடும்பங்கள் கடந்த கால மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டன.
இவர்களுக்கான நிவாரணப் பொருட்களே இன்று கொழும்பிலிருந்து எடுத்துச் செல்லப்படவுள்ளன.
அத்துடன் நாளை ஞாயிற்றுக்கிழமை வீடமைப்பு அதிகார சபையின் அலுவல கமும் கிளிநொச்சியில் திறந்து வைக்கப் படவுள்ளது.
வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் விமல் வீரவங்ச இந்த அலுவலகத்தை திறந்து வைக்கவுள்ளார் என கிளிநொச்சி அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். அத்துடன் எதிர்வரும் 24ஆம் திகதி பச்சிளம் பள்ளி, கரச்சி பகுதியில் மீள்குடி யேற்றப்பட்ட சுமார் 500 குடும் பங்களுக்கான வீடமைப்புக்கான இரண்டாம் கட்ட உதவித் தொகை வழங்கப்படவுள்ளன.
புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் மறு சீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர கலந்துகொண்டு உதவித் தொகையை வழங்கவுள்ளார்.
பிரிட்டனின் செயற்பாட்டை கண்டித்து; யாழ்ப்பாணத்தில் நாளை உண்ணாவிரதப் போராட்டம்
ஜனாதிபதியின் பிரித்தானிய விஜயத்தின்போது பிரித்தானிய அரசும் புலம்பெயர்ந்த தமிழர்களும் திட்டமிட்டு நடாத்திய அநாகரிகமான செயற்பாடுகளை கண்டித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.
மாவட்ட பிரதான அமைப்பாளர் கலாநிதி வேல்முருகு தங்கராசாவின் தலைமையில் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியளவில் யாழ். பேரூந்து நிலையத்தில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று நடாத்தப்பட விருக்கின்றது. மேற்படி உண்ணாவிரத போராட்டத்தில் யாழ். குடாநாட்டின் சகல இடங்களிலிருந்தும் பெருந்தொகையான மக்கள் கலந்துகொள்ளவுள்ளார்கள்.
உண்ணாவிரதப் போராட்டத்திற்கான ஏற்பாடுகளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட செயலாளர் அ. ரங்கா துஷார மேற்கொண்டுள்ளார்.
ஆங்கில மொழி மூல ஆசிரியர்கள் 1500 பேருக்கு ஜனவரியில் நியமனம் எம். ஐ. என். நிஸாம்தீன்
தேசிய பாடசாலைகளில் க. பொ. த. உயர்தர வகுப்புகளுக்கு ஆங்கில மொழி மூலமாக கற்பிக்கும் ஆசிரியர்களின் பற்றாக்குறையை நீக்கும் முகமாக எதிர்வரும் ஜனவரி மாதத்தில் பயிற்சி பெற்ற 1500 ஆசிரிய நியமனங்களை வழங்குவதற்கு கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதன் முதற்கட்ட நடவடிக்கையாக கடந்தவாரம் க. பொ. த. உயர்தர வகுப்புகளில் கல்வி கற் பிப்பதற்கான 500 ஆங்கில மொழிமூல ஆசிரியர்கள் தேசிய பாடசாலைகளில் சேர்த்துக் கொள்ளப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.
ஆங்கிலம் மொழி மூலம் கணிதம், வணிகம், கணக் கியல், பெளதீகவியல், இரசாயனவியல் மற்றும் அரசியல் விஞ்ஞானம் ஆகிய பாடங்களை கற் பிப்பதற்கு ஆசிரியர் பற்றாக்குறை இருப்பதாக தமக்கு பாடசாலை நிர்வாகத்தினரும், பெற்றோர்களும் செய்த முறைப்பாட்டை அடுத்தே நாம் இந்த தீர்மானத்தை எடுத்தாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
ஏனைய தமிழ், சிங்கள மொழி மூல பாடசாலைகளில் ஆங்கில மொழி மூல வகுப்புகளை நடத்துவதற்கு தேவையான ஆசிரியர்கள் தேசிய பாடசாலை உட்பட சகல அரசாங்க பாடசாலைகளிலும் போதியளவு இருக்கின்றார்கள் என்று தெரிவித்த அமைச்சர், ஆங்கிலம் மூலம் சகல பாடங்களையும் கற்பிப்பதற்கான ஆசிரியர்களின் பற்றாக்குறையை தமது அமைச்சு விரைவில் பூர்த்தி செய்யும் என்றும் உறுதியளித்தார்.
நாடெங்கிலும் உள்ள அரசாங்க பாடசாலைகளில் தற்போது 42 இலட்சம் மாணவர்கள் கல்வி கற்கின்றார்கள். இவர்களுக்கு கல்வி கற்பிப்பதற்காக 225,000 ஆசிரியர்கள் இருக்கின்றார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதன் முதற்கட்ட நடவடிக்கையாக கடந்தவாரம் க. பொ. த. உயர்தர வகுப்புகளில் கல்வி கற் பிப்பதற்கான 500 ஆங்கில மொழிமூல ஆசிரியர்கள் தேசிய பாடசாலைகளில் சேர்த்துக் கொள்ளப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.
ஆங்கிலம் மொழி மூலம் கணிதம், வணிகம், கணக் கியல், பெளதீகவியல், இரசாயனவியல் மற்றும் அரசியல் விஞ்ஞானம் ஆகிய பாடங்களை கற் பிப்பதற்கு ஆசிரியர் பற்றாக்குறை இருப்பதாக தமக்கு பாடசாலை நிர்வாகத்தினரும், பெற்றோர்களும் செய்த முறைப்பாட்டை அடுத்தே நாம் இந்த தீர்மானத்தை எடுத்தாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
ஏனைய தமிழ், சிங்கள மொழி மூல பாடசாலைகளில் ஆங்கில மொழி மூல வகுப்புகளை நடத்துவதற்கு தேவையான ஆசிரியர்கள் தேசிய பாடசாலை உட்பட சகல அரசாங்க பாடசாலைகளிலும் போதியளவு இருக்கின்றார்கள் என்று தெரிவித்த அமைச்சர், ஆங்கிலம் மூலம் சகல பாடங்களையும் கற்பிப்பதற்கான ஆசிரியர்களின் பற்றாக்குறையை தமது அமைச்சு விரைவில் பூர்த்தி செய்யும் என்றும் உறுதியளித்தார்.
நாடெங்கிலும் உள்ள அரசாங்க பாடசாலைகளில் தற்போது 42 இலட்சம் மாணவர்கள் கல்வி கற்கின்றார்கள். இவர்களுக்கு கல்வி கற்பிப்பதற்காக 225,000 ஆசிரியர்கள் இருக்கின்றார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
தேங்கிக் கிடக்கும் வழக்குகள்: துரித விசாரணைக்கு மூன்றாண்டுத் திட்டம்
*ஓய்வு பெற்ற நீதிபதிகளை பயன்படுத்தத் திட்டம்
*செயற்திட்டங்களுக்கு ரூ. 450மில். ஒதுக்கீடு
*நீதிபதிகளுக்கு இந்தியா, ஜப்பானில் பயிற்சி
விசாரிக்கப்படாமல் குவிந்துள்ள பெருமளவு வழக்குகளை துரிதமாக விசாரணை செய்வதற்காக அடுத்த வருடம் முதல் 3 வருட திட்டமொன்று முன்னெடுக்கப்படும் இதன்படி, ஓய்வுபெற்ற நீதிபதிகளை பயன்படுத்தி வார இறுதி நாட்களில் வழக்குகளை விசாரணை செய்யவும் நீதிமன்றங்களின் தொகையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
நீதிபதிகளின் வருடாந்த மாநாடு நேற்று கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்றது. பிரதம நீதியரசர் அசோக டி சில்வாவின் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் நாடுபூராவும் உள்ள நீதிவான்கள் மற்றும் மாவட்ட நீதிபதிகள் கலந்து கொண்டனர்.
அமைச்சர் மேலும் கூறியதாவது, குவிந்துள்ள வழக்குகளை துரிதமாக தீர்ப்பது குறித்து பிரதம நீதியரசருடனும் நீதிச் சேவை ஆணைக்குழுவுடன் பேச்சு நடத்தியுள்ளோம். இதன்படி, வழக்குகளை துரிதப்படுத்த அடுத்த வருடம் முதல் பல்வேறு செயற்றிட்டங்கள் முன்னெடுக் கப்படும். இதற்காக 450 மில்லியன் ரூபா வரவு செலவுத்திட்டத்தினூடாக ஒதுக்கப்பட்டுள்ளது.
நீதிபதிகளுக்கு வழங்கும் வசதிகளை அதிகரிப்பதற்கும் உரிய நடவடிக்கை எடுத்துள்ளோம். நீதிபதிகள் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்க்க நாம் தயாராக உள்ளோம்.
வழக்குகள் தாமதமாவதற்கு யாரையும் குற்றங்கூற முடியாது. இதனை ஒன்றுபட்டே தீர்க்க வேண்டும்.
நீதிபதிகளுக்கு பயிற்சி வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். நீதிபதிகளுக்கு பயிற்சி வழங்கும் நிறுவனங்களுக்கு நவீன வசதிகள் வழங்கப்படுகிறது.
கொழும்பில் நீதிபதிகள் தங்கிப் பயிற்சிப்பெற உச்சநீதிமன்ற வளாகத்தில் பயிற்சி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்த வருட முதற் பகுதியில் ஜனாதிபதி திறந்து வைப்பார். 60 நீதிமன்றங்களை புதிதாக உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நீதிபதிகளுக்கு பயிற்சி வழங்கும் திட்டத்திற்கு உதவ இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் முன்வந்துள்ளன. தற்பொழுது இந்தியாவில் நீதிபதிகளுக்கு பயிற்சி வழங்கி வருகிறோம்.
நீதிபதிகளுக்கு 120 வாகனங்கள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த வருடத்தில் பல புதிய சட்டங்கள் உருவாக்கப்பட உள்ளன.
வழக்குகளை துரிதமாக விசாரணை செய்யும் திட்டத்திற்கு நீதிபதிகள் தமது ஒத்துழைப்பை வழங்க வேண்டும். சுமார் 850 வழக்குகள் 10 வருட காலத்திற்கு மேலாக விசாரணை செய்யப்படாதுள்ளன.
நானும் ஜனாதிபதியும் சட்டத்தரணிகள் என்பதால் நீதித்துறையில் காணப்படும் பிரச்சினைகளை துரிதமாக தீர்க்க முடியும் என்றும் கூறினார்.
பிரதம நீதியரசர் அசோக த சில்வா கூறியதாவது,
நீதிபதிகளுக்கு போபாலில் பயிற்சி வழங்கி வருகிறோம். இன்று (17) 20 நீதிபதிகள் பயிற்சிக்காக செல்கின்றனர். தொடர்ந்து இந்த பயிற்சி வழங்கும் திட்டம்முன்னெடுக்கப்படும். நீதிபதிகளுக்கு பல்வேறு மட்டங்களிலும் பயிற்சி வழங்க திட்டமிட்டுள்ளோம். 4 முதல் 5 வருட பயிற்சியின் பின்னரே நீதிபதியாக ஒருவர் தெரிவாவார். ஏனென்றால் நீதிபதிகளுக்கு அனுபவம் முக்கியமாகும்.
முன்னர் 6 வருட அனுபவத்தின் பின்னரே நீதிபதி ஒருவர் நியமிக்கப்பட்டார். தற்பொழுது அது 3 வருடங்களாக குறைக்கப்பட்டுள்ளது. திரும்பவும் 6 வருட அனுபவத்தின் பின் நியமிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
நீதிபதிகள் பக்க சார்பாக அன்றி பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படும் வகையிலே தீர்ப்பு வழங்க வேண்டும். தண்டனை வழங்கும் போதும் உச்ச தண்டனையை விட அதிகமாக வழங்கக் கூடாது என்றார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)