29 ஏப்ரல், 2010

மேலவையில் தமிழர் பிரதிநிதித்துவம்” இலங்கை அதிபர் மஹிந்தவும் இந்திய பிரதமர் மன்மோகனும்
இலங்கை நாடாளுமன்றத்திற்கு மேலவையை உருவாக்கி அதில் தமிழர்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்போவதாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் உறுதியளித்திருப்பதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பூடான் தலைநகர் திம்புவில் நடைபெறும் சார்க் நாடுகளின் உச்சிமாநாட்டை ஒட்டி அங்கு சென்றுள்ள இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷவும் இன்று சந்தி்த்துப் பேசினார்கள்.

சுமார் 30 நிமிடங்கள் நடந்த இந்தச் சந்திப்பின்போது, 13 வது அரசியல் சட்டத் திருத்தத்தை செயல்படுத்துவதில் தனது அரசு தீவிரமாக இருப்பதாகவும், தமிழர்களுக்கு நாடாளுமன்ற மேலவையில் மேலும் பிரதிநிதித்துவம் கொடுக்கப்படும் என்றும் மன்மோகன் சிங்கிடம் ராஜபக்ஷ அவர்கள் எடுத்துரைத்ததாக இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களிடமும் தமிழர்களின் தலைமையிடமும் தனது அரசு நேசக்கரம் நீட்டும் என்று ராஜபக்ஷ அவர்கள் கூறியதாகவும் அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரும் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் இந்தியா வருவதாக பிரதமர் மன்மோகன் சிங்கிடம் மஹிந்த ராஜபக்ஷ கூறியிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தியா பாகிஸ்தான் மீண்டும் பேச்சுவார்த்தை

இதற்கிடையே இந்தியாவும் பாகிஸ்தானும் வெளியுறவு அமைச்சர்கள் நிலையில் மீண்டும் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளைத் துவக்க முடிவு செய்துள்ளன.

பூடான் தலைநகர் திம்புவில் நடைபெறும் சார்க் நாடுகளின் உச்சிமாநாட்டை ஒட்டி, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் பாகிஸ்தான் பிரதமர் யூஸுப் ராஸா கிலானியும் இன்று சந்தி்த்துப் பேசினார்கள். அப்போது இந்த முடிவு எடுக்கப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையே நம்பிக்கை மற்றும் நல்லெண்ணத்தை ஏற்படுத்த பேச்சுவார்த்தைக்கான வழிகளைத் திறந்து வைப்பது அவசியம் என்று இரு நாட்டுத் தலைவர்களும் முடிவு செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


இந்திய, பாகிஸ்தான் பிரதமர்கள்

கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஷர்மல் ஷெக்கில் நடந்த சந்தி்ப்புக்குப் பிறகு இரு தலைவர்களும் மீண்டும் இன்று சந்தித்துள்ளனர்.

இரு நாட்டுத் தலைவர்களும், தங்களது வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலில் சந்தித்தனர். பின்னர் இருவரும் தனியாக ஆலோசனை நடத்தினார்கள்.

அந்தச் சந்திப்பு வெளிப்படையாகவும் திறந்த மனதுடனும் இருந்ததாக இந்திய வெளியுறவுத்துறைச் செயலர் நிருபமா ராவ் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

24 விண் கற்களில் தண்ணீர்: நாசா கண்டுபிடித்தது

நிலவில் தண்ணீர் இருப்பதை இந்தியாவின் சந்திராயன் ஓடம் கண்டுபிடித்தது. இதே போல சூரியனை சுற்றி வரும் பல்வேறு கோள்களிலும் தண்ணீர் இருக்கிறதா? என்று ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.

சூரியனை சுற்றி வரும் கோள்களை தவிர ஏராளமான விண்கற்களும் விண்ணில் சுற்றி வருகின்றன. இவற்றில் பல கற்கள் ராட்சத அளவில் இருக்கின்றன. அதாவது 200 கிலோ மீட்டருக்கு மேல் அகலமாக இருக்கின்றன.

அந்த கற்களை அமெரிக்காவில் நாசா விண்வெளி விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். ஹவாய் தீவில் ராட்சத டெலஸ்கோப்பை அமைத்து உள்ளனர். அதன் மூலம் இந்த கற்களை ஆய்வு செய்தனர்.

அதில் தண்ணீர் இருப்பது தெரிய வந்தது. உறைந்த நிலையில் மேல் பகுதிகளில் தண்ணீர் இருந்தன. தண்ணீர் இருப்பதால் அவற்றில் உயிரினங்கள் வாழவும் வாய்ப்பு இருக்கலாம் என கருதப்படுகிறது. அதுபற்றியும் ஆய்வு நடந்து வருகிறது.
மேலும் இங்கே தொடர்க...

நாவலப்பிட்டிச் சம்பவம் : எம்பிக்கள் மூவரிடமும் ஸ்ரீலசுக விசாரணை

நாவலப்பிட்டிச் சம்பவம் தொடர்பாக கண்டி மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஸ்ரீ.ல.சு.க.விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

ஜனாதிபதி பூட்டானில் இருந்து நாடு திரும்பியதும் இது தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 8ஆம் திகதி இடம்பெற்ற பொதுத் தேர்தலின் போது நாவலப்பிட்டிய பகுதியில் குழப்பம் ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவங்கள் பற்றியே விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேற்படி குழப்ப நிலை காரணமாக மீள் வாக்குப் பதிவு நடந்தது. எனினும் கண்டி மாவட்ட உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவி வழங்குவது இடைநிறுத்தப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர்களான மகிந்தானந்த அலுத்கமகே, கெஹெலியா றம்புக்வெல்ல, எஸ்.பி. திசாநாயக ஆகியோரிடம் வாக்குமூலம் பதியப்பட்டதாகக் கூறப்படுகிறது
மேலும் இங்கே தொடர்க...

சரத்துக்கு வழங்கப்பட்ட காணிக்குச் செல்ல அனோமாவுக்கு அனுமதி மறுப்பு : விஜித ஹேரத்

நகர அபிவிருத்தி அதிகார சபை, முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு வழங்கியிருந்த காணிக்குச் செல்வதற்கு அவரது மனைவி அனோமாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

யுத்த வெற்றியின் பின்னர், நாட்டுக்காக ஆற்றிய சேவையினைப் பாராட்டி, முன்னாள் இராணுவத் தளபதிகளுக்கு கொழும்பு நாரஹென்பிட்டியில் காணி வழங்கப்பட்டிருந்தது. இது தொடர்பான சகல ஆவணங்கள் இருந்தும், அங்கு செல்வதற்கான அனுமதியை அரசாங்கம் வழங்கவில்லை என ஜனநாயக தேசிய முன்னணி தெரிவித்தது.

கொழும்பு 7 இல் அமைந்துள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இத்தகவலைத் தெரிவித்தார்.

"இது போன்ற காணிகள் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு மட்டுமல்லாது ஏனைய முன்னாள் இராணுவத் தளபதிகளுக்கும் வழங்கப்பட்டிருந்தன. திருமதி பொன்சேகா அங்கு சென்ற வேளை, அவ்விடத்தில் பொலிஸ் காவலரண் அமைக்கப்பட்டிருந்தது.

அங்கு செல்ல யாருக்கும் அனுமதி அளிக்க வேண்டாம் எனத் தமது உயர்பீடம் அறிவுறுத்தியுள்ளதாக அங்கிருந்த பொலிஸார் கூறியுள்ளனர்.

நகர அபிவிருத்தி அதிகார சபை, பாதுகாப்பு அமைச்சின் கீழ் வந்துவிட்டதோ என சந்தேகமாக இருக்கிறது. இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் தொடர்ந்தும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவுக்கு மறைமுகமான தண்டனைகள் வழங்கப்பட்டுக் கொண்டிருப்பது புலனாகிறது" என அவர் அங்கு மேலும் குறிப்பிட்டார்
மேலும் இங்கே தொடர்க...

ரணில் - சஜித் இன்று மாலை சந்திப்பு

ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் புதல்வருமான சஜித் பிரேமதாசவை விசேட கலந்துரையாடல் ஒன்றுக்காக அழைப்பு விடுத்துள்ளார்.

ஐக்கியத் தேசியக் கட்சியின் உயர் பதவிகளில் எதிர்வரும் வாரங்களில் பாரிய மாற்றம் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் வலியுறுத்தியுள்ளனர்.

அதன் ஓர் அங்கமாகவே இக்கலந்துரையாடல் இடம்பெறவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இச்சந்திப்பு இன்று மாலை இடம்பெறலாம் எனத் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன
மேலும் இங்கே தொடர்க...

புஷ்ஷுக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக லாரா தகவல்!

புஷ்ஷுக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக அவரது மனைவி லாரா வெளியிட்டுள்ள புத்தகம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்தத் தகவல் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்சின் மனைவி லாரா ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார். 'இதயத்தில் இருந்து சொல்கிறேன்' என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள இந்தப் புத்தகத்தில் புஷ் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் நடந்த சம்பவங்களை இவர் தொகுத்து எழுதி உள்ளார்.

அதில் பல்வேறு ரகசியத் தகவல்கள் இடம் பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது. 2007ஆம் ஆண்டு ஜெர்மனியில் தனக்கும், புஷ்ஷுக்கும் விஷம் கொடுக்கப்பட்ட அதிர்ச்சி தகவலையும் அவர் அந்தப் புத்தகத்தில் எழுதி இருக்கிறார்.

அவர் எழுதிய அந்தப் புத்தகதில்,

"2007ஆம் ஆண்டு ஜி-8 நாடுகள் மாநாடு ஜெர்மனியில் நடந்தது. இதில் என் கணவருடன் நானும் கலந்து கொண்டேன். அங்குள்ள ரிசார்ட் ஓட்டலில் நாங்கள் தங்க வைக்கப்பட்டு இருந்தோம்.

அப்போது புஷ்ஷுக்கு உடல் நலம் பாதித்தது. நானும் பாதிக்கப்பட்டேன். காலையில் இருவராலும் எழுந்திருக்க முடியவில்லை. வைரஸ் காய்ச்சல் தாக்கி இருக்கலாம் எனக் கருதினோம். இதனால் அன்று காலை நடந்த கூட்டத்தில் புஷ் பங்கேற்கவில்லை.

நாங்கள் மட்டுமல்ல, எங்களோடு வந்திருந்த வெள்ளை மாளிகை குழுவினரும் பாதிக்கப்பட்டனர். பாதுகாப்பு அதிகாரி ஒருவர் நடக்கவே சிரமப்பட்டார். எல்லோருக்குமே காது சரியாகக் கேட்கவில்லை.

முதல் நாள் இரவு எங்களுக்கு வழங்கப்பட்ட உணவில் விஷம் கலந்திருக்கலாம். அதனால்தான் எல்லோருக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருக்கிறது என்று டாக்டர்கள் தெரிவித்தனர். உடனே அமெரிக்க ரகசிய புலனாய்வு குழு இது பற்றி விசாரணை நடத்தியது. ஆனால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை" என்று எழுதப்பட்டிருக்கின்றது.

புஷ்ஷுக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக அப்போது எந்த தகவலும் வரவில்லை. லாரா எழுதிய புத்தகம் மூலம் முதல் முதலாக இந்த விஷயம் தெரிய வந்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

போலீஸ் வலையில் நடிகை ரஞ்சிதா : 2 நாளில் நேரில் ஆஜராவதாக உறுதி

பெங்களூரு : நித்யானந்தாவிடம் நடத்திய விசாரணையில், நடிகை ரஞ்சிதா இருக்குமிடத்தை, கர்நாடகா சி.ஐ.டி., போலீசார் கண்டுபிடித்தனர். 'இரண்டு நாட்களில் நடிகை ரஞ்சிதா விசாரணைக்கு ஆஜராக வேண்டும்' என்று அவருக்கு கர்நாடகா போலீசார், 'கெடு' விதித்துள்ளனர்.

சாமியார் நித்யானந்தாவுடன் வீடியோ காட்சிகளில் நெருக்கமாக இருந்த நடிகை ரஞ்சிதா, தலைமறைவானார். ரஞ்சிதா எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. அடிக்கடி தங்கும் இடத்தை மாற்றிக் கொண்டிருந்தார். கேரளாவில் இருப்பதாக தகவல்கள் வெளியானது. போலீசில் நித்யானந்தா சிக்கியவுடன், நடிகை ரஞ்சிதா குறித்து பலமுறை அவரிடம் விசாரித்தனர். முதலில் பதில் கூற மறுத்த நித்யானந்தா, பின்னர், ரஞ்சிதா இருக்கும் இடத்தைக் கூறினார். ரஞ்சிதாவின் மொபைல் நம்பரில், முதலில் நித்யானந்தாவை போலீசார் பேச வைத்தனர். அதன் பின்னர், கர்நாடகா சி.ஐ.டி., போலீஸ் தரப்பில் நடிகை ரஞ்சிதாவிடம் பேசப்பட்டது. அப்போது ரஞ்சிதா, 'இன்னும் இரண்டு நாளில், நானே நேரடியாக விசாரணைக்கு வருகிறேன்' என்று கூறியதாகத் தெரிகிறது.

இது குறித்து கர்நாடக சி.ஐ.டி., போலீஸ் எஸ்.பி., யோகப்பா கூறுகையில், ''நடிகை ரஞ்சிதா இருக்கும் இடம் தெரிந்துள்ளது. நித்யானந்தா மூலம், அவர் இருக்கும் இடத்தை அறிந்தோம். ரஞ்சிதாவிடம் பேசும் போது, இரண்டு நாட்களில் அவர் விசாரணைக்கு வராவிட்டால், அவர் இருக்கும் இடத்திற்கு போலீசார் நேரில் சென்று, அவரை கைது செய்து, திறந்த ஜீப்பில் அழைத்துவருவோம். இந்த வழக்கில் அவர், ஒரு சாட்சி மட்டுமே,'' என்றார். இந்த தகவல்களை வெளியிட்ட எஸ்.பி., யோகப்பா, நடிகை ரஞ்சிதா இருக்கும் இடத்தை தெரிவிக்கவில்லை. நித்யானந்தா சம்பந்தமான விசாரணைக்கு ஒத்துழைப் பதாக நடிகை ரஞ்சிதா கூறியதாகத் தெரிகிறது. நித்யானந்தாவிடம் சி.ஐ.டி., போலீசார் கேட்ட கேள்விகளுக்குரிய பதிலை வைத்து, நடிகை ரஞ்சிதாவிடம் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். சாமியார் கூறிய பதிலுக்கும், ரஞ்சிதா தெரிவிக்கும் பதிலுக்கும் தொடர்பு உள்ளதா என்று அறிய திட்டமிட்டுள்ளனர்.

மேலும் இரண்டு நாள் போலீஸ் காவல்: நித்யானந்தாவிடம் நடத்திய விசாரணை முடிவடையாததால், அவரை மேலும் இரண்டு நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க, ராம்நகர் நீதிமன்றம் அனுமதியளித்தது. நித்யானந்தாவிடம் நேற்று முன்தினம் இரவும், நேற்றும் விசாரணை தொடர்ந்து நடத்தப்பட்டது. இந்த விசாரணையில், பல புதிய தகவல்கள் கிடைத்து உள்ளன. நித்யானந்தாவிடம் விசாரணை நடத்த இரண்டு நாள் அனுமதி கிடைத்ததில், ஒரு நாள் மருத்துவமனையிலேயே கழிந்து விட்டதால், நேற்று சில மணி நேரம் மட்டுமே விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. நீதிமன்றத்திற்கு அழைத்துச்செல்வதில் தான் போலீசார் ஆர்வம் காட்டினர். நேற்று மதியம் 3 மணியளவில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நித்யானந்தா, ராம்நகர் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப் பட்டார்.

சி.ஐ.டி., போலீஸ் தரப்பில், 'சாமியார் நித்யானந்தாவிடம் விசாரணை முடியவில்லை. மேலும் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. எனவே, ஆறு நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளிக்க வேண்டும்' என்று மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி நாராயண பிரசாத், நித்யானந்தாவை மேலும் இரண்டு நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளித்தார். வரும் 30ம் தேதி அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார். நித்யானந்தா குறித்த தகவல்களை வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்திய அவருடைய சீடர் லெனினிடம், கர்நாடகா சி.ஐ.டி., போலீசார் சில நாட்களாக விசாரணை மேற் கொண்டனர். நித்யானந்தாவின் ரகசிய ஒப்பந்தங்கள், அந்தரங்க நடவடிக்கைகள், வெளிநாட்டு பணம் சம்பாதிப்பு, நித்யானந்தா மடத்தின் கிளைகள், அவற்றின் நடவடிக்கைகள் உட்பட முக்கிய தஸ்தா வேஜுகள், சில 'சிடி'க்களை யும் லெனின் அளித்துள்ளதாக தெரிகிறது. நித்யானந்தா எப்போதும் தனது கையில் ருத்ராட்ச மாலை வைத்திருப்பார். இந்த மாலையை தற்போது கர்நாடகா சி.ஐ.டி., போலீசார் வாங்கி வைத்து உள்ளதாக நித்யானந்தாவின் வக்கீல் தெரிவித்து உள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

பார்வதி அம்மாளைத் திருப்பி அனுப்பியமை : உடன் பதிலளிக்க ம. அரசுக்கு உத்தரவுசென்னையில் சிகிச்சை பெறவந்த விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளைசிகீ திருப்பி அனுப்பியது குறித்து மத்திய அரசை உடனடியாகப் பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரபாகரன் தாயார் பார்வதியம்மாள் சிகிச்சைக்காக மலேசியாவில் இருந்து சென்னை வந்தார். அவர் விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டார். இதை எதிர்த்து வழக்கறிஞர் கருப்பன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.

மனுவில், "மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக கடந்த 16ஆம் திகதி மலேசியாவில் இருந்து சென்னை வந்த பார்வதி அம்மாளை குடியுரிமை அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளனர்.

விசா உள்ளிட்ட உரிய அனுமதியுடன் வந்த பார்வதி அம்மாளை, இந்தியாவுக்குள் அனுமதிக்காதது சர்வதேச மனித உரிமை மீறல். இதனால் பார்வதி அம்மாளை தனி விமானம் மூலம் மீண்டும் சென்னை அழைத்து வர மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று தெரிவித்திருந்தார். மேலும் மருத்துவச் செலவுகள் அனைத்தையும் மத்திய அரசே ஏற்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் தர்மாராவ், கே.கே.சசிதரன் ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஜெயசிங் ஆஜராகி வாதாடுகையில்,

"இந்த வழக்கில் மத்திய அரசையும், மாநில அரசையும் பிரதிவாதிகளாக சேர்த்துள்ளார்கள். பார்வதியம்மாளை திருப்பி அனுப்பியதில் மாநில அரசுக்கு எந்த பங்கும் கிடையாது. வெளிநாட்டவர்கள் வருகையும், அனுமதி வழங்குவதும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே மாநில அரசை இந்த வழக்கில் சேர்க்க கூடாது" என்று கூறினார்.

இதை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டு வழக்கில் இருந்து தமிழக அரசை நீக்க உத்தரவிட்டனர்.

பின்னர் நடந்த வாதத்தில் மத்திய அரசு வக்கீல் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எம்.ரவீந்திரன் ஆஜராகி நாளை(இன்று)பதில் அளிப்பதாக தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விசாரணை இன்று பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மேலும் இங்கே தொடர்க...

துப்பாக்கிச் சவால் இன்றித் திறந்த கலந்துரையாடல் : திம்பு மாநாட்டில் ஜனாதிபதிஇரண்டு வருடங்களுக்கு முன்னர் 15 ஆவது சார்க் மாநாட்டுக்காக கொழும்பில் நாங்கள் சந்தித்த போது, முப்பது வருடங்களாக நிலவிய மிகக் கொடூரமான பயங்கரவாத சவாலுக்கு இலங்கை முகம் கொடுத்துக் கொண்டிருந்தது. தற்போது பிரிவினைவாத மற்றும் பயங்கரவாதத்தை அழித்தொழித்த எமக்கு, துப்பாக்கியின் சவால் இல்லாமல் வெளிப்படையாகக் கலந்துரையாடி ஒருமைப்பாட்டை ஏற்படுத்த முடிந்துள்ளது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பயங்கரவாதத்திற்கு எதிரான சார்க் உடன்பாட்டின் உறுப்புரையினை அவ்வாறே நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதேபோல், நாம் இனங்கண்ட கண்காணிப்பு நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடனான ஒத்துழைப்பை பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் சொன்னார்.

பூட்டான் தலைநகரான திம்புவில் நேற்று ஆரம்பமான சார்க் உச்சிமாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது :

"அழகான திம்பு நகரத்தில் உங்களுடன் கைகோர்த்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

பிரதமர் நின்லே அவர்களே! சார்க் அமைப்பின் வெள்ளிவிழாக் காணும் வருடத்தில் நீங்கள் அதன் தலைவராகப் பதவியேற்றுக் கொண்டுள்ளீர்கள். நீங்கள் அமைப்பின் தலைவராக இருக்கின்ற காலத்தில் முழுமையான ஆதரவை வழங்குவேன் என நான் சத்தியம் செய்துகொள்கின்றேன்.

சகலரினதும் ஆதரவு தேவை

ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில், கூடுதலான மக்கள் ஆணையைப் பெற்றுக்கொடுத்த எனது நாட்டின் மக்களுக்கும் எதிர்காலச் சந்ததியினருக்கும் நல்ல எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்காக இலங்கைக்கு அருகில் இருக்கின்ற உங்கள் சகலரினதும் ஆதரவைக் கோரி நிற்கின்றேன். அந்த ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையும் கொண்டிருக்கின்றேன்.

1985 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது முதல் படிப்படியாக வளர்ச்சியடைந்த இந்தப் பயணத்தில் வெள்ளிவிழா கண்டுகொண்டிருப்பதை முன்னிட்டு நாம் பெருமிதம் கொள்ளவேண்டும். எதிர்காலச் சந்ததியினருக்காக நாம் கைகோர்த்துக்கொண்டு, எமது பயணத்தைத் தொடரவேண்டும். அது பயனளிப்பதாக அமையும்.

சார்க் மாநாடு இம்முறை 'சுற்றாடலும் தெற்காசியாவும்' எனும் தொனிப்பொருளில் நடைபெறுகிறது. குளிர்மை மற்றும் தட்பவெப்ப நிலைமை தொடர்பில் ஆராயவேண்டியது தெற்காசிய வலய நாடுகளுக்குப் பொருத்தமானதாகவே இருக்கின்றது. இது தொடர்பில் வலயத்தின் குரல் சர்வதேச மேடைகளில் பலமாக ஒலிப்பதற்கு எங்கள் அனைவருக்கும் பொதுவான பொறுப்பு இருக்கின்றது.

தனி நபர் வருமானம் அதிகரிப்பு

ஜனநாயக நிர்வாகத்திற்காக முழுமையான அர்ப்பணிப்பு எமது முழு வலயத்திற்கும் பொதுவானதாகும். இந்தியாவின் முழுமையான அபிவிருத்தியுடன் இணைந்த எமது பொருளாதாரம் உலகப் பொருளாதார வீழ்ச்சியின் போது சரியான முறையில் முகம்கொடுக்க முடிந்துள்ளது. உலகப் பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் அழுத்தம் இருந்த போதிலும், இலங்கையில் எங்களுக்கு 6 வீத வளர்ச்சி வேகத்தில் கொண்டுசெல்வதற்கு முடிந்துள்ளது. அதனால், ஐந்து வருடங்களுக்கு முன்னர் 1,060 டொலராக இருக்கந் தனிநபர் வருமானம் இன்று 2,050 டொலர் வரை சென்றுள்ளது.

பயங்கரவாதத்திற்கு எதிராக முழுப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட காலத்தில் கூட அபிவிருத்தி தொடர்பில் எம்மிடமிருந்த கவனத்தை நாம் குறைத்துக் கொள்ளவில்லை.

அரசியல் மறுசீரமைப்பிற்காக எமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதன் மூலம், பொருளாதாரம் மற்றும் அரசியலுக்கு இடையில் தொடர்பு இருப்பதாக நாம் நம்புகின்றோம்.

சார்க் தலைமை வகித்த கடந்த 18 மாதங்களில் மிக முக்கியமான பிரிவுகளில் வலயத்தில் இணக்கத்தை ஏற்படுத்துவதற்காக நடவடிக்கை எடுத்தோம். மின்சக்தி, உயர்கல்வி, மாணவர்களின் போக்குவரத்து, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பம், அது மட்டுமன்றி பாராளுமன்ற நடவடிக்கை தொடர்பிலான அமைச்சர்களின் ஆறு கூட்டங்கள் எமது நாட்டில் நடைபெற்றுள்ளன.

இலங்கையின் நடவடிக்கை

உலகப் பொருளாதாரம் தொடர்பில் 2009 ஆம் ஆண்டு வெளிவிவகார அமைச்சர்கள் இணைந்து வலய மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தி, கூட்டறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டது. இலங்கை எடுத்த முதல் நடவடிக்கை இதுவாகும். அதனை நடைமுறைப்படுத்த அரச மட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சார்க் நாடுகளின் ஆகக் கூடுதலான பெறுபேற்றைப் பெற்றுக் கொடுப்பதற்காக இன்னும் உழைக்கவேண்டியிருக்கின்றது. கிராமிய அபிவிருத்தி, மின்சக்தி, உணவுப் பாதுகாப்பு மற்றும் விஞ்ஞானம் ஆகிய துறைகளை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

0 சர்வதேச ரீதியில் எமது வலயத்தில் பொது மேம்பாட்டிற்காக ஒருமித்த குரல் கொடுப்பதற்கும் நல்ல முடிவுகளை எடுப்பதற்கும் பொருத்தமான வலயம் என்ற நிலைமையினையும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

இந்த மாநாட்டில் கைச்சாத்திடப்பட்ட வர்த்தக மற்றும் சேவை, சுற்றாடல் உள்ளிட்ட ஒப்பந்தங்கள் இலங்கையில் உடனடியாகவே நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

சார்க் நாடுகளின் இனங்களுக்கிடையில் தொடர்புகளை மேம்படுத்தல் மட்டுமன்றி, மக்களின் போக்குவரத்திற்கு நேரடித் தொடர்பை ஏற்படுத்த வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

அத்துடன், பயங்கரவாதத்திற்கு எதிரான சார்க் உடன்பாட்டின் உறுப்புரயினை அவ்வாறே நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதேபோல், நாம் இனங்கண்ட கண்காணிப்பு நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புக்களுடன் ஒத்துழைப்பைப் பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்."

இவ்வாறு ஜனாதிபதி கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

வடக்கு, கிழக்கு மாகாணத்தில் அதிகளவு கைத்தொழில் பேட்டைகளை நிறுவ திட்டம்
றிஷாட் தகவல்; ஹோமாகம பேட்டைக்கு நேற்று விஜயம்
வடக்கு, கிழக்கில் அதிகளவு கைத்தொழில் பேட்டைகளை நிறுவுவதற்கு திட்டமிட்டிருப்பதாக கைத்தொழில், வர்த்தகத்துறை அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

இதற்காக வெளிநாட்டு முதலீ ட்டாளர்களுக்கு விளக்கமளிக்கும் பொருட்டு விரைவில் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் அமைச்சர் றிஷாட் பதியுதீன் குறிப்பிட்டார்.

கைத்தொழில் துறையை மேம்படுத்துவதன் மூலம் அதிகளவிலான தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொடுக்க முடியுமென்றும், வேலையற்ற பட்டதாரிகளை இதற்குள் ஈடுபடுத்த முடியுமென்றும் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அமைச்சர், முதலீட்டாளர்களை இலங்கைக்கு அழைத்து வந்து முதலீடுகளைச் செய்து, அதன் மூலம் உற்பத்தியாகும் கைத்தொழில் பொருட்களை அம்முதலீட்டாளர்களின் நாடுகளிலேயே சந்தைப்படுத்துவதே எனது இலக்கு.

இதன் மூலம் அதிகளவு அந்நியச் செலாவணியை ஈட்டிக் கொள்ள முடிவதுடன், உற்பத்தியாளர்களுக்கு அதிகளவு வருமானத்தையும் ஏற்படுத்திக் கொடுக்க முடியுமென்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை, அமைச்சர் றிஷாத் பதியுதீன் முதற் தடவையாக அமைச்சின் கீழுள்ள ஹோமாகம பனாகொடை கைத்தொழில் பேட்டைக்கு நேற்று விஜயம் செய்து அதன் செயற்பாடுகளை பார்வையிட்டார்.

கைத்தொழில் பேட்டை முதலீட்டாளர்கள் மற்றும் தொழிற்சாலையில் கடமையாற்றும் அதிகாரிகளையும் சந்தித்து கலந்துரையாடினார். அவர்களின் குறைநிறைகளை கேட்டறிந்த அமைச்சர் அதற்கான பணிப்புரைகளையும் விடுத்தார்.

அமைச்சர் றிஷாத் பதியுதீன் அங்கு கருத்துத் தெரிவிக்கையில், கைத்தொழிற் துறையை பொருளாதாரத்தை இலங்கைக்கு ஈட்டித் தரும் துறையாக மாற்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் எண்ணத்தை நனவாக்குவதற்கு அதிகாரிகளும் ஊழியர்களும் அர்ப்பணிப்புடன் தனக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

உலகின் முன்னணி நாடுகளுடன் இலங்கையும் போட்டியிட்டு வெற்றி கொள்ளும் அளவுக்கு இந்நாட்டை மாற்றியமைப்பதற்கும் எதிர்காலத்தில் சிறந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

மனோகணேசன் - ரணில் முரண்பாடு தொடர்கின்றது


ஐ.தே.க தலைவருக்கும் ஜனநாயக மக்கள் முன்னணிக்குமிடையில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்தவித மான முடிவும் எட்டப்படவில்லை யென பிரபாகணேசன் எம்.பி ‘தினகர னு’க்குத் தெரிவித்தார்.

இதனால் இன்று (29) மாலை 5 மணிக்கு ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சித் தலைவர்களை ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க சந்தித்து முடிவெடுக்கவுள்ளதாக பிரபா கணேசன் எம்.பீ. தெரிவித்தார். பொதுத் தேர்தலுக்குப் பின்னர் இன்னமும் கட்சியின் தலைவர் மனோ கணேசன் ஐ.தே.க. தலைவரைச் சந்திக்கவில்லையெனக் கூறிய அவர், இன்றைய தினமே நேரடிச் சந்திப்பு இடம் பெறுவதாகக் கூறினார்.

நேற்று முடிவு எட்டப்படாததால் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுத்தலைவர் மங்கள சமரவீர எம்.பி. ஆகியோரை ரணில் விக்கிரமசிங்க இன்று சந்திக்கிறார்.
மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று மாலைதீவு ஜனாதிபதியுடன் சந்திப்பு
மீன்பிடி, கடல் போக்குவரத்து தொடர்பில் முக்கிய பேச்சு

சார்க் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பூட்டானுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கு சார்க் நாடுகளின் தலைவர்கள் பலரையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

சார்க் நாடுகளுக்கிடையில் முக்கியமான விடயங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளதுடன் மாலைதீவுக்கும் இலங்கைக்குமிடையில் மீன்பிடித்துறை, கடல்வழிப் போக்குவரத்து தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளன.

அபிவிருத்தியில் முன்னணி நாடாக இலங்கையைக் கட்டியெழுப்ப ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தால் மட்டுமே முடியுமென தெரிவித்துள்ளார்.

கடந்த தேர்தல்களில் நாட்டு மக்கள் அதனை நிரூபித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இப்பேச்சுவார்த்தையின் போது இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் சம்பந்தமாக கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன் இரு நாடுகளினதும் மீன்பிடித் தொழில் துறையை மேம்படுத்துவது தொடர்பில் ஆராய ப்பட்டுள்ளது.

இது தொடர்பில் காத்திரமான வேலைத் திட்டமொன்றை முன்னெ டுப்பது சம்பந்தமாகவும் இரு நாடுகளுக்குமிடையில் கடல் வழி போக்குவரத்தை ஆரம்பிப்பது தொடர்பிலும் இரு நாட்டுத்தலை வர்களும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

இலங்கையின் தற்போதைய அர சாங்கம் முன்னெடுக்கும் வேலைத் திட்டங்களுக்கு நாட்டு மக்கள் பூரண ஆதரவு வழங்கிவருவதைக் காண முடிகிறது என தெரிவித்த மாலைதீவு ஜனாதிபதி, நாட்டிற்கு நிரந்தர சமாதானத்தைக் கொண்டு வந்துள்ளது போன்று நாட்டை அபிவிருத்தியில் கட்டியெழுப்பும் பலமும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு உள்ளதெனவும் தெரிவித்துள்ளார்.

நேபாளப் பிரதமர் மாதங்கு மாரைக் கடந்த செவ்வாயன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

பூட்டான் பிரதமர், அமெரிக்க பிரதி ராஜாங்கச் செயலாளர் ஆகி யோரைச் சந்தித்துள்ள ஜனாதிபதி, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கையும் சந்தித்துப் பேச்சுவார் த்தை நடத்தவுள்ளார்.

மேற்படி சந்திப்புகள் பூட்டான் திம்பு நகரில் உள்ள சார்க் கிராமத் தின் இலங்கை இல்லத்தில் இடம் பெற்றுள்ளதுடன் இச்சந்திப்பில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, அமைச்சர் ஜீ. எல். பீரிஸ், ஜனாதிபதியின் பாரியார் திருமதி ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

எனது சொந்த தேவைக்கு பிரதமர் பதவியை பயன்படுத்த மாட்டேன்

கடமைகளை பொறுப்பேற்று பிரதமர் தி. மு. உரை


நாட்டுக்கு எதிரான சர்வதேச அழுத்தங்களின் போது சகல கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென பிரதமர் டி. எம். ஜயரத்ன தெரிவித்தார்.

நாட்டு மக்களும் அரசியல் கட்சிகளும் நாட்டின் நலன், பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு செயற்பட்டால் பொருளாதாரத்திலும் அபிவிருத்தியிலும் உலகின் சிறந்த நாடாக இலங்கையைக் கட்டியெழுப்ப முடியுமெனவும் பிரதமர் தெரிவித்தார்.

பிரதமர் டி. எம். ஜயரட்ன நேற்று தமது பொறுப்புகளை பிரதமர் அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக கையேற்றார். இந்நிகழ்வு நேற்றுக் காலை கொழும்பு பிளவர் வீதியிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.

சர்வ மதத் தலைவர்களின் ஆசியுடன் நேற்றுக் காலை 7.30 மணி சுபவேளையில் பிரதமர் தமது பொறுப்புக்களைக் கையேற்றதுடன், அமைச்சர் ஜோன் செனவிரத்ன, பிரிதியமைச்சர் துமிந்த திசாநாயக்க, வட மத்திய மாகாண முதலமைச்சர் பேர்டி பிரேமலால் திசாநாயக்க உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பிரதமர் டி. எம். ஜயரத்ன இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

அரசியலில் 60 வருட கால மக்கள் சேவையின் பின்னர் நாட்டின் பிரதமர் என்ற உன்னதமான பதவி எனக்குக் கிடைத்துள்ளது. இது எனது மக்களுக்குக் கிடைத்த மாபெரும் கெளரவமென நான் கருதுகிறேன். இப்பதவியினூடாக நான் எனது மக்களுக்கு சேவை செய்வதில் பின்நிற்க மாட்டேன். ஒருபோதும் எனது சொந்தத் தேவைகளுக்கு இப்பதவியைப் பயன்படுத்த மாட்டேன் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.

நாட்டு மக்களுக்கான சேவையின் போது நான் பல தடைகளையும் அசெளகரியங்களையும் சந்திக்க நேர்ந்தது. அப்போதெல்லாம் எனது மக்கள் என்னுடனிருந்தனர். அதனால் எனது சேவைகளைப் பெற்றுக் கொள்ளும் உரிமையுடையவர்கள் அவர்கள்.

பயம் சந்தேகமின்றி சகல இன, மத மக்களும் சமத்துவமாக வாழும் இலங்கையைக் கட்டியெழுப்ப ஜனாதிபதி மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் அவருடன் இணைந்து செயற்படுவேன்.
மேலும் இங்கே தொடர்க...

சர்வதேச மேடைகளில் சார்க் நாடுகள் ஒருமித்து குரலெழுப்ப வேண்டும் 16வது சார்க் உச்சி மாநாட்டை ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரை

வெளியில் இருந்து கிடைக்கும் தீர்வுகளை தவிர்க்கும் தைரியம் வேண்டும்


எமது அமைப்பின் பலத்தை குறைத்து மதிப்பிட்டு வருகிறோம்

சர்வதேச மற்றும் பல் தரப்பு அமைப்புகளுடன் செயற்படும் போது எமது வலயத்தின் பொதுவான நன்மை கருதி ஒரே குரலில் பேச வேண்டும். வெளியில் பெறப்படும் தீர்வுகள் எமக்கு ஏற்றவைதானா என்பதை நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும். எமது வலயத்துக்குள் நாமே மேற்கொள்ளக்கூடிய செயற்பாடுகள் பற்றி கண்டறிய வேண்டும்.

சர்வதேச மேடைகளில் குறிப்பாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் முன் எமது வலயத்தின் பொதுப் பிரச்சினைகள் பற்றி ஒருமித்த குரலில் பேசும் செயற்பாட்டை நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். பூட்டானில் நேற்று ஆரம்பமான 16வது சார்க் உச்சி மாநாட்டில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆற்றிய உரையின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சார்க் நாடுகளுக்கிடையே வலய தொடர்களின் தசாப்தம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பத்தாண்டு காலத்தில் எமது நாடுகள் மற்றும் மக்களிடையிலான தொடர்புகளை வலுப்படுத்திக் கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும். அதேவேளை பயங்கரவாதத்துக்கு எதிராக சார்க் கோவையின் விதிமுறைகள் முழுமையாக செயற்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் கண்டறியப்பட வேண்டும்.

வலய அமைப்பு என்ற ரீதியில் சார்க் அமைப்பு தனித்து முன்னேற்றம் காண முடியாது. எனவே நாம் இனங்கண்டுள்ள சில நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புக ளுடன் செயற்பாட்டு ஒத்துழைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தெற்காசிய உலகின் பழைமையான மற்றும் சீரிய உரிமைகளின் இருப்பிடமாகும் உலகின் சிறந்த சாஸ்திரவாதிகள், விஞ்ஞானிகள், அரசியல்வாதிகள், கலைஞர்கள், கவிஞர்கள் ஆகியோர் இந்த வலயத்தில் இருந்து உருவாகியுள்ளனர்.

சார்க் வலயம் அபிவிருத்தியடைந்துள்ள போதிலும் தெற்காசியாவின் ஒன்றிணைந்த பலத்தை சில சமயங்களில் நாம் குறைத்தே மதிப்பிடுகிறோம். எமது தொழில்நுட்ப திறனையும் எமது வளங்களின் மூலம் அபிவிருத்தி சவால்களுக்கு முகங்கொடுக்கவும், சமூக மற்றும் பாதுகாப்பு நிலையை ஸ்திரப்படுத்தவும் எமக்கு திறமை இருப்பதை சில சமயங்களில் நாம் நினைப்பதில்லை. அதற்கு பதில், வலயத்துக்கு புறம்பாக உள்ள சக்திகளுக்கு முன்னுரிமை வழங்குகிறோம். நாம் செய்ய வேண்டியது அதுவல்ல. எமது வலயத்துக்குள் இருக்கும் அபிவிருத்தி மற்றும் தொடர்புகளை நாம் முதலில் பலப்படுத்திக் கொள்ள வேண்டும்.

சார்க் அமைப்பின் தலைமைத்துவத்தை ஏற்றுள்ள இந்த 18 மாத காலத்தில் முக்கியமான பல துறைகளில் வலய ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம். மின்சாரம், உயர் கல்வி, சிறுவர், போக்குவரத்து, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம், பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான ஆறு அமைச்சு மட்ட கூட்டங்கள் எமது நாட்டில் நடத்தப்பட்டுள்ளன. குறிப்பாக 2009 பெப்ரவரியில் இடம்பெற்ற சார்க் வெளிநாட்டமைச்சர்கள் கூட்டத்தில் உலகளாவிய பொருளாதார சீர்கேடு தொடர்பாக வலயத்தின் ஒன்றிணைந்த கூட்டத் தொடர் பற்றி இணை அறிக்கை விடுக்கப்பட்டது.

இலங்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட அந்த நடவடிக்கை வலய அபிவிருத்திக்கான முதல் நடவடிக்கையாகும்.

காலநிலை மாற்றம் இந்த மாநாட்டின் தொனிப் பொருளாக இருப்பது காலேசிதமானதாகும்.

தெற்காசிய பிராந்தியத்தின் பனி யால் சூழப்பட்டுள்ள நேபாளம் மற்றும் பூட்டானியிலிருந்து மாலை தீவு வரையிலான பிராந்தியம் சகல ருக்கும் சம்பந்தப்பட்ட பிரச்சினை யாகும்.

இது தொடர்பான எமது பிராந்தியத்தின் நிலை சர்வதேச மேடைகளில் வலுவாக எழுப்ப வேண்டியது நம் அனைவருக்கும் உள்ள பொறுப்பாகும்.

ஜனநாயக நிர்வாகத்திற்கான எமது முழுமையான அர்ப்பணிப்பு இப்போது எமது முழுப் பிராந்தியத்திற்கும் பொதுவான நடைமுறையாகும்.

இந்தியாவின் பரந்த அபிவிருத்தியுடன் வளர்ச்சி கண்ட எமது பொருளாதாரம், உலகப் பொருளாதார நெருக்கடிக்கு வெற்றிகரமாக முகங்கொடுத்தது.

உலகப் பொருளாதாரத்தின் பாதிப்பு இருந்த போதிலும் இலங்கையில் எமக்கு 6% பொருளாதார வளர்ச்சியை எட்ட முடிந்தது. ஐந்தாண்டுகளுக்கு முன்பு 1060 டொலராகவிருந்த தனிநபர் வருமானம் இன்று 2050 டொலர் வரை உயர்வடைந்துள்ளது.

பொருளாதார மேம்பாட்டுக்காக நகரத்திற்கு வர வேண்டிய அவசியம் இல்லையென்ற நம்பிக்கையின் அடிப்படையில் நாம் முன்னெடுத்த கொள்கை வெற்றியளித்தது. எனது அரசாங்கம் குடியிருப்பு, குடிநீர் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை நகரத்தில் மாத்திரமன்றிக் கிராமத்தில் மேற்கொண்டது. அதனால்தான் எமது அரசாங்கத்திற்குக் கிராம மக்கள் கூடுதலாக வாக்களித்தனர்.

அரசியல் மறுசீரமைப்பை மேற்கொள்ள எனது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது. அதற்கு முன்னதாக நெருக்கடி நிலவிய பகுதிகளில் மக்களுக்குப் புனர்வாழ்வளித்து அவர்களுக்கு ஜீவனோபாயத்தைப் பெற்றுக் கொடுத்து அந்தப் பிரதேசங்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வளங்களைப் பெற்றுக் கொடுக்க எமது அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளது.

சார்க் அமைப்பு அதன் வெள்ளி விழா வருடத்தில் கால் பதிக்கின்றது. பூட்டான் பிரதமர் தின்வே இம்முறை இவ்வமைப்பின் தலைவராகியுள்ளார். அவர் தலைமைப்பதவியை வகிக்கும் காலத்தில் அவருக்கு எனது பூரண ஆதரவை வழங்குவேன் என உறுதியளிக்கின்றேன்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் 15வது சார்க் மாநாடு கொழும்பில் நடைபெற்றது. அச்சமயம் எமது நாடு பயங்கரவாதத்துக்கெதிரான சவாலை எதிர்கொண்டிருந்தது.

பிரிவினைவாதம் மற்றும் பயங்கரவாதத்தை தோற்கடித்துள்ள நாம் தற்போது துப்பாக்கிகளின் சவால்களில்லாத வெளிப்படையான விவாதங்களில் ஈடுபடவும் இணக்கப்பாட்டை காணவும் வாய்ப்புக் கிட்டியுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் அமோக மக்கள் ஆணை எமக்குக் கிடைத்துள்ளது. இதனூடாக எமது நாடு, மக்கள் மற்றும் இளைய சந்ததிக்கான எதிர்காலத்தை கட்டியெழுப்ப எமது அயல் நாடுகள் எமக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்கும் என்ற நம்பிக்கையுண்டு.

சார்க் அமைப்பானது எமது பிராந்திய நாடுகளின் மக்களினது நலன், சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான அமைப்பாக விளங்குகிறது. கடந்த இரண்டரை தசாப்தங்களாக நாம் கட்டியெழுப்பியுள்ள இணக்கப்பாடுகளே பெரும்

இதன் மூலம் எமது நாடுகள், மக்களுக்கிடையில் நெருங்கிய நல்லுறவை ஏற்படுத்திக் கொள்வது முக்கியமானதாகும்.

1985ம் ஆண்டிலிருந்து படிப்படி யான செயற்பாடுகளுடன் ‘சார்க்’ 25 ஆண்டுகளை எட்டியிருப்பது நாம் பெருமைப்படக் கூடிய தொன் றாகும்.

தற்போது எமது எதிர்கால சந்ததி க்காக எமக்கிடையிலான ஒத்துழைப் புகளை மேலும் வலுப்படுத்திக் கொள்வது அவசியம்.

மேலும் இங்கே தொடர்க...