30 நவம்பர், 2009

வவுனியாவில் ஜனாதிபதி தேர்தல் பிரசார வேலைகள் ஆரம்பம்


ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான துண்டு பிரசுரங்களை விநியோகிப்பதன் மூலம் ஆதரவு தேடுகின்ற பிரசார வேலைகளை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வவுனியாவில் ஆரம்பித்துள்ளது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை ஆதரித்து, அந்தக் கட்சியின் வன்னிப் பிரதேச அமைப்பாளர் பி.சுமதிபாலா தலைமையில் தேர்தல் பிரசாரத்திற்கான வைபவம் நடைபெற்றது.

இதில் கட்சியின் பிரதேச தலைவர்கள், முக்கியஸ்தர்கள், கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என சிங்கள, தமிழ், முஸ்லிம் ஆகிய மூவினத்தையும் சேர்ந்த பலதரப்பட்டோரும் கலந்துகொண்டனர்.

"வட பிரதேசத்திற்கே வசந்தம். நாட்டுக்கே விடுதலை"
"எமது அரசனுக்கும் இராணுவ வீரர்களுக்கும் வடபிரதேசத்தின் மக்களின் கௌரவம்"
போன்ற தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் உருவப்படத்தைத் தாங்கிய கட்அவுட் கட்டப்பட்ட ஊர்தி முன்செல்ல பி.சுமதிபாலா தலைமையில் கட்சியினரும், ஆதரவாளர்களும் பேரணியாக வவுனியா மன்னார் வீதியில் இருந்து புறப்பட்டுச் சென்றார்கள்.

இந்த பிரசாரப் பணிகளின் ஆரம்ப வைபவத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வன்னிப்பிரதேச அமைப்பாளர் பி.சுமதிபால உரையாற்றுகையில்,

"வடக்கில் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, நாட்டில் அமைதியை ஏற்படுத்திய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் பல்வேறு அபிவிருத்தி வேலைகளை வடக்கில் முன்னெடுத்திருக்கின்றார்.

வீதிகள் அமைக்கப்படுகின்றன. பாலங்கள் கட்டப்படுகின்றன. மின்சாரமில்லாத இடங்களுக்கு மின்சாரம் வழங்கப்படுகின்றது. பாழடைந்து கிடந்த நீர்ப்பாசனக் குளங்கள் புனரமைக்கப்படுகின்றன. இவ்வாறு பல்வேறு துறைகளிலும் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.

இவற்றிற்கெல்லாம் காரண கர்த்தாவாகிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவே அடுத்த ஜனாதிபதி என்பதை இங்குள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் முடிவாகத் தீர்மானித்து விட்டார்கள். இந்தத் தேர்தலில் அமோக வெற்றி அவருக்கே கிடைக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் கிடையாது.

அவருடைய வெற்றியை உறுதி செய்வதற்காகவே இந்தப் பிரசார வேலைத்திட்டத்தை நாங்கள் இன்று ஆரம்பித்திருக்கின்றோம்" எனத் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...
அடம்பனில் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் கையளிப்பு


மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அடம்பன் பகுதியில் இன்று மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிசாட் பதியுதீனின் தலைமையில் இடம்பெயர்ந்த மக்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் பகிர்தளிக்கப்பட்டன.

இந்நிகழ்வினை இராணுவத்தினரே ஏற்பாடு செய்திருந்தனர்.மாந்தை மேற்கு பகுதியில் உள்ள மக்களில் இராணுவத்தினரால் தெரிவு செய்யப்பட்ட 325 பேருக்கு இத்துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டன.

மீள்குடியேற்ற அமைச்சின் ஏற்பாட்டில் 300 துவிச்சக்கர வண்டிகளும், ஐ.ஓ.எம் அமைப்பின் அனுசரணையில் 25 துவிச்சக்கர வண்டிகளும் வழங்கப்பட்டன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் வங்கிய ஆலோசனைகளின் அடிப்படையில் மீள்குடியேற்றப்பட்ட இம்மக்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டன.தெரிவு செய்யப்பட்டவர்களுள் ஆசிரியர்கள், மாணவர்கள், குடும்பத் தலைவர்கள், கிராம சேவகர்கள் போன்றோர் அடங்குகின்றனர்.

இந்நிகழ்வில் அமைச்சர் றிசாட் பதியுதீன், மன்னார் மாவட்ட அரச அதிபர் ஏ.நிக்கொலாஸ் பிள்ளை, இராணுவ உயர் அதிகாரிகள், சுகாதார சேவைகள் பணிப்பாளர் திருமதி யூட்ரதனி, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்தவிக்ரமசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்
மேலும் இங்கே தொடர்க...
திருமலை மீனவர் கொலை : சந்தேகத்தில் கடற்படை வீரர் மூவர் கைது


சீனன்குடா பகுதியில் காணாமல் போன சிங்கள மீனவ இளைஞர் சடலமாக கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 3 கடற்படைச் சிப்பாய்கள் பொலிசாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை காணாமல் போன இம்மீனவருக்கும் கொட்டியாகுடா கடற்படை முகாம் சிப்பாய்களுக்கும் இடையில் கடந்த வியாழக்கிழமை வாய்த் தகராறு ஏற்பட்டதாகவும், அதன் பின்னர் அவர் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றார் என்றும் கூறுப்படுகின்றது.

குறித்த மீனவர் காணாமல் போய் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக விசேட குழுவொன்று விசாரனைகளை மேற் கொண்டதாகவும் இதனையடுத்தே மேற்படி சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் குறித்து இரகசியப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதேவேளை, கடற்படையும் தனியான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெருவிக்கப்படுகின்றது.

இறந்தவருக்கும் அவரது நண்பர்களுக்கும் இடையிலான பிரச்சினை ஒன்றின் விளைவாகவும் இந்தக் கொலை இடம் பெற்றிருக்கலாம் என்று தாம் சந்தேகிப்பதாகக் கடற் படையினர் கூறுகின்றனர். இது தொடர்பாக சில தகவல்கள் தங்களுக்குத் கிடைத்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் இங்கே தொடர்க...
இணக்க அரசியல் மூலமே இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியும் : டக்ளஸ்





கல்வித்துறை மட்டுமல்லாமல், பொதுமக்களுக்குப் பல்வேறு பிரச்சினைகள் இருப்பது எமக்குத் தெரியும். இந்தப் பிரச்சினைகளுக்கு இணக்க அரசியல் மூலம் மட்டுமே தீர்வு காண முடியும்" எனத் தெரிவித்துள்ளார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.

வவுனியா மாவட்ட பாடசாலைகளுக்கான கற்றல் மேம்பாட்டுக்கான உபகரணங்களைக் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி வீ.ஆர்.ஏ.ஒஸ்வெல்ட் தலைமையில் வவுனியா தெற்குக் கல்வி வலய அலுவலகத் தொகுதியில் இந்த வைபவம் நடைபெற்றது.

வவுனியா பிரதேசத்தைச் சேர்ந்த 15 பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இந்த வைபவத்தில் கலந்து கொண்டார்கள். சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சினால் 9 லட்சம் ரூபா பெறுமதியான கற்றல் தேவைக்குரிய புத்தகங்கள், கணனிகள், வெள்ளைப் பலகைகள் உட்பட 9 லட்சம் ரூபா பெறுமதியான முக்கிய உபகரணங்களை இந்த வைபவத்தின்போது அமைச்சர் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வைபவத்தில் அமைச்சருடன், ஈபிடிபி கட்சியின் முக்கியஸ்தர் எம்.சந்திரகுமார், வவுனியா மாவட்டப் பொறுப்பாளர் ரகு சிவன் சிவகுமார் ஆகியோரும் கலந்து கொண்டார்கள். வவுனியா தெற்கு கல்வி வலயப் பொறியியலாளர் எஸ்.சிறிதரன், பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி நா.மாணிக்கவாசகம், பண்டாரிகுளம் விபுலானந்தா மகாவித்தியாலய அதிபர் எஸ்.ஜெயதரன் ஆகியோரும் இங்கு உரையாற்றினர்.

அங்கு உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்ததாவது:

"அஹிம்ஸை அரசியலும் சரி, வன்முறை அரசியலும் சரி எமது மக்களுக்குப் பெரும் துன்பங்களை ஏற்படுத்தினவே தவிர, எமது அரசியல் அபிலாஷைகளுக்குத் தீர்வு தேடித் தரவில்லை. எனவே கிடைக்கின்ற சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி, இணக்க அரசியலுக்கான எமது கரங்களைப் பலப்படுத்துவதற்கு அனைவரும் முன்வர வேண்டும்.

இணக்க அரசியலின் மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்பது எமது நம்பிக்கை. ஜனாதிபதி ஒருவர் ஆட்சிக்கு வந்ததும் இத்தகைய நீண்டகால பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது.

அதற்குப் பல தடைகள் இருந்தன. முக்கியமாக விடுதலைப்புலிகள் ஓர் அரசியல் தீர்வுக்குத் தடையாக இருந்தார்கள். பேச்சுவார்த்தைகளில் அவர்கள் பங்கு பற்றியபோதிலும் அரசியல் தீர்வுக்கு அவர்கள் தயாராக இருக்கவில்லை. இப்போது அந்தத் தடை நீங்கி விட்டது.

பதின்மூன்றாவது அரசியல் திருத்தச் சட்டத்தை ஆரம்பமாகக் கொண்டு பிரச்சிகைக்குப் படிப்படியாகத் தீர்வு காணமுடியும். இந்த அரசியல் திருத்தத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டிருக்கின்றார். இந்தியா உட்பட சர்வதேச நாடுகளும் இதனை ஏற்றுக் கொண்டிருக்கின்றன.

எனவே, இதனை ஆரம்பமாகக் கொண்டு பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதற்கு எமது கரங்களை அரசியல் ரீதியாகப் பலப்படுத்த வேண்டும்.

கல்வி அபிவிருத்தியைப் பொருத்தமட்டில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. யாழ்ப்பாணத்தில் பலகாலமாகத் தீர்க்கப்படாமலிருந்த தொண்டர் ஆசிரியர்களுக்கான நியமனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.

அங்கு 532 தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. வவுனியாவில் 64 தொண்டர் ஆசிரியர்களும், மன்னாரில் 33 தொண்டர் ஆசிரியர்களும் இருக்கின்றார்கள். இவர்களில் சிலருக்கே நியமனங்கள் வந்துள்ளன. இந்த நியமனங்கள் வழங்குவது குறித்து நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்" என்றார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
மேலும் இங்கே தொடர்க...
ஜனாதிபதி தேர்தலில் சம்பந்தன் போட்டி?


எதிர்வரும் ஜனவரி மாதம் 26ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் போட்டியிடக் கூடுமென பிரபல ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனநயாக மக்கள் முன்னணியுடன் நடத்தப்பட்டு வரும் பேச்சுவார்த்தைகளின் பின்னர் இது குறித்த இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கட்சியின் இறுதித் தீர்மானம் இன்னும் ஒரு வார காலத்தில் அறிவிக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி அறிவித்துள்ளது.

மக்களின் கருத்துக்கு முக்கியத்துவம் அளித்து தீர்மானம் எடுக்கப்படும் என அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளர் தொடர்பிலும் தமிழ் மக்கள் அதிக நம்பிக்கை கொண்டிருக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்னும் ஒரு சில தினங்களில் ஜனாதிபதித் தேர்தலில் தமது தீர்மானத்தை அறிவிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்னசிங்கத்திடம் கேட்ட போது, ஜனாதிபதித் தேர்தலில் இரா. சம்பந்தன் போட்டியிடுவது குறித்த தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...
ஜனாதிபதியை ஆதரிக்க வேண்டுமானால் எழுத்து மூலம் உறுதி வழங்க வேண்டும் - கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தன்


சமூகம் அரசியல் ரீதியாக சிந்திக்க வேண்டிய தேவையுள்ளது. பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நம்பிக்கை வரக் கூடிய சூழலை நாம் ஏற்படுத்த வேண்டும். அதனை தொடர்ந்து தக்க வைக்க வேண்டும். கடந்த கால வரலாற்றுத் தவறுகள் ஏற்படாத வகையில் எங்களது சமூகத்தை பாதுகாக்க வேண்டிய கடப்பாடு உள்ளது என்று கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

வினாயகபுரம் வாழைச்சேனை பேச்சியம்மன் ஆலயத்திற்கான மணிக்கூட்டு கோபுரத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் ஆலயத் தலைவர் கு. பிலேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்தவை தொடர்ந்தும் ஆதரிப்பதற்கு எமது கட்சி பல கோரிக்கைகளை முன் வைக்கவுள்ளது. அவற்றுக்கான பதில்களை வாய்ப்பேச்சில் இல்லாமல் எழுத்து மூலமே நாம் எதிர்பார்த்து நிற்கின்றோம்.

கிழக்கு மாகாண சபையானது எந்தவிதமான இடையூறும் இல்லாமல் இயங்க வேண்டிய சூழ்நிலையை உருவாக்கித் தர வேண்டும். மக்களின் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட வேண்டும். கரையோர அபிவிருத்தி திட்டங்கள் தொடர்ந்து சிரமமின்றி முன்னெடுக்கப்பட வேண்டும். வேலை வாய்ப்பு வசதிகளை ஏற்படுத்தி தருதல் வேண்டும். வேலை வாய்ப்பில் இன விகிதாசாரம் ணேப்படல் வேண்டும். கல்வி, பொருளாதார அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம். இவற்றை அவர் நிறைவேற்ற வேண்டும் என்றும் இறைவனை பிரார்த்திக்கின்றேன். ஜனாதிபதி தேர்தலில் சிந்தித்து வாக்களிக்கக் கூடிய தகுதி உங்களிடம் உள்ளது. சரியான முடிவு எடுப்பதற்கு அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...
இந்திய கரையோர படையினரால் இலங்கை மீனவர்கள் 68 பேர் கைது-படகுகளில் பிடித்த மீன்களும் பறிமுதல்


இந்தியாவின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் மீன் பிடித்தமைக்காக அந்நாட்டு கரையோர காவற்படையினர் 68 இலங்கை மீனவர்களை கைது செய்ததோடு 13 படகுகளையும் அவர்கள் பிடித்த 6,600 கிலோகிராம் மீன்களையும் கைப்பற்றியுள் ளனர். சனிக்கிழமை கைது செய்யப்பட்ட மீனவர்கள் அவர்களது படகுகளுடன் காசிமேடு மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்கள்.

கரையோர காவற்படையின் பிரதம பொதுஜன தொடர்பு அதிகாரி கமாண்டர் ராஜேந்திர நாத் காசிமேடு துறைமுகத்தில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய போது, ஒருங்கிணைக்கப்பட்ட கடல் மற்றும் ஆகாய மார்க்க ரோந்து நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சென்னையிலிருந்து கரையோர வேவுக் கடமையில் ஈடுபடுத்தப்பட்ட காவற்படை விமானத்தினால் தமிழ் நாட்டின் வட பகுதியிலும் ஆந்திரா பிரதேசத்தின் தென் பகுதியிலும் உள்ள இந்திய கடற்பரப்புக்குள் இந்த இலங்கை மீன் பிடிக் கப்பல்கள் கண்டுபிடிக்கப்பட்டன என்று தெரிவித்தார்.

வேவு விமானம் கரையோர காவற்கரைக் கப்பலுக்கு அறிவித்ததையடுத்து ஐ. சி. ஜி. எஸ். விக்ரம் என்ற கப்பல் அவ்விடத்திற்குச் சென்று படகுகளுடன் இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டார்கள். கடந்த ஜனவரி மாதத்திலிருந்து இதுவரை கரையோர காவற்படையினரால் மொத்தம் 553 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டதுடன் 106 படகுகளும் கைப்பற்றப்பட்டதாக தெரிவித்த பொலிஸ் கமாண்டர் ராஜேந்திர நாத் கடந்த 6 மாதங்களில் மட்டும் 69 படகுகள் கைப்பற்றப்பட்டதுடன் 359 இலங்கை மீனவர்கள் கை

து செய்யப்பட்டார்கள் என்றும் கூறினார். கைது செய்யப்பட்ட மீனவர்களில் 547 பேர் 130 படகுகளுடன் பின்னர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டு விட்டதாகவும் அவர் தெரிவித்தார். தற்போது 40 இலங்கைப் படகுகள் காசிமேடு துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. ஆரம்ப விசாரணைகளிலிருந்து இந்த மீனவர்களுக்கு பயங்கரவாதிகளுடன் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் இந்திய கடற்பரப்புக்கள் மீன்பிடிப்பதில் அவர்கள் ஈடுபட்டார்கள் என்றும் தெரிய வந்துள்ளதாகவும் நாத் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய மீனவர்கள், தாங்கள் தவறுதலாக இந்திய கடற்பரப்புக்குள் வந்துவிட்டதாகவும் தங்களை விரைவில் இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறும் கேட்டுக் கொண்டனர். காசிமேட்டை சேர்ந்த மீனவர் சி. சைமன் கருத்து தெரிவிக்கையில், இந்திய கரையோர காவற்படையினர் இலங்கை மீனவர்களை கைது செய்யும் போது, அவர்கள் கௌரவமாக நடத்தப்படுவதுடன் நன்கு பராமரிக்கப்படுகிறார்கள். அவர்களது படகுகளும் எங்கள் பொலிஸாரால் நன்கு பாதுகாக்கப்படுகின்றன. ஆனால் இலங்கை கடற்படையினர் எங்களை பிடிக்கும் போது நடப்பது வேறு. எங்களை நையப்புடைப்பது மட்டுமன்றி எங்கள் படகுகள் திருப்பித் தரப்படுவது பற்றிய பேச்சே இல்லை என்று கூறினார்
மேலும் இங்கே தொடர்க...
அரசியல் கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள் நாளைமுதல் கட்டுப்பணங்களை செலுத்தலாமென தேர்தல்கள் செயலகம் அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலின் பொருட்டு விண்ணப்பிக்கும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் நாளைமுதல் கட்டுப்பணங்களை வைப்புச் செய்யலாமென தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. இதன்படி எதிர்வரும் டிசம்பர் 16ம் திகதி நண்பகல்வரை கட்டுப்பணங்களைச் செலுத்தலாமென செயலகம் குறிப்பிட்டுள்ளது. ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சிகள் 50ஆயிரம் ரூபாவை கட்டுப்பணமாக செலுத்த வேண்டும். அரசியல் கட்சியொன்றிலிருந்து ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடும் ஒருவரோ, பிறிதொருவரோ கட்டுப்பணத்தைச் செலுத்த முடியுமென்பதுடன், அதற்காக கட்சித் தலைமையகத்திடமிருந்து கடிதமொன்று எடுத்துச் செல்லப்பட வேண்டும். இதேவேளை சுயேட்சைக்குழு ஒன்று 75ஆயிரம் ரூபாவை கட்டுப்பணமாக செலுத்த வேண்டியுள்ளதுடன், சுயேட்சைக் குழுவிலிருந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாயின் அவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக இருத்தல் வேண்டும் என்றும் தேர்தல்கள் செயலகம் மேலும் தெரிவித்துள்ளது.

மேலும் இங்கே தொடர்க...

29 நவம்பர், 2009

குழந்தையொன்றை பிறிதொருவருக்கு வழங்கிய வைத்திய அதிகாரி உள்ளிட்ட மூவர் மன்னாரில் கைது-

மன்னார் பிரதேசத்தில் அண்மையில் காணாமற்போனதாக தெரிவிக்கப்பட்ட பிறந்து 07 நாட்களான ஆண்குழந்தை பொலீசாரினால்; மீட்கப்பட்டுள்ளது. நிதிபெறும் நோக்குடன் இக்குழந்தையை சட்டவிரோதமாக பிறிதொருவரிடம் கையளிக்க முனைந்தபொழுதே பொலீசார் மூவரைக் கைதுசெய்துள்ளனர். சுகவீனமுற்ற குழந்தையொன்றுக்கு சிகிச்சையளிக்கும் நோக்கில் அதன் தந்தை மன்னாரிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார். இருநாட்களின் பின்னர் அக்குழந்தை தொடர்பாக அவரின் தாயார் வைத்தியசாலையுடன் தொடர்புகொண்டபோது குழந்தையை மேலதிக சிகிச்சைக்காக கொழும்புக்கு அனுப்பியநிலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து வைத்தியத் தரப்பினர்மீது சந்தேகம்கொண்ட தாய் கடந்த 27ம் திகதி மன்னார் பொலீசில் தெரிவித்த முறைப்பாட்டையடுத்து வைத்தியர் உட்பட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மன்னார் பொலீசார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்களை எதிர்வரும் 04ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் இங்கே தொடர்க...
சுன்னாகம் கந்தவரோதயக் கல்லூரி ஸ்தாபகர் நினைவு விழா மற்றும் முன்னைநாள் அதிபர் அமரர் திரு.வீ.சிவசுப்பிரமணியம் அவர்களின் நூறாவது பிறந்ததின நிகழ்வில் புளொட் தலைவர் பங

யாழ். சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் (கொழும்பு) ஏற்பாட்டில் யாழ். ஸ்கந்தரோதயக் கல்லூரியின் ஸ்தாபகர் திரு.கந்தையா அவர்களின் நினைவு விழாவும், அக்கல்லூரியின் முன்னைநாள் அதிபர் அமரர்.திரு.வி.சிவசுப்பிரமணியம் (வைசர்) அவர்களின் நூறாவது பிறந்ததின நினைவு விழாவும் கொழும்பு, வெள்ளவத்தை, உருத்திரா மாவத்தையில் அமைந்துள்ள தமிழ்ச்சங்கம், சங்கரப்பிள்ளை மண்டபத்தில் இன்று (29.11.2009) மாலை 4.30மணிமுதல் இரவு 7.30வரை இடம்பெற்றது. இந்நிகழ்வில் மங்கள விளக்கேற்றல், தேவாரம், வாழ்த்துப்பா நிகழ்வுகளைத் தொடர்ந்து திரு.ச.மகேந்திரன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். இதனைத் தொடர்ந்து திரு.க.நீலகண்டன், கலாநிதி.மு.கதிர்காமநாதன், திரு.ந.கருணைஆனந்தன், புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன், டொக்டர் டபிள்யூ.திசேரா, கலாநிதி என்.தணிகாசலம்பிள்ளை, டொக்டர் சி.சிவானந்தராசா, திரு.து.ரகு ஆகியோர் சிறப்புரையாற்றினர்.


இங்கு உரையாற்றிய புளொட் தலைவர் திரு.த.சித்தார்த்தன் அவர்கள், ஸ்கந்தவரோதயக் கல்லூரியின் ஸ்தாபகர் கந்தையா மற்றும் அதன் முன்னைநாள் அதிபர் அமரர் வி.சிவசுப்பிரமணியம் அவர்களின் குணங்களைப் பற்றியும், பாடசாலையின் சிறப்பு பற்றியும், அங்கு தான் பயின்ற காலங்களையும் எடுத்துக் கூறினார்.


இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ். ஸ்கந்தவரோதயக் கல்லூரியானது என்னுடைய பேரனாருடைய முகாமைத்துவத்தின் கீழ் இருந்தது. இந்நிலையில் 60ம் ஆண்டுத் தேர்தலின்போது உடுவில் தொகுதியில் எனது தந்தையாருடன் எதிர்த்துப் போட்டியிடுவதற்கு, வீ.பொன்னம்பலம் அவர்களுக்கு லீவு கொடுக்கப்பட்டு அவர் தேர்தலில் போட்டியிட்டார். அது மாத்திரமல்ல அந்த தேர்தல் காலங்களில் வீ.பொன்னம்பலம் அவர்கள் எங்களுடைய பகுதிக்கு வருகின்றபோது எங்களது வீட்டுக்கு வந்து தேனீர் அருந்திச்செல்வது ஒரு வழக்கமாகக் கொண்டிருந்தார். அதேபோல் எனது தந்தையாரும் வீ.பொன்னம்பலம் அவர்களின் அளவெட்டிப் பகுதிகளுக்கு செல்கின்றபோது வீ.பொன்னம்பலம் அவர்களின் வீட்டிற்குச் சென்று தேனீர் அருந்திச் செல்வதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். அப்படியான ஒரு அரசியலில் கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் தனிமனித பண்புக்கள் அன்று நிறைந்திருந்தது.


இந்த பண்புகள் முழுக்கமுழுக்க அழிக்கப்பட்டு, மாற்றுக்கருத்துக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஒருவரை ஒருவர் கண்டு பயந்து ஒதுங்கி வாழுகின்ற ஒரு நிலைப்பாட்டில் கடந்த மே 18ற்கும் பின்பு ஒரு மாற்றம் வருவதை சுவிஸ் மாநாட்டில் நான் அறிந்து கொண்டேன். அங்கு அனைவரும் ஒருவருக்கொருவர் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டோம். முகத்தை முகம்கொடுத்துக் கதைக்காதவர்கள் கூட ஒருவரையொருவர் பார்த்து அன்னியோன்யமாக கதைக்கின்ற, ஒன்றாக இருந்து உணவருந்துகின்ற நிலைகள் எல்லாம் அங்கு நிலவியது. சுவிஸ் மகாநாட்டில் வேறு எதையும் முழுமையாக சாதிக்காது விட்டாலும் ஒரு அரசியல் நாகரீகத்தையும், பண்பையும் மீண்டும் கட்டியெழுப்புவதற்கு அந்த மகாநாடு ஒரு அடித்தளமாக அமைந்தது என்றே நான் கருதுகிறேன்.


தற்போதைய நிலையில் தமிழ் சமூகத்தின் கல்வியானது ஒரு பின்தங்கிய நிலைமையில் இருக்கின்றது. இன்றைக்கு முகாம்களில்கூட பாடசாலைகளை நடத்தி அந்தப் பிள்ளைகள் பரீட்சைகளில் தோற்றச் செய்வதற்காக பல அதிகாரிகள், ஆசிரியர்கள் எல்லாம் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். தமிழ் சமூகத்தைப் பொறுத்தமட்டில் கல்விதான் அவர்களின் ஒரு மூலதனமாக இருந்திருக்கிறது. அது இன்று முற்றாக அழிக்கப்பட்டிருக்கின்ற நிலைமையில் இதனை மீளக் கட்டியெழுப்பும் கடமையானது தனியாக கல்விச் சமூகத்தினுடைய மாத்திரம் என்று கருதாமல், தமிழ் சமூகத்தில் இருக்கின்ற அனைவருமே தங்களால் இயன்றளவு உதவிகளைப் புரிந்து வடகிழக்கில் முற்றாக அழிந்துள்ள எங்களுடைய கல்விச் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு உதவ வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


மேலும் இங்கே தொடர்க...
அழுத்தங்கள் விடுக்கப்பட்ட போது மோதலை நிறுத்த முடியாத கட்டம்:சரத் பொன்சேகா


மோதல்களை நிறுத்துமாறு இந்தியா அழுத்தங்களை கொடுத்த வேளை, இராணுவத்தினர் விடுதலை புலிகளுடனான் மோதலில், மோதல்களை நிறுத்த முடியாத ஒரு கட்டத்தை அடைந்திருந்தனர் எனத் தெரிவித்தார் சரத் பொன்சேகா.

விடுதலை புலிகளுடனான மோதல்களை நிறுத்துமாறு இந்தியா உட்ப பல்வேறு தரப்பினரால் விடுக்கபட்ட அழுத்தங்களையும் தாண்டி மோதல்கள் தொடர்ந்தது குறித்து ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபத் தேர்தலில் பொது வேட்பாளராக 'அன்னம்' சின்னத்தில் தான் போட்டியிடவுள்ளதாக ஜெனரல் சரத் பொன்சேகா இன்று உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளார். எனினும் புதிதாக பதிவு செய்யப்பட்ட ஒரு கட்சியின் கீழ் தனது ஜனாதிபதி ஆட்சி நிலவுமெனவும் அவர் தெரிவித்தார். ஜனாதிபதி வேட்பாளராக இன்று இடம்பெற்ற முதலாவது ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனை அறிவித்துள்ளார்.

இதன் போது தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படும் பட்சத்தில் நிறைவேற்றும் வேலைத்திட்டங்கள் தொடர்பான கொள்கைகளை இதன் போது சரத் பொன்சேகா வெளியிட்டார்.

அங்கு அவர் உரையாற்றுகையில் ,நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதற்கு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மக்கள் உதவ வேண்டும் எனக் கோரிக்கை விடுத்த அவர் விடுதலை புலிகளுடனான் யுத்த வெற்றி அரசியல் தலைமைத்துவமும் காரணம் எனவும் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,"பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று அரசியலமைப்பை மாற்றுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாத்திரமன்றி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவு வழங்க தயாராகவுள்ளனர். " எனத் தெரிவித்தார்.

மேலும்,நாட்டையும் மக்களையும் சர்வாதிகார ஆட்சியில் இருந்து மீட்கவே முன்வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...
தற்காலிக அடையாள அட்டை விநியோக பணிகளில் ஓய்வு பெற்ற அரச ஊழியர்கள்

எதிர்வரும் ஜனவரி மாதம் 26 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்காக தற்காலிக அடையாள அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கைகளுக்கு அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றவர்களை இணைத்துக்கொள்ள ஆட்பதிவு திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இந்த சேவையில் இணைந்துகொள்ள விரும்பும் அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 4ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு ஆட்பதிவு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.விண்ணப்பித்தவர்கள் பிரதேச செயலாளர் அலுவலகங்களினூடாக இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கான சேவைக் காலம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 10ஆம் திகதி முதல் 2010ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9ஆம் திகதி வரை எனவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.நாடு முழுவதிலும் உள்ள 67 வயதிற்கு குறைந்த, அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் இதற்காக விண்ணப்பிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்காக பெயர், பிறந்த திகதி, வயது, ஓய்வு பெறுவதற்கு முன்னர் கடமை புரிந்த நிறுவனம், இறுதியாக கடமை புரிந்து நிறுவனம், ஓய்வூதிய கொடுப்பனவு, நிரந்தர முகவரி, தொலைபேசி இலக்கம் ஆகிவற்றை உள்ளடக்கிய விண்ணப்பமொன்றை அனுப்பி வைக்குமாறு அந்த திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

இச்சேவையில் இணைந்துகொள்ள விரும்பும் ஓய்வுபெற்ற அரச ஊழியர்கள் தமது விண்ணப்பங்களை பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

ஆட்பதிவு திணைக்களம்,
C-45 கெப்பட்டிபொல வீதி,
கொழும்பு
மேலும் இங்கே தொடர்க...
த.தே. கூ நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் நாடு திரும்பினார்



தங்கியிருந்த தமிழ் தேசியக கூட்டமைப்பின் மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினரான செல்வராஜா கஜேந்திரன் நேற்று சனிக்கிழமை நாடு திரும்பியுள்ளார்.

யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான இவர் கடந்த மூன்று வருடங்களாக ஐரோப்பிய நாடுகளில் தங்கியிருந்தார். இறுதியாக நோர்வே நாட்டில் தங்கியிருந்து அங்கிருந்து நேரடியாக நேற்றைய தினம் நாடு திரும்பியுள்ளார்.

ஏற்கனவே வெளிநாடுகளில் தங்கியிருந்த அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பத்மினி சிதம்பரநாதன் , செல்வம் அடைக்கலநாதன் மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் சில வாரங்களுக்கு முன்பு நாடு திரும்பியிருந்தமை தெரிந்ததே. தற்போது மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.ஜெயானந்தமூர்த்தி மட்டுமே தொடர்ந்தும் வெளிநாட்டில்(லண்டன்) தங்கியிருக்கின்றார்.
மேலும் இங்கே தொடர்க...
தபால் மூல வாக்காளர்களின் நன்மை கருதி வாக்காளர் பட்டியல்கள் பார்வைக்கு


ஜனவரி 26ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கவுள்ள தபால் மூல வாக்காளர்களின் நன்மை கருதி 2008 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல்கள் பார்வைக்கு வைக்கப்படவுள்ளன.

எதிர்வரும் டிசம்பர் 2 ஆம் திகதி முதல் அலுவலக நேரங்களில் மாவட்டச் செயலகங்கள் மற்றும் கச்சேரிகளிலும் இவை வைக்கப்பட்டிருக்கும் என தேர்தல் ஆணையாளர் அலுவலகம் தெரிவிக்கிறது.

தேர்தலுக்குரிய வாக்காளர் பதிவேடுகள் வைக்கப்பட்டிருக்கும் இடங்கள் வருமாறு:

பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு கொழும்பு 07, தொழில் செயலகம் நாரஹேன்பிட்டிய கொழும்பு 05, கல்வியமைச்சு இசுருபாய பத்தரமுல்லை, பதிவாளர் நாயகம் திணைக்களம் டென்சில் கொப்பேகடுவ மாவத்தை, பத்தரமுல்லை மாவட்ட செயலகம்/ கச்சேரி டாம் வீதி கொழும்பு 12 ,அஞ்சல் திணைக்கள தலைமையகம் டீ. ஆர். விஜேவர்தன மாவத்தை கொழும்பு 10, வீடு மற்றும் பொதுவசதிகள் அமைச்சு செத்சிறிபாய ,பத்தரமுல்லை தரைப்படை தலைமையகம் கொழும்பு 03, கடற்படை தலைமையகம் கொழும்பு 01, விமானப் படை தலைமையகம் கொழும்பு 02, பொலிஸ் தலைமையகம் கொழும்பு 01, சிவில் பாதுகாப்பு திணைக்களம் இல. 23 ஸ்டேஷன் றோட் பம்பலப்பிட்டி கொழும்பு 04.

தபால் மூல வாக்களிப்புக்காக விண்ணப்பிக்க வேண்டிய வழிமுறைகள் வருமாறு:

கொழும்பு மாவட்டத்தில் பதிவு செய்த வாக்காளர்களின் விண்ணப்பங்கள் யாவும் பிரதித் தேர்தல் ஆணையாளர் ,கொழும்பு மாவட்டம், 395 பழைய கோட்டே றோட் ,ராஜகிரிய 10107 என்ற விலாசத்திற்கு அனுப்பப்பட வேண்டும்.

யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட வாக்காளர்களின் விண்ணப்பங்கள் யாழ்ப்பாண மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலருக்கும் வவுனியா மன்னார் முல்லைத்தீவு மாவட்ட வாக்காளர்களின் விண்ணப்பங்கள் வவுனியா மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலருக்கும் அனுப்பப்படல் வேண்டும்.

ஏனைய மாவட்ட வாக்காளர்களின் விண்ணப்பங்கள் யாவும் அந்தந்த மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலருக்கு அனுப்பப்படல் வேண்டும். இதற்குரிய விண்ணப்பப் படிவங்களை தேருநர் பதிவேடுகள் காட்சிக்கு வைக்கப்பட்ட இடங்களில் பெற்றுக் கொள்ள முடியும் என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டிய கால இடைவெளி மட்டுப்படுத்தப்பட்டிருப்பதால் விண்ணப்பதாரிகள் தாமதியாது தங்களது விண்ணப்பங்களை உரிய அத்தாட்சிப்படுத்தும் அலுவலர் ஊடாக அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...
ngsj;j tpfhiu vupg;G jkpo;kf;fspd; jPh;Tf;F tpNkhrdj;ij jukhl;lhJ khwhf td;Kiw rKjhafkhfNt rh;tNjrj;jpw;F vLj;Jf;fhl;Lk;!

fdlhtpd; nuhwd;Nuh fpq;];ud; tPjpapy; mike;jpUe;j ngsj;j tpfhiu vupf;fg;gl;lij ehk; td;ikahf fz;bf;fpd;Nwhk;. ,t;tpjkhd eltbf;iffs; jkpo;kf;fspd; tpbaYf;F ve;jtpj tpNkhrdj;ijAk; jukhl;lhJ. fle;j fhyq;fspy; tpLjiyg;Gypfs; mikg;gpdhy; Nkw;nfhs;sg;gl;l ,g;gbahd jhf;Fjy;fNs> mtHfis xU gaq;futhj mikg;ghf rh;tNjr ehLfs; gyTk; Kj;jpiu Fj;Jtjw;F topNfhypaJ.

MfNt Myaq;fs;> Njthyaq;fs;> gs;spthry;fis jhf;Ftjd; %yk; vjph;fhy ,isQh; rKjhaj;jpw;Fk; td;Kiwia Nghjpj;J cyfpNyNa xh; fPo;j;jukhd ,dkhf vkJ jkpopdj;ij cyfpw;F fhl;Ltjw;Nf ,t;thwhd rk;gtq;fs; toptFj;Js;sd. ,tw;iw tpLj;J mikjp Kiwapy; vkJ kf;fspd; cupik Nghuhl;lj;ij ,q;Nf Nkw;nfhz;L ehk; td;Kiwfspw;F vjpuhdth;fs; vd;gij fNdba muRf;Fk; gy;fyhr;rhuj;jpid nfhz;Ls;s fNdba kf;fspw;Fk; vLj;Jfhl;Ltjd; %yNk fNdba kf;fspdJ Mjuit vkJ kf;fsJ cupik Nghuhl;lj;jpw; F ntd;nwLf;f KbAk;.

fle;j fhyq;fspy; tPjpkwpg;G Nghuhl;lk;> neLQ;rhiy kwpg;G Nghuhl;lk; vd;W Nkw;nfhs;sg;gl;l Nghuhl;lq;fs; vjd; %yKk; fNdba ehl;L kf;fis ntd;nwLf;f Kbatpy;iy. khwhf mt; kf;fspd; vjph;g;gpidjhd; re;jpf;f Neupl;lJ. jhafj;jpYk; ,t;thwhd td;Kiwfis Ngzpte;NjhNu ,q;Fs;s ,isQh;fs;> Atjpfs; kj;jpapYk; mjid Nghjpj;J vkJ vjph;fhy rKjhaj;ijNa rPuopj;J eLtPjpf;F nfhz;LtUk; eltbf;ifapy;

mikjpahd Kiwapy; fNdba rl;ljpl;lq;fSf;F cl;gl;L ehk; Nkw;nfhs;Sk; Nghuhl;lq;fs;> Mh;g;ghl;lq;fs; %yNk gy;fyhr;rhu rKjhaj;ijAk;> fNdba murpidAk; vkJ gf;fk; khwhf tzf;f jyq;fs; kPjhd td;Kiwfs;> mlhtbjdq;fs; %yk; ehk; ve;jnthU rf;jpiaAk; ntd;nwLf;f KbahJ. ,tw;iw fle;jfhy mDgtq;fspDlhf ngw;W nfhz;Ls;sNghJk;> kPz;Lk; mNj ghzpapy; gazpg;gJ vkJ r%fj;ij xh; jtwhd fz;Nzhl;lj;Jld; ghh;g;gjw;Nf toptFf;Fk;.

MfNt tUq;fhy re;jjpfshf tsh;e;JtUk; md;ghd ,isa r%fj;jpdNu ,t;thwhd td;Kiw eltbf;iffis iftpl;L cupaKiwapy; rl;ljpl;lq;fSf;F cl;gl;L nrayhw;WkhW NfhUfpd;Nwhk;. tzf;f ];jyq;fis vupg;gJ> Ehy; epiyaj;jpw;F jPitg;gJ> Clfj;Jiwia mr;RWj;JtJ> th;j;jf epiyaq;fis cilg;gJ> thfdq;fis mbj;J nehUf;FtJ ,it vJTk; vkJ ePz;lfhy epahg+h;tkhd murpay; cupik Nghuhl;lj;jpw;F cjt Nghtjpy;iy vd;gij czh;e;J nrayhw;WkhW Nfl;Lnfhs;fpd;Nwhk;. rpy Mz;LfSf;F Kd;dh; tPjp rz;ilfspy;

ntWkdNt Cl;lg;gLk; czh;r;rpfSf;fhf cq;fsJ vjph;fhyj;ij tPzbf;fhky; mtw;iw MNuhf;fpakhd Kiwapy; Kd;ndLj;J jhafj;jpy; xh; Nfhu Aj;jj;jpw;F Kfk; nfhLj;J Jtz;LNghAs;s kf;fspd; tpbaYf;fhd xh; murpay; cupikia fNdba kw;Wk; rh;tNjr ehLfspd; gq;fspg;Gld; ntd;nwLg;gjw;fhd Kaw;rpfis Kd;ndLf;FkhW jq;fis Nfl;L nfhs;fpd;Nwhk;.

midj;J mlf;FKiwfisAk; cilj;njwpNthk;

jkpoPo kf;fs; tpLjiy fofk;-PLOTE

[dehaf kf;fs; tpLjiy Kd;dzp-DPLF

jfty; gpur;rhu gpupT-fdlh




மேலும் இங்கே தொடர்க...

28 நவம்பர், 2009


ஃபொன்​சேகா அதி​ப​ரா​னால் விக்​ர​ம​சிங்​கே​தான் பிர​த​மர்:​ இலங்கை கூட்​டணி கட்சி அறி​விப்பு



இலங்கை அதி​பர் தேர்த​லில் ராணுவ முன்​னாள் தள​பதி சரத் ஃபொன்​சேகா வெற்றி பெற்​றால்,​ ஐக்​கிய தேசிய கட்​சி​யின் தலை​வ​ரும்,​ முன்​னாள் பிர​த​ம​ரு​மான ரணில் விக்​ர​ம​சிங்கே பிர​த​ம​ராக நிய​மிக்​கப்​ப​டு​வார் என இலங்கை சுதந்​திர மகா​ஜன கட்சி தெரி​வித்​துள்​ளது.​ சரத் ஃபொன்​சேகா அதி​பர் தேர்த​லில் போட்​டி​யி​டு​வ​தற்​கான முழு சம்​ம​தத்தை தமது கட்​சி​யின் உயர் நிலைக் குழு தெரி​வித்​து​விட்​ட​தா​க​வும் அக்​கட்​சி​யின் தலை​வர் மங்​கள சம​ர​வீர கூறி​னார்.​ வதந்​தி​களை கிளப்​பி​வி​டு​கி​றார்:​​ சரத் ஃபொன்​சேகா குறித்து மகிந்த ராஜ​பட்ச தலை​மை​யி​லான அரசு ஏரா​ள​மான வதந்​தி​களை கிளப்​பி​வி​டு​கி​றது. சரத் ஃபொன்​சேகா அதி​ப​ரா​னால் இலங்​கை​யில் ராணுவ ஆட்சி ஏற்​ப​டும் என்​பது அதில் ஒன்று. ​ உண்​மையை சொல்ல வேண்​டு​மா​னால் மகிந்த ராஜ​பட்ச அர​சு​தான் அடிப்​ப​டை​யில் ராணுவ ஆட்சி போன்று உள்​ளது. ராணுவ பணி​யில் இருந்து ஓய்வு பெற்ற 24 உயர் அதி​கா​ரி​களை ராஜ​பட்ச தனது நிர்​வா​கத்​தின் முக்​கிய பத​வி​க​ளில் நிய​மித்​துள்​ளார். இலங்​கை​யின் அதி​ப​ரா​வ​தற்கு சரத் ஃபொன்​சே​கா​விற்கு அனைத்து தகு​தி​க​ளும்,​ திற​மை​யும் உண்டு என்​றார் சம​ர​வீர.​ இலங்​கை​யில் பிர​தான எதிர்க்​கட்​சி​யான ஐக்​கிய தேசிய கட்சி தலை​மை​யில் ஐக்​கிய தேசிய கூட்​டணி என்ற புதிய கூட்​டணி சமீ​பத்​தில் உரு​வாக்​கப்​பட்​டது. இதில் இலங்கை சுதந்​திர மகா​ஜன கட்சி உள்​பட 18 கட்​சி​கள் இடம்​பெற்​றுள்​ளன. இந்​தக் கூட்​ட​ணி​யின் தலை​வ​ராக ரணில் விக்​ர​ம​சிங்கே நிய​மிக்​கப்​பட்​டார்.​ அடுத்த ஆண்டு ஜன​வ​ரி​யில் நடை​பெ​றும் அதி​பர் தேர்த​லில் எதிர்க்​கட்சி சார்​பில் பொது​வான வேட்​பா​ள​ராக நிறுத்​தப்​ப​டும் சரத் ஃபொன்​சே​கா​வுக்கு இந்​தக் கூட்​டணி ஆத​ரவு அளிக்க முடி​வெ​டுத்​துள்​ளது

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்க புளொட் தீர்மானம்


dsc01767mmnn

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் புளொட் தலைவர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், இரண்டு விடயங்களை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்திருக்கின்றோம். ஒன்று இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுதல், அடுத்ததாக தமிழ் மக்களுடைய அடிப்படைப் பிரச்சினைக்கு தீர்வாக அரசியல் அதிகாரப்பகிர்வு என்பனவாகும். கடந்த காலங்களில் நாங்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களிடம் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் சம்பந்தமாகவும் மற்றும் தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் பிரச்சினைகள் தொடர்பாகவும் தொடர்ச்சியாக கதைத்து வந்தபோது அவற்றைச் செய்து முடிப்பேன் என்ற உறுதிமொழியைத் தந்திருந்தார். இந்த வகையில் மீள்குடியேற்றம் தொடர்பிலான உறுதிமொழிகளை இப்போது அவர் நிறைவேற்ற ஆரம்பித்திருக்கின்றார். நாங்கள் அந்த மீள்குடியமர்த்தப்பட்ட பகுதிகளுக்கும் சென்று பார்வையிட்டிருக்கின்றோம். அங்கு மக்களின் வசதிகள் முழுமையாக செய்து கொடுக்கப்படாவிட்டாலும் மக்கள் தங்களுடைய சொந்த நிலத்திற்கு வந்த திருப்தியில் வாழ்வதை காணக்கூடியதாக இருக்கின்றது. அவர்களுடைய வசதிகள் அனைத்தையும் செய்து கொடுப்பதற்கு தொடர்ந்தும் நாங்கள் அழுத்தங்களைக் கொடுத்துக் கொண்டு வருகிறோம். அவற்றைச் செய்வதாக அரசாங்கமும் உறுதியளித்திருக்கின்றது. இப்போது யுத்தம் ஒரு முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள், தன்னுடைய மகிந்த சிந்தனையின் இரண்டாம் தவணையில் ஒரு நியாயமான தீர்வொன்றை நிச்சயமாக வழங்குவேன் என்று எங்களுக்கு உறுதி தந்திருக்கின்றார். இப்படியான நிகழ்ச்சிநிரல் ஒன்று நடந்து கொண்டிருக்கின்றபோது இந்த நிகழ்ச்சி நிரலைக் குழப்பிவிடக் கூடாது. இதனடிப்படையில் எமது கட்சி அவரை ஆதரிப்பதற்கு தீர்மானித்திருக்கின்றது என்று தெரிவித்துள்ளார்.

புத்தள வானூர்தி விபத்து தொடர்பில் ஆராயவென விசேடகுழு நியமனம்-

மொனறாகலை புத்தள துன்கிந்த காட்டுப் பகுதியில் விபத்துக்குள்ளான எம்.ஐ. 24ரக ஹெலிகொப்டர் தொடர்பில் ஆராய்வதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நியமிக்கப்பட்ட விசேட குழுவினர் தமது நடவடிக்கைகளை இன்று ஆரம்பிக்கவுள்ளதாக பொலீஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக ஆராய்வதற்கு விமானப்படையைச் சேர்ந்த 20பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தலைமையகம் தெரிவித்துள்ளது. புத்தள பகுதியில் நேற்றுபிற்பகல் 1.30அளவில் பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த விமானப்படைக்குச் சொந்தமான எம்.ஐ. 24ரக ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதுடன் அதில் பயணம் செய்த நால்வர் உயிரிழந்திருந்தனர். இந்த விபத்தானது ஹெலிகொப்டரில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இடம்பெற்றதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பலியான நால்வரின் சடலங்கள் பரிசோதனைகளுக்காக மடல்கும்புற வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன


மேலும் இங்கே தொடர்க...
இந்த வருடம் அசத்த போவது யார் ? அசத்தியவர்
புலிகளின்
மூத்த தளபதிகளில் ஒருவரான ராம் அவர்களின் மாவீரர் உரை


இங்கே அழுத்தவும்
Raam maverar nall Speech 2009. நன்றி அதிரடி

மேலும் இங்கே தொடர்க...
பொருத்தமான நேரத்தில் எமது முடிவை அறிவிப்போம் : த.தே.கூட்டணி



தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் இறுதி முடிவு பொருத்தமான நேரத்தில் வெளியிடப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா எமது இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.

எதிர்வரும் 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுமென தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. இத்தேர்தல் தொடர்பாகவும் தேர்தலில் தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது குறித்த தகவல்கள் வெளியாவது தொடர்பிலும் கருத்து கேட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மேலும் கூறுகையில்,

"ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் நாம் ஆலோசனை நடத்தி வருகின்றோம். எனினும் இதுவரை முடிவுகள் எதையும் அறிவிக்கவில்லை. பொருத்தமான நேரத்தில் எமது முடிவினை நாம் வெளியிடுவோம்" என்றார்.
மேலும் இங்கே தொடர்க...
இடம்பெயர் மக்கள் குறித்து இலங்கைக்கு அழுத்தம் : சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை

இடம்பெயர்ந்தவர்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு உரிய அழுத்தங்களைக் கொடுக்கவேண்டும் என சர்வதேச மன்னிப்பு சபை, பொதுநலவாய நாடுகளின் தலைவர்களிடம் கோரியுள்ளது.

மேற்கிந்திய தீவுகளின் ரினிடாட் என்ட் டபேக்கோவில் கூடியுள்ள நாடுகளின் தலைவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மக்களை தடுத்து வைத்துள்ள கொள்கையை இலங்கை கைவிடவேண்டும் என்ற கோரிக்கையை நாடுகளின் தலைவர்கள் முன்வைக்க வேண்டும் என சர்வதேச மன்னிப்பு சபை கேட்டுள்ளது.

அத்துடன், இலங்கை மக்கள் மனிதாபிமானத்துடன் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு நாடுகள் ஆதரவு வழங்கவேண்டும் என்றும் சர்வதேச மன்னிப்பு சபை கோரியுள்ளது
மேலும் இங்கே தொடர்க...
இலங்கையில் பொதுநலவாய மாநாட்டை நடத்த 45 நாடுகள் ஆதரவு



ஆண்டில், பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை, இலங்கையில் நடத்துவதற்கு 51 நாடுகளில் 45 நாடுகள் ஆதரவை வெளியிட்டுள்ளன.

இந்த ஆதரவு கடந்த புதன்கிழமை ரினிடாட் அன்ட் டபேக்கோவில் நடைபெற்ற பொதுநலவாய அமைச்சர்களின் மாநாட்டில் கிடைக்கப் பெற்றுள்ளது.

பிரித்தானியா, நியூஸிலாந்து மற்றும், கனடா ஆகிய நாடுகள் இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் கூட்டம் என்ற யோசனைக்கு தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

2007 ஆம் ஆண்டு கம்பாலாவில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டின் போது 2011 ஆம் ஆண்டின் மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.

அதேவேளை, இலங்கையில் மாநாட்டை நடத்துவதற்கு கனடா, பிரித்தானியா மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகள் எதிர்ப்பு வெளியிட்டமையை அடுத்து இந்த விடயத்தைப் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் முன்கொண்டு வர தீர்மானிக்கப்பட்டுள்ளது
மேலும் இங்கே தொடர்க...
தேர்தல் கண்காணிப்புப் பணியில் சர்வதேச தரப்பினர் : ஆணையாளர் உறுதி என கரு தகவல்

ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்புப் பணியில் ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க உறுதியளித்துள்ளார் என கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலை நீதி நியாயமாக நடத்துவதற்கு சர்வதேச கண்காணிப்பாளர்களை பணியில் ஈடுபடுத்த வேண்டியது அவசியம் குறித்து தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்கவை ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்கள் நேற்று சந்தித்து வலியுறுத்தினர். இதன்போதே இதற்கான இணக்கத்தினை தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சந்திப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் புதிய சிஹல உறுமயவின் தலைவர் சரத் மனமேந்திர உள்ளிட்ட முன்னணியில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளின் முக்கிய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

சந்திப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட கரு ஜயசூரிய எம்.பி. கூறியதாவது :

"தேர்தல்கள் ஆணையாளருடனான எமது இன்றைய சந்திப்பானது நடைபெறவிருக்கின்ற ஜனாதிபதித் தேர்தல் நீதியானதும் சுதந்திரமானதுமாக அமைய வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காகவே நடைபெற்றது.

நடைபெறவிருக்கும் தேர்தலில் நாட்டு மக்கள் சுதந்திரமாக செயல்படுவதற்கும் தமக்கு விருப்பமான வரும் நாட்டுக்குத் தலைமைத்துவத்தை நேர்மையாகப் பெற்றுக் கொடுக்கின்றவருமான தலைவர் ஒருவரை தெரிவு செய்து கொள்வதற்கான சூழல் உருவாக்கப்பட வேண்டும்.

இதனை மையமாகக் கொண்டு வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர் தேர்தல் சட்டவிதிகள் முறையாக கடைப்பிடிக்கப்பட வேண்டும். ஏனெனில் கடந்த சகல தேர்தல்களின்போது தேர்தல் விதிகள் மீறப்பட்டிருந்ததையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் நாம் கண்டிருந்தோம். எனவே இந்த நிலைமை ஜனாதிபதித் தேர்தலிலும் சரி, பொதுத் தேர்தலிலும் சரி மாற்றியமைக்கப்பட வேண்டியது அத்தியாவசியமானது.

அரச சொத்துக்கள், அரச ஊடகங்கள் முழுமையாக அரச தப்பினரால் உபயோகிக்கப்பட்டமை மற்றும் பிரசார நடவடிக்கைகளுக்காக அநாவசியமாக ஹெலிகொப்டர்கள் கூட பயன்படுத்தப்பட்டிருந்தன. இது மேலும் தொடர முடியாது.

அரசுடைமைகள் தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்த வேண்டுமானால் அதற்கான செலவுகளையும் பொறுப்பெடுத்துக் கொள்வது சிறந்ததாகும்.

தேர்தல் பணிகள் ஆரம்பித்துவிட்ட இக்காலப் பகுதிகளில் அநாவசிய இடமாற்றங்களுக்கு இடமளிக்கக்கூடாது. அத்துடன் புதிதாக நியமனம் வேலைத் திட்டங்களை முன்னெடுத்தல் போன்ற விடயங்களுக்கு முற்றாக தடை ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதுடன் காணி உறுதிப் பத்திரங்கள் வழங்குதல், வங்கிக் கடன் வசதிகளை செய்து கொடுத்தல் ஆகியவையும் நிறுத்தப்பட வேண்டும்.

இவையனைத்தும் கடந்த காலங்களில் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்ட ஏமாற்று நடவடிக்கைகள் என்பதில் சந்தேகம் இல்லை.

அரச ஊடகம்

அரச ஊடகம் என்பது இந்நாட்டு மக்களுக்கு சொந்தமானது. எனவே அரச ஊடகம் மத்தியஸ்தம் வகிக்க வேண்டிய பொறுப்பு உள்ளது. இதனூடாக ஒரு தரப்புக்கு மாத்திரமே இடமளிக்காது எதிர்த் தரப்பினருக்கும் இதில் வாய்ப்பளித்து அதற்கான நேர காலத்தை ஒதுக்கித் தர வேண்டும்.

தற்போது அரச ஊடகங்களில் எதிர்க் கட்சிகளை இழிவுபடுத்தும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. இது நிறுத்தப்பட வேண்டும்.

கண்காணிப்பாளர்கள்

தேர்தல் பணிகளை கண்காணிப்பதற்கென சர்வதேச கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்பதையும் நாம் தேர்தல்கள் ஆணையாளருக்கு வலியுறுத்தியுள்ளோம். அந்த வகையில் பொதுநலவாய நாடுகள், ஐக்கிய நாடுகள், ஐரோப்பிய நாடுகள், ஆசிய நாடுகளின் தேர்தல் கண்காணிப்புக் குழு ஆகிய தரப்புக்களில் இருந்து கண்காணிப்பாளர்களை இங்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க எமக்கு உறுதியளித்துள்ளார்.

இடம்பெயர்ந்தோர்

இடம்பெயர்ந்த வன்னி மக்கள் தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படாது துன்பப்படுகின்றனர். ஆனால் இவர்களை சென்று பார்ப்பதற்குக்கூட எதிர்த் தரப்பினருக்கு அனுமதி வழங்கப்படவில்லை. எனவே இப்பகுதிகளுக்குச் சென்று பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான நிலையை உருவாக்கித் தருமாறு நாம் கோரிக்கை விடுத்துள்ளோம்.

பொலிஸ் துறை பொலிஸ் துறையில் நேர்மையான அதிகாரிகள் இருக்கின்றனர். அதேபோல் அரசாங்கத்திற்குச் சார்பாக செயற்படுகின்ற அதிகாரிகளும் இருக்கின்றனர். எனினும் நாம் பொலிஸார் குறித்து விமர்சிக்கவில்லை.

கடந்த காலத் தேர்தல்களின்போதும் தற்போதும் பொலிஸார் பல்வேறு அழுத்தங்களின் நிமித்தமாகவே இவ்வாறு நடந்து கொள்வதற்கான நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதை எம்மால் உணர முடிகின்றது. இவ்விடயத்தில் முழுமையான கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதுடன் பொலிஸ் மா அதிபர் கூடுதல் அக்கறை செலுத்துமாறும் நாம் கேட்டுக் கொள்கிறோம்.

வாக்குரிமை

இறுதியாக வாக்களிப்பது என்பது ஜனநாயக உரிமையாகும். நடைபெற்று முடிந்த தேர்தல்களில் மக்கள் தமது வாக்குகளை சுதந்திரமாக பாவிப்பதற்கான சூழல் உருவாக்கப்பட்டிருக்கவில்லை. இதனால் மோசடிகள் இடம்பெற்றன. இது தவிர்க்கப்பட வேண்டுமானால் நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ள வாக்காளர் சட்டமூலம் உடனடியாக அமுல்படுத்தப்பட வேண்டும்.

இதற்கு எதிர்த் தரப்பினாகிய நாமும் முழு ஆதரவு தரக் காத்திருக்கிறோம். இதன் மூலமே இந்நாட்டில் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல்கள் நடைபெறுவதற்கான சாத்தியங்கள் ஏற்படும் என்பதையும் ஆணையாளரின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளோம்."

இவ்வாறு கரு ஜெயசூரிய தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...
வெற்றி வாய்ப்பில் நான்கு வீதம் முன்னணியிலுள்ள பொன்சேகா-மங்கள சமரவீர எம்.பி. தகவல்

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் பிரசார வடிவமைப்பாளர்களை இலங்கைக்கு கொண்டு வந்து பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய அரசாங்கத்தினால் வெற்றியடை முடியாது. அரசாங்கம் தனது தோல்வியை தற்போதே ஏற்றுக் கொண்டுள்ளது என்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை விட ஜெனரல் சரத் பொன்சேகா வெற்றி வாய்ப்பில் 4 வீதம் முன்னணியில் உள்ளார்..

ஜனநாயக ரீதியாக பொது மக்களின் வாக்குகளினால் தெரிவுச் செய்யப்படுபவர் இராணுவ அதிகாரியாக இருந்தாலும் அவரை இராணுவ ஆட்சியாளராக கருத முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.ஐக்கிய தேசிய முன்னணியின் விஷேட செய்தியாளர் மாநாடு நேற்று வெள்ளிக்கிழமை எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றப் போதே மங்கள சமரவீர எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்..

இவர் இங்கு தொடர்ந்தும் கூறியதாவது:.

உத்தியோகபூர்வமான அறிவிப்பை மிக விரைவில் ஜெனரல் சரத் பொன்சேகா அறிவித்ததும் ஐக்கிய தேசிய முன்னணி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகளை ஆரம்பிக்கும். ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு சிறுபான்மையினத்தவர்களின் ஆதரவு கிடைக்காது னெ அரசாங்கம் கூறி வந்தது. ஆனால், தற்போது அந்நிலை மாற்றமடைந்துள்ளது..

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிக்க முஸ்லிம் காங்கிரஸ் , ஜனநாயக மக்கள் முன்னணி உட்பட பல தமிழ் அரசியல் கட்சிகள் முன்வந்துள்ளன. நாட்டை பயங்கரவாதத்தில் இருந்து மீட்டெடுத்த முன்னாள் இராணுவ தளபதியான ஜெனரல் சரத் பொன்சேகாவை இன்று இந்த அரசாங்கம் மனசாட்சி இல்லாமல் தேசத்துரோகி என வர்ணித்து வருகின்றது. ஆனால், தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை விட ஜெனரல் சரத் பொன்சேகா வெற்றி வாய்ப்பில் 4 வீதம் முன்னிலையிலேயே உள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தனது வெற்றியை உறுதி செய்ய தற்போதைய அரசாங்கம் தனது முழு ஆளுமையையும் பயன்படுத்தும். அந்த சவால்களுக்கு முகம் கொடுத்து போராட எதிர்க்கட்சிகளின் கூட்டணி தயாராகவே உள்ளது
மேலும் இங்கே தொடர்க...

ஜனவரி 31க்குள் மீள்குடியேற்றத்தை பூர்த்தி செய்யும் செயற்திட்டம் தயார்

யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற்றம் நிறைவு - அமைச்சர் ரிசார்ட்

வவுனியா நிவாரண கிராமங்களிலும், ஏனைய இடங்களிலும் தங்கியுள்ள மக்கள் அனைவரையும் எதிர்வரும் ஜனவரி மாதம் 31ம் திகதிக்கு முன்னதாக அவர்களின் சொந்தக் கிராமங்களில் மீளக்குடியமர்த்த அரசாங்கம் திட்டங்களை வகுத்து செயற்படுவதாக மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

கிழக்கிலும், யாழ்ப்பாணத்திலும் மீள்குடியேற்றம் முற்றாக நிறைவடைந்துள்ள தாகக் கூறிய அமைச்சர் பதியுதீன், எதிர்வரும் டிசம்பர் 5ம் திகதிக்கு முன்னர் 3600 பேரை மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறினார். மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சில் நேற்று (27) பிற்பகல் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இன்று (27) (நேற்று) மாந்தை கிழக்குப் பகுதியில் 800 பேர் மீளக்குடியமர் த்தப்பட்டுள்ளனர். எதிர்வரும் 30ம் திகதி பூநகரியில் 1000 பேர் குடியமர்த்தப்படுவர். கிளிநொச்சி கரைச்சியில் டிசம்பர் இரண்டாந் திகதி ஆயிரம் பேரும், ஐந்தாம் திகதி வவுனியா கிழக்கில் 800 பேரும் மீளக்குடியம ர்த்தப்படுவார்களெனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும் இங்கே தொடர்க...

சர்வதேச அழுத்தங்களுக்கு மத்தியிலும் தாய்நாட்டின் கௌரவம் பேணுவோம்

சர்வதேச விமான நிலையத்திற்கான நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைத்த

எத்தகைய தேசிய, சர்வதேச அழுத்தங்கள் வந்தாலும் தாய்நாடு தொடர்பில் மேற்கொள்ளும் தீர்மானங்களை மாற்றத் தயாரில்லையென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அதேபோன்று நாட்டு மக்களுக்காகவும் நாட்டின் எதிர்கால நலனுக்காகவும் எத்தகைய தீர்மானங்களையும் மாற்றவும் தயாராகவுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

தெற்கில் வீரவிலவில் சர்வதேச விமான நிலையத்தை அமைப்பதென ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டாலும் அதனால் பாதிக்கப்படும் மக்களின் நலன் கருதி அத்தீர்மானத்தை மாற்ற நேர்ந்ததாகவும் அதற்குப் பதிலாக லுணுகம்வெஹெர மத்தல பிரதேசத்தில் அதற்கான நிர்மாணப் பணிகளை இன்று ஆரம்பிக்க முடிந்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தெற்கில் மத்தல பிரதேசத்தில் புதிய சர்வதேச விமான நிலையத்திற்கான நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய ஜனாதிபதி, இதற்கு முன்னர் நாம் இப்பகுதிக்கு வந்தபோது இங்கு டயர் யுகமே இருந்ததாகவும் அன்று டயர் எரித்தவர்களும் டயரில் போடப்பட்டவர்களும் இன்று ஒன்றிணைந்துள்ள யுகம் உருவாகியுள்ளதாக வும் அவர் தெரிவித்தார்.

சீன அரசாங்கத்தின் நிதியுதவியுடன் 210 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் அம்பாந்தோட்டை மாவட்ட மத்தலவில் நிர்மாணிக்கப்படவுள்ள இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையத்திற்கான நிர்மாணப் பணிகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்கள், உள்நாட்டு வெளிநாட்டு ராஜதந்திரிகள் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது; கடந்த காலங்களில் இந்த நாட்டை ஆட்சி செய்தவர்கள் விட்ட தவறுக்கான பலனையே நாம் இன்று சுமக்க வேண்டியுள்ளது. தெற்கில் விமான நிலையம், துறைமுகம் போன்றவை எப்போதோ அமைக்கப்பட்டிருக்க வேண்டியவை. அன்றைய தலைவர்கள் அதுபற்றி சிந்திக்காமையும் அவர்கள் விட்ட மாபெரும் தவறு. இதன் மூலம் நாட்டுக்கான பெரும் வருமானமும் இழக்கப்பட்டுள்ளது.



மேலும் இங்கே தொடர்க...

மிழீ க்ள் விடுலைக் ம்


:
******************************************
புலிப்பாசிசம்

anicandil2.gifhttp://www.geo-reisecommunity.de/bild/regular/141766/Tiger.jpg

புலிப்பாசிசம் காவுகொண்ட விடுதலைப் போராளிகள்
அரசியல் அல்லது போராட்ட அமைப்பு : தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்
தொழில் அல்லது அந்தஸ்து பதவி : முழுநேர விடுதலைப் போராளிகள்
புலிகளால்
சுட்டுக்கொலை
************74.gif*******74.gif74.gif74.gif***********************
தோழர் சுந்தரம்
தோழர் மென்டிஸ்
தோழர் காத்தன்


தோழர் சங்கிலி, கந்தர்
தோழர் சுபாஸ்
தோழர் வாசு


தோழர் வோல்ற்றர்
தோழர் கண்ணன்
தோழர் மாமா




தோழர் பார்த்தன் தோழர் வசந்தி தோழர் நடேசன்


தோழர் வசந்தன் தோழர் மாணிக்கதாசன்
மேலும் இங்கே தொடர்க...

27 நவம்பர், 2009


dsc01767mmnn

சுவிஸில் இடம்பெற்ற தமிழ்க் கட்சிகளின் தலைவர்களின் மாநாட்டில் பங்கேற்கச் சென்றிருந்த புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தர்த்தன் அவர்கள், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று (22.11.2009) சூரிச் மாநகரில் புளொட் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களுடனான பொதுக் கூட்டமொன்றினை நடத்தியிருந்தார். இதில் பெருந்தொகையான மக்கள் பங்குபற்றியிருந்தனர். இதில் பல புலி ஆதரவாளர்களும் பங்கு கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இதன்போது இலங்கையில் தற்போது இருக்கின்ற அரசியல் நிலைமைகள் தொடர்பாகவும், இடம்பெயர்ந்த மக்களின் நிலைமைகள் பற்றியும், மீள்குடியேற்றங்கள் மற்றும் அரசியல் செயற்பாடுகள் குறித்தும் புளொட் தலைவர் கூட்டத்தில் பங்கு கொண்டிருந்தவர்களுக்கு ஒரு விளக்கவுரையை வழங்கினார். அத்துடன் சுவிஸில் இடம்பெற்ற அனைத்துத் தமிழ் கட்சிகள் மாநாட்டில் பேசப்பட்ட விடயங்கள், காணப்பட்ட உடன்பாடுகள் தொடர்பிலும் இதன்போது எடுத்து விளக்கினார்…

இக்கூட்டத்தின்போது, புலி ஆதரவாளர்கள் கேட்ட கேள்வியொன்றுக்கு பதிலளித்த புளொட் தலைவர் சித்தார்த்தன், நாமும் தமிழீழக் கொள்கைக்காகவே எங்களுடைய போராட்டத்தை ஆரம்பித்தோம். 1970களில் முதன்முதலாக ஆரம்பிக்கப்பட்ட தமிழ் புதிய புலிகள் 1976இலே தமிழீழ விடுதலைப் புலிகளாக பெயர்மாற்றம் செய்யப்பட்டு உமாமகேஸ்வரன் அவர்கள் அதன் தலைவராக தெரிவுசெய்யப்பட்டார். 1980ம் ஆண்டு உமாமகேஸ்வரனுக்கும் பிரபாகரனுக்குமிடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளால் தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற பெயரைக் கைவிட்டு இருவருமே புதிய பெயர்களில் இயக்கங்களை ஆரம்பிப்பதாக தெரிவித்து உமாமகேஸ்வரன் புளொட் இயக்கத்தை ஆரம்பித்தார். பிரபாகரன் சிறிதுகாலம் குட்டிமணி, தங்கத்துரை ஆகியோருடன் இருந்துவிட்டு மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற பெயரிலேயே இயங்கினார்.

எங்களைப் பொறுத்தமட்டில் 87ம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட பின்பு எந்தக் காலத்திலும் இங்கு ஒரு தனிநாடு வருவதை ஏற்பதில்லை என்ற நிலைப்பாட்டில் இந்தியா மிகவும் உறுதியாக இருக்கின்றதென்பதை அறிந்திருந்தோம். உலக நாடுகளுமே இங்கு தனிநாடொன்று வருவதற்கு இந்தியாவை மீறி எந்தவிதத்திலும் உதவாதென்பதையும் நாம் தௌ;ளத் தெளிவாக உணர்ந்திருந்தோம். ஆகவேதான் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்;வைக் காணலாம், காணவேண்டுமென்ற நோக்கத்திற்காக எங்களுடைய நிலைப்பாடுகளை மாற்றிக் கொண்டோம்.

இதற்காக ஜனநாயக ரீதியிலாக தொடர்ந்து அழுத்தங்களை கொடுத்து வருவதன்மூலம் ஒரு தீர்வைக் காணலாம். அதேநேரம் மக்களுடைய அபிலாசைகளுக்கு சரியான தீர்வொன்று உடனடியாக காணமுடியவில்லை என்ற காரணத்திற்காக தொடர்ந்தும் தமிழ்மக்களை ஒரு அழிவுப்பாதையில் இட்டுச்செல்ல முனையவும் கூடாது. இன்று எங்களுக்கு இருக்கின்ற முதலாவது கடமை அனைத்தையும் இழந்து வந்திருக்கின்ற அந்த இலட்சக்கணக்கான மக்களுடைய மறுவாழ்வு. அதிலேதான் எங்களுடைய முழுமையான கவனமும் இன்று இருக்கின்றது. அதேநேரத்தில் சர்வதேச ரீதியிலான அழுத்தங்களையும் கொடுத்து தமிழ் மக்களுக்கு ஒரு சரியான அதிகாரப்பரவலாக்கலை பெற்றுக்கொடுக்கும் வகையிலான நடவடிக்கைகளிலும் அதிகூடுதல் கவனம் செலுத்துவோம்.

இந்த வகையில் அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றுபட்டு செயற்படுவதன் மூலம் அல்லது ஒரு கருத்தொருமித்த கோரிக்கைகளை முன்வைப்பதன் மூலம் நாம் பல விடயங்களை சாதிக்க முடியுமென்று நம்புகிறோம். அதனடிப்படையாகவே தமிழ்க்கட்சிகள் மத்தியில் ஒரு ஒற்றுமையைக் கொண்டுவர வேண்டுமென்று இங்கு சுவிஸில் நடைபெறுகின்ற மகாநாட்டில் மாத்திரமல்ல அதற்கு முன்பதாகவும் இலங்கையிலும் தொடர்ச்சியாக பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இவைகள்மூலம் வரவிருக்கின்ற அரசாங்கம் எதுவாக இருந்தாலும் அழுத்தங்களைக் கொடுத்து அரசியல் ரீதியிலான தீர்;வுக்கும் தமிழ் மக்களின் மறுவாழ்வு போன்ற விடயங்களுக்கும் நடவடிக்கைகளை எடுப்போமென நம்புகிறோம்.

அதேவேளை நாட்டின் எந்த ஒரு தலைவரும் தமிழ் மக்களுடைய அபிலாசைகளைத் தீர்த்து வைப்பார்கள் என்று நான் நம்பவில்லை. ஆனாலும் தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமையான செயற்பாடுகளின் ஊடான முயற்சிகளின்மூலம் அரசுக்கு அழுத்தங்களைக் கொடுப்பதன் மூலமும், சர்வதச ரீதியான அழுத்தங்களின் மூலமும் அவர்களை ஒரு நிலைப்பாட்டுக்கு கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது.

எதிர்வரும் தேர்தலின்போது வெல்லப் போகின்றவர்கள் யாராவது தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பார்கள் என நம்புகிறீர்களா என கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு பதிலளித்த சித்தார்த்தன் அவர்கள், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அல்ல வேறு எந்த ஒரு சிங்களத் தலைவர்களோ அது ரணில் விக்கிரமசிங்கவாக இருக்கலாம் அல்லது வேறு எவராகவோ இருந்தாலும்; தமிழ் மக்களுடைய அபிலாசைகளைத் தீர்க்கக்கூடிய வகையிலே ஒரு தீர்வை முன்வைப்பார்கள் என்பதை நான் நம்பவில்லை. கடந்தகால அனுபவங்கள் இவற்றை எங்களுக்கு மிகத் தெளிவாகக் காட்டுகின்றன. இருந்தாலும் ஒன்றுபட்ட இலங்கைக்குள்தான் ஒரு தீர்வைக்காண முடியும்.

அடைய முடியாத இலக்கிற்காக எங்களுடைய மக்களைப் பலிகொடுக்க முடியாது. மக்களை அழிவுப்பாதையில் இட்டுச் செல்லக்கூடாது என்ற காரணத்திற்காகவேதான் 87களில் தொடக்கம் நாங்கள் ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒரு தீர்;வை வலியுறத்தி வருகின்றோம். இன்றைய நிலையானது எங்களுக்கு அன்றே தெரிந்த விடயமாகும். இந்தியா விரும்பாத பட்சத்திலும் உலக நாடுகள் ஏற்றுக்கொள்ளாத பட்சத்திலும் தொடர்ந்தும் தமிழீழத்திற்கான போராட்டத்தை முன்னெடுத்தால் நிச்சயமாக ஒரு அழிவை நோக்கியே செல்லுமென்று நாங்கள் அன்றே உணர்ந்திருந்தோம். இதை நாங்கள் அந்தக் காலகட்டத்தில் பலதடவைகள் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறி வந்திருக்கிறோம். இருந்தாலும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை புலிகள் தொடர்ந்து முன்னெடுத்தபோது அந்தப் போராட்டத்திற்கு நாம் எதிரானவர்களாக இருக்கவில்லை. ஆனால் விடுதலைப் புலிகள் தாங்களே ஏகப்பிரதிநிதிகள் என்பதற்காக மற்றைய இயக்கங்களை அழிக்க முற்பட்டபோது அதை நாம் நிச்சயமாக எதிர்த்தோம் என்று கூறினார்.

நாடு கடந்த தமிழீழத்தை ஆதரிக்கலாமா? என்ற இன்னுமொரு கேள்விக்கு பதிலளித்த புளொட் தலைவர், நாடுகடந்த தமிழீழம் என்பதன் சரியான அர்த்தம் உண்மையிலேயே தெரியவில்லை. இதிலே எந்தவொரு அர்த்தமும் இருப்பதாக புரியவில்லை. புலிகள் பலமாக இருந்த காலத்தில் நாட்டுக்கு வெளியிலே ஒருஅரசை அமைத்து அதை சர்வதேச அங்கீகாரம் பெற்று நடத்துவதாக இருந்திருந்தால் அதில் ஒரு அர்த்தம் இருக்கக்கூடும். இன்று இதிலே எந்தவிதமான ஒரு அர்த்தமும் இல்லாமல் இலங்கையில் இருக்கின்ற தமிழ் மக்களை இன்னமும் ஆபத்தை நோக்கி இட்டுச்செல்கின்ற ஒரு முயற்சியாகவே கருதுகிறேன். அதை எந்த சந்தாப்பத்திலும் நாம் ஆதரிக்க முடியாது என்று கூறினார்.

புலி ஆதரவாளர்களைப் பார்த்து கருத்துரைத்த சித்தார்த்தன் அவர்கள், இங்கு நீங்கள் வந்திருப்பது ஒரு நல்ல விடயமென்பதுடன், நீங்கள் இங்கு வந்திருப்பது ஒரு ஆரோக்கியமான விடயமுமாகும். கட்சிகள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் ஒருவருக்கொருவர் தங்களுடைய கருத்துக்களைத் தெரிவித்து விவாதிக்கக் கூடிய ஒரு சூழ்நிலை தற்போது உருவாகியிருப்பதை அரசியலில் மிகவும் முக்கியமான நல்ல விடயமாக நான் கருதுகிறேன். அனைவரும் தங்களுடைய கருத்துக்களைக் கூறக்கூடிய சுதந்திரம் உருவாகியிருப்பது ஒரு நல்ல ஆரோக்கிய விடயமுமாகும் என்று தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, இடம்பெயர்ந்த மக்களின் இன்றைய நிலைமைகளையும், சிறிது சிறிதாக தற்போது அம்மக்கள் மீளக்குடியேற்றப்பட்டிருப்பதையும், இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றப்பட்ட பகுதிகளை தான் சென்று பார்வையிட்டதையும், அங்கிருக்கின்ற மக்களுடைய குறைநிறைகளைப் பற்றியும் புளொட் தலைவர் இக்கூட்டத்தின்போது எடுத்துக் கூறினார்.

அத்துடன், இடம்பெயர்ந்த மற்றும் மீள்குடியமர்த்தப்பட்ட இந்த மக்களுடைய குறைகளை நிவர்த்தி செய்வதற்கான உதவிகளை வெளிநாடுகளில் உள்ளவர்களாகிய நீங்களே நேரடியாகச் செய்யலாம். பத்துப்பேர் இணைந்து ஒரு கிராமத்தைப் பொறுப்பெடுத்து அபிவிருத்தி செய்யலாம். அதற்காக அநியாயமாக அதாவது பணம் அந்த மக்களைச் சென்றடையாத வழியில் பணத்தைக் கொடுக்காதீர்க்கள். அதாவது அங்குள்ள மக்களுக்கு உதவுவதாகத் தெரிவித்து உங்களை ஏமாற்றக் கூடியவர்களிடம் மீண்டும் மீண்டும் ஏமாந்து பணத்தைக் வழங்காதீர்கள். அதற்காக எங்களிடம் நிதியைத் தரும்படி நாங்கள் கேட்கவில்லை. இன்னும் சிறிதுகாலம் பொறுத்துக் கொள்ளுங்கள் அங்கு ஓரளவு சுதந்திரமான நடமாட்டங்கள் எல்லாம் ஆரம்பித்தபின் நீங்களாகவே இந்த வேலைத்திட்டங்களை எல்லாம் செய்யக்கூடிய நிலைமைகள் வரும். நீங்கள் உங்களுக்குத் தெரிந்த கிராமம், உங்களுக்குத் தெரிந்த மக்கள் மத்தியில் அவர்களுடைய துயர்களைத் துடைக்கும் வகையில் நேரடியாக உதவும் வகையிலான ஒரு காலகட்டம் வரும்போது அதைச் செய்யுமாறு கேட்டுக் கொள்ளுகிறேன். என்று தெரிவித்து புளொட் தலைவர் தனது கூட்டத்தினை நிறைவு செய்துள்ளார்.

dsc01767mmdsc01754mmdsc01765mmdsc01766mmdsc01763mmdsc01764mmdsc01782mmimg_05761mmimg_05771mmimg_05781mmimg_05821mmimg_05831mmimg_05861mmimg_05871mmimg_05881mmimg_05891mmimg_05981mmimg_06011mmimg_06031mmdsc01801mmdsc01802mmdsc01803mmdsc01805mmdsc01807mmdsc01808mmdsc01810mmdsc01811mmdsc01812mmdsc01813mmdsc01817mmdsc01822mdsc01769mmdsc01772mmdsc01778mmdsc01780mmdsc01781mmdsc01782mm1dsc01797mmdsc01785mm

dsc01809mm
மேலும் இங்கே தொடர்க...