10 மே, 2011

இலங்கை சர்வதேசத்துடன் இணக்கமாகச் செயற்பட வேண்டும் - பிரான்ஸ்
இலங்கை சர்வதேசத்துடன் இணக்கமாகச் செயற்பட வேண்டும் - பிரான்ஸ்
இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்துடன் இணக்கமாகச் செயற்பட வேண்டுமென பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்துடன் இணங்கி ஐ.நா. பரிந்துரைகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

காளிகாம்பாளை வழிபட்டு மருத்துவமனைக்கு சென்றார் ரஜினிமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினி மருத்துவர்களின் அனுமதியோடு இன்று காளிகாம்பாள் கோவிலுக்குச் சென்று வழிபட்டு மீண்டும் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.

கடந்த மாதம் 29ந் தேதி மயிலாப்பூரில் உள்ள இசபெல்லா மருத்துவமனையில் ரஜனி அனுமதிக்கப்பட்டார். இதன்போது வைத்தியர்கள் ரஜினிக்கு அஜீரணக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

சிகிச்சைக்குப் பின் குணமடைந்து அன்று மாலையே வீடு திரும்பினார். மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார்.

இதற்கிடையில் கடந்த 4ஆம் திகதி மீண்டும் அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவசரப் பிரிவில் வைத்து ரஜினிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இன்று 7ஆவது நாளாக ரஜினிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மகள் ஐஸ்வர்யா தெரிவித்தார். தினமும் அதிகாலையில் எழுந்து மருத்துவமனைக்குள்ளேயே ரஜினி நடைப் பயிற்சி மேற்கொண்டார்.

இந்நிலையில் செவ்வாய்க் கிழமை மருத்துவர்களின் அனுமதியோடு பாம்பன் சுவாமி கோயிலுக்குச் சென்று தியானத்தில் ஈடுபட்டார். பின்னர் காளிகாம்பாள் கோயிலில் அவர் வழிபட்டு விட்டு மீண்டும் மருத்துவமனை திரும்பினார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை இராணுவம் உலகின் முதன்மை இராணுவமாக உள்ளது: ஜெனரல் ஜகத்ஜயசூரிய

இலங்கை இராணுவம் உலகின் முதன்மை இராணுவமாக உள்ளது என்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த இடத்தை தொடர்ச்சியாகப் பேணுவதற்கு இராணுவத்தினருக்கு சகல விதமான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

யாழ் தெல்லிப்பழையில் மீள் குடியேற்றம் மாவை சேனாதிராஜா மற்றும் பசில் ராஜபக்ஷஇலங்கையின் வடக்கே யாழ் குடாநாட்டில் நீண்டகாலமாக அதியுயர் பாதுகாப்பு வலயமாக இருந்து வருகின்ற வலிகாமம் வடக்கில் தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பகுதியில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்தப் பகுதியைச் சேர்ந்த 3511 குடும்பங்களை அவர்களது சொந்த இடங்களில் சென்று குடியேறுவதற்கு அரசாங்கம் அனுமதித்திருக்கின்றது. இதற்கான ஆரம்ப வைபவத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உட்பட ஏனைய கட்சிகளின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள்.

இருபத்தியொரு வருடங்களுக்கு முன்னர் வலிகாமம் வடக்கு பிரதேசம் அதிதயுயர் பாதுகாப்பு வலயமாக அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டதையடுத்து, இந்தப் பிரதேசத்தின் 36 கிராமசேவகர் பிரிவுகளில் இருந்து 20 ஆயிரத்து 365 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேறிச் செல்ல நேர்ந்தது.

இந்தப் பிரதேசத்தில் ஏற்கனவே கீரிமலை வலித்தூண்டல், இளவாலை போன்ற பகுதிகளை உள்ளடக்கிய 3 கிராம சேவகர் பிரிவுககைளச் சேர்ந்த மக்கள் மீள்குடியேறுவதற்கு அனுமதிக்கப்பட்டார்கள்.

இதனையடுத்து இப்போது தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் உள்ள 9 கிராமசேவகர் பிரிவுகளில் மீள்குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.
நீண்ட காலத்தின் பின்னர் தமது சொந்த இடங்களுக்குச் செல்லும் இந்த மக்களின் அடிப்படை வசதிகளைப் பூர்த்தி செய்வதற்காகப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கூறுகின்றார்.

இதற்கிடையில் போர்ச்சூழல் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்துள்ள வடமராட்சி கிழக்குப் பகுதிகளிலும் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ்; மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்திருக்கின்றார்.
மேலும் இங்கே தொடர்க...