அரச வங்கிகள் கடன் வட்டி வீதங்களை 8 - 12 வீதம் வரை குறைக்க வேண்டும் - ஜனாதிபதி பணிப்பு | |
அரசாங்க வங்கிகளின் மூலமாக வழங்கப்படும் கடனுக்கு அறவிடப்படும் வட்டி வீதங்களை 8 12 வீதம் வரை குறைக்குமாறு நிதியமைச்சரும் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ அரச வங்கிகளின் தலைமை அதிகாரிகளுக்கு பணிப்புரைவிடுத்துள்ளார். இதன் பிரகாரம் இதுவரை காலமும் 15% முதல் 22 % வரை அறவிடப்பட்ட 8 வீதத்திற்கும் 12 வீதத்திற்கும் இடையில் அறவிடப்படும் இந்த நடைமுறை நாளை புதன்கிழமை முதல் அமுல்படுத்தப்படும். நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக அரச வங்கிகளின் பங்களிப்பை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அரச வங்கிகளின் பிரதானிகளுடன் அலரிமாளிகையில் இன்று நடைபெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு பணிப்புரை விடுத்துள்ளார். இந்த சந்திப்பு தொடர்பில் ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; வட்டி வீதத்தை குறைப்பதன் மூலமாக கடன்பெறுவோர் பல்வேறு நன்மைகளை பெற்றுக்கொள்வதுடன் தவணைகளும் குறைவடையும். நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக விவசாயம், சுற்றுலாத்துறை, கைத்தொழில் மற்றும் மீன்பிடி உள்ளிட்ட நடுத்தர துறைகளான நிர்மாணத்துறைகளை மேம்படுத்தவேண்டும் |
27 அக்டோபர், 2009
இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்குவதற்காக சேகரிக்கப்பட்ட ஒருதொகுதி உணவுப்பொருட்களை கொள்ளையிட்ட ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களை இன்றுஅதிகாலை கைதுசெய்துள்ளதாக ஹபரணைப் பொலீசார் தெரிவித்துள்ளனர். ஹபரணை வீதியினூடாக வந்த சந்தேகத்திற்கிடமான லொறியொன்றினை பொலீசார் சோதனையிட்டபோதே இப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது மூதூர் பிரதேசத்தில் இடம்பெயர்ந்த மக்களுக்காக களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த பொருட்களே களவாடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஹபரணைப் பொலீசார் மேற்கொண்டுள்ளனர்.
செட்டிகுளம் முகாமிலிருந்த மன்னாரைச் சேர்ந்த 52குடும்பங்கள் அனுப்பிவைப்பு- வவுனியா செட்டிகுளம் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தொகுதி மக்கள் நேற்று மன்னார் இலுப்பைக்குளம் நலன்புரி நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். 52 குடும்பங்களைச் சேர்ந்த 147பேர் இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இலுப்பைக்குளம் அழைத்துச் செல்லப்பட்டுள்ள மக்களில் இதுவரை 1500ற்கும் மேற்பட்டவர்கள் மன்னார் மாவட்டத்திலுள்ள அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சென்னை விமான நிலையத்தில் வைத்து மூன்று இலங்கையர்கள் இன்றுகாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும் போலிக் கடவுச்சீட்டுடன் கொழும்பு செல்லும் விமானமொன்றில் பயணிப்பதற்கு முயற்சித்த வேளையிலேயே தமிழகம் கியூபிரிவு பொலீசாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கியூபிரிவு பொலீசார் இவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். |
கடுமையான சண்டைக்குப் பின்னரும் கிளிநொச்சி நகரத்தில் பல இடங்களில் கட்டடங்கள் சேதமடையாமல் அப்படியே இருப்பதைப் பார்க்க முடிகிறது. வீடுகள் பல சேதமடையாமல் நல்ல நிலையில் இருப்பதை நாங்கள் பார்த்தோம் என்று கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதி அரசு நிர்வாகியான எமல்டா சுகுமார் தெரிவித்தார். அரசு முகாம்களிலிருந்து அழைத்து வரப்படும் தமிழர்களை முதலில் தாற்காலிகமாக குடியமர்த்துவதற்காக இரண்டு கல்வி நிறுவனங்களைத் தேர்வு செய்துள்ளோம். மாலவி மத்திய கல்லூரி, யோகபுரம் மத்தியக் கல்லூரி ஆகிய இரு கல்லூரிகளில் முதல் கட்டமாக குடியமர்த்தப்படுவார்கள். மக்களை குடியமர்த்துவதற்கு முன்பாக அனைத்து வீடுகளும் பள்ளிக் கட்டடங்களும் முழுமையாக ஆய்வு செய்யப்படும். நல்ல நிலையில் உள்ள கட்டடங்களில் மட்டுமே குடியமர்த்தப்படுவார்கள் என்றார். கிளிநொச்சிப் பகுதியில் உள்ள ஜெயபுரம், பூநகரி, முலங்காவில், நஞ்சிக்குடா ஆகிய இடங்களில் மக்கள் மீண்டும் குடியமர்த்தப்படுவார்கள். இங்கு மட்டும் மொத்தம் 25 ஆயிரம் பேர் குடியமர்த்தப்படுவார்கள் என்று எமல்டா சுகுமார் கூறினார்.
இந்தப் பகுதிகளில் அமைக்கப்படும் தாற்காலிக முகாம்களில் மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும். ஒவ்வொரு பள்ளியிலும் 100 குடும்பங்கள் குடியமர்த்தப்படுவார்கள் என்றார் அவர். மறு குடியமர்வுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருவதாக ராணுவ அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர் என்று அவர் கூறினார். இந்த மக்களை விரைவில் அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்த அரசு ஆர்வமாக உள்ளது. ஆனால் கண்ணி வெடிகள் முழுமையாக அகற்றப்படவில்லை. அதனால்தான் தாமதமாகிறது என்று அவர் கூறினார். இந்தப் பகுதியில் உள்ள அரசு அலுவலகங்கள், நீர் நிலைகள், பள்ளிகள், மருத்துவமனைகள், சாலைகள், பாலங்கள் போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க அரசு உரிய நிதி ஒதுக்கி உள்ளது என்றார் அவர். முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு மற்றும் புதுமத்தளன் ஆகிய இடங்களைப் பார்வையிட்டோம். அங்கு கண்ணி வெடிகள் முழுமையாக அகற்றப்படவில்லை. இது தொடர்பாக அரசின் உத்தரவுக்காக காத்திருக்கிறோம் என்றும் அவர் கூறினார். புதுக்குடியிருப்பு மற்றும் புதுமத்தளன் ஆகிய பகுதிகள் ஆபத்தான பகுதிகள் என்று ராணுவம் அறிவித்துள்ளது.
அவர்களில் பலரின் அடையாளங்களை உறுதி செய்ய முடியாத நிலை காணப்படுவதால், அவர்களை அடையாளப்படுத்த முடியாதிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே அவர்களின் அநேகமானவர்களை சந்தித்ததாக கூறிய கனேடிய வழக்கறிஞர் ஒருவர், அவர்கள் அனைவரிடமும் தகுந்த அடையாள ஆவணங்கள் இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில் அந்த அகதிகளில் ஒருவர் குடிவரவு அதிகாரிகளிடம் தமது இலங்கை கடவுச்சீட்டு, தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதி பத்திரம் என்பவற்றை வழங்கியதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனினும் அவரிடம் இருந்து இந்திய கடவுச்சீட்டு ஒன்றும் மீட்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் அவரின் உண்மையான விபரங்கள் எதனையும் உறுதிப்படுத்த முடியாதிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், அகதிகளுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பிருக்கலாம் என்ற அச்சத்தின் காரணமாகவே அவர்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
எதிர்வரும் 29,30ஆம் திகதிகளில் ஐரோப்பிய ஒன்றியத்தின் மாநாடு நடைபெறவுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
காலநிலை மாற்றம், பொருளாதார பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய உலகப் பிரச்சிகைள் குறித்து இந்த மாநாட்டில் முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளது.
ஈரான், பொஸ்னியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் நிலவரம் குறித்தும் இலங்கை யுத்தத்தின் பின்னரான நிலவரம் குறித்தும் ஆராயப்படவுள்ளது.
ஜீ.எஸ்.பி சலுகைத் திட்டம்
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளுக்குக் கட்டுப்படாத வரையிலும் இலங்கை ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகைத் திட்டத்தைக் கோர முடியாது என ஐரோப்பிய ஆணைக்குழுவின் இலங்கை விவகாரப் பொறுப்பாளர் பெர்னார்ட் செவாஜ் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மனித உரிமை மீறல் விசாரணை உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் அடிப்படை நிபந்தனைகளுக்குக் கட்டுப்படாத நிலையில் சலுகைத் திட்டங்களை இலங்கை கோரக் கூடாது.
ஜீ.எஸ்.பி. சலுகைத் திட்டம் வழங்கும் போது பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட சில நிபந்தனைகள் காணப்படுகிறது.
சலுகைத் திட்டத்தை வழங்க வேண்டுமாயின் விசாரணை நடத்துவதற்கு அனுமதியளிக்கப்பட வேண்டும்.
இவ்வாறான பின்னணியில் சலுகைத் திட்டத்தை நீடிக்குமாறு கோரும் எந்தவொரு உரிமையும் இலங்கைக்கு இல்லை.
இந்த நிபந்தனைகளுக்குக் கட்டுப்படாவிட்டால் சலுகைத் திட்டம் தேவையில்லை என எந்த நேரத்திலும் இலங்கை அறிவிக்க முடியும்.
ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டம் வழங்கும் போது பின்பற்றப்பட வேண்டிய நிபந்தனைகள் தொடர்பில் நன்கு அறிந்து கொண்டதன் பின்னரே இலங்கை இந்தத் திட்டத்தைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பித்தது.
ஐரோப்பிய ஒன்றிய சட்டதிட்டங்களைப் பின்பற்றும் நாடுகள் மட்டுமே இந்த சலுகைத் திட்டத்தின் மூலம் பயனடைய முடியும். பேச்சுவார்த்தைகளின் மூலம் சமரசம் செய்து கொள்ள முடியாது." என்றார்
மெனிக்பாம் நலன்புரி நிலைஅயத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தொகுதி மக்கள் நேற்று மன்னார் இலுப்பைக்குளம் நலன்புரி நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். மெனிக்பாம் நலன்புரி நிலையத்தில் தங்கியிருந்தவர்களில் 52 குடும்பங்களைச் சேர்ந்த 147 பேர் இவ்வாறு அழைத்து வரப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நலன்புரி நிலையத்திர்கு அழைத்து வரப்பட்ட மக்களில் இதுவரை 1500 இற்கும் மேற்பட்டவர்கள் மன்னார் மாவட்டத்திலுள்ள அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது |
இந்தோனேஷியக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட இலங்கைத் தமிழர்களை மனித நேய அடிப்படையில் ஏற்றுக்கொள்ள இந்தோனேஷிய அதிகாரிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இந்தோ. மாகாண ஆளுநர் மறுப்பு
அதே வேளை, இந்தோனேஷிய, ரியோ தீவுகள் மாகாண ஆளுநர் இஸ்மெத் அப்துல்லா இலங்கையரை நாட்டுக்குள் அனுமதிக்க முடியாது எனக் கூறியுள்ளதாக பிறிதொரு செய்தியில் தெரிவிக்கப்படுகிறது
மன்னாரில் இருந்து அடம்பன் கிராமத்துக்கு கடந்த 22ஆம் திகதி முதல் புதிதாக போக்குவரத்து சேவை நாடாளுமன்ற - ஜனாதிபதி தேர்தல்கள் ஒரே தினத்தில் : அரசு அறிவிப்பு தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தல்களை ஒரே தினத்தில் நடத்தத் தீர்மானிக்கப்படுள்ளது. இது தொடர்பில் எதிர்வரும் 15 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் கொள்கைப் பிரகடனத்தின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது மன்னாரில் இருந்து அடம்பன் கிராமத்துக்கு கடந்த 22ஆம் திகதி முதல் புதிதாக போக்குவரத்து சேவை ஒன்று ஆரம்பித்து வைக்கப்பட்டிருக்கின்றது. கடந்த 22 ஆம் திகதியன்று மாந்தை மேற்குப் பகுதியில் மக்கள் மீள குடியமர்த்தப்பட்டனர்.இதனைத் தொடர்ந்து இம்மக்களின் நலன்கருதி உடனடியாகப் போக்குவரத்து சேவையும் ஆரம்பிக்கப்பட்டது. இதற்கு இலங்கை போக்குவரத்துச் சபையின் மன்னார் சாலை பஸ் ஒன்றே சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றது.நாளாந்தம் மன்னாரில் இருந்து காலை 8.00 மணிக்கும், மாலை 3.00 மணிக்கும் இரண்டு சேவைகள் இடம்பெறுகின்றன. இப்பஸ் சேவை உயிலங்குளம் சோதனைச் சாவடியூடாக அடம்பன் சென்றடையுமென தெரிவிக்கப்படுகின்றது |
நல்லாட்சியை இலக்காகக் கொண்டு வளமான கூட்டணியை களமிறக்குவோம்- ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச கூறுகிறார் | |
ஜனநாயகம், நல்லாட்சி, தேசிய சமாதானம் மற்றும் தேசிய அபிவிருத்தியை இலக்காகக் கொண்ட வளமான கூட்டணியொன் றை எதிர்வரும் தேர்தல்களின் போது களமிறக்குவோம் என்று ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்தார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிப்பிற்கான நடவடிக்கைகளை ஐ.தே.க. செயல்வடிவில் காட்டினால் மாத்திரமே அதனை பொதுமக்கள் நம்புவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார். எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பாக நேற்று திங்கட்கிழமை தெளிவுபடுத்துகையிலேயே சோமவன்ச அமரசிங்க மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது, தற்போதைய அரசாங்கத்தின் யுத்தத்தின் பின்னரான நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்டதனாலும் ஜனநாயக விரோத செயற்பாடுகளும் காணப்பட்டமையால் எதிர்கால அரசியலுக்காக வளமான ஒரு கூட்டணி அமைப்பது தொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பே கலந்தாலோசித்து உள்ளோம். முடிவுகள் எடுப்பதே தவிர புதிதாக கூட்டணி அமைப்பது தொடர்பாக பேச்சு வார்த்தைகள் நடத்த வேண்டியதில்லை. எமது கூட்டணியின் நோக்கம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிப்பு மற்றும் நல்லாட்சி என்பவையேயாகும். ஐ.தே.க வினால் கொண்டு வரப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைக்கு எதிராக தற்போது ரணில் விக்கிரமசிங்க உட்பட ஐ.தே.க வினர் குரல் கொடுக்கின்றனர். ஆனால் ஜே.வி.பி அப்போதே இம்முறையினை எதிர்த்து போராடியது. எவ்வாறாயினும் ஐ.தே.க.வின் மீது பொதுமக்களுக்கோ ஏனைய அரசியல் கட்சிகளுக்கோ நம்பிக்கை ஏற்பட வேண்டுமாயின் எதிர்ப்புக்களை வார்த்தைகளில் வெளிப்படுத்தாது செயல்வடிவில் காண்பிக்க வேண்டும். நிச்சயமாக எதிர்வரும் தேர்தல்களின் பின்பு நாட்டில் நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்பட்டு நல்லாட்சியே ஏற்பட வேண்டும். ஆனால் மீண்டும் ஒரு ஜனாதிபதி தேர்தலை நடத்த இந்த அரசாங்கம் முயற்சிப்பது மக்கள் ஆணையை மீறும் செயலாகும் |
மலேசியாவிலிருந்தும், கிறிஸ்மஸ் தீவை நோக்கி 30 அடி நீளமான மரக் கப்பலொன்றில் இம்மாத ஆரம்பத்தில் சுமார் 260 அகதிகள் சென்று கொண்டிருந்த நிலையில் இந்தோனேஷிய கரையோர பாதுகாப்பு பிரிவினரால் அவர்களின் கப்பல் தடுத்து நிறுத்தப்பட்டதுடன், மெராக் துறைமுகத்துக்குக் கொண்டுவரப்பட்டது.
இவர்களுக்குத் தேவையான உணவுகள், மருந்து வகைகள் என்பன சர்வதேச அமைப்பொன்றினால் வழங்கப்பட்டுள்ளன. இதேவேளை, குறித்த படகு மக்கள் படகை கைவிட்டு தற்காலிக குடியிருப்புகளுக்கு வருவதற்கு சம்மதிப்பார்களேயாயின் அவர்களுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்படுமென சட்ட மற்றும் மனித உரிமைகள் திணைக்களத்தின் அதிகாரி பொப்பி புடியஸ்வத்தி தெரிவித்துள்ளார். இதேவேளை, படகிலுள்ள பெரும்பாலானவர்கள் சுவாசித்தல் மற்றும் தோல் நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் படகுக்குள் சனநெரிசல் அதிகமாக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், அகதிகள் இந்தோனேஷியா கடற்கரைப்பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதால் அவர்கள் குறித்து இந்தோனேஷியாவே கவலை கொள்ள வேண்டுமென அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
அமெ. இராஜாங்க திணைக்களம் சமர்ப்பித்த அறிக்கை தொடர்பாக ஆராய சுயாதீன குழு
ஒருவாரத்துக்குள் ஜனாதிபதியால் நியமனம்
ஐக்கிய அமெரிக்க இராஜாங்க திணைக்களம், அதன் காங்கிரஸ¤க்கு சமர்ப்பித்திருக்கும் அறிக்கை தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஜனாதிபதி விரைவில் அறிவிக்கவுள்ளார். இராஜாங்க திணைக்களத்தின் அறிக்கை தொடர்பாக ஆராயவென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் ஒரு வார காலப் பகுதிக்குள் சுயாதீனக் குழுவொன்றை நியமிக்கவிருப்பதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க நேற்றுத் தெரிவித்தார். காங்கிரஸ¤க்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் அறிக்கையில், இலங்கையில் மனிதாபிமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட இவ்வருடத்தின் ஜனவரி முதல் ஜூன் வரையான காலப் பகுதிக்குள் இடம் பெற்ற சம்பவங்களில் எந்தவொரு இடத்திலும் போர் விதிகளை மீறியமைக்கான ஆதாரபூர்வமான சாட்சிகள் இல்லையெனவும் அவை சட்ட ரீதியாக நிரூபிக்கப்பட வில்லையெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு இந்த அறிக்கை சாதகமாக அமைந்த போதிலும் இதனை பகடைக்காயாக உபயோகித்து சில அரசியல் கட்சிகளும் பல்வேறு அமைப்புக்களும் அரசியல் இலாபம் தேட முனைத்துள்ளன.
இவ்வாறான அமைப்புக்களுக்கும் கட்சிகளுக்கும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் வகையிலேயே ஜனாதிபதியினால் மேற்படி அறிக்கை தொடர்பாக ஆராயவென சுயாதீனக் குழு நியமிக்கப்படவுள்ளது. இக்குழு பக்கச் சார்பற்ற முறையில் அதனை ஆராய்ந்து ஜனாதிபதியிடம் அறிக்கை சமர்ப்பிக்கும்.
குழு முன்வைக்கும் அறிக்கையின் பிரகாரம் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கை தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு ஜனாதிபதியி னால் விரைவில் அறிவிக்கப்படும்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இம் மாநாட்டில் அமைச்சருடன் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க, ஜெனீவாவின் முன்னாள் உயர்ஸ்தானிகரும் புதுடில்லியின் புதிய உயர்ஸ்தானிகராக பதவியேற்க விருப்பவருமான பிரசாத் காரியவசம் உள்ளிட்ட ஐவர் கலந்து கொண்டனர்.
அறிக்கையின் முன்பக்க அட்டையில் “காங்கிரஸ¤க்கு சம்பவங்கள் தொடர்பான அறிக்கை” என்று தான் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் எந்தவொரு இடத்திலும் போர் குற்றங்கள் தொடர்பாக விபரிக்கப்படவில்லை.
இதன் மூன்றாம் பக்கத்தில் இலங்கையில் போர் குற்றங்கள் இடம்பெற்றதற்கான எந்த சாட்சியங்களும் இல்லையென தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டின் உயர்ஸ்தானிகராலயம் மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்கள் வெளியிட்ட தவறான கருத்துக்களை அடிப்படையாக வைத்தே காங்கிரஸ் இலங்கையில் போர்க் குற்றம் இடம் பெற்றிருப்பதாக விவாதத்தினை முன்னெடுத்திருக்க வேண்டுமெனவும் அமைச்சர் மகிந்த சமரசிங்க கூறினார்.
சர்வதேச யுத்த நீதிமன்றத்தில் இலங்கையை நிறுத்த வேண்டுமென்பதற்காக திட்டமிட்டு செய்யப்பட்ட சதியின் விளைவாகவே காங்கிரஸ¤க்கு இலங்கை அரசாங்கம் மீது சந்தேகம் எழுந்துள்ளது.
இன்று கல்லூரிக்கு சமூகமளித்த சமூக சேவைகள் மற்றும் சமூகநலத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இதனைத் தொடர்ந்து மாணவர்கள் மற்றும் பொது மக்களினால் புதிய அதிபர் மற்றும் அமைச்சருக்கு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள். இந்நிகழ்வில் போதகர்கள், பொதுமக்கள், பழைய மாணவர்கள்,மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
ஆந்திர எல்லையோர பகுதியில் 17
இலங்கை மீனவர்கள் கைது
கடலோர காவல் படையினர் ஆந்திர எல்லையோர பகுதியில் கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, அங்கு அத்துமீறி மீன் பிடித்துக் கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் 17 பேரைக் கைது செய்தனர்.
கைதான 17 பேரும் 3 படகுகளில் காசிமேடு மீன்பிடித் துறைமுகத்துக்கு அழைத்து வரப்படுவர் எனவும் அவர்களிடம் இருந்து 1500 கிலோ மீன் பறிமுதல் செய்யப்பட்டது எனவும் கூறப்படுகின்றது.
கைதான இலங்கை மீனவர்கள் 17 பேரும் காசிமேடு மீன்பிடித் துறைமுகப் பொலிசாரிடம் ஒப்படைக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.இலங்கை, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையே ஒப்பந்தம் ஒன்று கைசாத்திடப்பட்டுள்ளது. இலங்கையில் யுத்த சூழலையடுத்துத் தற்போது அமைதி நிலவுகிறது.
இந்தச் சூழ்நிலையில் இன்னுமொரு பயங்கரவாதம் உருவாகாமலும் மனித உரிமை பாதுகாப்பையும் நோக்கமாகக் கொண்டே இவ்வொப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக இன்று இது தொடர்பாக இடம்பெற்ற வைபவத்தில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லகம தெரிவித்தார்.
மேற்படி வைபவம் இன்று காலை வெளிவிவகார அமைச்சு அலுவலகத்தில் இடம்பெற்றது.
இரு நாடுகளுக்குமிடையில் இடம்பெற்ற முதலாவது ஒப்பந்தம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், சுற்றுலாத்துறை, மனித உரிமை என்பன தொடர்பாக ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்கி வி. லவ்ரோவ் உடன் இவ்வொப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது