7 அக்டோபர், 2009

07.10.2009 தாயகக்குரல் 22

அரசியல் கட்சிகளிடையே கூட்டணி அமைப்பது பற்றிய செய்திகளே இலங்கை ஊடகங்களில் இப்போது முக்கியத்துவம் பெற்றுள்ளன. கட்சிகளிடையே கூட்டணி அமைக்கும் முயற்சிகளில் பலரும் பலவித நோக்கங்களுடன் செயல்படுகின்றனர். ஆனால் கொள்கை உடன்பாடு இல்லாமல் சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு அமையும் கூட்டணிகளால் நிலைத்து நிற்கமுடியாது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷாவின் அரசாங்கத்தை குறிப்பிட்ட காலத்துள் வீழ்த்தியே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு எதிர்க்கட்சிகளை ஐக்கிய தேசியக் கட்சியின்கீழ் ஒன்றுபடுத்துவது என்று மங்கள சமரவீர தீவிர முயற்சியில் இறங்கியுள்ளார். மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி, முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய தமிழ் பேசும் மக்கள் சார்ந்த கட்சிகள் ஏற்கனவே ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து நடந்து முடிந்த சில தேர்தல்களில் போட்டியிட்டுள்ளன. தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் இந்தக் கூட்டணியில் இணைக்கும் முயற்சியில் மேல்மட்ட பேச்சுவார்த்தை பலமுறை நடைபெற்றுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.


நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாமல் செய்வது என்ற அடிப்படையில் ஒரு கூட்டுக்குள் கொண்டுவர ஏனைய கட்சிகளை ஐக்கிய தேசியக் கட்சி அணுகிவருகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டு சேரமுடியாது என்ற போதிலும் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பது தொடர்பாக ஜே.வி.பி.யும் ஐ.தே.கட்சியை ஆதரிக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழ் கட்சிகளை ஒரு பொது வேலைத்திட்டத்தின் அடிப்படையில் இணைக்கும் முயற்சிகள் சில புலம்பெயர் தமிழர்களால் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அந்த இணைப்பு முயற்சிகளுக்கு என்ன நடந்தது என்பது தெரியவில்லை. ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அந்த முயற்சிகளை பின்போட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.


தெற்கில் ஐக்கிய தேசியக் கட்சியையும் வடக்கு கிழக்கில் தமிழர் விடுதலைக் கூட்டணியையும் தமது நேசக் கட்சிகளாக கொண்டு செயல்பட்டு வந்த தமிழ் புத்திஜீவிகள் என்று கருதப்படுகின்ற சிலர் தமிழ் மக்கள் பிரச்சினை குறித்து தமிழ்க் கட்சிகள் ஒன்றுபட்டு குரல் கொடுக்கவேண்டும் என்று அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ் தேசியக் கூட்டமைப்பாகி புலிகளின் சார்பில் பாராளுமன்றத்துக்கு சென்றதை தொடர்ந்து தமிழ் புத்திஜீவிகள் தமிழ் தேசியத்தின் பெயரால் புலிகள் மேற்கொண்ட தவறான நடவடிக்கைகளை மௌனத்தின்மூலம் அங்கீகரித்தனர். சிலர் பத்திரிகைகளில் புலிகளின் தவறான நடவடிக்கைகளை நியாயப்படுத்தியும் கட்டுரைகள் வரைந்துள்ளனர். புலிகள் வெல்லப்பட முடியாதவர்கள் என்ற நம்பிக்கையிலேயே இந்த புத்திஜீவிகளும் இனப்பிரச்சினை தொடர்பாக புலிகளின் செயற்பாடுகளை கடந்த காலங்களில் ஆதரித்து வந்திருக்கலாம்.


கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து அவர்கள் 2001ம் ஆண்டு கடைசியில் ~~பலய|| என்ற சஞ்சிகைக்கு அளித்த பேட்டியில் ~அதிகாரப் பரவலாக்கல் மூலம் பிரச்சினையைத் தீர்த்தால் எதிர்காலத்தில் ஐக்கியப்பட்ட நாடு ஒன்று உருவாகும். அத்தகைய ஐக்கியமான தேசம் ஒன்றுக்குள் ஒற்றையாட்சி நிலவ முடியாது. இலங்கையை ஒற்றையாட்சி கொண்ட ஒரு நாடாக பேணவேண்டுமாயின் செய்யவேண்டிய ஒரே காரியம் புலிகளை யுத்தம் செய்து முற்றாக அழிப்பது மாத்திரம்தான். அதை செய்ய முடியுமா? என்று கேட்டிருந்தார்.


புலிகள் ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு காண முன்வருவார்கள் என்று இவர்கள் நம்பியிருக்கலாம். ஆனால் அவர்கள் எதிர்பாராத விதத்தில் யுத்தத்தில் அவருடைய கேள்விக்கு விடை கிடைத்துவிட்டது. இன்று தென்னிலங்கையில் பெரும்பான்மையான கட்சிகள் ஒற்றையாட்சி பற்றி பேசுகின்றன.
யுத்தம் முடிந்து புலிகள் அழிக்கப்பட்ட நிலையில், முன்னர் புலிகளை ஏற்காததால் அரசின் ஒட்டுக் குழுக்கள் என்று விமர்சிக்கப்பட்ட தமிழ் கட்சிகளை அரசுடன் ஒட்டாதவர்கள் என்று சொல்லப்படும் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் ஒட்டவைத்து அரசுக்கு எதிராக குரல் கொடுக்க வைக்கும் முயற்சியிலேயே இந்த தமிழ் புத்திஜீவிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த முயற்சி ஐ.தே.கட்சி கூட்டில் இவர்களை இணைக்கும் முயற்சியின் முதல் படி என்ற விமாசனங்களும் வருகின்றன.


நடைமுறைப் பிரச்சினைகளில் ஒருமித்த குரல் கொடுக்க தமிழ் கட்சிகள் ஒன்றுபட்டால்; மட்டும் போதுமா. இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு யதார்த்தமான ஒரு பொது உடன்பாட்டுக்கு இந்தக் கட்சிகளால் வரமுடியாதா என்ற கேள்விகளும் மக்களிடம் இருந்து வர ஆரம்பித்துள்ளன.
வெளியில் உள்ள புத்திஜீவிகள் இந்த ஒட்டு வேலை முயற்சிகளில் ஈடுபடுவது ஒருபுறம் இருக்க தமிழ் முஸ்லிம் கட்சிகள் எல்லாம் சுயமாக ஒருவருக்கு ஒருவர் பேசி தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாக ஒரு பொது வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒருமித்து குரல் கொடுக்கவேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். இது எந்த அளவுக்கு வெற்றியளிக்கும் என்பது தெரியவில்லை.


தென்னிலங்கையைப் பொறுத்தவரை தமிழ் தேசியக் கூட்டமைப்பு புலிகளின் கட்சியாகவே பார்க்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பற்றிய சந்தேகம் இன்னமும் தென்னிலங்கை மக்களிடையே காணப்படுகின்றது. அண்மையில் பத்திரிகை பேட்டி ஒன்றில், ~தமிழ் தேசியக் கூட்டமைப்பு தென்பகுதியில் ஒரு இனவாத அமைப்பாகவே பார்க்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன| என்று கூட்டமைப்பு வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனிடம் பத்திரிகையாளர் கேட்டதற்கு அவர் பதிலளிக்கையில் ஒரு குறிப்பிட்ட அளவிலானோர் அவ்வாறு பார்க்கக்கூடும். இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. போர்காலத்தில் வெளியான தகவல்களால் மக்கள் குழம்பிபோயுள்ளனர். அதுபற்றிய சரியான தெளிவை எடுத்துக் கூறியுள்ளோம் எனக் கூறியுள்ளார்.


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் ஐக்கிய தேசியக் கட்சியும் இனப்பிரச்சினை தொடர்பான அவர்கள் நிலைப்பாடடில் இப்போது பெரிய வித்தியாசம் கிடையாது இனப்பிரச்சினை தொடர்பாக அரசியல் தீர்வு ஒன்றை சந்திரிகா தலைமையிலான பொதுசன ஐக்கிய முன்னணி பாராளுமன்றத்தில் கொண்டு வந்தபோது அதன் நகலை எரித்து எதிர்ப்பை காட்டியது ஐக்கிய தேசியக் கட்சி.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 1995ல் இனப்பிரச்சினைக்கு தீர்வாக வைத்த அரசியல் அதிகாரப்பரவலாக்கல் யோசனையை முற்றிலும் நிராகரிக்கும் விதத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சர்வகட்சி பிரதிநிதி குழுவிடம் தீர்வு யோசனைகளை முன்வைத்தது.


இந்த விதத்தில் தமிழ் மக்களைப் பொறுத்தவரை இரண்டு தேசியகட்சிகளும் தமிழ் தேசிய இனப்பிரச்சினையை தமது அரசியல் நலனுக்கு துரும்பு சீட்டாகவே பயன்படுத்துகின்றன.
தமிழ், முஸ்லிம் கட்சிகள் ஒன்றுபட்டு தமிழ் மக்கள் பிரச்சினைக்கு குரல் கொடுக்கவேண்டும் என்ற முயற்சியில் தாங்களாகவே ஈடுபடத் தொடங்கியதில் இருந்து இன்று தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகள் இவர்களுக்கு எந்தளவுக்கு நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ன என்பதையும் புரிந்து கொள்ளமுடிகிறது.

மேலும் இங்கே தொடர்க...
யாழ்.மாவட்டத்தில் மீள்குடியேற்றம் துரிதகதியில் இடம்பெறுவதாக அரசஅதிபர் தெரிவிப்பு-அனைத்து கட்சி குழுவொன்றை இலங்கைக்கு
அனுப்ப இந்திய தீர்மானம்

யாழ். மாவட்டத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் துரிதகதியில் இடம்பெற்று வருவதாக யாழ். அரசஅதிபர் கே.கணேஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ். மாவட்டத்தில் மீள்குடியேற்றம் மூன்று வகையாக இருக்கின்றது. 1வது யாழ். மாவட்டத்திலிருந்து கிராமங்களில் தங்கியிருந்த மக்கள், 2வது யாழ். மாவட்டத்திலுள்ள நலன்புரி நிலையங்களிலுள்ள மக்கள், 3வது வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவரப்பட்டு மீள்குடியேற்றப்படும் மக்கள் ஆவர். இதன்படி தொகையாக பார்க்கும்போது கிராமங்களிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் 433குடும்பங்களைச் சேர்ந்த 1550பேராவர். இவர்கள் மணல்காடு, அல்லைப்பிட்டி, மண்கும்பான் பகுதிகளில் மீள்குடியேற்றப்படவுள்ளனர். அதுபோல் யாழ். நலன்புரி நிலையங்களிலுள்ள மக்கள் 1345பேர் சகல பிரதேச செயலகப் பிரிவுகளிலும் மீள்குடியேற்றப்படவுள்ளனர். வவுனியாவிலிருந்து அழைத்துவரப்பட்ட 1632குடும்பங்களைச் சேர்ந்த 5152பேர் நெடுந்தீவு, ஊர்காவற்துறை, வேலணை, காரைநகர் ஆகிய பிரதேசங்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

அனைத்துக் கட்சி குழுவொன்றை இலங்கைக்கு அனுப்புவதற்கு இந்திய மத்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இடம்பெயர்ந்தோர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருப்போர் நிலைமைகளை நேரடியாகப் பார்வையிடும் பொருட்டே இந்தக்குழு இலங்கை வரவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தியாவின் பல்வேறு கட்சிகளும் முகாம்களில் தங்கியுள்ள மக்களின் நிலைமைகள் தொடர்பில் ஆராயும் பொருட்டு நாடாளுமன்றக் குழுவொன்றை இலங்கைக்கு அனுப்பி வைக்கவேண்டுமென தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையிலேயே நாடாளுமன்றத்தின் அனைத்துக் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவொன்றை அனுப்பிவைக்கும் தீர்மானத்தை இந்திய மத்திய அரசாங்கம் நேற்று வெளியிட்டுள்ளது. இதனையடுத்து அனைத்துக்கட்சிக் குழு இம்மாத இறுதியளவில் இலங்கைக்கு வரவுள்ளதாக தெரவிpக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...
இலங்கை முகாம்களில் உள்ள அகதிகளை உடனடியாக மீள்குடியமர்த்தமுடியாது-இந்திய வெளிவிவகார அமைச்சர் கிருஷ்ணா

இலங்கைஇந்திய கடற்படையினர் இணைந்து கூட்டுப் பயிற்சி 300 வீரர்கள் பங்கேற்பு; கப்பல்களும் வருகை



இந்தியக் கடற்படையினர் இலங்கையில் மூன்று நாள் கூட்டுப்படைப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். "கெடெக்ஸ் 2009' என்ற பெயரில் இலங்கையின் மேற்குக் கடல் பகுதிகளில் நேற்று ஆரம்பமான இந்தக் கூட்டுப்பயிற்சி, நாளை வியாழக்கிழமை நிறைவடையவுள்ளன.

இந்தக் கூட்டுப்பயிற்சியில் இந்திய கடற்படை அதிகாரிகள் உள்ளடங்களாக 300 வீரர்களும் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐ.என்.எஸ்.ஷாதுல் மற்றும் இந்திய கரையோர பாதுகாப்புப் படைப் பிரிவுக்குச் சொந்தமான ஐ.சி.ஜீ.எஸ்.வருண ஆகிய இரு கப்பல்களும் பயிற்சிகளின் போது பயன்படுத்தப்படவுள்ளன. இதேவேளை இலங்கைக் கடற்படைக்குச் சொந்தமான சயுர மற்றும் சாகர ஆகிய இரு கப்பல்களும் போர்ப் படகுகள் மற்றும் அதிவேக தாக்குதல் படகுகளும் இதில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

இந்தப் பயிற்சிகளில் இலங்கைக் கடற்படையினருக்கு மேலதிகமாக திருகோணமலையில் அமைந்துள்ள கப்பல் மற்றும் சமுத்திர விஞ்ஞான பீடத்தில் பயிற்சி பெற்றுவருபவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர். இந்நிலையில் குறித்த பயிற்சியில் ஈடுபடுத்தப்படவுள்ள இந்தியக் கப்பல்கள் நேற்று முன்தினம் கொழும்பு துறைமுகைத்தை வந்தடைந்தன. அத்துடன் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுவதற்காக இலங்கைக்கு வருகை தந்த இந்திய கடற்படை அதிகாரிகள் இலங்கை கடற்படை சிரேஷ்ட அதிகாரிகளைச் சந்தித்து பயிற்சிகளை முன்னெடுப்பது தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடியுள்ளனர்.

இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு கூறியதாவது :

இந்திய கடற்படைக் கப்பல்களில் இலங்கை கடற்படை அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்குவதையும் அதன் மூலமாக கப்பல்களின் செயற்பாட்டுகள் தொடர்பான அறிவைப் பகிர்ந்துக் கொள்வதும் அதனைப் பலப்படுத்துவதும் இந்த பயிற்சித் திட்டத்தின் நோக்கமாகிறது. இதற்குப் பிரதி உபகாரமாக இந்தியக் கடற்படையினர் இலங்கை முப்படைகளினதும் இராணுவ பயிற்சி நிலையங்களின் செயற்பாடுகளை பரீட்சயமடைவதற்கு வாய்ப்பு வழங்கப்படுகின்றது.

அத்துடன் இரு நாடுகளுக்குமிடையிலான இந்த கூட்டுப் படைப் பயிற்சியை மேலும் பலப்படுத்தும் முகமாக இலங்கையிலுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, கலாசாரப் பின்னணியைக் கொண்ட இடங்களுக்கு சென்றுப் பார்வையிடுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கின்றது. தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் கூட்டுப்படைப் பயிற்சி இரு நாடுகளின் கடற்படையினருக்கம் இடையில் காணப்படும் பரஸ்பர ஒத்துழைப்பினையும் இரு அயல் நாடுகளுக்குமிடையிலான நீண்ட கால இருபக்க உறவுகளையும் பிரதிபலிக்கின்றது

இலங்கை முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள 2.5 லட்சம் தமிழர்களை அவர்களின் சொந்த இடங்களில் உடனடியாகக் குடியேறச் செய்யமுடியாது என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்துள்ளார். பெங்களூரில் நடை பெற்ற செய்தியாளர் மாநõடடொன்றில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கை அகதிகள்தொடர்பில் மேலும் அவர் கூறுகையில், இலங்கை அகதிகளுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்கவேண்டும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கோரியுள்ளார் .இலங்கைத் தமிழர்கள் இரண்டரை இலட்சம் பேர் அங்குள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மறு வாழ்வு வழங்கும் படி இலங்கை அரசை வலியுறுத்தி கேட்டுள்ளோம். இலங்கையும் இதற்கு ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால் இதனை உடனடியாக செயற்படுத்த முடியாது..

இலங்கைத்தமிழர் வாழும் பகுதிகளில் பருவ மழை பெய்து வருகின்றது.மேலும் கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளும் நடை பெற்று வருகின்றன. இந்த பகுதிகளில் மீண்டும் குடி யேறலாம் என்று திருப்தி தெரிவிக்கும் பட்சத்திலேயே அவர்களின் குடியேற்றம் சாத்தியமாகும் என்றும் அவர் சொன்னார்
மேலும் இங்கே தொடர்க...
இடம்பெயர்ந்தோரை பருவப்பெயர்ச்சி மழைக்கு முன் வேறு இடங்களிற்கு மாற்ற வேண்டும்-ஐ.நா



பெயர்ச்சி மழைக் காலம் ஆரம்பிப்பதற்கு முன்னர் இடம்பெயர்ந்தோரை வேறு இடங்களில் பாதுகாப்பாக தங்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபை கோரிக்கை விடுத்துள்ளது.

வவுனியா மெனிக்பாம் முகாம்களில் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்தோரை வேறும் இடங்களில் தங்க வைக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

கடும் மழை பெய்யக் கூடிய சாத்தியம் இருப்பதாகவும், முகாம் வாழ் மக்கள் பல்வேறு சுகாதார பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது காணப்படும் வடிகாலமைப்பு முறையின் காரணமாக முகாம்களில் வெள்ள அபாயம் ஏற்படக் கூடிய வாய்ப்பு மிகவும் அதிகமாகக் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

இடம்பெயர் மக்களை வேறு இடங்களில் தங்க வைக்கும் செயன்முறையின் போது மக்களின் சுதந்திரமான நடமாட்டத்தினயும் அரசாங்கம் உறுதி செய்ய வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களிற்கான பொறுப்பாளர் ஜோன் ஹோல்ம்ஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்
புத்தளத்தில் ஹோட்டலொன்றில் வாள் வெட்டு சம்பவம்;ஒருவர் காயம்



புத்தளம் நிவ்செட்ல்மென்ட் வீதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவமொன்றில் ஒருவர் வாள்வெட்டு காயங்களுக்குள்ளான நிலையில் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிக்கப் ரக வாகனமொன்றில் வந்த சிலர் வாள்களுடன் கடைக்குள் புகுந்து கடுமையாக கடையில் இருந்த கடை உரிமையாளரின் மகனை இரும்பு தடிகளால் தாக்கியதையடுத்து,இந்த வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளளது.

இது குறித்து புத்தளம் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.இத் தாக்குதல் சம்பவத்தினால் ஹோட்டலிலுள்ள பொருட்களுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் புத்தளம் பெலிஸார் தெரிவித்தனர்.
மேலும் இங்கே தொடர்க...
மட்டக்களப்பில் சட்டவிரோதமாக மரம் வெடுபவர்கள் மீது நடவடிக்கை-எடிசன் குணத்திலக்க



மாவட்டத்தில் சட்ட விரோதமான முறையில் மரங்களை வெட்டுபவர்கள் மீதும் ,விற்பனை செய்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் எடிசன் குணத்திலக்க சகல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.

சட்ட விரோதமான முறையில் மரங்கள் வெட்டுவதால் காடுகள் அழிக்கப்படுவதாகவும் ,இவற்றிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் பிரதேச செயலாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் நேற்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் உள்ளுராட்சி சபைத் தலைவர்கள் ,பிரதேச செயலாளர்கள் ,பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் உட்பட பலரும் கலந்துகொண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் தற்போதைய நிலவரம் குறித்து ஆராய்ந்ததோடு கருத்துக்களையும் வெளியிட்டனர்.

இக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி ஏறாவூர் மற்றும் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையங்கள் முன்பாக உள்ள பிரதான வீதி அடுத்த சில நாட்களில் பொது மக்கள் போக்குவரத்திற்காக திறக்கப்படவுள்ளது.இதனை பிரதி பொலிஸ் மா அதிபர் அறிவித்தார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலுள்ள பிரதான நுழைவாயில்களில் தற்போது ஒரு வாயிலே பொது மக்கள் பாவனைக்காக திறக்கப்பட்டுள்ளதால் பொது மக்கள் ,நோயளர்கள் எதிர்நோக்கும் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு வைத்தியசாலை நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு ஏனைய வாயில்களையும் திறப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வாகரை ,களுவாஞ்சிக்குடி ,போரதீவு ஆகிய பிரதேசங்களில் சட்டவிரோத மது உற்பத்தியும் விற்பனையும் அதிகரித்து வருவதால் அவற்றிக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது என்றும் இக்கூட்டத்தில் மற்றுமொரு தீர்மானமும் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...
வவனியா நலன்புரிநிலையங்களிலிருந்து விடுவிக்கப்பட்டவர்கள் யாழ்



கடந்த ஒரு வார காலத்திற்க்கு முன்னர் வவனியா நலன்புரி நிலையங்களில் இருந்து விடுவிக்கப்பட்டு யாழ்ப்பாணத்தறிக்கு திரும்ப முடியாது வவுனியாவில் தவித்தவாகள் யாழ்ப்பாணத்திற்க்கு நேற்று முந்தினம் இரவு வந்து சேர்ந்துள்ளார்கள்.

வன்னியில் இருந்து இடம் பெயர்ந்து வவுனியா நலன் புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டு விடுகளுக்கச் செல்ல அனுமதிக்கப்பட்டு 398 பேர் நேற்று இரவு தனியார் வாகணங்களில் யாழ்ப்பாணம் அழைத்து வரப்பட்டுள்ளார்கள்.

கடந்த ஒரு வாரத்திற்க்கு முன்னர் வவுனியா இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டு இருந்த கார்ப்பினப் பெண்கள் தமது உறவினர்களின் வீடுகளில் தங்குவதற்க்காக முகாம்களில் இரந்து விடுவிக்கப்பட்டு இருந்தனர். இவாகள் உடனடியாக யாழ்ப்பாணம் வர முடியாத நிலமையில் குறிப்பாக போக்குவரத்து வசதிகள் செய்யப்படாமையால் வவுனியா சிவன் கோவிலில் தங்க வைக்கப்பட்டு வந்தனர். இவாகளின் அவலமான நிலமையைக் கருத்தில் கொண்ட அரச சார்பற்ற நிறுவனமான ஜ.ஓ.எம். நிறுவனம் மேற் கொண்ட நடவடிக்கை காரணமாக 96 கற்ப்பினிப் பெண்கள் குழந்தைகள் சிறுவாகள் உட்பட 398 பேர் தனியார் பஸ் வண்டிகள் மூலம் நேற்று முன்தினம் இரவு அழைத்துவரப்பட்டு தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.

இவாகளுக்கு வேண்டிய உண்வு வசதிகள் யாவும் நேற்று இரவும் இன்றும் தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலய நிர்வாகத்தினரால் வழங்கப்பட்டுள்ளது யாழ் மாவட்ட செயலக புனர் வாழ்வுப் புகுதியினர் நன்பகல் நேரத் ஆலயத்திற்க்கு வருகைதந்து வந்தவாகளின் பதிவுகளை மேற்க ;கொண்டு தமது இருப்பிடங்களுக்கும் மற்றும் உறவினர்களின் வீடுகளுக்கும் செல்ல அனுமதித்துள்ளாhகள் தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலய நிர்வாகத்தினால் குழற்தைகளுக்கான தைத் ஆடைகளும் வழங்கப்பட்டன நேற்று இரவு ஆலயத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்த பெண் ஒருவர் குழந்தை பிரசவிப்பதற்க்கான அறிகுறிகள் காணப்பட்டதைத் தொடர்ந்து உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலைக்கு தெல்லிப்பளை ஆதார வைத்திய சாலை அம்புலன்ஸ் வண்டி மூலம் எடுத்துச் செ5ல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டள்ளார் இன்று காலையும் வைத்தயிசாலையில் ஒரு பெண் அனுமதிக்கப்ட்டுள்ளமையும் குறிப்பி;டத்தக்கதாகும்.
மேலும் இங்கே தொடர்க...