13 செப்டம்பர், 2010

பேச்சுவார்த்தை என்று அழைக்கபட்டு புலிகளால் நய வஞ்சமாக படு கொலை செய்யப்பட்ட புளொட் உறுப்பினர்கள்













தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் அரசியற் செயலாளர் வாசுதேவா (வாசு), படைத்துறைச் செயலாளர் ஜோதீஸ்வரன் (கண்ணன்), பாவானந்தன் (சுபாஸ்), ஆனந்தன், மற்றும் பலரின் 23ம் ஆண்டு நினைவுநாள்.

1987ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 13ம் திகதி காலை புளொட் இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்களான வாசுதேவா, கண்ணன், சிவராம் (தராக்கி), ஆகியோர்கள் தங்கியிருந்த வாசுதேவாவின் அக்கா வீட்டிற்கு சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்களான பொட்டம்மான், கருணா (ஸ்ரீலங்கா அரசின் தற்போதைய மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்), கரிகாலன், சித்தா உள்ளிட்ட புலிகளின் பிரதிநிதிகள் புளொட் இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நாடாத்தி காலை உணவினை வாசுதேவாவின் சகோதரியின் இல்லத்தில் ஒண்றாக இருந்து அருந்தி மத்தியானச்சாப்பாட்டிற்கு தங்களது அலுவலகத்திற்கு வருமாறு அழைப்புவிடுத்து கைகுலுக்கி சென்ற புலிகளின் நயவஞ்சகத்தன்மையை அறிந்திராத புளொட் அமைப்பினர் மத்தியானம் சாப்பாட்டிற்கு வருவதற்கு ஒப்புதலும் வழங்கினார்கள்.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தினூடாகத்தன்னும் அனைத்து இயக்கங்களும் ஒண்றிணைந்து செயற்பட வேண்டிய அவசியத்தை உணர்ந்த புளொட் இயக்கத்தினர் ஒற்றுமை என்ற போர்வையில் தமிழீழ விடுதலை இயக்க தலைவர் சிறீ சபாரத்தினத்திற்கு நேர்ந்த நிலைமையை உணராமல் போனது வேதனையான விடயமே.

இந்தத்தருனத்தில் புலிகளை முழுமையாக நம்பமுடியாது பாதுகாப்பிற்காகத்தன்னும் சில ஆயுதங்களையும் தொலைத்தொடர்பு சாதனங்களையும் எடுத்துச்செல்லவேண்டும் என வற்புறுத்திய பவனின் ஆலோசனையும் (தற்போது கனடாவில் இருக்கின்றார்) வாசுதேவாவின் புலிகள் அப்படி செய்யமாட்டார்கள் என்ற மித மிஞ்சிய நம்பிக்கையால் கைவிடப்பட்டது.

இதில் இன்னோர் விடயத்தையும் சொல்லியாகவேண்டும் புலிகளுடனான மத்தியான சந்திப்பில் சிவராமும் கலந்து கொள்வதாகவே ஏற்பாடு செய்யப்பட்ட போதிலும் வாசுதேவா, கண்ணன் ஆகியோர் பாசிக்குடா சென்ற சமயம் சிவராம் யாருக்குமே சொல்லாமல் கொழும்பிற்கு பஸ்ஸில் புறப்பட்டு சென்றுவிட்டார்.

நடைபெற இருக்கும் விபரீதத்தை சிவராம் முன்கூட்டியே அறிந்திருந்தாரோ என்ற சிந்தனை எனக்கு நீங்கவில்லை. இவ்விடயம் சம்பந்தமாக மாணிக்கதாஸனிடம் வினவியபோது அந்தச் சந்தேகம் தனக்கும் இருப்பதாக சொல்லியிருந்தார் என்பதை விட சிவராமை த்ற்செயலாக சந்தித்தபோது அவரிடமே எனது கேள்வியைக்கேட்க இப்படி எத்தனை கதைகள் வரும் என மட்டுமே சிவராம் பதிலளித்தார்.

பாசிக்குடாவில் இருந்து புலிகளின் அலுவலகம் நோக்கிப்புறப்பட்ட வாசுதேவா, கண்னன், சுபாஸ், ஆனந்தன் உள்ளிட்ட புளொட் இயக்க உறுப்பினர்கள் கிரான் சந்தியில் இவர்களை எதிர்பார்த்திருந்த புலிகளினால் படுகொலை செய்யப்பட்டது மட்டுமல்லாமல் அனைவரது உடல்களையும் வேறு இடத்திற்கு எடுத்துச்சென்று எரித்தும் முடித்தார்கள் புலிகள்.

இச்செய்தி மட்டக்களப்பு முழுவதும் பரவத்தொடங்கியதும் ஒருவித பதட்டநிலை உருவானதையும் தெளிவாக அறிந்த புலிகளின் தலைமைகள் தலைமறைவாக சித்தா என்பர் மட்டுமே மட்டக்களப்பில் இருந்த புலிகளின் அலுவலகத்தில் தங்கியிருந்தார்.

ஒரேதினத்தில் பல தடவைகள் சித்தாவை சந்தித்து புளொட் இயக்க உறுப்பினர்களின் உடல்களையாவது தாருங்கள் என வாசுதேவாவின் உறவினார்கள் சித்தாவைக்கேட்டபோதும் எந்தவிதமான பதில்களையும் சித்தாவினால் வழங்கமுடியாற்போனது. அடுத்தநாள் காலை புலிகளின் மட்டக்களப்பு அலுவலம் வாசுதேவாவின் உறவினர்கள் நன்பர்கள் பலரினால் முற்றுகையிடப்பட்டு ஏற்றப்பட்டடிருந்த புலிக்கொடியும் வாசுதேவாவின் உறவினர்களால் கழட்டி எறியப்பட்டது.

கொடி களட்டப்பட்டதும் மிகவும் கோபமடைந்த சித்தா இன்னும் பலருக்கு மோசமான விளைவுகள் ஏற்படாமல் தடுப்பதென்றால் இங்கிருந்து செல்லுங்கள் என உரக்கக் கத்தியபோது வாசுதேவாவின் உறவினர்களால் பலவந்தமாக தரையில் தள்ளப்பட்டு தாக்குதலுக்கும் இலக்கானார்.

மிகவும் கேவலாமாக நயவஞ்சகமான முறையில் புலிகளினால் படுகொலை செய்யப்பட்டவர்கள் எத்தனையாயிரம்?

அந்த நிலைதான் இறுதியாக நந்திக்கடலிலும் நடந்தேறியது.கப்பல் வரும் எனக் காத்திருந்ததும் ஹெலிவாங்கத்திட்டமிட்டதும் அதே பாணியில் நடந்தேறிய சம்பவங்களே.(நம்பிக்கைத் துரோகம்
மேலும் இங்கே தொடர்க...

அரேபியாவில் இருந்து பிலிப்பைன்ஸ் சென்றபோது விமானத்துக்குள் ரகசியமாக ஆண் குழந்தை பெற்ற பெண்; குப்பை தொட்டிக்குள் வீசிவிட்டு ஓட்டம்









அரேபிய நாட்டில் இருந்து பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவுக்கு பயணிகள் விமானம் வந்தது. அதில் இருந்த பயணிகள் அனைவரும் கீழே இறங்கி சென்று விட்டனர். இதை தொடர்ந்து விமானத்துக்குள் இருந்த குப்பைத் தொட்டியை சுத்தம் செய்ய துப்புரவு ஊழியர்கள் அதை வெளியே எடுத்து வந்தனர்.

விமானத்தை விட்டு இறங்கியதும் அந்த குப்பையை ஊழியர்கள் தரம் பிரித்தனர். அப்போது அதில் சிறிது நேரத்துக்கு முன்பு பிறந்த ஆண் குழந்தை ஒன்று டிஷ்சு பேப்பரில் சுற்றப்பட்ட நிலையில் கிடந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் விமான நிலைய டாக்டருக்கு தகவல் கொடுத்தனர். உடனே நர்சுடன் டாக்டர் அங்கு விரைந்து வந்தார். பேப்பரில் சுற்றப்பட்டிருந்த அந்த குழந்தையை வெளியே எடுத்தனர்.

அக்குழந்தை சிறிது நேரத்துக்கு முன்புதான் பிறந்திருக்க வேண்டும். உடல் முழுவதும் ரத்தம் கூட காயாமல் அப்படியே இருந்தது. விமானத்தில் பயணம் செய்த ஒரு பெண் பயணி ரகசியமாக குழந்தை பெற்று அதை குப்பை தொட்டியில் வீசியது தெரியவந்தது.

உடனே அக்குழந்தையை மணிலா விமான நிலைய ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து நர்சுகள் சுத்தம் செய்தனர். மேலும் உடலை பரிசோதித்தனர். அது மிகவும் உடல் நலத்துடன் உயிருடன் இருந்தது.

இதைத்தொடர்ந்து அந்த குழந்தைக்கு பாட்டில் மூலம் பால் கொடுக்கப்படடது. அதை குடித்தவுடன் அக்குழந்தை லேசாக அழ தொடங்கியது. பின்னர் அக்குழந்தை நினோய் அகினோ ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டு சமூகசேவகர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதற்கிடையே விமானத்தில் கள்ளத்தனமாக குழந்தை பெற்று அதை குப்பை தொட்டியில் வீசி சென்ற பெண்ணை கண்டு பிடிக்கும்படி பிலிப்பைன்ஸ் சமூக நலத்துறை செயலாளர் சரிமன் உத்தரவிட்டுள்ளார்.

அப்பெண் யார் என கண்டறிந்து அவளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும், இது ஒரு கிரிமினல் குற்றம் என்றும் அவர் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

அகதிகளின் தகவல் அடங்கிய கணினி திருட்டு : கனேடியத் தமிழ் காங்கிரஸ் தகவல்

சன் சீ கப்பல் மூலம் கனடாவை சென்றடைந்த இலங்கை அகதிகளின் தகவல்கள் அடங்கிய கணினி திருடப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அகதிகளின் பயண ஆவணங்கள், தொடர்பு எண்கள், பிறப்பு சான்றிதழ்கள் என்பனவும் திருடப்பட்டுள்ளன.

டொரன்டோவில் காரியாலயத்தினுள் கடந்த சனிக்கிழமை புகுந்த சிலர், இலங்கை அகதிகள் குறித்த தகவல்கள் பதியப்பட்டிருந்த கணினியை திருடிச் சென்றுள்ளாதாக தமிழ்த் காங்கிரஸ் குற்றம் சுமத்தியுள்ளது.

சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கும் ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்குமிடையிலேயே இத்திருட்டு இடம்பெற்றுள்ளதாகத் கனேடியத் தமிழ்க் காங்கிரஸ் தலைவர் டேவிட் பூபாளபிள்ளை தெரிவித்துள்ளார்.

கனேடிய குடிவரவு மற்றும் அகதிகள் சபை இலங்கை அகதிகள் குறித்த விவரங்களைத் திரட்டுவதற்குத் தடைவிதித்திருந்தது.

இந்நிலையிலேயே இந்தத் தகவல்கள் திருடப்பட்டுள்ளன எனவும், இதனால் அகதிகளின் பாதுகாப்பு குறித்து அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

காரியாலயத்தினுள் அத்துமீறி நுழைந்து சிலர் குறித்த தகவல்களைத் திருடிச் சென்றுள்ளமையை, டொரன்டோ காவற்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இது ஒரு திட்டமிடப்பட்ட திருட்டு என தெரிவித்துள்ள அவர், மேற்படிக் காரியாலயத்தில் பல கணினிகள் இருந்த போதும், குறித்த தகவல்கள் அடங்கியது மட்டும் திருடப்பட்டிருப்பது குறித்தும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

இந்தத் தகவல்களின் அடிப்படையிலேயே இலங்கையில் உள்ள அகதிகளின் குடும்பங்கள், அவர்களுடன் தொடர்புகளை பேணி வந்தனர். எனவே உடனடியாக இது தொடர்பாகத் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.
மேலும் இங்கே தொடர்க...

ஐ.தே.க. தலைமையகத்துக்கு முன்னால் மாகாண சபை உறுப்பினர்கள் சத்தியாக்கிரகம்?

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நிலவி வருகின்ற பிரச்சினைகளுக்கு சரியான தீர்வு எட்டப்படுகின்ற வரையில் கட்சியின் தலைமையகத்துக்கு முன்னால் சத்தியாக்கிரகப் போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தென் மாகாண சபை உறுப்பினர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த போராட்டம் தொடர்பில் இன்று திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நம்பகரமான வட்டாரங்களில் இருந்து தெரிய வந்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நிலவுகின்ற பிரச்சினைகளுக்கு அதன் தலைமைத்துவம் தீர்வு காண்பதற்கு எத்தகைய நடவடிக்கையும் எடுக்கவில்லையெனத் தெரிவித்து அக்கட்சியின் எம்.பி.க்கள், மாகாண சபை, பிரதேச சபை உறுப்பினர்கள் என சகல தரப்பினரும் அதிருப்தி வெளியிட்டு வருகின்ற நிலையிலேயே கட்சியின் தலைமையகத்துக்கு முன்னால் இந்த சத்தியாக்கிரகப் போராட்டமும் ஏற்பாடாகியுள்ளதாக கூறப்படுகின்றது.

இது இவ்வாறிருக்க, கடந்த 8 ஆம் திகதி புதன்கிழமை ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ஆறு எம்.பி.க்கள் அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட அதேவேளை மேலும் 25 எம்.பி.க்களைக் கொண்ட குழு பாராளுமன்றத்தில் தனித்து செயற்படவிருப்பதாகவும் அந்தக் குழுவிலிருந்தே எதிர்க்கட்சித் தலைவர் ஒருவரை தெரிவு செய்ய விருப்பதாகவும் அந்தக் குழு அறிவித்துள்ளது.

அத்துடன் கட்சியை வெற்றிப் பாதையில் இட்டுச் செல்வதற்கோ அல்லது உள் வீட்டுப் பிரச்சினைகளுக்கு தீர்வினை எட்டுவதற்கோ தலைமைத்துவம் ஆக்கபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளாதிருப்பதாக குற்றம் சாட்டியுள்ள மாகாண சபை உறுப்பினர்கள் தலைமைத்துவத்தை மாற்றியமைத்து கட்சியை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முகமாகவே இந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தை நடத்தவிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

வடக்கில் மீள்குடியேற்றப்படுள்ள மக்களை இயற்கை அனர்த்தத்திலிருந்து பாதுகாக்கவும்:சுரேஷ் எம்.பி.

வடக்கில் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தினால் செய்து கொடுக்கப்பட்டுள்ள வசதிகள் போதுமானதாக இல்லை.

அந்த மக்கள் தொட ர்ந்து பல்வேறு துன்பங்களை அனுபவித்துக் கொண்டு வருகின்றனர். எதிர்வ ரும் மாதங்களில் மீண்டுமொரு அனர்த்தத்திற்கு அம்மக்கள் முகம் கொடுக்க நேரிடும்.

அவ்வனர்த்தத்திலிருந்து பாதுகாப்பதற்கு அரசாங்கம் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கிளிநொச்சி மற்றும் முல்லை தீவு மாவட்டங்களில் மீள் குடியேற்றப்பட்ட மக்களில் 90 சதவீதமானவர்கள் இன்னும் தற்காலிக கூடாரங்களிலேயே தங்கவைக்கப் பட்டுள்ளனர். அடிப்படை வசதிகளற்ற அவர்களின் நிலை பரிதாபகரமாகவுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் ஏ.எச்.எம் பௌசி தலைமையில் யாழ். செயலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட போதே பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் மேற்கண்ட கோரிக்கையை முன்வைத்தார்.

இந்த கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவர் சந்திரகுமார் மற்றும் யாழ் அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

யாழ் அபிவிருத்தி தொடர்பில் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் அமைச்சர்கள் கருத்துகளை கேட்டறிந்து கொண்டதுடன் அரசாங்கத்தினால் முன்னெடு க்கப்படவி ருக்கி ன்ற எதிர்கால செயற்றிட்டங்கள் தொர்பிலும் தெளிவுப்படுத்தினர்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. மேலும் தெரிவிக்கையில்,

கிளிநொச்சி ,முல்லைத்தீவு பகுதிகளில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்கள் மீண்டும் ஒரு அனர்த்தத்தை எதிர்கொள்ளவுள்ளனர் அதற்கு இடர் முகாமைத்துவ அமைச்சு ஏனைய அமைச்சுக்களுடன் இணைந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

மழை பெய்வதற்குள் அந்த மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அவர் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய வேண்டும். தவறினால் மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்கள் மேலும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கவேண்டிய நிலைமை ஏற்படும். கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டவர்களில் 90 வீதமானவர்கள் தற்காலிக கூடாரங்கள் மற்றும் பொது மண்டபங்களில் தங்கியுள்ளனர்.

போதிய வசதிகளின்றி வாழ்கின்ற மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டியது அரசாங்கத்தின் பாரிய கடப்பாடாகும் வெறும் கூடாரங்களில் தங்களுடைய வாழ்வை கழித்து கொண்டிருக்கின்ற மக்கள் பல்வேறு சுகாதார சீர்கேடு களுக் கும் முகம்கொடுத்துகொண்டிருக்கின்றனர்.

மழையிலிருந்து மக்களை பாதுகாத்து பொது இடங்களில் தங்கவைப்பதற்கு பாடசாலைகளோ பொது மண்டபங்களோ இல்லை இருக்கின்ற மண்டபங்கள் மற்றும் பாடசாலைகள் கூரைகள் இல்லாமலேயே இருக்கின்றன. அவற்றை பெற்றுக் கொடுப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும். மீள்குடியேற்றப்பட்ட பகுதிகளில் கல்விசெயற்பாடுகள் கூட தற்காலிக கூடாரங்களிலேயே முன்னெடுக்கப்படுகின்றன மழை பெய்தால் கல்வி செயற்பாடுகளும் பாதிப்படையும் இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு இடர்முகாமைத்துவ அமைச்சு ஏனைய அமைச்சுகளுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதி மஹிந்த இவ்வாரம் நியூயோர்க் விஜயம்



ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாரம் நடுப்பகுதியில் நியூயோர்க்கிற்கு விஜயம் செய்யவிருக்கின்றார். ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெற விருக்கின்ற ஐ.நா.வின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காகவே அவர் நியூயோர்க்கிற்கு விஜயம் செய்யவிருக்கின்றார்.

ஐக்கிய நாடுகள் சபையின் உச்சிமாநாடு எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கின்றது. இந்த மாநாட்டில் ஈ மிலேனியம் அபிவிருத்தி இலக்குகள் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்படும்.

ஐக்கிய நாடுகளின் 65 ஆவது பொதுச்சபை அமர்வுகள் நாளை 14 ஆம் திகதி ஆரம்பமாகவிருக்கின்றன. எதிர்வரும் 20 திகதி சர்வதேச நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு நடைபெறும் அந்த மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றுவார்.

அமைச்சர்களின் பொது விவாதங்களுக்கான அமர்வுகள் உச்சிமாநாடு எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகும். உச்சி மாநாடடில் ஈ மிலேனியம் அபிவிருத்தி இலக்குகள் எனும் தலைப்பில் மட்டுமல்லாது காலநிலை மாற்றம், உணவு பாதுகாப்பு, பாதிக்கப்பட்ட நாடுகளின் மீளமைப்பு, பாதுகாப்பு சபை மறுசீராக்கல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்படவுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

பிரபல பாடகி சொர்ணலதா காலமானார்



இந்தியாவின் பிரபல பாடகி சொர்ணலதா நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்னையில் காலமானார். நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டிருந்த பாடகி சொர்ணலதா (37) சென்னை தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலமானார்.

கேரளா பாலக்காட்டை பூர்வீகமாகக் கொண்ட சொர்ணலதா 25 தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, உருது உட்பட பல மொழிகளில் கடந்த ஆண்டுகளாக பின்னணி பாடியுள்ளார்.

‘கருத்தம்மா’ படத்தில் ஏ. ஆர். ரகுமானின் இசையில் ‘போறாளே பொன்னுத்தாயி....’ எனும் பாடாலை பாடியதற்காக சொர்ணலதா தேசிய விருதும் பெற்றார். இவர் ஏறத்தாழ 7500க்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார்.

‘தளபதி’ பாடத்தில் ‘ராக்கம்மா கையைத் தட்டு...’, ‘சத்திரியன்’ படத்தில் ‘மாலையில் யாரோ மனதோடு பேச...’, ‘சின்னத்தம்பி’ படத்தில் ‘போவோமா ஊர்கோலம்’, ‘நீ எங்கே...’, ‘என் ராசவின் மனசிலே’ படத்தில் ‘குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே...’, ‘காதலன்’ படத்தில் ‘முக்காலா...’, ‘அலை பாயுதே’ படத்தில் ‘எவனோ ஒருவன்...’, ‘பம்பாய்’ படத்தில் ‘குச்சி குச்சி ராக்கம்மா...’, ‘இந்தியன்’ படத்தில் ‘மாயா மச்சிந்ரா...’ போன்றன. இவர் பாடிய பாடல்களுள் பிரபலமானவை. இவர் ஹார்மோனியத்திலும் சிறந்த பயிற்சி பெற்றவராவார்.
மேலும் இங்கே தொடர்க...

‘இங்குள்ள மக்களின் துன்பத்தின் மீதே புலம்பெயர் தமிழர்கள் வாழ்கின்றனர்’ ‘உண்மையைப் புரிந்துகொள்ளுங்கள்’ என்கிறார் லண்டன் நியூஹாம் உதவி மேயர் சத்தியநேச


யுத்தத்தினால் பாதிப்புற்ற மனங்களை மாற்றியமைத்து மீண்டும் அந்த மக்களை சமூகத்தின் நற்பிரசைகளாக மாற்ற வேண்டிய பொறுப்பு மாநகர சபைக்கும் உரியது. அதற்காகவும் அதேசமயம் அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்காகவும் அரசியல்வாதிகளும் உத்தியோகத்தர்களும் ஒருங்கிணைந்து தமது பணிகளை முன்னெடுக்க வேண்டும் என லண்டன் நியூஹாம் உதவி மேயர் போல் சத்திய நேசன் கூறினார்.

கடந்த வியாழக்கிழமை யாழ். மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தலைமையில் லண்டன் நியூஹாம் நகர உதவி மேயருக்கு யாழ். மாநகர சபை வரவேற்பு அளித்தது. யாழ். மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உதவி மேயர் போல் சத்தியநேசன் மேலும் கூறியதாவது :-

யுத்தத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள இந்த சமாதானம் நீடிக்க வேண்டும். அதன் மூலம் ஏற்படக்கூடிய அபிவிருத்தி நடவடிக்கைகள் பயனுள்ளதாக அமையும். அரசியல்வாதிகள் எல்லாவற்றையுமே அரசியலாக்க முற்படாத ஜனநாயகத்திற்கு மதிப்பளித்துச் செயற்பட வேண்டும்.

புலம்பெயர்ந்தவர்களால் உங்களுக்கு நன்மையும் செய்ய முடியும் தீமையும் செய்ய முடியும். அவர்கள் இங்கே முத லீடுகளைச் செய்யக்கூடிய தருணம் இது. எனினும் இங்கே கிடைக்கக் கூடிய பென்சனை எப்படியும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் குறியாக இருக் கிறார்களே தவிர இங்குள்ள மக்களுக்கு நன்மை செய்ய நினைப்பதாக இல்லை. உங்களை நடுத்தெருவில் விட்டதே இந்தப் புலம் பெயர்ந்தவர்கள்தான். அவர்கள் அங்கு வாழ்ந்துகொண்டிருப்பதே இங்கேயுள்ள மக்களின் துன்பத்தில் தான் என்ற உண்மையை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

30 வருட யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும். சுகாதாரம், குடிதண்ணீர், மாநகர சபைக்கான கட்டடம் என்பவற் றிற்கான கோரிக்கைகளை முதல்வரும் ஆணையாளரும் உரையாற்றிய ஏனை யோரும் முன்வைத்துள்ளனர். பிரித்தானியா மக்களின் தேவை அபிவிருத்தி பற்றிச் சிந்திக்கிறதே தவிர கட்டடங்கள் பற்றிச் சிந்திப்பதில்லை. மாநகர சபைக்கான கட்டடத்தை அமைக்க இதர நாடுகளின் உதவியைக் கோரினால் நானும் அதற்கு உதவுவேன்.

யாழ்ப்பாணம் மாநகர சபையுடன் நில்லாது யாழ்ப்பாணம் மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கான ஒரு சபையை ஆரம்பித்து அதன் மூலம் உங்கள் தேவைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுங்கள் எனது ஒத்துழைப்பு நிச்சயம் கிடைக்கும்’

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

யாழ். மாநகர ஆணையாளர் மு. செ. சரவணபவ பேசும்போது கூறியதாவது,

எமது யாழ். நகரம் போரின் வடுக்களாக வடிகான்கள், வீதிகள் உட்பட சிதைந்த நிலையிலேயே உள்ளது. இவற்றையெல்லாம் புனரமைத்து மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய சேவைகளை நிறைவேற் றுவதென்பது கஷ்டமானதாகவே உள்ளது. அரசு மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் வர்த்தகர்களின் உதவிகள் கிடைத்தாலும் கூட முழுமையான செயற்பாடுகளை முன் னெடுக்க வெளி உதவிகள் தேவையாக உள்ளது. எமது நகரத்தை அழகும் தூய் மையும் கொண்டதாக மாற்றியமைக்கக் கூடியதாக உங்களது உதவிகள் தேவை. பிரிட்டன் இதற்கென உதவ நீங்கள் முயற்சி செய்வீர்கள் என எல்லோருமே எதிர்பார்க்கின்றோம்’ என்றார்.

மாநகர சபை செயலாளர் இ. இரத் தினசிங்கம், உறுப்பினர் இ. மங்களநேசன், பொறியியலாளர் என். சிவப்பிரகாசம் ஆகியோரும் பேசினர்.
மேலும் இங்கே தொடர்க...

ஒட்டுசுட்டான் செங்கல் உற்பத்தியை இரட்டிப்பாக்க அரசு நடவடிக்கை 50,000 வீடுகளை கட்டும் பணிக்கு செங்கற்களை பெறவும் திட்டம்


ஓட்டுசுட்டான் செங்கல் உற்பத்தியை இரட்டிப்பாக்கி அதன் மூலம் கிடைக்கப்பெறும் வருமானத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

செங்கல் உற்பத்தித் துறையை துரிதமாக மேம்படுத்தும் பொருட்டு ஐம்பது தொழிலாளர்களை உடனடியாக இணைத்துக்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தான் ஆலோசனை வழங்கியுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டானிலுள்ள செங்கல் உற்பத்தி சூளையை சென்று பார்வையிட்ட ஆளுநர் அதன் செயற்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டதுடன் தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகளுடனும் கலந்துரையாடியுள்ளார்.

தற்பொழுது, நாளொன்றுக்கு 8000 செங்கல்கள் உற்பத்தி செய்யப்படுவதுடன் 23 தொழிலாளர்களே சேவையில் ஈடு படுவதாகத் தெரிவித்த அவர்,

தற்பொழுது இதன் உற்பத்தியை இரட்டிப்பாக்கி, அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தையும் அதிகரிக்கத் தான் நடவடிக்கை எடுத்துள்ளதாகக் குறிப் பிட்டார்.

செங்கல் உற்பத்தியை மீள ஆரம்பிப் பதற்காக வட மாகாண சபை 20 இலட் சம் ரூபாவை ஏற்கனவே வழங் கியதாகத் தெரிவித்த அவர் தற்பொழுது இதன் செயற்பாடுகள் திருப்தியாகக் காணப்படு கிறதென்றார்.

வட மாகாணத்தில் இந்திய அரசின் உதவியுடன் 50 ஆயிரம் வீடுகளை கட்டும் பணிகளுக்கு இங்கிருந்தே செங்கற்களை பெற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளதாக ஆளுநர் மேலும் குறிப்பிட்டார்.

இதன் மூலம், இந்தப் பிரதேச தொழி லாளர்கள் மேலும் நன்மையடைபீயவுள் ளனர் என்றும் சுட்டிக் காட்டினார்.

ஆளுநரின் வழிகாட்டலில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரின் நேரடி கண் காணிப்பின் கீழ் கைத்தொழில் திணைக்க ளத்தின் கூட்டிணைப்பின் மூலம் இதன் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
மேலும் இங்கே தொடர்க...

1312 கைதிகள் நேற்று விடுதலை






சர்வதேச கைதிகள் தினத்தையொட்டி நேற்றைய தினம் நாடளாவிய ரீதியில் சிறைச்சாலைகளில் தண்டனை அனுபவித்து வந்த 1312 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பொது மன்னிப்புத் திட்டத்தின் கீழ் வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் சகல பகுதிகளிலுமுள்ள சிறைச்சாலைகளிலிருந்து இவர்கள் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் 37 பேர் பெண்களாவர் என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் வீ. ஆர். த சில்வா நேற்றுத் தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் சிறிய குற்றங்கள் புரிந்து சிறைத்தண்டனை அனுபவித்து வந்தோரே இவ்வாறு விடுவிக்கப்பட்டு ள்ளனரெனவும், நேற்றுக்காலை, பல்வேறு சிறைச்சாலைகளிலும் இக்கைதிகள் விடுவிப்பு நிகழ்வு இடம்பெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.

நேற்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்ட கைதிகள் தினத்தை சிறப்பாக்கும் வகையில் விசேட நிகழ்வொன்று கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் பிற்பகல் 4.00 மணிக்கு நடைபெற்றது.

பிரதமர் டி. எம். ஜயரத்னவின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றதுடன் அமைச்சர்கள், முக்கியஸ்தர்கள் பலரும் இதில் கலந்துகொண்டதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில்

(நெடுந்தீவு தினகரன், யாழ். விசேட நிருபர்கள்)

கைதிகள் தினத்தை முன்னிட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து 24 கைதிகள் விடுதலையாகி வெளியேறினார்கள்.

16 ஆண்களும் 4 பெண்களும் யாழ். சிறைச்சாலையில் இருந்து சிறை அதிகாரிகளினால் வெளியில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

24 கைதிகள் இன்று விடுவிக்கப்பட்டனர். இதில் பலாலி, வேலைத்தளத்தில் இருந்து 4 சிங்களவர்களும் அடங்கு கின்றனர்.

சிங்களக் கைதிகள் காலையில் அநு ராதபுரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட தாகவும் அவர்கள் அநுராதபுரத்தில் இருந்து தமது இடங்களுக்குச் செல்வார் கள் எனவும் சிறை அதிகாரிகள் தெரி வித்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

நிர்வாக சேவை ஆட்சேர்ப்பு; அரச ஊழியருக்கு வாய்ப்பு அதிகரிப்பு

அரச சேவை தொழிற்சங்கங்கள் அமைச்சர் ஜோன் செனவிரத்னவுடன் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து அரச ஊழியர்களின் பல முக்கிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.

இதற்கிணங்க அரச நிர்வாக சேவை ஆட்சேர்ப்பின் போது அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டிருந்த 20 வீதமான வாய்ப்பு 30 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் 2007 ஜுலை மாதத்திற்கு முன் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டவர்களுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ள இரண்டாவது மொழித்தேர்ச்சி நடைமுறையை நீக்குவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதன்படி அரச நிர்வாக சேவை ஆட்சேர்ப்புக்கான மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சைக்குத் தோற்ற இனிமேல் 30 வீதமான அரச ஊழியர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளன. அத்துடன் இத்தகையவர்கள் அரச நிர்வாக சேவை மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சைக்கு இரண்டு தடவையே தோற்ற முடியும் என்ற நிலை மாறுவதுடன் இவர்கள் நான்கு தட வைகள் மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சைக்குத் தோற்ற முடியும் என்ற தீர்மானமும் எடுக்கப்பட்டுள்ளது. கூட்டுத் தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவர் அலவி மெளலானாவின் தலைமையில் ஏழு தொழிற்சங்கச் கூட்ட மைப்பின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

மக்கள் மகிழ்ச்சி கொள்ளும் வகையில் வாழ்க்கையை ஏற்படுத்துவதே நோக்கம் ஜனாதிபதி






மக்கள் மகிழ்ச்சியுறும் எதிர்கால த்தைக் கட்டி யெழுப்புவதிலேயே அரசா ங்கத்தின் வெற்றி தங்கியுள் ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அபிவிருத்திக் கருத்திட்டங்களை காலந்தாழ்த்த முடியாது என குறிப்பிட்ட ஜனாதிபதி, ஏராளமான கட்டிடங்களைக் கட்டியெழுப்புவதன்றி மக்கள் மகிழ்ச்சி கொள்ளும் வகையில் அவர்களின் வாழ்க்கையைக் கட்டியெழு ப்புவதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் தெரிவித்துள்ளார்.

சீத்தாவக்க பிரதேச சபையின் புதிய நிர்வாகக் கட்டிட அங்குரார்ப்பண நிகழ்வு நேற்றுக் காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்றது. புதிய நிர்வாகக் கட்டிடத்தின் முதற் தொகுதியை உத்தி யோக பூர்வமாக அங்குரார் ப்பணம் செய்து வைத்து உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவிக்கையில்,

நாம் கடந்த காலங்களில் கொடூரமான யுத்தத்திற்கு முகங்கொடுத்து அதனை வெற்றி கொண்டுள்ளோம். எச்சந்தர்ப்பத்திலும் எம்மால் முடியாது, எம்மிடம் இல்லை என்று நாம் காரணங் காட்டாமல் முன்சென்றோம். யுத்தம் செய்ய பணம் இல்லாததாலேயே புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை மேற்கொண்டோமென அன்றைய பாதுகாப்புச் செயலாளர் கூறிய காரணத்தையும் அறிக்கை யொன்றில் காணக் கிடைத்தது.

நான் ஜனாதிபதி பதவியேற்று இன்னும் 5 வருடம் கூட பூர்த்தியாக வில்லை. இக்கால கட்டத்தில் நாம் பல்வேறு செயற்பாடுகளை நிறைவு செய்துள்ளோம். அதே போன்று இந்நாட்டில் பாரிய அபிவிருத்தியை நடைமுறைப்படுத்தியதும் இந்த ஐந்து வருட காலத்துக்குள் தான் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

50பேர் கொண்ட அமெரி. வர்த்தக குழு அடுத்தவாரம் வருகை முதலீடு குறித்து ஆராய வடமாகாணம் செல்ல ஏற்பாடு


அமெரிக்காவிலிருந்து 50 பேர் கொண்ட வர்த்தகத் தூதுக் குழுவொன்று இலங்கை வரவுள்ளது.

அடுத்த வாரம் இலங்கை வரவுள்ள இவர்கள் வட மாகாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

வட மாகாணத்திற்கு அழைத்துச் செல்லப்படும் இவர்களுக்கு இலங்கையின் முதலீடு தொடர்பாக விளக்கமளிக்கப்பட வுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் உட்பட பல்வேறு பகுதிகளுக்கும் செல்லும் அமெரிக்க வர்த்தகத் தூதுக் குழு வட பகுதியில் முதலீடுகள் செய்வது குறித்தும் ஆராய வுள்ளது. இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்த தூதுக் குழு இலங்கை வரவுள்ளது என்றார்.

வட பகுதிக்கு விஜயம் செய்யவுள்ள அதிகமான வர்த்தகர்களைக் கொண்ட வெளிநாட்டு உயர் மட்டத் தூதுக்குழு இதுவாகும் என்றார்.

வடக்கில் முதலீட்டுத் துறையை மேம்படுத்தும் பொருட்டு அரசாங்கம் தொடர்ச்சியாக பல்வேறு திட்டங்களையும், செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருவதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார்.

வடக்கை நோக்கி வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இவர்களுக்குத் தேவையான ஹோட்டல்கள், தங்குமிட, உணவு உட்பட பல்வேறு வசதிகள் செய்து கொடுக்க வேண்டியுள்ள நிலையில் இதற்காக உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்றும் ஆளுநர் மேலும் தெரிவித்தார்.

தற்பொழுது அதிகமான நிறுவனங்கள் முதலீடு செய்து தமது பணிகளை ஆரம்பித்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் இங்கே தொடர்க...