9 நவம்பர், 2010

இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் அதிகளவு வட, கிழக்கு மாணவர்கள் -டலஸ்

இளைஞர் பாராளுமன்றத்திற்கான தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களிலிருந்து கூடுதலான இளைஞர் யுவதிகள் போட்டியிடவுள்ளனர் என இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

இளைஞர் விவகார அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

'இளைஞர் பாராளுமன்றத்திற்கான தேர்தல் இம்மாதம் 27ஆம் திகதி நடைபெறவுள்ளது. மேற்படி தேர்தல் நாடளாவிய ரீதியில் 332 தேர்தல் நிலையங்களில் நடத்தப்படும். முதல் அமர்வு டிசம்பர் 12ஆம் திகதி ஜனாதிபதியின் தலைமையில் மஹரகம இளைஞர் சேவை மன்றத்தில் நடைபெறும்.

இளைஞர் பாராளுமன்றத்திற்கான வேட்பு மனுத்தாக்கல் நாளை பிற்பகல் வரை நடைபெறும். 332 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக ஆயிரத்து 934 வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இத்தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் இம்மாதம் 25ஆம் திகதியுடன் நிறைவடையும் " எனத் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

கண்டியில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நால்வர் கண்டுபிடிப்பு

கண்டி மாவட்டத்தில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நால்வர் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொற்று நோய் தடுப்புப் பிரிவின் வைத்திய அதிகாரி சுதத் பீரிஸ் தெரிவிக்கின்றார்.

கடந்த சில தினங்களாக இந்த தொற்று நோய் மிகவும் வேகமாகப் பரவி வருவதாகவும் மக்கள் இது சம்பந்தமாக விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இருமலுடனான இலேசான காய்ச்சல் மூன்று தினங்களுக்கு மேல் காணப்படுமாயின் உடன் வைத்திய உதவியை நாடும் படியும் கேட்டுள்ளார்.

இன்நோயால் இம்முறை இதுவரை 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் மடத்திலிருந்து வெளியேறுவதற்கு இராணுவத்தினர் மறுப்பு

கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலுக்கு சொந்தமான மடத்திலிருந்தும் ஆலயத்திற்கு அருகிலுள்ள கடைகளிலிருந்தும் படையினரை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான நடவடிக்கையினை கூடிய விரைவில் மேற்கொண்டு, ஆலயத்திற்குச் சொந்தமான சொத்துக்களை மீளவும் பெற்றுத்தர வேண்டும் என்று ஆலய நிர்வாகத்தினர் ஐக்கியதேசியக் கட்சியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை கிளிநொச்சிக்கு விஜயம் செய்த விஜயகலா மகேஸ்வரன் எம்.பி. ஆலயத்திற்கு சென்று நிர்வாகத்தினரை சந்தித்த போதே இந்தக் கோரிக்கையினை அவர்கள் விடுத்துள்ளனர். ஆலயத்தின் மடத்திலும் மற்றும் ஆலயதிற்கு சொந்தமான கடைகளிலும் இராணுவத்தில் 58 ஆவது படையணியினர் நிலைகொண்டுள்ளனர். ஆலயத்தின் மடத்தினை அவர்கள் தங்களது சமையலறையாக பயன்படுத்தி வருகின்றனர்.

மடத்திற்கு அருகிலுள்ள 9 மலசல கூடங்களும் படையினரால் பயன்படுத்தப்படுகின்றன. எனவே பக்தர்களின் நலன்கருதியும் எதிர்வரும் ஜனவரி மாதம் 24 ஆம் திகதி ஆலய கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளமையினாலும் இந்த இடங்களிலிருந்து இராணுவத்தினர் வெளியேற வேண்டும். இதற்கான பல முயற்சிகள் எடுத்தும் அது பயனளிக்கவில்லை. எனவே விரைவில் அரசாங்க உயர்தரப்போடு பேச்சுவார்த்தை நடத்தி மடத்திலிருந்தும் கடைகளிலிருந்தும் இராணுவத்தினரை வெளியேற்ற உரிய முயற்சியினை எடுக்க வேண்டும் என்று ஆலய நிர்வாகத்தினர் எம்.பி.யிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

உலகின் மூன்றாவது சக்தியாகத் திகழ்வது ஊடகங்களே : கெஹெலிய

இன்று உலகின் மூன்றாவது மாபெரும் சக்தியாக ஊடகங்கள் உருவெடுத்துள்ளதை முழு உலகமும் ஏற்றுக் கொண்டுள்ளது என்று தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய றம்புக்வெல தெரிவித்தார்.

இன்று வத்துகாமம் கல்வி வலயத்திலுள்ள ஏ. ரத்நாயக்கா மத்திய கல்லூரியில் இடம்பெற்ற ஊடகம் தொடர்பான செயலமர்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்ட இச்செயலமர்வில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

"உலக வரலாற்றை எடுத்துப் பார்க்கும் போது உலகில் ஏற்பட்ட அனைத்து சமூகப் புரட்சிகளுக்கும் ஊடகங்கள் முக்கிய காரணமாக இருந்துள்ளன.

அதேபோல் முக்கியத்துவம் வாய்ந்தவை எனக் கூறக் கூடிய பல்வேறு சமூக மாற்றங்களிலும் ஊடகங்கள் முக்கிய பங்களிப்புச் செய்துள்ளன.

நாளைய உலகில் கொடுக்கல் வாங்கல் செய்யக் கூடியவர்கள் இன்றைய மாணவர்கள். எனவே இன்றைய மாணவர்கள் ஊடகங்கள் பற்றி தெளிவாக அறிந்திருத்தல் அவசியமாகும்.

ஒருவருக்குச் சந்தர்ப்பங்கள் வழங்குவதன் மூலமே அவரை திறமையானவராக அல்லது விற்பன்னராக உருவாக்க முடியும். எனவே சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பது பாடசாலை நிர்வாகிகளின் கடமையாகிறது.

எனவே ஆசிரியர்களும் அரசியல்வாதிகளும் இணைந்து மாணவ சமுதாயத்திற்குச் சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்" என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

அழகான நகரத்தை உருவாக்கி வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதே எமது நோக்கம்


சரியான நேரத்தில், சரியான தலைமைத்துவத்தை வழங்கி யுத்தத்தை வெற்றிகொண்டது போல் நகர அபிவிருத்தித் திட்டத்திலும் வெற்றி காண்போம் என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவி த்தார்.

அழகான நகரத்தை உருவாக்கி மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே எமது நோக்கமாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

உலக நகர திட்டமிடல் தினத்தை முன்னிட்டு இலங்கை நகர திட்டமிடுவோர் நிறுவனம் ஏற்பாடு செய்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் மேலும் உரையாற்றுகையில் :- இலங்கையை ஆசியாவின் புதுமையான நகரமாக மாற்றும் ஜனாதிபதியின் நோக்கத்தை நிறைவேற்ற நகர திட்டமிடலாளர்களின் பங்களிப்பு மிகவும் அவசியமாகும். இது ஒரு பாரிய சவாலாகும்.

யுத்த வெற்றியைப் பற்றி பலர் பல்வேறு விதத்தில் கருத்து தெரிவித்தனர். எனினும் ஜனாதிபதியின் சரியான தலைமைத்துவமும் முறையாக வகுக்கப்பட்ட திட்டங்களும் கடப்பாடுமே இதற்கு பிரதான காரணமாகும். கடப்பாடு என்பது மிகவும் முக்கியமானதொன்றாகும்.

கடந்த 30 வருடங்களாக இந்த நாட்டில் சிறந்த இராணுவத்தினரே இருந்தனர். ஆனால் அவர்களின் அர்ப்பணிப்பால் வெற்றிகாண முடியாது போனது. ஜனாதிபதி பதவியேற்றதும் இந்த நாட்டின் பிரச்சினையை சரியான முறையில் அடையாளம் கண்டார். அதனை இல்லாதொழித்து சரியான தலைமைத்துவத்தை வழங்கினார். அன்று இருந்த முப்படையினரே இன்றும் இருக்கின்றனர்.

ஆனால் யுத்தத்தை வெற்றி கண்டனர். சிறந்த முறையில் நகர அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு சிறந்த, இளம் துடிதுடிப்புள்ளவர்களை நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு ஜனாதிபதி நியமித்துள்ளார். இதன் பிரதிபலன் வெகுவிரைவில் சிறந்ததாக கிடைக்கும்.

நகர திட்டமிடல் யதார்த்தமாக அமைய வேண்டும். இதற்கு கூட்டு ஒத்துழைப்பு, பேச்சுவார்த்தை மிகவும் அவசியமாகும்.

1998ல் மேற்கொண்ட மதிப்பீட்டின் போது 65 ஆயிரம் குடும்பங்கள் கொழும்பில் சேரிப்புறங்களில் வசிப்பதாக கணக்கிடப்பட்டது. இது தற்போது 75 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

சட்டவிரோதமாக வாழும் இந்த மக்களை மீளக்குடியமர்த்த வேண்டும். சிறிய வீடமைப்பு திட்டமொன்றில் இவர்களில் ஒரு குடும்பத்தை மீளக் குடியமர்த்த குறைந்த பட்சம் 2.5 மில்லியன் ரூபா தேவைப்படுகிறது. இதற்கான முழு செலவை திறைசேரி பொறுப்பேற்கவும் முடியாது.

இதற்கான பணம் தேடி பெற்றுக்கொள்ள வேண்டும். இந்தத் திட்டத்தை முன்வைத்ததும் பலர் எதிர்ப்புக்களை தெரிவித்தனர். மக்களுக்குத் தேவையான ஆழகான நகர், அழகான வாழ்க்கையை ஏற்படுத்துவதே எமது நோக்கமாகும்.

கொழும்பிலுள்ள பெறுமதியான பல அரச காணிகளில் சட்டவிரோத கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நாட்டிலுள்ள நகரங்களை அபிவிருத்தி செய்து அவற்றை ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்தும் ஜனாதிபதியின் திட்டத்திற்கு நகர திட்டமிடுவோரின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும் என்றார்.

பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, இலங்கை நகர திட்டமிடுவோர் நிறுவனத்தின் தலைவர் எல். டி. டிக்மன், நகர அபிவிருத்தி அதிகார சபைத் தலைவர் பொறியியலாளர் ஜனக குருகுலசூரிய, இலங்கை துறைமுக அதிகார சபை தலைவர் டாக்டர் பிரியந்த பந்து விக்ரம, பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர்களான திருமதி இந்து ரத்னாயக்க, ஜயந்த விக்ரமரத்ன ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

புதிய எம்.பிக்களின் பங்களிப்பு நாட்டின் அபிவிருத்திக்கு அவசியம்

நாட்டின் எதிர்கால அபிவிருத்தி க்கான திட்டங்களைத் தயாரிப் பதற்கும், அவற்றை நடைமுறைப் படுத்துவதற்கும் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்பு மிகவும் அவசியமானது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார்.

புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நாட்டின் எதிர்கால பொரு ளாதார அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவூட்டும் வகையில் ஜனாதிபதியுடனான இச்சந்திப்பு அலரி மாளிகையில் நேற்று ஒழுங்கு செய்யப்பட்டி ருந்தது.

நாட்டின் எதிர்கால அபிவிருத்தி க்கான திட்டங்களை தயாரிப்பது மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த கருத்துக்கள் குறித்து கவனம் செலுத்திய ஜனாதிபதி, எதிர்வரும் வரவு - செலவுத் திட்டத்தைத் தயாரிக்கும் போது இவ்விடயங்கள் குறித்து கவனம் செலுத்துமாறு நிதியமைச்சு செயலாளருக்கு ஆலோசனை வழங்கினார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் கொள்கை அடிப்படையில் உள்ளூர் உற்பத்தியை மேம்படுத்தவும், உள்ளூர் கைத்தொழில் துறையை பாதுகாக்கவும் முன்னெடுத்துவரும் வேலைத் திட்டங்களை இச்சந்திப்பின்போது கருத்து தெரிவித்த புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராட்டினார்கள்.

பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதோடு நாடு துரிதமாக அபிவிருத்தி அடைந்து வருகின்றது. இதன் பங்காளர்களாகத் தனியார் துறையினரை உள்வாங்குவது குறித்தும் புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் நீண்ட நேரம் கருத்துத் தெரிவித்தனர்.

பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து மீட்கப்பட்டிருக்கும் வடக்கு – கிழக்கு பிரதேசம் இன்று தேசிய பொருளாதார அபிவிருத்திக்கு விஷேட பங்களிப்பை வழங்கி வருகின்றது. அப்பிரதேசங்களின் விவசாய, மீன்பிடி துறைகள் மாத்திரமல்லாமல் உல்லாசப் பயணத்துறையும் துரிதமாக மேம்பாடு அடைந்திருக்கிறது. அந்த அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு மேலும் அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை பெற்றுக்கொடுப்பது அவசியம் என்றும் ஜனாதிபதி கூறினார்.

அதேநேரம் அப்பிரதேசங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேலும் மேம்படுத்தி மக்களின் எதிர்பார்ப்பை உச்ச அளவில் நிறைவேற்றுவதே அரசின் நோக்கம் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

தற்போதைய அமைதிச் சூழலில் அரசாங்கம் அறிவை மேம்படுத்துவதற்கு கொள்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கும் போது அந்த அறிவை நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்குப் பயன்படுத்த முடியும் என்று புதிய எம்.பிக்கள் இங்கு குறிப்பிட்டனர். இவ்விடயத்தில் கவனம் செலுத்திய ஜனாதிபதி, இது விடயமாக ஒழுங்கு முறையான வேலைத் திட்டம் தயாரிக்கப்படும் என்றும் கூறினார்.

இச்சந்திப்பின் போது புதிய எம்.பிக்கள் தெரிவித்த கருத்துக்கள் குறித்து கவனம் செலுத்திய ஜனாதிபதி இந்நாட்டின் சுகாதாரம், கல்வித் துறைகள் மாத்திரமல்லாமல் அரச சேவையை வலுப்படுத்தல், பெண்களை வலுவூட்டல் உட்பட்ட சகல அபிவிருத்தி வேலைத் திட்டங்களும் மஹிந்த சிந்தனை தொலைநோக்கு அடிப்படையில் முன்னெடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி கூறினார்.

இக்கூட்டத்தில் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, பிரதி நிதியமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, நிதியமைச்சு செயலாளர் கலாநிதி பி. பி. ஜயசுந்தர உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.
மேலும் இங்கே தொடர்க...

வடக்கு, கிழக்கு மாகாண அபிவிருத்திக்கு உலக வங்கி 575 கோடி கடனுதவி


வடக்கு, கிழக்கு மாகாணங்களின் உள்ளூர் சேவை அபிவிருத்தித் திட்ட த்துக்கு உலக வங்கி 5.75 பில்லியன் (575 கோடி) ரூபா கடனுதவி வழங் கியுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள உள்ளூ ராட்சி சபைகளின் சேவைகள் அபி விருத்தி செய்யப்படவிருப்பதாக நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சு அறி வித்துள்ளது.

இதன் ஊடாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உட்கட்டுமானங் கள், வீதிகள் என்பன புனரமை க்கப்படவிருப்பதுடன், பொதுக் கட் டடங்கள், பாலங்கள் என்பனவும் புனர்நிர்மாணம் செய்யப்படவுள் ளன. அத்துடன்,

வடக்கு, கிழக்கு மாகாணங்களி லுள்ள 65 பிரதேச சபைகள், வடக் கிலுள்ள 9 நகர சபைகள், கிழக்கி லுள்ள 3 நகர சபைகள் மற்றும் இரு மாகாணங்களிலுமுள்ள மாநகர சபைகளின் சேவைகள் இந்தத் திட்ட த்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட வுள்ளன.

பொருளாதார அபிவிருத்தி அமை ச்சின் கீழ் முன்னெடுக்கப்படவிரு க்கும் இந்த மேம்பாட்டுத் திட்டம் 2013ஆம் ஆண்டு பூர்த்தி செய்யப் படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனைவிட சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைப்புக்களை அபிவி ருத்தி செய்யவும் உலக வங்கி 6.47 மில்லியன் ரூபா கடனாக வழங்கப் படவுள்ளது.

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைப்புகளுக்கு குறுகிய, நீண்ட காலக் கடன்கள் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படவிருப்பதுடன் உலக பொருளாதார வீழ்ச்சியால் தொழில் முனைப்புகள் எதிர்கொள்ளும் நிதிப் பிரச்சினைகளுக்கும் கடனுதவி வழ ங்கப்படவுள்ளது.

இதன் மூலம் வேலைவாய்ப்பு பிரச்சினையைக் குறைத்து சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைப் புகள் தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்த முடியுமென எதிர்பார்க்கப் படுகிறது. நிதி நிறுவனங்களுக்கு கடன் உதவிகளை வழங்கி முதலீ டுகளை ஊக்குவிப்பதற்கும் நடவடி க்கை எடுக்கப்படவுள்ளது.

இதேவேளை, இலங்கையின் உல் லாசப் பயணத்துறையின் அபிவிரு த்திக்கும் உலக வங்கி உதவிகளை வழங்கவுள்ளது. இதன்படி 18 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனுதவியாக உல்லாசப் பயண த்துறை அபிவிருத்திக்கு வழங்கப் படவுள்ளது. இதனைக் கொண்டு கிழக்கு மாகாணத்தை உல்லாசப் பயண மையமாக அபிவிருத்தி செய் யவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

வேலையற்றோர் தொகை 5.4 வீதமாக குறைவு


இலங்கையின் வேலையற்றோர் தொகை 5.4 வீதமாகக் குறைவடைந்துள்ளது. 2010 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் குடிசன மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் நடத்தப்பட்ட இந்தக் கணக்கெடுப்பில் மொத்தமாக வேலையற்றவர்களின் எண்ணிக்கை 437,000 என்றும் இதில் 4.1 வீதமானவர்கள் ஆண்கள் என்றும் 8 வீதமானவர்கள் பெண்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

15 முதல் 24 வயதெல்லையுடைய இளைஞர்களில் வேலையற்றோர் தொகை 20.7 வீதம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆண்களைவிடப் பெண்களே வேலையின்மையால் கூடுதலாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். 2009 ஆம் ஆண்டு 5.7 வீதமாகக் காணப்பட்ட வேலையற்றோர் வீதம் 2010 இல் 5.4 ஆக குறைந்துள்ளது.

அதேநேரம் 2010 ஆம் ஆண்டு இரண்டாவது காலாண்டில் பொருளாதார ரீதியில் செயற்திறன் மக்கள் சனத்தொகை 8.1 மில்லியன் என்றும், இதில் 65.8 வீதமானவர்கள் ஆண்கள் என்றும், 34.2 வீதமானவர்கள் பெண்கள் என்றும் இந்தக் கணக்கெடுப்பில் கண்டறியப் பட்டுள்ளது.

தொழிலாளர் வர்க்கத்தில் ஆண்களின் பங்களிப்பு 67.6 வீதமாகவும் பெண்களின் பங்களிப்பு 31.6 வீதமாகவும் உள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

வெலிக்கடை சிறை தாக்குதல் சம்பவம் சிறை அதிகாரிகள், சி.ஐ.டி. தனித்தனியாக விசாரணை


வெலிக்கடை சிறைச்சாலையில் நேற்று முன்தினம் திடீர் சோதனை மேற்கொள்ள சென்ற பொலிஸார் மீது கைதிகளால் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர் பாக பல்வேறு கோணங்களில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சிறைச்சாலை திணைக்களமும், பொலிஸ் திணைக்களமும் இந்த சம்பவம் தொடர்பாக தனித்தனியாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

மேற்படி தாக்குதல் சம்பவத்தின் பின்னணி, தாக்குதல்களுக்கு பயன்படுத்தப் பட்ட பொருட்கள் எவ்வாறு கைதிகள் உள்ள பிரிவுக்குக் கொண்ட வரப்பட்டன என்பன தொடர்பாக விசேட குற்றப் புலனாய்வு பிரிவு பொலிஸார் விசார ணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார்.சி.ஐ.டி.யினர் பல்வேறு கோணங்களில் பல குழுக்களாக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

காயமடைந்த பொலிஸாரும், சிறைக்காவலர்களும் சிகிச்சைக்குப் பின்னர் வீடுகளுக்கு அனுப்ப முடியாத நிலையில் உள்ளதாக தெரிவித்த அவர், அவர்களுக்கு தொடர்ந்தும் சிகிச்சை வழங்கப்பட வேண்டியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
மேலும் இங்கே தொடர்க...

மன்னார் - சிலாவத்துறையில் ஆயிரம் மில். ரூபா செலவில் துறைமுகம்


மன்னார் சிலாவத்துறையில் ஆயிரம் மில்லியன் ரூபா செலவில் துறைமுகமொன்றை அமைப்பதற்கான அங்கீகாரத்தை அமைச்சரவை வழங்கியுள்ளதாக வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும், கைத்தொழில் மற்றும் வணிக துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

சிலாவத்துறை அரசினர் கலவன் முஸ்லிம் பாடசாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற மீள்குடியேற்ற மக்களுக்கான காணிப் பிரச்சினைக்கான தீர்வை பெற்றுக்கொடுக்கும் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அமைச்சர் அங்கு மேலும் பேசுகையில் கூறியதாவது :

தற்போது முசலி பிரதேச செயலகப் பிரிவில் 6242 குடும்பங்களைச் சேர்ந்த 26500 பேர்கள் மீள்குடியேறியுள்ளனர். குறிப்பாக மன்னார் மாவட்டத்திலிருந்து 1990 ஆம் ஆண்டு இடம்பெயர்க்கப்பட்ட முஸ்லிம்கள் இன்றும் தமது குடும்பம் சகிதம் மீள்குடியேறி வருகின்றனர். இங்கு அவர்களுக்கான காணிகளில் பிரச்சினைகள் உள்ளன.

குறிப்பாக சிலாவத்துறையினை பொறுத்தவரையில் இங்கு கடற்படை முகாம் அமைந்துள்ளது. இந்த முகாம் அமைந்துள்ள காணிகள் குடியிருப்புக்கள் இருந்த இடமாகும். ஆகவே இங்கு மீள்குடியேறும், சிலாவத்துறை மக்களுக்கு மாற்று இடங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று 560 குடும்பங்களுக்கு அக்காணிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மற்றும் நின்றுவிடாமல் இப்பகுதியில் மீள்குடியேறியுள்ள மக்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் சிலர் சில விசமத்தனமான பிர சாரங்களை தமது அரசியல் லாபங்களுக் காக செய்து வருகின்றனர். இதற்கு மக்கள் காது கொடுக்காமல் நமது மாவட்டத்தின் ஒற்றுமைக்கும் இன நல்லுறவுக்குமான செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார்.

இதேவேளை இந்திய அரசாங்கத்தின் வீடமைப்புத் திட்டத்தில் மன்னார் மாவட்டத்திற்கு 6 ஆயிரம் வீடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. அதில் முதலாவதாக சிலாவத்துறையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. புத்தளம் மன்னார் பாதை திறந்து மக்கள் போக்குவரத்துகள் இடம்பெறுகின்ற போது இப்பகுதி பல் துறைகளிலும் அபிவிருத்தி அடையும், சிலாவத்துறையானது எதிர்காலத்தில் வர்த்தக மத்திய நிலையமாக பரிணமிக்கும் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் இங்கு கூறினார்.

இந்த நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹணூனைஸ் பாருக், அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான அலிகான் ஷரீப். எஸ். யஹ்யான், முசலி பிரதேச செயலாளர் எஸ். கேதீஸ்வரன், சமூகஜோதி எம். றபீக் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

வவுனியா மாவட்டம்: மீள்குடியேற்ற கிராமங்களில் தொல்லைதரும் வனவிலங்குகளை விரட்டியடிக்க வேலைத்திட்டம்




காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளால் வவுனியா மாவட்ட மீள்குடியேற்றக் கிராம மக்கள் முகம் கொடுத்திருக்கும் தொல்லைக்குத் தீர்வு பெற்றுக் கொடுக்கவென விசேட வேலைத் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டு ள்ளது.

இராணுவத்தினரும், வனவளத் திணைக்கள அதிகாரிகளும் இணைந்து இவ்வேலைத்திட்டத்தை நேற்று ஆரம்பித்ததாக வவுனியா மாவட்டச் செயலாளர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்தார். இந்த விசேட வேலைத் திட்டத்தின் கீழ் யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வனப் பகுதிக்குள் விரட்டப்படும். அதனைத் தொடர்ந்து அவை மீள்குடியேற்றக் கிராமங்களுக்குள் பிரவேசிக்க முடியாத படி மின்வேலி அமைக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

வவுனியா மாவட்ட மீள்குடியேற்ற கிராமங்களில் யானைகள் மற்றும் காட்டு விலங்குகளின் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் இரவை அச்சத்துடன் கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மாளிகை நொச்சிக்குளம் பிரதேசத்தில் குறைந்தது 50 யானைகள் கூட்டமாக நிலைகொண்டு அழிவுகளை ஏற்படுத்தி வருகின்றன.

பதினொரு வனவிலங்கு அதிகாரிகளும் இவர்களுக்கு உதவியாக இராணுவத்தினரும் இணைந்து மூன்று கட்டங்களாக யானைகளையும் வனவிலங்குகளையும் விரட்டும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர் என குறிப்பிட்ட அரச அதிபர் காடுகளுக்குள் மிருகங்கள் சென்றதும் எல்லையில் மின்சார வேலிகள் அமைக்கப்படும் எனவும் கூறினார்.

மக்கள் இடம்பெயர்ந்த காரணத்தினால் கிராமங்களுக்குள் யானைகள் புகுந்து தென்னை மற்றும் பயன்தரும் மரங்களை அழித்து உணவாக்கி வந்துள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

வடபகுதி வைத்தியசாலைகளுக்கு அம்பியுலன்ஸ், கிளினிக் வாகனங்கள் கையளிப்பு


வட பகுதி வைத்தியசாலைகளுக்கென மூன்று அம்பியுலன்ஸ் வண்டிகளும், இரண்டு நடமாடும் பற்சிகிச்சை கிளினிக் வாகனங்களும் இன்று கையளிக்கப்படவுள்ளன.

வவுனியாவிலுள்ள பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெறவுள்ள வைபவத்தின் போது வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி இந்த வாகனங்களை இன்று கையளிக்கவுள்ளார். அம்பியுலன்ஸ் வண்டிகள் மற்றும் நடமாடும் பற்சிகிச்சை கிளினிக் வண்டிகளுக்கென வட மாகாண சபை 150 இலட்சம் ரூபாவை செலவு செய்துள்ளதாக வட மாகாண ஆளுநர் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய வைத்தியசாலைகளுக்கு தலா ஒவ்வொரு அம்பியுலன்ஸ் வண்டி களும், யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா வைத்தியசாலைகளுக்கு தலா ஒவ்வொரு நடமாடும் பற்சிகிச்சை கிளினிக் வாகனங்க ளும் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

திருகோணமலை மாவட்டம், பன்குளத்தில் பெரும்பான்மையின குடியேற்றம்

- திருமலை மாவட்டத்தின் பழம்பெரும் தமிழ் கிராமமான பன்குளம் கிராமத்தில் சமீபகாலமாக திட்டமிட்ட பெரும்பான்மையின குடியேற்றங்கள் இடம்பெற்று வருகின்றன. இங்கு காலாகாலமாக தமிழர்கள் வாழ்ந்த இடங்களில் தற்போது மெதுமெதுவாக பெரும்பான்மையின குடியேற்றங்கள் இடம்பெறுகின்றன. இதன்படி பன்குளம் பிரதான வீதியின் இரு மருங்கிலும் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டு வருகின்றனர். தமிழரின் பூர்வீக கிராமமான பன்குளம் திருமலை மாவட்டத்தில் நெற்செய்கைக்கு பிரசித்திபெற்ற இடமாகும். இந்த திட்டமிட்ட குடியேற்றத்தை உரிய தரப்புகள் தடுத்து நிறுத்த வேண்டுமென்று பிரதேச மக்கள் கோருகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...